ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142780 topics in this forum
-
அயல்நாட்டின் உறுதிப்பாட்டை... இந்தியா உயர்மட்டத்தில் எதிர்பார்ப்பதாக, இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதியிடம் தெரிவிப்பு இந்திய இராணுவத்தின் பிரதானி ஜெனரல் மனோஜ் முகுந்த் நாராவண, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். பிராந்தியப் பாதுகாப்பு விடயத்தில் அயல் நாடுகளின் ஸ்திரத்தன்மையை, தமது நாடு அதிகளவில் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தவாறு, ஜெனரல் தனது கலந்துரையாடலை ஆரம்பித்தார். தான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில், இந்தியாவில் பெற்ற இராணுவப் பயிற்சிகள் மற்றும் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட ஜனாதிபதி, இந்திய இராணுவப் பயிற்சிகளின் மூலம் நம் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்குக் கிடைக்கும் தலைமைத்துவப் பண்புகள்…
-
- 0 replies
- 169 views
-
-
யுத்தம் முடிவடைந்திருந்த போதிலும் ஜனாதிபதி வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்திலும், மீண்டும் நாடு திரும்பும் சந்தர்ப்பத்திலும், நீர்கொழும்பு முதல் கொழும்பு வரையிலான கடற்கரைப் பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட மீனவர்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. இதனால் மீனவர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மீனவச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். அத்துடன் கரையோரப் பிரதேசங்களிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். இந்தத் தடைகள் திடீரென அவசர அவசரமாக பின்னிரவு 1 மணி, அதிகாலை 2 மணியளவில் அறிவிக்கப்படுவதாகவும் குறுகிய காலப்பகுதியில் அனைத்து மீனவர்களுக்கும் இதனைத் தெரியப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள்…
-
- 1 reply
- 738 views
-
-
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் - IUSF 21 அக்டோபர் 2013 பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டம் நடத்தப்படும் என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் மாதத்தில் போராட்;டங்களை நடாத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இலவச கல்வி முறைமை நிதி ஒதுக்கீட்டு குறைப்பு, தனியார் பல்கலைக்கழகங்களுக்கு சலுகைகள் வழங்குதல், மாணவர் செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறை போன்ற காரணிகளின் அடிப்படையில் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் எதிர்வரும் மாதத்தில் வீதியில் இறங்கி போராட்டங்களை நடாத்த…
-
- 0 replies
- 476 views
-
-
யாழ்ப்பாணத்தில் அரசியல்வாதிகளுக்கோ சிவில் நிருவாகிகளுக்கோ மக்களைச் சரியாக வழி நடத்த தெரியவில்லை: இராணுவமே அவசியம் ; புதிய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க (ஆர்.யசி) வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் எனது நல்ல நண்பர். அவர் முன்வைக்கும் காரணிகள் அனைத்தும் அரசியல் சார்ந்ததாகும். அவர் அரசியல் மேடைகளில் பொது மக்கள் முன்னிலையில் முன்வைக்கும் காரணிகள் குறித்து நாங்கள் குழப்பமடைந்ததில்லை. இனியும் குழப்பமடையப் போவதுமில்லை என புதிய இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள லெப்டினன்ட் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை பொறுத்த வரையில் அரசியல்வாதிகளுக்கோ, சிவில் நிருவாகத்தினருக்கோ மக்…
-
- 1 reply
- 309 views
-
-
ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக 203 பேருக்கு அரச நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு. October 30, 2021 ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு என்ன கருவிற்கு அமைய நாட்டின் ஒரு லட்சம் இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வருமானம் குறைந்த குடும்பங்களை சார்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு அரச தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று(30) பின்தங்கிய கிராமப் பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கு வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும்…
-
- 0 replies
- 132 views
-