Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. துணை இராணுவக் குழுவினரின் சிறார் கடத்தலைத் தடுக்க யூனிசெஃப் வலியுறுத்தல் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் சிறார் கடத்திச் செல்லப்படுதலைத் தடுக்க வேண்டும் என்று யூனிசெஃப் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. யூனிசெஃப் அமைப்பு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரான கருணா குழுவினர் சிறார்களை கடத்திச் சென்று தங்களது குழுக்களில் கட்டாயமாக இணைத்துக் கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலத்தில் இது தொடர்பில் 30-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 18 வயதுக்குறைவானோர் கடத்தப்படுவதும் கட்டாயமாக குழ…

  2. ஐரோப்பிய கண்காணிப்புக் குழுவினரை வெளியேற்ற சிறிலங்கா எதிர்ப்பு [வியாழக்கிழமை, 22 யூன் 2006, 17:00 ஈழம்] [ம.சேரமான்] இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களை வெளியேற்ற வேண்டும் என்ற விடுதலைப் புலிகளின் கோரிக்கையை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது தடையை விதித்திருப்பதன் மூலம் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் நடுநிலையோடு செயற்பட மாட்டார்கள் என்பதால் அவர்கள் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வலியுறுத்தினர். கிளிநொச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின் போதும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்…

  3. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு சந்திரகாந்தன் தெரிவு. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் அவர்களை நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளருடன் தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் கலந்துரையாடிதாவும் இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு சந்திரகாந்தன் ஒப்புக்கொண்டுள்ளார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லண்டலின் வசிக்கும் சந்திரகாந்தனை ஐரோப்பிய நாடுகளுக்கான பரப்புரைகளை மேற்கொள் வரவிருக்கும் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின…

  4. யாழ் வட்டுக்கோட்டையில் தாக்குதல் படைச் சிப்பாய் இருவர் பலி! மேலும் இருவர் படுகாயம். யாழ்ப்பாணம் வட்டுக் கோட்டையில் இன்று காலை இடம் பெற்ற துப்பாக்கிச் சூடு கைக்குண்ட வீச்சு சம்பவத்தில் இரண்டு இராணுவத்தினர் பலியாகியுள்ளதுடன் இரண்டு இராணுவத்தினர் படு காயங்களுக்கு உள்ளாகி பலாலி இராணுவ வையித்திய சாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளார்கள். இன்று காலை 8.45 மணியளவில் வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் மீ;து இனம் தெரியாதவர்கள் மறைந்திருந்து கைக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டார்கள.; இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் ஒரு இராணுவம் பலியானதுடன் மற்றொரு இராணுவத்தினர் ஒருவர் பலத்த காயத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்திற்கு வட்டுக் கோட்டை …

  5. சிந்தனையையும், யதார்த்தத்தையும் கொண்ட தமிழீழ அரசை புலிகள் இயங்குகின்றனர் - AP செய்தி நிறுவனம். சிந்தனையையும், யதார்த்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட தமிழீழ அரசை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கி வருவதாக AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட செய்தியாளர் ஒருவரின் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருக்கும் யுP செய்தி நிறுவனம், தென்னிலங்கையில் பயன்படுத்தப்படும் சிறீலங்காவின் வரைபடம், உண்மை நிலையை பிரதிபலிபக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது. தமிழீழ நடைமுறை அரசு என்பது வெறும் கற்பனை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ள போதும், கள யதார்த்தம் வடக்குக் கிழக்கில் தமிழீழ தனியரச…

  6. தமிழகத்தின் அக்கறை இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் அக்கறை காட்டுவதில் ஒரு தணிவு நிலையைக் கடைப்பிடித்து வந்த தமிழக அரசியல் கட்சிகள் மீண்டும் துடிப்புடன் குரல் கொடுக்கும் சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இலங்கையில் அண்மைக் காலமாகத் தீவிரமடைந்திருக்கும் வன்முறை நிகழ்வுப் போக்குகள் காரணமாக தமிழகத்தில் தோன்றியிருக்கும் உணர்வலைகளை அவதானித்த இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் , மாநில முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியுடன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலைவரங்கள் குறித்து ஆராய்வதற்காக தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்புவதாக அறிவித்திருக்கிறார். இன்று புதுடில்லி செல்லும் இ…

  7. தமிழ்க் குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலுள்ள கடப்பாட்டை நிறைவேற்றும்படி இலங்கை அரசை சர்வதேச சமூகம் நிர்ப்பந்திக்க வேண்டும்' * வடக்கு, கிழக்கில் அப்பாவிக் குடிமக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று புதன்கிழமை காலை சபையில் விடுத்த விசேட அறிக்கை கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலான கொடூரமான யுத்தத்தினால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ்ப் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பல இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். அவர்களில் பெரும்பாலானோர் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ளார்கள்; கணிசமான எண்ணிக்கையானவர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார்கள். டிசம்பர்௨004 கடல்கோளினாலும் வடக்கு, கிழக்கு தம…

  8. யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிக்க புலிகள் திட்டவட்டமான நிபந்தனை அரசுப் படைகள் செம்மையாகப் பின்பற்றினால் தாங்களும் அதே மாதிரிச் செயற்படுவார்களாம் நோர்வேக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிப்பு யுத்த நிறுத்தத்தைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டவட்டமான நிபந்தனை ஒன்றை விதித்திருக்கின்றார்கள். யுத்த நிறுத்த ஏற்பாடுகளை அரசுப் படைகள் செம்øமாயாக முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே தாங்களும் யுத்த நிறுத்தத்தைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை எழுத்து மூலம் அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு விடுதலைப் புலிகள் தெரியப்படுத்தியிருக்கின்றன

  9. ஜோசப் பரராஜசிங்கத்தின் இடத்துக்கு சந்திரநேருவின் மகன் நியமனம்? மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேருவின் மகன் சந்திரகாந்தன் நியமனம் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது. இது தொடர்பாக தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்திரநேருவின் மகனை நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. லண்டனில் உள்ள சந்திரகாந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேரில் சந்தித்து இலங்கைக்கு அழைத்து வர உள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் த…

  10. 'பேசாலை கொலைகள்; கடற்படை, போலிசார் மீது நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு'-- போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழு இலங்கையில் மன்னார் மாவட்டம் பேசாலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர். இது குறித்து தமிழோசையிடம் பேட்டியளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்காகப் பேசவல்ல அதிகாரி, தோர்ஃபினூர் ஒமார்சன் , மன்னார் அருகே பேசாலை தேவாலயத்தில் கையெறிகுண்டை வீசியவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் போலத்தான் தெரிகிறது என்றும் இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார் ராணுவத்தின் மீது எந்த அடிப்படையில் நீங்கள் குற்றம…

  11. யாழ் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் எரியூட்டு. சிறிலங்கா புலனாய்வுத் துறையிரால் யாழ் கோப்பாய்த் மாவீரர் துயிலுமில்லம் எரியூட்டப்பட்டுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்கிழமை நள்ளிரவு சிறீலங்கா புலனாய்வுத் துறையினரால் மாவீரர் துயிலுமில்லைத்தை எரியூட்டியிருந்தனர். இது குறித்து மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. http://www.pathivu.com/

  12. தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்: சு.ப.தமிழ்ச்செல்வன் [புதன்கிழமை, 21 யூன் 2006, 14:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினரை இலங்கைக்கான நோர்வேத் தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர் கிளிநொச்சியில் சந்தித்து கலந்துரையாடினார். விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்தில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பையடுத்து…

  13. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க வேண்டும்: தமிழக 'தினமணி' நாளேடு வலியுறுத்தல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு வலியுறுத்தியுள்ளது. தினமணி நாளேட்டில் இன்று புதன்கிழமை எழுதப்பட்டுள்ள தலையங்கம்: நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணி வெடித் தாக்குதலில் பலர் பலி... தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் குண்ட…

  14. தமிழ்க் கூட்டமைப்பின் எம்.பிக்களை நாடாளுமன்றுக்குள் தாக்க முயற்சி! ஆளுந்தரப்பினர் ஆவேசம் சபையில் நேற்று அமளிதுமளி அரச படைகள் மற்றும் துணை ஆயுதக் குழுக்களினால் வடக்கு கிழக்கில் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்படுவதை ஆட்சேபித்து நேற்று நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பமுற்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆளுங்கட்சியி னரால் தாக்கப்படும் நிலைமை ஏற்பட்டது. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதை அறிந்து சபை நடவடிக்கைகளை சபாநாயகர் ஒத்திவைத்தமையால், ஏற்படவிருந்த பெரும் விபரீதமொன்று தவிர்க்கப்பட்டது. நாடாளுமன்றம் சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் நேற்றுக்காலை கூடியது. கெப்பிட்டிக்கொல் லாவவில் கிளைமோர் தாக்குதலில் பலியான மக்கள் தொடர்பில் விசேட அறிக்கை …

  15. இந்தியாவில் தஞ்சமடைந்தோரில் இலங்கை அகதிகளே அதிகம்பேர் பிற நாடுகளிலிருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள அகதிகளில் அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து வந்தவர்களே என்று தமிழகப் பத்திரிகையான "தினமலர்' தெரிவிக்கின்றது. நேற்று கடைப்பிடிக்கப்பட்ட அகதிகள் தினத்தையொட்டி "தினமலர்' நாளேடு வெளி யிட்ட ஆக்கம் ஒன்றிலேயே இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: 1983இல் இலங்கையில் உள்நாட்டுப் போர் மூண்ட போதுதான் அகதிகள் இந்தியாவிற்கு வரத்தொடங்கினர். இந்தியாவில் உள்ள அகதிகளில் இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகமாகும். 1983முதல் 1987வரை ஒருலட்சத்து 34ஆயிரத்து 53 அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். 1987இல் இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி 25ஆயிரத்து 885 அகதிகள் மீண்ட…

  16. பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல: வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் கடிதம் மன்னார் பேசாலை தேவாலயம் மீதான சிறிலங்கா கடற்படையின் அட்டூழியத் தாக்குதல் குறித்து வத்திக்கானுக்கு மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அடிகளார் கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையின் மிகப் பெரிய தேவாலயங்களில் ஒன்றான மன்னார் விக்டோரி தேவாலயத்தில் சிறிலங்கா கடற்படையினரது தாக்குதலில் அப்பாவி மக்கள் இரத்தம் சிந்தியுள்ளமையால் தேவாலயத்தின் புனிதம் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஆறு பொதுமக்களின் சடலங்களை எரியூட்டிவிட்டு வந்திருகிறேன். உள்ளுர் மக்கள் சிறிலங்கா கடற்படையினரால் அச்சமடைந்த நிலையில் உள்ளனர். பேசால…

    • 4 replies
    • 1.4k views
  17. http://www.sankathi.org/vankaalai.html :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry: இதில் வரும் காட்சியும் அதன் பின்னனி இசையும் மனதை பாதிக்கும்,...................

    • 6 replies
    • 4.6k views
  18. புலிகளின் இராணுவப் பேச்சாளராக இளந்திரையன் நியமனம்! விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளராக இளந்திரையன் (மார்ஷல்) நி யமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாள ராக இருந்த இவர் விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலகத்திற்கு அண்மையில் மாற்றப் பட்டிருந்தார். ஜெனீவா சென்ற விடுதலைப் புலிகளின் உயர்மட்டப் பேச்சுக் குழுவிலும் இவர் இடம்பெற்றிருந்தார். விடுதலைப் புலிகளின் தலைமையால் இராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், நேற்று தமது பொறுப்பை ஏற்றுக்கொண்டார் எனக் கிளிநொச்சி செய்திகள் தெரிவிப்பதாக தமிழ் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் அமைப்பு இராணுவப் பேச்சாளர் ஒருவரை நியமித்திருப்பது இதுவே முதல் தடவையாகும். -சங்கதி…

    • 3 replies
    • 1.8k views
  19. கண்காணிப்பாளர்களுக்காக புதிய நாடுகளில் அவசரமாக ஆள் தேடும் நெருக்கடியில் நோர்வே! இலங்கை யுத்தநிறுத்த கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்பாளர்களாகப் பணியாற்று வதற்காக புதிய நடுநிலை நாடுகளில் ஆள்களை அவசர அவசரமாகத் தேட வேண்டிய இக்கட்டில் அனுசரணைத்தரப்பான நோர்வே சிக்கியிருப்பதாகத் தெரியவருகின்றது. தற்போது நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருபது கண்காணிப் பாளர்களும் டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 37 கண்காணிப்பாளர் களுமாக மொத்தம் 57 கண்காணிப்பாளர்கள் யுத்தநிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டிருக்கின்றனர். நோர்ட்டிக் நாடுகளைச் சேர்ந்தோரை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு இலங்கை அரசும், புலிகளும் போர் நிறுத்தத் துக்கு வழிசெய்த…

    • 2 replies
    • 1.2k views
  20. தென்னிந்திய நிலைமையும் தென்னிலங்கைப் போக்கும் ஈழத்தில் குண்டுமழை பொழிந்து தமிழர்களை அழிக் கும் கொடுமை நடந்துகொண்டிருப்பது குறித்தும், அவர் களைக் காப்பாற்ற இந்திய மத் திய மற்றும் தமிழக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை ஒன்றை விடுத்திருக்கின்றார். தமிழகத்தின் தேசிய முற்போக்குத் திராவிடக் கழ கத் தலைவரும், தமிழக சட்ட மன்ற உறுப்பினருமான நடிகர் விஜயகாந்த்தும் ஈழத் தமிழர்களுக்காக மீண்டும் குரல் எழுப்பத் தொடங்கியிருக்கின்றார். ஈழத் தமிழர்களுக்காக தமிழகத்திலிருந்து மீண்டும் வலுவான குரல் எழும்பத் தொடங்கியிருப்பது ஈழத் தமிழர் களுக்கு ஒரு தார்மீகப் பலமாகவும், பாதுகாப்பாகவும் உருவெடுத்து வருகின்றது…

  21. ஒஸ்லோவில் புலிகள் நடந்துகொண்டவிதம் இராஜதந்திர முதிர்ச்சியின் வெளிப்பாடு! தமிழக சஞ்சிகை கருத்து போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந் தம் தொடர்பான பேச்சுகளுக்காக நோர்வே சென்ற விடுதலைப் புலிகள் அங்கு நடந்துகொண்ட விதம், இராஜதந்திரத்துறையிலும் புலிகள் முதிர்ச்சி பெற்றவர்கள் என்பதையே மிகத்துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. இவ்வாறு தமிழகத்திலிருந்து வெளிவரும் "தென்செய்தி' சஞ்சிகை தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. "புலிகள் கொடுத்த பதிலடி' என்ற தலைப்பில் எழுதப்பட்ட அந்தப் பத்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நோர்வேயின் தலைநகரமான ஒஸ் லோவில் நடைபெறவிருந்த சமாதானப் பேச்சு முறிவடைந்துவிட்டது. கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பு மற்றும் அதனது நடைமுறை தொடர்பாகப்…

  22. நோர்வேக்கு பதில் அனுப்பப்படும்: தயா மாஸ்டர் நோர்வேக்கு சமாதான செயலகம் மூலமாக பதில் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த தயா மாஸ்டர், நோர்வேயின் 5 கேள்விகளுக்கு பதில் அனுப்புவோம். சிறிலங்கா அரசாங்கம் பதிலனுப்பியது போன்று எமது சமாதான செயலகம் ஊடாக அனுப்பி வைப்போம் என்றார். நோர்வே தூதுவரகப் பேச்சாளர் எரிக் நூம்பெர்க் கூறுகையில், விடுதலைப் புலிகள் இதுவரை பதில் அனுப்பவில்லை. இருப்பினும் நோர்வே விதித்திருந்த காலக்கெடுவுக்கு ஒருநாள் உள்ளது என்றார். ஓஸ்லோ பேச்சுக்களின் தோல்விக்குப் பின்னர் இலங்கை அமைதி முயற்சிகளின் எதிர்காலம் குற…

  23. விமானக் குண்டுவீச்சு: சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா விமானப் படையினர் நடத்தும் விமானக் குண்டு வீச்சுக்கள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை தெரிவித்துள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கை: கெப்பிட்டிக்கொல்லாவ சம்பவத்தைத் தொடர்ந்து பதில் விமானத் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை கவலை அளிக்கிறது. சம்பூர், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி அருகில் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சர்வதேச மனித உரிமைகளை மீறி பொதுமக்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல் இது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரும் இந்த விமானத் தாக்குதல்கள் யுத்த நிறுத்த மீறல் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தேசிய…

  24. மன்னாரில் 15 ஆயிரம் குடிமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம் அச்சம் காரணமாக பொது இடங்களில் தஞ்சம் மன்னார் பேசாலை, வாங்காலைப்பாடு பகுதிகளில் சனிக்கிழமை கடற்படையினர் நடத்திய மிக மோசமான தாக்குதல்களையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பொது மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு அச்சம் காரணமாக வெளியேறி பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். சனிக்கிழமை காலை பேசாலை கடற்பரப்பில் கடற்புலிகளுக்கும் கடற் படையினருக்குமிடையே மிக உக்கிரமான மோதல்கள் இடம்பெற்றன. இதனையடுத்து கடற்படையினர் மேற்கொண்ட மிகக் கொடூரமான தாக்குதல்களால் ஐந்து மீனவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதுடன் 47 பேர் படுகாயமடைந்தனர். இதனை விட பேசாலை காட்டாஸ்பத்திரி, வாங்காலைப்பாடு கடற்கரையோரங்களில் அம…

  25. வெளினாட்டு ஆங்கில ஊடகங்களில் வந்த செய்திகளின் தொகுப்பு. இதனை பிறமொழிகள் ஆக்கத்தில் நான் பதியமால் தமிழீழம் பகுதியில் பதிந்ததன் நோக்கம் எல்லோரும் பார்ப்பதற்காக. Critics say Sri Lanka targeting civilians USA Today 6/18/2006 http://www.usatoday.com/news/world/2006-06...ce_x.htm?csp=34 - "I thought they were going to come to shoot us all," said L.R. Peiris, a 58-year-old woman crying hysterically at the thought of government forces returning a day after five villagers were killed by Sri Lankan troops. - Saturday's killings...critics charge is the brutal treatment meted out to Tamil civilians by security forces of the Sinhalese-dominated government, despite…

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.