Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் தாயகப் பிரிப்பு பெரும் சந்தேசகத்தை ஏற்படுத்தியுள்ளது:-ஜெயானந்தமூர்த்தி. வடகிழக்கு மாகாணத்தை பிரித்து வடக்குக்கு வேறாகவும் கிழக்குக்கு வேறாகவும் இரு நிருவாக அலகுகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தை மாத்திரம் கிழக்கிலிருந்து வேறாக்கி தனி நிருவாக அலகு உருவாக்கப்பட்டுள்ள செயலானது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழர் தாயகத்தைத் துண்டாடும் சிங்கள பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட செயலாகுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றவென்றே மாகாணசபை முறைமை சிறிலங்காவில் அறிமு…

  2. எதிர்வரும் புதுவருடம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக இயங்க ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்காக தனித்தனி நிதியொதுக்கீடுகள் நடைபெற்றிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். வடக்கு, கிழக்கு இணைப்பு வலுவற்றதென்றும் சட்டவிரோதமென்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்தே எதிர்வரும், ஜனவரி மாதம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக செயற்பட ஆரம்பிக்குமென தெரிவிக்கப்படுகிறது. இதுபற்றி மேலும் அறிய வருவதாவது, வடக்கு மாகாண சப…

  3. தாக்குதல் அச்சத்தையடுத்து கொழும்பின் பாதுகாப்பு அதிகரிப்பு. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் எதிர்வரும் 24 ஆம் நாள் தொடக்கம் 30 ஆம் நாள் வரை விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக அரசுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் இராணுவ மையங்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தலாம் எனத் தகவல்கள் தெரிவித்ததையடுத்து கொழும்புத் துறைமுகம், இராணுவ மையங்கள், விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு வெகுவாக அதிகரிக்ககப்பட்டுள்ளன. www.puthinam.com

  4. 400 மில்லியன் ரூபாய் செலவில் மகிந்த அமைக்கும் பதுங்கு குழி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினதும் அவரது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கொழும்பில் பெயர் குறிப்பிடப்படாத உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் பதுங்கு குழி அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. 400 மில்லியன் ரூபாய்கள் செலவில் மிக நவீன வசதிகளை கொண்டதாக இந்த பதுங்கு குழி அமைக்கப்படுகின்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மறைக்கப்பட்ட பொறியியல் நிறுவனம் ஒன்று இதை வடிவமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த யூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட பதுங்கு குழி அமைக்கும் பணியில் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. சமை…

  5. குடாநாட்டின் பேராபத்து இப்போது "சிக்குன் குனியா" பட்டகாலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பது முதுமொழி. அது மெத்தவும் சரி என்பதனை எடுத்துக்காட்டுவது போன்று, குடாநாட்டு மக்களை ஒன்றுக்குப்பின் மற்றதாக, பலதரப்பட்ட அவலங்களும் கஷ்டங்களும் ஒரேயடியாக வந்து வாட்டி வதைக்கின்றன. கடந்த நான்கரை மாதங்களாக அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்கள் பல வழிகளாலும் செயற்கையாகவும் இயற்கையாகவும் தவிடுபொடியாக்கப்பட்டு வருகின்றன. இரண்டு வாரங்களுக்குப் போதுமான உணவு மற்றும் அத்தியாவசியப் பொருள்களே கையிருப்பில் இருந்தவேளை, திடீரென மின்னாமல், முழங்காமல் எவ்வித முன்னறிவித்தலோ, அசுகையோ இல்லாமல் ஓகஸ்ட் 11ஆம் திகதி ஏ9 வீதி மூடப்பட்டது. அதன் விளைவு ஊரடங்கு உட்பட்ட இறுக்கமான புறச்சூழ்நிலை தோ…

  6. இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் வி.நவரத்தினம் காலமானார் இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான வி.நவரத்தினம் (வயது 97) காலமானார். கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள மொன்றியல் நகரில் வெள்ளிக்கிழமை மாலை 4.10 மணி அளவில் அவர் காலமானார். யாழ். கரம்பனில் கடந்த 1910 ஒக்ரோபர் 18 ஆம் நாள் பிறந்த நவரத்தினம், இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்றார். 58 ஆண்டுகாலம் சட்டத்தரணியாக அவர் பணியாற்றினார். இலங்கைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கிறது என்ற நூலை 1956 ஆம் ஆண்டு அவர் எழுதினார். தமிழ்த் தேசியத்தின் எழுச்சி தொடர்பாக கடந்த 1995 ஆம் ஆண்டு மற்றொரு நூலை அவர் எழுதியிருந்தார். யாழ். ஊர்காவற்றுறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் அவர் பதவி வகித்தார். பண்ட…

  7. ரவிராஜ் படுகொலை விசாரணை:- ஸ்கொட்லன்ட்யார்ட் அடுத்த மாதம் வருகிறது. பிரித்தானிய குற்றப்புலனாய்வுத் துறையான ஸ்கொட்லன்யாட்டைச் சேர்ந்த ஐந்து குற்றப்புலனாய்வு அதிகாரிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் சிறிலங்காவிற்கு செல்லவுள்ளதாக தெரிகின்றது. அண்மையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மாமனிதர் நடராஜா ரவிராஜின் விசாரணைகளில் இவர்கள் சிறிலங்காவின் காவல்துறையினருக்கு உதவுவார்கள் என அறியப்படுகின்றது. எனினும் பிரித்தானிய அதிகாரிகள், அவுஸ்திரேலிய அதிகாரிகளின் ஆலோசனைகளையும் இந்த விடயத்தில் பெற்றிருப்பதாகவும் அறிய முடிகின்றது. ஏனெனில் மூதூரில் இடம்பெற்ற பிரான்ஸ் தொண்டர் நிறுவனப் பணியாளர்களின் படுகொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள அழை…

  8. இலங்கைத் தமிழர் பிரச்சினையைக் முதல்வர் கையாண்ட முறைக்கு ராமதாஸ் பாராட்டு - பண்டார வன்னியன் ளுரனெயலஇ 24 னுநஉநஅடிநச 2006 09:09 “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி செயற்பட்டு வருகிறார். அதற்காக நான் அவரைப் பாராட்டுகிறேன். என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார் கோவையில் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: கடந்த இரு தினங்களுக்கு முன் இலங்கையைச் சேர்ந்த மாணவர் பிரதிநிதிகள் முதல்வரைச் சந்தித்தனர். அவர்களிடையே பேசும்போது, “உங்களைப் பாதுகாப்பதற்காக தொடர்ந்து செயல்படுவேன். இப்போது ஏற்பட்டுள்ள இன்னல்களுக்கு எல்ல…

    • 0 replies
    • 782 views
  9. லண்டனில் கண்கலங்கிய திருமா - ஜுனியர் விகடன் http://www.tamilnaatham.com/pdf_files/jv20061223.pdf

    • 2 replies
    • 1.9k views
  10. காசி ஆனந்தன் ஆனந்த விகடனுக்கு எழுதிய பாலா அண்ணா http://www.tamilnaatham.com/pdf_files/vikatan_2006_12_23.pdf

  11. புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்: மகிந்த - மங்கள முறுகல் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 05:39 ஈழம்] [பா.பார்த்தீபன்] புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும…

    • 0 replies
    • 726 views
  12. 5 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை இன்று வெள்ளி 22 மார்கழி பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்தார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20694 தழிழீழ - இந்தி உறவில் ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்.

  13. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகரின் மகனைக் காணவில்லை. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரின் மகனைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் மூத்த ஆலோசகரான எம்.டி.பெர்னாண்டோவின் மகன் மயூரா பெர்னாண்டோ கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லை என்று கூறப்படுகிறது. பம்லப்பிட்டி பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய பின்னர் காணாமல் போனதாகத் தெரிகிறது. www.puthinam.com

    • 3 replies
    • 1.6k views
  14. 'மகிந்த சதுக்கம்" அமைப்பதற்கென சூழவுள்ள முக்கிய இடங்கள் அபகரிப்பு! 'மகிந்த சதுக்கம்" ஒன்றை நிறுவுவதற்காக ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை சூழவுள்ள இடங்கள் சுவீகரிக்கப்படுமென அப்பிரதேசத்திலுள்ள பிரதான சொத்துகளின் உரிமையாளர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்தல் விடுத்துள்ளார். நகர அபிவிருத்திக்கு பொறுப்பாகவிருக்கும் அமைச்சரின் சிபாரிசுகளின் பேரிலேயே ஜனாதிபதி இந்த உத்தரவை விடுத்திருக்கிறார். ஜனாதிபதி மாவத்தை, சதாம் வீதி, சேர் பரோன் ஜயதிலக மாவத்தை, முதலிகே மாவத்தை மற்றும் வைத்தியசாலை வீதி என்பவற்றை எல்லைகளாகக் கொண்ட 4 ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மகிந்த சதுக்கத்துக்கு அவசியமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கோட்ட…

  15. புதுவருடம் முதல் வடக்கு, கிழக்கு தனித்தனி மாகாண சபைகளாக இயங்கும். எதிர்வரும் புதுவருடம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக இயங்க ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 2007 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்காக தனித்தனி நிதியொதுக்கீடுகள் நடைபெற்றிருந்த நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். வடக்கு, கிழக்கு இணைப்பு வலுவற்றதென்றும் சட்டவிரோதமென்றும் உயர்நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்தே எதிர்வரும், ஜனவரி மாதம் தொடக்கம் வடக்கும், கிழக்கும் இருவேறு மாகாண சபைகளாக செயற்பட ஆரம்பிக்குமென தெ…

  16. இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும்:- பிரதமர் மன்மோகன் சிங். பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிசம்பர் 22இல் சந்தித்துச் சுமார் 45 நிமிடங்கள் தங்கள் வேண்டுகோளை முன் வைத்தனர். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியா தேவையான நடவடிக்கை எடுக்கும் என அப்பொழுது பிரதமர் அவர்களுக்கு உறுதி கூறினார். பேச்சு வார்த்தை வெற்றிகரமாகவும், சுமூகமாகவும் நடைபெற்றதெனவும், தங்கள் கருத்துக்களைப் பிரதமர் கவனமாகக் கேட்டுக் கொண்டதாகவும் தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர். இலங்கைப் பிரச்சினையில் தேவையான நடவடிக்கை எடுப்பதாக அப்பொழுது பிரதமர் உறுதியளித்தார். பிரதமரிடம் சொல்லப்பட்ட செய்திகள் …

  17. நத்தார் தினத்தினை முன்னிட்டு யாழில் இன்றும் நாளையும் ஊரடங்கு முற்றாக நீக்கம். நத்தார் தினத்தை ஒட்டி இன்றும் நாளையும் ஊரடங்குச் சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக யாழ்ப்பாணம் சிவில் நிர்வாக அலுவலகம் நேற்றிரவு அறிவித்துள்ளது. நள்ளிரவு ஆராதனைகளில் மக்கள் ஈடுபட்டுக்கொள்ள வசதியாகவும், நத்தார் தினத்தைக் கொண்டாட உதவும் வகையிலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படுவதாக மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.sankathi.com

  18. ஈழத்தமிழர்களுக்கு நிம்மதி வாழ்வு ஏற்படுகிறவரை இந்த போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் - திராவிடர் கழகத் தலைவர் அறிவிப்பு. ஈழத் தமிழர்கள் நிம்மதியாக வாழுகிற நிலை ஏற்படுகின்றவரை இந்தப் போராட்டம் ஓயாது, தொடரும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சென்னையில் நேற்று நடைபெற்ற “மனித சங்கிலி’’ போராட்டத்தின் போது ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். ஈழத்திலே நடக்கும் கொடுமைகள் மிக அநாகரிகமான கொடுமைகளாகும். சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு வீச்சு. சொந்த நாட்டு மக்கள் பட்டினியால் சாகவேண்டும் என்பதற்காக உணவுப் பொருட்களைக் கொண்டு செல்லாமல் தடுப்பதற்காக அங்குள்ள முக்கிய சாலைகளை சிங்கள இனவெறி அரசு மூடிவைத்துள்ளது. தொடர்ந்து குண்டுமழை அங்கு முகாம்களி…

  19. தமிழர் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் - ஜோர்ஜ் பெனான்டஸ். முன்னாள் மத்தியில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மத்தியில் சிறீலங்காவில், சிறீலங்கா அரசாங்கத்தால் தமிழர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். ஜோர்ஜ் பெனான்டஸ் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் தான் முன்னரும் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டதாகவும் இனிமேலும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். இதே வேளை இந்தியாவின் பிரதமமந்திரி மன்மோகன் சிங் அவர்கள் தமிழ் கூட்டமைப்பினரை சந்தித்தபோது இறையாண்மையுள்ள இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாகவும் கண்ணியமாக வாழ உதவிசெய்வதாக உறுதியளித்தமை தெ…

  20. புதிய வெளிவிவாகரத்துறைச் செயலாளர் நியமனம்:- மகிந்த - மங்கள முறுகல். புதிய வெளிவிவகாரத்துறைச் செயலாளரை நியமிப்பது தொடர்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பதவிக்கு இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவரான ரொமேஷ் ஜயசிங்கவின் பெயரை மங்கள சமரவீர கடந்த வாரம் மகிந்தவிடம் பரிந்துரை செய்திருந்தார். எனினும் ஜயசிங்கவை அப்பதவிக்கு நியமிக்கப்போவதில்லை என தனக்கு நெருக்கமானவர்களிடம் மகிந்த தெரிவித்ததே முறுகலுக்கான காரணம் என தெரியவருகிறது. தற்போது வெளிவிவகாரத்துறைச் செயலாளராக பணியாற்றும் பாலிகக்ஹாரவின் பதவிக்காலம் எதிர்வரும் 31 ஆம் நாளுடன் முடிவடைக…

  21. யாழ்குடாநாட்டில் ஆயுதமுனையில் கொள்ளை. யாழ்ப்பாண குடநாட்டில் பொது மக்களுக்கான உப உணவு பொருட்களை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் யாழ் நகரின் பிரதான வீதியின் மடத்தடி யாழ் மாவட்ட விவசாய நுகர்ச்சி கூட்டுறவு சமாசத்தின் அலுவலகம் மற்றும் களஞ்சிய திறப்புகள் பொது முகாமையாளரிடம் இருந்து ஆயுத முனையில் நேற்று பறிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த முகாமையாளரை நல்லூர் பகுதியில் வைத்து இடைமறித்த ஆயதபாணிகள் திறப்புகளை பறித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற்கான தரைவழி பாதை துண்டிக்கப்பட்ட பின்னர் ஒரு பகுதி உப உணவுப் பொருட்கள் இந்த அமைப்பின் ஊடாகவே விநியோகம் செய்யப்பட்டது. எனினும் இந்த அமைப்பினால் போதிய அளவில் சீராக உப உணவுப் பொர…

  22. இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சர்வதேச சமூகம் கடுமையாகக் கையாள வேண்டும் என்று யாழ் ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் தனது நத்தார் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். யாழ் ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை அவர்கள் இன்று வெளியிட்டுள்ள கிறிஸ்மஸ் தின செய்தியில் மக்கள் அனைவருக்கும் அமைதியையும் சமாதானத்தையும் சகோதரத்துவத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் விழாவாக இந்த கிறிஸ்மஸ் விழா அமைய வேண்டும் என வாழ்த்தியுள்ளார். அதேவேளை, சமாதான முயற்சிகளின் அனுசரணையாளர்களான நோர்வேயும் மற்றும் இணைத்தலைமை நாடுகளும் போரில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரையும் கடின போக்குடன் கையாள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். சுனாமி பேரலைகளினால் உயிரிழந்தவர்கள் மற்றும் துன்ப…

  23. இலங்கை பிரச்னையில் நேரடியாக இந்தியா தலையிட மறுப்பு சென்னை: "இலங்கை பிரச்சனையில் இந்தியா நேரடியாக தலையிடாது. இது தான் இந்தியாவின் நிலைப்பாடு. அதே நேரத்தில் அங்கு அமைதி நிலவ வேண்டும்; தமிழர்கள் நிம்மதியுடன் வாழ தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது,"என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக அறிவித்தார். நாடு முழுவதும் உள்ள பாஸ்போர்ட் அதிகாரிகளின் ஆண்டு மாநாடு சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை பிரச்னை குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து திட்டவட்ட பதில் அளித்தார். அவர் அளித்த பேட்டி; போலீஸ் விசாரணையின்றி பாஸ்போர்ட் வழங்குவதால் பாதுகாப்புத் தன்மை இருக்காதே? 'தட்கல்' திட்டத்தின் கீழ் …

  24. சிறிலங்கா இராணுவ பயிற்சி நிறைவு விழாவில் மகிந்த. தியத்தலாவை இராணுவப் பயிற்சிக்கல்லூரியிலிருந்து 60 சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் இன்றையதினம் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர். இந்நிகழ்விற்கு சிறிலங்காவின் ஜனாதிபதியும் முப்படைகளின் பிரதம தளகர்த்தருமாகிய மகிந்த ராஜபக்ச பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இராணுவத்தளபதி உட்பட பெருமளவு உயர்நிலை அதிகாரிகளும் தளபதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதாக சிறிலங்கா இராணுவத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.sankathi.com

  25. யாழ்ப்பாணத்தில் கைத்தொலைபேசிகள் இயங்கின? யாழ்குடா நாட்டின் சிலபகுதிகளில் நேற்றுமுன்தினம் கைத்தொலைபேசிகள் அச்சுவேலி, புத்தூர், ஆவரங்கால், இடைக்காடு, பத்தமேனி, வளளாய், நவக்கிரி போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நண்பகலுக்கு பின் இயங்கியதாக குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. www.pathivu.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.