Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கு கிழக்கில் சிக்குன்குன்யா நோயின் தாக்கம் பெருமளவு அதிகரிப்பு - பண்டார வன்னியன் -- வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் சிக்குன்குன்யா நோயின் தாக்கம் பெருமளவில் அதிகரித்து வருவதாக வைத்திய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நோயை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் சிக்குன்குன்யாவால் பீடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 தாதிய உத்தியோகத்தர்கள் 35 சேவையாளர்கள் ஆகியோரும் சிக்குன்குன்யா நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக…

  2. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. அரசாங்கம் அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையும் கண்டனமும் தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையான இராணுவ மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அரசாங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் 8 இராணுவத்தினரும் 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அ…

    • 3 replies
    • 1.1k views
  3. கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம். அமெரிக்கா தூதுவராலயம் இன்று கொழும்பில் கோட்டபாய ராஐபக்ஸ மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் அத் தாக்குதலில் கொல்லபட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஒத்த அடையாளங்களை கொண்டுள்ளதாகவும். தாங்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படிகேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com

    • 8 replies
    • 1.7k views
  4. தமிழினத் துரோகிகளான டக்ளஸையும், கருணாவையும் தமிழருக்கு எதிராக முடிசூட்டியிருக்கின்றார் ஜனாதிபதி சிவாஜிலிங்கம் எம்.பி. சபையில் ஆவேசம் வடக்கின் துரோகி டக்ளஸ் தேவானந்தாவையும், கிழக்கின் துரோகி கருணாவையும் தமிழ் மக்களுக்கெதிராக முடிசூட்டியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் இன்னும் திருந்தவில்லை என்பதை இந்திய விஜயத்தின்மூலம் தெளிவாக்கியுள்ளதாக யாழ். மாவட்ட கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நேற்று நாடாளுமன்றத்தில் பேசும்போது தெரிவித்தார். இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சு உட்பட மூன்று அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் அவர் தொடர்ந்து பேசும்போது கூறியதாவது: துரோகிகளான டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் வடக்கு, கிழக்குப் பிரிப்புக்கு ஆதரவாகச் …

  5. யாழ் வடமராட்சியில் கிளேமோர்த்தாக்குதல் மூன்று படையினர் பலி. யாழ்ப்பாணம் வடமராட்சி பழைய பொலிஸ்நிலையத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை 5.00மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் முன்று படையினர் கொல்லப்பட்டதுடன் இரண்டுபேர் படுகாயமுற்ற நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிறிலங்காப் படையினரின் பலாலி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். இத் தாக்குதலையடுத்து வடமராட்சிப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. www.sankathi.org

  6. கொழும்பில் குண்டுத்தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது, மேலதீக தகவல் தொடரும்...

    • 48 replies
    • 8.3k views
  7. தெற்கில் அபிவிருத்தி! வடக்கு கிழக்கில் இன அழிப்பு!! - நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன். வடகிழக்கில் அபிவிருத்திக்குப்பதிலாக இன அழிப்பு நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் காலம் விரைவில் மலரும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் நேற்று சபையில் தெரிவித்தார். வரவுசெலவுத்திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டுப் பேசுகையிலேயே அவர் மேற்கொண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது: வடகிழக்கில் அபிவிருத்தி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் உள்ளது. உயர் பாதுகாப்பு வலயம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளினால் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் தினமும் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்…

    • 3 replies
    • 1.1k views
  8. ஹன்சன் பவர் நாளை மறுதினம் இலங்கை வரவுள்ளார் - நோர்வே தூதரகம் அறிவிப்பு. நோர்வேயின் விசேட பிரதிநிதி ஜோன் ஹன்சன் பவர் நாளை மறுதினம் வியாழக்கிழமை 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக நோர்வேயின் தூதரக பேச்சாளர் எரிக் நியும்பேக் இன்று தெரிவித்துள்ளார். அவர் ஒரு வாரம் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு முதல் கட்டமாக இன்று போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச் செல்வனை சந்தித்து கலந்துரையாட உரையாடுவதற்காக கிளிநொச்சிக்கு சென்றுள்ளனர். இதேவேளை தமிழிழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உரையை அடுத்து புலிகள் போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து விலக…

    • 5 replies
    • 3.1k views
  9. திரிவட பலய" இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு சந்தியில் டென்சில் கொப்பேக்கடுவவின் பின்னால் கோத்தபாய சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய தளபதியாக இருந்து அராலி இறங்குதுறைப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடியில் கொல்லப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவவின் கட்டளையின் கீழ் அதிக இராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றியிருந்தவர் இவர். இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சம தகுதியில் கோத்தபாய ராஜபக்சவுடன் செயலாற்றியிருந்தார். 1990 ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த "திரிவிட பலய" இராணுவ நடவடிக்கையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தமை மற்றும் காணாமல் போகச் செய்த நடவடிக்கையில் நேரடியாக சரத் பொன்சேகாவும் கோத்த…

    • 2 replies
    • 1.8k views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிவரும் இராணுவ உத்தியோகஸ்தர்கள் மற்றும் படையினரைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினரால் கடந்த 23ஆம் திகதி இராணுவத்தைச்சேர்ந்த மேஜர் தர அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிவருபவர் என விசேட பொலிஸ் குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் கொழும்பு பிரதேசத்திலுள்ள இராணுவமுகாமொன்றில் பணிபுரியும் இராணுவ மேஜர் அதிகாரி எனவும் - இவர் விடுதலைப் புலிகள இயக்கத்தினருடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாரெனவும் இதன்மூலம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தகவல்களை இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிவந்தாரெனவும் சம்பந்தப்பட்ட பொலிஸ்ப…

    • 0 replies
    • 1.3k views
  11. காணாமற்போன இளைஞன் சடலமாக மீட்பு - பண்டார வன்னியன்- நேற்றையதினம் யாழ் தீவகம் ஊர்காவற் துறையைச் சேர்ந்த இளைஞர் வேலைக்குச் சென்ற இளைஞர் காணாமற்போயுள்ளார். இவர் இன்று காலையில் ஒரு கிடங்கிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஊர்காவற் துறையைச் சேர்ந்த லின்டன் குயின்ரன் (வயது 24) ஊர்காவற்றுறை பனை, தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாhளரும் ஒரு பிள்ளையின் தந்தையுமாவார். இன்று காலை மெலிஞ்சிமுனையில் இவரது சடலம் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு ஊர்காவற்றுறை நீதிவானின் மரணவிசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது. . சங்கதி

    • 0 replies
    • 796 views
  12. யாழில் கிளேமோர்த்தாக்குதல் இரண்டு பொலிஸார் படுகாயம். - பண்டார வன்னியன் யாழ்ப்பாணத்தில் இன்று பிற்பகல் 3.00மணியளவில் யாழ் போதனா மருத்துவமனைக்கு அருகாமையில் இடம்பெற்ற கிளேமோர்த் தாக்குதலில் இரண்டு பொலிஸார் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அருகில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் சென்ற அப்பாவிப் பொதுமக்களை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. சங்கதி .

    • 0 replies
    • 753 views
  13. விநாயகபுரம் பகுதியில் மூன்று குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை. ----------------------------------------------------- அம்பாறை மாவட்டம் விநாயகபுரம் சக்தி வித்தியாலயப்பகுதியில் நேற்று இரவு 9:00மணியளவில் அப்பகுதியில் நின்ற மூன்று குடும்பஸ்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளர். நேற்று இரவு இவர்கள் இப்பிரதேசத்தில் நின்றிருந்தபோது அங்கு திடீர் என வாகனம் ஒன்றில் வந்த குழுவொன்றே இவர்கள் மீது சரமாரியான துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் காரணமாக பழைய தபாலக வீதியைச்சேர்ந்த மயில்வாகனம் அருளானந்தம் (28), சபாரட்ணம் ரவீந்திரன் (30) மற்றும் கந்தசாமி காந்தரூபன் (35) என்பவர்களே கொல்லப்பட்டவர்கள் என்று தெரிவிக்க…

    • 0 replies
    • 617 views
  14. Started by Soori,

    கொழும்பின் மர்ம பிரிவினரே வாகன விபத்தில் கொல்லப்பட்டனர். இலங்கை பாதுகாப்பு அமைச்சின் கூட்டுப்படை தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் கொழும்பு பிராந்தியத்தை கவனித்துவரும் பொலிஸ் இராணுவ , புலானாய்வு பிரிவினரின் வாகனமே விபத்துக்குள்ளானதாக அறியமுடிகிறது. அண்மைக் காலமாக கொழும்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மர்ம கடத்தல்கள் கொலைகளின் பின்னணியில் இந்த விசேட பிரிவினரே ஈடுபட்டு வருவதாகவும் அறியமுடிகிறது. கொழும்பு பிராந்திய உளவுப்பிரிவு உத்தியோகத்தரான பெண் பொலிஸ் ஊழியர், சுற்றிவளைப்பிலும் கடத்தல்களிலும் ஈடுபடும் விசேட இராணுவ புலனாய்வுப் பிரிவினரின் 10 பேர் அடங்கிய குழு ஒன்று விசேட உளவு வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது வத்தளையில் குணுபிட்டிய வெடிகன்ட என்ற இடத்தில் உள்ள புகையிரத கடவையை க…

    • 1 reply
    • 1.4k views
  15. விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் அரச சமாதான செயலக செயலாளர் பாலித நம்பிக்கை தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என தாம் நம்புவதாக அரசாங்க சமாதான செயலகத்தின் செயலாளர் பாலித கோஹன தெரி வித்துள்ளார். விடுதலைப் புலிகள் தாம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலக வில்லைஎன காணிப்பாளர்களிடம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளின் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண முடியும். தமிழீழ விடுதலைப் புலிகளும் மீண்டும் பேச்சு மேசைக்கு வருவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோம்.பேச்சுக்கள் மூலமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முனையும் அரசாங்கத்தின் …

  16. தொடருந்து - படையினரின் ஊர்தி மோதல் - ஐந்து படையினர் பலி, 17பேர் படுகாயம் இன்று காலை 6.30 மணியளவில் கம்பகா மாவட்டத்தின் எதருமுல்ல பகுதியில் ஸ்ரீலங்கா படையினரின் ஊர்தி ஒன்று தொடருந்து ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளானதில் ஐந்து படையினர் கொல்லப்பட்டும், மேலும் 17 படையினர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேடுதல் நடவடிக்கை ஒன்றையடுத்து ஊர்தி ஒன்றில் திரும்பிக் கொண்டிருந்த படையினர் தொடருந்து கடவை ஒன்றை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து எற்பட்டதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து படையினர் பலியாகியுள்ளதுடன் மேலும் 17பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். www.sankathi.org .

  17. ஐக்கிய நாடுகளிடம் அனைத்துலக யூறிகள் சபை இன்று ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகளின் அமைப்பிடம் விடுத்த கடுமையான வேண்டுகோளில் இலங்கையின் மனித உரிமைகள் மீறப்படும் இந் நிலைமையை வெகு உன்னிப்பாக அவதானித்து உடன் நடவடிக்கை எடுக்கும் படியும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான மனிதஉரிமைகள் ஆணைக்குழு ஒன்றை இலங்கையில் நிறுவும்படியான தங்களின் கடுமையான நிலைப்பாட்டை மீளவலியுறுத்தியுமுள்ளது. இலங்கையில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் மனிதஉரிமை மற்றும்இ மனிதாபிமான பேரவலம் குறித்தும் கட்டுப்பாடற்ற படைகளின் நடவடிக்கைகள் தொடர்பிலும் (ICJ) பெரும் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் அமைப்பு வாளாதிருக்க முடியாது. இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்…

  18. சர்வதேச அபிப்பிராயத்துக்கு சிங்கள அரசு இடங்கொடுக்கவில்லை இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேச சமூகத்திற்கும் கண்டனங்களுக்கும் மகிந்த அரசு பணிந்துகொடுக்குமா? என்ற வினா பலமானமுறையில் எழுப்பப்படுகின்றது. நோர்வே அனுசரணை - இணைத்தலைமை நாடுகளின் பங்குபற்றல் என்ற வகையில் இலங்கையின் இனப்பிரச்சினை சர்வதேச விவகாரமாகிவிட்டது. ஜெனீவா - 2 பேச்சுக்கு சர்வதேச செய்திநிறுவனங்கள் அளித்த முக்கியத்துவம் பாரியது. பேச்சுக்கள் ஜெனீவாவில் நடந்தபோது இணைத்தலைமை நாடுகளின் பெரும்பாலான பிரதிநிதிகள் கொம்பில் தங்கிநின்றனர். இலங்கை இனப்பிரச்சினையில் சர்வதேச அக்கறை அதிகரித்துவிட்டது| என்று ஊடகங்கள் இதற்கு வியாக்கியானம் செய்தன. பேச்சு தோல்வியில் முடிந்தபின் புலிகள் பிரதிநிதிகள் கொழும்பு…

  19. இணைந்த சுற்றுக்காவல் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு. இலங்கை-இந்திய கடல் எல்லைகளில் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இந்திய அரசு நிராகரித்துள்ளதாக தெரிகிறது. இந்தியாவுக்கு சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து விரிவான பேச்சுகளை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் பின்னரே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக புதுடில்லியின் முக்கிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படை தமது கடல் எல்லைகளை வழமைபோல் கண்காணிக்கும். ஆயினும் சிறிலங்கா அரசுடன் இணைந்து கடல் கண்காணிப்புக்களையு…

  20. ஹன்சன் பவர் எதிர்வரும் திங்கள் கிளிநொச்சி பயணம். நோர்வேயின் விசேட சமாதானப் பிரதிநிதி ஜோன் ஹான்சன்பவர் எதிர்வரும் திங்கட் கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மாவீரர் தின உரையின் பின்னர் இவரின் இந்த விஜயம் அமைந்துள்ளது. நேற்றிரவு இலங்கை வந்த இவர் கொழும்பிலும் அரசின் முக்கியஸ்த்தர்களைச் சந்திக்க உள்ளார். ஏற்கனவே அரச சமாதானக் குழுத் தலைவர் நிமால் சிறீபாலடீ சில்வாவைச் இன்று சந்தித்துள்ளார். சுகாதார அமைச்சில் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாhடலில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டதாக அமைச்சர் வெளியிட்டுள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமாதானப் பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிப…

  21. 'தமிழீழம் ஆனாலும் மகிழ்ச்சி மாற்றுத் தீர்வானாலும் மகிழ்ச்சி'- கருணாநிதி இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனியான தமிழீழம் ஒன்று உருவானால் தான் மகிழ்ச்சியடைவேன் என்றும் ஆயினும் அனைத்துத் தரப்பாலும் ஏற்கக்கூடிய மாற்றுத்தீர்வு ஒன்று ஏற்பட்டாலும் தனக்கு மகிழ்ச்சியே என்றும் தமிழக முதல்வர் மு. கருணாநிதி கூறியுள்ளார். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தற்போது தனி ஈழம் ஒன்றே வழி என்று விடுதலிப்புலிகள் அமைப்பின் தலைவர் வே, பிரபாகரன் அவர்கள், கூறியது குறித்து அவரது கருத்து என்ன என்று நிருபர்கள் கேட்டதற்குப் பதிலளிக்குமுகமாகவே கருணாநிதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதுபற்றி தான் முன்னரே கூறியிருப்பதாகக் குறிப்பிட்ட கருணாநிதி அவர்கள், தற்போதைய நிலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி…

    • 11 replies
    • 2.7k views
  22. யாழ் குடாநாட்டில் பெண் உளவாளிகளின் நடமாட்டம் அதிகரிப்பு. யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக நிலவிவரும் அசாதாரண சூழ் நிலையைத் தொடர்ந்து பெண் உளவாளிகளின் நடமாட்டங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பெண்கள் ஈ.பி.டி.பி ஒட்டுப்படையுடன் இனணந்து செயல்பட்டு வருகின்றார்கள் என்பது அண்மைக் காலத்தில் பொது மக்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் யாழ்ப்பாணத்தில் மூன்று பெண் உளவாளிகள் பொங்கியெழும் மக்கள் படை மற்றும் எல்லாளன் படையினால் சுடப்பட்டு உரிமை கோரப்பட்டுள்ளார்கள். தென்மராட்சிப் பகுதியில் சமுர்த்தி அலுவலராக கடமையாற்றியவரும் கோப்பாயில் முன்பள்ளி ஆசிரியை ஒருவரும் மற்றும் அண்மையில் பல்கலைக்கழக அயலில் உதயகுமார் றஜீதா என…

    • 3 replies
    • 2.3k views
  23. ராமதாஸ் - மனோகணேசன் நேற்று சந்திப்பு தமிழகம் சென்றிருக்கும் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்று புதன்கிழமை இரவு திண்டிவனத்தில் டாக்டர் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்து சிறிலங்கா தமிழர் பிரச்சினை குறித்து விரிவாக உரையாடியுள்ளார். குறிப்பாக வடக்கு,கிழக்கு பிரச்சினைகள் குறித்து கருத்துத் தெரிவித்த டாக்டர் ராமதாஸ், சிறிலங்காவின்; வடக்கு,கிழக்கிற்கு அப்பால் பரந்துபட்டு வாழும் வேறுபட்ட தமிழ் சமுதாயப் பிரச்சினைகளை மிகவும் அந்நியோன்யமாக கேட்டறிந்தார். இலங்கைப் பிரஜையான தமிழன் எங்கு வாழ்ந்தாலும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுவதும் இதற்கப்பால் தமிழ் வர்த்தகர்கள் மீதான அச்சுறுத்தல், கடத்தல், கப்பம், கொலைகள் பற்றி எடுத்துர…

  24. திருமலை மாவீரர் துயிலும் இல்லம் சிறிலங்கா இராணுவத்தினரால் சிதைப்பு திருகோணமலை, மூதூர் கிழக்கு ஆலங்குளத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சிறிலங்கா இராணுவத்தினர் சிதைத்து அழித்துள்ளனர். கனரக ஆயுத தளவாடங்கள் மற்றும் இராணுவத் தாங்கிகள் உதவியுடன், இந்த மாவீரர் துயிலும் இல்லத்திற்குள் கடந்த நவம்பர் 25 ஆம் நாள் நுழைந்த இராணுவத்தினர், மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஈன இரக்கமற்ற தாக்குதலை உறுதிப்படுத்திய திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன், நாகரிகமடைந்துள்ள தற்போதைய உலகில், எந்த நாட்டின் இராணுவமும் இத்தகைய கேவலமான செயலில் ஈடுபடாது என்றும் தெரிவித்தார். மாவீரர் நாள் கடைப்பிடிப்பிற்கு இரு நாட்களே இருந்த நிலையில், திட்…

  25. குடாநாட்டில் மாதாந்தம் 50 பேர் வரை படுகொலை யாழ்.குடாநாட்டில் மாதந்தோறும் ஐம்பது பேருக்குக் குறையாமல் படுகொலை செய்யப்பட்டு வருவதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் மேலும் கூறுகையில், எமக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் படுகொலைகள் குறித்த புள்ளிவிபரத்தை தெரிவிக்கின்றோம். இதேநேரம் பல சந்தர்ப்பங்களில் இந்தப் படுகொலைகள் தொடர்பாக எமக்கோ அல்லது வேறு எந்த மனித உரிமைகள் அமைப்புக்கோ சம்பந்தப்பட்டவர்கள் முறையிடுவதில்லை. அவை எமது புள்ளி விபரங்களிலும் உள்ளடக்கப்படுவதில்லை. இவ்வாறு மனித உரிமைகள் குழுக்களிடம் அந்தப் படுகொலைகள் குறித்து முறையிடப்படாது போவதால் அவை குறித்துப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.