விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
FIFA ஊழல் காரணமாக ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கம் December 18, 2015 சர்வதேச கால்பந்து சபையின் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய ஐம்பது சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக சுவிஸ் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சுவிஸ் வங்கிக் கணக்குகளில் சர்வதேச கால்பந்து சபையில் இடம்பெற்ற ஊழல் பணம் நகர்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் நம்புவதாகவும் இதன் காரணமாக குறித்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச காற்பந்து சபையில் கடந்த இருதசாப்தங்களுக்கும் மேலாக இடம்பெற்ற ஊழல்கள் குறித்த விசாரணைகள் தற்போது முழு வீச்சில் இடம்பெற்று வருகின்றன. உலகக்கிண்ண கால்பந்து போட்டிகளின் போது ஒளிபரப்பு உரிமம…
-
- 0 replies
- 722 views
-
-
FIFA முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ சிறையில் December 27, 2015 சுவிஸர்லாந்திலிருந்து உருகுவேக்கு நாடுகடத்தப்பட்ட முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ ஃபெகரெய்டோ உருகுவேயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். பிபா ஊழல் குற்றச்சாட்டில் கடந்த மே மாதம் சுவிஸர்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர் யூஜினியோ விசாரணைகளுக்காக நேற்று (வியாழக்கிழமை) உருகுவேக்கு நாடு கடத்தப்பட்டார். இந்நிலையில் உருகுவேயை வந்திறங்கிய யூஜினியோ நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் காவலில் வைப்பதற்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யூஜினியோ ஃபெகரெய்டோ கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 2006 ஆ…
-
- 0 replies
- 500 views
-
-
சர்வதேச இருபது 20 கிரிக்கெட் அரங்கில் ஆப்கான் சார்பாக ஷேஹ்ஸாத் முதல் சதம் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையைப் பதிவு செய்த மொஹமத் ஷேஹ்ஸாத், ஸிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபது 20 போட்டியில் ஆப்கானிஸ்தானின் இலகுவான வெற்றிக்கு வித்திட்டார். ஷார்ஜா கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிறன்று மின்னொளியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 215 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப வீரர் மொஹமத் ஷேஹ்ஸாத் 67 பந்துகளை எதிர்கொண்டு 8 சிக்ஸர்கள், 10…
-
- 0 replies
- 488 views
-
-
ராயல் சேலஞ்சர்ஸ் அணி இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா விலகல்! புதுடெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் ம…
-
- 0 replies
- 414 views
-
-
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: நியூஸி. அணியில் ஜேம்ஸ் நீஷம் நியூஸிலாந்து ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம். | படம்: ராய்ட்டர்ஸ். இந்தியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க பயணிக்கும் நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது, இதனையடுத்து கொல்கத்தா, இந்தூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது. கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பன் மைதானத்தில் கடைசியாக டெஸ்டில் ஆடிய ஜேம்ஸ் நீஷம் மீண்டும் தன்னை நிரூபிக்க வாய்ப்பு பெற்றுள்ளார். நியூஸிலாந்து டெஸ்ட் அணி: கேன் வில்ல…
-
- 0 replies
- 485 views
-
-
நெதர்லாந்து கால்பந்து வீரர் ராபின் வேன் பெர்ஸி கண்ணில் காயம் (வீடியோ) ராபின் வேன் பெர்ஸி நினைவிருக்கிறதா? பிரேசில் நாட்டில் 2014ல் நடந்த உலக கோப்பையில் ஸ்பெயின் அணிக்கு எதிராக அந்தரத்தில் பறந்து தலையால் முட்டி கோல் அடித்தாரே... யார் கண் பட்டதோ இப்போது அவர் கண்ணுக்கு சிக்கல். மான்செஸ்டர், ஆர்சனல் கிளப்களின் முன்னாள் வீரரான ராபின் தற்போது, துருக்கியில் உள்ள பெனர்பேஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை நடந்த லீக் போட்டியின்போது பெனர்பேஸ் - அகிசர் அணிகள் மோதின. பெனர்பேஸ் அணியின் முதல் கோலை ராபின் அடித்தார். ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸில் வைத்து அகிசர் அண…
-
- 0 replies
- 336 views
-
-
2019 வரை மெத்தியூஸே அணித் தலைவர் ; திலங்க சுமதிபால இலங்கை அணித் தலைவரை மாற்றுவது தொடர்பில் கலந்தாலோசிக்கவில்லை. அடுத்த உலகக்கிண்ணம் வரை அஞ்சலோ மெத்தியூஸ் தான் அணித்தலைவரென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் சபையின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸை மாற்றுவது தொடர்பில் நாம் கலந்துரையாடவில்லை. அணியில் தற்போது இருக்கும் குறைநிறைகளை பற்றியே நாம் ஆராய்ந்தோம்…
-
- 0 replies
- 412 views
-
-
'இந்திய கிரிக்கெட்டில் யுவராஜ், தோனியின் நிலை என்ன?' - கேள்வி எழுப்பும் டிராவிட்! 'இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக் கோப்பை வரப் போகிறது. அதற்கு முன் இந்திய அணியில் இருக்கும் சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி குறித்து ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளின்போது இந்திய அணியில் இடம் பெற்றிருந்த சீனியர் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் தோனி, பெருமளவு சோபிக்கவில்லை. குறிப்பாக, இறுதிப் போட்டியில் அவர்கள் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினர். இதையடுத்து, அணியில் அவர்கள் இடம் குறி…
-
- 0 replies
- 377 views
-
-
வங்கதேசத்தை மூழ்கடித்த ராம்தின், டேரன் பிராவோ சாதனை சதங்கள் செயிண்ட் கிட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வதும், இறுதியுமான ஒரு நாள் போட்டியில் மேற்கிந்திய அணியின் பேட்டிங் வங்கதேசத்தை மூழ்கடித்தது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 338 ரன்கள் விளாச, வங்கதேசம் 247 ரன்களை மட்டுமே எடுத்து படுதோல்வி தழுவியது. இதன் மூலம் 3 ஒருநாள் போட்டிகளிலும் தோல்வி அடைந்தது வங்கதேசம். வெஸ்ட் இண்டீஸ் அணியின் தினேஷ் ராம்தின், டேரன் பிராவோ இணைந்து 3வது விக்கெட்டுக்காக 258 ரன்கள் சேர்த்தது. புதிய ஒருநாள் சாதனையாகும். இதற்கு முன்னர் தென் ஆப்பிரிக்க ஜோடி ஹஷிம் ஆம்லா, ஏ.பி.டிவிலியர்ஸ் பாகிஸ்தானுக்கு எதிராக 3வது விக்கெட்டுக்காகச் சேர்த்த 238 ரன்களே உலக சாதனைய…
-
- 0 replies
- 882 views
-
-
களத்தில் அதிரடியாக ஆடும் ஹெர்ஷல் கிப்ஸ், கிரிக்கெட் சூதாட்ட விசாரணையின் போது மிரண்டு போயுள்ளார். டில்லி பொலிஸார் இவரிடம் 100க்கும் அதிகமான கேள்விகளை கேட்டு மடக்கியுள்ளனர். மிகுந்த பதற்றமாக இருந்த கிப்ஸ், சில கேள்விகளுக்கு `மறந்து விட்டேன்', `நினைவுக்கு வரவில்லை' என்று கூறி சமாளித்துள்ளார். 2000 ஆம் ஆண்டில் தென் ஆபிரிக்க அணி இந்தியா வந்த போது கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சை வெடித்தது. இதில் அப்போதைய கப்டன் குரோஞ்ஞே, கிப்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நிக்கி போஜே சிக்கினர். குரோஞ்ஞே மரணமடைய, மற்ற இருவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்படும் அபாயம் இருந்ததால் இந்தியப் பயணத்தை கிப்ஸ் தவிர்த்து வந்தார். இந்தச் சூழலில் இவர் மினி உலகக் கிண்ணத் தொடரில…
-
- 0 replies
- 990 views
-
-
இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி ஒன்றில் ஸ்பாட் பிக்சிங்: அல்ஜசீரா வீடியோவால் பரபரப்பு படம். | ஏ.பி. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே 2017-ல் ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் நடந்ததாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவில் வெளியான செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: அல்ஜஸீரா டிவி சேனல் ஆவண வீடியோ ஒன்றில் ராஞ்சியில் இந்தியா-ஆஸ்திரேலியா 2017 தொடரில் ஆடிய டெஸ்ட் போட்டி பற்றி காட்டப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஒரு கட்டத்தில் இரண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் சூதாட்டக்காரர்களின் நலன்களுக்காக ஸ்கோர் செய்தத…
-
- 0 replies
- 239 views
-
-
ஆறு மாதங்களில் இலங்கை சிறந்த அணியாக உருவெடுக்கும் – ஹத்துருசிங்க எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் இலங்கை அணி சிறந்த நிலைக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ள இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க, அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள் வரை பொறுமையுடன் இருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் தொடரின் பிறகு அங்கு சென்றுள்ள இலங்கை ஊடகவியலாளர்களுக்கு சந்திக்க ஹத்துருசிங்க பிரத்தியேக நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். அதில் இலங்கை அணி பெற்றுக்கொண்ட வரலாற்று வெற்றி குறித்து அவர் கருத்து வெளியிடுகையில், ”மேற்கிந்திய தீவுகளுக்கு நாங்கள் வந்தபோ…
-
- 0 replies
- 417 views
-
-
உலக கோப்பையில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் டாப்-10 பேட்ஸ்மேன்கள்! சென்னை: வரும் 14ம்தேதி உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ள நிலையில், பல நாட்டு ரசிகர்களும் தங்களது ஃபேவரைட் ஹீரோ பேட்ஸ்மேன்கள் மீது ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை வைத்து காத்திருக்கின்றனர். இந்த உலக கோப்பையில் ஜொலிக்க வாய்ப்புள்ள கிரிக்கெட் வீரர்களில் முக்கியமான பத்து பேரின் பெயர்களையும், அதற்கான காரணங்களையும் இப்போது பார்க்கலாம். ஏபிடி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் கம்பீரமாக அமர்ந்திருப்பவர் தென் ஆப்பிரிக்காவின் ஏபிடி வில்லியர்ஸ். டெஸ்ட் போட்டியிலும் 2வது ரேங்க் இவருக்கு என்பதில் இருந்து எத்தனை திறமையான மனிதர் என்பதை புரிந்துகொள்ள முடியும். தொடர்ந்து 78 டெஸ்ட்…
-
- 0 replies
- 1.5k views
-
-
"ராக்கெட்" கெய்லின் செம ரெக்கார்ட்... 500 சிக்ஸ் அடித்து உலக சாதனை! பெங்களூர்: டுவென்டி 20 போட்டிகளில் 500 சிக்ஸர்களை விளாசி புதிய உலக சாதனை படைத்துள்ளார் கிறிஸ் கெய்ல். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தற்போது ஆடி வரும் கெய்ல், இதுவரை ஆடியுள்ள டுவென்டி 20 போட்டிகளில் மொத்தமாக 500 சிக்ஸர்களைக் குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார். நேற்று நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது தனது 500வது சிக்ஸரை விளாசினார் கெய்ல். இது கெய்லுக்கு 201வது டுவென்டி 20 போட்டியாகும். இவருக்கு அடுத்த இடத்தில் சக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரரான கீரன் போலார்ட் உள்ளார். அவர் இதுவரை 348 சிக்ஸர்களை விளாசியுள்ளார். ஐபிஎல் வரலாற்றிலும் அதிக சிக்ஸர்களை விளாசியவர் கெய்ல்தான்.…
-
- 0 replies
- 439 views
-
-
இந்தியா-வங்கதேசம் போட்டி அட்டவணை இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணியுடன் ஒரு டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய அணி ஜூன் 7-ம் தேதி வங்கதேசத்துக்கு புறப்படுகிறது. டெஸ்ட் போட்டி ஜூன் 10-ம் தேதி ஃபதுல்லாவில் நடைபெறுகிறது. 9 ஆண்டுளுக்குப் பிறகு ஃபதுல்லா மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே ஜூன் 18, 21, 24 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வங்கதேசத்தில் அடுத்த மாதம் மழைக்காலம் என்பதால் ஒருநாள் போட்டி மழையால் தடைபட வாய்ப்புள்ளது. ஒருவேளை போட்டி தடைபடுமானால் அடுத்த நாளில் நடத…
-
- 0 replies
- 394 views
-
-
இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி : January 27, 2019 பிரிட்ஜ்டவுனில் நடைபெற்ற இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 381 ஓட்ட வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல் துடுப்பாட்டத்தினை மேற்கொண்ட மேற்கிந்திய தீவுகளுகள் அணி முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களை எடுத்த அதே வேளை இங்கிலாந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது. இதனையடுத்து 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் 6 விக்கெட் இழப்பிற்கு 415 ஓட்டங்கை பெற்ற நிலையில் விளையாட்டினை நி…
-
- 0 replies
- 274 views
-
-
மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…
-
- 0 replies
- 248 views
-
-
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில், “பெப்ரவரி 15 ஆம் திகதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவர…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
அப்துல் கலாம் மறைவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுன அஞ்சலி! சென்னை:குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மறைவை முன்னிட்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மவுனஅஞ்சலி செலுத்தினர். சென்னை சேப்பக்கம் மைதானத்தில் இந்திய -ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகளுக்கிடையேயான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. முன்னதாக இந்த போட்டி தொடங்கும் முன், மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 2 நிமிடம் மவுனஅஞ்சலி கடைபிடிக்கப்பட்டது. அதோடு இரு அணி வீரர்களும் கறுப்பு பட்டையை கையில் அணிந்தவாறு விளையாடினர். இந்திய அணி 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வ…
-
- 0 replies
- 341 views
-
-
சோபர்ஸ் இல்லையென்றால் ..... : மனம் திறந்த அர்ஜுன ரணதுங்க சேர் கார்பீல்ட் சோபர்ஸ் மட்டும் இல்லையென்றால் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை இவ்வளவு தூரம் வளர்ந்திருக்காது என்று, இலங்கைக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். உலகின் தலைசிறந்த சகலதுறை ஆட்டக்காரராக கருதப்படும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் அணித் தலைவர் சேர் கார்பீல்ட் சோபர்ஸ் இலங்கை வந்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பார்வையாளராகப் பங்குபற்றிய சேர் கார்பீல்ட் சோபர்ஸுக்கு, துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சில், அமைச்சர் அர்ஜுன ரண…
-
- 0 replies
- 290 views
-
-
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகும் இந்திய வீரர் December 18, 2015 ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரை அந்த அணி நிர்வாகம் நியமித்துள்ளது. இந்திய அணியில் பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக செயல்பட்டவர் மனோஜ் பிரபாகர். வேகப்பந்துவீச்சாளரான இவர், ஒருநாள் ஆட்டத்தில் 96 விக்கெட்டுகளும் டெஸ்டில் 157 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார், மேலும் முதல் தர கிரிக்கெட்டில் 385 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்துள்ள இவரை தற்போது ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக அந்த நாட்டின் கிரிக…
-
- 0 replies
- 604 views
-
-
இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட வீரர் அக்ஷு பெர்னாண்டோ காலமானார் Published By: Digital Desk 3 30 Dec, 2025 | 01:16 PM (என்.வீ.ஏ.) South Asians & Diaspora இலங்கையின் முன்னாள் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர் அக்ஷு பெர்னாண்டோ இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) காலமானார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையும் உயிரும் துரதிர்ஷ்டவசமாக அகால முடிவுக்கு வந்ததை அடுத்து கிரிக்கெட் சமூகத்தினர் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நியூஸிலாந்தில் 2010இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண் கிரிக்கெட் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய அக்ஷு பெர்னாண்டோ, 2018 டிசம்பர் 28ஆம் திகதியன்று கல்கிஸ்ஸை கடற்கரைக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில…
-
- 0 replies
- 108 views
- 1 follower
-
-
வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி ஆகியோரின் அனுபவம் தேவை ; அரவிந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மஹேல, சங்கா, முரளி, அசங்க குருசிங்க போன்ற முன்னாள் வீரர்களின் அனுவம் மற்றும் அவர்களின் அறிவுத்திறன் போன்றன தேவைப்படுவதாக இலங்கை கிரிக்கெட் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வா தெரிவித்தார். “ எதிர்கால திட்டத்திற்கான பயிற்சி ” எனும் திட்டத்தின் கீழ் பயிற்றுவிப்பாளர்களுக்கான கருத்தரங்கு விளையாட்டுத்துறை அமைச்சின் டங்கன் வைட் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது. குறித்த கருத்தரங்கின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அ…
-
- 0 replies
- 347 views
-
-
ஆஸி.க்கு மகிழ்ச்சி! இந்தியாவுக்கு சோகம்! இது தான் பாக்ஸிங் டே வரலாறு! #BoxingDayTest ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் தொடரை ஒரு யுத்தமாக பார்க்கிறது என்றால் அதற்கு இணையானது தான் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியும். அதாவது எல்லா வருடமும் எதாவது ஒரு அணியுடன் ஆஸ்திரேலிய அணி டிசம்பர் 26-ம் தேதி மெல்பெர்ன் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் ஆடும். அதனை வென்றே தீர வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு முறையும் ஆக்ரோஷமாக ஆஸி அணி களமிறங்கும். பாக்ஸிங் டே வரலாறு! விக்டோரியா அணிக்கும், நியூ சவுத் வேல்ஸ் அணிக்கும் இடையே ஷெஃபீல்டு ஷீல்டு போட்டி கிறிஸ்துமஸ் சமயத்தில் மெல்பெர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. அதில் பாக்ஸிங் டேயும் அடக்கம். நியூ சவுத் வேல்ஸ் வீரர்கள் கி…
-
- 0 replies
- 341 views
-
-
4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலக சாதனையை முறியடித்தது அமெரிக்கா அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் அணி, 4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நான்கு வகையான நீச்சல் போட்டிகளை (பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை, ஃப்ரீஸ்டைல்) உள்ளடக்கிய மெட்லி போட்டிக்கான தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான கலப்பு மெட்லி பிரிவில் அமெரிக்காவின் ரியான் மர்பி, கெவின் கார்டஸ், கெல்சி…
-
- 0 replies
- 310 views
-