ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142628 topics in this forum
-
17 Sep, 2025 | 03:53 PM கண்டி, கெலிஓயா, பிட்டவலவத்த பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் தேரர்கள் இருவர் கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தேரர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 25 வயதுடைய தேரர்கள் இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட தேரர்கள் இருவரும் கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை (16) ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/22…
-
-
- 6 replies
- 411 views
- 1 follower
-
-
17 Sep, 2025 | 06:14 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலைய வளாகத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சட்டவிரோத மணல் அகழ்வினை மேற்கொண்டு வரும் கும்பலொன்று தினமும் பல டிப்பர்களில் மண்ணை செம்பியன் பற்று தாளையடி கடற்கரை வீதி வழியாக ஏற்றிச்சென்று விற்பனையில் ஈடுபடுகிறது. இது தொடர்பாக பல ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மணல் அகழப்படும் பிரதேசத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மருதங்கேணி பொலிஸ் …
-
- 0 replies
- 120 views
- 1 follower
-
-
பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட பூசை வழிபாடுகள்! இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 75 ஆவது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்று (17) காலை யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன. யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் ஆதின பிரதம குரு நகுலேஸ்வர குருக்கள் சிறிரங்கநாதக் குருக்கள் தலைமையில் நடைபெற்ற பூசை வழிபாடுகளில் ஆலயத்தொண்டர்கள் பக்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2015 ஆம் ஆண்டு இலங்கை விஐயத்தின் போது யாழ். கீரிமலை நகுலேஸ்வரர் சந்நிதானத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியின் 75ஆவது ஜனன தினம்; கீரிமலையில் விசேட…
-
-
- 2 replies
- 294 views
- 1 follower
-
-
17 Sep, 2025 | 06:17 PM (நா.தனுஜா) இலங்கையில் 16 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்து, இன்னமும் தண்டிக்கப்படாமல் உள்ள இச்சம்பவங்கள், இன்றளவிலே காஸாவில் நிகழ்த்தப்படும் மீறல்களுக்கும், அங்கு பிரயோகிக்கப்படும் உத்திகளுக்குமான முன்னோடியாக உள்ளன. இத்தகைய பின்னணியில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் இன்றியமையாததாகும். அது இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாத்திரமன்றி, உலகெங்கிலும் தொடரும் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை சவாலுக்கு உட்படுத்துவதற்கு மிக அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப்பிராந்திய பிரதிப்பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வலியுறுத்தியுள்ளார். இதுகுறி…
-
- 1 reply
- 165 views
-
-
17 Sep, 2025 | 06:19 PM (இராஜதுரை ஹஷான்) கறுப்பு இராச்சியமாக செயற்படும் ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள குழுக்களை முழுமையாக இல்லாதொழிப்பேன். இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு கடுமையாக தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது.இலஞ்ச ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் அரச நிர்வாகத்தில் ஒருசிலர் பழைய பழக்கத்திலேயே இன்றும் உள்ளார்கள்.பழைய பழக்கத்தை திருத்திக் கொள்ள வேண்டும் இல்லையேல் அவர்கள் பதவி நீக்கப்படுவார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். கடவத்த –மீரிகம மத்திய அதிவேக நெடுஞ்சாலை அபிவிருத்தி பணிகளை புதன்கிழமை (17)ஆரம்பித்து வைத்ததன் பின்னர் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியாற்றியத…
-
- 1 reply
- 173 views
-
-
காட்டாட்சி நிலவிய காலப்பகுதி முடிந்துவிட்டது- இனி சட்டத்தின் ஆட்சி தான் adminSeptember 17, 2025 யாழ்ப்பாணம் வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் இடம்பெறும் மணல் அகழ்வு, வாள்வெட்டு தாக்குதல் மற்றும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்டப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அப்பகுதி மக்களுக்கு உறுதியளித்துள்ளார். அமைச்சர் சந்திரசேகர், உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் சகிதம் கற்கோவளம் பகுதிக்கு இன்றைய தினம் புதன்கிழமை நேரில் சென்று அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதன் போது, சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலால் மீன்வாடிகள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், மீனவர்கள் மீதான வாள்வெட்டு தாக்குதல் பற்றியும் அமைச்சர…
-
- 2 replies
- 209 views
-
-
17 Sep, 2025 | 04:26 PM வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் துறை சார் அதிகாரிகளினால் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை (16) உடுவில் பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் அப்பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பில் ஆராயப்பட்டபோது துறைசார் அதிகாரி ஒருவரினால் குறித்த அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. அந்த அதிகாரி இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், உடுவில் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதியில் 32 பாடசாலைகள் உள்ளன. அவற்றில்…
-
- 0 replies
- 141 views
- 1 follower
-
-
தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது! யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(17) பெய்த கனமழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ளது. அந்தக் கட்டடம் உடைந்து விழும் நிலையில் காணப்பட்ட நிலையில் அதற்கு முட்டுக்கொடுத்து கம்பிகள் நடப்பட்டிருந்தன. அந்த கம்பிகள் அண்மையில் திருட்டு போன நிலையில் , குறித்த பகுதி இடிந்து விழுந்துள்ளது. இந்நிலையில் இன்று பெய்த மந்திரி மனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது. https://athavannews.com/2025/1447545
-
-
- 27 replies
- 1.8k views
- 2 followers
-
-
16 Sep, 2025 | 12:00 PM (எம்.மனோசித்ரா) முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் தனக்காக 2024ஆம் ஆண்டில் ஒரு கோடிக்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக அண்மையில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகள் உண்மைக்கு புறம்பானதாகும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன் எனத் தெரிவித்த அவர், பொலன்னறுவைக்கு செல்ல விரும்பினாலும் கொழும்பில் தங்கியிருக்க வேண்டியேற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொலன்னறுவையிலிருந்தே ஆட்…
-
- 1 reply
- 189 views
- 1 follower
-
-
Published By: Priyatharshan 17 Sep, 2025 | 10:15 AM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், இலங்கைக்கு புதிதாக வந்துள்ள அமெரிக்க அமைதிப் படையினரை (Peace Corps) வரவேற்றுள்ளார். இந்த தன்னார்வலர்கள், வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் மூன்று மாத காலப் பயிற்சிக்குப் பிறகு சேவை செய்ய உள்ளனர். இந்த அமைதிப் படையினர், இலங்கை மக்களின் வாழ்க்கை முறையைப் புரிந்துகொள்வதற்காக, மூன்று மாதங்களுக்கு முன்-சேவை பயிற்சியில் ஈடுபடுவார்கள். இந்தப் பயிற்சியின் ஒரு பகுதியாக, அவர்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொள்வார்கள். பயிற்சிக்குப் பின்னர், அவர்கள் வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களில் உள்ள சமூகங்களுடன் இணைந்து, ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் சமூக வாழ்க்கையின் அங்கமாக…
-
- 1 reply
- 164 views
- 1 follower
-
-
இலங்கை போக்குவரத்து சபையில் விரைவில் பெண் சாரதிகள்! இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) பொது போக்குவரத்து சேவையில் பெண் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் விரைவில் சேர்க்கப்படுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர், 25 பேருந்து டிப்போக்களை நவீனமயமாக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஊழியர்களின் தற்போதைய பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக 750 புதிய சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. SLTB ஒரு இலாபகரமான நிறுவனமாக மீண்டும் கட்டியெ…
-
- 0 replies
- 137 views
-
-
இலங்கையில் அடுத்த பத்தாண்டுக்குள் வேலையின்மை பிரச்சினை தீவிரம் அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இலங்கை தொழிலாளர் பிரிவிற்குள் புதிதாக சுமார் ஒரு மில்லியன் பேர் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அந்தக் காலப்பகுதியில் 300,000 புதிய வேலைகள் மட்டுமே உருவாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தனியார் துறை வளர்ச்சி எனவே, வேலைவாய்ப்புகளை உருவாக்க தனியார் துறை வளர்ச்சியை ஊக்குவிப்பது அவசியம் என்று உலக வங்கியின் துணைத் தலைவர் ஜோஹன்னஸ் ஜூட் தெரிவித்துள்ளார். உலக வங்கியின் துணைத் தலைவரின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் உலக வங்கி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. உலக வங்கி குழு தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கும்,…
-
- 1 reply
- 216 views
-
-
Published By: Priyatharshan 16 Sep, 2025 | 01:00 PM இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு திங்கட்கிழமை (15) கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தமை குறித்து நாமல் ராஜபக்ஷ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை நேற்று கொழும்பில் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவுடனான எங்கள் நீண்டகால நட்பையும், வலுவான இருதரப்பு உறவுகளையும் பொதுஜன பெரமுன பெரிதும் மதிக்கிறத…
-
-
- 6 replies
- 440 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் குடத்தனையில் திடீரெனப் பெய்த மழை; வெங்காயச் செய்கை அழிவு வடமராட்சி கிழக்கு குடத்தனையில் கடந்த தினங்களில் கொட்டித்தீர்த்த கன மழை காரணமாக, அறுவடைசெய்யப்பட்டு, வயல்களில் உலரவிடப்பட்டிருந்த வெங்காயங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வடமராட்சி மற்றும் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளிலும் வெங்காயச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்தப் பகுதிகளில் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குடத்தனைப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயங்கள், வயல்களில் உலரவிடப்பட்டிருந்தன. கடந்த சில தினங்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, வயல்களில் வெள்ளம் தேங்கி நிற்பதால், வெங்காயங்களை உலரவிட முடியாது விவசாயிகள் பெரும் துன்பத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதேவேளை, கடந்த ஆறுவருடங்களுக்க…
-
- 2 replies
- 259 views
-
-
16 Sep, 2025 | 11:15 AM முல்லைத்தீவு கடற்பரப்பில் அத்துமீறிய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்திருப்பதாக, முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிகள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் முறையீடு செய்துள்ளனர். அந்தவகையில் முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளின் முறைப்பாட்டையடுத்து நேற்று திங்கட்கிழமை (15) இரவு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உடனடியாக கடற்றொழிலாளர்களுடன் கடலுக்குள் சென்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதை நேரடியாகப்பார்வையிட்டதுடன், அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடும் பலரையும் கடுமையாக எச்சரித்துமிருந்தார். குறிப்பாக கொக்கிளாய் முகத்துவார…
-
- 0 replies
- 111 views
-
-
16 Sep, 2025 | 11:56 AM 2025 ஆம் ஆண்டின் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து செப்டெம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 16 இலட்சத்து 41 ஆயிரத்து 881 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, செப்டெம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களில் 75,358 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 346,984 ஆகும். அத்துடன், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 156,855 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 120,314 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 102,461 சுற்றுல…
-
-
- 11 replies
- 533 views
-
-
16 Sep, 2025 | 03:24 PM கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை ஒருவர் தலதா மாளிகை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சீன பிரஜை ட்ரோன் கமரா மற்றும் அதனை பறக்க விட பயன்படுத்திய பொருட்களுடன் கண்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான சீன பிரஜை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் அமைந்துள்ள தியவடன நிலமேவின் வீட்டை அண்டிய பகுதியில் ட்ரோன் கமராவை பறக்க விட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கண்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் ட்ரோன் கமராவை பறக்க விட்ட சீன பிரஜை கைது! | Virakesari.lk
-
- 0 replies
- 102 views
-
-
16 Sep, 2025 | 04:30 PM புற்றுநோய் சிகிச்சைக்காக லீனியர் ஆக்சிலேட்டர் (Linear Accelerator) கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்படாமல் இருப்பதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகுவதாக அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார். அநுராதபுரம், பதுளை, குருநாகல், அம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளுக்கு ஐந்து லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு 2013ஆம் ஆண்டு திட்டமிட்டிருந்தது. ஆனால் கடந்த கால அரசாங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சில் உள்ள பிரச்சினைகள் காரணமாக லீனியர் ஆக்சிலேட்டர் கதிர்வீச்சு சிகிச்சை இயந்திரங்களை 2024ஆம்…
-
- 0 replies
- 108 views
-
-
16 Sep, 2025 | 06:49 PM (எம்.மனோசித்ரா) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை சுகாதார விஞ்ஞான பீடத்திற்கு விரிவுரை மண்டபங்கள், ஆய்வகங்கள் மற்றும் கேட்போர் கூடம் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஐந்து மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக மதிப்பிடப்பட்ட செலவு 2,234 மில்லியன் ரூபா ஆகும் என அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்தார். கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு அரச பல்கலைக்கழகங்களில் துணை சுகாதார விஞ்ஞானம் தொடர்பான பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வுகூட விஞ்ஞானம், மருந்து வேதியியல் மற்றும் தாதியியல் த…
-
- 1 reply
- 106 views
-
-
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையில் சட்டங்களைத் திருத்துவதற்கு பல அமைச்சுக்களின் அதிகாரிகளைக் கொண்ட குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 3 ஆவது உறுப்புரைக்கமைய, மக்கள் மீதான மக்கள் இறைமை அதிகாரம் மக்களால் 4 ஆவது உறுப்புரையின் ஏற்பாட்டின் பிரகாரம் தேர்தலின் போது நடைமுறைப்படுத்தப்படும். வாக்கு அதிகாரம், தேர்தல் சட்டத்திற்கமைய இலங்கையில் வசிக்கின்ற மற்றும் தேருநர் இடாப்பில் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ள பிரஜைகளுக்கு மாத்திரமே உண்டு. சமகால தேர்தல் சட்டங்களின் கீழ் வெளிநாடுகளிலுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கு வாக்களிப்பதற்கான முறைகளோ அல்லது சட்டங்கள் தயாரிக்கப்படவில்லை. ஆயினும், இந்தியா, பங்களாதேசம், பிலிப…
-
- 0 replies
- 81 views
- 1 follower
-
-
16 Sep, 2025 | 11:12 AM (எம்.மனோசித்ரா) அரசாங்க உத்தியோகத்தர்களின் உத்தியோகபூர்வ கடமைகளை இலகுபடுத்துவதையும் வினைத்திறனாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, அரச சேவையில் டிஜிட்டல் கையொப்ப முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தி புதிய பாதைக்கு இட்டுச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான டிஜிட்டல் முறை கையொப்பங்களை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் நிகழ்வில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை கலந்துகொண்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மக்களின் எதிர்பார்ப்…
-
- 0 replies
- 86 views
- 1 follower
-
-
உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்ட மந்துவில் படுகொலையின் 26ம் ஆண்டு நினைவேந்தல் 16 Sep, 2025 | 11:06 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு திங்கட்கிழமை (15) விமானப்படை விமானங்கள் நடத்திய மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொது மக்களுடைய 26 ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் திங்கட்கிழமை (15) தாயக மற்றும் புலம்பெயர் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இன்றைய நாளில் 24 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அதன் 26வது ஆண்டு வலிதீரா நினைவு மந்துவில்லில் இறந்தவர்களின் உறவுகளாலும் மக்களாலும் சுடரேற்றி மலர்தூவி கண்ணீருடன் நினைவு கூரப…
-
- 0 replies
- 71 views
- 1 follower
-
-
”பருத்தித்துறை துறைமுகம் எமக்கு வேண்டாம்” யாழ்ப்பாணம், பருத்தித்துறை சுப்பர்மடம் மக்கள் சார்பில் மீனவர் சங்க பிரதிநிதிகள், பருத்தித்துறை நகர பிதா மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் ஆகியோரை நேரில் சந்தித்து பருத்தித்துறை துறைமுகம் அமையும் பட்சத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எடுத்துக் கூறி மகஜர்களையும் கையளித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோர் நேற்று யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தனர். இதன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்வதால் எமது கிராமமே அழிவடைந்து போகும் அபாயம் உள்ளது. துறைமுகம் அமைக்கப்படும் போது அ…
-
-
- 1 reply
- 241 views
-
-
உலக வங்கியின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல் adminSeptember 16, 2025 உலக வங்கி குழுமத்தின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் ஜோஹன்னஸ் ஸட் உள்ளிட்ட உலக வங்கியின் பிரதிநிதிளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கை சென்றுள்ள உலக வங்கியின் குழு நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இலங்கையின் தற்போதைய பொருளாதாரத் திட்டங்களுக்கு பாராட்டு தெரிவித்த உலக வங்கி பிரதிநிதிகள், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளனர். டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கி…
-
- 0 replies
- 141 views
-
-
16 Sep, 2025 | 08:55 AM (எம்.மனோசித்ரா) தமிழக மீனவர்கள் வடக்கு கடலில் சட்ட விரோத மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினையாகவுள்ளது. கடற்படையினர் என்ற ரீதியில் இந்த பிரச்சினை தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்ற போதிலும், இந்த பிரச்சினைக்கு அரசியல் ரீதியான இராஜதந்திர தீர்வொன்று காணப்பட வேண்டும் என கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடந்த சகல அரசாங்கங்களிடமும் இது வலியுறுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் பிரதானி ரியர் அத்மிரல் டேர்டமியன் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பு கோட்டையிலுள்ள கலங்கரை விளக்கம் உணவக வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது …
-
- 0 replies
- 161 views
- 1 follower
-