ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142409 topics in this forum
-
மும்பையில் காத்திருந்த பயங்கரம்! * பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள் * யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள `றோ' புலனாய்வு அதிகாரிகள்... * `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்' தாயகன் இலங்கைத் தமிழரென்றால் அவன் புலி, பாகிஸ்தான் முஸ்லிமென்றால் அவன் அல் - ஹைடா தீவிரவாதி என்னும் இந்திய புலனாய்வுத்துறையின் அணுகுமுறையினால் பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கும், சிறை வாழ்க்கைக்கும் உட்பட வேண்டிய அபாயமானநிலை இந்தியாவிலுள்ளது. இந்திய விமான நிலையங்களில் காத்திருக்கும் புலனாய்வுத்துறையினர் தமது பயணத் தேவைகளுக்காக அங்கு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களை குறிப்பாக வடக்க…
-
- 86 replies
- 11.3k views
-
-
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா இங்கிலாந்து உல்லாச பயணத்தில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற அங்காடியில் மதுபானக் கொள்முதலில் தீவிரமாக ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கைத் தீவு மட்டுமின்றி உலகமே கடந்த புதன்கிழமை வரை யுத்தம் வருமோ என்கிற அச்சம் கலந்த சூழலில் கொழும்பையும் கிளிநொச்சியையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. அந்த நேரத்தில் இங்கிலாந்தின் ஹர்ட்போர்ட்சைருக்கு அருகாமையில் உள்ள டெஸ்கோ அங்காடிக்குச் சென்ற சந்திரிகா வாழைப்பழங்கள், பியர் மற்றும் மதுபானங்களை கொள்வனவு செய்துள்ளார். சந்திரிகாவுடன் வந்த ஆண் ஒருவர் இதற்கான தொகைகளை செலுத்தியுள்ளார். இந்தச் செய்திகளினால் அதிர்ச்சியடைந்திருக்கும் சுதந்திரக் கட்சியினர், நாடு எப்போதும் யுத்தத்துக்…
-
- 4 replies
- 1.2k views
-
-
தனித்தரப்பு அளிக்காவிட்டால் ஆயுதமேந்துவோம்: முஸ்லிம்கள் எச்சரிக்கை! ஞாயிற்றுக்கிழமை 29.01.006 இலங்கை அமைதி முயற்சிகளில் முஸ்லிம்களை தனித்தரப்பாக இணைக்காவிட்டால் ஆயுதமேந்துவதை எவராலும் தடுக்க முடியாது என்று முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: முஸ்லிம்களை அரசாங்கம் தனித்தரப்பாக அங்கீகரிக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டம் நடத்த நேரிடும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இதர முஸ்லிம் கட்சிகளால் அதைத் தடுக்க இயலாது. எங்களுக்கும் பிரச்சனைகள் இருக்கிறது. இதை மகிந்த ராஜபக்ச புரிந்துகொள்ள வேண்டும். போலியான முஸ்லிம் பிரதிநிதிகள் அமைதிப் பேச்சுக்களில் பங்கேற்பதன் மூலம் முஸ்…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் பயணத்தில் எழுச்சியை ஏற்படுத்திய இசைப்பாடல்கள்: க.வே.பாலகுமாரன் [சனிக்கிழமை, 28 சனவரி 2006, 22:25 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] விடுதலைப் பயணத்தில் இசைப்பாடல்கள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் க.வே பாலகுமாரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற போராளி இசையமைப்பாளர் இசைப்பிரியனின் இசையில் உருவான ஈரமில்லாப் பேரலை மற்றும் மூடிசூடும் தலைவாசல் இசைப் பேழைகளின் வெளியீட்டு மற்றும் அறிமுக விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் க.வே. பாலகுமாரன் இதைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இசையரங்கத்தை விடுதலையரங்கமாக்கி இந்த மேடையை விடுதலை மேடையாக்கி ஒரு விடுதலை வ…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம் குழு சந்திப்பு [சனிக்கிழமை, 28 சனவரி 2006, 21:21 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 20 உறுப்பினர்கள் அடங்கிய முஸ்லிம்கள் குழு இன்று சனிக்கிழமை சந்தித்துப் பேசியது. மூதூரில் விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தில் போர் நிறுத்த கண்காணிப்புக் குழு முன்னிலையில் இன்று பிற்பகல் இச்சந்திப்பு நடந்தது. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே நல்லுறவை வளர்த்தெடுக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மூதூர் பிரதேசத்தில் முஸ்லிம் ஆயுதக் குழுவினரது நடமாட்டம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பினர் சுட்டிக்காட்டினர். இந்த ஆயுதக் குழுவினரது செயற்பாட்டினால் தமிழ் மற்று…
-
- 4 replies
- 1.3k views
-
-
தாக்குதல் தொடர்வது குறித்து புலிகளின் தலைமை கடும் அதிருப்தி புலித்தேவன் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருப்பதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் விஷேட தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய மறுதினமே மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது அஞ்சலி நிகழ்விற்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவியும் பிள்ளைகளும் பயணித்த வாகனத்தை குறிவைத்து கிளைமோர் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களாலேயே விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந…
-
- 0 replies
- 806 views
-
-
இந்தியாவின் 57 ஆவது குடியரசு தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் நடத்திய ஒன்று கூடல் வைபவத்தின் போது நிருபமா ராவ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, சர்வதேச வை.எம்.எம்.ஏ.தலைவர் அஷ்ரப் ஹுசைன் ஆகியோருடன் உரையாடுவதையும், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்து பத்திரிகையின் இலங்கை க்கான நிருபர் வி.எஸ்.சம்பந்தன் ஆகியோர் உரையாடு வதையும் காண்கிறீர்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
சமீபத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனோர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_4.pdf
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ரவிராஜ் ஆகியோர் வியாழக்கிழமை இரவு இந்திய இல்லத்தில் நடைபெற்ற குடியரசு வைபவத்தில் கைகொடுத்து கருத்து பரிமாறுவதை படத்தில் பார்க்க http://www.virakesari.lk/VIRA/default.php
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம் செந்திரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த அமைதிவழி எதிர்ப்பினால் சிறீலங்காவின் நாடாளுமன்றம் மூன்று நாள்கள் முற்றாக முடங்கிப் போனது. தமிழ் மக்களின் தாயக மண்ணில் அப்பாவித் தமிழ் மக்களின் கொலைகள் தமிழ்; பெண்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் தமிழ் இளைஞர்கள் காரணம் எதுவுமின்றி கைது செய்யப்படுதல்இ காணாமற் போதல்இ படையினரின் அடாவடித்தனங்கள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலைஇ திருகோணமலையில் ஐந்து அப்பாவித்தமிழ் மாணவர்களின் படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் கண்டன எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்…
-
- 0 replies
- 896 views
-
-
பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் [வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006 இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோ…
-
- 3 replies
- 1.4k views
-
-
வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவு: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் [வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 19:01 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது சிறிலங்கா இராணுவ உதவியுடன் துணை ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவைத் தழுவியுள்ளார். தமது முன்னணி காவலரண் பகுதியில் வழமை போல் காலை நேர கண்காணிப்பில் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரச்சாவடைந்தவர் போராளி மேஜர் கபிலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதலை நடத்தினர். இந்த…
-
- 0 replies
- 856 views
-
-
ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்ட 4 ஐ.தே.க.வினர் அமைச்சர்களாக இணைந்தனர்! [புதன்கிழமை, 25 சனவரி 2006, ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளர் ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 4 மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்துள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் கேலிய ரம்புக்வெல்ல, சிறிலங்கா நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் கொறாடாவும் களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த சமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிப் பேச்சாளர் ஜி.எல்.பீரிஸ், சுசாதந்த புஞ்சிநிலமே ஆகியோர் இன்று இணைந்தனர். இவர்களில் கேலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் அமைச்சரவை அந்தஸ்துள்ள கொள்கைத் திட்டமிடல் மற்றும் திட்ட அமுலாக்கல் அமைச்சராக பதவியேற்றார். மகிந்தவின் …
-
- 10 replies
- 1.9k views
-
-
மீண்டும் அமைதிப் பேச்சுக்கள்: ஐ.நா. செயலாளர் நாயகம் வரவேற்பு இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்கப்படுவதை ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கோபி அனான் வரவேற்றுள்ளார். நியூயோர்க்கில் கோபி அனானின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜர்ரிக் வெளியிட்ட அறிக்கை: நோர்வே அரசாங்கத்தின் முயற்சியால் பெப்ரவரி மத்தியில் இலங்கையில் மீண்டும் அமைதிப் பேச்சுக்கள் தொடங்க உள்ளன. 2003 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த பின்பு நடத்தப்படுகிற முதலாவது நேரடிப் பேச்சுக்கள் இவை. தற்போது மேற்கொள்ளப்படும் விரைவான அமைதி முயற்சிகள் இலங்கையின் வடக்கு - கிழக்கில் அதிகரித்து வரும் வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவரும். மேலும் யுத்த நிறுத்த ஒப்பந்தமும் முழு அளவில் செயற்படுத்த…
-
- 65 replies
- 7.5k views
-
-
நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. கொழும்பில் இன்றிரவு இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. இரவு எட்டு மணியளவில் இடமம்பெற்ற இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தால் உயிரழப்புக்கள் ஏற்பட்டவில்லை என முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்.. நன்றி நிதர்சனம்
-
- 16 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவருடன் எரிக் சொல்ஹெய்ம் நாளை சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் நாளை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். கிளிநொச்சியில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. இச்சந்திப்பில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சிறிலங்கா அரச தலைவராக மகிந்த பதவியேற்ற பின்பு சர்வதேச சமூகத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்துகிற முதலாவது சந்திப்பு இதுவா…
-
- 14 replies
- 2.3k views
-
-
தேச விரோத தமிழ் குழுக்களால் யாழில் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இங்கு களத்திலும் சிலர் அச்சுறுத்துவதை அவதானிக்கலாம்..! அரச ஊழியர்களுக்கு ஈ.பி.டி.பி. கொலை அச்சுறுத்தல் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 19:50 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா அரச ஊழியர்களுக்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். சுதந்திரமும், தன்னாட்சியும் இறைமையும் உள்ள இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல், நீதி, நிர்வாகத்தை பயங்கரவாத வன்முறைக் கலாசாரத்தில் சீரழிக்கும் தேசவிரோதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு கடந்த காலங்களில் தாங்கள் நெருக்கமாக செயல்பட்டதை நான் அறிவேன். …
-
- 2 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள் நானும் அறிந்தால் போடுகின்றேன்
-
- 7 replies
- 1.7k views
-
-
அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு: அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ன்ஸ் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 21:37 ஈழம்] [ச.விமலராஜா] அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்-கெய்டா இயக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நிக்கலஸ் பேர்னஸ் இன்று திங்கட்கிழமை கூறியதாவது: நாங்கள் இந்த நாட்டின் நண்பர்கள். இந்த நாட்டின் பிராந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம். கண்டனத்துக்குரிய ஒரு பயங்கரவாத அமைப்பினால் இந்த நாட்டினது மக்கள் மேலும் 15 அல்லது 20 ஆண்டுகளுக…
-
- 1 reply
- 1.2k views
-
-
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னியை வந்தடைந்தார் இன்று காலை 09.30 மணியளவில் பாலசிங்கம் தம்பதியினர் கிளிநொச்சிசியினை வந்தடைந்தனர் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானப்படை உலங்கவானூர்தி மூலம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் சந்திரன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த மதியுரைஞரினை அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன வரவேற்றார். அதன்போது கேணல்சூசை, முக்கியஉறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர்.இன்று மதியுரைஞர் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தகவல் மூலம்- சங்கதி
-
- 7 replies
- 1.9k views
-
-
மலையகத்தில் பாரிய சுற்றிவளைப்புத்தேடுதல்! - நூற்றிற்கும் அதிகமான இளைஞர்கள் கைது மலையகப்பகுதிகளில் குறிப்பாக ஹற்றன் மற்றும் நுவரெலியாவில் நேற்று ஸ்ரீலங்கா படையினரால் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா பகுதிகளில் நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடையாள அட்டை வைத்திராதவர்கள் மற்றும், சந்தேகத்திற்குரியவர்களையே தாம் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கைத…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 15 பேராசிரியர்கள் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினர் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 09:20 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] கருணா குழுவால் படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் தம்பையாவின் மறைவை அடுத்து தொடர்ச்சியாக விடுக்கபட்ட கொலை அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 15 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் தனது கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பேராசியரியர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத குழு ஒன்று விடுத்து வரும் தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தலை அடுத்து அவரும் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 970 views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் அரச சார்பற்ற திணைக்கள மேலாளர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் திருகோணமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. திருக்கோணமலை நகரில் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அரச படைகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்விற்கும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்பதை கருத்தில் எடுத்து எமது ஒன்று பட்ட செயலின் மூலம் எமது சமூகத்தை பாதுகாப்பதோடு பேரினவாத அரசிற்கும் படைகளுக்கும் எதிரான எமது எதிர்ப்பினை அந்தந்த வேளையில் உடனடியாகத் தெரிவிக்க வேண்…
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்! தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமலை நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும் சமீபத்தில் திருகோணமலை சென்றிருந்தபோது அங்கு சில விடயங்களை அவதானிக்கவும் நிலைமைகள் குறித்து சிலருடன் உரையாடவும் முடிந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தின் அருகில் திடீரென புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருகோணமலையின் இயல்பு நிலை சீராக இல்லை. தமிழ் மக்கள் மத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்தகால அமைச்சரவையை உருவாக்குகிறார் மகிந்த? சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச யுத்தகாலத்துக்கான அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள மகிந்தவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். மகிந்தவின் நண்பரான மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிகார மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் மகிந்தவை அண்மையில் சந்தித்தனர். தம்மைச் சந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி நண்பர்களிடம், விடுதலைப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கினால் யுத்த கால அமைச்சரவையை தாம் அமைக்க உள்ளதாகவும் அப்போது உங்களுக்குப் பணிகள் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். …
-
- 2 replies
- 1.2k views
-