விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7845 topics in this forum
-
கொரோனா வைரஸ் வகையைச் சேர்ந்த கொவிட் 19 நோய்த் தொற்று காரணமாக ஐரோப்பிய லீக் போட்டிகள் உட்பட அனைத்து சம்பியன்ஸ் லீக் போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய காற்பந்து சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் யூரோ 2020 க்கான பிளேஒப் போட்டிகள் ஏற்கனவே 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் 2021 ஆண்டு இடம்பெறவிருந்த மகளிர் யூரோ கிண்ணத்தற்கான தகுதிப் போட்டிகள் உட்பட ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த அனைத்து போட்டிகளும் மறு அறிவித்தல் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை இடம்பெற்ற ஐரோப்பிய கற்பந்து சங்கங்களின் நிர்வாக குழு உறுப்பினர்களுக்கிடையிலான கலந்…
-
- 0 replies
- 441 views
-
-
கசாப்புக் கடைக்காரனின் ஜீவகாருண்யப் பேச்சு -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, அவ்விடயம் தொடர்பான சர்ச்சைகளுக்குக் குறைவில்லை. இதற்கு முன்னரே, மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்துக்கான துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்ட போதும்கூட, இவ்வாறான நிலைமை தான் ஏற்பட்டிருந்தது. இலங்கை கிரிக்கெட் சபையைப் பொறுத்தவரை, குறிப்பாக அதன் தலைவர் திலங்க சுமதிபாலவைப் பொறுத்தவரை, இலங்கை அணியின் முன்னாள் வீரரான முரளி, இலங்கைக்கெதிரான தொடருக்கு முன்பாக, அவுஸ்திரேலிய அணியுடன் இணைந்து செயற்படுவது, நெறிமுறைகளுக்கு எதிரானது. …
-
- 0 replies
- 452 views
-
-
ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்: யுவராஜ் சிங் கணிப்பு 'ஐபிஎல்'என்றழைக்கப்படும் இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி ஏலத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர வீரரும், ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றால், அவர் பல மில்லியன் அளவுக்கு வருமானம் ஈட்ட முடியுமென்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார். ' 'ஐபிஎல்லில் விளையாடினால் பணத்தை அள்ளிச் செல்வார் பென் ஸ்டோக்ஸ்' இந்தியாவின் பெங்களூரூ நகரில் வரும் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று துவங்குவதாக இருந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் பிப்ரவரி மாதத்தின் மூன்றாவது வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், 20…
-
- 0 replies
- 486 views
-
-
ஐபிஎல் தொடருக்கு அதிக முக்கியத்துவம் – அப்ரீடியின் டுவிட்டர் பதிவினால் சர்ச்சை ஐபிஎல் தொடருக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி அதிருப்தி தெரிவித்துள்ளார் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்இ 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நேற்றுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடந்து முடிந்தது. இதில்இ முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என வெற்றிபெற்று சமநிலையில் இருந்ததால் கடைசி ஒருநாள் போட்டி மீது கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால்இ இரண்டாவது போட்டியில் பங்கேற்ற தென்னாப்பிர…
-
- 0 replies
- 367 views
-
-
முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை 08.06.2017 அன்று ஓமந்தை மத்தியகல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது. வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து கொண்ட போட்டியில் கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது. இந்த வெற்றியால் பாடசாலையினுடைய பழையமாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அண்மைக்காலமாக இந்தப்பாடசாலை விளையாட்டுக்களில் சாதனைகள் படைத்து வருவவதுடன் பாடசாலையினுடைய 43 வருட வரலாற்றில் முதற்தடவையாக பெருவிளையாட்டுக்களில், தேசிய வ…
-
- 0 replies
- 467 views
-
-
இந்த இலங்கை வீரரைப் போல் ஆட முயற்சிக்கிறேன்: சங்ககாரா சொன்ன நெகிழ்ச்சியான பதில் இந்திய பெண்களுக்கான கிரிக்கெட் அணியில் ஒளிரும் நட்சத்திங்களில் ஒருவரான ஸ்மிரிதி மந்தனா தனது துடுப்பாட்டத்திற்கு முன்மாதிரி முன்னாள் இலங்கை தலைவரான குமார் சங்ககாரா என தெரிவித்திருந்தார். அவரது துடுப்பாட்டத்தைக் கண்ட பலரும் இந்திய அணியின் முன்னாள் வீரரான சவுரவ் கங்குலி போன்று இருப்பதாக கூறி வருகின்றனர். இது குறித்து ஸ்மிரிதி மந்தனா கூறுகையில், நான் கங்குலின் ஆட்டத்தை ரசிப்பேன் , அவரது ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் சங்ககாரவின் துடுப்பாட்டத்தை பார்த்து ஆடுவது எனகு சிறு வயதிலியருந்தே பழகிவிட்டது. சங்ககாரவை போல் கவர் ட்ரைவ் ஆட முயற்ச்சி செய்து வருகிறேன். சங்க…
-
- 0 replies
- 464 views
-
-
இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக தகுதியான எட்டு கிரிக்கெட் ஆளுமைகள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவி என்பது அண்மைய காலங்களில் கிரிக்கெட் உலகில் விரும்பப்படாத ஒரு பொறுப்பாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏனெனில் கடந்த 7 வருடங்களில் (அதாவது 2011 ஆம் ஆண்டிலிருந்து) இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்க வேண்டிய பயிற்சியாளர்கள் 10 பேர்கள் வரையில் மாற்றப்பட்டுள்ளனர். பயிற்சியாளர்கள் அடிக்கடி ஏன் மாற்றப்படுகின்றனர் என்கிற கேள்வியோடு இலங்கை அணியின் போராடும் தன்மையும் இப்போதைய நாட்களில் குறைந்து வருவதை பார்க்கலாம். இவ்வாறான நிலைமைகளை மாற்றி இலங்கை கிரிக்கெட் அணியின் நிரந்தர பய…
-
- 0 replies
- 418 views
-
-
ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற விரும்புகிறார் நெய்மர் ரியல் மாட்ரிட் அணியுடன் ஓய்வு பெற நெய்மர் விரும்புகிறார். இதனால்தான் பார்சிலோனாவில் இருந்து பி.எஸ்.ஜி.க்கு அவர் மாறினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசில் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரரான நெய்மர் (ஜூனியர்) திகழ்ந்து வருகிறார். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களான மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோவுடன் இணைந்து பேசப்படுகிறார். ஆரம்ப கட்டத்தில் பிரேசில் நாட்டின் கிளப்பில் இருந்து புகழ்பெற்ற பார்சிலோனா அணிக்கு மாறினார். மெஸ்சியுடன் இணைந்து பார்சிலோனாவின் நம்பிக்கை வீரரானார். இவரை விட்டுக்கொடுக்க மனம் இல்ல…
-
- 0 replies
- 292 views
-
-
மாறுவேடத்தில் சென்று கங்குலி ருசித்த கபாப்: தனியே செல்லாதீர்கள், அன்புடன் கண்டித்த பர்வேஸ் முஷாரப் சவுரவ் கங்குலி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் - கோப்புப் படம் பாகிஸ்தானில், மாறுவேடத்தில் சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கபாப், பிரியாணி சாப்பிட்டுள்ளார். தனியாக செல்லாதீர்கள் என்று முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் தொலைபேசியில் கங்குலியை அழைத்து கண்டித்துள்ள ஸ்வரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தனது சுயசரிசையை எழுதியுள்ளார். “ ஏ சென்சுரி இஸ் நாட் எனப்” என்ற தலைப்பில் அந்த நூல் விரைவில் வெளிவர இருக்கிறது. அந்த …
-
- 0 replies
- 311 views
-
-
தொடர்ந்து செயலற்ற கேப்டனாக இருக்கிறார் தோனி: இயன் சாப்பல் 2011ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் ஆகியவற்றை இழந்த பிறகு தற்போது 3-1 என்று தோல்வி தழுவியதற்கு தோனியின் செயலற்ற கேப்டன்சியும் பெரிதளவு பங்களிப்பு செய்தது என்று இயன் சாப்பல் கூறியுள்ளார். இது குறித்து அவர் ஈஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ இணையதளத்தில் எழுதியுள்ள பத்தியில் கூறியிருப்பதாவது: கிரிக்கெட் எழுத்தாளர் மார்டின் ஜான்சன் என்பவர் இங்கிலாந்தின் தொடர் தோல்விகளை வர்ணிக்கும் போது “இங்கி்லாந்து அணியிடத்தில் 3 விஷயங்கள் தவறு. அவர்களால் பேட் செய்ய முடியாது, பந்து வீச முடியாது, பீல்ட் செய்ய முடியாது” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை இப்போது தோனி தலைமையிலான இந்திய அணிக்கும் குறிப்ப…
-
- 0 replies
- 429 views
-
-
ஆஸ்திரேலியா - அன்று 90’ஸ் கிட்ஸ்களின் ஆதர்சம்... இன்று? 2015 வேர்ல்டு கப். சிட்னியில இந்தியா - ஆஸ்திரேலியா செமி ஃபைனல். அதுவரைக்கும் இந்தியா ஒரு மேட்ச் கூடத் தோக்கல. ஆனாலும் ஒரு பயம். அந்த பயம் 2011 உலகக்கோப்பை குவாட்டர் ஃபைனல்லயும் இருந்துச்சு. இந்த செமி சிட்னியில, அந்த காலிறுதி அஹமதாபாத்ல. வெளியூர்ல ஆடுனப்போ இருந்த பயம் இந்தியால ஆடுனப்போவும் இருந்துச்சு. 2011 செமி ஃபைனல், ஃபைனல் மேட்ச் அப்பெல்லாம்கூட இல்லாத பயம், அந்த குவாட்டர் ஃபைனல்ல இருந்துச்சு. மேட்ச் முடியுற வரைக்கும் அந்த பயம் கொஞ்சம் கூட குறையல. மேட்ச்சோட எந்த தருணத்துலயும் கம்ஃபர்டபிளா ஃபீல் பண்ண முடியல. இதுக்கு ஒரே காரணம் - அந்த 2 மேட்ச்லயும் இந்தியா எதிர்த்து விளையாடுனது ஆஸ்திரேலியா. அந்த பயம…
-
- 0 replies
- 546 views
-
-
திரைப்படமாகிறது தோனியின் வாழ்க்கை: சுஷாந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்கிறார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை திரைப்படமாக வெளிவரவுள்ளது. இதில் தோனியாக நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிக்கிறார். ‘M.S. Dhoni - The Untold Story’ என்ற இந்தத் திரைப்படத்தின் அறிமுக போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படம் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின்போது வெள்ளித்திரைக்கு வரலாம் என்று தெரிகிறது. நிதி ஆதாரப் பிரச்சினைகளில் இந்தத் திரைப்பட முயற்சி சிக்கியிருப்பதாக செய்திகள் வந்தன. இன்று இத்திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியானதையடுத்து தோனியின் மனைவி சாக்ஷி தோனி தனது ட்விட்டரில், “கடந்த சில நாட்களாக உலவி வந்த வதந்திகள் முடிவுக்கு வந்தன. அவையனைத…
-
- 0 replies
- 461 views
-
-
யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்டத்திடலில் ஆதிக்கம் செலுத்திய மட்டக்களப்பு சென். மைக்கல்ஸ் கல்லூரி இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கம் நடாத்தும் பதினைந்து வயதுக்கு உட்பட்ட பாடசாலை வீரர்களிற்கான கூடைப்பந்தாட்டப் போட்டி இந்த வருடம் வடக்கு கிழக்கு இணைந்த முறையில் முதல் முறையாக யாழ் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத் திடலில் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த எட்டு பாடசாலைகள் மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பாடசாலையும் போட்டி நிரலில் காணப்பட்ட போதும் மொத்தமாக எட்டு அணிகள் மாத்திரம் போட்டியில் பங்குபற்றியிருந்தன. 10.08.2018 அன்று காலை 7 மணியளவில் போட்டிகள் ஆரம்பமாகி மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றன. போட்டித் தொடரில் காற…
-
- 0 replies
- 350 views
-
-
கடந்த வருட கிரிக்கெட்டில் 2014ஆம் ஆண்டில் மொத்தம் 42 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் அவுஸ்ரேலியா, நியூஸ்சிலாந்து மற்றும் இலங்கை அணிகள் அதிகமான வெற்றிகளை பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டில் நிறைய தோல்விகளை சந்தித்த அணி என்றால் இந்தியா தான். 10 டெஸ்டில் விளையாடி ஒன்றில் வெற்றியும், ஆறில் தோல்வியும், மூன்றில் வெற்றி தோல்வி இன்றி முடித்துள்ளது. அந்த ஒரு வெற்றி, லண்டன் லார்ட்சில் இங்கிலாந்துக்கு எதிராக கிடைத்தவை ஆகும். டெஸ்டில் அதிக ஓட்டங்கள் குவித்துள்ள முதல் 10 துடுப்பாட்ட வீரர்களில் இலங்கை அணியினைச் சேர்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் இந்திய வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை அணியின் வீரரான சங்கக்கார பங்களாதேஷ்சிற்கு எதிராக 319 ஓட்டங்களையும், நியூசிலாந்து அண…
-
- 0 replies
- 472 views
-
-
October 22, 2018 இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைமை நிதி அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையில்; இடம்பெறவிருந்த பாரிய நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் அவர் இன்று இரவு அவர் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற போட்டித் தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ய முற்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 259 views
-
-
கேட்ச்சுக்கு முயன்று மோதியதில் விபரீதம்: பெங்கால் இளம் கிரிக்கெட் வீரர் மரணம் வங்காளத்தைச் சேர்ந்த அங்கிட் கேஷ்ரி என்ற வீரர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பந்தை கேட்ச் பிடிக்கச் சென்ற போது சவுரப் மொண்டால் என்ற வீரருரன் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தலையில் பலத்த அடிபட்டு இன்று காலை, சிகிச்சை பலனின்றி, மரணமடைந்தார். இவருக்கு வயது 20. மைதானத்தில் மயங்கிச் சரிந்த இவரது மூச்சை மீட்க மற்றொரு வீரர் முயற்சி செய்தார். ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக இவர் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன்ன்றி இன்று (திங்கட் கிழமை) மாரடைப்பால் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை வங்காள கிரிக்கெட் லீக் டிவிஷன் 1 போட்டியில் கிழக்கு வங்காள அணியும், பவானிப…
-
- 0 replies
- 280 views
-
-
'' எனக்கு பின்னால் சுரேஷ் ரெய்னா இருப்பதால் தனி தைரியம் பிறந்தது!'' -தோனி வங்கதேசத்துக்கு எதிராக நடந்த தொடரில் சுரேஷ் ரெய்னா 6வது நிலையில் களமிறங்கினார். இதனால் இந்திய அணிக்கு அந்த இடத்தில் விளையாட ஒரு அனுபவ வீரர் கிடைத்துள்ளதாக கேப்டன் தோனி கூறியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி முடிந்த பிறகு தோனி செய்தியாளர்களிடம் கூறுகையில், '' என்னை பொறுத்த வரை 4-வது விக்கெட்டுக்கு அதிகமாக களமிறங்கியதில்லை. 5 வீரர்களுக்கு அப்புறமும் அனுபவம் வாய்ந்த ஒரு வீரர் தேவைப்பட்டார்.. இதனால்தான் சுரேஷ் ரெய்னாவை பின்னால் களமிறக்க முடிவெடுத்தோம். இதன் மூலம் 6-ம் நிலையில் ஒரு அனுபவ வீரர் ரெய்னா மூலம் அணிக்கு கிடைக்கிறார். இவரைப் போலவே 7-வது விக்கெட்டாக களமிறங்க நல்ல வீ…
-
- 0 replies
- 270 views
-
-
பெர்த்தில் ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷிடம் கவுதம் கம்பீர் தீவிர பயிற்சி ஜெப் மார்ஷ், ஜஸ்டின் லாங்கர், கவுதம் கம்பீர். இந்திய அணியில் மீண்டும் நுழைய தீவிரமாக முயற்சி எடுத்துவரும் கவுதம் கம்பீர், இதற்காக, ஆஸ்திரேலியா சென்று ஜஸ்டின் லாங்கர், மற்றும் ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் பயிற்சியில் ஈடுபட்டார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் இட்டுள்ள பதிவில், “பெர்த்தில் ஜெஃப் மார்ஷ், மற்றும் லாங்கருடன். மிகச்சிறந்த மனிதர்கள், என்னை வரவேற்றனர். பயிற்சிக்காக நான் இங்கு இருக்கக் காரணமான இருவருக்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது ஜஸ்டின் லாங்கர், ஜெஃப் மார்ஷ் மேற்பார்வையில் அவர் தனது பயிற்சி முறைகளில் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் கலப்பு போர்க்கலைகள…
-
- 0 replies
- 368 views
-
-
ஆஸி., அணி அறிவிப்பு சிட்னி: வங்கதேச தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரர்களான ஆன்ட்ரூ பேகேட், கேமிரான் பான்கிராப்ட் இடம் பிடித்துள்ளனர். அடுத்த மாதம் வங்கதேசம் செல்லும் ஆஸ்திரேலிய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சிட்டகாங்கில் வரும் அக்., 9ல் துவங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் மிர்புரில் அக்., 17ல் ஆரம்பமாகிறது. டெஸ்ட் தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி, வங்கதேச கிரிக்கெட் போர்டு லெவன் அணியுடன் மூன்று நாள் (அக்., 3–5) பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட அணியை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது. இதில் அறிமுக வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் ஆன்ட்ரூ பேகேட், துவக்க வீரர் கேமிரான் பான்கிராப்ட் தேர்வு ச…
-
- 0 replies
- 305 views
-
-
படத்தின் காப்புரிமை Gareth Copley-IDI/IDI via Getty Images ஜுலை 14, 2019 - இனிவரும் ஆண்டுகளில் கிரிக்கெட் உலகம் எண்ணற்ற முறைகள் நினைவுகூரும் நாளாக அமைய ஏராளமான வாய்ப்புகள் உண்டு. இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற பரபரப்பு மிகுந்த உலகக்கோப்பை இறுதி போட்டி டை ஆனதால், சூப்பர் ஓவர் முறையில் ஆட்டத்தின் முடிவை நிர்ணயிக்க தீர்மானிக்கப்பட்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 15 ரன்கள் எடுக்க, 16 ரன்கள் எடுத்தால் நியூசிலாந்து உலகக்கோப்பையை வெல்லும் என்ற நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்…
-
- 0 replies
- 900 views
-
-
ஹர்பஜன் கிரிக்கெட் விதிகளை மீறுவது இது முதல் தடவையல்ல [31 - January - 2008] [Font Size - A - A - A] இனவெறிக் குற்றச்சாட்டு விவகாரத்தில் இந்திய வீரர் ஹர்பஜன்சிங் அபராதத்தோடு தப்பித்திருக்கிறார். ஆனால் ஹர்பஜன்சிங் ஐ.சி.சி.விதியை மீறுவது இது ஒன்றும் புதிதல்ல. கிரிக்கெட்டை ஆக்ரோஷமாகவும், உணர்ச்சிமயமாகவும் ஆடக்கூடிய வீரர்களில் ஹர்பஜன் சிங்கும் ஒருவர். இதுவே அவருக்கு ஆபத்தையும் விளைவித்து விடுகிறது. 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் திகதி ஷார்ஜாவில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது பொண்டிங் விக்கெட்டை வீழ்த்திய அவர் உணர்ச்சியின் வேகத்தில் சில வார்த்தைகளைக் கொட்டி விட்டார். இதற்காக அவருக்கு போட்டி நடுவர் தலாத் அலி 50 சதவீதம் அபராதமும் ஒரு ஒரு நாள் போட்…
-
- 0 replies
- 918 views
-
-
என் வழி தனி வழி.. ரஜினியின் பன்ச் வசனத்தை அடிக்கடி கூறி சிலாகிக்கும் டோணி! சென்னை: கிரிக்கெட் வீரர் டோணி என் வழி தனி வழி என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனத்தை கூறி வருவதாக பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பஞ்ச் வசனங்கள் பலருக்கும் பிடித்திருக்கும். அதில் ஒரு குறிப்பிட்ட வசனம் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பிடித்துள்ளது தற்போது தான் தெரிய வந்துள்ளது. இது குறித்து பந்துவீச்சாளர் அஷ்வின் கூறுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தில் பெரிய மனிதர். அவரை பலரும் காமெடி சூப்பர் ஸ்டார் என்கிறார்கள். இதை தென்னிந்தியா பக்கம் சென்று கூற முடியாது. உண்மையில் அவர் நல்ல நல்ல விஷயங்களை கூறுபவர். டோணி அடிக்கடி ரஜினியின் பஞ்ச் வசனமான எ…
-
- 0 replies
- 336 views
-
-
இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பு பி. சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த நிலையில் மழை காரணமாக போட்டியின் நாணயச்சுழற்சி தாமதமாகியது. இன்றைய போட்டியில் இலங்கை அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்ஜயவுக்கு பதிலாக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் டில்ருவன் பெரேரா இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது . http://www.dailyceylon.com/188267/
-
- 0 replies
- 726 views
-
-
கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் கழகங்களுக்கிடையிலான AIA பிரீமியர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 14 கழகங்கள் பங்கேற்கும் AIA பிரீமியர் கிரிக்கெட் தொடர் 11 நாட்கள் வெவ்வேறு மைதானங்களில் இடம்பெறுகின்றது. குழுமட்ட போட்டிகள் அனைத்தும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி வரை இடம்பெறும். முதலாவது அரையிறுதிப் ப…
-
- 0 replies
- 474 views
-
-
சங்காவை துரத்தும் டோனி January 18, 2016 விக்கட் கீப்பராக செயல்பட்டடுவரும் டோனி, ஜார்ஜ் பெய்லியை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கட் கீப்பர்கள் வரிசையில் டோனி (415 போட்டி, 138 ஸ்டம்பிங்) 2வது இடம்பிடித்தார். இலங்கை அணியின் சங்கக்காரா 594 போட்டிகளில் 139 ஸ்டம்பிங்கள் செய்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது http://www.onlineuthayan.com/sports/?p=7975
-
- 0 replies
- 470 views
-