கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3080 topics in this forum
-
அடுப்பங்கரையில் வைக்கப்பட்டிருக்கும், அதன் கழுத்தில் கயிறு கட்டப்பட்ட சாராய போத்தலில் சொர்ர்ர்ரென்ற சத்தத்துடன் கருப்பு தேநீர் ஊற்றப்படுகிறது. வாசலில் நிழல் அசைய அவள் தனது கையில் உள்ள தேநீர் சாயத்தை வேறு ஒரு ஜொக்கில் ஊற்றிகிறாள். சாரய போத்தலில் ஊற்றப்பட்ட சாயம் போத்தல் வாயில் வழியாக புகையை வெளியே பரப்பபுகிறது. சூடு ஆறி விட கூடாது என்பதால் அதை ஒரு சாரய மூடியில் இறுக்கமாக மூடுகிறாள் அவள். “தேயிலை துாளையா தராங்கங்க.. ஒரு மண்ணுக்கும் புரோஜம் படாது..தேயிலையே கெதினு கெடக்கும் நமக்கு எங்க நல்ல சாயம் கிடைக்கிறது..” அம்மாவின் சத்தம் கேட்டு அன்பரசு எழந்து வருகிறான். தேத்தண்ணிய ஆற்றியபடி அவனிடம் தருகிறாள். கூதல் காய அடுப்பில் மிலாறு தனலில் முன் கிடந்த பலாக்கட்டையில் அவன் உட்காந்து…
-
- 0 replies
- 325 views
- 1 follower
-
-
இன்னா செய்தாரை ஒருத்தல்! ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான். “நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
சமிக்கை கிறிஸ்டி நல்லரெத்தினம்- ஜூலை 13, 2025 No Comments வீட்டின் நடுவே இருந்த ஊஞ்சல் தனியே ஆடிக்கொண்டிருந்தது. அதில் உட்கார்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ தேவாரங்களை முணுமுணுத்துக் கொண்டோ இருக்கும் அப்பு அங்கில்லை. அவரின் சிம்மாசனம் அது. அதில் உட்கார்ந்து கொண்டு எங்கள் குடும்ப பிணைக்குகளை பஞ்சாயத்து செய்யும் அந்த ஜீவன் இல்லாத வீடு வெறிச்சோடிக்கிடந்தது. அப்பு, அவர்தான் என் தாத்தா, என்னிடம் கொண்டிருந்த அந்தப் பாசப்பிணைப்பு புறவயமானதன்று. எங்கள் இருவரையும் இணைத்த அந்த நூலை எவரும் தொட்டதில்லை. ‘“ ஏ, பையா, உன்ன உங்கம்மா தூக்கிறதக்கு முன்னமே நான்தான் தொட்டுத் தூக்கினன் தெரியுமோ?” என்று கூறி பெருமைப்படுவார். என்னை ஏனே அவர் ‘“பையா” என்று அழைப்பதில் ஒரு அணுக்கமான உரிமையும்…
-
- 0 replies
- 304 views
-
-
பொன்ஜூர் ரூஸோ! ஷோபாசக்தி இருநூற்று முப்பது வருடங்கள் பழைமையான சாம்பல்நிறச் சமாதிமீது நீட்டி நிமிர்ந்து படுத்துக்கிடந்த மனிதரைப் பார்த்தபோது, அபினா அச்சமடைந்தார் என்பதைக் காட்டிலும் அவர் வியப்பில் உறைந்துபோனார் என்பதே உண்மை. அவரது வயோதிப மூளை தடுமாறியது. சமாதியின்மீது படுத்துக்கிடப்பது தத்துவவாதி ஜோன் ஜக் ரூஸோ என்றுதான் அபினா நினைத்தார். ‘கருணையைக் காட்டிலும் உயரிய ஞானம் எதுவுமில்லை’ எனச் சொன்ன ரூஸோ இறந்தபோது, அவரது உடல் பெப்லியர் தீவில் புதைக்கப்பட்டது. பதினாறு வருடங்கள் கழித்து, பிரெஞ்சு அரசாங்கத்தால் ரூஸோவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பாரிஸ் நகரத்திலுள்ள ‘பந்தியோன்’ மணிமண்டபத்திற்கு அரசு மரியாதைகளுடன் கொண்டுவரப்பட்டு, வோல்த்தேயரின் உடலுக்கு அருகே சமாதி வைக்கப்பட்டது…
-
-
- 1 reply
- 303 views
-
-
சரணாகதி ராமராஜன் மாணிக்கவேல் பார்த்தன் அதிகமாகத் திரௌபதியிடம் பேசியதில்லை. அவளும் அப்படித்தான். அவனிடம் அவள் அதிகமாகப் பேசியது இல்லையே தவிர, மற்றவர்களிடம் பேசாமல் இருந்தது இல்லை. அவள் சக்கரவர்த்தினி அல்லவா? கல்லும் முள்ளும் மண்டிய வெறும் கட்டாந்தரையில், அத்தனை பெரிய அதிசய அரண்மனை கட்ட வேண்டும் என்றால், எத்தனை எத்தனை கட்டளைகள் பிறப்பித்திருப்பாள்! இந்திரப்பிரஸ்தம் கண்ட ஸ்ரீசக்கரவர்த்தினி! எண்ணங்கள் இல்லாதவனுக்கு ஆசைகள் இல்லை. ஆசைகள் இல்லாதவனுக்குக் கனவுகள் இல்லை. கனவுகள் இல்லாதவனுக்கு இலக்குகள் இல்லை. இலக்குகள் இல்லாதவனுக்குச் செயல்கள் இல்லை. செயல்கள் இல்லாதவனுக்குக் கட்டளைகள் இல்லை. கட்டளைகள் இல்லாதவன் தலைவன் இல்லை. தலைவன் ஆக முடியாதவன் எப்படி அரசனாவது? அரசன் ஆகாதவன் எப்ப…
-
- 0 replies
- 246 views
-