விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
$100 மில்லியன் பரிசு பெறப்போகும் முதல் வீரர் யார் December 27, 2015 டென்னிஸ் போட்டிகளில் அதிக அளவு பணம் பரிசாக பெறும் வீரர்களில் முதல் இரண்டு இடங்களுக்கு சுவிஸ்ட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெடரர் மற்றும் செர்பியாவின் ஜோகோவிக் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகின்றது. 17 கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள பெடரர் இதுவரை பரிசு மூலம் 97.3 மில்லியன் டொலர் பணம் சம்பாதித்துள்ளார். அதே போல், கடந்த ஆண்டு மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் செர்பியாவின் ஜோகோவிக், 94 மில்லியன் டொலர்கள் சம்பாதித்துள்ளார். இந் நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கிராண்ட் ஸ்லாம் போட்டியின் வெற்றிய…
-
- 0 replies
- 505 views
-
-
கொரோனா பிடியில் ஒலிம்பிக்: அதிரடி தீர்மானத்துக்கு தயாராகும் ஜப்பான் By Mohammed Rishad கொரோனா எனும் கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் காரணமாக உலகளாவிய ரீதியில் பெரும்பாலான விளையாட்டுப் போட்டிகள் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், எதிர்லரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை பிற்போடுவதற்கு சர்வதேச ஒலிம்பிக் குழு தீர்மானித்துள்ளது. இதுதொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு ஜப்பான் ஒலிம்பிக் குழுவுடனான பேச்சுவார்த்தையின் பிறகு அறிவிக்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழ…
-
- 0 replies
- 521 views
-
-
Published By: Digital Desk 1 13 Sep, 2025 | 02:06 PM இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார். இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித…
-
- 0 replies
- 236 views
- 1 follower
-
-
“சுதந்திரக் கிண்ணம் ” கிரிக்கெட் தொடரை நடத்த தீர்மானம் : இலங்கை கிரிக்கெட் நிறுவனம் “சுதந்திரக் கிண்ணம்” ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடுசெய்து வருகின்றது. எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடவுள்ள நிலையில் “சுதந்திரக் கிண்ணம் ” என்ற பெயரில் ஒருநாள் கிரிக்கெட் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்து வருகின்றது. இத் தொடர் குறிப்பாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் எதிர்வரும் காலத்தில் அறிவிக்கப்படும். இத் தொடரில் இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்…
-
- 0 replies
- 325 views
-
-
இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையை சொந்த மண்ணில் முதல் முறையாக தென்னாப்பிரிக்கா வீழ்த்தியிருக்கிறது. இலங்கையில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் அஜந்தா மென்டிஸ் 3 விக்கெட்டுகளும், திசரா பெரேரா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். பின்னர் ஆடிய இலங்கை அணி தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்தனர். இந்த தடுமாற்றம் கடைசிவரை நீடித்தது…
-
- 0 replies
- 753 views
-
-
தோனி இல்லாத சிஎஸ்கேவை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? #VikatanSurveyResults சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக உள்ளே வருவதற்கான சிக்னல்கள் கிடைத்துவிட்டன. இரண்டு ஆண்டுகளாக சி.எஸ்.கே இல்லாததால் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் உள்ள அணிக்கு ஆதரவை அளித்துவந்தார்கள் ரசிகர்கள். அடுத்த ஆண்டு ரசிகர்களின் ஆதரவு யாருக்கு என்பதை அறியவே, இந்த #VikatanSurvey. விகடன்.காம் வாசகர்களிடம் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பாக இப்படியொரு சர்வேவை எடுத்திருந்தோம். தோனிக்கு இதில் மிகப்பெரிய அளவில் ஆதரவு குவிந்துள்ளது. ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? 1. சி.எஸ்.கே-வுக்கு யார் கேப்டனாகப் பொறுப்பேற்க வேண்டும்? முதல் கேள்விக்கே…
-
- 0 replies
- 405 views
-
-
ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா! நட்பு ரீதியிலான போட்டிதான் என்றாலும், அந்த ஆட்டத்தை உலகமே பார்த்தது. ஸ்பெயின் நாட்டின் பெருந்தலைகளான பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மல்லுக்கட்டிய ‛எல் கிளாசிகோ’ என்றால் சும்மாவா? அமெரிக்காவின் மியாமி நகரில் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை் போட்டியில் இரு அணிகளும் களம்கண்டன. ஃப்ரெண்ட்லி மேட்ச் என்றாலும் உக்கிரத்துக்குப் பஞ்சமில்லை. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்தது. தன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. ரொனால்டோ மட்டுமே அவுட்..…
-
- 0 replies
- 263 views
-
-
3 முறை தங்கம் வென்று சாதனைபடைத்த கராட்டி வீரர் தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் சௌந்தரராஜா பாலுராஜ் தொடர்ச்சியாக மூன்றுமுறை முதலிடத்தைப்பெற்று தங்கப்பதக்கத்தைவென்று சாதனை படைத்துள்ளார். கல்முனை, பிரதேச செயலாளர்பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர். 2014 ஆம் 2016 ஆம் ஆண்டுகளில் இந்தியா புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஷ்ட பிரிவு காட்டாப்போட்டியில் முதலிடம்பெற்று தங்கப்பதக்கத்தைப் பெற்றுச் சாதனைபடைத்தார். இறுதியாக இம்மாதம் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொர…
-
- 0 replies
- 422 views
-
-
பெண்கள் கிரிக்கெட்: 136 வைடுகள் வீசிய மணிப்பூர், நாகாலந்து அணி வீராங்கனைகள் பிசிசிஐ நடத்திய 19 வயதிற்குட்பட்டோருக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மணிப்பூர், நாகாலந்து வீராங்கனைகள் 136 வைடு பந்துகள் வீசினர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வடகிழக்கு- பீகார் ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற போட்டியில் மணிப்பூர் - நாகாலாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த நாகாலாந்து அணி 38 ஓவர்களில் 215 ரன்கள் …
-
- 0 replies
- 467 views
-
-
இலங்கை வீராங்கனை அமெரிக்காவில் சாதனை ! மரதன் போட்டிகளில் புதிய தேசிய சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார் இலங்கையின் மரதன் வீராங்கனையான ஹிருணி விஜேரத்ன. டெக்ஸாஸின் ஹொட்சனில் நடைபெற்ற சர்வதேச மரதன் போட்டியின் போதே ஹிருணி இந்த புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன் இலங்கை வீராங்கனை நிலூகா ராஜசேகரவினால் நிலைநாட்டப்பட்டிருந்த இரண்டு மணித்தியாலயம் 40 நிமிடம் 7 வினாடிகளில் அடைந்த பந்தயத் தூரத்தை, தற்போது ஹிருணி விஜேரத்ன இரண்டு மணித்தியாலயம் 36 நிமிடங்கள் 35 வினாடிகளில் கடந்து இலங்கையின் தேசிய சாதனையை புதுப்பித்துள்ளார். இந்த தேசிய சாதனையுடன் எதிர்வரும் ஏப்ரல் மா…
-
- 0 replies
- 243 views
-
-
கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜனவரி 2023, 04:27 GMT பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டி…
-
- 0 replies
- 240 views
- 1 follower
-
-
இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்கும்: ரசல் ஆர்னல்ட் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இலங்கை அணியின் இரட்டையர்கள் என வர்ணிக்கப்படும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் ஓய்வு பெற்றதன் பின்னர் இலங்கை அணி பாரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் தெரிவித்தார். ஒரு நாள் அரங்கில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோரின் ஓய்வு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இரட்டை சகோதர்களான சங்கக்கார, ஜயவர்தன ஆகியோர் இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய இரு தூண்கள் ஆவர். ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஓய…
-
- 0 replies
- 543 views
-
-
தேசிய வலைப்பந்து அணியில் மேலும் ஒரு தமிழ் வீராங்கனை இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சே.எழில்வேந்தினி தெரிவு செய்யப்பட்டார். ஆசிய மட்ட வலைப்பந்தாட்டத் தொடர் சிங்கப்பூரில் அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இந்தத் தொடருக்கான அணித் தெரிவுக்காக கொழும்பில் கடந்த ஒரு மாதகாலமாக வீராங்கனைகளுக்குப் பயிற்சி வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் அணிக்கான 12 வீராங்கனைகளின் தெரிவுப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த சே.எழில்வேந்தினி …
-
- 0 replies
- 695 views
-
-
3 வது ஒருநாள் போட்டியிலும் நியூஸிலாந்து அணி வெற்றி… January 8, 2019 இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் இன்று நடைபெற்ற நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட் இழப்புக்கு 364 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணி சார்பாக டைலர் 137 ஓட்டங்களையும் நிகோல்ஸ் ஆட்டமிழக்காது 124 ஓட்டங்களையும் பெற்றனர். லசித் மாலிங்க 93 ஓட்டங்களுக்கு 03 விக்கட்டுக்களை வீழ்தி…
-
- 0 replies
- 575 views
-
-
எனக்கு கொல்கத்தா அணியே போதும்: வாசிம் அக்ரம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக வாய்ப்பு அளிக்கப்பட்டால் என்ன செய்வார் என்ற கேள்விக்கு வாசிம் அக்ரம், 'எனக்கு கொல்கத்தாவே போதும்' என்று சற்றே நகைச்சுவையுடன் பதிலளித்தார். கொல்கத்தாவில் செய்தி நிறுவனத்திடம் வாசிம் அக்ரம் பேசும்போது, அவருக்கு முன்னால் இந்திய முன்னாள் வீரரும் தேர்வுக்குழு தலைவருமான திலிப் வெங்சர்க்கார் அமர்ந்திருந்தார். வாசிம் அக்ரமிடம் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக வாய்ப்பு வந்தால் என்ன செய்வார் என்று கேட்கப்பட்டது. அப்போது வெங்சர்க்கார் குறுக்கிட்டு, “இது ஒரு அருமையான யோசனை. வாசிம் அக்ரம் தன்னம்பிக்கையையும் நேர்மறை அணுகுமுறையையும் வீர்ர்களிடத்தில் வளர்த்தெடுப்பார். இன்றைய கிரிக்கெ…
-
- 0 replies
- 424 views
-
-
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா சம்பியனானார் January 26, 2019 மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகின்ற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி ஜப்பானின் நவோமி ஒசாகாவை சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளார். நவோமி 7-6 (2) , 5-7 , 6-4 என்ற செட் கணக்கில் பெற்று அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற முதல் ஜப்பானிய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2019/111310/
-
- 0 replies
- 570 views
-
-
'மோசடி' கேட்சை எடுத்து லாராவை வீழ்த்தியதில் பெருமிதம் தேவையா? - ஸ்டீவ் வாஹ் மீது ரிச்சர்ட்ஸ் பாய்ச்சல் 1995-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிகழ்ந்தன. முதலில் ஆம்புரோஸ், ஸ்டீவ் வாஹ் நடத்தை மீது தனது விமர்சனத்தை பகிரங்கமாக தனது சுயசரிதையில் எழுதினார். தற்போது ஆஸ்திரேலிய அணி, மே.இ.தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இதனையடுத்து பழைய சர்ச்சைகள் கிளம்புகின்றன என்றாலும் ஸ்டீவ் வாஹ் பிடித்த ‘மோசடி’ கேட்சிற்கு பிரையன் லாரா வெளியேறியது உலக கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத ஆஸ்திரேலிய கிரிக்கெட் மோசடிகளில் புகழ்பெற்றது. 1995-ம் ஆண்டு நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்டத்தில் மே.இ.தீவு…
-
- 0 replies
- 422 views
-
-
சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்தார் அலிஸ்டர் குக் டெஸ்ட் கிரிக்கெட்டில் 9,000 ரன்களை குறைந்த வயதில் எடுத்ததற்கான சச்சின் டெண்டுல்கர் சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்தார். ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். அதாவது சச்சின் டெண்டுல்கரை விட 94 நாட்கள் முன்னதாகவே அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். 30 வயது, 159 நாட்களில் அலிஸ்டர் குக் 9,000 ரன்களை எட்ட, சச்சின் டெண்டுல்கர் தனது 9,000 டெஸ்ட் ரன்களை 30 வயது, 253 நாட்களில் எடுத்தார். ஆனால் 31 வயதுக்கு முன்பாகவே டெஸ்டில் 9,000 ரன்களை எடுத்த வீரர்கள் சச்சின் மற்றும் குக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 204 இன்னிங்ஸ்களில் 9,000 ரன்…
-
- 0 replies
- 357 views
-
-
பாக் வீரர்கள் மீது குற்றம் ஊர்ஜிதம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் சல்மான் பட் மற்றும் வேகப் பந்து வீச்சாளர் முகமது ஆசிப் ஆகிய இருவரும் கிரிக்கெட் பெட்டிங் ஊழலில் ஈடுபட்டதாக லண்டன் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது சல்மான் பட் வேண்டுமென்றே நோ பால்களை வீசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தாங்கள் எவ்வித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை என்று இந்த இருவரும் தெரிவித்தனர். பணம் வாங்கியதாக கூறப்படுவதையும் மறுத்தனர். ஆனால் இந்த வழக்கை விசாரித்த 12 ஜூரிக்களில் 10 பேர் சல்மான் பட் பணம் வாங்கிக் கொண்டு முறைகேடு செய்ததில் உடந்தையாக இருந்தார் என்ற தீர்ப்பை எட்டியுள்ளனர். அதே நேரம் முகமது ஆ…
-
- 0 replies
- 496 views
-
-
தாக்கிய சுறாவை பந்தாடிய தில்லான உலக சாம்பியன் வீரர்! (வீடியோ) கடலில் அலை சறுக்குப் போட்டியில் ஆஸ்திரேலியா வீரரும், உலக சாம்பியனுமான மிக் ஃபானிங் ஈடுபட்டு கொண்டிருந்தபோது திடீரென சுறா தாக்கியதால் சுதாரித்துக் கொண்ட அவர், எதிர் தாக்குதல் நடத்தி அதனை விரட்டி அடித்துள்ளார். இந்த தில்லான சம்பவம் தென் ஆப்பிரிக்காவில் நடந்துள்ளது. https://youtu.be/iJchroxUM0Q ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல நீர்சறுக்கு வீரர் மிக் ஃபானிங். இவர் நீர் சறுக்கு விளையாட்டில் மூன்று முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இந்நிலையில் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஃபானிங், தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளார். போர்ட் எலிசபெத் நகரில் ஜெஃப்ரி பே ஓபன் அலை சறுக்குப் போட்டியில் அவர் ஈடுபட்டு…
-
- 0 replies
- 232 views
-
-
பத்திரிகையாளரை தாக்கிய மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் நீக்கம் ! பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதால் மெக்சிகோ கால்பந்து அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அண்மையில் நடந்த 'கான்காப்' தங்க கோப்பை கால்பந்து தொடரில் மெக்சிகோ அணி, இறுதி ஆட்டத்தில் ஜமைக்கா அணியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டியில் கோப்பையை வென்ற 24 மணி நேரத்துக்குள், மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் மிகுவேல் ஹெரைரா, தொலைக்காட்சி நிருபர் ஒருவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த திங்கட்கிழமை பிலடெல்பியா விமான நிலையத்தில் வைத்து, அஸ்டெகா தொலைக்காட்சியின் நிருபரான கிறிஸ்டியன் மார்ட்டினோலியின் முகத்தில் மிகுவேல் குத்தியுள்ளார்…
-
- 0 replies
- 211 views
-
-
பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை! அபாரமான பந்து வீச்சினால் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே கார்டீபில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் இரவு 8.30 மணியளவில் ஓவர்களின…
-
- 0 replies
- 799 views
-
-
இன்று இரவு 7 மணிக்கு கேப்டன் தோனி...! இந்திய அணியின் கேப்டன் தோனி 50 டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தவர் என்ற பெருமையை இன்று பெறப் போகிறார். உலகிலேயே இத்தகையை சாதனையை எட்டும் முதல் கேப்டன் தோனிதான். தென்ஆப்ரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஹிமாச்சல்பிரதேசத்தில் உள்ள எழில்கொஞ்சும் தரம்சாலாவில் இன்று இந்த இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் கேப்டன் தோனியின் 50வது டி20 போட்டி ஆகும். இந்த பட்டியலில் அயர்லாந்தின் வில்லியம் போர்டர்பீல்ட் 41 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக பணியாற்றி 2வது இடத்தை பிடிக்கிறார். அடுத்ததாக மேற்கிந்திய தீவுகள் அணியின் டேரன் சமி 39 போட்டிகளுக்கு கேப்டனாக பண…
-
- 0 replies
- 263 views
-
-
இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய இலட்சினை வெளியீடு October 28, 2015 புதிய டைட்டில் அனுசரணையாளர் விவோவுடனான ஐ.பி.எல் புதிய இலட்சினை நேற்று முன்தினம் திங்கட் கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி ஒன்பதாவது ஐ.பி.எல் போட்டிகள் விவோ ஐ.பி.எல் என அழைக்கப்படவுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஐ.பி.எல் போட்டிகளின் டைட்டில் அனுசரணையாளராக இருந்த பெப்சி நிறுவனம் அண்மையில் வெளியேறியது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் சூதாட்டத்தினால் கிரிக்கட் மதிப்பிழந்துள்ளதாகத் தெரிவித்து தனது அனுசரணையிலிருந்து விலகியது. இதனையடுத்து சீனாவின் ஸ்மார்ட் போன் நிறுவனமான விவோ எதிர்வரும் இரு ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான வங்கி உத்தரவாதம் கடந்தவாரம் வழங்கப்பட்டது. இந்நிலையி…
-
- 0 replies
- 400 views
-
-
கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் பொண்டிங்கின் துடுப்பாட்டத்தில் பாதிப்பு [18 - February - 2008] [Font Size - A - A - A] கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் ரிக்கி பொண்டிங்கின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். முக்கோண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது சராசரி 10 ஆகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் தான் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைக் கப்டன் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரிக்கி பொண்டிங்குக்கு எல்லா வீரர்களைப் போல் பல பிரச்சினைகள் என்றாலும…
-
- 0 replies
- 854 views
-