விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
புதிய சாதனையுடன் பல்கலைக்கழக பளு தூக்கல் சம்பியனாகிய யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் இந்த ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பளு தூக்கல் சுற்றுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் பல்கலைக்கழக வணிகப்பீட அரங்கில் இடம்பெற்று நிறைவுற்றது. இப் போட்டிகளில் பங்கேற்றிருந்த யாழ் பல்கலை மாணவன் சாமுவேல் துஷாந்த் புதிய சாதனை ஒன்றினை நிலை நாட்டி சம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவரான குணசீலன் சாமுவேல் துஷாந்த், குறித்த பளு தூக்கல் சுற்றுப் போட்டிகளில், 105 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்று ஸ்னேட்ச் (Snatch) முறையில் அதிகபட்சமாக 100 கிலோ கிராம் எடையினை தூக்கியதோடு, கிளின…
-
- 0 replies
- 373 views
-
-
இங்கிலாந்து விஜயம் இலங்கை அணிக்கு அதிக பாடங்களையே தந்துள்ளது பாகிஸ்தான் அணியுடனான தோல்வியின் பின்னர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறிய இலங்கை அணி, இன்று (புதன்கிழமை) நாடு திரும்பியது. நாட்டை வந்தடைந்தவுடனேயே, இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. குறித்த ஊடவியலாளர் மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்க சுமதிபால, “இந்த சம்பியன்ஸ் கிண்ணத் தொடரானது, எமக்கு சிறு கவலையைத் தருகின்றது. ஏனெனில், எமது அணி அரையிறுதி வாய்ப்பினை தவறவிட…
-
- 2 replies
- 582 views
-
-
100 சதங்கள் அடித்தார் சங்ககரா... குவியும் வாழ்த்துகள்! இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககரா, 'ஃபர்ஸ்ட்- கிளாஸ் மற்றும் லிஸ்ட்- ஏ' போட்டிகளில் 100 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். சங்ககரா, கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார். ஆனாலும், அவர் தொடர்ந்து ஃபர்ஸ்ட்- கிளாஸ் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவந்தார். இந்த நிலையில்தான், அவர் இங்கிலாந்தின் சர்ரே அணி சார்பில் விளையாடிய போட்டியில் 121 ரன்கள் ஸ்கோர் செய்து, 100-வது சதமடித்து சாதனை புரிந்துள்ளார். கிரிக்கெட் வரலாற்றில், 100 சதங்கள் அடிக்கும் 37-வது நபர்தான் அவர் என்பது, இந்தச் சாதனையின் வீச்சைப் பற்றி அறியச்செய்யும். …
-
- 2 replies
- 642 views
-
-
உலகக் கோப்பைக்கு ஈரான் தகுதி உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று ஆட்டத்தில் உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக கோல் அடித்த மகிழ்ச்சியில் ஈரான் வீரர்கள் சர்தார் அஸ்மவுன், மெஹ்தி தாரேமி. படம்: கெட்டி இமேஜஸ் 2018-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாட ஆசிய கண்டத்தைச் சேர்ந்த ஈரான் அணி தகுதி பெற்றுள்ளது. பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன் 14 முதல் ஜூலை 15 வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ஆசிய அணிகளுக்கு இடையோன தகுதிச் சுற்று ஆட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் ஈரான் - உஸ்பெகிஸ்தான் அணிகள் மோதி…
-
- 0 replies
- 355 views
-
-
மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கிறிஸ்மான் அட்லெடிகோ மாட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிறிஸ்மான் மான்செஸ்டர் யுனைடெட் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்மான். இவர் ஸ்பெயின் நாடடின் முன்னணி கால்பந்து கிளப்பான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசன் முடிந்த பிறகு இங்கிலாந்து நாட்டின் தலைசிறந்த கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறுவார் என்ற செய்தி வந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது ‘‘மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்ல 60 சதவீதம…
-
- 0 replies
- 247 views
-
-
ஆறாவது தடவையாக ஹமில்டன் வென்றார் கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுமையாக ஆதிக்கம் செலுத்திய, மெர்டிசிடிஸ் அணியின் ஐக்கிய இராச்சிய ஓட்டுநரான லூயிஸ் ஹமில்டன், கனேடியன் கிரான்ட் பிறிக்ஸில், தனது ஆறாவது வெற்றியைப் பெற்றுக் கொண்டார். தனது ஆதர்ச நாயகனான அயூட்டன் செனாவின், 65 பந்தயங்களை முதலிடத்தில் ஆரம்பித்ததை, கடந்த சனிக்கிழமை (03) சமப்படுத்தியிருந்த ஹமில்டனுக்கு, இது 10ஆவது பந்தயம் என்ற நிலையிலேயே, அவற்றில் ஆறில் வெற்றிபெற்றுள்ளார். பந்தயத்தை ஐந்தாவதாக ஆரம்பித்த றெட் புல் அணியின் நெதர்லாந்து ஓட்டுநரான மக்ஸ் வெர்ஸ்டப்பன், அபாரமாக காரைச் செலுத்தி, பந்தயத்தை இரண்டாவதாக ஆரம்பித்…
-
- 0 replies
- 700 views
-
-
ஃபிரெஞ்ச் ஓபனில் வரலாற்று சாதனை: யார் இந்த ரஃபேல் நடால்? பாரீஸ் நகரில் ஞாயிறுக்கிழமை நடந்த ஃபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பிரிவு இறுதியாட்டத்தில், 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில், ஸ்டான் வாவ்ரின்காவை தோற்கடித்து ரஃபேல் நடால் 10-ஆவது முறையாக ஃபிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஃபிரெஞ்ச் ஓபன் பட்டத்தை 10-ஆவது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை 2005, 2006, 2007, 2008, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2017 ஆண்டுகளில் ஃபிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் நடால். கிராண்ட்ஸ்லாம் டென்னிஸில் நடால் வெ…
-
- 1 reply
- 691 views
-
-
முதல் ஒரு நாள் போட்டி ஆப்கானிஸ்தானிடம் வெஸ்ட்இண்டீஸ் அதிர்ச்சி தோல்வி செயிண்ட் லூசியாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்தது. செயிண்ட்லூசியா: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி நேற்று செயிண்ட் லூசியாவில் நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 212 ரன் எடுத்தது. ஜாவித் ஆட்டி 81 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய வெஸ்ட்இண்டீஸ் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சு…
-
- 2 replies
- 525 views
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: வீனஸ் வில்லியம்ஸ் 2-வது சுற்றுக்கு தகுதி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கையை வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் 10-ம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா) முதல் சுற்றில் சீனாவை சேர்ந்த வாங்கை எதிர்கொண்டார். இதில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். …
-
- 20 replies
- 2.6k views
-
-
சொந்த மண்ணில் உசைன் போல்ட்டுக்கு உணர்ச்சிகரமான பிரியாவிடை படத்தின் காப்புரிமைGETTY IMAGES தன்னுடைய சொந்த மண்ணான ஜமைக்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடந்த 100 மீட்டர் இறுதிப்போட்டில் வென்ற உசைன் போல்ட், விளையாட்டு அரங்கம் நிறைந்திருந்த மைதானத்தில் இருந்து உணர்ச்சிகரமான பிரியாவிடை பெற்றிருக்கிறார். இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லண்டனில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டியோடு தன்னுடைய ஒப்பற்ற தடகள தொழிற்முறை வாழ்க்கையை நிறைவுசெய்ய இருக்கும் 30 வயதான உசைன் போல்ட், கிங்ஸ்டனில் 30 ஆயிரம் ரசிகர்களுக்கு முன்னால் பிரியாவிடை பெற்றுள்ளார். எட்டு ஒலிம்பிக் தங்கப்பதக்கங்கள் வென்றுள்ள உசைன் போல்ட் 2017-ஆம் ஆண்டு தன்னுடைய முதலாவது 100 மீட்டர் ஓ…
-
- 0 replies
- 329 views
-
-
இரண்டாவது முறையாகவும் இடம்பெறவுள்ள கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் யாழ்ப்பாணத்தில் யாழ் கிறாஸ்ஹொப்பேர்ஸ் விளையாட்டுக் கழகமானது தமது கழகத்தின் முன்னாள் வீரர்களான ராஜசிங்கம் றொஹான் மற்றும் சிவசங்கர் ஆகியோரது ஞாபகார்த்தமாக நடாத்திவரும் அணிக்கு 06 பேர் விளையாடும் 05 ஓவர்கள் கொண்ட கிறாஸ்ஹொப்பேர்ஸ் பிறீமியர் லீக் (ஜி.பி.எல்) போட்டித் தொடர் இரண்டாவது முறையாக இவ்வருடமும் மிகவும் கோலாகலமாக இடம்பெறவிருக்கின்றது. ரொஹான் மற்றும் சங்கர் ஆகியோர் 1989ஆம் ஆண்டு கிறாஸ்ஹொப்பேர்ஸ் அணிக்காக முரசொலி கிரிக்கெட் கிண்ணத்தினைப் பெற்றுக்கொடுத்ததில் முக்கிய பங்காளிகளாவர். முரசொலி கிரிக்கெட் தொடர் 6 பேர் விளையாடும் 5 ஓவர்கள் கொண்ட போட்டியாகவே அமை…
-
- 0 replies
- 610 views
-
-
காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்றில் இருந்து ஷரபோவா விலகல் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக விம்பிள்டன் தகுதிச் சுற்று தொடரில் இருந்து மரியா ஷரபோவா விலகியுள்ளார். ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. அவருக்கு ஊக்கமருந்து பயன்படுத்திய விவாரத்தில் சுமார் 15 மாதம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. பின்னர் டென்னிஸ் அரங்கில் கால் எடுத்து வைத்தார். பிரெஞ்ச் ஓபனுக்கு முன்பாக ரோமில் நடைபெற்ற டென்னிஸ் தொடரின்போது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் பர்மிங்காமில் நடைபெறும் தொடரிலும், கிராண்ட்ஸ்லாம் தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த விம…
-
- 0 replies
- 212 views
-
-
முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அ.த.க.பாடசாலை வடமாகாணத்தில் சாதனை 08.06.2017 அன்று ஓமந்தை மத்தியகல்லூரியில் நடைபெற்ற 17 வயதுப்பிரிவு எறிபந்தாட்டப்போட்டியில் முல்லைத்திவு கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாணத்தில் சாதனை படைத்துள்ளது. வட மாகாணத்தின் பிரபல பாடசாலைகள் பல கலந்து கொண்ட போட்டியில் கோட்டைகட்டியகுளம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை அணி இரண்டாம் இடத்தைப்பெற்றுள்ளது. இந்த வெற்றியால் பாடசாலையினுடைய பழையமாணவர்கள் பெற்றோர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். அண்மைக்காலமாக இந்தப்பாடசாலை விளையாட்டுக்களில் சாதனைகள் படைத்து வருவவதுடன் பாடசாலையினுடைய 43 வருட வரலாற்றில் முதற்தடவையாக பெருவிளையாட்டுக்களில், தேசிய வ…
-
- 0 replies
- 467 views
-
-
தோல்விக்குப் பிறகு ஜோகோவிச் பேசியதன் அர்த்தம் என்ன? டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு! இன்னமும் ரோஜர் ஃபெடரர் களத்தில்தான் உள்ளார். நடாலும் உள்ளார். இந்த நிலையில் ஓய்வு பெறுவது குறித்து 30 வயது ஜோகோவிச் சூசகமாகப் பேசியுள்ளதாக டென்னிஸ் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். உலகின் 7-ஆம் நிலை வீரரான ஆஸ்தீரியாவைச் சேர்ந்த டொமினிக் தீம், அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். முன்னதாக, இருவருக்கும் இடையே விற…
-
- 1 reply
- 515 views
-
-
ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த தமிழர்! (படங்கள்) அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், பாலாஜி ஆகியோருடன் ஜூனியர் மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர் வெங்கட்ராமன் கணேசன், ஜெர்மனி கிரிக்கெட் அணியில் தற்போது இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத்துறையிலும் பணியாற்றி வரும் 32 வயது கணேசன், பணி காரணமாக 2012-ல் ஜெர்மனிக்கு மாற்றலானார். அங்குத் தொடர்ந்து கிரிக்கெட்டைத் தொடர்ந்தவர் தற்போது ஜெர்மனி கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். ஐரோப்பிய சாம்பியன்ஷிப் டிவிஷன் ஒன் ஐசிசி போட்டியில் பங்குபெறும் ஜெர்மனி அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்…
-
- 0 replies
- 643 views
-
-
"எப்படி பந்து வீசினாலும் அடித்த சேவாக்" - அஸ்வின் பகிர்ந்த சுவாரஸ்ய நினைவுகள் வீரேந்திர சேவாக் தன்னை மனம் தளரவைத்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இணைய நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டியளித்த போது, வலைப்பயிற்சியில் வீரேந்திர சேவாக் ஆட தான் பந்து வீசிய சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார் அஸ்வின். அவர் பேசியதாவது: "சேவாக் சிக்கலானவர் அல்ல. ஆனால் உண்மையில் அவர் என் மனதை தளரவைத்துள்ளார். இலங்கையின் தம்புள்ள மைதானத்தில் வலைப்பயிற்சியில் நான் அவருக்கு பந்து வீசினேன். ஆஃப் சைடில் பந்து வீசினேன், கட் ஷாட் அடித்தார். ஆஃப் ஸ்டம்ப்…
-
- 0 replies
- 703 views
-
-
ஐ.சி.சி-யின் புதிய விதிமுறை... ப்ளஸ், மைனஸ் என்ன? இந்திய அணியில் என்றுமே ரோஹித் சர்மாவின் நம்பகத்தன்மையின் மேல் கிரிக்கெட் ரசிகர்கள் கேள்வி எழுப்பிவருவது வழக்கம். அவரது கன்சிஸ்டன்சி அப்படி. ஒரு ஆட்டத்தில் அபாரமாக ஆடினாலும் அடுத்த ஆட்டத்தில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்துவிடுவார். இந்நிலையில் காயத்தினால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பிடித்த அவர், சாம்பியன்ஸ் டிராபியில் முதல் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிராக 91 ரன்கள் அடித்து தன் திறமையைக் காட்டினார். முதலில் மிகவும் நிதானமாக ஆடிய அவர், கடைசி நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஆனாலும், கடைசியில் ரன் அவுட் ஆனார். 119 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து சதத்தையும் தவறவிட்டார். இங்கிலாந்து மண்ணில்…
-
- 0 replies
- 467 views
-
-
தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் மே மாதத்திற்கான அதிசிறந்த வீரர் சங்கா தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் அதி சிறந்த வீரருக்கான விருதை குமார் சங்கக்கார வென்றெடுத்துள்ளார். சரே பிராந்திய கிரிக்கெட் அணி வீரர் குமார் சங்கக்கார மே மாதத்திற்கான அதி சிறந்த கிரிக்கெட் வீரருக்கான தொழில்சார் கிரிக்கெட் வீரர்கள் விருதையே வென்றெடுத்தார். இலங்கையின் முன்னான் கிரிக்கெட் வீரரான குமார் சங்கக்கார தொழில்சார் கிரிக்கெட் சங்கத்தின் மிகவும் பெறுமதிமிக்க வீரருக்கான தரவரிசையில் 167 புள்ளிகளை ஈட்டி அதி சிறந்த வீரரானார். இவருடன் இந்த விருதுக்காக குறும்பட்டியலில் இசெக்ஸ் வீரர் அலஸ்டெய…
-
- 0 replies
- 318 views
-
-
சூப்பர் ஸ்டார் கலாச்சாரம், இரட்டை ஆதாயப் பதவி: கிரிக்கெட் கமிட்டியிலிருந்து ராஜினாமா செய்த ராமச்சந்திர குஹா குற்றச்சாட்டு ராமச்சந்திர குஹா. | படம்.| கே.முரளிகுமார். உச்ச நீதிமன்றம் நியமித்த பிசிசிஐக்கான நிர்வாகிகள் கமிட்டியின் உறுப்பினர் ராமசந்திர குஹா தன் பதவியை ராஜினாமா செய்ததற்கு பல காரணங்களை கடிதம் மூலம் விளக்கியுள்ளார். உச்ச நீதிமன்றம் நியமித்த கிரிக்கெட் நிர்வாகிகள் கமிட்டியிலிருந்து பிரபல கிரிக்கெட் வரலாற்றறிஞர், கட்டுரையாளர், ஆசிரியர், எழுத்தாளரான ராமச்சந்திர குஹா ராஜினாமா செய்ததற்கு பிசிசிஐ நிர்வாகத்தின் செயல்பாடுகளின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியே காரணம் என்று கூறியுள்ளார். கிரிக்கெட் நிர்வாகிகள் குழு என்…
-
- 1 reply
- 291 views
-
-
துப்பாக்கி முனை தோட்டாவாய் ரொனால்டோ... புல்லட் புரூஃப் ஜாக்கெட்டாய் யுவென்டஸ்! #ChampionsLeagueFinal #RealMadridvsJuventus `பாகுபலி 2' க்ளைமாக்ஸில் பிரபாஸும் ராணாவும் மோதிக்கொண்டபோது தியேட்டர் அதிர்ந்ததுபோல் இன்று இரவு சாம்பியன்ஸ் லீக் ஃபைனலில் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாடுகளில் உள்ள க்ளப் சாம்பியன்களான ரியல் மாட்ரிட், யுவென்டஸ் மோதும்போது கால்பந்து உலகமே அதிரும். இது கார்டிஃப்பில் நடக்கப்போகும் சாம்பியன்களின் சாம்பியனுக்கான யுத்தம்; ஒரு வருடத் தவம். ஒவ்வொரு நொடியும் இதயத்துடிப்பு எகிறப்போகும் அந்த ஆட்டத்தின் முன்னோட்டம் இங்கே... சுவாரஸ்யமான இந்தப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார் என்பதைக் கணிப்பது சிரமம். ஏனெனில், மோதப்போவது தலைகள் அல்ல... ம…
-
- 4 replies
- 829 views
-
-
கேப்டன் கோலிக்கும் பயிற்சியாளர் கும்ப்ளேவுக்கும் இடையே மோதல்? பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவுடன் கேப்டன் விராட் கோலி. (கோப்பு படம்) இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேவை திடீரென மாற்றுவதற்கான நடவடிககைகளில் பிசிசிஐ இறங்கியிருப்பதன் பின்னணியில் கேப்டன் கோலிக்கும் கும்ப்ளேவுக்கு இடையே ஏற்பட்ட மோதலே காரணம் என்று தெரிகிறது. அனில் கும்ப்ளேவுக்கு எதிராக விராட் கோலி தண்டத்தை உயர்த்தினாரா என்று கேள்வி எழுப்பினால் அதற்கான பதில் ‘மிகப்பெரிய அளவில் ஆமாம்’ என்பதே. இது குறித்து பிசிசிஐ முக்கியஸ்தர்களிடம் விராட் கோலி புகார் எழுப்பியதாகத் தெரிகிறது, அதாவது அணி…
-
- 3 replies
- 743 views
-
-
கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் Tamil கட்டார் தேசிய கிரிக்கெட் அணியில் 12 வருடங்கள் விளையாடிய இலங்கையர் இலங்கை நாட்டில் உள்ள ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது, தேசிய அணியிலும் சரி, முதல்தர கிரிக்கெட் விளையாடும் உள்ளூர் கழகங்களிலும் சரி கிழக்கு மாகாணத்தினை சேர்ந்த வீரர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே இருக்கின்றது. எனினும், தற்போது கிழக்கு மாகாண மாவட்டங்களில் ஒன்றான மட்டக்களப்பில் கிரிக்கெட்டின் வளர்ச்சி வீதத்தில…
-
- 0 replies
- 468 views
-
-
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு 'விண்டீஸ்' எனப் பெயர் மாற்றம்! வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் பெயர், 'விண்டீஸ்' (Windies) என்று மாற்றப்பட்டுள்ளது. நேற்று, இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் 91-வது ஆண்டு விழா தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து, பேசிய வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜானி கிரேவ்ஸ் கூறுகையில், 'இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் முன்னேற்றத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் சில வருடங்களுக்கு, விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இண…
-
- 0 replies
- 533 views
-
-
பெண் செய்தியாளருக்கு முத்தம் கொடுத்த டென்னிஸ் வீரர்; ப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலிருந்து அதிரடி நீக்கம் பெண் செய்தியாளருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த ஃப்ரான்ஸ் டென்னிஸ் வீரர் மேக்ஸிம் ஹாமு, ப்ரெஞ்சு ஓபன் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். பாரிஸில் நடைபெற்று வரும் ப்ரெஞ்சு ஓபன் தொடரின் முதல் ஆட்டத்தில் பாப்லா ஸ்வாசிடம், மேக்ஸிம் ஹாமு தோல்வி அடைந்திருந்தார். அப்போது யூரோஸ்போர்ட் தொலைகாட்சி சார்பில் மாலி தாமஸ் என்ற பெண் நிருபர் ஒருவர் மேக்ஸிம் ஹாமுவிடம் நேரலையில் கேள்வி எழுப்பினார். அப்போது மேக்ஸிம் ஹாமு, அந்த பெண் நிருபரின் தோளில் கையைப் போட்டு இழுத்து அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்தார். செய்தியாளர் அதனை தவிர்த்து விட்டு மீண்டும் கேள்…
-
- 2 replies
- 380 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்பமான ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான இரண்டாவது திறன்காண் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் உட்பட மூவர் இலங்கைக்கான புதிய சாதனைகளை நிலைநாட்டினர். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இதே மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது திறன்காண் போட்டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அனி…
-
- 0 replies
- 450 views
-