ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143498 topics in this forum
-
ஐ.தே.க.வும் தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை அடுத்த மாதம் சமர்ப்பிக்கிறது. இனப்பிரச்சனை தீர்வுக்கு தம்மால் தயாரிக்கப்பட்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தினை ஐக்கிய தேசிய கட்சியும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அனைத்து கட்சிக்குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.என். சொக்சியும், ஜி.எல்.பீரிசும் கலந்து கொள்வார்கள் எனவும் தமது தீர்வுத்திட்டம் ஒஸ்லோ மற்றும் டோக்கியோ பிரகடனங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டதாகவும் கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் மகிந்த ராஜபக்சவை சந்தித்த ரணில் விக்கிரமசிங்க அமைதிப் பேச்சுக்களின் தேக்கநிலை தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். அதன் போது …
-
- 1 reply
- 775 views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் 8 வெள்ளைவான் கடத்தல்கள். யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களில் சிறீலங்கா இராணுத்துடன் சேர்ந்தியங்கும் ஒட்டுக்கூலிக் குழுக்களால் இரு மாணவர்கள் உட்பட 8 கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மனித உரிமைகள் மையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.... 1)கடந்த வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறையை சேர்ந்த 31 அகவையுடைய செபஸ்ரியான்பிள்ளை என்பவர் உள்ளுர் கடை ஒன்றில் பொருட்கள் வாங்க செல்லும் போது காணாமல் போயுள்ளார். 2)முளாய் வட்டுக்கோட்டையில் 20 அகவையுடைய கந்தையா லதீசன் அவர்கள் யாழ்பாணம் கன்னாதிட்டிக்கு தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு செல்லும் வழியல் கடந்த வெள்ளிக்கிழமை காணாமல் போயுள்ளார். …
-
- 0 replies
- 668 views
-
-
போர்நிறுத்த கண்காணிப்புக் குழு மீள ஒழுங்குபடுத்தப்படும்:-கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர். போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தாங்கள் தம்மை மீள நிலைப்படுத்தும் செயற்பாடு ஒன்றிற்கு தயாராவதாக கூறியுள்ளார். 2002 போர்நிறுத்த ஒப்பந்தம் போரில் சம்பந்ததப்பட்ட இருதரப்பினதும் உடன்பாட்டு ஆணைப்படி உருவாக்கப்பட்டது. போர்நிறுத்த கண்காணிப்பு குழு உருவாக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது. மகிந்த ஆட்சிப் பொறுப்பேற்றபின்னர் சிறீலங்கா அரசினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்தத்தை மதிக்காத இராணுவ நடவடிக்கைகள் போர்நிறுத்த ஒப்பந்தத்ததினதும் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவினதும் இருப்பை கேள்விக்குறியாக்கியிருந்தம
-
- 0 replies
- 627 views
-
-
ஜேர்மன் அபிவிருத்தி அமைச்சர் ஜேர்மன் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கி இருக்கும் பேட்டியில் பின் வருமாறு தெருவித்து உள்ளார். சிறிலங்கா அரசு சமாதான நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்காதவிடத்து சர்வதேச நாடுகள் சிறிலங்காவிற்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் .ஜேர்மன் அரசங்காம் சிறிலங்காவிற்கென ஒதுக்கிய இருப்பத்தைந்து மில்லியன் டொலர்களை இந்தோனேசியாவின் அச்சே மானிலத்திற்கு வழங்கி உள்ளது. இந்தச் செய்தியை அனைத்து ஊடகங்களும் அனைத்து மொழிகளைலும் வெளியிட வேண்டும்.இன்னும் இந்தச் செய்தி தமிழ் ஊடகங்கள் எதிலும் வந்ததாகத் தெரியவில்லை.முக்கியமாக தமிழ் நெற்றில் வர வேண்டிய செய்தி. Sri Lankan aid depends on peace moves 23 December 2006 | 21:54 | FOCUS News Agency Ber…
-
- 46 replies
- 6.6k views
-
-
வாகரை கட்டுமுறிவு பகுதியில் இருந்து சிறீலங்கா படைகள் பின்வாங்கல்? 2002 ம் ஆண்டு போர்நிறுத்த எல்லைகளை அத்துமீறி கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி கட்டுமுறிவு, மதுரங்குளம், கிரிமிச்சை, குஞ்சன்குளம் ஆகிய பகுதிகளுக்கு ஊடுருவி சிறீலங்கா படையினர் ஆக்கிரமித்திருந்தமை தெரிந்ததே இதனையடுத்து கடந்த ஒன்றரை மாதமாக விடுதலைப்புலிகளுக்கு சிறீலங்கா இராணுவத்துக்கும் இடையே தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்று வந்தன. இதனால் ஆக்கிரமக்கப்பட்ட பிரதேசங்களில் தொடர்ந்து நிலைகொள்ள முடியாத படையினர் பின்வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து இதுகுறித்து உத்தியோகபூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/in…
-
- 4 replies
- 2.2k views
-
-
யாழ்தீவகத்தில் இருவர் காணாமல் போயுள்ளார்கள் http://www.pathivu.com யாழ் தீவகம் ஊர்காவற்துறை, நெடுந்தீவு பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை ஊர்காவற்தறைப்பகுதியில் 30 அகவையுடைய சபாபதிப்பிள்ளை அனேந்திரன் என்பவரும் கடந்த வெள்ளிக்கிழமை நெடுந்தீவில் வைத்து 26 அகவையுடைய குணசீலன் வசந்தகுமார் என்பவரும் வீடுதிரும்பவில்லை என முறையிடப்பட்டுள்ளது. இதேவேளை குணசீலன் வசந்தகுமார் என்பவரை புங்குடுதீவு பகுதியில் வைத்து சிறீலங்கா இராணுவத்தினர் கைது செய்ததாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 778 views
-
-
வடபோர் முனையில் துப்பாக்கி மோதல். 27-12-06. யாழ் முகமாலை வடபோர் முனையில் இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை www.pathivu.com
-
- 0 replies
- 952 views
-
-
உல்லாசப்பயணத்துறையில் சிறி லங்காவுக்கு பெரும் வீழ்ச்சி. சிறி லங்காவில் இடம்பெற்று வரும் போர் நடவடிக்கைகள், அதன் உல்லாசப் பயணத்துறையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. 2004 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆழிப்பேரலைப் பேரனர்த்தம் ஏற்படுத்திய தாக்கத்தைவிட போர் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறைக்கு ஏற்பட்ட பாதிப்பால் இந்த வருடம் சிறி லங்காவின் விடுதிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் 120 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என கணிக்கப்படுகின்றது. உல்லாசப் பயணத்துறை விடுதிகள் சபையைச் சேர்ந்த கூரே தெரிவிக்கையில், வழமையாக 80 வீதம் பயணிகளைக் கொண்டிருக்கும் விடுதிகள் தற்போது 20 வீதப் பயணிகளையே கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2005 ஆம் ஆண்டுடன் ஒப…
-
- 1 reply
- 917 views
-
-
கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. தென்மராட்சி கைதடிப் பகுதி இன்று காலை படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடாத்தப்பட்டது. இன்று காலை 5.00 மணியில் இருந்து 11.00 மணிவரை இச்சுற்றிவளைப்பு இடம் பெற்றது. இதன் போது வீடுகளுக்குள் நுழைந்த படையினர் சமையல் அறை உட்பட அனைத்து இடங்களையும் சல்லடையிட்டு சோதனை இடப்பட்டன. இதன் போது ஆயுதங்கள் இருக்கின்றதா எனக் கேட்டு வீட்டு உரிமையாளர்களை அச்சுறுத்தி உள்ளனர். www.sankathi.com
-
- 0 replies
- 792 views
-
-
இந்திய ஒப்பந்தத்தை குப்பையில் வீசும் இலங்கை டிசம்பர் 26, 2006 கொழும்பு: ஜனவ> 1ம் தேதி முதல் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் தனித்தனி மாகாணங்களாக செயல்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1987ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஆனால் கடந்த அக்டோபர் மாதம் இலங்கை உச்சநீதிமன்றம், இந்த இணைப்பு செல்லாது என்று தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து அதை தனித் தனி மாகாணங்களாகப் பிரிக்க இலங்கை அரசு முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் இரு மாகாணங்களும் தனித் தனி மாகாணங்க…
-
- 1 reply
- 1.4k views
-
-
பாலியல் வன்முறை மேற்கொள்ளமுயன்ற படை சிப்பாய் மக்களால் நையப்புடைப்பு. வடமராட்சி குடத்தனைப்பகுதியில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த பெண் ஒருவர் மீது பாலியல் வன்முறை மேற்கொள்ள முயன்ற சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவர் அப்பகுதி மக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். www.sankathi.com
-
- 0 replies
- 1.2k views
-
-
வாகரைக்கு நவம்பர் 29-க்குப் பின்னர் உணவு அனுப்பப்படவில்லை: யூனிசெஃப் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 18:37 ஈழம்] [கி.தவசீலன்] மட்டக்களப்பு வாகரைப் பகுதிக்கு கடந்த மாதம் 29 ஆம் நாளுக்குப்பின்னர் உணவுப் பொருட்கள் எவையும் அனுப்பப்படவில்லை என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. உணவு பொருட்கள் நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட பின்னர் இன்று வரை சிறிதளவு உணவுப் பொருட்கள் கூட அங்கு அனுப்பி வைக்கப்படவில்லை என யுனிசெஃப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இலங்கையில் வன்முறைகள் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பெருமளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தவிர கடத்தல்கள், காணாமல் போதல்கள், படுகொலைகள் அதிகரித்துள்ளன என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை உள்நாட்டில் இடம்பெயரும் மக்கள…
-
- 1 reply
- 995 views
-
-
அடுத்த மாதம் சிறிலங்கா அரசு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கிறது [புதன்கிழமை, 27 டிசெம்பர் 2006, 13:24 ஈழம்] [பா.பார்த்தீபன்](eelampage.com) இனப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வை முன்வைக்க அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி குழுக்கூட்டத்தில் சிறிலங்கா அரசு தனது தீர்வுத்திட்டத்தை அடுத்த மாதம் முன்வைக்கவுள்ளதாக அனைத்து கட்சிக்குழுவின் தலைவரும் விஞ்ஞான தொழில்நுட்பத்துறை அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த திட்டம் மாகாணங்களுக்கான தனியான அதிகாரங்களை கொண்டுள்ளது. தீர்வுத்திட்டத்தை முன்வைப்பதற்கு முன்னதாக ஜனவரி இரண்டாம் வாரம் அனைத்து கட்சிக்குழு கூடவுள்ளது. அதன் போது மேலும் விவாதங்கள் நடத்தப்படும…
-
- 4 replies
- 1.2k views
-
-
அடுத்த மாதம் கொழும்பு செல்கிறார் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சசை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக இந்தியாவின் வெளிவிவாகரத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விமானம் மூலம் அடுத்த மாத முற்பகுதியில் கொழும்பு செல்லவுள்ளார். எதிர்வரும் ஏப்பிரல் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காகவே அவர் கொழும்பு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இந்த பயணத்தின் போது அமைதி முயற்சிகளின் தற்போதைய நிலைமையும் வடக்கு-கிழக்கில் ஏற்பட்டுள்ள மனித அவலங்களும் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ச…
-
- 2 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு கடலில் தத்தளித்த ஜோர்தான் நாட்டு சரக்குக் கப்பலில் இருந்து விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட மாலுமிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் இன்று கையளிக்கப்பட்டு அவர்கள் கொழும்பு நோக்கி பயணிக்கின்றனர். முல்லைத்தீவு கடலில் இயந்திரம் பழுதடைந்த நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்த ஜோர்தான் நாட்டின் "ஃபாரா - 3" சரக்குக் கப்பலின் மாலுமிகளை விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் நேற்று முன்தினம் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தனர். கடல் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்த மாலுமிகள், கிளிநொச்சி குளக்காட்சி விடுதியில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர். அதேவேளையில் இந்த மாலுமிகளை அவர்தம் குடும்பத்தினருடன் இணைப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரை இவர்கள் சந்திக்க…
-
- 23 replies
- 5.3k views
-
-
கொசோவா பிராந்தியத்தை சேர்பியாவை விட பலம்வாய்ந்த நாடாக உருவாக்கப் போகிறேன் என்று கூறிய கொசோவா ஜனாதிபதி இப்ரஹிம் ரகோவா இந்த வருடம் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவ்வாறு இவர் புற்றுநோய் வாய்ப்பட்டு இருப்பதுபற்றி அவருடைய ஆதரவாளர்களாகிய பிரிவினைவாதிகள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இப்ரஹிம் ரகோவா, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆதரவுடன் கொசோவாவின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டவர் ஆகும். இவ்வாறு இவர் கொசோவாவின் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியிலேயே ஆகும். ஆயினும், இந்த வருட ஆரம்பத்தில் அவர் புற்று நோயால் இறந்து விட்டார். கொசோவாவை சேர்பியாவை விட பலமான நாடாக ஆக்கப் போவதாக கூறிய அவர…
-
- 3 replies
- 2.1k views
-
-
வவுனியாவில் பூங்காவில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் பொலிஸார் ஒருவர் பலியாகியுள்ளார். [Wednesday December 27 2006 09:00:09 AM GMT] [யாழ் வாணன்] (tamilwin.com) வீதி சோதனையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸாரை இலக்கு வைத்தே இக் கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. கிளைமோர் வெடித்தையடுத்து சம்பவ இடத்திற்கு விசேட அதிரடி படையினர் விரைந்து தேடுதல் மேற்கொண்டுள்ளனர். வுனியா மாவட்ட நீதவான் எம்.இளஞ்செழியனும் வெடிப்பு இடம் பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளார். சம்பவத்தின்போது பலியான பொலிஸாரின் உடல் வவுனியா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 894 views
-
-
இரத்தினபுரி வெல்லுப்பிட்டியவில் கைக்குண்டு வீச்சு 5 பேர் காயம். கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இரத்தினபுரி- வெல்லுப்பிட்டியவில் எரிபொருள் நிலையத்தின் மீது கைக்குண்டு வீசப்பட்டதில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளையும் தேடுதல் நடவடிக்கைகளையும் காவத்தை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். www.pathivu.com
-
- 0 replies
- 696 views
-
-
முஸ்லிம் வர்த்தகர் சுட்டுக் கொலை புறக்கோட்டையில் நேற்று மாலை சம்பவம் [Wednesday December 27 2006 08:23:26 AM GMT] [thinakkural.com] கொழும்பு, புறக்கோட்டை ஓல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெருவில் இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகரொருவர் உயிரிழந்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இரண்டாம் குறுக்குத் தெருவில் இடம்பெற்றுள்ளதாகவும் இதனால் முஸ்லிம் வர்த்தகரொருவர் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவித்த புறக்கோட்டை பொலிஸார், இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்ட முஸ்லிம் வர்த்தகர், புறக்கோட்டையில் நடை பாதையில்…
-
- 0 replies
- 902 views
-
-
ஆழிப்பேரலை மீள்கட்டுமானப் பணிகள் புறக்கணிப்பு: சிறிலங்கா அரசு மீது கொபி அனான் சாடல். ஆழிப்பேரலை மீள்கட்டமைப்புப் பணிகளை இலங்கையில் இடம்பெற்று வரும் போர் சீரழித்துள்ளது என்று ஓய்வுபெற்றுச் செல்லும் ஐ.நா. பொதுச் செயலாளர் கொபி அனான் தெரிவித்துள்ளார். ஆழிப்பேரலை பேரனர்த்தம் இடம்பெற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்ற நேற்று செவ்வாய்க்கிழமை (26.12.06) அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு வேலைகள் தடைப்பட்டுப் போவதை நிறுத்த எந்தத் தரப்பினரும் முயற்சிக்கவில்லை. அமைதி முயற்சிகளில் அனுசரணைப் பணியை மேற்கொண்டு வரும் நோர்வே, ஆழிப்பேரலை பேரனர்த்த புனரமைப்பு நிதியை சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புல…
-
- 1 reply
- 771 views
-
-
ஜோர்தான் கப்பல் மீட்டு தருமாறு சிறிலங்கா அரசிடம் கப்பலின் கப்படன் கோரிக்கை [Tuesday December 26 2006 03:12:53 PM GMT] [யாழ் வாணன்] விடுதலை புலிகளால் சர்வதேச செஞ்சிலுமை சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டு கொழும்பு வந்த ஜோர்தானிய நாட்டு கப்பலின் 25 சிப்பந்திகளும் இன்று செவ்வாய்கிழமை சந்தித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த ஜோர்தானிய கப்பல்கள் பாரா (3) இன் கப்டன் ஆர். அப்துல்லா ஆறு படகுகளில் வந்த விடுதலைப் புலிகள் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தனர் . இதனையடுத்து புலிகள் கப்பலினை நங்கூர மிட முயற்சித்தனர் எனினும் அது கைகூடவில்லை எனவே கப்பலில் இருந்த 25 சிப்பந்திகளையும் கப்பலினை விட்டு இறக்கி கப்பலில் இருந்து தொலைத் தொடர்பு சாதனங்களை அகற்றினர…
-
- 4 replies
- 2.2k views
-
-
ஜாதிக ஹெல உறுமய எச்சரிக்கை இந்தியாஇ இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட்டு வடக்கு- கிழக்கு மாகாணங்களை மீண்டும் ஒன்றிணைக்க முயற்சித்தால் கடந்த காலங்களைப் போன்று பார்த்துக் கொண்டிராமல் இம்முறை சிங்களவர்கள் ஆயுதமேந்தி போராடுவார்களென ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை இனப் பிரச்சனையானது வடக்கு- கிழக்கு பிரிக்கப்படாமல் அரசியல் தீர்வொன்றின் மூலம் தீர்வு காணப்பட வேண்டுமென்பதே இந்தியாவின் நிலைப்பாடென சுட்டிக்காட்டியிருந்தமை தொடர்பாக கேட்கப்பட்டபோதே ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரான சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையி…
-
- 8 replies
- 2.1k views
-
-
ஏறாவூரில் கடத்தப்பட்ட 19 பேரில் 5 பேர் காவல்துறையிடம் சரண் கருணா ஒட்டுக் கூலிக்குழுவினரால் கடந்த 20ம் திகதி கடத்தப்பட்ட தனியார் பேரூந்தில் காத்தான் குடியில் இருந்த கொழும்பு நோக்கி பயணித்த 19 இளைஞர்களில் 5 வர் தப்பி சென்று ஏறாவூர் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 31 அகவையுடைய நாகமணி ஜெகதீஸ்வரன், 24 அகவையுடைய பலிபொடி கோவிந்தன், 20 அகவையுடைய கந்தசாமி கோவிந்தன், 21 அகவையுடைய செல்லத்துரை பிறேமலதா, 25 அகவையுடைய ஜயாதுரை ரஜீவன் ஆகிய ஐவருமே சிறீலங்கா காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளதாக அறியமுடிகிறது. அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தங்கள் கண்களை கட்டிய நிலையில் பேருந்தில் இருந்து இறக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி சென்றதாகவும் ஏன…
-
- 2 replies
- 1.3k views
-
-
ஊர்காவற்துறை இராணுவ சோதனைச் சாவடி மீது கைக்குண்டு தாக்குதல் [Tuesday December 26 2006 03:09:06 PM GMT] [யாழ் வாணன்] யாழ் ஊர்காவற்துறை சத்திர சந்தி அருகிலுள்ள இராணுவ சாவடி மீது இன்று செவ்வாய் 11.45 மணியளவில் இடம் பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 4 பொது மக்கள் காயமடைந்துள்ளனர். காய மடைந்தவர்கள் அராலி கிழக்கை சேர்ந்த சகோதரர்களான அழகரட்ணம் கோணேஸ்வரன் (24) அழகரச்ணம் முரனீஸ் வரன் [26] மற்றும் வண்ணார் பண்ணை வீதியைச் சேர்ந்த கந்தசாமி செல்வமலர் (66) யாழ் வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் ஜெயசிந்திரா வைத்தியசாலை தரப்பு அடையாளம் செய்துள்ளனர் . காயமடைந்த இவர்கள் யாழ் வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் . இக் கைக்குண்டு தாக்குதலில் இ…
-
- 0 replies
- 847 views
-
-
'தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் பற்றிய புரிதல் -சி.இதயச்சந்திரன்- வடகிழக்கு இணைந்த நிலப்பரப்பு தமிழர் தாயகமாகும். இவ்விணைப்பு பாலசிங்கம் அவர்களின் பிறப்பிலுமுண்டு. இவர் பிறப்பே தாயகக் கோட்பாட்டைச் சுமந்துள்ளது. பொதுவாக மக்கள் வயச் சிந்தனையாளர்களே ஊடகப் பணியில் தம்மை இணைப்பார்கள். வளரும் நிலையில், மக்களை நோக்கிய பார்வையைப் பெறுகிறார்கள். வளர்ந்த இடமான கரவெட்டி, இடதுசாரி சிந்தனைகளின் விதைநிலம். சமூக உட்கொடுமைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழுந்த மாக்சிசவாதிகள் நிறைந்த சிவப்பு மண் அது. கருத்துக்கள் பாலர் மீதும் பரவியதால், மக்கள் நலச் சிந்தனைகள் முன்னுரிமை பெற்றன. வேற்றுமொழிச் சிந்தனைகளும், செய்திகளும் இவரால் தமிழாக்கமடைந்து, வீரகேசரி மூலம் மக்களைச் சென்…
-
- 0 replies
- 1.6k views
-