விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. பரிந்துரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கிரிக்கெட் கமிட்டியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை கொண்டுவர பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறை உள்ளது. அதை 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு டி.ஆர்.எஸ். முறையில் 2 வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும்போது அணிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் …
-
- 0 replies
- 294 views
-
-
100 மணி நேரம் சமூக சேவை: குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசி. வீரருக்கு நூதன தண்டனை குடித்து விட்டு கார் ஓட்டிய நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டக் பிரேஸ்வெல்லுக்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் டக் பிரேஸ்வெல். 26 வயதான இவர் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி மது அருந்திய நிலையில் கார் ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். ஹாஸ்டிங்ஸ் பகுதியில் வரும்போது போலீசார் இவரது காரை வழிமறித்து சோதனை நடத்தினார்கள். அப்போது பிரேஸ்வெல் குடித்திருந்தது தெ…
-
- 1 reply
- 327 views
-
-
9 மில்லியன் டாலர் வரி ஏய்ப்பு?: சிக்கலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியல் மாட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9 மில்லியன் டாலர் அளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கூறப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணியான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் வாரத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குகிறார். மேலும், விளம்பரங்கள் மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். இதுபோன்று சம்பாதித்த வருமானத்திற்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என்ற விமர்சனம் எழ…
-
- 0 replies
- 375 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக்: அடுத்த தொடரில் 8 போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த திட்டம் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் அடுத்த சீசனில் (2018) எட்டு போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இலங்கை அணி சுமார் 10 வருடங்களுக்கு முன் பாகிஸ்தான் மண்ணில் விளையாடும்போது வீரர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் எந்த நாட்டு வீரர்களும் பாகிஸ்தான் மண்ணில் சென்று விளையாட விரும்ப…
-
- 0 replies
- 272 views
-
-
மைதானத்துக்கு வரும் ஒவ்வொரு ரசிகர்களும் பாதுகாக்கப்படுவீர்கள் : ஐ.சி.சி! சம்பியன்ஸ் கிண்ணத்தை மைதானத்தில் பார்வையிட வரும் ஒவ்வொரு ரசிகர்கள் மற்றும் வீரர்கள் சிறப்பாக பாதுகாக்கப்படுவீர்கள் என சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் தலைவர் ரோனி பிளானகன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தின் மென்செஸ்டர் நகரில் இடம்பெற் தீவிரவாத தாக்குதல் காரணமாக சம்பியன்ஸ் கிண்ண தொடரின் பாதுகாப்பில் உறுதியற்ற தன்மை காணப்பட்டது. எனினும் தற்போது பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ரோனி பிளானகன், “ சம்பியன் கிண்ண தொடரை முழு பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். போட்டிகளை பார்வையிட வரு…
-
- 0 replies
- 231 views
-
-
இங்கிலாந்து கால்பந்து அணியில் ரூனிக்கு இடமில்லை உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. லண்டன் : உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்றில் இங்கிலாந்து அணி அடுத்த மாதம் ஸ்காட்லாந்துடன் மோத இருக்கிறது. மேலும் பிரான்சுடன் நட்புறவு ஆட்டம் ஒன்றிலும் விளையாட உள்ளது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. நட்சத்திர வீரர் வெய்ன் ரூனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. முந்தைய ஆட்டத்தின் போது காலில் ஏற்பட்ட காயத்தால் சேர்க்கப்படவில்லை. ஆனால் …
-
- 0 replies
- 296 views
-
-
50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர்: அணியின் ஸ்கோர் 556 பாகிஸ்தானில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீரர் 50 ஓவர் போட்டியில் 320 ரன்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தானில் பாஸல் மெஹ்மூத் இண்டர்-கிளப் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றொரு அணியுடன் மோதியது. இதில் ஷாஹீத் அலாம் பக்ஸ் கிரிக்கெட் கிளப் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பிலால் இர்ஷாத் தொடக்க வீரராக களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடி சிக்ஸ், பவுண்டரிகளா…
-
- 0 replies
- 420 views
-
-
தென்னாப்பிரிக்காவுடன் முதல் ஒருநாள் போட்டி: மார்கன் சதத்தால் இங்கிலாந்து வெற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இயன் மார்கன் சதத்தால் இங்கிலாந்து 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லீட்ஸ்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன் குவித்தது. கேப்டன் இயன்மோர்கன் 93 பந்தில் 107 ரன் எடுத்தார். ஹால்ஸ் 61 ரன்னும்,…
-
- 0 replies
- 334 views
-
-
3 நாடுகள் கிரிக்கெட்: வங்காளதேசத்திடம் நியூசிலாந்து தோல்வி 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. இதில் வங்காளதேசம் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது. நியூசிலாந்து, அயர்லாந்து, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி தொடர் அயர்லாந்தில் நடந்தது. இதன் 6-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதின. முதலில் விளையாடிய நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 270 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய வங்காளதேசம் 48.2 …
-
- 0 replies
- 221 views
-
-
பந்து கழுத்தில் தாக்கியதில் நிலைகுலைந்த மெக்ஸ்வெல் (காணொளி இணைப்பு) அவுஸ்திரேலிய அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிலேன் மெக்ஸ்வெல் துடுப்பாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, அவரது கழுத்தில் பந்து தாக்கியுள்ளது. இதில் சற்று நிலைத்தடுமாறிய மெக்ஸ்வெல் தரையில் விழுந்துள்ளார். மைதானத்தில் இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் மெக்ஸ்வெலை ஓடிவந்து கவனிக்க, அதிஷ்டவசமாக அவருக்கு எவ்வித பாரிய உபாதைகளும் ஏற்படவில்லை. எனினும் பந்து தாக்கியதற்கு பிறகு மெக்ஸ்வெல் அவரது அறைக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் விளையாடுவதில் சிக்கல் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ள நிலையில்,…
-
- 0 replies
- 284 views
-
-
தரவரிசையில் முன்னணி நாடுகளைப் பின்தள்ளி அதிர்ச்சி கொடுத்த பங்களாதேஷ்! சர்வரேச கிரிக்கெட் சபை இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பங்களாதேஷ் அணி 6வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. உலக் கிண்ணத்தை வென்றுள்ள மூன்று அணிகளை பின்தள்ளி 6வது இடத்துக்கு பங்களாதேஷ் அணி முன்னேறியுள்ளமை இதுவே வரலாற்றின் முதல் தடவையாகும். பங்களாதேஷ் அணி 93 புள்ளிகளுடன் 6வது இடத்தை பிடித்துள்ளதுடன், இலங்கை 93 புள்ளிகளுடன் 7வது இடத்தையும், 88 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 8வது இடத்தையும் பிடித்துள்ள அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி 79 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளது. பங்களாதேஷ் அணி முதன் முறையாக 6வது இடத்துடன் சம்பின்ஸ் கி…
-
- 0 replies
- 372 views
-
-
“உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே விளையாடினோம்” : யுரோப்பா கிண்ணத்தை கைப்பற்றிய மென்சென்ஸ்டர் யுனைட்டட்! (காணொளி இணைப்பு) யுரோப்பா கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று மென்சென்ஸ்டர் யுனைட்டட் அணி இவருடத்திற்கான சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பித்த 18 ஆவது நிமிடத்தில் மென்செஸ்டர் அணியின் பௌல் பொக்பா முதலாவது கோலினை அணிக்கு பெற்றுக்கொடுக்க, 48 ஆவது நிமிடத்தில் ஹென்ரிக் மெக்கிட்டரியான் கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். எஜக்ஸ் அணி கடும் முயற்சிகளை மேற்கொண்டும், எவ்…
-
- 0 replies
- 399 views
-
-
வரி ஏய்ப்பு: மெஸ்சியின் 21 மாத சிறைத் தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து கால்பந்து வீரர் மெஸ்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் நிராகரித்து, தண்டனையை உறுதி செய்துள்ளது. பார்சிலோனா: உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி. இவர் அர்ஜென்டினா, பார்சிலோனா ஆகிய அணிகளுக்காக விளையாடி வருகிறார். இவர் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2007 முதல் 2009 - ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், 4.1 மில்லியன் யூரோ அளவுக்கு வரி ஏய்ப…
-
- 0 replies
- 307 views
-
-
செல்சீ ரசிகனின் ரத்தத்தை நீலமாக மாற்றியவன்... மிஸ் யூ ஜான் டெர்ரி! “அவருக்கு 32 வயது ஆகிறது. இது, இளம் வீரர்களுடன் போட்டியிடும் வயது அல்ல. வாரத்துக்கு இரண்டு போட்டிகளில் எல்லாம் அவரால் விளையாட முடியாது. வெளியே உட்கார அவர் பழகிக்கொள்ள வேண்டும்” இது, பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கும் பிரபல அணியின் கேப்டனைப் பற்றி அந்த அணியின் பயிற்சியாளர் சொன்னது. அணியின் கேப்டனை பிளேயிங் லெவனில் எடுக்காததற்கு, பயிற்சியாளர் சொன்ன இந்த கமென்ட் வைரல். பயிற்சியாளர் சொன்னதுபோல் 38 போட்டிகள்கொண்ட பிரீமியர் லீக் தொடரில் 14 போட்டிகளில் மட்டுமே விளையாடினார் அந்த வீரர். அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்தது என்றே நினைத்தனர். அதற்கடுத்த சீஸன்களில் நடந்தது சரி…
-
- 0 replies
- 517 views
-
-
ஏப்ரல் 5-ல் துவங்குகிறது ஐபிஎல் 2017 சீசன்! ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 5-ம் தேதி ஐபிஎல் 2017 சீசன் துவங்குகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் முதல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. மேலும், இறுதிப் போட்டி வருகின்ற மே 21-ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் இந்த சீசனில் களமிறங்குகின்றனர். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 லீக் போட்டிகளில் விளையாடும். இதையடுத்து, லீக் சுற்றின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். http://www.vikatan.com/news/sports/80956-ipl-2017-season-schedule-to--…
-
- 368 replies
- 44.7k views
-
-
முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக சங்கா அறிவிப்பு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் உலகின் தலைசிறந்த கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார, முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள இங்கிலாந்து பிராந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் பின்னர், முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற எண்ணியுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற 39 வயதான குமார் சங்கக்கார, இங்கிலாந்தின் பிராந்திய அணியான சரே அணிக்காக தற்போது விளையாடி வ…
-
- 2 replies
- 639 views
-
-
மண்டியிட்டது இலங்கை ; வரலாற்று வெற்றியை பதிவு செய்தது ஸ்கொட்லாந்து இலங்கை அணியுடனான உத்தியோகபூர்வமற்ற கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி, தனது கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்று விளையாடுவதற்காக இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையிலான இலங்கை அணி, ஸ்கொட்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இப் பயிற்சிப் போட்டியின் முதல் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத…
-
- 3 replies
- 643 views
-
-
உலகப் புகழ்பெற்ற மோட்டார் பந்தய வீரர் நிக்கி விபத்தில் பலி அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் மோட்டோஜிபி சம்பியனான மோட்டார் பந்தய வீரர் நிக்கி ஹேடன் சாலை விபத்தில் உயிரிழந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் நிக்கி ஹேடன், அவருக்கு வயது 35. அவர் 2006ஆ-ம் ஆண்டின் மோட்டோஜிபி சம்பியன் பட்டத்தை வென்றவராவார். அவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் இத்தாலி நாட்டில் விபத்துக்குள்ளானார். கடந்த மே 17ஆ-ம் திகதி நிக்கி ஹேடன் இத்தாலி நாட்டின் ரிமினி கடற்கரையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது திடீரென அவர்மீது ஒரு கார் மோதியது. அந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மௌரிஸியோ புஃபலானி என்ற…
-
- 0 replies
- 309 views
-
-
லாலிகா கால்பந்து: 33-வது முறையாக பட்டம் வென்றது ரியல்மாட்ரிட் லாலிகா கால்பந்து போட்டியின் புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருந்த நட்சத்திர வீரர்களை உள்ளடக்கிய ரியல்மாட்ரிட் அணி தனது கடைசி லீக்கில் மலாகாவுடன் மோதியது. இதில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலாகாவை வீழ்த்தியது. வெற்றி கொண்டாட்டத்தில் ரியல்மாட்ரிட் கிளப் வீரர்கள். ரோசாலிடா : லா லிகா, ஸ்பெயின் நாட்டில் புகழ்பெற்ற கிளப் அணிகளுக்கான கால்பந்து போட்டியாகும். இந்த சீசனில் (2016-17) மொத்தம் 20 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும்…
-
- 0 replies
- 403 views
-
-
பிரீமியர் லீக் சாம்பியனின் கதை..! செல்சீ ரசிகனின் வெறித்தன பதிவு லண்டன், விழாக்கோலம் காணப்போகிறது. பிரிட்டனின் தலைநகரம் எங்கும் நீலமயமாகப்போகிறது. வீதிதோறும் ‘ப்ளூ இஸ் தி கலர்...’ என்னும் பாடல் ஒலிக்கப்போகிறது. ‘ஆன்டோனியோ’, ‘டெர்ரி’, ‘ஹசார்ட்’ என ஃபுல்ஹாம் பகுதி ரசிகர்கள் துதிபாடிக்கொண்டே இருப்பார்கள். மொத்த பிரிட்டனும் பொறாமையில் பொங்கும். முக்கியமாக, மான்செஸ்டர் பகுதி இருளில் மூழ்கும். பிரிட்டன் முழுவதும் ‘செல்சீ’ என்ற வார்த்தையே இன்னும் சில நாள்கள் நிறைந்திருக்கும். காரணம், உலகின் மிகப் பிரசித்திபெற்ற பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 2016-17 சீஸன் முடிந்துவிட்டது. பிரீமியர் லீக் கோப்பை எங்கிருந்து எடுக்கப்பட்டதோ, அங்கே…
-
- 0 replies
- 535 views
-
-
இத்தாலி ஓப்பன் டென்னிஸ் - சானியா ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்! ஃப்ரெஞ்ச் ஓப்பனுக்கு முன்னோட்டமாகக் கருதப்படும் இத்தாலி ஓப்பன் சர்வதேச டென்னிஸ் போட்டி, ரோம் நகரில் நடந்துவருகிறது. இதில், இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி, அரையிறுதிக்கு முன்னேறியது. இத்தாலி ஓப்பன் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் சானியா மிர்சா, கஜகஸ்தானின் யரோஸ்லாவா ஷிவ்டோவா ஜோடி, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் இத்தாலியின் சாரா எர்ரானி - மார்ட்டினா டிரெவிசான் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. சானியா - ஷிவ்டோவா கூட்டணி, அடுத்து மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- யங் ஜான் சான் (சீன தைபே) ஜோடியுடன…
-
- 0 replies
- 409 views
-
-
டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வா?- டி வில்லியர்ஸ் விளக்கம் டி வில்லியர்ஸ். | படம்: ராய்ட்டர்ஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தான் இன்னும் ஓய்வு பெறவில்லை என தென் ஆப்ரிக்க அணியின் அதிரடி வீரரரான டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து டி வில்லியர்ஸ் விலகினார். காயத்தில் இருந்து குணமடைந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடினார். ஆனால் அதேவேளையில் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை டி வில்லியர்ஸ் புறக்கணித்தார். வரும் ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ந…
-
- 0 replies
- 348 views
-
-
சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது Tamil சென் சேவியர் கல்லூரியை வீழ்த்தி புனித ஹென்ரியரசர் சம்பியனாகியது வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கால்பந்து தொடரின் பலம் மிக்க அணிகளைக் கொண்ட 20 வயதின் கீழ் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியை வீழ்த்திய பிரபல இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி அணி சம்பியன் பட்டம் வென்றது. அதற்கு முன்னர் இடம்பெற்ற அரையிறுதி ஆட்டத்தில் புனித ஹென்ரியரசர் கல்லூரி அணியினர் மன்னார் முருங்கன் கல்லூரி அணியினரை 1-0 என்ற கோல் கணக்கில்…
-
- 0 replies
- 464 views
-
-
சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள் Tamil சம்பியன் பட்டங்களை வென்ற புனித பத்திரிசியார் மற்றும் சென் சேவியர் கல்லூரி அணிகள் வட மாகாண பாடசாலைகள் விளையாட்டு நிகழ்வின் கால்பந்தாட்ட தொடரில் 18 வயதின் கீழ் பிரிவில் மன்னார் சென் சேவியர் கல்லூரி அணியும், 16 வயதின் கீழ் பிரிவில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணியும் சம்பியன் பட்டங்களை வென்றுள்ளன. 16 வயதின் கீழ் பிரிவு சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்பிரிவுக்கான இறுதிப் போட்டியில் ய…
-
- 0 replies
- 453 views
-
-
20 ஓவர் கிரிக்கெட்டில் டக்வொர்த் விதி பொருத்தமற்றது: ஸ்டீபன் பிளமிங் கருத்து 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதி முறையை பின்பற்றுவது பொருத்தமற்றது என்று நியூசிலாந்து முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார். ஐதராபாத்: ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐதராபாத் அணியின் வெளியேற்றம் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது பிளே ஆப் சுற்றில் கொல்கத்தா-ஐதராபாத் அணிகள் மோதிய எலிமினேட்டர் ஆட்டம் நேற்று முன்தினம் பெங்களூரில் நடந்தது. முதலில் ஆடிய ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 128…
-
- 0 replies
- 342 views
-