ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143607 topics in this forum
-
விகாரைகளுக்கு... வந்துவிட வேண்டாம் என, புதிய அமைச்சர்களுக்கு.... தேரர் எச்சரிக்கை! புதிய அமைச்சரவையை ஏற்கமுடியாது. எனவே, ஆசிர்வாதம் பெறுவதற்கு எவரும் விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “பிரதமர் உட்பட அமைச்சரவை பதவி விலகி அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் யோசனை முன்வைத்தார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, புதிய அமைச்சரவையை நாம் ஏற்கமாட்டோம். ஆசிர்வாதம் பெறுவதற்கு விகாரைகளுக்கு வந்துவிடவேண்டாம். 20 ஆவது திருத்தச்சட்டம…
-
- 2 replies
- 292 views
-
-
நிறைவேற்று ஜனாதிபதி அதிகார, முறைமையை... நீக்குவதற்கான யோசனைக்கு, நாமல் வரவேற்பு! சஜித் பிரேமதாசவினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைமையை நீக்குவதற்கான யோசனையை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்வது குறித்து ஜனாதிபதியும் கலந்துரையாடி வருவதாகவும் நாமல் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னைய அரசாங்கங்களும் ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகார முறைமையை நீக்குவதாக தெரிவித்திருந்தாலும் அது நடைமுறைக்கு வரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1277776
-
- 0 replies
- 161 views
-
-
நிறைவேற்று அதிகார.... ஜனாதிபதி முறைமையை, இல்லாதொழிக்கும் யோசனை... சபாநாயகரிடம் கையளிப்பு! நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, இந்த யோசனையை கையளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றியபோது எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இந்த விடயத்தினைத் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1277771
-
- 0 replies
- 133 views
-
-
ஏப்ரல் 25ஆம் திகதி வரை... எரிவாயு சிலிண்டர்கள், விநியோகிக்கப்படாது – லிட்ரோ நிறுவனம் உள்நாட்டு பற்றாக்குறையால் எரிவாயு சிலிண்டர்களை ஏப்ரல் 25ஆம் திகதி வரை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எரிவாயு சரக்கு கப்பல்கள் இன்னும் கரைக்கு வந்தடையாததால், விநியோக வலையமைப்பை சீராக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நிறுவனம் உள்ளதாக அவர் குறிப்பிட்டார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தங்களுக்கு எரிவாயு விநியோகச் சங்கிலியில் சிக்கல் உள்ளதாகவும் இருப்பினும் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு பற்றாக்குறை ஓரிரு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்றும் அந்த அதிகாரி கூறினார். முன்னதாக, ஏப்ரல…
-
- 0 replies
- 106 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான... ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை, இணையத்தில் வெளியிடவேண்டும் – சஜித் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை இணையத்தில் வெளியிடவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “3 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மிலேச்சத்தனமான பயங்கரவாத் தாக்குதலில் நாம் எமது உறவுகளை இழந்தோம். இந்த பயங்கரவாத் தாக்குதலால் நாடு என்ற ரீதியில் நாம் பல பாதிப்புக்களை எதிர்கொண்டோம். இந்த நேரத்தில், கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நாம் ஒன்றைக் கூறிக்கொள்கிறோம். ஈஸ்டர் தாக்கு…
-
- 0 replies
- 106 views
-
-
ஈஸ்டர் தாக்குதல் – மட்டக்களப்பில் பெருமளவான, மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி! மட்டக்களப்பு சீயோன் தேவலாயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் சீயோன் தேவாலயத்திலும் காந்திபூங்கா மற்றும் கல்லடி பாலத்துக்கருகிலுள்ள நினைவு தூபிகளில் இன்று (வியாழக்கிழமை) காலை 9.05 மணிக்கு இடம்பெற்ற நினைவேந்தல்களில் உயிரிழந்தவர்களின் உறவுகள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்ட மலர் தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தினர். கடந்த 2019 ம் ஏப்பில் 21 ஆம் திகதி பயங்கரவாதிகளால் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 14 சிறுவர்கள் உட்பட 31 பேர் உயிரிழந்ததுடன் 93 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலை குண்டு தா…
-
- 0 replies
- 125 views
-
-
நிதி இல்லாத... இராஜாங்க அமைச்சுகளை, வைத்து என்ன செய்ய முடியும் -இரா.துரைரெட்ணம் பொருள் கொள்வனவிற்கே நாட்டில் நிதி இல்லாத நிலையில் அதிகாரமற்ற இராஜாங்க அமைச்சுகளை வைத்து என்ன செய்ய முடியும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் வழங்கப்பட்ட புதிய அமைச்சரவை விடயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு, அரசாங்கத்திற்குச் சார்பாகச் செயற்பட்ட இரண்டு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் குறைந்த, இராஜா…
-
- 0 replies
- 151 views
-
-
கறுப்பு உடையில்... எதிர்க்கட்சியினர் – ஈஸ்டர் தாக்குதலில், கொல்லப்பட்டவர்களுக்கு... நாடாளுமன்றில் மௌன அஞ்சலி ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டு 3 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், கொலை செய்யப்பட்டவர்களுக்காக நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. குறித்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபாநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இவ்வாறு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அத்தோடு, இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு ஆடையுடன் நாடாளுமன்றத்திற்குள் பிரசன்னமாகியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1277768
-
- 0 replies
- 154 views
-
-
ரம்புக்கன விவகாரம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்... பலருக்கும், விசாரணைக்கு வருமாறு அழைப்பு! ரம்புக்கன துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் நாளைய தினம்(வெள்ளிக்கிழமை) மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக, கேகாலை மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர், ரம்புக்கன மற்றும் கேகாலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து, ரம்புக்கனையில் நேற்று முந்தினம் காலை முதல் மக்கள் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, போராட்…
-
- 2 replies
- 328 views
-
-
ரம்புக்கனை சம்பவம் – 18 வயது சிறுவன்... ICU இல் சிகிச்சை: வன்மையாகக் கண்டிப்பதாக, GMOA தெரிவிப்பு. ரம்புக்கனையில் பொலிஸாரின் மிருகத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை உடனடியாக மேற்கொள்ளுமாறும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 18 வயதுடைய சிறுவன் வயிற்று குழியில் காயங்களுடன் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அந்த சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஷெனால் பெர்னாண்டோ குறிப்பிட்டார். இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள அவர், உயிருள்ள வெடிமருந்துகளால் காயங்களுடன் 15 பேர் கேகாலை வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக…
-
- 0 replies
- 173 views
-
-
பிரச்சினைகளுக்கு... தீர்வு வழங்காவிட்டால், "பௌத்த சங்க சாசனத்தை" அமுல்படுத்துவோம் – பௌத்த பீடங்களின்... மகாநாயக்க தேரர்கள், எச்சரிக்கை! பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், பௌத்த சங்க சாசனத்தை அமுல்படுத்துவதாக மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எச்சரித்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு வழங்குமாறு கோரி ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அனைத்துக் கட்சிகளின் தலைவர்களிடமும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடிதம் ஒன்றின் மூலம் அவர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, கடந்த 4ஆம் திகதி ஜனாதிபதிக்…
-
- 10 replies
- 406 views
-
-
புதிய அமைச்சரவை நியமனம் – ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில்... முறுகல்? ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கக் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களிடையே பல வாரங்களாக கடுமையான அரசியல் ஸ்திரமின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் பலர் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்து 11 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் அண்மைய அமைச்சரவை நியமனங்கள் மற்றும் அரச அமைச்சு நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தெரிவினால் மாத்திரமே இடம்பெற…
-
- 0 replies
- 179 views
-
-
ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின்... தற்போதைய எண்ணிக்கை 116 – பெரும்பான்மையை, இழக்க வாய்ப்பு? நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவளிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதில்லை என அரசாங்கத்திற்கு ஆதரவளித்த மேலும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று அறிவித்தனர். அதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எம்.எஸ்.தௌஃபீக் மற்றும் இஷாக் ரஹ்மான் ஆகியோரே அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக பைசல் காசிம் நேற்று நாடாளுமன்றில் அறிவித்திருந்தார். இதன்படி, அரசாங்கத்திற்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை 116 ஆகக் குறைவடைந்துள்ளது. இந்த நில…
-
- 0 replies
- 98 views
-
-
13ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம்! காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 13ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்குப் பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு பல்கலைக்கழக மாணவர்கள், சட்டத்தரணிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றனர்…
-
- 0 replies
- 113 views
-
-
கடனை மீளச்செலுத்துவதற்கு இலங்கைக்கு காணப்படும் இயலுமை தொடர்பில் ஆராய வேண்டும் - சர்வதேச நாணய நிதியம் (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு எந்தவொரு கடனையும் வழங்குவதற்கு, கடனை மீளச் செலுத்துவதற்கான உறுதிப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு கடன் வழங்குவதற்கான மாற்றுத்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பு தொடர்பில் வொஷிங்டன் சென்றுள்ள தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பிலான குழுவின் தலைவர் மஷிஹிரோ நொசாகி கூறியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அதற்கமைய இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார பிரச்சினைகளை மிக விரைவில் நிலையான முன்னேற்றப்பாதை நோக்கி கொண்டுசெல்வதற்கு சர்வதேச ந…
-
- 0 replies
- 119 views
-
-
இலங்கைக்கான.. அவசர மனிதாபிமான, உதவிகளை... வழங்குகின்றது சீனா! இலங்கைக்கான அவசர மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. சீன வெளிவிவகார அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு முகமையும் இந்த உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இலங்கை மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த உதவி வழங்கப்படுவதாகவும், அவ்வாறான உதவிகள் தொடர்பான தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் எனவும் சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1277745
-
- 0 replies
- 147 views
-
-
காலி முகத்திடல் போராட்டம் : நீதிமன்ற அதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவானுக்கு வழங்கவும் - பிரதம நீதியரசருக்கு கடிதம் (எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (20) பத்தாவது நாளாகவும் காலி முகத்திடலுக்கு அருகில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த கோட்டை பொலிஸார் நீதிமன்ற உத்தரவினைப் பெற்றுக்கொள்ள முயற்சிகளை செய்கின்றமை தெளிவாகியுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்ற தலையீடு ஒன்றுக்கு பொலிஸார் முயற்சிக்கும் நிலையில், அந் நீதிமன்ற நடவடிக்கைகளை கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்காது, அவ்வதிகாரத்தை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றுக்கு அளித்து உத்தரவிடுமாறு பிரதம நீதியரசர் உ…
-
- 0 replies
- 152 views
-
-
யாழ். பல்கலையில்... முதன்முதலாக, உடற் கல்வியியலில் விஞ்ஞானமானி... சிறப்புப் பட்ட கற்கை நெறி ஆரம்பம்! யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முதன்முதலாக ஆரம்பிக்கப்படும் உடற்கல்வியியல் விஞ்ஞானமானி சிறப்புக் ( Bachelor of Science Honors in Physical Education) கற்கை நெறிக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையிலும், விளையாட்டுத் துறை சார் திறமையின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்ட புதுமுக மாணவர்களுக்கான திசைமுகப்படுத்தல் நிகழ்வு ( Orientation Programme) நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக் கழக இணைந்த சுகாதார விஞ்ஞானங்கள் பீடத்தின் விளையாட்டு விஞ்ஞானத் துறைத் தலைவர் கலாநிதி சி. சபா ஆனந் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் துணைவேந்தர் ப…
-
- 0 replies
- 133 views
-
-
கட்டாயமாக முகக்கவசம் அணிவதை... நீக்கியது, அரசியல் முடிவு அல்ல – சுகாதார அமைச்சு! கொரோனா கட்டுப்பாடு தொடர்பான நிபுணர் குழுவின் முடிவினைத் தொடர்ந்து கட்டாயமாக முகக்கவசம் அணிவதை தளர்த்துவதாக கூறிய சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண, இந்த முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு நேற்று பணிப்புரை விடுத்ததாக தெரிவித்தார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பொது போக்குவரத்து மற்றும் உள்ளக இடங்கள் தவிர மக்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிவதை நீக்குவது அரசியல் முடிவு அல்ல என்றும் பேராசிரியர் நீலிகா மாளவிகே போன்ற தொழில் வல்லுநர்களை உள்ளடக்கிய கொரோனா கட்டுப்பாட்டு நிபுணர் குழுவால் இந்த முடிவு…
-
- 0 replies
- 89 views
-
-
’21’ ஆவது திருத்தச்சட்ட விவகாரம் – இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(வியாழக்கிழமை) விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தை நீக்கிவிட்டு, 21ஐ கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1277729
-
- 0 replies
- 124 views
-
-
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக... அரச உத்தியோகத்தர்கள், பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக கவலை! எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக அரச உத்தியோகத்தர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன சூரியராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலதிக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளாத அரச உத்தியோகத்தர்கள் இந்த நிலைமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலைமைக்கு விரைவான தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavannews.com/2022/1277706
-
- 0 replies
- 125 views
-
-
புதிய பிரதமரின் கீழ்... இடைக்கால அரசாங்கத்தை, நியமிக்கவும் – SLPPஇன் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்! அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நியமிக்கத் தவறினால் மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 13 பேர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளனர். கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்த அவர்கள், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மகஜரில் புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி, வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிந்திகொட, குமார…
-
- 0 replies
- 108 views
-
-
ரம்புக்கனையில்... அமுல் படுத்தப்பட்டிருந்த, ஊரடங்குச் சட்டம் நீக்கம் ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் 12 மணித்தியாலங்களுக்கு மேலாக ரம்புக்கனை ரயில் கடவையை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்தனர். எனினும், அவர்கள் கலைந்து செல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். எவ்வாறிருப்பினும் முச்சக்கர வண்டிக்கு குழுவொன்று தீ வைத்…
-
- 0 replies
- 221 views
-
-
இலங்கையில் அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைப்பு- நாடாளுமன்றத்தில் தகவல் 20 ஏப்ரல் 2022, 05:12 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று (ஏப்ரல் 20) இலங்கையில் உள்ள நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தள்ளி வைக்கப்பட்டுள்ள அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகளில் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகள் ஒத்தி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என தமிழன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. அந்த வகையில் 14 உயிர்கா…
-
- 0 replies
- 280 views
- 1 follower
-
-
பசில் ராஜபக்ஷவிற்கு... ஆசி வேண்டி, பூஜை வழிபாடுகள்! பசில் ராஜபக்ஷவிற்கு ஆசிவேண்டி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன. அத்துருகிரியவிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(புதன்கிழமை) போதி பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் அமைச்சரொருவரும் அவரது மனைவி, முன்னாள் அமைச்சர்கள் சிலருடன் களுத்துறை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் உட்பட பலரும் இந்த பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டதாக குறிப்பிடப்படுகின்றது. சில் ராஜபக்ஷவிற்கு நெருக்கமான சிலரும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ தற்போது குணமடைந்துள்ள நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக குறிப்பிடப்படுக…
-
- 0 replies
- 289 views
-