Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. என்னை விட திறமையாக கால்பந்து வீரர்கள் யாழில் உள்ளனர் : தேசிய அணி வீரர் ரவிகுமார் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது திறமைகளைக் காண்பித்து தான் பிறந்து, வளர்ந்த இடத்திற்கும் தேசத்திற்கும் பெருமை சேர்ப்பதையே அனைத்து விளையாட்டு வீரர்களும் தனது பெரிய இலக்காகக் கொண்டுள்ளனர். அதுபோன்றே, இலங்கையின் 16 வயதின் கீழ்ப்பட்டவர்களுக்கான தேசிய அணியில் இடம் பிடித்து யாழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொடுத்துள்ளார் யாழ்ப்பாணம், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி மாணவன் ரவிகுமார் தனூஜன். ஜப்பான், இலங்கை, நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் 16 வயதின் கீழ் அணிகள் பங்கு கொள்ளும் கால்பந்து தொடர் ஒன்று மார்ச் மாத…

  2. கவாஸ்கர் காலத்தில் இருந்தே நீடிக்கும் பகை... ஆஸ்திரேலியாவும் சர்ச்சையும்! சமீபத்தில் முடிந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து ‘சிக்னல்’ வந்தபின்பே, டி.ஆர்.எஸ் கோரினார். உடனுக்குடன் தைரியமாக தானாக முடிவெடுப்பதுதான் கேப்டனின் கெத்து. அதைவிடுத்து, ஸ்மித் இப்படிச் செய்கிறாரே... அவருக்கு என்ன புத்தி மழுங்கி விட்டதா என புலம்பினர் ரசிகர்கள். ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் கூட ஸ்மித்தின் செயலை ஏற்கவில்லை. இந்த நேரத்தில்தான் Brain fade என்ற வார்த்தையும் பிரபலமானது. ‘ஆமாம், நானே பார்த்தேன். இரண்டு முறை ஸ்மித், டிரெஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு அப்பீல் செய்தார். இது நியாயமே இல்லை’ என பிரஸ் கான்ஃபரன…

  3. கரிபியின் பிரிமியர் லீக் : 1.9 கோடிக்கு விலைபோன சங்கா மற்றும் மலிங்க 2017 ஆம் ஆண்டுக்கான கரிபியின் பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் தெரிவு இன்று இடம்பெற்றது. இந்த வீரர்கள் தெரிவில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு முன்னணி வீரர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை அணியின் முன்னணி வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மலிங்க ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். குமார் சங்கக்கார ஜமைக்கா டளவாஸ் அணிக்கு விளையாடவுள்ளதுடன், லசித் மலிங்க சென் லூசியுர் ஸடார்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். குறித்த அணிகள் சங்கக்கார மற்றும் மலிங்கவை தலா ஒரு இலட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கை பணத்தில் சுமார் 1.9 கோடி) வாங்…

  4. ஹொங்கொங்கில் கலக்கும் சங்கா ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் சங்கக்கார கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காக விளையாடி வருகின்றனர். இந்த போட்யில் 178 என்ற வெற்றியிலக்கை நோக்கி கெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. http://www.virakesari.lk/article/17595

  5. உலகின் தலைசிறந்த வீரராக இருக்கவே விருப்பம்: வீராட் கோஹ்லி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழவே எப்போதும் தாம் விரும்புவதாக இந்திய அணியின் தலைவர் வீராட் கோஹ்லி கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பாலி உம்ரீகர் விருது வழங்கும் விழா நேற்று பெங்களூரில் நடந்தது. இந்த விருதை மூன்றாவது முறையாக பெற்ற வீராட் கோஹ்லி கூறுகையில், நான் எப்போதும் உலகின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருப்பதையே விருப்புகிறேன். அது சாத்தியமாக, மூன்று விதமான கிரிக்கெட் ஆட்டங்களிலும் சிறப்பான செயல்பட வேண்டும் என்று எனக்குத் தெரியும். எனது கிரிக்கெட் வாழ்க்கைப் பயணம் முழுதுமே நான் எப்படி ஆடுகிறேன் என்பது பற்றிய விமர்சனங…

    • 0 replies
    • 416 views
  6. ஆறு பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசிய பாகிஸ்தான் வீரர் (காணொளி இணைப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டி தொடரில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரரான மிஷ்பா ஹுல் ஹக் 6 பந்துகளுக்கு ஆறு சிக்ஸர்களை விளாசி அசத்தியுள்ளார ஹொங்கொங் டி20 பிலிட்ஸ் தொடரில் ஹொங் கொங் ஜகூவார்ஸ் மற்றும் ஹொங்கொங் இஸ்லேன்ட் யுனைட்டன் அணிகளுக்கிடையிலான போட்டியிலேயே மிஷ்பா ஹுல் ஹக் ஆறு சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவர் 18 ஆவது பந்து ஓவரின் 5 மற்றும் 6 பந்துகளை சிக்ஸருக்கு விளாசியதுடன், 19 ஆவது பந்து ஓவரின் 2,3,4 மற்றும் 5 ஆவது பந்துகளில் ஆறு ஓட்டத்தை விளாசி அசத்தியுள்ளார். மிஷ்பா ஹுல் ஹக் ஆட்டமிழக்காமல் 82 ஓட்டங்களை பெற்று…

  7. ராஞ்சியில் 3-வது டெஸ்ட்: பிட்ச் தயாரிப்பில் அக்கறை காட்டும் தோனி தோனி. | படம்.| பிடிஐ. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ராஞ்சியில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான பிட்ச் உள்ளிட்ட தயாரிப்புகளில் முன்னாள் கேப்டன் தோனி அக்கறை காட்டுவதாக ஜார்கண்ட் கிரிக்கெட் சங்க செயலர் தெபாஷிஷ் சக்ரவர்த்தி தெரிவித்தார். தனது சொந்த மாநிலத்தில் இந்த டெஸ்ட் நடைபெறுவதால் அது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதில் தோனி தீவிர ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழுக்கு அவர் தெரிவித்ததாவது: தோனி பிட்ச் நிலவரங்கள் குறித்து எச்சரிக்கையுடன் அக்கறை காட்…

  8. ஹாங்காங் டி20 லீக்கில் 31 பந்தில் சதம் அடித்து அசத்திய வெயின் ஸ்மித் ஹாங்காங் டி20 லீக் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெயின் ஸ்மித் 31 பந்தில் சதம் அடித்து அசத்தியுள்ளார். ஹாங்காங் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சிட்டி கைடாக் - கோவ்லூன் கேண்டன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிட்டி கைடாக் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொட…

  9. மீண்டும் களமிறங்கிய சங்கா மற்றும் டில்ஷான் (நேரடி ஒளிபரப்பு) ஹொங்கொங்கில் இடம்பெற்றுவரும் டி20 பிலிட்ஸ் போட்டியில் இலங்கை அணியின் குமார் சங்கக்கார மற்றும் திலகரட்ன டில்ஷான் விளையாடும் போட்டி தற்போது இடம்பெற்றுவருகின்றது. இந்த போட்டியில் டில்ஷான் சிட்டி கைட்டாக் அணி சார்பாகவும் , சங்கக்காரகெலக்ஷி கிலாடியேட்டர்ஸ் லன்டாவு அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். http://www.virakesari.lk/article/17560

  10. ‘வாட்டே மேட்ச்... வாட்டே கம்பேக்..!’ - பார்சிலோனாவை பாராட்டும் கால்பந்து உலகம் ‘‘Bloody hell!’’ - ஃபுட்பால் குறித்து மான்செஸ்ட் யுனைடெட் கிளப் முன்னாள் பயிற்சியாளரான ஜாம்பவான் சர் அலெக்ஸ் பெர்குசன் சொன்ன வார்த்தைகள் இவை. உச்சபட்ச பாராட்டு கெட்ட வார்த்தையில்தானே முடியும்! இந்தியாவுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத இரு அணிகள் மோதிய, சாம்பியன்ஸ் லீக் மேட்ச்சை நேற்று நள்ளிரவு கண் விழித்து பார்த்தவர்களுக்குப் புரியும், பெர்குசன் ஏன் அப்படி வர்ணித்தார்... கால்பந்து ஏன் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்திருக்கிறது என்று. எஸ்... ஃபுட்பால் இஸ் ஏ பியூட்டிஃபுல் கேம். ஏன், எதனால்? இரண்டு வாரங்களுக்கு முன் பாரிஸில் நடந்த சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் -1…

  11. நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா முதல்நாள் முடிவில் 229 ரன் குவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் எல்கர் சதத்தால் தென்னாப்பிரிக்கா அணி முதல்நாள் ஆட்டம் முடிவில் 229 ரன்கள் குவித்துள்ளது. ட்யூனிடின்: தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் 5 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா கைப்பற்றியது. நியூசிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் ட்யூனிடின் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப…

  12. The 111th Battle of the North Cricket Encounter between Jaffna Central College and St. John’s College Jaffna will be played on 9th, 10th and 11th March, 2017 in Jaffna. Vs என்னால் முடிந்தவரை படங்களையும் ஸ்கோரையும் இணைக்க முயற்சிக்கின்றேன். நண்பர்களுடன் பெருமளவு நேரம் போகுமாகையால் - ஒழுங்குமுறையாக இணைக்க முடியாது மற்றய விடயம் ஸ்கோரை போடும்போது எனது கைப்பேசியில் இருந்துதான் போடவேண்டும். எனக்கு கைப்பேசியில் தமிழ் எழுத வராது (வெட்கப்படுகின்றேன் - ஆனாலும் பழக பஞ்சி) அதனால் அவை ஆங்கிலத்திலேயே பகிரப்படும். மன்னிக்கவும்.

  13. டெஸ்டில் கிரிக்கெட்டில் விரைவாக 25 முறை 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் விரைவாக 25 முறை 5 வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு அஸ்வின் பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது. முதல் இன்னிங்சில் 49 ஓவர்கள் வீசி 84 ரன்கள்…

  14. 5 விக்கட்டுகளை வீழ்த்தி, 83 ஓட்டங்களை விளாசிய செஹான் ஜயசூரிய : தொடரை கைப்பற்றியது இலங்கை (படங்கள்) இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி 4 விக்கட்டுகளால் வெற்றிபெற்று, 3-0 என தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 40.2 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி பெல் ட்ரம்மொவுட் 51 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக செஹான் ஜயசூரிய 35 ஓட்டங்களுக்கு 5 வ…

  15. 10 ஆயிரம் பாதுகாப்பு படையினருக்கு மத்தியில் பாக். சுப்பர் லீக் கிண்ணத்தை வென்றது பேஸ்வர் சல்மி (கணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பேஸ்வர் சல்மி அணி இந்த ஆண்டுக்கான செம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்த்தாடிய குவேட்ட கிலாடியேட்டர்ஸ் அணி 58 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது. பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற நிலையில், இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இடம்பெற்றது. கடந்த 2009 ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவ…

  16. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் மொட்டை அடித்துக் கொள்வோம்: சமி சொல்கிறார் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கைப்பற்றினால் உரிமையாளர் உள்பட அனைத்து வீரர்கள் மொட்டையடித்துக் கொள்வோம் என்று ஷமி கூறியுள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று பாகிஸ்தான் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் டேரன் சமி தலைமையிலான பெஷாவர் ஷல்மி அணியும், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது …

  17. ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி தென் ஆப்ரிக்கா தரவரிசையில் முதலிடம்! ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை அப்டேட் செய்து வெளியிட்டிருக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க அணி, ஆஸ்திரேலியாவை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்திருக்கிறது.தென் ஆப்ரிக்க அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று கடைசி போட்டி நடந்தது. இதில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா. இதையடுத்து 3-2 என தொடரையும் ஜெயித்தது தெ.ஆப்ரிக்கா. "இலங்கை தொடரை வென்றாலும், இந்த தொடர் கடுமையான சவால் அளிக்கக் கூடியதாக இருக்கும். இதை வென்றால் மட்டுமே சாம்பியன்ஸ் டிராஃபிக்கு நாம் தயார் என அறிவிக்க முடியும் என நினை…

  18. முதல் ஒருநாள் கிரிக்கெட்: வெ.இண்டீசை 45 ரன் வித்தியாசத்தில் வீழத்தியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மோர்கனின் சதத்தால் இங்கிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்று போட்டி கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி ராய், பில்லிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராய் 13 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜோ…

  19. பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் சங்காவின் மறுமுகம் : அதிர்ச்சிக்குள்ளான சகவீரர்கள் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியில் நேற்றைய போட்டியில் கராச்சி மற்றும் பேஸ்வர் அணிகள் மோதின. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் குவேட்டா கிலேடியேட்டர்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்நிலையில் நேற்று இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் கராச்சி அணியின் தலைவரும் இலங்கை அணியின் முன்னாள் வீரருமான குமார் சங்கக்காரவின் செயற்பாடுகள் ரசிகர்களுக்கு புதுமையளித்தது. நேற்றைய போட்டியில் பேஸ்வர் சல்மி அணி துடுப்பெடுத்தாடிக்கொண்டிருக்கும் போது 10 ஓவர் நி…

  20. மைதானத்தில் கண்ணீர்விட்டு அழுத வஹாப் ரியாஷ் : மனதை உருக்கும் சம்பவம் (காணொளி இணைப்பு) பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் நேற்றைய அரையிறுப்போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் அணி வீரர் வஹாப் ரியாஷ் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் ரசிகர்களை கண் கலங்க வைத்தது. இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணிக்காக விளையாடிய வஹாப் ரியாஷ் சிறப்பாக பந்துவீசி 24 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் போட்டி முடிந்து வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறிய போது வஹாப் ரியாஷ் கண்ணீர்விட்டு அழுதார். பாகிஸ்தான் சுப்பர் லீக் ஆரம்பிக்க இருந்த சில நாட்களுக்கு முன்னர் வஹாப் ரியாஷின் தந்தை இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன்னர் வஹாப…

  21. லா லிகா லீக் கால்பந்து: பார்சிலோனா அணிக்கு 17-வது வெற்றி லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 17-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது. ரியல் மாட்ரிட்-லாஸ் பால்மாஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. ரியல்மாட்ரிட்- லாஸ் பால்மாஸ் அணிகள் இடையிலான ஆட்டத்தில் விறுவிறுப்பான ஒரு காட்சி. மாட்ரிட் : ஸ்பெயினில் முன்னணி கிளப் அணிகளுக்கு இடையே நடைபெறும் லா லிகா லீக் கால்பந்து போட்டி பிரபலமானதாகும். 86-வது லா லிகா லீக் கால்பந்து போட்டி ஸ்பெயின் நா…

  22. பாகிஸ்தான் சூப்பர் லீக் இறுதிப்போட்டி: வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் சென்று விளையாடுவதில் தயக்கம் தான் காட்டி வருகிறார்கள். துபாய் : 2-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதன் இறுதிப்போட்டி லாகூரில் நாளை மறுநாள் (ஞாயிற…

  23. திசர பெரேரா அதிரடி : இங்கிலாந்தை வீழ்த்தியது இலங்கை இலங்கை ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி டக்வர்த் லூவிஸ் முறைப்படி 48 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி சிறந்த ஆரம்ப துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய குசல் பெரேரா மற்றும் குணதிலக ஆகியோர் அரைச்சதத்தை கடந்து முதல் விக்கட்டுக்காக 123 ஓட்டங்களை பகிர்ந்தனர். இதில் குசல் பெரேரா 59 ஓட்டங்களையும், குணதிலக 64 ஓட்டங்களைய…

  24. பம்பலப்பிட்டி - யாழ். இந்துக் கல்லூரிகள் மோதும் கிரிக்கெட் சமர் இன்று ஆரம்பமாகியது கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரிக்கும் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும் இடையில் வருடாந்தம் நடைபெறும் இந்துக்களுக்கிடையேயான சமர் என வர்ணிக்கப்படும் கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பமாகியது. இன்று காலை ஆரம்பமாகிய இப் போட்டி இரண்டு நாட்கள் நடைபெறும். இப் போட்டி கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறுகின்றது. பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி கிரிக்கெட் அணியின் தலைவராக கணபதி தினேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அணியின் தலைவராக கஜானந்த் செயற்படுகின்றார். இவ் வருடம் 2 ஆவது முறையாக நடைப…

  25. டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் டெவைன் ஸ்மித் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஸ்மித் இறுதியாக கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக விளைாயடியுள்ளார். ஸ்மித் 105 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1560 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்துள்ளதுடன், 61 விக்கட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இதேவேளை 33 இருபதுக்கு-20 போட்டிகளிலும், 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/17298

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.