விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7834 topics in this forum
-
விம்பிள்டன் பட்டம் வென்றார் கிரெஜ்சிகோவா! விம்பிள்டன் டென்னிஸ் போட்டித் தொடர் லண்டனில் நடைபெற்று வருகின்றது. இதன்படி பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா மற்றும் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் மோதினர். இதில் கிரெஜ்சிகோவா 6-2, 2-6, 6-4 என்ற கணக்கில் ஜாஸ்மின் பவுலினியை வீழ்த்தி விம்பிள்டன் பட்டம் வென்றார். அத்துடன் கிரெஜ்சிகோவாவுக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/305989
-
-
- 5 replies
- 641 views
- 1 follower
-
-
யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் ஆரம்பமாகின்றது. உலகக் கிண்ண கால்பந்துப் போட்டிக்கு பிறகு, உலக கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் போட்டித் தொடரான யூரோ கிண்ண தொடராகும். உதைப்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்கும் பெரும்பான்மையான அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கின்றன. இந்தப் போட்டித் தொடரில் நடப்பு சம்பியன் இத்தாலி உட்பட 24 நாடுகள் பங்கேற்கின்றன. கூடவே ஜெர்மனி, இத்தாலி, இஙகிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் என முன்னாள் உலக சம்பியன்களும் களம் காணுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது. போட்டியில் பங்கேற…
-
-
- 123 replies
- 7.7k views
- 2 followers
-
-
ஜிம்பாப்வே அசத்தல் வெற்றி: ஐபிஎல்-இல் கலக்கிவிட்டு சர்வதேச ஆட்டத்தில் சொதப்பிய இந்திய பேட்டர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு சந்தித்த முதல் போட்டி இவ்வளவு மோசமான முடிவாக இருக்கும் என இளம் இந்திய அணி எதிர்பார்த்திருக்காது. அடுத்த தலைமுறைக்கான இந்திய அணி என்று மார்தட்டி சுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சென்ற அணி, 116 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் சுருண்டு மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. ஹராரே மைதானத்தில் நேற்று நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணியை 13 ரன்கள் வித…
-
-
- 7 replies
- 749 views
- 1 follower
-
-
13 JUL, 2024 | 12:08 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான உயரம் பாய்தலில் 37 வருட காலமாக இருந்து வந்த உலக சாதனையை 22 வயதான உக்ரைனின் யரோஸ்லாவா மஹுச்சிக் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார். உக்ரைனின் உயரம் பாய்தல் வீராங்கனையான யரோஸ்லாவா மஹுச்சிக்,பாரிஸ் டயமண்ட் லீக்கின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதி உலக சாதனையை படைத்தார். கடந்த 1987 இல் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற தடகள போட்டியின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டெப்க்கா கொஸ்ட்டாடினோவா (Stefka Kostadinova) 2.09 மீற்றர் உயரம் பாய்ந்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தார். இந்நிலையில்,…
-
-
- 1 reply
- 373 views
- 1 follower
-
-
3000 மீற்றரில் முல்லைத்தீவு விதுஷன், 5000 மீற்றரில் மாத்தளை துதிதர்ஷிதன் தங்கம் வென்று அசத்தல்! : இன்று பகல் வரை 5 புதிய சாதனைகள் Published By: DIGITAL DESK 7 14 JUL, 2024 | 01:27 PM (நெவில் அன்தனி) தியகம, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் ஆரம்ப நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் முல்லைத்தீவு மாணவன் ஜெயகாந்தன் விதுஷன், மாத்தளை மாணவன் எஸ். துதிதர்ஷிதன் ஆகியோர் தங்கப் பதக்கங்களை சுவீகரித்து வரலாறு படைத்தனர். அத்துடன் முதலாம் நாளன்று 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதலில் ஒரு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டதுடன் இரண்டு முந்தைய சாதனைகள் சமப்படு…
-
- 0 replies
- 189 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,JOAN MONFORT/AP படக்குறிப்பு,2007இல் லியோனல் மெஸ்ஸியுடன் குழந்தையாக லமைன் யமால் கட்டுரை தகவல் எழுதியவர், கேரி ரோஸ் மற்றும் ஜார்ஜ் ரைட் பதவி, பிபிசி நியூஸ் 11 ஜூலை 2024, 02:43 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு முறையும், காலத்திற்கும் நினைவில் நிற்கும் வகையில், யூரோ கால்பந்து தொடரில் ஒரு கோல் அடிக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு அந்த ஒரு கோல் பற்றி மீண்டும் மீண்டும் பேசப்படும், விவாதிக்கப்படும். அந்தக் காணொளி பலமுறை பகிரப்படும். 1988 யூரோ போட்டிகளில் மார்கோ வான் பாஸ்டனின் பறந்து வளைந்த ('Angled volley') கோல், யூரோ 1996இல் பால் கேஸ்கோயின் சிறப்பான ஆட்…
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
06 JUL, 2024 | 02:32 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் (ஆண்கள்) என்ற அரிய சாதனை 16 வயதான குவின்சி வில்சனுக்கு சொந்தமாகிறது. ஒரிகொன், இயூஜினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், அதீத ஆற்றலை வெளிப்படுத்தி சாதனைமிகு நேரப்பெறுதியைப் பதிவுசெய்ததன் மூலம் பாரிஸ் செல்லும் அமெரிக்க ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆண்களுக்கான 400 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் தனிநபராக பங்குபற்ற தகுதிபெறவில்லை. ஆனால், இ…
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,SIMON WALKER ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச அளவில் பிரிட்டன் நாட்டுக்காக விளையாட இருக்கும் இளம் வயது விளையாட்டு வீரர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார் போதனா சிவானந்தன். வடமேற்கு லண்டனில் உள்ள ஹாரோவில் வசிக்கும் போதனா, ஹங்கேரியில் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டுத் தொடரில் பங்கேற்க இருக்கும் பிரிட்டன் பெண்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இந்த அணியில் இணைவதற்கு முன்பு அணியில் இருந்த இளம் விளையாட்டு வீரான லான் யாவின் வயது 23 என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பிபிசியிடம் பேசிய போதனா, "நேற்று பள்ளியில் இருந்து திரும்பிய பின், இது ப…
-
- 1 reply
- 605 views
- 1 follower
-
-
03 JUL, 2024 | 03:23 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி போட்டி நிகழ்வின் நடப்பு ஒலிம்பிக் சம்பியனாக திகழும் அமெரிக்காவின் சிட்னி மெக்லாலின் லெவ்ரோன், தனது சொந்த உலக சாதனையை முறியடித்து புதிய உலக சாதனையை ஏற்படுத்தினார். அத்துடன் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்டியதன் மூலம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான தகுதியையும் அவர் பெற்றுக்கொண்டார். கடந்த ஞாயிறன்று நடைபெற்ற அமெரிக்க தடகள தகுதிகாணில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியில் பங்கேற்ற 24 வயதான சிட்னி மெக்லாலின் லெவ்ரோன் போட்டித் தூரத்தை 50.65 செக்கன்களில் நிறைவு செய்து, 50.68 செக்கன்கள் என்ற தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார். இதன் மூலம் 5ஆவ…
-
-
- 4 replies
- 387 views
- 1 follower
-
-
தென் ஆபிரிக்காவை வீழ்த்தி இரண்டாவது தடவையாக ரி20 உலக சம்பியனானது இந்தியா 29 JUN, 2024 | 11:51 PM (நெவில் அன்தனி) பார்படொஸ், ப்றிஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் விளையாட்டரங்கில் கடைசிவரை மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 7 ஓட்டங்களால் வெற்றிகொண்ட இந்தியா ரி20 உலகக் கிண்ணத்தை 2ஆவது தடவையாக சுவீகரித்தது. தென் ஆபிரிக்காவில் 2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் எம்.ஸ். தோனி தலைமையில் சம்பியனான இந்தியா இப்போது 17 வருடங்களின் பின்னர் ரோஹித் ஷர்மாவின் தலைமையில் இரண்டாவது தடவையாக உலக சம்பியனானது. இந்த இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்காவுக்க…
-
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
02 JUL, 2024 | 11:46 AM ஆர்.சேதுராமன் ஆணாகப் பிறந்து ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றிய பின்னர், பாலினமாற்றம் செய்து பெண்ணாக மாறிய லியா தோமஸ், பெண்களுக்கான நீச்சல் போட்டிகளில் தான் பங்குபற்றுவதை தடுக்கும் வகையிலான விதிகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனுவை, சர்வதேச விளையாட்டுத்துறை நீதிமன்றமான விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயம் (CAS) நிராகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 25 வயதான லியா தோமஸ் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் ஆண்களுக்கான நீச்சல் போட்டிகளில் பங்குபற்றியவர். அப்போது அவரின் பெயர் வில்லியம் தோமஸ். 6 அடி 1 அங்குல உயரமான வில்லியம் தோமஸ், நீச்சல் போட்டிகளில் பல…
-
- 0 replies
- 536 views
- 1 follower
-
-
1500 மீற்றரில் வக்சனுக்கு தங்கம்; குண்டு எறிதலில் மிதுன்ராஜுக்கு வெள்ளி 26 JUN, 2024 | 04:13 PM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 102ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியில் இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் விக்னராஜ் வக்சன் தங்கப் பதக்கத்தையும் எஸ். மீதுன்ராஜ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள் 51.61 செக்கன்களில் நிறைவுசெய்து விக்னராஜ் வக்சன் (2625) தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இவர் தலவாக்கொல்லை மிட்ல்டன் தோட்டத்தைச் சேர்ந்தவராவார். இதேவேளை ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் 14.94 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த பருத்…
-
- 2 replies
- 397 views
- 1 follower
-
-
தேசியமட்டத்தில் உதைபந்தாட்ட சம்பியனாகி வடமாகாணத் தெரிவு அணி ! 29) நேற்றுச் சனிக்கிழமை யாழ்.துரையப்பா மைதானத்தில் இடம்பெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வின் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில் வடமாகாணத் தெரிவு அணி மற்றும் மத்தியமாகாணத் தெரிவு அணிகள் மோதின. ஆட்ட நேர முடிவில் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிவுற்றதால் நீண்டநேரச் சமனிலை தவிர்ப்பு உதை முடிவில் வடமாகாண அணி வெற்றிபெற்றுக் ஹற்றிக் சம்பியனுடன் வடமாகாணத் தெரிவு அணி தேசிய சம்பியனாகியது. இதேவேளை, நீண்ட இடைவெளியின் பின் 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 46 ஆவது தேசிய விளையாட்டு நிகழ்வில் வடமாகாண அணி உதைபந்தாட்டத்தில் தேசிய சம்பியனாகியது. இந் நிலையில் கடந்த- 2023 ஆம் ஆண்டில…
-
- 0 replies
- 419 views
-
-
Published By: VISHNU 26 JUN, 2024 | 07:15 PM சீரற்ற காலநிலையால் பாதிக்கப்படும் சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி அணிகளைத் தீர்மானிப்பதற்கு டக்வேர்த் லூயிஸ் முறைமையை உருவாக்கியவர்களில் ஒருவரான ப்ராங்க் டக்வேர்த்தின் மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையில் 2014வரை புள்ளியியல் ஆலோசகராக பணியாற்றிய டக்வேர்த் தனது 84ஆவது வயதில் கடந்த வெள்ளியன்று காலமானார். டக்வேர்த்தின் சேவையை பாராட்டிய கிரிக்கெட் செயற்பாடுகளுக்கான ஐசிசி பொது முகாமையாளர் வசிம் கான், அன்னாரது மறைவையொட்டி தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
ஐரோப்பிய உதைபந்தாட்டக் கழகம் ஐரோப்பாவில் உள்ள 55 நாடுகளையும் வரிசைப்படுத்தி நான்கு லீக் குகளை உருவாக்கி ஒவ்வொரு லீக்கிலும் 4குழுக்களை உருவாக்கினர்லீக் Dயில் மட்டும் இரு குழுக்கள். லீக் ABCD என்பன அவை A யில் திறமை வாய்ந்த அணிகள் B அதற்கு அடுத்த திறமை வாய்ந்த அணிகள் பின்னர் C என Dயில் மிகவும் பலம் குறைந்த நாடுகளின் அணிகள் உள்வாங்கப்பட்டன இதை UEFA Nations League என அழைக்கின்றார்கள் இந்த லீக் விளையாட்டுக்களில் பலமாக விளையாடும் அணிகள் ஒரு லீக் ( B;C;D ) மேலேயும் பலம் குறைந்த அணிகள் ஒரு லீக்( ABC)கீழேயும் இறக்கி ஏற்றப்படுவார்கள். பின்னர் ஐரோப்பிய அணிகள் இந்த விளையாட்டுக்களின் அடிப்படையில் 1இலிருந்து…
-
- 0 replies
- 233 views
-
-
Published By: VISHNU 22 JUN, 2024 | 12:37 AM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்யவுள்ள 19 வயதுக்குபட்பட்ட இலங்கை அணியின் உதவித் தலைவராக சண்முகநாதன் ஷாருஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி அணியின் தலைவரும் விக்கெட்காப்பாளருமாவார். தென் ஆபிரிக்காவில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 போட்டிகளில் 118 ஓட்டங்களைப் பெற்றதுடன் 7 ஆட்டமிழப்புகளில் (5 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார். இதேவேளை, 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக காலி, மஹிந்த கல்லூரி வீரர் தினுர களுபஹன நியமிக்கப்பட்டுள…
-
- 0 replies
- 425 views
- 1 follower
-
-
20 JUN, 2024 | 10:13 AM (நெவில் அன்தனி) இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டுக்கான தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ள கேன் வில்லியம்சன், நியூஸிலாந்து வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தையும் நிராகரித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நீடித்திருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டே தலைவர் பதவியைத் துறந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பப்புவா நியூ கினியுடனான சி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி முடிவடைந்த பின்னர் தனது பதவி விலகல் மற்றும் மத்திய ஒப்பந்தத்தை நிராகரித்தமை தொடர்பான அறிவிப்பை 33 வயதான கேன் வில்லியம்சன் விடுத்தார். இக் குழுவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய அ…
-
- 0 replies
- 177 views
- 1 follower
-
-
Published By: VISHNU 18 JUN, 2024 | 02:02 PM (நெவில் அன்தனி) ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவுக்கு வந்த சி குழுவுக்கான கடைசிக்கு முந்தைய ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட்களால் நியூஸிலாந்து வெற்றி கொண்டது. ஏற்கனவே சுப்பர் 8 சுற்று தகுதியை இழந்திருந்த நியூஸிலாந்துக்கு இந்த வெற்றியில் கிடைத்த ஆறுதலுடன் நாடு திரும்பவுள்ளது. நியூஸிலாந்தின் இந்த வெற்றியில் பந்துவீச்சாளர்கள் பெரும் பங்காற்றி இருந்தனர். பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் லொக்கி பேர்குசன் 4 ஓவர்கள் வீசி ஒரு ஓட்டமும் கொடுக்காம…
-
- 0 replies
- 341 views
- 1 follower
-
-
கடினமான தருணங்களில் ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட்டை வளர்த்த இந்தியாவும் பாகிஸ்தானும் - உத்வேகமளிக்கும் கதை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் “சுதந்திரமாக விளையாடுகிறோம். நாங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை. மிகப்பெரிய கிரிக்கெட் வரலாறு எங்கள் தேசத்துக்கும் இல்லை. அதனால் ஒவ்வொரு தவறிலிருந்தும் நாங்கள் கற்று வருகிறோம். 2019 உலகக் கோப்பையில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசத்திடம் தோற்றோம். 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்தோம். 4 ஆண்டுகளில் எங்களின் பலவீனத்தை அடையாளம் கண்டு அதை வலிமையாக மாற்றியுள்ளோம்” இது ஆப்கானிஸ…
-
- 0 replies
- 698 views
- 1 follower
-
-
T20 போட்டிக்கு மத்தியில் விசேட அறிப்பை வௌியிட்ட பிரபல வீரர்! இதுவே தனது இறுதி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி என நியூசிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட், அறிவித்துள்ளார். தற்போது 34 வயதாகும் போல்ட், உகாண்டாவுக்கு எதிரான போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை கூறியுள்ளார். "இது எனது கடைசி டி20 உலகக் கிண்ண போட்டி..." என்று போல்ட் கூறினார். இதன்படி, திங்கட்கிழமை பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான போட்டி அவரது கடைசி இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியாகும். இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைய நியூசிலாந்து அணி தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 275 views
- 1 follower
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய யாப்புக்கான சட்டமூலம் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்ரசிறி தலைமையிலான நிபுணத்துவக் குழுவினர் இந்த சட்ட மூலத்தைத் தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளித்தனர். இலங்கை கிரிக்கெட் சபை எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அமைச்சரவை உபகுழு கடந்த வருடம் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அதன் இறுதி அறிக்கையே இன்று கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவை உப குழுவில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மின்சக்தி, வலுசக்தி அமை…
-
- 0 replies
- 275 views
-
-
(ஆதவன்) வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைக்ளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சதுரங்கப் போட்டியில் முதலாம் இடம்பெற்று மானிப்பாய் மகளிர் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தைத் தனதாக்கியுள்ளது. இரண்டாமிடத்தை மகாஜனக் கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஸ்கந்தவரோதயக் கல்லூரியும், நான்காம் இடத்தை இளவாலை கன்னியர்மடம் மகா வித்தியாலயமும் பெற்றுக் கொண்டன. (ச) மானிப்பாய் மகளிர் சதுரங்கத்தில் சாதனை (newuthayan.com)
-
- 0 replies
- 416 views
-
-
09 JUN, 2024 | 08:14 PM நான் தேசிய மட்டத்தில் ஒரு சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக திகழ வேண்டும் என்று அவா இருக்கின்ற போதும் எனது வீட்டின் பொருளாதார சிக்கலால் கைகூடுமோ என்ற அச்சம் இருக்கின்றது, இருந்தும் உதவிகள் கிடைக்குமாயின் வட மாகாணத்துக்கு ஒரு தமிழ் பெண்மணியாக புகழை ஈட்டிக் கொடுப்பேன் என்ற நம்பிக்கை இருக்கின்றது என தேசிய மட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்டு இலங்கையின் வன்பந்து கிரிக்கெட் கழக மட்டத்தில் விளையாடி வரும் பேசாலை மன்.சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி இவ்வாறு தெரிவித்தார். பேசாலை மன்னார் சென்.பற்றிமா ம.ம.வித்தியாலய மாணவி சயிந்தினி வன்பந்து துடுப்பாட்ட வீராங்கனையாக வட மாகாணத்தில் முதல் பெண்மணியாக தெரிவு செய்யப்பட்ட…
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
லசித் மலிங்கா இந்த தமிழ் சிறுவனுக்கு பயிற்ச்சி அளித்தால் நல்ல எதிர் காலம் இருக்கு இந்த தமிழ் சிறுவனுக்கு நல்லா யோக்கர் பந்து மிகவும் வேகமாக போடுகிறார்........................................................
-
- 1 reply
- 364 views
-
-
Published By: DIGITAL DESK 7 04 JUN, 2024 | 05:28 PM (நெவில் அன்தனி) ரியல் மெட்றிட் கழகத்தில் பிரான்ஸ் தேசிய வீரர் 25 வயதான கிலியான் எம்பாப்பே இணையவுள்ளார். ஐரோப்பா சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் 15ஆவது சம்பியன் படத்தை வென்ற சூட்டோடு ரியல் மெட்றிட் கழகம், உலகின் தலைசிறந்த முன்கள கால்பந்தாட்ட வீரரான கிலியான் எம்பாப்பேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. ரியல் மெட்றிட் கழகத்தில் எம்பாப்வே இணைவார் என நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை ரியல் மெட்றிட் கழக முகாமைத்துவம் அடுத்த வாரம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
-
- 1 reply
- 344 views
- 1 follower
-