ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
மார்க்கன் குழுவினரே மாமனிதர் யோசப்பை சுட்டனர்: தப்பி வந்த சிறுவன் கூறுகிறான் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொலை செய்தது சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் கும்பல்தான் என ஒட்டுப்படையிலிருந்து விடுதுலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவன் தெரிவித்துள்ளான். கொக்கட்டிச்சோலை சோலையகத்தில் நேற்று விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த சிறுவனான செந்தில்நாதன் அருள்ராஜ் என்பவனே இந்தத் தகவலைத் தெரிவித்தான். ஆயுதக் கும்பலைச் சேர்ந்த மார்க்கன் தலைமையிலான ஆட்கள்தான் இந்தக் கொலையைச் செய்ததாக தெரிவிக்கப்பட்டது. தன்னைப் பிடித்து வைத்திருந்த காலத்தில் மார்க்கனின் இடத்தில் நிற்கிறவர்கள் ஜோசப் பரராஜசிங்கம் எம்.பியை சுட்டுப்போட்டார்கள் என ஒட்டுக்குழுவைச் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
விசுவடுமடு பகுதியில் பல இடங்களில் கடும் புயல் வீடுகள் சேதம். விசுவமடுப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பரவலாக கடும் புயல் வீசிசயது இதனால் மக்கள் குடியிருப்புக்களையும் வீடுகளையும் புயல் அடித்து நொருக்கி சேதமாக்கியுள்ளது. தகவல்: பதிவு புள்ளி கோம் படங்கள்: pathivu.com
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகள் - தமிழ்க் கூட்டமைப்பு சந்திப்பு- முக்கிய விடயங்கள் ஆராய்வு! தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று விடுதலைப் புலிகளினை சந்தித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக கலந்துரையாடினர். விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் மற்றும் யாழ்ப்பாணம், முல்லைத்துPவு, வவுனியா, மன்னார் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர்கள், சமாதான செயலகத்தை சேர்ந்த இளந்திரையன், ஆகியோர் விடுதலைப்புலிகள் தரப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் சி…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
புலிகளுடனான சந்திப்பை உலக நிதி நிறுவனங்கள் ஒத்திப்போட்டன சுனாமி மற்றும் மோதலுக்கு பின்னரான மீள்கட்டமைப்புப் பணிகள் எதிர்நோக்கும் தடைகள் குறித்து மறுபரிசீலனை செய்யுமுகமாக, கிளிநொச்சியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்செல்வனுடன் தாம் நடத்தவிருந்த பேச்சுவார்த்தையை சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியன ஒத்திப்போட்டுள்ளன. அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பு ஆகியவற்றுடனான கலந்தாலோசனையை அடுத்து கிளிநொச்சிக்கான இந்த சர்வதேச நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பயணம் ஒத்திப்போடப்பட்டுள்ளது. இந்த மாதம் பிற்பகுதியில் ஜெனிவாவில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பதை மறுபரிசீலனை செய்ய நேரிடும்: விடுதலைப் புலிகள் எச்சரிக்கை! [சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2006, 01:04 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் நிலைமைகள் மோசமைடைந்தால் ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்க நேரிடும் என்று விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அசோசியேட்டெட் பிரஸ_க்கு தயா மோகன் அளித்த நேர்காணல்: அமைதிப் பேச்சுக்களில் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில் சிறிலங்கா இராணுவத்தினர் அதனுடன் சேர்ந்தியங்கும் குழுக்களுடன் இணைந்து மறைமுக செயற்பாட்டில் இறங்கி உள்ளனர். ஜெனீவாவில் பேச்சுக்களை நடத்த ஒப்புக்கொண்ட பின்னர் சிறிலங்கா காவல்துறை…
-
- 0 replies
- 989 views
-
-
தமிழ் மக்கள் மீது நெருக்குவாரங்களை ஏற்படுத்துகிற சிறிலங்கா இராணுவத்தையும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களையும் எமது மண்ணிலிருந்து வெளியேற்ற எமது நடவடிக்கைகளைத் தொடங்குகிறோம் என்று யாழ். பொங்கியெழும் மக்கள் படை அறிவித்துள்ளது. பொங்கியெழும் மக்கள் படையின் அறிக்கை: தமிழ் மக்களது இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவதை அடிநாதமாகக் கொண்ட போர்நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்காகன பேச்சுவார்த்தைகள் சர்வதேச அனுசரணையுடன் ஜெனிவாவில் நடைபெற உள்ளதன் மூலம் படைத்தரப்பினர்களது நெருக்குவாரங்களை நிறுத்தும் என தமிழ்மக்கள் எதிர்பார்த்தனர். இந்த எதிர்ப்பார்ப்புக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே சிறிலங்காப் படையினருக்கு எதிரான எமது தாக்குதல்களை நிறுத்தியிருந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
குண்டுப் புரளி பரபரப்பின் மத்தியில் தமிழ்க்கூட்டமைப்பு - டக்ளஸ் சண்டை பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் சமூக அபிவிருத்தி அமைச்சரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் ஏற்பட்ட தர்க்கத்தினால் சபை சிறிதுநேரம் அமளிதுமளிப்பட்டது. குண்டுப் புரளியினால் சபை ஒத்திவைக்கப்பட்டதனால் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டமிட்டிருந்த தமிழ்க் கட்சிகள் ஏமாற்றத்துக்கும் கோபத்துக்குமுள்ளாகின. இந்நிலையில் சபையில் அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழ்க் கூட்டமைப்பினை ஏளனம் செய்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தமிழ்க் கூட்டமைப்பின் கஜேந்திரன், ஈழவேந்தன், ரவிராஜ் ஆகியோர் டக்ளஸ் தேவானந்தாவை நெருங்…
-
- 5 replies
- 1.6k views
-
-
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 6 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. Interfaith International, Switzerland; International Movement Against All Forms of Discrimination and Racism – IMADR, Japan; International League for the Rights and Liberation of Peoples – LIDLIP, Switzerland; Liberation- United Kingdom; International Educational Development IED, USA; International Association of Democratic Lawyers – IADL, Switzerland ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மா…
-
- 0 replies
- 818 views
-
-
பேச்சுக்களின் பெயரால் புலிகளைச் சிதைக்க தீட்டிய திட்டங்கள் என்ன?: ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியது 'சிங்கள' நாளேடு!! [வியாழக்கிழமை, 2 பெப்ரவரி 2006, 18:02 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா அரசாங்கங்கள் பேச்சுக்கள் என்ற பெயரால் விடுதலைப் புலிகளைச் சிதைக்கத் தீட்டிய திட்டங்கள் என்ன என்பதை முன்னணி சிங்கள நாளேடான 'லங்காதீப' ஆதாரங்களோடு அம்லப்படுத்தியுள்ளது. இன்றைய 'லங்காதீப' நாளேடு வெளியிட்டுள்ள அந்தக் கட்டுரையின் சில விடயங்கள் வழமையான அவதூறுகளானாலும் திரைமறைவுச் சதிகளை அம்பலப்படுத்தியிருப்பதால் அதை புதினம் படிப்பாளர்களுக்கு தருகிறோம். கட்டுரையின் முழு வடிவம்: வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் கருணையை இழந்த பின்னர் கருணாவிற்கு கருணை காட்டியது சிறிலங்கா அர…
-
- 0 replies
- 821 views
-
-
தமிழீழத்தில் கடத்தப்பட்ட புனர்வாழ்வுக் கழக தொண்டர்களை விடுவிக்க இங்கே உங்கள் புகாரினை பதிவு செய்யுங்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
புதிய தமிழ் கட்சி ஆரம்பிக்க முயற்சி `அகில இலங்கை தமிழ் விடுதலை கட்சி' என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை அமைக்கும் நடவடிக்கையில் சில அமைப்புகள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக இணையத் தளமொன்று வெளியிட்ட செய்தியில்; வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (வரதர் அணி) மற்றும் ஈ.பி.டி.பி.யிலிருந்து பிரிந்தவர் இணைந்து இந்தக் கட்சியை அமைக்கவுள்ளனர். இந்தப் புதிய கட்சியை அமைக்கும் முயற்சியில் ஆனந்த சங்கரி தீவிர ஈடுபாடு காட்டி வருகிறார். இந்தக் கட்சியை அமைப்பதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எனினும், கருணா குழுவையும் இக்கட்சியில் இணைப்பார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லையென…
-
- 16 replies
- 3.2k views
-
-
சிறிலங்காவுக்கான இந்திய உதவி: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு!! [புதன்கிழமை, 1 பெப்ரவரி 2006, 17:29 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா அரசாங்கத்து மருத்துவர்களும், செவிலியர்களும் தேவையெனில் நாம் அனுப்பலாம். அதற்கு மேல் உதவ வேண்டும் எனில் அது குறித்து நாம் யோசிக்க வேண்டும் என்று தமிழக முதலவர் ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். சென்னை ஊடகவியலாளர்களிடம் இன்று புதன்கிழமை ஜெயலலிதா அளித்த நேர்காணல்: தமிழகத்துக்கு இலங்கை அகதிகள் வருவது எமக்கு 1983 ஆம் ஆண்டு நிலைமையை நினைவுபடுத்துகிறது. அப்போது பெருந்தொகையானோர் அகதிகளாக வந்தனர். நாளாந்தம் மேலும் மேலும் அகதிகள் வந்து கொண்டிருக்கிறார்கள். அகதிகள் வருகை மூலம் அங்கே அவர்கள் வாழ்வதற்கு ஏதுவான சூழ்நிலை இல்லை என்று தெரி…
-
- 5 replies
- 1.8k views
-
-
மேலும் 05 தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் ஊழியர் கடத்தல். http://www.nitharsanam.com/?art=14970
-
- 2 replies
- 1.4k views
-
-
பெருந்தொகையில் தொடர்கிறது இடப்பெயர்வு! யாழ்ப்பாணத்தில் கல்லூரிக்குச் சென்ற இராமநாதன் ரதீஸ்குமார் (வயது 20) என்ற மாணவரைக் காணவில்லை என சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டை தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாணவர் கடந்த வியாழக்கிழமை கல்லூரிக்குச் சென்ற பின்பு வீடு திரும்பவில்லை என்று அவரது பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் விடுதலைப் புலிகளின் கவனத்துக்கும் ரதீஸ்குமாரின் பெற்றோர் கொண்டு சென்றனர். முகமாலை சோதனைச் சாவடியூடாக அந்த மாணவர் விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்லவில்லை என்று புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பருத்தித்துறை தும்பளை பகுதியில் இன்று செவ்வாய்…
-
- 1 reply
- 1.2k views
-
-
வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தினர் 5 பேர் கடத்தப்பட்ட சம்பவம் எதிர்வரும் ஜெனீவா பேச்சுக்களைப் பாதிக்கக் கூடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ரொய்ட்டர் செய்தி ஸ்தாபனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் அளித்துள்ள நேர்காணல்: ஜெனீவாவில் பெப்ரவரியில் நடைபெற உள்ள யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கப் பேச்சுக்கான சூழலை இந்தச் சம்பவம் பாதிக்கக் கூடும். மக்கள் மக்கள் இது கடும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடத்தப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். சிறிலங்கா இராணுவத்தினரோ அல்லது அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவ ஆயுதக்குழுவினரோ இந்தக் கடத்தலில் ஈடுபட்டிருக்கக் கூடும் என்றார் தயா மாஸ்…
-
- 0 replies
- 1k views
-
-
சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகம் நடத்துக்கும் இலங்கைத் தமிழ்ப் போராளிகள்: "ரொய்ட்டர்ஸ்" புகழாரம்! இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் சொந்த சட்டங்களைக் கொண்டு லஞ்சமில்லாத நிர்வாகத்தை நடத்தி வருவதாக சர்வதேச செய்தி ஸ்தாபனமான ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் ராஜூ கோபாலகிருஸ்ணன் எழுதியுள்ள கட்டுரை: இலங்கையில் கிளிநொச்சி மிகச் சிறிய பகுதி. கிளிநொச்சி வீதியில் கடைகள், சிறு வீடுகள், அரச கட்டடங்கள் வரிசையாக பிரதான வீதியில் உள்ளன. ஆனால் பேரூந்துகளும் வாகனங்களும் நிதானமாக மெதுவாக கிளிநொச்சிக்குள் பயணிக்கின்றன. வாகன ஒழுங்குவிதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே தண்டத் தொகை விதிக்கப்படுகிறது. எதுவித விவாதமும் லஞ்சமும் அங்கு இல்ல…
-
- 2 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் மலையக மக்கள் முன்னணியும் கூட்டாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளது. ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா. குழுவினருக்கும் பெ.சந்திரசேகரன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணியின் குழுவினருக்கும் இடையே திங்கட்கிழமை நுவரெலியாவில் நடந்த 2 ஆம் சுற்றுப் பேச்சுகளில் இதற்கான இணக்கம் காணப்பட்டது. கொழும்பில் சனவரி 26 ஆம் நாளன்று முதல் சுற்றுப் பேச்சுகள் நடந்தன. "மலையகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகள் மற்றும் குழுக்களை ஒரே கூட்டமைப்பின் கீழ் ஒன்றிணைக்கவும் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்படவும் இரு கட்சிகளும் முடிவு செய்துள்ள என்று பெ.சந்திரசேகரன் தெரிவித்தார். இ.தொ.க. குழுவில் சச்சித…
-
- 0 replies
- 902 views
-
-
சுனாமி அகதிகளுக்காக வழங்கப்பட்ட கோதுமைமா விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டபோது கைப்பற்றப்பட்டது சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உலக உணவுத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கோதுமைமாவை திருட்டுத்தனமாக விற்பதற்காக கொண்டு செல்லப்பட்ட வேளை கல்முனை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைதாகியுள்ளனர். கல்முனையில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உலக உணவுத்திட்டத்தின் கீழ் அம்பாறை அரச அதிபரால் வழங்கப்பட்ட மாமூடைகளை ஏற்றிக் கொண்டு கல்முனையை அடுத்துள்ள பெரிய நீலாவணைக்கு லொறியொன்று சென்றுள்ளது. அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே அதே லொறி கல்முனையை நோக்கி திரும்பிச் செல்வதைக் கண்டு சந்தேகமடைந்த மக்கள் இது குறித்து கல்முனைப் பெ?99…
-
- 0 replies
- 893 views
-
-
வெலிக்கந்தையில் தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் 5 பேர் கடத்தல் [செவ்வாய்க்கிழமை, 31 சனவரி 2006, 02:15 ஈழம்] [ம.சேரமான்] மட்டக்களப்பு வெலிக்கந்தையில் தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணியாளர்கள் 5 பேர் அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் நேற்று திங்கட்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது வெலிக்கந்தையிலுள்ள சிறிலங்கா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் திங்கட்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் வெலிக்கந்தையடியில் வழிமறித்த அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினர் 5 பேரை பலவந்தமாகக் கடத்திச் சென்றுள்ள…
-
- 28 replies
- 5.2k views
-
-
"போராடித்தான் எமது தேசத்தை மீட்கமுடியும்": தனது மகளைப் போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை!! [திங்கட்கிழமை, 30 சனவரி 2006, 19:07 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமிழர் தாயகத்தை விடுவிப்பதற்கான போராட்டத்துக்கு தன் மகளை ஒரு தந்தை வழி அனுப்பி வைத்திருக்கிற "நிகழ்கால" புறநானூற்று நிகழ்ச்சி தமிழீழத்தில் நடந்துள்ளது. "எனக்கு இப்போது 56 வயதாகிறது. இந்த நாட்டில் எத்தனையோ பேச்சுவார்த்தைகள் நடந்துவிட்டன. ஆனால் எங்களுக்கு இன்னமும் நிம்மதி கிட்டவில்லை. எனவே நாங்கள் எமது தேசியத் தலைவரின் கீழ் முழுமையாக அணிதிரண்டு போரிடுவதன் மூலம்தான் எமது தேசத்தை முழுவதுமாக மீட்கமுடியும். அப்போது தான் எமது பிள்ளைகளுக்காவது ஒரு நிம்மத…
-
- 0 replies
- 1.6k views
-
-
மகிந்தவுக்கு மூச்சுவிட மட்டும் அல்ல- பேசவும் கால அவகாசம் கொடுத்திருக்கும் விடுதலைப் புலிகள் -அருஸ் (வேல்ஸ்)- அமைதி முயற்சியில் அடுத்த காய்நகர்த்தலுக்கு தயாராகிவிட்டர்கள் விடுதலைப் புலிகள். திரைமறைவில் யுத்த முனைப்புக்களை தீவிரப்படுத்தி, யுத்தகால அமைச்சரவையை கூட உருவாக்கும் திட்டங்களை வகுத்துக்கொண்டு வெளியே சமாதானத்தின் பிரியர் போல நாடகமாடுகிறது சிறிலங்கா அரசு. தனது பங்காளியான ஜாதிக ஹெல உறுமயவை தூண்டிவிட்டு அமைதி முயற்சிக்கு முயற்சிப்பவர்களின் ஒரு சாதாரண உலங்குவானூர்தி வசதியைக்கூட பெரிதாக திரிவுபடுத்தி, தான் பெரும் அழுத்தங்களின் மத்தியில் அமைதி முயற்சியில் ஈடுபட்டு இருப்பது போல மகிந்த வெளி உலகிற்கு நாடகத்தை தொடங்கினார்! அதாவது 'நான் அடிப்பது போல அடிக…
-
- 0 replies
- 991 views
-
-
விட்டுக்கொடுப்பு! சுவிற்சர்லாந்தில் ஜெனீவா நகரில் சமாதானப் பேச்சுவார்த்தை நடாத்துவதை ஜே.வி.பி எதிர்க்கவில்லை. ஐரோப்பிய ஒன்றிய நாடு ஒன்றிலோ அன்றி ஒஸ்லோவிலோ நடத்தக்கூடாது என்பதே ஜே.வி.பியின் நிலைப்பாடாகும். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத சுவிற்;சர்லாந்தில் பேச்சுவார்த்தை நடைபெறுவதை ஜே.வி.பி எதிர்க்காது என்பதே ஜெனீவா பேச்சுவார்த்தை குறித்து ஜே.வி.பி.யின் தற்போதைய நிலைப்பாடாகும். வேறொரு விதத்தில் கூறுவதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அரசாங்கம் போட்ட நிர்ப்பந்தத்திற்குப் பணிந்துள்ளது போன்றும் அரசாங்கத்திற்கு இவ் வெற்றியானது ஜே.வி.பி அரசாங்கத்தின் மீது போட்ட அழுத்தத்தின் விளைவாக ஏற்பட்டது என்பது போன்றதுமே ஜே.வி.பி.யின் நிலையாகக் கொள்ளத்தக்கது. …
-
- 0 replies
- 1.2k views
-
-
வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் நிலநடுக்கம் இன்று நண்பகல் 12 மணியளவில் வடமராட்சி கிழக்கு கரையோரப் பிரதேசங்களிலும் அதனை அண்டிய மாசார், பிரதேசத்திலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தினை பளைப் பிரதேசம் வரையிலும் உணரக்கூடியதாக இருந்தது. என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே சுனாமியால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இந்த நில நடுக்கத்தினால் பெரிதும் அச்சமுற்றுள்ளனர். இதனால் பளை, அதனை அண்டிய பிரதேசங்களில் சுனாமி வரலாம் என்ற வதந்தி பரவி அப்பகுதி மக்கள் பெரிதும் பதட்டமடைந்து காணப்பட்டனர். தகவல்: சங்கதி
-
- 9 replies
- 2k views
-
-
புலிகளின் இராஜதந்திர நகர்வு; இக்கட்டான நிலையில் அரசு! * போர் நிறுத்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் அரசின் இயலாமையை சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்த புலிகள் உபாயம் நாட்டில் எவ்வேளையிலும் பெரும்போர் வெடிக்கலாமென்ற சூழ்நிலை சற்றுத் தணிந்துள்ளது. நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மின் வருகை, பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்குமா? அல்லது யுத்தத்திற்கான நாள் குறிக்குமா? என்ற பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் சொல்ஹெய்ம் பேச்சுக்கான நாளை குறித்துள்ளார். புதிய அரசு பதவியேற்றவுடனேயே வடக்கு - கிழக்கில் மோசமான சூழ்நிலை உருவானது. பெரும்போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. சமாதான முறையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதை விட சண்டை மூலம் தீர்வொன்றை எட்டிவிடலாமென நினைப்போரே ஜனாத…
-
- 0 replies
- 878 views
-