விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
வொஷிங்டன் சுந்தரா? பெயருக்கு பின்னால் உருக்கமான காரணம் : நன்றி மறவாத தந்தை உண்மையை வெளிப்படுத்தினார் ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான தகுதிகான் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி புனே அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இவ்வருட ஐ.பி.எல் தொடரில் எதிரணிகளுக்கு சவாலாக திகழ்ந்த மும்பை அணி, புனே அணியை இலகுவாக வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் புனே அணியின் வீரர்களான மஹேந்திரசிங் டோனி மற்றும் வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் மும்பையின் வெற்றிக் கனவை தகர்த்து, புனே அணியை இறுதிப்போட்டிக்குள் காலடி எடுத்து வைக்க உதவினர். டோனியின் துடுப்பாட்டமும் வொஷிங்டன் சுந்தரின் அதிரடி பந்து வீச்சுமே புனே அணியின் வெற்றிக்கு மு…
-
- 1 reply
- 687 views
-
-
மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர் Tamil மீண்டுமொருமுறை சம்பியனாக மகுடம் சூடிய மகாஜனா மங்கையர் இவ்வாண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளில் 20 வயதின் கீழ் பெண்களுக்கான பிரிவின் சம்பியன் பட்டத்தை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி மாணவிகள் சுவீகரித்துள்ளனர். 2017ஆம் ஆண்டிற்கான வட மாகாண பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளின் முதற்கட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்றன. இதில் உதைபந்தாட்டப் போட்டிகள் 15ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் யாழ்ப்பாணம் துரையப்பா விளை…
-
- 0 replies
- 556 views
-
-
மத்தி., சேவியர், பற்றிக்ஸ் முன்னேற்றம் IM பாடசாலைகளுக்கு இடையிலான மாகாணமட்ட கால்பந்தாட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் 18 வயதுப்பிரிவு ஆண்களுக்கான காலிறுதி ஆட்டங்கள் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி, சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானங்களில் நேற்று நடைபெற்றன. அரையிறுதிக்குத் தகுதிபெற்ற அணிகளின் விவரங்கள் வருமாறு. முதலாவது காலிறுதி ஆட்டத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. 3:0 என்ற கோல் கணக்கில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி வெற்றிபெற்றது. இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்திhலய அணியை எதிர்த்து நெல்லியடி மத்திய கல்லூரி அணி மோ…
-
- 0 replies
- 652 views
-
-
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஷரபோவா பங்குபற்ற அனுமதி மறுப்பு பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் இரண்டு தடவைகள் சம்பியனான மரியா ஷரபோவாவுக்கும் இவ் வருட பிரெஞ் பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. மரியா ஷரபோவாவுக்கு குருட்டு வாய்ப்பு சீட்டு (வைல்ட் கார்ட்) வழங்க போட்டி ஏற்பாட்டாளர்கள் மறுத்துள்ளனர். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்து பாவனையில் சிச்சியதை அடுத்து விதிக்கப்பட்ட 15 மாதத் தடையின்பின்னர் மரியா ஷரபோவா மூன்று டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். எனினும் மாபெரும் டென்னிஸ் (க்ராண்ட் ஸ்லாம்) போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்படவில்ல…
-
- 1 reply
- 457 views
-
-
அப்படி அடி சபாசு... கேலி செய்த கோயங்காவையே எழுந்து நின்று கைதட்ட வைத்த டோணி! சென்னை: ஐபிஎல் குவாலிபையர்-1 சுற்றில் நேற்று மும்பை அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, பைனலுக்கு முன்னேறியது ரைசிங் புனே அணி. வான்கடே மைதானத்தின் பிட்ச் ஸ்லோவாக இருந்ததால், ரன் குவிக்க சக பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டனர். பல பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க சிரமப்பட்ட போதிலும், கடைசி கட்டத்தில் டோணி அதிரடியாக 5 சிக்சர்களை விளாசி 162 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோருக்கு வித்திட்டார். 26 பந்துகளில் டோணி விளாசிய 40 ரன்கள் கடைசி கட்டத்தில் ஸ்கோரை மளமளவென உயர்த்த உதவியது. இந்த ஸ்கோர்தான் புனே அணியின் வெற்றிக்கும் காரணமாக இருந்தது. டோணியே காரணம் கிரிக்கெட் வல்லுநர்கள் அனைவரும…
-
- 0 replies
- 471 views
-
-
சங்கா அபார சதம் இங்கிலாந்துக் கழகங்களுக்கு இடையிலான தொடரில் சர்ரேயைப் பிரதிநிதித்துவம் செய்துவரும் சங்கா, நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டமொன்றில் சதம் கடந்தார். சர்ரேயை எதிர்த்து ஹாம்சயர் அணி மோதியது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹாம்சயர் முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 பந்துப்பரிமாற்றங்களில் அந்த அணி 8 இலக்குகள் இழப்புக்கு 271 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக பெய்லி ஆட்டமிழக்காமல் 145 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் ராம்போல் 4 இலக்குகளைக் கைப்பற்றினார். பதிலுக்குக் களமிறங்கிய சர்ரே 38 பந்துப்பரிமாற்றங்களில் 2 இலக்குகளை இழந்து 238 ஓட்டங்களைக் குவித்த நிலையில் மழை குறுக்கிட்டதன் காரணத்தால் ட்க்வேர்த்லூயிஸ் விதிப்படி 66…
-
- 0 replies
- 479 views
-
-
ஆஸி.வீரர்கள் ஐபிஎல்-ஐ துறக்க புதிய ஒப்பந்தம் வழங்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா முயற்சி படம்.| ஏ.பி. 2 ஆண்டுகளுக்கான மத்திய வீரர்கள் ஒப்பந்தம் வழங்குவதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டை தேர்வு செய்யும் ஆஸ்திரேலிய வீரர்களை மனம் மாற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முயற்சி மேற்கொண்டது. இது தொடர்பாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் செயல் பொதுமேலாலர் பேட் ஹோவர்ட் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வாரியத்தை அணுகியுள்ளார். ஏற்கெனவே ஆஸ்திரேலிய வீரர்கள் வாரியத்திற்கும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கும் வேறுபாடுகள் தோன்றியிருந்த நிலையில் வீரர்களுகு 2 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற புதிய உ…
-
- 1 reply
- 429 views
-
-
அனித்தா மீண்டும் சாதனை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான கோலூன்றிப் பாய்தலில் பெண்கள் பிரிவில் அனித்தா புதிய சாதனை படைத்தார். சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரி மைதானத்தில் நேற்று மாலை இந்தப் போட்டி நடைபெற்றது. தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சாத்வீகா கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் 2.82 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து படைத்திருந்த சாதனையை, நடப்பு வருடத்தில் அனித்தா 3.10 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து முறியடித்து தங்கம் வென்றார். தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ஹெரினா 2.80 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெள்ளிப்பதக்கத்தையும், சாத்வீகா 2.70 மீற்றர் உயரத்துக்குப் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.…
-
- 0 replies
- 346 views
-
-
இந்திய கிரிக்கெட்டைக் கண்டு பயமாக இருக்கிறது: ஏ.பி.டிவில்லியர்ஸ் டிவில்லியர்ஸ். | படம்.| ஏ.எஃப்.பி. உலக பவுலர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் 360 டிகிரி பேட்ஸ்மென் என்று அறியப்படும் ஏ.பி.டிவில்லியர்ஸ், தனக்கு இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து வருவது பயமூட்டுவதாக உள்ளது என்று கூறியுள்ளார். “நான் இந்திய கிரிக்கெட்டைப் பார்த்து பயப்படுகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டினால் இந்திய கிரிக்கெட் மேலும் மேலும் வலுவடைந்து கொண்டே வருகிறது. உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக ஏற்படக்கூடிய அழுத்தங்களை, நெருக்கடிகளை சவாலுடன் சந்திக்கும் இளம் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட் மூலம் மிகப்பெரிய அனுபவம் பெற்று வருகின்…
-
- 0 replies
- 398 views
-
-
ஜயசூரிய - தரங்கவின் சாதனையை முறியடித்த இந்திய மகளிர் அணி! அயர்லாந்து மகளிர் அணிக்கெதிரான போட்டியில் இந்திய மகளிர் அணி புதிய சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளது. இந்த போட்டியில் இந்திய மகளிர் அணி ஆரம்ப விக்கட்டுக்காக 320 ஓட்டங்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் அணியின் டீப்டி சர்மா 188 ஓட்டங்களையும், பூனம் ரவுட் 109 ஓட்டங்களையும் குவித்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முன்னர் கடந்த 2008 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க அணிக்கெதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் சாரா டெய்லர் மற்றும் கரோலின் அட்கின்ஸ் பெற்ற 268 ஓட்டங்களே அதிகூடிய இணைப்பாட்டமாக இருந்தது. இதேவேளை ஆண்களுக்கான ஒருநாள் போட்டியொன்றில் உபு…
-
- 0 replies
- 367 views
-
-
லா லிகா பட்டம் வெல்வதில் கடும் போட்டி: வெற்றியுடன் முன்னேறும் ரியல் மாட்ரிட்-பார்சிலோனா லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகள் 4-1 என எதிரணிகளை வீழ்த்தியதால் சாம்பியன் பட்டம் வெல்வதில் கடும்போட்டி நிலவுகிறது. லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டத்திற்காக ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இத்தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடைபெற்ற லா லிகா லீக் போட்டி ஒன்றில் ரியல் மாட்ரிட் - செவிலா அணிகள் மோதின. தொடக்கம் முதலே ரியல் மாட்ரிட் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினா…
-
- 0 replies
- 305 views
-
-
ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து ரொனால்டோ சாதனை செவிலா அணிக்கெதிராக இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டா ரியல் மாட்ரிட் அணிக்காக 400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்தள்ளார். போர்ச்சுக்கல் நாட்டின் தலைசிறந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக விளையாடிய ரொனால்டோ, 2009-ம் ஆண்டு 94 மில்லியன் யூரோவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனார். ரியல் மாட்ரிட் அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த அணியின் நட்சத்திர ஸ்ட்ரைக்கராக விளங்கி வருகிறார். லா லிகாவில் நேற்று ரியல் மாட்ரிட் அணி செவிலாவை எதி…
-
- 1 reply
- 442 views
-
-
மாகாண கூடைப்பந்தில் யாழ்ப்பாணம் சம்பியன் வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டத் தொடரில் பெண்கள் பிரிவில் யாழ்ப்பாண மாவட்டம் சம்பியனானது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் கூடைப்பந்தாட்டத் திடலில் நேற்று மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட அணியை எதிர்த்து மன்னார் மாவட்ட அணி மோதியது. 42:12 என்ற புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்ட அணி வெற்றிபெற்று கிண்ணம் வென்றது. http://uthayandaily.com/story/2802.html
-
- 1 reply
- 338 views
-
-
“மிஸ் யூ யூனிஸ் !” - பாகிஸ்தானின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஓய்வு பாகிஸ்தானின் ஆச்சர்யகரமான பேட்ஸ்மேன், அட்டகாசமான பிளேயர் யூனிஸ் கான். நேற்று நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடக்கும் டெஸ்ட் தொடரோடு ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போது ஒரு செய்தியாளர் ஒரு கேள்வி கேட்டார். "இன்னும் 23 ரன்கள் எடுத்தால் போதுமே, பத்தாயிரம் ரன்களைக் கடந்து முதல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆக வேண்டிய ஆள் என்ற பெருமை கிடைக்குமே?" நிதானமாய் யூனிஸ்கான் சொன்ன பதில் இதுதான், "உலகம் இப்படித்தான் கேட்டுக் கொண்டே இருக்கும். 10,000, 12,000 என்று இலக்குகள…
-
- 0 replies
- 720 views
-
-
40 வயதிற்குப் பிறகு 2000 ஆயிரம் ரன்னுக்கு மேல் அடித்து சாதனைப் படைத்த மிஸ்பா பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக் 40 வயதிற்கு மேல் 2000 ஆயிரம் ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பவர் மிஸ்பா உல் ஹக். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நடைபெற்று வரும் 3-வது டெஸ்டின் இன்றைய கடைசி ஆட்டத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார். தற்போது மிஸ்பா உல் ஹக்கிற்கு 42 வயது 351 நாட்கள் ஆகிறது. பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் 2001-ம் ஆண்டு தனது 25 வயதில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது டெஸ்ட் உடன் 75 டெஸ்ட…
-
- 0 replies
- 433 views
-
-
லண்டனில் சரே அணிக்காக சதம் விளாசிய சங்கக்கார! (Highlights) இங்கிலாந்தின் லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருாநாள் கிண்ணத் தொடரின் நேற்றைய ஹம்சையர் அணிக்கெதிரான போட்டியில் குமார் சங்கக்கார 124 ஓட்டங்களை விளாசியுள்ளார். இந்த போட்டியில் 238 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு சரே அணி துடுப்பெடுத்தாடிய போதே சங்கக்கார சதம் விளாசியுள்ளார். இவர் ஆட்டமிழக்காமல் 121 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 124 ஓட்டங்களை குவித்து சரே அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளார். இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார தற்போது லண்டனில் நடைபெற்றுவரும் ரோயல் லண்டன் ஒருநாள் கிண்ணத் தொடரில் ச…
-
- 0 replies
- 889 views
-
-
ஸ்பெயின் பார்முலா-1 கார்பந்தயம்: இங்கிலாந்து வீரர் ஹாமில்டன் வெற்றி பார்சிலோனாவில் நேற்று நடந்த 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். வெற்றிக்கோப்பையுடன் ஹாமில்டன். பார்சிலோனா : இந்த ஆண்டுக்கான பார்முலா-1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 5-வது சுற்று பந்தயமான ஸ்பெயின் கிராண்ட்பிரீ போட்டி பார்சிலோனாவில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 307.104 கிலோ மீட்டராகும். வழக்கம் போல் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். விறுவிறுப்பான இ…
-
- 0 replies
- 345 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றியும், அயர்லாந்து வீரரின் சாதனையும்! அயர்லாந்து - வங்கதேசம் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டி, அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இருமுறை மோதும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஒருநாள் போட்டித் தொடரின் முதல் ஆட்டம் அயர்லாந்து - வங்கதேசம் இடையே நடைபெற்றது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 31.1 ஓவர்களில் 157/4 என்ற நிலையில் இருக்கும்போது, தொடர் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் வழங்கப்பட்டன. இத்தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, நிர்ணயிக்கப்…
-
- 0 replies
- 381 views
-
-
கால்பந்து உலகின் எதிர்கால சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்தான்! கால்பந்து உலகில் மெஸ்சி, ரொனால்டோவுக்கு நிகராக உருவெடுத்து வரும் டாப் 5 இளம் வீரர்களை பற்றிய விவரம். பிளேபாய் நெய்மர் நெய்மர் டா சில்வா, பிரேசிலைச் சேர்ந்த 25 வயது இளம் முன்கள வீரர். பிரேசில் அணிக்காகவும் ஸ்பெயின் நாட்டின் டாப் மோஸ்ட் கிளப் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடி வரும் நம்பிக்கை நட்சத்திரம். முன்னாள் சூப்பர் ஸ்டாரான ரொனால்டினோ போன்ற பிரேசிலின் மூத்த வீரர்களுடனும் தற்போதைய சூப்பர் ஸ்டாரான மெஸ்சியுடனும் இணைந்து விளையாடி அனுபவம் கற்றவர். எதிரணி வீரர்களை குழப்பும் மந்திர கால்களுக்குச் சொந்தக்காரர். டிரிபிளிங் மூலம் லாவகமாக பந்தைக் கடத்துவதில் கெட்டிக்காரர். எத…
-
- 0 replies
- 389 views
-
-
யாழ்ப்பாணம் இந்து. வென்றது கிண்ணம் யாழ்ப்பாணம் மாவட்ட பளுதூக்கல் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய பளுதூக்கல் தொடரில் ஆண்கள் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி சம்பியனானது. யாழ்ப்பாணம் துரையப்பா உள்ள விளையாட்டரங்கில் நேற்றுமுன்தினம் இந்தப் போட்டிகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணி 39 புள்ளிகளைப் பெற்று சம்பியன் கிண்ணத்தை வென்றது. யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக் கழகம் ஆகிய அணிகள் தலா 10 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும், யாழ்ப்பாணம் பளுதூக்கும் கழகம் 9 புள்ளிகளைப் பெற்று நான்காமிடத்தையும், மலாயன் சாண்டோ அணி 2 புள்ளிகளைப் பெற்று ஐந்தாமிடத்தையும் பெற்றன. http://ut…
-
- 0 replies
- 486 views
-
-
2019 உலகக்கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு: டு பிளிசிஸ் சூசக தகவல் இங்கிலாந்தில் 2019-ம் நடைபெறும் 50 ஒவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக டு பிளிசிஸ் சூசகமாக தகவல் தெரிவித்துள்ளார். தென்ஆப்பிரிக்க டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் டு பிளிசிஸ். முன்னணி பேட்ஸ்மேன் பணியுடன், பீல்டிங்கிலும் சிறந்து விளங்கக்கூடியவர். 32 வயதாகும் இவர் 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக சூசகமாக தெரிவித்துள்…
-
- 0 replies
- 341 views
-
-
ரொனால்டோ கோல் அடிப்பதை யுவென்டஸ் தடுக்க முடியுமா? #Championsleague #Gameplan தலைப்பைப் படித்ததும் திட்ட வேண்டாம். `இன்று நள்ளிரவுதான் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதி செகண்ட் லெக்கில் ரியல் மாட்ரிட் - அட்லெடிகோ மாட்ரிட் மோதுகின்றன. அதற்குள் எப்படி ஃபைனலில் ரொனால்டோ கோல் அடிப்பதைப் பற்றி எழுதலாம்?' எனக் கேட்கலாம். கால்பந்தை, சாம்பியன்ஸ் லீக்கை, இந்த சீஸனை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்களுக்கு ஃபைனலில் ரியல் மாட்ரிட் - யுவென்டஸ் மோதலைத் தவிர்க்க முடியாது என்பது நன்றாகவே தெரியும். ரியல் மாட்ரிட் ஹோம் கிரவுண்ட் சாண்டியாகோ பெர்னபுவில் நடந்த முதல் அரை இறுதியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடிக்க, 3-0 என ரியல் மாட்ரிட் வெ…
-
- 3 replies
- 628 views
-
-
இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் செயற்திறன் மையம் பல்லேகலயில் ஆரம்பம் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் அரங்கில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆறு பகுதிகளைக் கொண்ட உள்ளக கிரிக்கெட் பயிற்சி மையம் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்ற நேற்றைய தினம், அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கெடுக்கவுள்ள இலங்கை வீரர்களுக்கான 06 நாள் பயிற்சி முகாமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சி நிலைய அங்குரார்ப்பண நிகழ்வில் மெதிவ்ஸ் புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த உள்ளக பயிற்சி நிலையமானது, இலங்கை கிரிக்கெட் சபையின் கனவுத்திட்டங்களுள் ஒன்றான நாடு தழுவிய ரீதியில் வீரர்களின் த…
-
- 0 replies
- 358 views
-
-
பெண்கள் கிரிக்கெட்: இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி உலக சாதனை பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டியில் 181 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வானி பெற்றுள்ளார். தென்ஆப்பிரிக்காவில் நான்கு மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி 7.3 ஓவரில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். இதன்மூலம…
-
- 1 reply
- 708 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து: டைட்டிலை நெருங்குகிறது செல்சியா இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி 2016-17 சீசனின் டைட்டிலை கைப்பற்ற நெருங்கி வந்துள்ளது. தற்போது 84 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தில் உள்ள முன்னணி 20 கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடர் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் மே மாதம் வரை நடைபெறும். இந்த சீசனுக்கான பிரமீயர் லீக் தொடர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 ஆட்டங்களில் எந்த…
-
- 0 replies
- 390 views
-