விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
சாதனை படைத்த மட்டக்களப்பு வீரர்கள் ! தேசிய போட்டி விளையாட்டு நிகழ்வுகளில் பங்குகொண்டு மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். தேசிய ரீதியான மல்யுத்த போட்டிகளில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் தொடர்ச்சியான சாதனைகளை பதிவுசெய்துவருகின்றனர். இதன்கீழ் கடந்த 17,18ஆம் திகதிகளில் விளையாட்டு அமைச்சின் விளையாட்டு உள்ளரங்கில் நடைபெற்ற பாடசாலை மட்ட மற்றும் கழகங்களுக்கிடையிலான போட்டிகளில் கிழக்கு மாகாண ரீதியாக கலந்துகொண்ட மட்டக்களப்பு வீரர்கள் கலந்துகொண்டு சாதனை படைத்துள்ளனர். மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் மாணவன் சிவநாதன் அனோஜன் 20வயது 74 கிலோவுக்கான பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று மாவட்டத்திற்கு பெருமைசேர்த்துள்ளார். அதேபோன்…
-
- 0 replies
- 484 views
-
-
டி 20 உலக கோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா?- பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அனுராக் தாக்குர் டி 20 உலககோப்பை போட்டிகள் சேப்பாக்கத்தில் நடைபெறுமா என்பதற்கு பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் விளக்கம் அளித்தார். சென்னையை நாங்கள் நிராகரிக்கவில்லையெனவும் அவர் தெரிவித்தார். 6 வது டி 20 உலக கோப்பை போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 11ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. போட்டிகள் கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, மும்பை, தர்மசாலா, டெல்லி, மொகாலி, நாக்பூர் ஆகிய 8 இடங்களில் நடத்தப்படும் என பிசிசிஐ கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. ஆனால் போட்டி நடைபெறும் இடங்களை 5 ஆக குறைக்குமாறு ஐசிசி வலியுறு…
-
- 0 replies
- 274 views
-
-
”நியூசிலாந்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கவில்லை” மகல January 23, 2016 இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக இழந்தது. இதனால் இலங்கை அணியில் சில மாற்றங்களை செய்யவும், மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் ஒருவரை தலைவராக நியமிக்கவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. இது பற்றி இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கூறுகையில், ”நியூசிலாந்து அணி வலிமையான அணி. அந்த அணியில் துடுப்பாட்ட வரிசையும், தாக்குதல் பந்துவீச்சும் சிறப்பாக உள்ள…
-
- 0 replies
- 344 views
-
-
இலங்கைக்கான சுற்றுப் பயணத்தை தவறவிட்டார் ரோரி பேர்ன்ஸ் Published by J Anojan on 2020-01-07 15:50:35 இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோரி பேர்ன்ஸ் இலங்கைக்கான சுற்றுப் பயணத்தில் கலந்து கொள்ள மாட்டார் என ஐ.சி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இங்கிலாந்து அணியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியை முன்னிட்டு, பயிற்சியில் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டார் ரோரி பேர்ன்ஸ். இதன் காரணமாக கடந்த திங்கட்கிழமை லண்டனில் ரோரி பேர்ன்ஸின் கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், அவரை நான்கு மாதங்கள் வரை ஓய்வில் இருக்குமாறும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் எதிர்வரும் மார்ச…
-
- 0 replies
- 413 views
-
-
ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் உசேன் போல்ட் ஓய்வு 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட். படம்:ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். 6 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உசேன்போல்ட் முன்னதாக 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸின் அ…
-
- 0 replies
- 468 views
-
-
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது, ரசிகர்கள் மீது பாதுகாப்பு பிரிவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பாந்தோட்டை - சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டிகளுக்காக நுழைவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ள பெருந்திரளான ரசிகர்கள் ஒன்று திரண்டிருந்த நிலையில், நுழைவு சீட்டுக்களை வழங்குவதற்கான அதிகாரிகள் குறைவாகவே இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுழைவு சீட்டுக்களை விரைவில் விநியோகிக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், உரிய முறையில் நுழைவு…
-
- 0 replies
- 479 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் சர்லோட் எட்வேர்ட்ஸ் இங்கிலாந்து பெண்கள் அணியின் தலைவியான சர்லோட் எட்வேர்ட்ஸ், தனது இருபதாண்டு விளையாடும் காலத்துக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதில், பத்தாண்டுகள் அணியின் தலைவியாக இருந்துள்ளார். வீரர்களிலோ அல்லது வீராங்கனைகளிலோ இங்கிலாந்து அணியை 200க்கு மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் தலைமை தாங்கிய முதலாமவராக கடந்த வருடம் மாறியிருந்தார். பெண்களின் விளையாட்டு நடைபெறுகின்றது என்றும் வீராங்கனையாகவும் அணித்தலைவியாகவும் தனது பங்களிப்பு தொடர்பில் மிகுந்த பெருமையுடன் தான் விடைபெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். 23 டெஸ்ட் போட…
-
- 0 replies
- 236 views
-
-
இந்திய அணி பயிற்சியாளர் பொறுப்புக்கு சந்தீப் பாட்டீல் விண்ணப்பம் அனுராக் தாக்கூருடன், சந்தீப் பாட்டீல் (வலது). | கோப்புப் படம்: பிடிஐ. மேலேறி வந்து டிரைவ் ஆடும் சந்தீப் பாட்டீல். | படம்: இந்து ஆர்கைவ்ஸ். முன்னாள் அதிரடி வீரரும், நடப்பு அணித் தேர்வுக்குழுத் தலைவருமான சந்தீப் பாட்டீல், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார். தேர்வுக்குழு தலைவர் பொறுப்பு அவருக்கு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. ஏற்கெனவே கென்யா, ஓமன் அணிகளுக்கும் பயிற்சியாளராக சந்தீப் பாட்டீல் இருந்துள்ளார். 199…
-
- 0 replies
- 369 views
-
-
முன்னை நாள் இங்கிலாந்து கிறிக்கட் தலைவன் ரொனி கிறக் சுவாசப்பையில் ஏற்பட்ட கான்சர் நோயால் காலமானார். http://www.youtube.com/watch?v=BKwZi_xS_7U
-
- 0 replies
- 360 views
-
-
200 மீ ஓட்டம் இறுதியில் உசைன் போல்ட்: அமெரிக்க வீரர் காட்லின் அதிர்ச்சி வெளியேற்றம் வெற்றியைக் கொண்டாடும் உசைன் போல்ட் | படம்: ஏஎஃப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் 200 மீ ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் மீண்டும் முதலிடம் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார். ஆனால் மற்றொரு ஜமைக்கா வீரர் யோஹன் பிளேக், அமெரிக்க வீரர் ஜஸ்டின் காட்லின் தோற்று வெளியேறினார். 3 அரையிறுதிகளில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் இறுதிக்குத் தகுதி பெறுவார்கள். உசைன் போல்ட் அனாயசமாக முன்னிலை பெற்று முதலிடம் பிடித்தார், அதாவது 19.78 விநாடிகளில் 200 மீ இலக்கை கடந்தார் உசைன் போல்ட், இவருக்கு அடுத்தபடியாக நெருக்கமாக வந்த கனடாவின் டி கிராஸ் 19.80 விநா…
-
- 0 replies
- 332 views
-
-
லசித் மாலிங்க வைத்தியசாலையில் அனுமதி கிரிக்கெட் வீரா் லசித் மாலிங்க, சுகயீனம் காரணமாக நேற்றிரவு கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் அனுஷ சமரநாயக்க தெரிவித்துள்ளார். எனினும் லசித் மாலிங்க டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிப்பதாகவும் அதற்கமைய சிகிச்சைகளை வழங்கி வருவதாகவும் வைத்தியசாலை வட்டரங்கள் தெரிவிக்கின்றனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=21167#sthash.Ed01UOxw.dpuf
-
- 0 replies
- 458 views
-
-
-
பூஜ்ஜியத்தில் பும்ரா... எதுல தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணி தற்போது பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. 2007 ல் இருந்து கேப்டனாக விளங்கிய தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியது, மீண்டும் சிக்ஸர் மன்னன் யுவராஜ் அணியில் சேர்க்கப்பட்டு தன் அதிரடியை வெளிப்படுத்தியது, ரஹானே பார்ம் இழந்து அணியில் இருந்து நீக்கப்பட்டது, கேதார் ஜாதவின் சதம், விராட் கோஹ்லியின் தலைமை என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்திய அணி தன் திறமையை பல வீரர்களின் துணைகொண்டு கச்சிதமாக காய் நகர்த்திதான் வருகிறது. ஆனால், இந்திய அணியில் இடக்கை பந்து வீச்சாளர் யாரும் அணியில் நிரந்திரமாக இல்லை என்பது தான் ஒரு குறை. இந்த இடத்திற்கு அவ்வப்போது…
-
- 0 replies
- 530 views
-
-
நீங்கள் வாழ்த்தியது உலகமே வாழ்த்தியதாக அர்த்தம்: சச்சினுக்கு கோலி ரீடுவிட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு விராட் கோலி பதில் டுவிட் அளித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன விராட் கோலி டெஸ்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சீசனில் (நியூசிலாந்து- 3, இங்கிலாந்து -5, வங்காள தேசம்-1) 9 போட்டிகளில் விளையாடிய அவர் மூன்று இரட்டை சதங்கள் உள்பட 1457 ரன்கள் குவித்துள்ளார். அதேவேளை…
-
- 0 replies
- 325 views
-
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் பார்வையாளர்களுக்கும் தடை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாவதற்கு இன்னும் இரு வாரங்கள் எஞ்சியுள்ள நிலையில் அனைத்து பார்வையாளர்களுக்கும் அமைப்பாளர்கள் தடை செய்துள்ளனர். அரசியல் அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்றுகள் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, வியாழக்கிழமை தலைநகருக்கு நான்காவது அவசரகால நிலையை அறிவித்த பின்னர் எடுக்கப்பட்ட இந்த முடிவு, டோக்கியோ ஒலிம்பிக்கை பார்வையிடுவதற்கான ரசிகர்களின் இறுதி நம்பிக்கையை இல்லாது செய்தது. ஜப்பானிய சுகாதார அமைச்சர் நோரிஹிசா தமுரா, விளையாட்டு வீரர்களுக்காக வருத்தப்படுவதாக தெரிவித்ததுடன், எனினும் இந்த முடிவு சரியானது என்றும் கூறி…
-
- 0 replies
- 577 views
-
-
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20-ல் 3 ரன்களில் வெற்றி: பதிலடி கொடுத்தது தென் ஆப்ரிக்கா தென் ஆப்பிரிக்கா வெற்றி. | படம்.| ஏ.எஃப்.பி. இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நல்ல பார்மில் இருந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜேசன் ராய், பீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக குற்றம் சாட்டி வெளியேற்றப்பட்டதால் (ரன் அவுட்) அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. கவுன்டி கிரிக்கெட் மைதானமான டான்டனில் நேற்று முன்தினம் நடந்த 2-வது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 174 …
-
- 0 replies
- 203 views
-
-
வெற்றி தோல்வியின்றி நிறைவுற்ற மென்சஸ்டர் யுனைடட், லிவர்பூல் போட்டி லிவர்பூல் அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் அணிக்கு எதிரான போட்டியை லீவர்பூல் அணி வெற்றி தோல்வியின்றி நிறைவு செய்தது. இரு அணிகளதும் முக்கிய வீரர்கள் இப்போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லிவர்பூல் கால்பந்து கழகத்தின் அரங்கமான அன்பீய்ல்ட் (Anfield) அரங்கில் நடைபெற்ற மென்சஸ்டர் யுனைடட் மற்றும் லிவர்பூல் கழகங்களிற்கிடையிலான போட்டியானது இரு அணியினதும் பாரிய போராட்டத்தின் பின் வெற்றி தோல்வியின்றி நிறைவுற்றது. மென்சஸ்டர் யுனைடட் அணியின் மருவானே பெய்லானீ (Maruane Felliani) பெவ்ல் போக்பா (Paul Pogba) மற்றும் லிவர்பூல் அணியின் ஸடீயோ மனேய் (Sadio Mane) ஆகியோர் …
-
- 0 replies
- 344 views
-
-
ஹர்பஜன் சிங் அளவுக்கு அஸ்வின் தாக்குதலாக வீசுவதில்லை: ஹெய்டன் கருத்து அஸ்வின், ஹர்பஜன் சிங். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். ஹர்பஜன் சிங் அளவுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல என்று ஆஸ்திரேலிய முன்னாள் தாக்குதல் தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன் தெரிவித்துள்ளார். “புள்ளி விவரங்கள் எப்போதும் பொய்த்தோற்றத்தை அளிக்கும். ஆனால் ரவிச்சந்திரன் அஸ்வினின் மைல்கல் அவர் மீதான மதிப்பை அதிகரித்துள்ளது. இன்னும் 5 ஆண்டுகள் அவர் ஆடினாலும் இவர் காலத்தின் கிரேட் வீரர்களில் ஒருவராக அஸ்வின் நினைவுகூரப்படுவார். ஹர்பஜன் போலவே அஸ்வினின் பந்து வீச்சுத் திறமை அபாரமானதுதான், ஆனால் ஹர்பஜன் அளவுக்கு அஸ்வின் தாக்குதல் பவுலர் அல்ல…
-
- 0 replies
- 309 views
-
-
வடக்கிற்கு பயணித்துள்ள ரக்பி விளையாட்டு ‘ரக்பியில் இணைவோம்’ (Get into Rugby) திட்டத்தின் ஐந்தாவது நிகழ்ச்சி யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி மற்றும் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானங்களில் பெப்ரவரி 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெற்றன. இலங்கையின் அனைத்து பகுதிகளுக்கும் ரக்பி விளையாட்டை விரிவுபடுத்தும் நோக்கில் இடம்பெறும் இந்த நிகழ்ச்சி பாடசாலை மாணவர்களுக்கு அப்பால் பெரியவர்கள் பலரையும் கவர்ந்தது. கடந்த வாரத்தின் ‘ரக்பியில் இணைவோம்’ நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்வாக (14) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவ அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் இளையவர்கள், பெரியவர்கள் உட்பட 300க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர்.…
-
- 0 replies
- 364 views
-
-
அதிவேக 100 விக்கெட்: ஆப்கான் ஸ்பின்னர் ரஷீத் கான் உலக சாதனை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின்னர் ராஷித் கான் - படம் : கெட்டி இமேஜஸ் மிகக் குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை ஆப்கானிஸ்தான் லெக் ஸ்பின் பந்துவீச்சாளர் ராஷீத் கான் இன்று படைத்தார். இதற்கு முன் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் 52போட்டிகளில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய நிலையில், ராஷித் கான் 44 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை சாய்த்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டியின் இறுதி ஆட்டம் ந…
-
- 0 replies
- 427 views
-
-
நம்புங்க… இனிமே நான் விளையாட வரமாட்டேன்: விடைபெற்றார் ஷாகித் அப்ரிடி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவையடுத்து ஷாகித் அப்ரிடிக்கு மரியாதை செலுத்திய ஐசிசி வேர்ல்டு லெவன் அணி வீரர்கள் - படம்உதவி: ஐசிசி ட்விட்டர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிதி முழுமையாக விலகுவதாக அறிவித்தார். இவ்வாறு அப்ரிடி அறிவிப்பது 6-வது முறையாகும். ஆனால், இந்த முறை கிரிக்கெட் விளையாட இனி வரமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். லண்டனில் நேற்று முன்தினம் நடந்த மேற்கிந்தியத்தீவுகள், ஐசிசி வேர்ல்டு லெவன் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது, அப்பிரிடிக்கு அனைத்து வீரர்களும் பிரியாவிடைகொடுத்த…
-
- 0 replies
- 773 views
-
-
பாதியில் முடிந்த தோனியின் கனவு டிசம்பர் 07, 2014. நிதிப்பற்றாக்குறை காரணமாக தோனியின் ‘மகி ரேசிங்’ அணிக்கு மூடுவிழா நடத்தப்பட உள்ளது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி, 33. இவர், ஒரு ‘பைக்’ பிரியர். பல்வேறு ரக பைக்குகளை வாங்கி குவித்துள்ளார். இந்த ஆர்வம் காரணமாக கடந்த 2012ல் ‘எம்.எஸ்.டி., ரேசிங் டீம் இந்தியா’ என்ற பெயரில் ஒரு ‘பைக்’ அணி வாங்கினார். சூப்பர்ஸ்போர்ட் உலக சாம்பியன்ஷிப் பந்தயங்களில், இந்த அணி பங்கேற்றது. முதல் சாம்பியன்: 2013ல் ‘மகி ரேசிங் டீம்’ என்று பெயர் மாற்றப்பட்டு, கெனான் சோபோக்லு, பேபியன் போரட் என, புதிய வீரர்களுடன் களம் கண்டது. பங்கேற்ற 13 சுற்றில் 6ல் வெல்ல, அணிக்கான சாம்பியன் பட்டம் கைப்பற்றியது. கடைசி போட்டி: இந்த ஆண்டு நடந்த இரண்டாவ…
-
- 0 replies
- 531 views
-
-
லார்ட்ஸ் மைதானத்துக்கு வெளியே ரேடியோ விற்ற அர்ஜுன் டெண்டுல்கர் அ-அ+ இந்திய 19 வயதுக்கு உள்பட்டோர் அணி வீரரும், சச்சின் டெண்டுல்கரின் மகனுமான அர்ஜுன் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தின் வெளியே ரேடியோ விற்பனை செய்துள்ளார். #ENGvIND #Lords #ArjunTendulkar லண்டன்: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான இந்திய அணியில் விளையாடி வருகிறார். தற்போது,…
-
- 0 replies
- 434 views
-
-
அயர்லாந்தின் இளைப்பாறிய பயிற்சியாளர் மர்மமான முறையில் இறந்து காணப்பட்டுள்ளார்.பாகிஸ்தானி
-
- 0 replies
- 1.1k views
-
-
ஃபிஃபா தயாரித்த முதல் படத்தை தியேட்டருக்கு பார்க்க வந்த ஒரே ஒரு ரசிகர்! சர்வதேச கால்பந்து சம்மேளனம் உருவான வரலாற்றை மையமாக வைத்து ஃபிஃபா தயாரிப்பில் வெளி வந்த 'யுனைடெட் ஃபேஷன்ஸ்' என்ற திரைப்படம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்த படத்தை பீனிஸ் டவுட்டன் நகரில் பிலிம்ஃபேர் திரையரங்கில் ஒரே ஒரு ரசிகர்தான் பார்க்க வந்துள்ளார். எனினும் அவருக்காக அந்த படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ஊழல் புகார் காரணமாக ஃபிஃபா தலைவர் ஜோசப் பிளேட்டர் அண்மையில் பதவி விலகினார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான், யுனைடெட் ஃபேஷன்ஸ் என்ற ஹாலிவுட் படம் தயாரிக்க நிதியுதவி செய்யப்பட்டது. ஃபிஃபா தயாரித்த முதல் படம் என்பதால் இந்த படத்துக்கு அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆன…
-
- 0 replies
- 429 views
-