Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு! 23 February 2026 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை' ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார். மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத்…

  2. ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு 25 Feb, 2026 | 06:35 PM (நா.தனுஜா)Geographic Reference தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மா…

  3. புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 12:05 PM பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் இடம்பெற்ற ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்று (EDRA) அங்குரார்ப்பண நிகழ்வில் இக்கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இமானுவேல், சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், மட்டக்களப்பு அமெரிக்கன் மிசன் அருட்பணி லுக் ஜோன் ஆகியோர் முதல் கையொப்பங்களை இட்டபின்னர் நிகழ்வில் ப…

  4. மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர் 25 Feb, 2026 | 05:30 PM மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும்…

  5. உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் ஆண்டுவிழா நவம்பர் 28 ஆரம்பம்! - விழா ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை 25 Feb, 2026 | 04:10 PM உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் (World Buddhist Sangha Council - WBSC) 60ஆவது ஆண்டு விழா மற்றும் 11ஆவது பொதுச் சபையின் 2ஆவது நிறைவேற்றுக் குழுக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி முதல் டிசம்பர் 2ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளன. அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் குறித்த விசேட கலந்துரையாடல் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தேரர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கு தேவையான அரச அனுசரணை வழங்க புத்த சாசன அமைச்சர், ஜ…

  6. யோஷித, டெய்சி ஆச்சி மீது பணச்சலவை வழக்குப் பதிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபர்களாக பொலிஸார் பெயரிட்டு, பணச்சலவை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். யோஷித ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கில் 59 மில்லியன் ரூபாய்க்கு மேல் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு அவர் மீதான விசாரணை தொடங்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க தெரிவித்தார். பணம் எவ்வாறு வைப்பிலிடப்பட்டது என்பதற்கான நியாயமான விளக்கத்தை யோஷித வழங்கத் தவறிவிட்டார் என்று அவர் கூறினார். மேலும் விசாரணைகளில், கேள்விக்குரிய …

  7. சுன்னாகத்தில் கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு : சந்தேகநபர் கைது 25 Feb, 2026 | 12:16 PM யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்றிரவு கத்தி முனையில் வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார். பாதிக்கப்பட்…

  8. உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை! ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. "உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பஹ்ரைன்…

  9. மன்னாரில் பல்வேறு வீதிகளுக்கான அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் adminFebruary 25, 2026 மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எருவிட்டான் கிராமத்தில் 1.5 கிலோ மீட்டர் நீளமான வீதி புனரமைப்பு பணிகள் நேற்று செவ்வாய் (24) மாலை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. குறித்த வீதி புனரமைப்பு பணிகளுக்காக 57.82 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர், நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் , பிரதேச சபை உறுப்பினர்கள் கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மேலும் மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பிரதேச சபைக்கு உட்பட்ட பல்வேறு வீதிகளின் அபிவிருத்தி பணிகள் பாராளு…

  10. பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை Published By: Digital Desk 1 23 Feb, 2026 | 11:42 AM பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலங்கையின் நிலையான தொலைபேசி எண்களை ஒத்த வெளிநாட்டு எண்களிலிருந…

  11. மட்டக்களப்பின் மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைக்க முயற்சி – இரா. சாணக்கியன் குற்றச்சாட்டு Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 09:49 AM மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மூன்று தமிழ் கிராமங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள சிங்கள பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். இது தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்கு செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் விஜயம் மேற்கொண்ட லங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதேச செய…

  12. சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான தமிழ் பொறுப்பதிகாரி பதவியேற்றார்! சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட தமிழ் பொறுப்பதிகாரியான சிவானந்தன் நிதர்சனம் இன்றையதினம் தனது பதவியை உத்தியோகபூர்வமாக பதவியேற்றுள்ளார் அவர் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் அதனைத் தொடர்ந்து அவருக்கு பொலிஸ் நிலையத்தில் மாலை அணிவித்து , பொன்னாடை போர்த்தி வரவேற்பளிக்கப்பட்டிருந்தார் பின்னர் அவர் உத்தியோகபூர்வ ஆவணத்தில் அறிக்கையை எழுதி, தனது பணிகளை உத்தியோகபூராவமாக பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து சமூக மட்ட அமைப்பினர், மதகுருமார் உள்ளிட்டோர் நினைவுச் சின்னங்களல வழங்கி அவரை கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது https://athavannews.…

  13. 'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது Oct 31, 2025 - 03:20 PM - 'முழு நாடுமே ஒன்றாக' என்ற தேசிய செயற்திட்டத்தின் கீழ், பொலிஸார் நாடு முழுவதும் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ், நேற்றைய தினம் 987 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்புகளின்போது, போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 371 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம், மொத்தமாக 971 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 பேருக்கு எதிராகத் தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. அத்துடன், கைது செய்யப்பட்ட நப…

  14. 85,000 பயனாளிகள் 'அஸ்வெசும' நன்மைகளை இழக்கும் அபாயம் ; வங்கி கணக்கு இல்லாததால் 16,800க்கும் அதிகமானோர் நன்மைகளைப் பெறுவதில்லை - நலன்புரி நன்மைகள் சபை தகவல் Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 11:19 AM (எம்.மனோசித்ரா) அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவியைப் பெற்றுக்கொள்ளத் தகுதியுடைய ஆயிரக்கணக்கான குடும்பங்கள், தங்களது தகவல்களைச் சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறியதால் அந்த நன்மைகளை இழக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமால் கொடவலகெதர தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும திட்டத்தின் கீழ் ஒரு பயனாளி தெரிவு செய்யப்பட்டால், அவர் 12 மாத காலத்துக்கு தடையின்றி கொடுப்பனவுகளைப் பெற…

  15. கிவுல் ஓயா திட்டம் குறித்து ஆராய்வதற்கு களவிஜயம் மேற்கொள்ள தீர்மானம்! ஹிபுல் ஓயா திட்டம் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்வதற்கு அரசியல் தரப்புகள், பல்கலைகழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் என்பவை கூட்டாக இணைந்து எல்லைக் கிராமங்களுக்கு கள விஜயம் மேற்கொள்வது என யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் ‘கிவுல் ஓயா அபாயத்தின் குறியீடா?’ என்ற தலைப்பிலான திறந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் இடம்பெற்றது. ஊடக அமையத்தின் ஸ்தாபகர் இ.தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம் , முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன், த…

  16. யாழ். போதனா வைத்தியசாலையில் மோட்டார் சைக்கிள் திருட்டு: சந்தேகநபரை கைது செய்ய மக்களின் உதவி கோரல்! 24 Feb, 2026 | 05:49 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகநபரை கைது செய்வதற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இச்சம்பவம் குறித்த விரிவான விபரங்கள் வருமாறு: கடந்த 07 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தின் 06 ஆம் இலக்க வாயிலுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கறுப்பு நிற HONDA ரக மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டுள்ளது. இது குறித்து யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கிடைக்கப்பெற…

  17. வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தை சந்தித்தார் அயோத்தி சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் Published By: Digital Desk 3 24 Feb, 2026 | 04:23 PM இந்தியாவின் அயோத்தி நகரில் உள்ள சிவன் கோவிலின் தலைமை சுவாமி கைலாசானந்த் கிரி ஜி மகாராஜ் இன்று செவ்வாய்க்கிழமை (24) விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளை சந்தித்தார். நாட்டுக்கு வருகை தந்துள்ள கைஷானந்த் கிரிஜி மகாராஜ், பொதுமக்கள் மற்றும் மதகுருமார்களை கொண்ட 14 பிரதிநிதிகளை கொண்ட குழுவுடன் சேர்ந்து, இலங்கையில் உள்ள பல இந்து திருத்தலங்களை பார்வையிட திட்டமிட்டுள்ளார். அதன்படி இக்குழுவினர் வரலாற்று பிரசித்திப்பெற்ற கோவில்களான மன்னாரில் உள்ள திருக்கேதீச்சரம், யாழ்ப்பாணத்தில் உள்ள நகுலேஸ்வரம். நுவரெலியா சீ…

  18. திருகோணமலைவில் இலங்கை இராணுவத்தின் இலவச வைத்திய முகாம் 22வது நாளை நிறைவு 24 Feb, 2026 | 01:41 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலவச வைத்திய முகாம் இன்று செவ்வாய்க்கிழமை (24) திருகோணமலை 22வது படைப்பிரிவின் நடை பெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான இலவச வைத்திய முகாம் இடம்பெற்றது. இம்மருத்துவ முகாமில், கண் பரிசோதனை சேவை இரத்த பரிசோதனை சத்துக்குறை மற்றும் உடல்நல பரிசோதனை இரத்த அழுத்த பரிசோதனை பல் பரிசோதனை சிறுநீர் பரிசோதனை மகப்பேறு மற்றும் குழந்தை நல ஆலோசனை பொதுமக்கள் சுகாதார ஆலோசனை சுகாதார விழிப்புணர்வு சேவ…

  19. 10 DEC, 2023 | 09:04 AM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இரு படகுகளுடன் 25 இந்திய மீனவர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் இலங்கை கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/171352

  20. முன்மொழியப்பட்ட இலங்கை-ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடம் நிறுவும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் Published By: Digital Desk 3 17 Feb, 2026 | 05:03 PM இலங்கை-ஜப்பான் பொருளாதார உறவுகளை புதிய பாதைக்கு எடுத்துச் செல்லும், முன்மொழியப்பட்ட இலங்கை - ஜப்பான் ஏற்றுமதித் தொழில்துறை வழித்தடத்தை (Export-Industrial Corridor) நிறுவுவதற்கான திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்காக, ஜப்பான் உயர்மட்டக் குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தனர். ஜப்பானிய பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் Matsuo Takehiko, இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் Aki…

  21. இந்தோ - பசிபிக் பாதுகாப்பு முன்னுரிமை: கொழும்பில் சிறப்பு சைபர் பாதுகாப்பு பயிற்சி Published By: Priyatharshan 24 Feb, 2026 | 12:01 PM ( வீ. பிரியதர்சன் ) கடல்சார் பாதுகாப்பை எதிர்காலத்தில் உறுதிப்படுத்த, சைபர் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிந்து எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்துவது அவசியம் என கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் (British High Commission Colombo) தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் University of Plymouth நிபுணர்கள், இலங்கையின் கடல்சார் துறை நிபுணர்களுடன் இணைந்து, கொழும்பிலுள்ள Regional Centre for Maritime Studies மையத்தில் சைபர் பாதுகாப்பு தொடர்பான நடைமுறை திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்து கொண்டனர். கடல்சார் துறையில் அதிகரித்து வரும் சைபர் தாக்குதல்க…

  22. மட்டக்களப்பு பாடசாலைக்கு விமானப்படையினரால் புதிய கணினி மையம்! Feb 24, 2026 - 05:09 PM விமானப்படையினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலைக்கு ஒரு புதிய கணினி மையம் அமைத்துக்கொடுக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தற்போதைய விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்கவின் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் மட்டக்களப்பு கொட்டைமுனை கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக முழுமையாக பொருத்தப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப கணினி மையம் 2026 பெப்ரவரி 23ம் திகதி அன்று கையளிக்கப்பட்டது. மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப கற்றல் சூழலை வழங்கும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. புதிய குளிரூட்டப்பட்ட கணினி ஆய்…

  23. அரசாங்கம் மதத் தலைவர்களை அவமதித்துக் கொண்டிருக்கிறது. -சஜித் பிரேமதாச.- இன்று நாடு பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒரு புறத்தில் அபிவிருத்தியடையும் நாட்டில் இருக்கவேண்டிய சமூக ஒழுக்கம், நாகரிகம் மற்றும் பண்பாடு நாட்டில் மறைந்து வருகின்றன. வாக்குகளைப் பெற்று அதிகாரத்திற்கு வந்து பொறுப்புகள் வகிக்கும் அமைச்சர்கள் மதத் தலைவர்களை அவமதித்து, விலங்குகளின் பெயர்களைப் பயன்படுத்தி இழிவுபடுத்தி, அவர்களை தாக்கி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். எல்லா மதங்கள், எல்லா மதத் தலைவர்களுக்கும் சமூகத்தில் தகுந்த மரியாதையை வழங்க வேண்டும். பொதுமக்களாக மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். புத்த சாசனத்தை பாதுகாத்து போஷிப்பது நம்மனைவரினதும் பொறுப்பாகும் என அரசியலமைப்பில் கு…

  24. “பூநகரி காற்றாலை மின் உற்பத்தித் திட்டம்: மக்களின் குடியிருப்புகளைப் பாதுகாக்குமாறு சிறிதரன் எம்.பி வலியுறுத்தல்…! February 24, 2026 கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேரவில், கிராஞ்சி, வலைப்பாடு மற்றும் பொன்னாவெளி பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் அண்மையில் கள விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தார். குறித்த பகுதிகளுக்கு விஜயம் செய்த அவர், காற்றாலைகள் அமைக்கப்படவுள்ளதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டதுடன், அங்குள்ள பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் மற்றும் பொது அமைப்புக…

  25. புதிய பயங்கரவாதச் சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும் : பேராசிரியர் ரொஹான் குணரத்ன 23 Feb, 2026 | 05:05 AM (ஆர்.ராம்) புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்போது பயங்கரவாதம் குறித்த சட்டங்கள் பலவீனமாக இருந்தால் அவை மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமானது வலுவானதாக இருக்க வேண்டும் என்பதோடு அது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார். 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்' சர்ச்சைக்குரிய சட்டவரைவானது ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.