Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விடுதலைப் புலிகளின் தலைவரினால் மேற்கொள்ளப்படும் முழுமையான மோதல் தவிர்ப்பு குறித்து அரசாங்கம் பரிசீலிக்க தயார் என மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை சந்திப்பொன்றை மேற்கொண்ட வேளையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை அரசாங்க செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் சமாதான முயற்சியின் தற்போதைய நிலை மற்றும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய விடயங்கள் குறித்து இணைத்தலைமை நாடு களின் பிரதிநிதிகள் மகிந்த ராஜபக்ஷவை நேற்று சந்தித்து கருத்து பரிமாறினர். விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாகவே பாதுகாப்பு படையினர் இராணுவ …

    • 0 replies
    • 980 views
  2. மட்டக்களப்பு பிரதான மார்க்கத்தில் கும்புறுமூலை என்னுமிடத்தில் (பாசிக்குடா சந்தி) புதியதாக இராணுவ வீதிச் சோதனை சாவடி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, திருகோணமலை, வவுனியா, புத்தளம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பஸ்கள் அனைத்தும் இந்த கும்புறுமூலை சோதனைச் சாவடி ஊடாகவே வாழைச்சேனை ஓட்டமாவடி வழியாக பயணம் செய்வது வழமையாகும். இதனால் இந்த புதிய சோதனைச்சாவடியில் சகல பயணிகளும் பஸ்சிலிருந்து இறங்கி சோதனை முடிந்த பின்னரேதான் பயணம் செல்ல முடியும். சமாதானம் ஏற்பட்ட காலத்தில் இந்த சோதனைச் சாவடி அகற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

    • 0 replies
    • 733 views
  3. இலங்கை அரசாங்கம் தொடர்பாக தமிழகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்பலையானது ஆரோக்கியமான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். தமிழக சட்டசபையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐக் கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வல்ல . தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் கூறியதாவது. பேச்சுவார்த்தையே பிரச்சினைத்தீர்வுக்கு ஒரே வழி என்ப…

    • 0 replies
    • 804 views
  4. அல்லைப்பிட்டி பங்கு தந்தையை கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் காணவில்லையென முறையிடப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அல்லைப்பிட்டியில் பூஜைக்காக ஊர்காவல்துறையிலிருந்து அல்லைப்பிட்டிக்கு சென்ற பங்குத் தந்தையான திருச்செல்வம் நிகால் ஜிம்ரஷண் வயது 37 அவருடன் சென்ற வின்சன் விமலன் (வயது 38 ) அகியோரே காணாமல் போயுள்ளார்கள். கடந்த ஞாயிற்றுக் கிழமை அல்லைப்பிட்டி கடற்படையினரின் சோதனைச்சாவடியைத் தாண்டி அல்லைப்பிட்டிக்குள் சென்றமையை நாரந்தனை பங்கு தந்தை கண்டுள்ளார். ஆனால் அதன் பின்னர் பங்குத்தந்தைக்கும் அவருடன் சென்றவருக்கும் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. பங்குத் தந்தை காணாமல் போன விடயம் குறித்து கடற்படையின் வடபிராந்திய தளபதியுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அல்லைப்பிட்டி சோதனைச் சாவட…

  5. யுத்த நிறுத்தம் தொடர்பான மகிந்த சொன்ன காரணங்களுக்கு திரு.தமிழ்செல்வன் அவர்களின் பதில். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19343

  6. வவுணதீவு படைமுகாம் மீது எறிகணைத் தாக்குதல் படைச்சிப்பாய் படுகாயம். மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாம் விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளார். இன்று பிற்பகல் 3.40 மணியளவில் மூன்று எறிகணைகள் வவுணதீவு இராணுவ முகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளது. எறிகணைத் தாக்குதலில் ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த படைச்சிப்பாய் மட்டக்களப்பு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 4 replies
    • 1.4k views
  7. வடக்கில் கடந்த ஒரு வாரகாலத்துக்கு மேலாக கடும் சண்டை நடைபெற்றுவந்த முகமாலை, கிளாலிப் போர்முனைப் பகுதியில் சனிக்கிழமை காலை தொடக்கம் இனம் புரியாத மயான அமைதி நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பகுதியில் கடந்த 24 மணித்தியாலங்களுக்கு மேலாகப் பெரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. விமானக் குண்டு வீச்சு மற்றும் ஷெல், பீரங்கித் தாக்குதல்களும் ஓய்ந்து போயுள்ளன. முகமாலை அடங்கலாக தென்மராட்சி போர் முனையில் அமைதி நீடிப்பதை படைத்தரப் பும் புலிகளின் வட்டாரங்களும் உறுதி செய்தன. இடையிடையே ஓரிரு ஷெல்கள் வெடித்தன. எனினும் அப்பிரதேசத்தில் சண்டை ஓய்ந்துள்ளது என்று கிளிநொச்சி வட்டாரங்கள் தெரிவித்தன. வெள்ளிக்கிழமை காலை முதல் இந்தப் பகுதிகளில் இருதரப்பினரிடையேயும் கடும் சண்…

    • 15 replies
    • 3.3k views
  8. யாழ் பகுதியில் இருவர் சுடப்பட்டனர் [புதன்கிழமை, 23 ஓகஸ்ட் 2006, 01:18 ஈழம்] [காவலூர் கவிதன்] சிறீலங்கா இராணுவத்திற்கு இரகசிய தகவல்களை வழங்கிவந்ததாக நம்பப்படும் ஒருவரும், சந்தையில் மரக்கறி விற்கும் ஒருவரும் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். கரவெட்டி, கிழவித் தோட்டம் அருகே வைத்து, பெருமாள் சந்திரகுமார் (வயது 44) சுட்டுக் கொல்லப்பட்டார். பிறிதொரு சம்பவத்தில், சுன்னாகம் பொதுசந்தைப் பகுதியில் வைத்து, கந்தையா கணேசலிங்கம் (வயது 34) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். சுன்னாகம்-உரும்பிராய் வீதியில் இவரது உடல் பல மணிநேரமாக அப்படியே இருப்பதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். http://www.eelampage.com/?cn=28362

  9. நயினாதீவு கடற்கரையில் குழந்தையின் சடலம். யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்கரையில், இன்று பெண் குழந்தை ஒன்றில் சடலம் கரையொதுங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் இன்று 9 மணியளவில் இந்த சடலம் கரையொதுங்கியுள்ளது. நேற்றைய தினமும் ஊர்காவற்றுறை கடற்கரையில் பெண்கள் இருவரின் சடலங்கள் கரையொதுங்கின. இவையும் இன்று கரையொதுங்கிய சடலங்களும் அண்மையில் இந்தியாவுக்கு தப்பிசென்ற வேளையில் கடலில் மூழ்கி உயரிழந்தவர்களின் சடலங்கள் என கருதப்படுகிறது http://www.athirvu.com/index.php?option=co...id=346&Itemid=9

  10. இராமேஸ்வரம் வான்பரப்பினூடாக பலாலிக்கு சிறிலங்கா விமானப்படை விமானங்கள் [செவ்வாய்க்கிழமை, 22 ஓகஸ்ட் 2006, 19:40 ஈழம்] [தி.நிர்மலா] யாழ். பலாலிக்கு தமிழகத்தின் இராமேஸ்வரம் வான்பரப்பினூடாக சிறிலங்கா விமானப்படையின் விமானங்கள் இயக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இரத்மலானைக்கும் பலாலிக்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட விமான சேவைகளை சிறிலங்கா விமானப்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் உள்ள இராணுவ வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் என்பன மாலை அல்லது இரவு நேரங்களிலேயே மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இரண்டுப் பயணங்கள் என சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளின் ஆட்லறி தாக்குதல்களினால் கடந்த 12 ஆம் நாள் முதல் பலால…

    • 0 replies
    • 1.2k views
  11. பாக்கிஸ்தானின் ஐ.எஸ்.ஐ எனப்படும் புலனாய்வுத்துறையினர் இந்தியாவக்கு எதிரான தமது புலனாய்வு வேலைகளை, ஸ்ரீலங்காவில் மிகவும் ஆழமாக்கும் பணிகளில் முனைப்பாகச் செயல்படுகின்றனர். கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி பாக்கிஸ்தானின் முன்னாள் தூதுவர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியின் பின்னர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதுவரும் முன்னர் இராணுத்திலும் புலனாய்வுத்துறையிலும் தேர்ச்சி பெற்ற மற்றுமொரு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னைய தூதுவர் பஷீர் வாலி மொகமட் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் ஒன்றை தெளிவாக தெரியப்படுத்துகின்றது. அதாவது, பஷீர் வாலி மொகமட்டினால் சீராக புடம்போட்டுள்ள புலனாய்வுக் களத்தினை வழிநடத்துவதற்கான முயற்சியின் ஒரு கட்டமே, இந்த ஓய்வுபெற்ற விமானப்படைத் த…

    • 3 replies
    • 1.4k views
  12. சிறி லங்கா அரசுக்கு எதிரான தமிழக நிலைப்பாடு நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல - ராஜித சேனாரட்ன. சிறி லங்கா அரசாங்கம் தொடர்பாக தமிழகத்தில் கிளம்பியுள்ள எதிர்ப்பலையானது ஆரோக்கியமான விடயமல்ல. இது தொடர்பாக அரசாங்கம் சிந்தித்து செயற்படவேண்டும். தமிழக சட்டசபையில் சிறி லங்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு யுத்தம் ஒருபோதும் தீர்வல்ல . தற்போதைய நிலைமையில் சர்வதேச சமூகம் அரசாங்கத்திற்கு எதிராகவே உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அவர் மேற்…

  13. வடபோர் முனையில் சிறீலங்கா இராணுவத்தினரால் வலிந்த தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட போதும் அதனை புலிகள் முறியடித்து இராவத்தினரின் முன்னணி நிலைகளை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். தற்பொழுது மோதல்கள் தணிந்திருப்பதாகக் கூறப்படுகின்றபோதும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளிடம் இழந்த பகுதிகளை மீளக் கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப் போவதாக சிறீலங்கா படைத்தரப்பு அறிவித்துள்ளது.

  14. உலகெங்கும் உள்ள 9 கோடிக்கும் அதிகமான தமிழ் இனத்தை பரிகாசம் செய்வதுபோல வெறும் 75 இலட்சம்பேர் கொண்ட அற்ப சிங்கள இனவெறியர்கள் ?????? திருமாளவன் ஆவேசம்.

  15. பொறளையில் 20 கிலோ எடையுள்ள குண்டு மீட்பு. கொழும்பு பொறளைப் பகுதியினுள் 20 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் பொறளைப் பகுதியில் அநாதரவான நிலையில் சைக்கிள் ஒன்று காணப்பட்டது. மரக்கறி வியாபாரத்திற்காக சைக்கிளில் பொருத்தப்பட்ட பெட்டி ஒன்றினுள் இருந்தே இக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. இக்குண்டு நாடகம் சிறீலங்காப் படையினராலேயே அரங்கேற்றப்பட்டது என கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

    • 0 replies
    • 932 views
  16. பளைப் பகுதியில் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சு. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பளைப் பகுதியில் சிறீலங்கா விமானப் படையினரின் கிபிர் விமானங்கள் குண்டு வீசியுள்ளன. இன்று முற்பகல் 11 மணியளவில் இக்குண்டு வீச்சுகள் கிபிர் விமானங்கள் நடத்தியுள்ளன. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

    • 0 replies
    • 919 views
  17. மட்டக்களப்பு நகரிலிருந்து விடுதலைப் புலிகளின் நிர்வாக்காப் பகுதிகள் நோக்கிய எறிகணை வீச்சு. மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள 233 வது படைப்பரிவில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி நேற்று திங்கள் இரவு 10.30 மணியளவில் கடுமையான செல் வீசப்பட்டுள்ளது. புலிகளின் கட்டுப்பாட்டியில் உள்ள குறிஞ்சாமுனை தாண்டியடி போன்ற இடங்களில் வீழ்ந்து வெடித்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இரவோடு இரவாக இடம்பெயர்ந்துள்ளனர். உயிர் சேதம் ஏதும் ஏற்படாத போதிலும் குடியிருப்புக்கள் பல சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது. இதேவேளை நேற்று முந்தினம் கடுமையாக செல் தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    • 0 replies
    • 794 views
  18. மட்டக்களப்பு மாஞ்சோலை அரசாங்க மருத்துவமனைப் பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரிகள் விடுதிக் கட்டடம் அடையாளம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி சேதமடைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.10 அளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தையடுத்து பணிகளை இடைநிறுத்திய மருத்துவமனை ஊழியர்கள் தமக்குப் பாதுகாப்பு அளிக்குமாறு கோரியுள்ளனர். சம்பவம் குறித்து மாவட்ட மருத்துவ அதிகாரி எச்.எம்.சுபைர் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். தங்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கப்படும் வரை கடமைக்கு சமூகமளிக்கப் போவதில்லை என மருத்துவமனை ஊழியர்கள் வாழைச்சேனை சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளருக்கு அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக …

  19. "தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வன்முறைகளைக் கண்டித்து சிறிலங்காவுக்கு எதிரான தடைகளை விதிக்குமாறு" சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக சுவிசின் மாநிலங்கள் தழுவிய ரீதியாக நடைபெற்று வந்த "சாவிலும் வாழ்வோம்" கவனயீர்ப்பு போராட்டத்தின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற சுவிஸ் வாழ் தமிழர்கள் அந்நாட்டு அரசிடம் இக்கோரிக்கையை விடுத்தனர். சுவிஸ் தமிழர் பேரவை மற்றும் சுவிஸ் தமிழ் இளையோர் ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (21.08.06) நண்பகல் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான சுவிஸ் வாழ் தமிழர்கள் பங்கேற்றனர். சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச மற்றும் …

  20. வடக்கு கிழக்கில் நடைபெறும் இராணுவத்தின நடவடிக்கைகள் மற்றும் வலிந்த தாக்குதல்களை கொழும்பிலிருந்து ஒருங்கிணைத்து வழிநடத்தும் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் லோறன்ஸ் பெனான்டோ சிறீலங்கா படைத்துறைச் செயலகத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

  21. இலங்கைபோர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவராக நோர்வேயின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோஹான் சொல்பேர்க் பதவியேற்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கண்காணிப்புக் குழுத் தலைவரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் இம்மாத இறுதியுடன் அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார். 54 வயதான மேஜர் ஜெனரல் சொல்பேர்க் நோர்வேஜிய இராணுவத் தளபதிப் பதவிலியிலிருந்து கடந்தாண்டு ஓய்வுப் பெற்றார். அதற்கு முன்னர் இராணுவத்தின் ஆறாம் படைப்பிரிவுத் தலைவராக 4 வருடங்கள் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 10 வருட காலத்தில் இராணுவ இடமாற்றங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பினை வகித்து வந்த அவர், இராணுவ காலாட்படைப் பிரி…

  22. கொழும்பு திரும்ப முடியாமல் யாழில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்கள் தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளவும் -வீரகேசரி நாளேடு வெளிநாடுகளில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்து யாழ். சென்றவர்களும், தற்பொழுது யாழ்ப்பாணத்தில் நடைபெறும் மோதல்கள் காரணமாக அங்கிருந்து கொழும்பு வரமுடியாமல் சிக்குண்டிருக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றவர்களும் தத்தமது தூதுவராலயங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர். தற்பொழுது ஏ9 பாதை மூடப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு யாழ். விமான சேவைகள் தடைப்பட்டுள்ள நிலையிலும், கொழும்பு வர முடியாமல் தவிக்கும் வெளிநாட்டு பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களை கொழும்புக்கு அழைத்து வருவதற்கு அந்நாட்டு தூதுவராலயங்கள் சர்வதேச செஞ்சிலுவைச்…

    • 20 replies
    • 4.6k views
  23. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் அடுத்த தலைவராக நோர்வேயின் முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜோஹான் சொல்பேர்க் பதவியேற்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய கண்காணிப்புக் குழுத் தலைவரான சுவீடன் நாட்டைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் இம்மாத இறுதியுடன் அந்தப் பதவியிலிருந்து விலகவுள்ளார். 54 வயதான மேஜர் ஜெனரல் சொல்பேர்க் நோர்வேஜிய இராணுவத் தளபதிப் பதவிலியிலிருந்து கடந்தாண்டு ஓய்வுப் பெற்றார். அதற்கு முன்னர் இராணுவத்தின் ஆறாம் படைப்பிரிவுத் தலைவராக 4 வருடங்கள் அவர் பணியாற்றியுள்ளார். கடந்த 10 வருட காலத்தில் இராணுவ இடமாற்றங்கள் சம்பந்தப்பட்ட முக்கிய பொறுப்பினை வகித்து வந்த அவர், இராணுவ காலாட்படைப் ப…

  24. வடபோர்முனை சண்டைக்காட்சிகள். 17.08.2006 http://www.pathivu.com/?ucat=videonews

    • 0 replies
    • 1.2k views
  25. வவுனியா பகுதியில் இராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்படுகின் றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் பல பகுதிகளிலிருந் தும் ஒன்று சேர்க்கப்பட்ட துருப்பினர் கட்டம் கட்டமாக வவுனியாவுக்கு நகர்த்தப்பட்டு வரு கின்றனர் இவ்வாறு நகர்த்தப்படும் படையினரில் கணிசமானோர் வவுனியாவில் உள்ள படை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அதே வேளை, குறிப்பிடத்தக்க அளவிலான படை யினர் முன்னரங்க நிலைகளுக்கு அனுப்பப் பட்டு வருகின்றனர் என்று தகவல்கள் கூறு கின்றன. வடக்கில் முகமாலை, கிளாலி பகுதிகளில் குவிந்துள்ள புலிகளின் பலத்தை உடைப்பதற் காக தெற்கே வவுனியாவில் புலிகளின் கட் டுப்பாட்டுப் பகுதியினுள் அர சுப் படைகள் புதிய போர்முனை ஒன்றை திறக்கக்கூடும் என்று இரா ணுவ ஆய்வாளர்கள் …

    • 0 replies
    • 943 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.