விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
'இனிமேல் இப்படி ஒரு கேள்வியை கேட்கமாட்டேன்'- சானியாவிடம் மன்னிப்பு கேட்ட ராஜ்தீப் பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, அடிக்கடி ஏதாவது கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். ஆனால் கடந்த ஒரு வருடமாக அமைதியாகவே இருந்து வந்தார். ‘Ace Against Odds’ என்ற சானியாவின் சுய சரிதை புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. இது குறித்து பிரபல ஆங்கில தொலைக்காட்சியின் லைவ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் சானியா. இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல தொகுப்பாளர் ராஜ்தீப் சர்தேசாய் நெறியாளராக செயல்பட்டார். நிகழ்ச்சியின்போது எடுத்தவுடனேயே ஒரு கேள்வியை கையில் எடுத்த ராஜ்தீப், சானியா அளித்த பதிலால் மன்னிப்பு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். " என்ன சானியா ஓய்வு பெறு…
-
- 0 replies
- 615 views
-
-
மேற்கிந்திய தீவுகள் T20 அணிக்கு கார்லோஸ் பிரத்வைட் தலைவராக நியமனம். மேற்கிந்திய தீவுகள் T20 அணிக்கு கார்லோஸ் பிரத்வைட் தலைவராக நியமனம். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் T20 தலமைப் பொறுப்பில் இருந்து 32 வயதான டேரன் சமி நீக்கப்பட்டுள்ள நிலையில் அதிரடி வீரர் கார்லோஸ் பிரத்வைட் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தாண்டு T20 உலக கிண்ணத்தை வெற்றிகொள்ள பிரதான காரணமாக திகழ்ந்தவர் இந்த கார்லோஸ் பிரத்வைட் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமி தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணி, கடந்த 2012 மற்றும் 2016-ஆம் ஆண்டு T20 உலகக் கிண்ணத்தை வென்றது. தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து சமி கருத்து வெளியிட்டுள்ளார்.ஆறு ஆண…
-
- 0 replies
- 414 views
-
-
இலங்கையில் கிரிக்கெட் மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளது இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=146588
-
- 0 replies
- 818 views
-
-
20 ஓவர் கிரிக்கெட்டிலும் டி.ஆர்.எஸ். முறை: ஐ.சி.சி. பரிந்துரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி) கிரிக்கெட் கமிட்டியின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அந்த கமிட்டியின் தலைவர் அனில் கும்ப்ளே தலைமையில் நடந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில் கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை கொண்டுவர பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் (டி.ஆர்.எஸ்) முறை உள்ளது. அதை 20 ஓவர் கிரிக்கெட்டிலும் நடைமுறைப்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு டி.ஆர்.எஸ். முறையில் 2 வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதை பயன்படுத்தும்போது அணிக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் …
-
- 0 replies
- 287 views
-
-
பதவி விலகினார் மத்தியூஸ் - இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், 3 வகையான போட்டிகளின் தலைமைத்துவத்திலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். சிம்பாப்வே அணிக்கெதிராக, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், இலங்கை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்தே, இந்தப் பதவி விலகல் இடம்பெற்றுள்ளது. மத்தியூஸ், 34 டெஸ்ட் போட்டிகளிலும் 98 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் 12 இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் தலைமை தாங்கியிருந்தார். http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பதவி-விலகினார்-மத்தியூஸ்/44-200391
-
- 0 replies
- 329 views
-
-
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்? அதிர்ச்சியில் விளையாட்டு உலகம் டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன் போட்டிகள் மிகவும் பிரபலம். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டியில், தற்போது மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. கடந்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்தன. டென்னிஸ் உலகில் அதிக கௌரவமான இந்தத் தொடரில், ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், ஃப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலும் இதே போன்று மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாக, டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவான டிஐயு-வுக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 53 புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்பட…
-
- 0 replies
- 403 views
-
-
ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு ஆபிரிக்கா கண்டத்தின் முதல் நாடாக நைஜீரியா தகுதி பெற்றுள்ளது. ஆபிரிக்க மண்டலத்திற்காக கடந்த சனிக்கிழமை (07) நடைபெற்ற ஸம்பியா (Zambia) அணிக்கு எதிரான தகுதிகாண் போட்டியை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் நைஜீரியா உலகக் கிண்ணத்தில் பங்குபெறுவதை உறுதி செய்துகொண்டது. இந்த வெற்றியின் மூலம் நைஜீரியா ஆபிரிக்க மண்டலத்தின் B குழுவில் மொத்தம் 13 புள்ளிகளை பெற்று அந்த குழுவில் உள்ள ஏனைய அணிகளால் நெருங்க முடியாத அளவு முன்னிலை பெற்றது. மறுபுறம் இந்த குழுவில் இரண்டாவது இடத…
-
- 0 replies
- 403 views
-
-
சுதந்திரக் கிண்ண மும்முனை கிரிக்கெட் தொடர் மார்ச் 6 இல் ஆரம்பம் இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மும்முனை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பங்களாதேஷ், இலங்கை மற்றும் இந்திய அணிகள் பங்கேற்கும் சுதந்திரக் இருபதுக்கு - 20 கிரிக்கெட் மும்முனைத் தொடர் கொழும்பில் இடம்பெறவுள்ளது. மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் 18 ஆம் திகதி வரை கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறும். தொடரின் முதலாவது போட்டி இலங்கை - இந்திய அணிகளுக்கிடையில் மார்ச் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறும். http://www.virakesari.lk/article/30338
-
- 0 replies
- 186 views
-
-
ஆஸ்திரேலியா மீண்டும் ஆலன் பார்டரிலிருந்து தொடங்க வேண்டும்! #SAvAUS தோல்வியை உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? தோல்வியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், தோல்வி பெற்றுவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அவமானமாக தென் ஆப்பிரிக்க மண்ணில் 3-1 என டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடைசி டெஸ்ட்டில் 492 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்பது கடந்த 90 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா சந்திக்காத சறுக்கல். உலகுக்கே கிரிக்கெட் எப்படி ஆடப்படவேண்டும், கேப்டன்ஷிப் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுத்த ஆஸ்திரேலியா இப்படி ஒரு மாபெரும் அவமானத்…
-
- 0 replies
- 385 views
-
-
ஆயிரம் நாள்களுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் தோனி! - எப்படி இருந்தது அந்த அனுபவம்? #VikatanExclusive மே 10 2015 - சுண்டி விடப்பட்ட டாஸ் காயின் எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் வெடிப்புகள் விரிந்த பிட்ச்சில் சத்தமே இல்லாமல் விழுகிறது. வெற்றி தோனிக்கு! அதற்கே ஆர்ப்பரிக்கிறது, மஞ்சளை தங்கள் மதமாக ஏற்றுக்கொண்ட அந்த பெருங்கூட்டம்! பேட்டிங்கை தேர்ந்தெடுக்கிறார் தோனி. 'Live It Abhi' என்ற கவுன்ட் டவுனோடு தொடங்குகிறது அந்தப் போட்டி. 'இந்தப் பொழுதை கொண்டாடித் தீருங்கள்' என்ற அந்த வார்த்தைகளின் மதிப்பை அந்தப் பொழுதில் மஞ்சள் ஜெர்ஸியை நேசிக்கும் எந்த ரசிகனும் உணர்ந்திருக்கமாட்டான். ஏனெனில் அதுதான் கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் சென்னையில் ஆடிய மேட்ச். இர…
-
- 0 replies
- 662 views
-
-
ஐபிஎல் கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்கள் பங்கேற்பை பிசிசிஐ மறு பரிசீலனை பணமழை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மேற்கிந்திய வீர்ர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. காரணம் தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டது பிசிசிஐ-யிடத்தில் கடும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ஐபிஎல் ஆட்சிக்குழு கூட்டத்தில் நிச்சயம் இந்த விவகாரம் எழுப்பப்படும். ஒரு சீசனுக்காவது வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து தடை செய்ய வேண்டும். கிறிஸ் கெய்ல், டிவைன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், டிவைன் ஸ்மித், சுனில் நரைன் ஆகியோருக்கு ஐபிஎல் மூலம்தான் பணம் குவிந்துள்ளது. நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்துள்ளது. இவர்கள் மீது இந்திய ர…
-
- 0 replies
- 350 views
-
-
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி முதல் முறையாக பட்டம் வென்றார் ஹெலப் பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ருமேனியாவின் ஷிமோனா ஹெலப் அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றார். #FrenchOpen2018 #SimonaHalep #SloaneStephens பாரீஸ்: கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று மாலை நடந்தது. இதில் உலகின் முத…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கை அணி மீண்டும் பழைய நிலைக்கு திரும்பும்: சனத் இந்திய தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும் என தெரிவு குழுத் தலைவர் சனத் ஜெயசூரியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணியை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா. இதனால் இலங்கைக்கு இந்த தொடர் மோசமான தோல்வியாக அமைந்து விட்டது. இந்நிலையிலேயே சனத் ஜெயசூரியா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், இந்தியத் தொடர் மோசமான கனவாக முடிந்து விட்டாலும், இம் மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இலங்கை மீண்டும் பழைய நிலைக்கு வரும். இலங…
-
- 0 replies
- 410 views
-
-
லார்ட்ஸ் டெஸ்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த ஆண்டர்சன் இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஆண்டர்சன், லார்ட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். #ENGvIND #JamesAnderson லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து, முதல் இன்னிங்சை ஆடிய இங்க…
-
- 0 replies
- 583 views
-
-
2002 லார்ட்ஸ் வெற்றி: அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்ற வலியுறுத்திய கங்குலி 2002-ஆம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில் பெவிலியனில் கேப்டன் கங்குலி சட்டையைக் கழற்றி சுழற்றினார். அப்போது, அணி வீரர்கள் அனைவரும் சட்டையைக் கழற்றி அவர் செய்தது போல் செய்ய வேண்டும் என்று கேப்டன் கங்குலி விரும்பியதாகவும் அதனை சச்சின் டெண்டுல்கர், ராகுல் திராவிட் ஆகியோர் செய்ய விரும்பவில்லை என்று இந்திய அணி மேலாளர் ராஜிவ் சுக்லா கூறியுள்ளார். நாட்வெஸ்ட் டிராபி முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து 325/5 ரன்கள் எடுத்தது. இலக்கை துரத்திய இந்திய அணி விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து வந்தது. அப்போது இந்திய அணி வெற்றி …
-
- 0 replies
- 715 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “தலைவிதியில் என்ன எழுதியிருக்கோ அதுதான் நடக்கும். இன்று என் தலைவிதியில் எழுதியிருக்கிறது என்னுடைய நாளாக மாறிவிட்டது. பெரிதாக ஒன்றுமில்லை” எந்தவிதமான அலட்டலும், கர்வமும் இல்லாமல், தற்பெருமையின் வாசனை கூட இல்லாமல் வந்த இந்த வார்த்தை, இந்திய அணி 8-வதுமுறையாக ஆசியக் கோப்பையை வெற்றி பெற காரணமாக இருந்த வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் பேசியதாகும். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தை ஒரு தரப்பாக மாற்றி, இலங்கை அணியை தனது பந்து…
-
- 0 replies
- 594 views
- 1 follower
-
-
‘விளையாட்டை ஆடுகிற தேசமாக மாற வேண்டும்’ - சச்சின் டெண்டுல்கர் சச்சின் டெண்டுல்கர் – மிகச் சிறந்த ஆட்டக்காரர். சந்தேகம் இல்லை. அவரது ஆட்டத்தை வியந்து மகிழ்ச்சியுடன் பார்த்தது உண்டு. ஆனாலும், கிரிக்கெட் ரசிகர்கள் அவரை, கடவுள் அளவுக்குத் துதி பாடுகிற போதெல்லாம் இதென்ன பைத்தியக்காரத்தனம் என்றுதான் தோன்றும். மாநிலங்களவை உறுப்பினராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டபோது பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. அதற்கேற்றாற்போல் கடந்த 4 ஆண்டுகளாக அவர் மாநிலங்களவையில் எதுவும் பேசவில்லை. மொத்தம் 20 நாட்கள் மட்டுமே அவைக்கு வந்தார். ஏமாற்றமாக இருந்தது. ஆனால், அவரது சமீபத்திய பேச்சு, ஓர் ஆனந்த அதிர்ச்சி தந்தது. அவையில் சச்சின் ஆ…
-
- 0 replies
- 852 views
-
-
மைலோ வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் 100 யாழ்.மாவட்ட அணிகள் பங்கேற்பு 2015ஆம் ஆண்டிற்கான மைலோ வெற்றி கிண்ணத்திற்கான யாழ். மாவட்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகின்றது.மைலோ வெற்றிக் கிண்ணம் அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வு நேற்று யாழில் உள்ள கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. மைலோ கிண்ணத்திற்கான ஆரம்ப நிகழ்வு பருத்தித்துறை ஈகிழ்ஸ் உதைபந்தாட்ட மைதானத்தில் இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டத்தில் உள்ள உதைபந்தாட்ட லீக்குகலான பருத்தித்துறை, தீவகம், வலிகாமம், வடமராட்சி, மருதங்கேணி,யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் போட்டிகள் பிரிவு பிரிவாக இடம்பெறவுள்ளதுடன் போட்டிகள் அனைத்தும் விலகல் முறையில் இடம்பெறவுள்ளது. மேலும் குறித்த மைலோ வெற்றிக்கிண்ண…
-
- 0 replies
- 371 views
-
-
மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை லூயிஸ் ஹமில்டன் அண்மிக்கின்றார் 2015-10-15 11:02:54 வார இறுதியில் நடைபெற்ற ரஷ்ய குரோன் ப்றீ காரோட்டப் பந்தயத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற மேர்சிடெஸ் அணி சாரதி லூயிஸ் ஹமில்டன், மூன்றாவது உலக சம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளார். தனது அணியைச் சேர்ந்த ஜேர்மன் சாரதி நிக்கோ ரொஸ்பேர்குக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்திலேயே ஹமில்டன் காரை செலுத்திக்கொண்டிருந்தார். ஆனால் காரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரொஸ்பேர்க் போட்டியிலிருந்து ஒதுங்க நேரிட ஹமில்டன் இலகுவாக வெற்றிபெற்றார். இப் போட்டியை ஒரு மணித்தியாலம் 37 நிமிடங்கள் 11.024 செக்கன்களில் ஹமில்டன் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார். முன்னாள் உலக சம்…
-
- 0 replies
- 340 views
-
-
இந்த 11 காரணங்களுக்காகவே.. ஆல்ஸ்டார்ஸ் கிரிக்கெட் அடிக்கடி நடக்கணும்! 1. 30 ஸ்டார்கள்! கிட்டத்தட்ட இன்றைய தலைமுறை கிரிக்கெட் பார்க்க துவங்கிய நாட்களில் கிரிக்கெட்டில் கில்லிகள் என்றால் இவர்கள் தான் என கூறப்பட்ட 30 பேர்களும் ஒரே அணியில் என்ற செய்தியே போதும் இந்த போட்டியை ரசிக்க. அதனை தாண்டி ஐபிஎல், பிக் பேஷ் போட்டிகளில் வெளிநாட்டு வீரர் இந்திய வீரருக்கு பந்து வீசுவது. வார்னே பந்தில் சச்சின் சிக்ஸ் அடிப்பது என்பதை பார்த்திருந்தாலும். லாரா, ஆம்ப்ரோஸ், வால்ஷ் போன்ற வீரர்களின் க்ளாஸிக் ஆட்டத்தை மீண்டும் பார்ப்பது டைம் மிஷின் ட்ரீட் தான்! 2.சச்சின் - கங்குலி - சேவாக் சச்சின் பிளாஸ்டர்ஸ் அணி மூன்று ஆட்டங்களில் தோற்றிருந்தாலும் சச்சிந்சேவக்-கங்குலி மூன்ற…
-
- 0 replies
- 522 views
-
-
'கச்சோரி' விற்கும் கிரிக்கெட் அணி கேப்டன் வதோதரா: வாய் பேசாதவர்கள் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா வெல்ல உதவிய கிரிக்கெட் வீரர், சாலையோர கடையில், உணவுப் பண்டம் விற்று பிழைப்பு நடத்தி வருகிறார். குஜராத் மாநிலம், வதோதராவை சேர்ந்தவர் இம்ரான் ஷேக், 30. பத்து ஆண்டுக்கு முன் நடந்த, வாய் பேசாதோர் மற்றும் காது கேளாதோருக்கான, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்ற இவர், பல அரை சதங்களை அடித்து, கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவரது அபார திறமை காரணமாக, மூன்று ஆண்டுக்கு முன், வாய் பேசாதோருக்கான இந்திய கிரிக்கெட் அணி…
-
- 0 replies
- 910 views
-
-
தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர்; அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன: கங்குலி புகழாரம் தோனியை ‘கிரேட்' என்று புகழ்ந்த சவுரவ் கங்குலி. | படம்: பிடிஐ. தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார…
-
- 0 replies
- 462 views
-
-
டி.ஆர்.எஸ். முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி தண்டிக்கப்படுகிறது: தோனி டி.ஆர்.எஸ். முறை சரியானதுதானா? தோனி மீண்டும் கேள்வி. படம்: ஏ.பி. நடுவர் தீர்ப்பு மேல்முறையீட்டுக்கான டி.ஆர்.எஸ் முறையை ஏற்றுக் கொள்ளாததால் இந்திய அணி மோசமான தீர்ப்புகளினால் தண்டிக்கப்படுகிறதா என்று தோனி ஐயம் எழுப்பியுள்ளார். நேற்றைய பெர்த் ஒருநாள் போட்டியில் ஜார்ஜ் பெய்லி இறங்கியவுடனேயே கிளவ்வில் பட்டு தோனியிடம் கேட்ச் ஆனது, பந்து வீசியவர் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரண். நடுவர் கெட்டில்புரோ நாட் அவுட் என்றார். அதன் பிறகு பெய்லி 120 பந்துகளீல் 122 ரன்கள் எடுத்து அவரும் ஸ்மித்தும் ஆட்டத்தை 21/2 என்ற சரிவிலிருந்து இந்தியாவிடமிருந்து பறித்துச் சென்றனர…
-
- 0 replies
- 348 views
-
-
உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் இன்று உலக கிரிக்கெட் வரலாற்றில் கறுப்பு நாள் என்று அழைக்கப்படும் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 7 ஆண்டுகள் கடந்துள்ளன. இலங்கை கிரிக்கெட்டு அணி மீது கடந்த 2009-03-3 ஆம் திகதியன்று பாகிஸ்தானில் வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதியன்று பாக்கிஸ்தான் லாகூர் நகரில் கடாபி விளையாட்டரங்கில் இரண்டாவது டெஸ்ட் விளையாட்டுப் போட்டியின் மூன்றாவது நாள் விளையாட்டில் கலந்துகொள்வதற்காக மைதானத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை அணியின் பஸ் வண்டியின் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தீவிரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கை…
-
- 0 replies
- 544 views
-
-
இந்தியா- தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் கொரோனா அச்சம் காரணமாக ரத்தானது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருந்தது. கடந்த 13ம் தேதி தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி வரும் 15ல் லக்னோவிலும், மூன்றாவது போட்டி வரும் 18ம் தேதி கோல்கட்டாவிலும் நடக்க இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த இரு போட்டிகளையும் காண ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தெரிவித்தது. தற்போது புதிய திருப்பமாக இத்தொடர் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, வரும் 29ல் துவங்க இரு…
-
- 0 replies
- 449 views
-