Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒரு நிமிடக் கதை: விழுதுகள் தோட்டத்தில் சாய்ந்து கிடந்த மரங்களை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் அருணகிரி. “பாருங்க , புள்ளைய போல பாத்து பாத்து முப்பது வருஷமா வளர்த்து வந்தீங்க.. ஒரே நாள்ல அடிச்ச புயல்ல எல்லாம் சாஞ்சிடுச்சு” என்றார் அவரது மனைவி கமலா. அருணகிரி ஓய்வு பெற்ற அரசு அலுவலர். எழுபது வயதாகிறது உழைத்து சம்பாத்தித்து கட்டிய வீட்டைச் சுற்றி தென்னை, மா, கொய்யா, வாழை என மரங்களை நட்டு ஆசையாக வளர்த்து வந்தார். அவரின் இரண்டு மகன்களும் வெளிநாட்டில் செட்டிலான பிறகு, அவருக்கும், கமலாவுக்கும் அந்த மரங்கள்தான் துணை. அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி செய்யவும், நண்பகலில் ஆ…

  2. மான்டேஜ் மனசு 16: மாரிகளின் தீராக் காதலால் வாடா 'பூ'வுலகு ''முன்னாடி மாசத்துக்கு ஒரு முறையாவது வீட்டுக்கு வருவே. இப்போ ரெண்டு மாசம் ஆனாலும் எட்டிக் கூடப் பார்க்க மாட்டேங்குறியே ராசா.'' ''சீக்கிரம் வர்றேன் பாட்டிம்மா''. ''ஊர்ல மாரியம்மன் திருவிழா. ஒரு எட்டு வந்துட்டுப் போகலாம்ல.'' ''சரிம்மா. அவசியம் வர்றேன்.'' பாட்டியிடம் போனில் பேசியதில் இருந்து எனக்கு ஊருக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது. திருவிழா என்பதால் ரொம்ப நாளாய் பார்க்க முடியாத நண்பர்களையும் பார்த்துவிடலாம் என்ற நினைப்பில் ஊருக்குச் சென்றேன். தெருக்கூத்து நடந்து கொண்டிருந்தது. என் நண்பர்கள் நால…

  3. இன்னும் எத்தனை நிர்பயாக்களையும், வினோதினிகளையும் பலி கொடுக்க இருக்கிறோம்? #MustWatchShortFilm "ம்மா... வயிறெல்லாம் ரொம்ப வலிக்குதும்மா... தாங்கவே முடியல. சீக்கிரம் வீட்டுக்கு கூட்டிட்டுப் போயிடும்மா. நான் காலேஜ் போகணும். படிச்சு டாக்டராகிட்டா, நம்ம கஷ்டமெல்லாம் தீர்ந்திரும்மா..." என்று சொன்னபடி தன் அம்மாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறார். ஆனால், அவர் வீடு திரும்பவில்லை. கல்லூரிக்குச் செல்லவில்லை. படிக்கவில்லை. டாக்டராகவில்லை. அந்தக் கிழிந்த வயிற்றின் வலியோடும், தான் சார்ந்த சமூகத்தை நோக்கிய ஒரு பெரும் கேள்வியோடும், உயிர் கொடுத்த பெற்றோரைப் பார்த்தபடியே உயிரிழந்தாள் அந்த "பயமற்றவள்". நான்காண்டுகளுக்கு முன்னர் இன்றைய தினத்தில் தான், நிர்பயா பாலியல் வன்ப…

  4. நதியின் மூன்றாவது கரை - ஜோவோ கிமேரஸ் ரோஸா ஆங்கிலம்: வில்லியம் எல்.கிராஸ்மன். தமிழில்: ஆர்.சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்கு நிறைந்த, நேர்மையான ஒரு மனிதர் என் அப்பா. நம்பிக்கையான சிலரை விசாரித்ததில், இளம்பிராயத்திலேயே இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பருவத்திலேயே அவருக்கு இந்தக் குணங்கள் இருந்தது தெரியவந்தது. நமக்குத் தெரிந்த மற்ற ஆண்களை விடவும் அதிகம் மகிழ்ச்சி உள்ளவராகவோ அல்லது அதிகம் சோகம் நிரம்பியவராகவோ அவர் இருந்தது இல்லை என்பது என்னுடைய நினைவுக்கே புலனாகிறது. ஒருவேளை அவர் மற்றவர்களைவிடவும் சற்று அதிகம் அமைதியானவராக இருந்திருக்கலாம். எங்கள் வீட்டை ஆண்டது அம்மாதான், அப்பா இல்லை. என்னையும், என் சகோதரியையும் என் சகோதரனையும் அம்மா தினமும் திட்டினாள். ஒரு ந…

    • 0 replies
    • 1.1k views
  5. பென்னாம் பெரிய டிரக் வண்டி, மெதுவாக வந்து ‘Cul-de-sac’இல் நின்றது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறார்கள் ‘பெரிசை’க் கணம் பண்ணும் பவ்வியத்தில் நடைபாதையில் ஏறிக்கொண்டார்கள். ஆஸ்திரேய குடியிருப்புக்களின் உள்வீதிகள் சில ‘Cul-de-sac’ எனப்படும் முட்டுச் சந்தாக முடிவடையும். அது அரிசி மூட்டையொன்றின் அடிப்பாகம் போல வளைந்தும் பெருத்தும் காணப்படுவதால் இப்பெயர் வந்திருக்கலாம். இத்தகைய வீதிகளின் அந்தலையில் வாகன நடமாட்டம் குறைவு. இதனால் அப்பகுதியில் வாழும் சிறார்கள், அதனை விளையாட்டு மைதான மாகப் பாவிப்பார்கள். சாரதியின் இருக்கைப் பகுதிக்கும் பின் பெட்டிக்குமிடையில் செங்குத்தாக, வானை எட்டிப்பார்த்து நிமிர்ந்து நிற்கும் இரும்புக் குழாய், புகையை வளையங்களாகக் கக்கிக் கொண்டிருந்தது…

    • 2 replies
    • 1.2k views
  6. ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம் திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது. பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான். ‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்…

  7. மீன் - சிறுகதை பவா செல்லதுரை - ஓவியங்கள்: ஸ்யாம் பவுல் வாத்தியாரை, `வாத்தியார்' என அவரே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி ஓர் ஒல்லிக்குச்சி உடம்பும், முழங்காலுக்குமேல் தூக்கிக் கட்டிய கட்டம் போட்ட லுங்கியும், கைவைத்த வெள்ளை பனியனுமாகத்தான் எப்போதும் திரிவார். இவர் ஸ்கூலுக்கு எப்போது போவார், அப்போதாவது உடைமாற்றிக்கொள்வாரா... என்பது எல்லாம் மாயவித்தைகள்போல மறைந்துவிடும். முனிசிபல் பாய்ஸ் ஹைஸ்கூலில், பத்தாவதுக்கு மாறியபோதுதான் பவுல் வாத்தியாரின் நீளமான அந்தத் தூண்டிலில் நானும் மாட்டிக்கொண்டேன். என் வீட்டில் இருந்து நடை தூரத்தில்தான் எல்லுக்குட்டை இருந்தது. அதை சிலர் `குளம்' என்றும் தப்பாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன். எப்போதும் பாசி படர…

  8. ஒரு நிமிடக் கதை: யானை மன்னரின் கை நாடியைப் பிடித்துப் பார்த்த அரண்மனை வைத்தியர் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை அமைச்சர் நல்லசிவம் உணர்ந்தார். “வைத்தியரே... மன்னர்..” உதட்டைப் பிதுக்கினார் வைத்தியர்.. தலையை இருபக்கமும் அசைத்தார். “துடிப்பு குறைகிறது.. தாங்காது.” திரைக்கு அப்பால் அறையின் வெளியே தளபதி, ராஜகுரு, பிரதானி கள், பிரபுக்கள், நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள். “சரி விஷயம் நம்முடன் இருக்கட்டும்.. வெளியே கசிய வேண்டாம்.” திரைக்கு வெளியே வந்த அமைச்சர்.. “மன்னர் நலமாக இருக்கிறார்.. கவலை வேண்டாம்..ஆனால் ஒரு வாரத்துக…

  9. ஒரு நிமிடக் கதை - பயம் அமரனுக்கு தன் மகன் சிவா, திருமணத்துக்கு சம்மதிக்காமல் இருப்பது பெரும் கவலையாக இருந்தது. அமரன் ஒரு இதய நோயாளி. நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார். தான் நன்றாக இருக்கும் போதே தன் மகனுக்கு திருமணம் செய்துபார்க்க விரும்பினார். அமரனின் நண்பர்கள் மூலம் பல நல்ல இடத்து சம்மந்தங்கள் கூடி வந்தது. ஆனால் சிவா எதையும் ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. எல்லாவற்றையும் உதாசினப்படுத்தினான். இது அமரனுக்கு மேலும் மன அழுத்தத்தை கொடுத்தது. தான் படும் வேதனையை மகன் புரிந்துக் கொள்ளவில்லையே என்று அமரன் ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள் அழுது கொண்டிருந்தார். இதை அறியாத சிவா, தன்…

  10. அடேலினா - சிறுகதை அவள் அறிமுக எழுத்தாளர் பா.விஜயலட்சுமி ஓவியம்: ஸ்யாம் ஆல்ப்ஸ் மலையின் மிதமிஞ்சிய குளிர், கணப்புச் சூட்டைத் தாண்டி போர்வைக்குள் சுருண்டு படுத்திருந்த அடேலினாவின் உடலை சன்னமாக குலுங்க வைத்தது. கண்கள் மூடி தூக்கத்தில் கனவுகண்டு புன்னகை புரிந்தவளை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டே ஜன்னல் ஓரத்தில் கைதொடும் தூரமாகக் கிடப்பதைப் போல விரிந்துகிடக்கும் ஆல்ப்ஸ் மலையின் பிம்பத்தை ரசித்துக்கொண்டிருந்தான் கெவின். கெவின்... நாற்பது வயதைத் தொட 1,460 நாட்களை கைகளில் வைத்துக் கொண்டிருப்பவன். ஆல்ப்ஸ் மலையின் பனிப்படுகைகளில் உருண்டு, புரண்டு ஐஸ்கட்டிகளை ஆராய்ச்சி செய்பவன் - ‘கிளேசியர் ரிசர்ச் சயின்ட்டிஸ்ட்’. அவனிடம் பயிற்சியாளினியாக வேலைக்குச் …

  11. செவத்தகன்னி - சிறுகதை சிறுகதை:சிவக்குமார் முத்தய்யா, ஓவியங்கள்: ஸ்யாம் காற்றில் சாசுவதமாக கைகளை அசைத்தபடி நடக்கத் தொடங்கினாள் செவத்தகன்னி. பொழுது மெள்ள ஏறிக்கொண்டிருந்தது. பொழுதுக்கும் அனலாகக் கொட்டித்தீர்த்த வெயில் குறைந்து, தெற்கே இருந்து மெல்லிய காற்று வேப்பம்பூக்களின் வாசனையோடு வீசியது. சைக்கிள் பஞ்சர் ஆகிவிட்டிருந்தது. அதை எடுத்துக்கொண்டும், ‘முக்கூட்டில்’ இருக்கும் சலீம்பாய் கடையில் மளிகை சாமான்கள் வாங்கிக்கொண்டும் வரவேண்டும் எனக் கிளம்பியிருந்தாள். முக்கூட்டுக்கும் ஓர்ச்சேரிக்கும் மூன்று மைல் தூரம். இதைக் கடந்துதான் டவுனுக்குப் போக வேண்டும் என்பதால், முக்கூட்டில் இருந்துதான் நாலு ரோட்டுக்கு பஸ் பிடித்து, 20 மைல் தொலைவில் உள்ள தஞ்சாவூருக்கு…

  12. என்னையே நானறியேன் பாட்டுடைத் தலைவனையுடைத்தாய் பாடுபொருள் கொண்டு ஏட்டிலே வடிப்பது இலக்கியமானால், பாட்டுடைத் தலைவன் தெய்வீகத் திருமகனாய் திகழ்வது மட்டுமே திறமன்று. ‚ '' எரிமருள் வேங்கை கடவுள் காக்கும் குறுகார் களனியின் உடலத்தங்கன் ஏதிலாளன் கவலை கவற்ற ஒருமுலை அறுத்த திருமாவுண்ணி'' என்னும் நற்றுணைச் செய்யுள் ஒன்றில் துன்பம் மீதுறப் பெற்ற பெண்ணொருத்தித் தன் முலை அறுத்த…

  13. மான்டேஜ் மனசு 15 - நீரில் மூழ்கி காதலில் மீண்ட பறவை! ஒரு மந்தமான மதியப்பொழுதில் ஸ்பென்சர் பிளாசா சரவண பவனில் சாப்பிடப் போகும்போதுதான் யதேச்சையாக சந்துருவை சந்தித்தேன். சினிமா டீமுடன் பேசிக்கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து கையசைத்தான். ஒரு ஹாய், 2 நிமிட நலம் விசாரிப்புக்குப் பிறகு வருத்தம் படர பேசினான். ''காலேஜ் முடிச்ச 3 வருஷத்துல உருப்படியா எதுவும் பண்ணலை மச்சி. ஃபீல்டுக்கு வராதது இன்னும் பயமா இருக்குடா. அதான் சின்ன கம்பெனி படமா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஒரு புராஜெக்டுக்கு ஓ.கே. சொன்னேன். 'சீன் சொல்லுங்க பாஸ்'னு சொல்றாங்க. எழுதி கொடுக்கிறேன். ஆனா, பேட்டா மட்டும்தான…

  14. ஒரு நிமிடக் கதை: வாட்ச்மேன் இரவு மணி பத்து. கடைசி பஸ்ஸை பிடிக்க விரைந்த மாணிக்கத்தின் கண்ணில் அந்த ஏடிஎம்மில் அமர்ந்திருந்த வாட்ச்மேன் தட்டுப்பட்டார். ‘இது நம்ம தங்கராசு மாதிரியில்ல இருக்குது?’ மனதில் கேட்டுக் கொண்டவர் ஏடிஎம்மை நெருங்கினார். அது அவர் நண்பர் தங்கராசுவேதான். “எலே தங்கராசு என்னாச்சு? வயசான காலத்துல எதுக்கு உனக்கு இந்த வேலை? இப்பத்தான் பையனுக்கு கல்யாணம் பண்ணிவச்சே, அதுக்குள்ள மருமக கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டாளா?” கேட்ட நண்பனை கையமர்த்தினார் தங்கராசு. “அந்த புள்ளையைப் பத்தி அப்படி எல்லாம் பேசாதே. என் மருமக தங்கம்.” “அப்ப எதுக்கு உனக்கு இந்த வாட்ச்மேன் உத்யோகம்? கல்யாணத்துக்கு முந்தி உன்னை உக்…

  15. அமெரிக்காவிலிருந்து வந்த அத்தான் - லட்சுமி ராஜரத்தினம் ’நாளைக் காலையில் நாம் கொடைக்கானல் கிளம்புகிறோம்; தயாராக இரு.’ ‘உண்மையாகவா?’ இதழ்களை சற்றே விரித்துக் கண்கள் மலர அவளிடம் வசந்தி கேட்டாள். மகிழ்ச்சியில் அவன் கைகளைப் பிடித்துக் கொள்கிறாள். இரவின் உறக்கம் அவளைக் கொடை ஹில்லின் நினைவுடனேயே தழுவுகிறது. ’என்ன இப்பொழுதே இப்படி நடுங்குகிறாயே? இந்த ஸீஸனில் அவ்வளவு குளிர் கிடையாது. இது செகண்ட் ஸீஸன்..’ ப்ரெஞ்ச் ஸீசன் என்று பெயர்.’ கொடைக்கானல் மலையின் ‘ரிசர்வ்’ செய்யப்பட்ட அறையில் இருவரும் தங்கி இருந்தார்கள். அவளுடன் பேசும் பொழுது, அவளுக்குத் தெரிந்த ஒன்றை விளக்கும் பெருமை அவனிடம் பொங்கி வழிந்தது. எதையும் ச…

  16. வாடைக்காற்று வாடைக்காற்று நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/167/16603/16603.pdf நந்திக்கடல் நந்திக்கடல் நாவல் .pdf வடிவில் கீழ் உள்ள இணைப்பிணை அழுத்தி வாசியுங்கள். (இணைப்பு தரவேற்றம் செய்ய சிறிது நேரம் எடுக்கும்) http://noolaham.net/project/172/17152/17152.pdf

    • 2 replies
    • 1.5k views
  17. கலைமாமணி சிறுகதை: பாவண்ணன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு ஒரு வகுத்தல் கணக்குக்காக 13-வது வாய்ப்பாட்டை மனசுக்குள் சொல்லிக்கொண்டிருந்ததால், தெருமுனையில் ஒலித்த தமுக்குச் சத்தம் என் காதில் விழவில்லை. ஆனால், என் தம்பி காதுகொடுத்துக் கேட்டுவிட்டான். மறுகணமே கன்றுக்குட்டிபோல துள்ளி எழுந்து வெளியே பாய்ந்து ஓடினான். `எழு பதிமூணு தொண்ணுத்தொண்ணு, எட்டு பதிமூணு...' என மனசுக்குள் முணுமுணுத்தபடியே அவன் பக்கமாகத் திரும்புவதற்குள், அவன் ஒரு குட்டிமுயலின் வேகத்தில் வேலிப்படலைத் தாண்டியிருந்தான். எதுவுமே புரியாமல் நோட்டை அப்படியே கவிழ்த்துவைத்துவிட்டு “இருடா ராமு, நானும் வரேன்டா...” என்றபடி அவனுக்குப் பின்னால் ஓடத் தொடங்கினேன்…

  18. சோளகம் பெயர்ந்துவிட்டது. சித்திரைமாதக் கழிவில் ஏற்படும் இடி மின்னற் புயுலுடன் சோளம் வீசத் தொடங்கிவிட்டது. மூன்று நாட்கள் இடைவிட்டு விட்டு மழை பொழிந்து தீர்த்தது. "ஒரு வரியமும் இல்லாதமாதிரி, இந்தமுறை சித்திரைக் குழப்பம் ஓமோம் சரியான மழை.....!" என்று வாங்கு மூலையில் இருந்த படி பொன்னு ஆச்சி முணுமுணுத்தாள். பொன்னு ஆச்சி முணு முணுத்தது, தலைவாசல் திண்ணையில் குந்தி இருந்து குளிருக்கு அடக்கமாகச் சுருட்டுப் புகைத்துக் கொண்டிருந்த கொக்கர்' மாரி முத்தரின் காதுகள் விழவே செய்தது. 'என்ன முணுமுணுக்கிறாய்' என்பதுபோல மனைவியை நிமிர்ந்து பார்த்தார். உர்'ரென்ற இரைச்சலோடு வீசிய காற்றினால், முற்றத்துப் பனையிலிருந்து பிடிகழன்ற கங்குமட்டை ஒன்று 'தொப்'பென்று தலைவாசல் கூரையில் விழ…

    • 0 replies
    • 1.3k views
  19. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்-ஜெயகாந்தன் ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா! எவ்வளவோ காலமா உக்காந்துண்டுதான் இருக்கேன். இனிமேலும் உக்காந்துண்டுதான் இருப்பேன். என்ன தப்பு? இல்லே, யாருக்கு என்ன நஷ்டம்? பெரீசா எப்போ பார்த்தாலும் இதையே ஒரு வழக்காப் பேசிண்டு இருக்கேளே… ‘ஜன்னலண்டையே உக்காந்துண்டிருக்கா… உக்காந்துண்டிருக்கா’ன்னு. ஜன்னலண்டை உட்காரப்படாதோ? ஜன்னலண்டையே போகப் படாதோjayakanthan_185_1_050408 ? அப்படீன்னா வீட்டுக்கு ஜன்னல்னு ஒண்ணு எதுக்காக வெக்கணும்கறேன்! ஒண்ணா? இந்த வீட்டுக்கு ரெண்டு ஜன்னல் இருக்கு; பார்த்துக்கோங்கோ. தெருவ…

    • 2 replies
    • 1.3k views
  20. நான் - A அவள் - Z By பட்டுக்கோட்டை பிரபாகர் | 'ஹலோ புல்லாங்குழல்! ஹலோ புல்லாங் குழல்! உன்னால் சத்தம். உள்ளே சுத்தம். நீயும் ஒரு அரசியல்வாதி!' - என் வேதாவின் கவிதைகளில் இது ஒன்று. எனக்கு ஒரு இழவும் புரியவில்லை. புல்லாங்குழல் ஜடம், அரசியல்வாதி உயிருள்ள மனிதன். இவள் எப்படி இரண்டையும் ஒப்பிடுகிறாள்? எனக்கு கவிதைகளே அலர்ஜி, அவள் மனதுக்கு அவை தான் சாப்பாடு. வீடா ஹவ் ஸ்மார்ட்! ஹவ் இன்டெலிஜெண்ட்! என்ன என்னவோ நிறைய படிப்பாள். அந்த ஆசிரியர்களின் பெயர்கள் கூட எனக்குத் தெரியாது. வேதா ரொம்ப சிம்பிள். ஐ- ப்ரோ கூட வைத்துக் கொள்ள மாட்டாள். மாவு அப்பா மாட்டாள். உதட்டை ரணப்ப…

  21. வேண்டுதல் சிறுகதை: விமலாதித்த மாமல்லன், ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு கிழவர் படுத்த படுக்கையாகி அன்றோடு ஆறாவது நாள். பாத்ரூம் போகக்கூட எழுந்திருக்க முடியாமல் படுக்கையிலேயே இருந்துவிட்ட அன்றே, எல்லோருக்கும் சொல்லிவிடுவது எனப் பெண்ணும் மாப்பிள்ளையும் முடிவுசெய்துவிட்டார்கள். கிழவரைப் பார்த்துக்கொண்டது என்னவோ இளைய பெண்தான் என்றாலும், அவள் இருந்தது அவர் வீட்டில். இளையவள் சொந்தத்திலேயே மணமுடித்து இருந்ததால், அவர் வீட்டிலேயே சுவாதீனமாய் மாப்பிள்ளையும் தங்கிவிட்டார். அவர் பார்க்கும் வேலைக்கு அதைப்போல இரண்டு வீடுகளை வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அக்கம்பக்கத்தில்கூட பெரிய வம்பு எதுவும் எழவில்லை. இன்னும் இருந்த இரண்டு…

  22. தனுமை – வண்ணதாசன் இதில்தான் தனு போகிறாள். பஸ் பழையதுதான். ஆனாலும் காலனி வரைக்கும் போக ஆரம்பித்து மூன்று நாட்கள் ஆகிவிட்டன. தகரம் படபடவென அதிர ஞாயிற்றுக்கிழமை காலை, முதல் முறையாக வெள்ளோட்டம் சென்றது. இந்தப் புதிய மில்காலனியின் அதிகாரிகள் உள்ளே சிரித்துக் கொண்டிருந்தனர். ஞானப்பனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. பஸ் கக்கிவிட்டுப் போன புகை கலைந்து பாதையை விழுங்கும்போது உடைமரங்களுக்கும் தேரி மணலுக்கும் மத்தியில் மடமடவென உருவாகிவிட்ட இந்தக் காலனியிடம் தன் சம்பந்தத்தை அவன் இழந்து போனதாகவே தோன்றியது. தனு அங்கேயேவீட்டுப்பக்கம் ஏறிக்கொள்வாள், இறங்கிக்கொள்வாள். ஒரு வகையில் மகிழ்ச்சி. தன்னுடைய பலகீனமான காலை இழுத்து இழுத்து, ஒரு அழகான சோகமாக அவள் இத்தனை தூரமும் நடந்து …

  23. ஒரு சதுர கஜம் எட்டரை விலைக்கு நிலம் வாங்கி வீடு கட்டினாராம் கிஷனின் அப்பா. ரயில்பெட்டித் தொடர் மாதிரி வரிசையாய் அறைகள். எல்லா அறைகளும் முடிந்தபின் போனால் போகிறது என்று ஒட்டவைத்தாற்போல் ஒரு சமையலறை. இரு ஜன்னல்கள். ஒரு ஜன்னலின் கீழ், குழாய் வைத்த தொட்டி, ஒரு பெரிய தட்டுக்கூட வைக்க வகையில்லாமல் குறுகியது. கீழே, செங்கல் தடுப்பு இல்லாத சாக்கடை முற்றம். மேலே குழாயைத் திறந்ததும் கீழே பாதங்கள் குறுகுறுக்கும். பத்து நிமிடங்களில் ஒரு சிறு வெள்ளக்காடு காலடியில். அதில் நின்று நின்று அடிப்பாதம் எல்லாம் வெடிப்புக் கீறல்கள். சமையலறையில் அடி வைத்து, முதல் நாள் சமைத்து, கைக்குத் தங்க வளையல் போட்ட உடனேயே வெடிப்புக்குத் தடவ ஒரு மெழுகுக் களிம்பு தந்து விடுவாள், ஜீஜி என்று எல்லோரும் கூப்பிடும…

    • 0 replies
    • 1.2k views
  24. திரை - சிறுகதை ஜா.தீபா, ஓவியங்கள்: ஸ்யாம் சுபலன் அமைதியாக அமர்ந்திருந்தார். சிக்கலான முடிவுகள் எடுக்கும் ஒவ்வொரு முறையும் அவர் அமைதியாக இருப்பது வழக்கம். ஆனால் அன்று, அவரது மனம் கொதிப்பில் இருந்தது. தூரமாகத் தெரிந்த மலைச்சிகரங்களை இலக்கு இன்றி பார்த்துக்கொண்டே இருந்தார். குரு நாட்டில் இருந்து காந்தார தேசத்துக்கு, இதுவரை திருமணத்துக்கான அழைப்புகள் மட்டுமே வந்திருக்கின்றன; முதன்முறையாக திருமணச் சம்பந்தம் தொடர்பாக தூது வந்திருக்கிறது. `இது சரிப்படாது. இல்லை... ஏன் சரிப்படாது? குரு வம்சத்தின் பட்டத்து மகிஷியாகும் யோகம் காந்தாரிக்கு இருக்கக்கூடும். ஆனால்...' நினைக்கும்போதே அவர் அடிவயிற்றை என்னவோ செய்தது. அப்போதுதான் அந்த அலறலும் கேட்டிருக்க வேண்டும். ஆழ…

  25. ஒரு விபத்து போலதான் அது நடந்தது. செல்வநாயகம் மாஸ்ரர் வீட்டில் தங்க வேண்டிய நான் ஒரு சிறு அசொகரியம் காரணமாக இப்படி ஜோர்ஜ் மாஸ்ரர் வீட்டில் தங்க நேரிட்டது. எனக்கு அவரை முன்பின் தெரியாது. அந்த இரண்டு இரவுகளும் ஒரு பகலும் எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாக மாறும். எனது பதினாலு வயது வாழ்க்கையில் நான் கண்டிராத கேட்டிராத சில விஷயங்கள் எனக்குப் புலப்படுத்தப்படும். இன்னும் சில அதிர்ச்சிகளுக்கும் தயாராக நேரிடும். ஜோர்ஜ் மாஸ்ரர் பூர்விகத்தில் கேரளாவில் இருந்து வந்தவர். அவர் கழுத்தினால் மட்டுமே கழற்றக்கூடிய மூன்று பொத்தான் வைத்த முழங்கை முட்டும் சட்டையை அணிந்திருந்தார். அவருடைய முகம் பள்ளி ஆசிரியருக்கு ஏற்றதாக இல்லை. வாய்க்கோடு மேலே வளைந்து எப்போதும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.