கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3070 topics in this forum
-
சூப் கடை முதல் தாதா வரை ! | திண்டுக்கல் பாண்டி என்கவுண்டர் | திண்டுக்கல்லில் சூப் கடை வைத்து நடத்தி கொண்டு இருந்த பாண்டி. சிறிது நாள் கழித்து 'white collar' பாண்டியாக மாறினான். வீட்டுக்கே செல்லாமல் காரிலே சுற்றி தான் வாழ்க்கையை ஒட்டிகொன்டு இருந்தான். பல கொலைகள்,வழக்குகள் மற்றும் பல, இதனால் போலீஸின் பார்வையில் பட தொடங்கினான் பாண்டி. பல ரவுடிகளுடன் இணைந்து பல கொலைகளை செய்தான் . சென்னையில் பாண்டி உள்ளான் என தெரிந்துகொண்ட போலீஸின் குண்டுகளுக்கு இறையானான் பாண்டி .
-
- 0 replies
- 1.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் பால் ``இந்தப் பால்காரன், `பசும்பால்’னு சொல்லி எந்தப் பாலைக் கொடுக்கிறானோ தெரியலை?’’ என்று சொல்லிக்கொண்டே தன் குழந்தையின் ஃபீடிங் பாட்டிலில் பாலை ஊற்றினாள்... சமீபத்தில் அம்மாவாகியிருந்த கோமதி! - நெய்வேலி தேன்ராஜா படிந்த பேரம் நாற்பதில் இருந்து ஐம்பது தொகுதிகளாக உயர்த்தியும் படியாத கூட்டணி பேரம், நான்கே பெட்டிகளில் படிந்தது! - அஜித் ஸ்டார்நைட் ``ரஷ்யாவுல ஒரு பாட்டுக்கு நயனோடு டான்ஸ் ஆடுறேன்” - சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் மனைவியிடம், ஹீரோவாக நடிக்க முயற்சித்து வாய்ப்பு கிடைக்காமல் குரூப் டான்ஸரான கோவிந்த்! - பெ.பாண்டியன் முள் ``கால்ல சின்னதா ஒரு முள்ளு கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
சொத்தையா - ஜி.தமிழினியன் சொத்தையாவுக்கு எப்போது இந்தக் குறை வந்தது? தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்க டி.நாராயண ரெட்டியாலும் முடியாது. அவன் ‘அப்படி’ என்று வெளியுலகத்துக்குத் தெரியாமலிருக்க கட்டை மீசை வைத்திருந்தான். எவரும் அவன் கெத்தாக ஹார்லி டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 ஓட்டுவதைப் பார்த்தும் பொறாமைப் பட்டதில்லை. உறுதியாகத் தெரியும் ‘கன்னிப் பருவத்திலே’ மாடும் முட்டிவிடவில்லை. ஆனாலும் அந்தக் குறை வந்துவிட்டது. மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த தமிழக வாலிபர் கைதாவாரா? திருப்பூர், ஆக. 21: மும்பை பெண்ணை விர்ச்சுவலாக கற்பழித்த வாலிபரைத் தேடி நாளை தமிழகம் வரும் மும்பை போலீஸ் அவரைக் கைது செய்து விசாரிக்கப் போவதாகத் தெரிவித்தனர். முகநூல் திருப்பூர் அவிநாசி ரோடு கம்பன் நகரில…
-
- 0 replies
- 1.2k views
-
-
மறுபிறவி! எனக்கும், வாணிக்கும் நிச்சயதார்த்தம் நடந்த பின் நிகழ்ந்த சந்திப்புகளில், நான் அதை அவ்வளவாக கவனித்ததில்லை. திருமணம் முடிந்து, தேனிலவுக்காக, ஏற்காடு போயிருந்த போது தான், ஓட்டல் அறையின், எல்.ஈ.டி., பல்ப் வெளிச்சத்தில், அவள் கழுத்தில் மின்னிய அந்த மெல்லிய தங்கச் சங்கிலி, என் கண்ணில் பட்டது. நான், கிரிதர்; வயது, 27. சென்னையில் உள்ள பிரபல ஐ.டி., நிறுவனத்தில் வேலை. பெற்றோருக்கு ஒரே மகன். வாணியும், ஒரு ஐ.டி., நிறுவனத்தில், ஹெச்.ஆர்., அலுவலராக பணிபுரிகிறாள்; வீட்டிற்கு ஒரே பெண். என் எதிரே புன்னகையுடன் நைட்டியில் வந்தமர்ந்த அவள், என் வாலிப கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள். அருகே இழுத்து அணைத்த போது தான், அந்த தங்கச் சங்கிலியை மிக அருகில் பார்த்தேன்; நேர்த்…
-
- 0 replies
- 1.3k views
-
-
காதல் ‘‘உங்களை காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டது எவ்வளவு தப்புன்னு இப்பதான் புரியுது!’’ - முகம் சிவக்க மாலா கத்தினாள். ‘‘இங்க மட்டும் என்னா வாழுதாம்..? அதேதான்! நீ என்னிக்கு என் வாழ்க்கைல வந்தியோ... அன்னில இருந்தே எனக்கு நரகம்தான்!’’ - பிரஷர் எகிற, குதித்தான் கணேசன். ‘‘கோபத்தை சாப்பாட்டுல காமிக்காதீங்க! டிபன் சாப்பிட்டுட்டு போங்க...’’‘‘நீயாச்சு, உன் டிபனுமாச்சு!’’ - விருட்டென வெளியேறினான்.‘‘உங்களுக்கு அவ்வளவுன்னா... எனக்கு மட்டும் மானம், ரோஷம் இருக்காதா?’’ - சடாரென்று கிளம்பிப்போய் காருக்குள் ஏறினாள் மாலா. ஷூட்டிங் ஸ்பாட்டில்... ‘‘ஸ்டார்ட்... கேமரா... ரோல்!’’ ‘‘டார்லிங், உங்களைப் பார்த்த பிறகுதான் என் வாழ்க்கையே பிரகாசமாச்சு! இப்படியே என்னைக்குமே இருந்துடக் கூட…
-
- 0 replies
- 2.1k views
-
-
குணவேறுபாடு சிறுகதை: மேலாண்மை பொன்னுச்சாமி, ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு சுனைக்கனி, பலசரக்குக் கடைக்குள் உட்கார்ந்திருந்தான். மடியில் நோட்டும் சிட்டைத்தாளும். கடை பூராவும் நிதானமாகப் பார்வையை அனுப்பினான். ‘வேற ஏதாச்சும் கொள்முதல் பண்ணணுமா?’ என ஒவ்வொரு பொருளாக யோசித்து சிட்டையில் எழுதினான். கல்லாப்பெட்டியைத் திறந்தான். ரூபாயை எடுத்தான். ‘எம்புட்டு வெச்சிட்டுப் போகணும்?’ என்ற யோசிப்பு. `கரிவலம்வந்தநல்லூர் மிட்டாய் வியாபாரி, வரகுணராமபுரம் புகையிலைக்காரர், மாதாங் கோவில்பட்டி முட்டை வியாபாரி, செவல்பட்டி சேவுக்காரர், நத்தம்பட்டி பொடிமட்டைக்காரர்... இவங்கதான் இன்னைக்கு வந்து சரக்கு போடுவாக. அவுகளுக்கு ரூவா கட்டணும்…
-
- 0 replies
- 3.9k views
-
-
காபி - இள.சிவபாலன் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு லலிதா புரண்டு படுத்தாள். அதிகாலையின் வெளிச்சம், மூடப்பட்டிருந்த சன்னல் கதவுகளுக்கிடையே கசிந்து கொண்டிருந்தது. மெலிதாக போர்வையை விலக்கிப் பார்த்தாள். கணவன் அந்த கட்டில் முழுக்க அலங்கோலமாக படுத்துக் கிடந்தான். அவனிடமிருந்து நன்றாக விலகி அவள் ஓரமாகப் படுத்திருந்தாள். திரும்பவும் கதவு தட்டும் சத்தம். யாரும் திறப்பது போல் இல்லை. யாரும் எழுந்து விட்ட மாதிரியும் தெரியவில்லை. அவளுக்கு சுடச் சுட காபி குடிக்கவேண்டும் போலிருந்தது. இதே அவளது வீடாக இருந்தால் அப்பா காபி போட்டு கொண்டு வந்து அத்தனை வாஞ்சையுடன் அவளை எழுப்பியிருப்பார். திருமணம் முடிந்து நான்கு நாட்கள்தான் ஆகிறது. நேற்றிரவுதான் அவளது வீட்டில் இருந்து கிளம்பி கணவனோடு …
-
- 0 replies
- 1.1k views
-
-
புக்கெட் - சிறுகதை அராத்து - ஓவியங்கள்: ரமணன் சின்னச் சின்னச் சண்டை பெரிதாகி, குளிரூட்டப்பட்ட உணவுவிடுதியில் மன்னிப்பு கேட்டு, அவள் தங்கி இருக்கும் விடுதியின் வாசலில் செய்வதறியாது காலில் விழுந்தான். நான்கைந்து பெண்கள் வேடிக்கை பார்த்தனர். காலை மெள்ள இழுத்துக்கொண்டு நடந்து உள்ளே சென்றுவிட்டாள். தொழப் பாதமில்லாது, சற்றுநேரம் நெடுஞ்சாண்கிடையாகக் கிடந்தான். தெருமண்ணை நக்கிப்பார்த்தான். சிறுவயதில் விபூதி சாப்பிட்டது, இப்போது இந்த நகரத்தின் நூற்றாண்டுகால மண் ஒரு விநோதமான சுவையை உணரச்செய்தது. அழுகை வந்தது. அழுகையினூடே சிரிப்பும் வந்தது. மெதுவாக எழுந்தான். வெட்கம், மானம் எல்லாம் எங்கோ போயிருந்தன. தன்னை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவர்களை வெறுமையாகப் …
-
- 0 replies
- 3.6k views
-
-
பூண்டி கலைச்செல்வன் கொலை வழக்கு திருவாரூர் தி.மு.க மாவட்ட செயலாளர் பூண்டி கலைச்செல்வன் பகையின் காரணமாக வெட்டி கொல்லப்பட்டார். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குரங்கு செந்தில், காக்கு வீரன், கிருஷ்ணா குமார் ஆகிய மூவரும் போலீசில் சரணடைந்தனர். கலைச்செல்வனின் தொண்டர்கள் செல்வத்தின் வீட்டை தரை மட்டமாக்கினார். பதறவைக்கும் அரசியல் கொலைகளில் இதுவும் ஒன்று.
-
- 0 replies
- 2.9k views
-
-
சில நாட்கள் இருக்கும், ஒரு சனி காலை, எனது இளையவளைக் கூட்டிக்கொண்டு ஆங்கிலப் பாடல் வகுப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். வகுப்பு ஆரம்பமாவதற்கு இன்னும் சிறிது நேரம் இருந்ததனால், அங்கிருந்த சொகுசு நாற்காலி ஒன்றில் அமர்ந்துகொண்டு அப்பகுதியை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன். இடையிடையே மகள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் கூறிக்கொண்டிருந்தாலும் கூட, அங்கே வருபவர்கள் யாரென்று பார்ப்பதிலேயே எனது கவனம் சென்றிருந்தது. அநேகமானவர்கள் வெள்ளையர்கள். அவ்வப்போது சீனர்கள்....இப்படியே வந்துபோய்க்கொண்டிருந்த முகங்களினூடு ஒரு மண்ணிற முகம். எங்களைப் போல என்று வைத்துக்கொள்ளுங்களேன். இந்தியராகக் கூட இருக்கலாம். ஆகவே அவரையும் அவரது பிள்ளையையும் அவதானிக்கத் தொடங்கினேன். வரிசையில் நின்றிருந்த ப…
-
- 27 replies
- 4.5k views
-
-
அங்காடி தெருவின் கதை! :மினி தொடர்! பகுதி 1 “அக்கா, சுடிதார் தைக்கனுமா, ஒன் அவர்ல தைச்சு கொடுக்குறோம். வாங்கக்கா” என்று கையில் துணிப்பையுடன் போகும் இளம் பெண்ணை பார்த்து அழைக்கிறார் ஒருவர். அவர் கையில், தான் வேலைபார்க்கும் டெய்லர் கடையின் விசிட்டிங் கார்டுகள் இருக்கின்றன. அவர் அழைத்த அந்தப் பெண் மறு மொழி சொல்லாமல் கடந்து சென்ற பின்னர், இன்னொரு பெண்ணைப் பார்த்து அதே போன்று ரிபீட் செய்கிறார். தி நகர் ரங்கநாதன் தெருவில் மனித கடலுக்கு நடுவே ஒரு ஸ்டூலை வைத்து, அதற்கு மேல் பாத்திரத்தை வைத்து அதில் முக்கோண வடிவில் சமோசாக்களை அடுக்கி வைத்தவாறே, "ரெண்டு சமோசா பத்து ரூபா" என்று கூவி, கூவி விற்கிறார் இளைஞர் ஒருவர். நுகர்வு கலாசாரம் "ரெ…
-
- 25 replies
- 5.9k views
-
-
ஒரு நிமிடக் கதை: டிவி பக்கத்து பிளாட்டில் அந்த பாட்டி குடிவந்து சில மாதங்கள் ஆகிறது. அவர் வீட்டில் எப்போதும் டிவி அலறிக்கொண்டு இருக்கும். காதைப் பொத்திக் கொள்ளாத குறையாக நான் நாள் முழுவதும் டென்ஷனில் இருப்பேன். இந்த சத்த அலர்ஜியால் நான் டிவி பார்ப்பதோ, ரேடியோ கேட்பதோ இல்லை. சுத்தமாக விட்டுவிட்டேன் என்றே சொல்லலாம்! கடந்த சில நாட்களாக என்ன நடந்ததோ தெரியவில்லை. பக்கத்து வீட்டில் இருந்து டிவி சத்தம் வரவே இல்லை. என் கணவரிடம் அதை சொன்னேன். “என்னம்மா சொல்ற?... அவங்க வீட்டு டிவி ரிப்பேர் ஆயிருக்குமோ?... பாவம், அந்த பாட்டி என்ன செய் வாங்க?... டிவியை ச…
-
- 1 reply
- 1.8k views
-
-
நேரம் வீட்டில் எல்லோரும் சோனாவுக்கு ‘ஹேப்பி பர்த் டே’ சொல்லிவிட்டார்கள். காலேஜ் தோழிகளும் போனில் வாழ்த்தி விட்டார்கள். வாட்ஸ்அப் குரூப்களிலும், ஃபேஸ்புக்கிலும் ஏகப்பட்ட வாழ்த்துச் செய்திகள். ஆனால் அவளுடைய காதலன் விஷாலிடமிருந்து மட்டும் எந்த அழைப்பும் இல்லை. ‘‘பையன் நம்ம பர்த் டேவை மறந்துட்டானோ?’’ - சோனா கொதித்துப் போனாள். மணி 9, 10, 11, 12 என்று ஓடி, மாலை 5ம் ஆகிவிட்டது. இன்னும் விஷாலிடமிருந்து போனைக் காணோம்.சரியாக ஐந்தரைக்கு ‘விஷாலி’ என்ற ஒளிர்வுடன் செல் அலற, ‘படவா ராஸ்கல்’ என மனதில் சீறியபடி ‘நங்’ எனப் பச்சையை அழுத்தினாள். ‘‘ஸ்வீட்டி, ஹேப்பி பர்த் டே டு யூ..!’’ ‘‘உனக்கு இப்பத்தானாடா விடிஞ்சது..?’’ என்று சோனா எகிறினாள். ‘‘என்ன ஹனி, இப்பிடி எரிஞ்சு விழ…
-
- 3 replies
- 1.1k views
-
-
பொம்மை - சிறுகதை பாலகுமாரன் - ஓவியங்கள்: செந்தில் மழை பெய்து நெகிழ்ந்திருக்கும் மண் சாலை, பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. ஓவியத்தில், புகைப்படத்தில் இன்னும் கூடுதல் அழகாக இருக்கும். ஆனால், நடப்பதற்குத் தோதாக இல்லை. ஸ்ரீனிவாசன், மிகுந்த கவனத்தோடு அந்தச் சாலையில் நடந்து கொண்டிருந்தான். அவனுக்கு அது பழக்கம் இல்லை. ``எழுத்தாளரே, இன்னும் கொஞ்சம் விரச நடக்கலாம். கேரளம், பத்து நிமிஷத்துக்கு ஒரு மழை பெய்யும். ஒரு மேகம் வந்து தழைஞ்சு, கரைஞ்சு சற்றுப் பொறுத்து இன்னொரு மேகம் தழையும். மழையாய்க் கரையும். எனவே, விரைந்து வாரும்” என்பதாக மலையாளத்தில் கூச்சலிட்டார். அவர் சந்திரமோகன். எழுத்தாள ரான ஸ்ரீனிவாசனின் வாசகன்.…
-
- 0 replies
- 4k views
-
-
உன்னைக் கண்டதும் கடைக்காரன் மேல் உதட்டை மடித்து நாய்போல பற்களைக் காட்டினான். உறுமுவதுபோல என்ன வேண்டுமென்று கேட்டான். ‘ஐந்து சதத்துக்கு உப்பு’ என்று நீ சொன்னாய். உன் கையில் காசு இல்லை என்பது அவனுக்குத் தெரியும். ‘உன் அம்மாவிடம் 12 ரூபாய் 30 சதம் அவ தர வேண்டும் என்று சொல்’ என்றான். நீ மேலும் கொஞ்ச நேரம் நின்றாய். அவன் உன்னை ‘ஓடு ஓடு’ என்று விரட்டினான். நீ திரும்பியபோது உன் அம்மா உடுத்துத் தயாராக இருந்தார். கல்யாண வீடுகளுக்குப் போகும்போது அணியும் சிவப்பு மஞ்சள் சேலை. கீழே கரை கொஞ்சம் தேய்ந்துபோய்க் கிடந்தது. கண்களில் கறுப்புக்கோடு வரைந்திருந்தார். ஒரு கைப்பைகூட காணப்பட்டது. தலை வாரி இழுத்து முடிந்து சினிமாக்களில் வருவதுபோல வட்டமான ஒரு கொண்டை. கல்வீட்டுக்காரர் மக…
-
- 1 reply
- 908 views
-
-
திருச்சி நகரத்தை தன் கைக்குள் வைத்திருந்த ரவி என்னும் முட்டை ரவி. கபடி விளையாட்டில் தொடங்கிய சண்டை வளர்ந்து முக்கிய ரவுடியாக மாறிய ரவி போலீசாரால் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் போலீசாரின் என்கவுண்டர் லிஸ்டில் சேர்க்கப்பட காரணம் யார்?
-
- 0 replies
- 1.6k views
-
-
பேரழகியின் புகைப்படம் - நாராயணிகண்ணகி ஞாயிறன்று அம்மாவுடன் உட்கார்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தேன். மணமகன் தேவையில் லதாவின் புகைப்படத்தைப் பார்த்த அம்மா உறைந்த மாதிரி ஆகிவிட்டாள். கண்கள் பழைய நினைவுகளுக்கு ஓடி விட்டது. என்றாலும் எதையோ வென்றுவிட்ட ஆர்ப் பரிப்பு மௌனத்திலும் வெயிலாய் சுட்டிருக்க வேண்டும். அடுத்த நபரின் புகைப்படம் தொலைக்காட்சியில் வந்தும் நெஞ்சில் லதாவின் பிம்பம் அகலவில்லை. தேவதை என்று சொல்வதை விட மேலான வார்த்தை உண்டா? அழகி எனும் சொல்லிற்குள் சுருக்கி விட விருப்பம் இல்லை. பேரழகி என்று சொல்வதே குறைவான மதிப்பீடு போல்தான் படுகிறது. அழகு என்பதற்கு ஆயிரம் பேர் ஆயிரம் விளக்கங்கள். அந்த ஆயிரங்களையும் தாண்டும் சில அழகுக்குறிப்புகள் இருக்கிறது. கா…
-
- 1 reply
- 1.8k views
-
-
முறை அப்பாவின் கம்பெனி என்றாலும், அதில் பதவியேற்க தனக்கு மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பட்டமும் எம்.பி.ஏவும் தேவை என்பதை உணர்ந்திருந்தான் சரவணன். முறையாக அந்தப் படிப்புகளை முடித்துவிட்டு அவன் பதவி ஏற்றபோது அப்பா மோகனசுந்தரம் பூரித்துப் போனார். ‘‘சரவணா, நம் சொந்தங்கள் எல்லாரும் உன் கல்யாண விஷயமா தொந்தரவு செய்யறாங்க! நல்ல பொண்ணா பார்த்துடலாமா?’’ கேட்டார் மகனிடம். ‘‘செய்யலாம்பா! ஆனா அதுக்கு முன்னாடி முறைப்படி சில விஷயங்களை முடிக்க வேண்டியிருக்கு. நான் படிக்கும்போதே கூடப் படிச்ச வந்தனா என்கிற பொண்ணைக் காதலிச்சி, ரகசியமா பதிவுத் திருமணமும் செய்துக்கிட்டேன். கொஞ்ச நாள்லயே எங்களுக்குள்ள எதுவும் ஒத்துப்போகாம விலகிட்டோம்! அவள் மும்பைல வேலை கிடைச்சு போயிட்டா. இப்ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
பாக்கி ‘‘என்னங்க, ஏதோ அன்பா எங்க அம்மாவை அழைச்சுட்டு வந்திருப்பீங்கனு நினைச்சேன். ‘வரதட்சணையா தர வேண்டிய பாக்கிப் பணத்தை எடுத்து வையுங்க... இல்லாட்டி எங்க வீட்ல வந்து வேலைக்காரியா இருந்து அதைக் கழிச்சுடுங்க’னு சொல்லிக் கூட்டிட்டு வந்தீங்களாமே..? எங்க அம்மாவை வேலைக்காரியா நினைக்கிற உங்களுக்கு நான் எப்படி பொண்டாட்டியா இருக்க முடியும்? இனி எனக்கும் இந்த வீட்ல வேலை இல்லை. நாங்க ரெண்டு பேருமே கிளம்புறோம்!’’ - கணவன் சித்தேஷிடம் பத்மா எகிறிக் குதித்தாள்.அவளைத் தனியே அறைக்குள் அழைத்துப் போய்ப் பேசினான் சித்தேஷ். ‘‘நமக்கு கல்யாணமாகி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆகிடுச்சு. வரதட்சணை பாக்கியிருக்குறதால இந்த வீட்டுப் பக்கமே வராம இருக்காங்க உ…
-
- 7 replies
- 1.5k views
-
-
புரிதல்: ஒரு நிமிடக் கதை "பாலு! இந்தக் காலத்துல சாதி மதம் எல்லாம் ஏது? பொண்ணு மாப்பிள்ளைக்கு பரஸ்பரம் பிடிச்சிருக்குதான்னு பார்க்கணும். திவ்யாவுக்கு அந்தப் பையன் வினோத்தைப் பிடிச்சிருக்குது. அவனுக்கு நம்ம திவ்யாவைப் பிடிச்சிருக்குது." - திவ்யாவின் பெரியப்பா முருகேசன் தம்பி பாலுவிடம் சொன்னார். "அண்ணே! பையனுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குணம். இதுதானே வேணும்? எல்லாமே வினோத்கிட்டே இருக்குது. நாம ஒத்துக்கிட்டா என்ன குறைஞ்சுடப் போகுது?" திவ்யாவின் சித்தப்பா பிரபாகரும் தன் பங்குக்கு சொன்னார். ‘பெரியப்பாவும் சித்தப்பாவும் ஒத்துக்கிட்டாங்க. அப்பா ஏன் இப்படி பிடிவாதமா இருக்கிறார…
-
- 3 replies
- 1.8k views
-
-
மெல்லுணர்வு (சிறுகதை) 13/01/2014 நடேசன் குவான்ரஸ் விமானத்தின் எக்கணமி வகுப்பு இருக்கைகள் நெருக்கமாக இருந்தன. யன்னலருகே அவனது இருக்கையின் கைப்பிடியை உயர்த்திவிட்டு அடுத்த இருக்கையில் உட்கார்ந்திருந்த சேராவோடு மேலும் நெருக்கமாக சாய்ந்தான் ஆனந்தன். அவளது உடலின் நெருக்கம் மனதில் சிலிர்ப்பை ஏற்படுத்தி உடலின் உள்ளே இரசாயன மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அந்தக் கிளர்ச்சி மதுவின் போதைபோல் மேலும் மேலும் அவனுக்கு தேவையாக இருந்தது. அவனது போதை கொண்ட மனம் விமானத்தின் வேகத்துக்கு மேலாக ஆகாயவெளியில் இறக்கைகட்டிப் பறந்தது. இரத்த நாடிகளில் வேகமாக ஓடும் குருதியின் ஓட்டத்தை நாடித் துடிப்பில் கை வைத்து பார்த்துக் கொண்டான். அவனது இதயத்தின் துடிப்பு பல மடங்கு அதிகமானத…
-
- 2 replies
- 825 views
-
-
பகையின் உச்சக்கட்டம்: ஆலடி அருணா கொலை வழக்கு | நெல்லையில் உள்ள ஆலடிபட்டியில் பிறந்தவர் அருணாச்சலம், பிறகு ஆலடி அருணாவாக மாறியது. 3 முறை சட்டமன்ற உறுப்பினர், தமிழக அமைச்சர் பொறுப்பில் இருந்தர்வர். எதிரிகளே அவ்வளவு இல்லாதவர் கொல்லப்பட்டது எப்படி? ஏன்? வடக்கன்குளம் S.A ராஜா என்பவர் பல கல்லூரிகள் நடத்திவந்தார். அவருக்கு போட்டியாக ஆலடி அருணா கல்லூரி திறக்க முடிவு செய்தார். அங்கு ஆரம்பித்தது பகை. அது விஸ்வரூம் எடுக்க 31.12.2004 ஆலடி அருணா கொலை செய்யப்பட்டார். இறுதியில் ராஜா விடுதலையும் ஆனார்.
-
- 0 replies
- 1.4k views
-
-
ஆனைக்கிணறு தெரு - சிறுகதை உதயசங்கர் - ஓவியங்கள்: ரமணன் பதினைந்து வருடங்களுக்குப் பின்னால் ஊருக்குத் திரும்புகிறான் சுந்தர். ஒன்றுவிட்ட சித்தப்பா இறந்த துஷ்டி கேட்பதற்காக இந்த ஊருக்கு மீண்டும் வரவேண்டியதாயிற்று. அடையாளம் தெரியாதபடி ஊரின் முகம் மாறிவிட்டது. பேருந்திலிருந்து இறங்கி நூறுமீட்டர் தூரம் நடந்து சென்று வலது புறம் திரும்பினால் ஆனைக்கிணறு தெரு. இடிந்த கட்டைமண் சுவர்தான் தெருவைத் தொடங்கிவைக்கும். அதற்கு அடுத்தபடியாகத் தகரக்கொட்டாய் போட்ட கரீம்பாய் டீக்கடை. எப்போதும் டீயும் வடை தினுசுகளும் கலந்து தெருவே மணத்துக்கிடக்கும். நீண்ட தாடி வைத்த கரீம்பாய் ஒரு நொடிகூட நிற்காமல் ஆடிக்கொண்டேயிருப்பார். தலையாட்டி பொம்மை பக்கவாட்டில் ஆடுவதைப்போல லேசான ஆட்டத்…
-
- 0 replies
- 3.6k views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: செந்தில் மன்னிப்பு நேரில் சண்டை போட்டுக்கொண்ட கணவனும் மனைவியும் ஸாரி கேட்டுப் பேசிக்கொண்டார்கள் வாட்ஸ்அப்பில்! - கிருஷ்ணகுமார் புகார் “நேற்று ரேவதி மிஸ் ஹோம் வொர்க் எதுவும் கொடுக்கல” ஹெட்மிஸ்டரஸிடம்புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா. - விகடபாரதி ஹவுஸ்மேட்ஸ் ``சண்டை போட்டுக்காம விளையாடுங்க’’ என்ற அம்மாவிடம் குழந்தைகள் சொன்னது ``இது பிக்பாஸ் விளையாட்டும்மா!’’ - ரியாஸ் முதலும் முடிவும் “எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை!” என்ற ராகவன் ஹாஸ்பிட்டல் பில்லைப்பார்த்ததும் சண்டை போடத் தயாரானான். - விகடபாரதி என்னாச்சு? பைக்கில…
-
- 0 replies
- 2.4k views
-
-
அன்றைய காலைப்பொழுது அவளுக்கு அதிகாலை நான்கு மணிக்கே விடிந்து விட்டது இடியப்பம் அவிக்க நேரம் ஆகிவிட்டதே என அடுப்படியை வெளியாக்கி கொண்டிருக்கும் போது அதில் இருந்த விறகு கட்டைக்குள் பாம்பைக்கண்டவள் கொஞ்சம் அதிர்ந்து போனாள் . என்ன பாம்பு என பார்ப்போம் என விளக்கு எடுத்து வருவதற்குள் அந்த பாம்பு மாயமாய் மறைந்து விட்டது . அவள் மனதிற்குள் எப்பதான் நான் ஒரு வீடு ஒன்றைக்கட்டி நிரந்தரமாக குடி இருக்கிறதெண்டு தெரியலையே முருகா என மனதிற்குள் புறு புறுத்துக்கொண்டு பாம்பை தேடினாள் அவள் . அவளின் அந்த ஓலைக்குடிசைக்குள்….. வெளியில் வந்து தேடிப்பார்த்த போது அது போன தடம் தெரியவே மனதுக்கு நிம்மதியாக இருந்தாலும் அப்படியே நிமிர்ந்து பார்த்தாள் அந்த கோவில் கோபுரத்தை ஆண்டவா இன்றைய நாள் எல்லோருக…
-
- 9 replies
- 1.7k views
-