நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
633 topics in this forum
-
"பத்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு [2019 சூலை 3 முதல் 7 வரை நடைபெற்ற நினைவு நாள்]" இம்மாநாட்டிற்கு உலகெங்கணும் இருந்து 6,000 பேர் வரை கலந்து கொண்டதுடன், மொரிசியசு செயல் குடியரசுத்தலைவர் பரமசிவம் வையாபுரி பிள்ளை, முன்னாள் ஐநா மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர். அத்துடன் Dr Bhavani, pulavar Dr Francis S Muthu , Dr P Marudanayagam, Dr Spencer Wells, Dr George L Hart, Dr Pitchappan Ramasamy, Dr K Rajan , Dr A Shanmugadass, Dr V Murugan , Dr Shri Lakshmi ஆகியோரும் மற்றும் பல அறியஞர்களும் பங்குபற்றி இருந்தனர். அமெரிக்க மண்ணில் முதன்முதலாக தமிழுக்காக நடைபெறும் மாநாடு என்பதே இதன் தனிச்சிறப்பு ஆகும். இம்மா…
-
- 0 replies
- 108 views
-
-
"எமது பெரிய அண்ணா "டாக்டர் கந்தையா யோகராசா"வின் எண்பத்தி ஏழாவது பிறந்த நாள் நினைவு கூறல் [22/06/2024]" "தீபாவளி தினம் தோறும் புது உடை தந்தாய் தீபமாய் எம் வாழ்விற்கு புத் துயிர் தந்தாய்" "தீதோ நன்றோ எதுவோ புது தெம்பு தந்தாய் தீபாவளி கதை பொய்த்ததோ? புனித மேனி எரிந்ததோ?" "தீபாவளி தினம் தோறும் உன்னை நாம் வணங்கி தீபமாய் உன்னைத் தான் உள்ளத்தில் நாம் ஏற்றுகிறோம்" "தீராத உன் கவலை உள்ளத்தில் எம்மை வாட்டுகையில் தீந்தமிழில் பாட்டு எழுதி உன்னை நாம் அழைக்கிறோம்" கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்ப…
-
- 0 replies
- 151 views
-
-
15/06/2024 அன்று என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக நண்பர் [பொறியியல் பீடம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை மற்றும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன்] மற்றும் கட்டிட பொறியாளர் 'திரு கந்தையா ஈஸ்வரன்' ஆகியோரின் இழப்பால் நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரின் இறுதிக்கிரிகைகள் ஜூன் 20, வியாழன் அன்று Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue L3R 5G1, Toronto, Canada தொலைபேசி 905 305 8508. காலை 10.00 மணி முதல் மதியம் 1,30 மணி வரை பார்வையிட்டு, அதே நாளில் மதியம் 2.00 மணிக்கு தகனம் செய்யப்படும் . "திரு.கந்தையா ஈஸ்வரன் அவர்களின் நினைவாக / "In Memory of Mr. Kandiah Easwaran" [15/06/2024] "யாழ் மத்திய கல்லூரியில் ஒன்றாக படித்து பேராதனை பொறியி…
-
- 2 replies
- 316 views
-
-
15/06/2024: பிறந்த நாள் நினைவு கூறல் / Birthday Memoriam [திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM] "பொன்னான இதயம் ஜூன் எட்டில் நின்றதோ உழைக்கும் கரம் இரண்டும் செயல் இழந்ததோ பிரிவு வந்து எம் மகிழ்ச்சியை தடுத்ததோ ஜூன் பதினைந்து இனி பிறந்தநாள் நினைவானதோ?" "நினைவுகள் பொன்னானவை யாரோ சொன்னது உண்மையாக கூட அது இருந்தாலும் எமக்கு நினைவுகள் வேண்டவே வேண்டாம் எமக்கு நீ மட்டுமே வேண்டும் வேண்டும்!" "ஆதரவும் உழைப்பும் உன் வாழ்வு குடும்பமே உன் முதல் சொத்து அனைவரையும் அணைப்பாய் இயன்றதை செய்வாய் இப்பநாம் அந்தபொன்னான நினைவில் வ…
-
- 1 reply
- 236 views
-
-
பிறந்தநாள் நினைவு கூறல் / திரு கணபதிப்பிள்ளை கந்தையா [11 / 06 / 1907 - 18 / 02 / 2000] / எங்கள் அன்பான அப்பா. "நீங்கள் மறைந்தாலும் எங்கள் எண்ணங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கும், உங்களை மனதார நேசித்தவர்கள் இன்று, 11 / 06 / 2024 உங்கள் பிறந்தநாளில் உங்களை நினைவுகூருகிறார்கள்." "சாவும் வரை சளைக்காமல் உழைத்தாய் சால்வை வேட்டியுடன் கம்பீரமாய் நடந்தாய்! சாமக்கோழி கூவும் நேரத்தில் எழுவாய் சாமி கும்பிட நல்லூர்கந்தன் போவாய்!" "சாதாரண வாழ்வை இனிமை ஆக்கினாய் சாமானிய மனிதனாய் என்றும் இருந்தாய்! சான்றோரை கற்றோரை நன்று மதித்தாய் சாமியாய் இன்று எம்மிடம் வாழ்கிறாய்!!" கந்தையா குடு…
-
- 0 replies
- 237 views
-
-
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" [17 ஆவது நினைவு நாள்: 08/06/2024] "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்…
-
- 0 replies
- 240 views
-
-
"திருமதி ஜெயக்குமாரி தில்லைவிநாயகலிங்கம் / MRS JEYAKUMARY THILLAIVINAYAGALINGAM [17 ஆவதுநினைவு நாள்: 08/06/2024]" "அன்பு நெஞ்சே அரவணைத்த கையே அயராத கண்ணே அலைந்த காலே ஆத்திரம் ஏனோ ஆவேசம் ஏனோ ஆரிடமும் சொல்லாமல் போனது ஏனோ?" "இருப்பாய் என்று இறுமாப்பு கொண்டோம் இருளில் இன்று மருண்டு துடிக்கிறோம் ஈன்ற கன்றுகள் இளைத்து வாடுகின்றன ஈழ மண்ணின் இளைய மகளே? " "உருவம் சுவரில் தீபத்துடன் தொங்குது உயிர்கள் இருந்தும் பிணமாய் நடக்கிறோம் ஊர்கள் மாறி வாரிசு வாழ்கின்றன ஊமையாய் ஊனமாய் எதோ வாழ்கிறோம்? " "எண்ணம் செயல் எல்லாம் நீயே எங்கள் வீட்டு ஆண…
-
-
- 17 replies
- 844 views
- 1 follower
-
-
2ஆம் சங்கிலியனின் 405வது சிரார்த்த தினம்! யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசி சைவத் தமிழ் மன்னன், 2ம் சங்கிலியனின் 405வது சிரார்த்ததினம் இன்று யாழில் இடம்பெற்றது. இலங்கை சிவனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானத்தம் தலைமையில் யாழ் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலிய மன்னன் சிலையடியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது சங்கிலிய மன்னன் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவர் ஆறுதிருமுருகன், யாழ் மாநகர ஆணையாளர், சமய பெரியோர்கள், வர்த்தகர்கள் ஊர் மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சங்கிலிய மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து யமுனா …
-
- 0 replies
- 191 views
-
-
28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள் நிகழ்வில், நான் அவருக்கு அர்ப்பணிக்கும் ஒரு இதயப்பூர்வமான கவிதை: "இந்த ஆண்டு ஐம்பத்திஒன்றாவது ஆண்டோ? காதல் சிரிப்பு மகிழ்ச்சியின் பயணமோ? வலி கண்ணீர் துக்கத்தை மறந்து நாங்கள் ஒன்றாக இங்கே கூடுகிறோம்!" "என் மூத்த அன்பு சகோதரிக்கு என் சிறந்த புத்திசாலி அத்தானுக்கு வலுவான உங்கள் பந்தம் வளரட்டுமே! உங்கள் அன்பு வானங்களையும் வென்றதே!" "ஐம்பத்திஒன்றாவது வருட கனவுகள் நிறைவேற ஏற்றத் தாழ்வுகள் அற்றுப் போக அன்பு நீரோட்டம் பொங்கிப் பாய ஒன்றாய் இன்றுபோல் என்றும் வாழ்க!" "உங்கள் அர்ப்பணிப்பு எமக்கு உத்வேகமே! தளராத காதல் உயர்ந்து நிற்கட்டுமே! ஆறுதலைய…
-
-
- 9 replies
- 876 views
- 1 follower
-
-
25 / 05 / 2024: பேரன் 'கலை' யின் ஐந்தாவது பிறந்த நாள் இன்று! "கலையின் பிறந்த நாள் இன்று கலை விழாவா பெரு விழாவாவென கண்கள் தடுமாறி வியந்து பார்க்க கலையின் பிறந்த நாள் இன்று !" "தில்லை கூத்தனின் பேரன் இவன் திசைமுகனை குட்டிய முருகன் இவன் திருந்தலரை கலக்கும் வீரன் இவன் திருமகள் அருள்பெற்ற செல்வன் இவன் !" "தித்திக்கும் இனிப்புகள் ஒரு பக்கம் தீஞ்சுவை பலகாரம் மறு பக்கம் திசை நான்கும் பேரிசை முழங்க திருநாள் இது இவனின் பொன்நாள் !" "திங்கட்குடையோன் இவனோ என மயங்க தினகரனும் முகிலில் மறைந்து நிழல்தர தீந்தமிழில் வாழ்த்துக்கள் எங்கும் ஒ…
-
- 0 replies
- 158 views
-
-
"முள்ளிவாய்க்கால் கஞ்சி" / Mullivaikkaal Kanji (porridge): “கஞ்சி பரிமாறுவோம், முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்” உலக அளவில் பரவலாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் என்றுமே மறக்க முடியாத நாளாக மே 18ஆம் தேதி வரலாற்றில் பதிவாகியுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி யுத்தம் முடிவடைந்த நிலையில், யுத்தத்தின் கடைசி நாட்களில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக ஆண்டுதோறும் மே 18 தினம் அனுசரிக்கப்படுகிறது. குறிப்பாக 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமடைந்த சந்தர்ப்பத்தில் அந்த யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்த மக்கள் பல வார காலமாக உணவிற்கு பாரிய சிரமங்களை…
-
-
- 2 replies
- 671 views
-
-
பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
அன்னையர் நாள் / Mother's Day [12 மே 2024 / 12 th May 2024] அன்னையர் நாள் விடுமுறை தினம், அன்னையர் மற்றும் தாய்மையைப் போற்றும் நாளாக அன்னா ஜார்விஸ் [Anna Jarvis] அவர்களால் மேற்கு விர்ஜினியாவின் கிராப்டன் நகரில் [Grafton, West Virginia] உருவாக்கப்பட்டது; இது குறிப்பாக குடும்பங்கள் மற்றும் குடும்பங்களின் உறவுச் சூழல்களை மையமாகக் கொண்டது. இது, இப்போது உலகின் பெரும்பாலான பகுதிகளில் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகின்றது. உதாரணமாக ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, இத்தாலி, மலேசியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அமெரிக்கா போன்ற பெரும்பாலான நாடுகள் மே மாதத்திலும், அயர்லாந்து, மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்றவை மார்ச் மாதத்திலும் கொண்டாடுக…
-
- 1 reply
- 367 views
-
-
வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்க…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
"மே தினம் / தொழிலாளர் தினம்" / "May Day"/ "International Workers' Day" [01/05/2024] "பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் அலகுடை நீழ லவர்."[குறள் 1034 ] பல அரசுகளின் நிழல்களைத் தமது குடைநிழலின் கீழ் கொண்டு வரும் பெரும் வலிமை பெற்றவர்கள் உழவர்கள் என்கிறார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வள்ளுவர்.அந்த காலத்தில் உளவு தொழிலே முக்கிய மான முதன்மையான தொழில் என்பது குறிப்பிடத் தக்கது.உதாரணமாக, உலகின் முதலாவது நாகரிகம் என கருதப் படும் சுமேரிய நாகரிகம் உருப்பெறு வதற்கு உழவர் தொழிலாளரே முக்கிய காரண மானவர்கள் ஆகும்.இவர்கள் கால்நடை வளர்ப்பிலும் வயல்வெளியில் விவசாயத்திலும் ஈடுபட்டு,சுமேரிய …
-
- 0 replies
- 216 views
-
-
தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
-
- 0 replies
- 359 views
-
-
அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7 16 APR, 2024 | 02:42 PM நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து …
-
- 1 reply
- 304 views
- 1 follower
-
-
13 APR, 2024 | 03:44 PM குரோதி என்ற பெயரைக் கொண்ட புத்தாண்டு வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, இன்று 13 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.15 மணியளவிலும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, இன்றிரவு 9.04 மணியளவிலும் பிறக்கின்றது. 'குரோதி' வருடப்பிறப்பு சித்திரை புத்தாண்டு 'குரோதி' வருடமானது இன்று 13.04.2024 சனிக்கிழமை பூர்வபக்ஷ ஷஷ்டி திதி, மிருகசீரிடம் நட்சத்திரம், சோபனம் நாமயோகம், கவுலவக்கரணம், துலாம் லக்னம், மிதுன நவாம்சம், சனி காலவோரை, தாமதகுணவேளை சேர்ந்த முன்னிரவு 8 மணி 15 நிமிட நேரமளவில் பிறக்கிறது. விஷு புண்ணியகாலம் 13.04.2024 சனிக்கிழமை பிற்பகல் 04.15 மணி முதல் நள்ளிரவு 12.15 மணி வரை. …
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
Published By: DIGITAL DESK 3 29 MAR, 2024 | 09:47 AM உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று…
-
-
- 3 replies
- 727 views
- 1 follower
-
-
யாழில் வெகு விமர்சையாக இடம்பெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய கும்பாபிஷேகப் பெருவிழா! யாழ்ப்பாணம் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான பஞ்ச ராஜகோபுர மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று காலை வெகுவிமர்சையாக இடம்பெற்றது. யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிஷேகம் பங்குனி உத்தர நன்னாளில் நடைபெற்றது. இன்று காலை 9.25 மணி தொடக்கம் முற்பகல் 10.33 மணிவரையான சுபமுகூர்த்த வேளையில் துர்க்காதேவிக்கு பெரும் சாந்தி விழா நடைபெற்றது. காலை 6.00 மணி முதல் 7.10 மணிவரை இராஜகோபுர கும்பாபிஷேகமும் காலை 9.25 மணி முதல் 10.33 மணிவரை மூலஸ்தான கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கடந்த 20 ஆம் திகதி காலை கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள் …
-
-
- 3 replies
- 573 views
-
-
யாழ். உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவு விழா! யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கொண்டாட்ட நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன. கல்லூரி மண்டபத்தில் இன்று காலை 8 மணியளவில் கல்லூரியின் அதிபர் ரொசானா மதுரமதி குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கல்லூரியின் முன்னாள் அதிபர் சிரானி மில்ஸ் கலந்து கொண்டார். இதன்போது இருநூறாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டதுடன், இரண்டு இலட்சினைகள், பாடல் மற்றும் கல்லூரி மாணவிகளின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் தென்னிந்திய திருச்சபை பேராயர் கலாநிதி வே.பத்மதாயாளன், தென்னிந்திய திருச்சபை முன்…
-
- 0 replies
- 412 views
-
-
ஈழத் தமிழ் இலக்கியத்தில் மக்கள் வாழ்வியலைப் பேசுபொருளாக்கியிருந்தவர்களுள், து. உருத்திரமூர்த்தி. மஹாகவி நவீனக் கவி முன்னோடிகலில் ஒருவர் எனக் கூறுவது மரபு! நிகழ்வின் நேரலை கீழுள்ள இணைப்பில் https://www.facebook.com/raveendran.nadesan/videos/833706365102349/?mibextid=NnVzG8
-
- 0 replies
- 523 views
- 1 follower
-
-
- யாழ் அஸீம் - உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப்புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் உங்களது முன்னோர்களின் எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற ஈமப்புகை குழிகளை வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை எல்லாம் முன்வைத்து மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் எல்லாம் அபகரித்து நட்பில்லாச் சூரியனின் கீழ் உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் ஐந்து வருடங்கள் கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். …
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நினைவையொட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் …
-
- 0 replies
- 411 views
-
-
Toronto Tamil International Film Festival 2023 நான்காவது Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வழமைக்கு மாறாக இம்முறை சிறப்புற நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 14 நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் , குறுந்திரைப்படங்கள் தெரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 60 படங்கள் காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எமது நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு Markham Civic centre 1 01 Town centre Blvd Markham இல் September 8, 2023 அன்று 7 pm to 11 pm இடம்பெறும் அதைத்தொடர்ந்து September 9 & 10 ஆம் திகதிகளில் York Cinemas திரை அரங்கில் மதியம் 12 pm முதல் இரவு 11 pm வரை தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.…
-
- 1 reply
- 429 views
-