ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142865 topics in this forum
-
இளைஞர்களின்... சமூகப் புரட்சியை, குறைத்து மதிப்பிட வேண்டாம் – முன்னாள் சபாநாயகர் கோரிக்கை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருந்தாலும் இளைஞர்களின் பரிந்துரைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும் என முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் தொடர்பாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் சமூகப் புரட்சியை குறைத்து மதிப்பிட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த போராட்டங்களின் போது அவர்கள் கடைப்பிடிக்கும் உறுதிப்பாட்டையும் ஒழுக்கத்தையும் பாராட்டுவதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்…
-
- 0 replies
- 109 views
-
-
இலங்கை பொருளாதார நெருக்கடி: ''மலையக மக்களுக்கு இந்த பிரச்னை பழகி போச்சு, கொழும்பில் உள்ளவர்களுக்கு இது புதுசு" ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 12 ஏப்ரல் 2022, 06:43 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கையில், பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரியும் மக்கள் போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுப் பெற்று வருகின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை கடந்த மாதம் 31ம் தேதி சுற்றி வளைத்த ஆ…
-
- 2 replies
- 324 views
- 1 follower
-
-
இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து... வர்த்தமானி அறிவித்தல்! 367 அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும்வகையில் நிதி அமைச்சரின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உணவு மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் இந்த வர்த்தமானியில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. அப்பிள், திராட்சை, தோடம்பழம், யோகட் உள்ளிட்ட மேலும் பல உணவுகளும், குளிரூட்டி, குளிர்சாதனப் பெட்டி, சலவை இயந்திரம் உள்ளிட்ட பல இலத்திரனியல் பொருட்களும் இதில் அடங்குகின்றன. https://athavannews.com/2022/1276448
-
- 0 replies
- 123 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரணையில்... கையொப்பமிட்டார், சஜித். அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி பதவி நீக்கப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையொப்பமிட்டுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது மற்றும் 20ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யும் தீர்மானம் அடுத்தடுத்து முன்னெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். https://athavannews.com/2022/1276450
-
- 0 replies
- 169 views
-
-
“புதிய பிரதமரின் தலைமையிலேயே... இடைக்கால அரசாங்கம், இல்லையேல் உறுதியான தீர்மானத்தை எடுப்போம்”. -வாசுதேவ நாணயக்கார.- புதிய பிரதமரின் தலைமையில் இடைக்கால அரசாங்கம் ஸ்தாபிக்கப்படாவிடின் அரசாங்கத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் உறுதியான தீர்மானத்தை முன்னெடுப்போம் என வாசுதேவ நாணயக்கார எச்சரித்துள்ளார். பொதுத்தேர்தல் ஒன்று இடம்பெறும் வரை ராஜபக்ஷர்கள் இல்லாத அரசாங்கத்தையே நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். சமகால அரசியல் நிலைமை குறித்து கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைகிறதே தவிர குறைவடையவில்ல…
-
- 0 replies
- 148 views
-
-
போராட்டம் தொடங்கி... 5 ஆவது நாளுக்கு பின்னர், இளைஞர்களை சந்திக்க தயார் என... அறிவித்தார் பிரதமர் மஹிந்த. கொழும்பு காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் கலந்துரையாட அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டை மீண்டும் இருண்ட காலத்திற்கு கொண்டு செல்லவிடாமல் பாதுகாக்க வேண்டும் என அனைத்து இளைஞர்களிடமும் அவர் கேட்டுக்கொண்டார். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமான இந்த மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 5 ஆவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு வி…
-
- 0 replies
- 124 views
-
-
இன்று முதல்... மூன்று நாட்களுக்கு, மின்தடை அமுலாகாது! நாடுமுழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு மின்தடை அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த 3 நாட்களிலும் மின்தடையை அமுல்படுத்தாதிருப்பதற்கான ஒத்துழைப்பு, மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றிடம் இருந்து கிடைத்துள்ளன. இதேநேரம், 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில், சுழற்சி முறையில் இரண்டு மணித்தியாலமும், 15 நிமிடங்களும் மின்தடை அமுலாகும். காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதிக்குள் மின்தடை அமுலாகும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/127643…
-
- 0 replies
- 152 views
-
-
(நா.தனுஜா) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், 'போலியான போராட்டங்களை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண்டாம்' என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக்கொண்ட கோஷத்துடன் பௌத்த பிக்குகளால் நேற்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொழும்பில் அமைந்துள்ள தாமரைத்தடாக முன்றலில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணியில் மகாசங்கத்தேரர்கள் உள்ளிட்ட பௌத்த தேரர்களும் சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர். 'போலியான போராட்டங்க்ளை நம்பி சிங்கள, பௌத்த மக்கள் ஆணையின்மீது கைவைக்கவேண…
-
- 5 replies
- 433 views
-
-
வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம் நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276400 கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோர…
-
- 7 replies
- 491 views
-
-
பொருளாதார யுத்தத்தை... ஆயுதங்களால், வெல்லக் கூடாது என்கின்றார்... சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லாப் பிரேரணையும், ஜனாதிபதிக்கு எதிரான தீர்மானமும் ஜனநாயகத்தை நிலைநாட்ட கொண்டு வரப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனநாயகத்திற்காக இளைஞர்கள் வீதியில் இறங்கியுள்ளதாகவும், அவர்களின் போராட்டத்தை அரசாங்கம் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கம் இராணுவத்தினரை பாதுக்கப்பதாக கூறினாலும் யுத்தத்தில் வெற்றிபெற்ற பொன்சேகா உள்ளிட்டவர்களை பழிவாங்கியது யார் என்பது அனைவரும் அறிந்ததே என்றும் அவர் கூறினார். நம்பிக்கையில்லாப் பிரேரணை, குற்றப் பிரேரணை, 19ஆவது திருத்தத்தை கொண்டுவந்து நிறைவேற்று அதிகாரம் கொ…
-
- 1 reply
- 212 views
-
-
இலங்கையின் நிலைவரம் குறித்து... பைடனுடன், மோடி... கலந்துரையாடல்! இலங்கையின் நிலைவரம் குறித்து, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் அரச தலைவர்களுக்கும் இடையிலான காணொளி மூலமான சந்திப்பு, நேற்றைய தினம் இடம்பெற்றது. இதன்போது, பாகிஸ்தான் மற்றும் இலங்கையின் நிலைமைகள் குறித்து பைடனுடன் மோடி கலந்துரையாடியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த கலந்துரையாடலில் உக்ரைன் போர் குறித்தும் இரு தலைவர்களும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276413
-
- 0 replies
- 265 views
-
-
இடைக்கால அரசாங்கம்... சாத்தியமற்றதாலேயே, அமைச்சுப் பதவியை ஏற்றேன் – சாந்த பண்டார 11 கட்சிகள் முன்வைத்த இடைக்கால அரசாங்கம் சாத்தியமற்றது என்ற காரணத்தினாலேயே தாம் இராஜாங்க அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொண்டதாக சாந்த பண்டார தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் சாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தமை, கட்சி கொள்கையை காட்டிக் கொடுக்கும் செயலென ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276423
-
- 0 replies
- 208 views
-
-
ஜனாதிபதியுடனான... இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில், பங்கேற்பதில்லை.- அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகள் அறிவிப்பு.- இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில்லை என அரசாங்கத்தில் இருந்து விலகிய 11 கட்சிகள் அறிவித்துள்ளன. தற்போதைய அரசாங்கம் முழுமையாக இராஜினாமா செய்து இடைக்கால அரசாங்கத்தில் உண்மையான அக்கறை காட்ட வேண்டிய தேவை இருப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜனாதிபதி நேற்று புதிய இராஜாங்க அமைச்சர் ஒருவரை நியமித்துள்ள நிலையிலேயே இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்ததாகவும் 11 கட்சிகளும் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழம…
-
- 0 replies
- 259 views
-
-
ஆர்ப்பாட்டம் காரணமாக... சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றம்! ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையகத்திற்கு வந்ததையடுத்து, இந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். https://athavannews.com/2022/1276408
-
- 0 replies
- 192 views
-
-
237 மருந்துகளுக்கு... தட்டுப்பாடு: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் தற்போது 237 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மருந்து தட்டுப்பாட்டினால் அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் வைத்தியர் செனல் பெர்னாண்டோ தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், இதய நோயாளிகள், இருமல் மற்றும் சளிக்கு கூட வழங்குவதற்கு தேவையான மருந்துகள் இல்லை என கூறினார். டொலர் நெருக்கடியானது முழு நாட்டையும் பாதித்துள்ள நிலையில், மருந்து தட்டுப்பாடு அரச, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும் …
-
- 0 replies
- 112 views
-
-
கான்கள் மற்றும் பீப்பாய்களில்... எரிபொருளை பெற்றுக்கொண்டு, அதிக விலைக்கு விற்பனை; இதுவரை 68 பேர் சிக்கினர் !! அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் இன்றி எரிபொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பாக நாடாளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதுவரை மொத்தம் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களிடம் இருந்து 8025 லீற்றர் பெற்றோல், 726 லீற்றர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அதிகப்படியான எரிபொருளை கொள்வனவு செய்து வேறு இடங்களில் அதிக விலைக்கு விற்பதன் மூலம் பலர் சட்டவிரோத வியாபாரங்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கான்கள…
-
- 0 replies
- 138 views
-
-
சுயாதீனமாக... செயற்பட தீர்மானித்த, சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்... இராஜாங்க அமைச்சராக, பதவிப் பிரமாணம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, கரிம உரங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்தும் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். அவர் நேற்று (திங்கட்கிழமை) பதவிப் பிரமாணம் செய்துகொண்டாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சாந்த பண்டாரவும் ஒருவர் என…
-
- 1 reply
- 211 views
-
-
ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவோம் - பிரதான எதிரணி அறிவிப்பு (நா.தனுஜா) தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் அதேவேளை, மறுபுறம் ஜனாதிபதிக்கு எதிராகக் குற்றப்பிரேரணையைக் கொண்டுவருவதற்கான தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அதுமாத்திரமன்றி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதுடன் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தை நீக்கி, 19 திருத்தத்தில் காணப்பட்ட சிறந்த விடயங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துவத்றகு நடவடிக்கை எடுக்கக்கூடிய இடைக்கால அரசாங்கத்துடனே…
-
- 0 replies
- 173 views
-
-
சாந்த பண்டாரவிற்கு... புதிய அமைச்சு: துரோகமிழைத்து விட்டதாக, சுதந்திரக் கட்சி சாடல் விவசாயத்துறை இராஜாங்க அமைச்சராக சுதந்திரக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார பதவியேற்றுள்ளார். இந்நிலையில் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கட்சியின் கொள்கைகளுக்கு துரோகம் இழைத்துள்ளதாக ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். சசீந்திர ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது பதவிக்கு சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை பிரியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்க மறுத்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, அவர் தொடர்ந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை…
-
- 1 reply
- 182 views
-
-
கோட்டாபய தலைவர் கைகளால் செத்திருக்கலாம்!! சிங்கள நடிகர் அதிரடி!!
-
- 18 replies
- 1.1k views
-
-
அரசாங்கத்துக்கு எதிரான... போராட்டக் களத்தில், ஒருவர் உயிரிழப்பு – கொழும்பில் சம்பவம்! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஷிராஸ் ஷிராஸ் என்ற ராப் இசைக்கலைஞர் போராட்டக்களத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் பாடலைப் பாடிக்கொண்டிருந்த அவர் சிறிது நேரம் கழித்து மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழப்பிற்கான காரணம் மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1276360
-
- 0 replies
- 219 views
-
-
இம்மாதத்தில்... இரண்டாவது முறையாக, அதிக பணத்தை அச்சிட்டது... மத்திய வங்கி ! இலங்கை மத்திய வங்கி நேற்று திங்கட்கிழமை 33.31 பில்லியன் ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளது. இம்மாதத்தில் மட்டும் மொத்தம் 152.21 பில்லியன் ரூபாய் பணத்தை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 465.89 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276375
-
- 0 replies
- 130 views
-
-
ஜனாதிபதிக்கு எதிரான, குற்றப் பிரேரணை: கூட்டமைப்பாக... முடிவு செய்வோம் – சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை குறித்து தனித்து இல்லாமல் கூட்டமைப்பாக ஒரு முடிவு எட்டப்பட வேண்டும் என புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். யாழில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சியின் மத்திய குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், அவ்வாறு எடுக்கப்படும் முடிவு பலமாக அமையும் என்றும் கூறினார். எந்தவிதமான பிரேரணை கொண்டுவந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மூன்று கட்சிகளும் கலந்துரையாடி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என சித்தார்த்தன் தெரிவித்தார். மூன்று கட்சியும் இணைந்து தீர்மானம் எடுக…
-
- 0 replies
- 119 views
-
-
அரசாங்கத்திற்கு எதிரான... கட்சிகளை சந்தித்தார், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா !! தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க (நல்லாட்சி அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முக்கிய பங்கு வகித்தவர்) கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பாட்டலி சம்பிக்க ரணவக்க அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் என பலர் கலந்துகொண்டனர். முன்னோக்கி நகரும் செயற்பாடுகளுக்கு இடையில் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால் இந்த …
-
- 0 replies
- 113 views
-
-
19ஆவது திருத்தச் சட்டத்தை... அமுலாக்குவதை விட, பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதே முக்கியம் – ரணில். பொருளாதார நெருக்கடியை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே தற்போதைய சந்தர்ப்பத்தில், முக்கியமானதாகும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 19ஆம் திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்கப்படுவது 19 ஆவது திருத்தச் சட்டத்தை மீள அமுலாக்குவது முக்கியம் என்றாலும்கூட, தற்போதைய சூழ்நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்க வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 19ஆம் திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றுக்கு அதிகாரம் பெற்றுக்கொள்ளப்படுகிறது என்றும் ஜனாதிபதியால் அமைச்சுப் பதவி வக…
-
- 0 replies
- 176 views
-