விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
சுப்ரீம் கோர்ட் அதிரடி: பி.சி.சி.ஐ. தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாக்கூர் நீக்கம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே ஆகியோரை அப்பதவிகளில் இருந்து நீக்கி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முக்கிய செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையில் புதிய நிர்வாகிகள் நடந்துகொள்ள வேண்டும் என கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுக்கு மதிப்பளிக்கா…
-
- 2 replies
- 506 views
-
-
ரொனால்டோவின் கடின உழைப்பு எனக்கு உத்வேகம் அளித்தது: விராட் கோலி கிறிஸ்டியானோ ரொனால்டோவின் கடின உழைப்பினால் அதிக அளவில் உத்வேகம் அடைந்துள்ளேன் என்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். கால்பந்து உலகில் கொடிகட்டிப் பறப்பவர் போர்ச்சுக்கல் நாட்டின் கிறிஸ்டியானா ரொனால்டோ. ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடும் அவர், கடின உழைப்பால் 31 வயதிலும் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி தனது கடின முயற்சியால் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார். தனது கடின உழைப்…
-
- 0 replies
- 451 views
-
-
2016-இல் விளையாட்டு உலகம் - சாதனைகளும், சர்ச்சைகளும் கடந்த 2016-ஆம் ஆண்டில், விளையாட்டு உலகில் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன; புதிய வரலாறு நிகழ்த்தப்பட்டது; சாதனையாளர்கள் தங்களை உறுதிப்படுத்திக் கொண்டனர்; புதிய நம்பிக்கை நட்சத்திரங்கள் உருவாகியுள்ளனர். 2016-இல் நடந்த விளையாட்டு உலக சாதனைகள் மற்றும் நிகழ்வுகள் குறித்த தொகுப்பை இங்கு காணலாம். டென்னிஸ் : புதிய நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்த அன்ஜெலீக் கெர்பர், வாவ்ரிங்கா டென்னிஸ் போட்டிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய மற்றும் ஃபிரெஞ் ஓபன் பட்டங்களை ஜோகோவிச் வென்றார். விம்பிள்டன் பட்டத்தை பிரிட்டன் வீரர் ஆண…
-
- 0 replies
- 377 views
-
-
கிரிக்கெட் தொடர் ரத்து: இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதால் இந்திய கிரிக்கெட் வாரியம் மீது பாகிஸ்தான் வழக்கு தொடர முடிவு செய்துள்ளது. கராச்சி: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே 2015-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை 6 போட்டி தொடர் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் முடிவு செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததால் கிரிக்கெட் போட்டி தொடருக்கு இந்திய அரசு அனுமதி வழங…
-
- 0 replies
- 292 views
-
-
சிட்னி டெஸ்டில் மிஸ்பாதான் கேப்டன்: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சிட்னி டெஸ்டில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மிஸ்பா உல் ஹக் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சென்று விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறது. ‘பாக்சிங் டே’ டெஸ்ட் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து. இதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறு…
-
- 1 reply
- 317 views
-
-
முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி லண்டனில் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிவாகை சூடிய அணித்தலைவர் என வர்ணிக்கப்பட்டவர் சவுரவ் கங்குலி. சச்சின், லட்சுமண், டிராவிட் உள்ளிட்ட ஜாம்பவான்கள் இடம் பெற்ற அணியை வெற்றிகரமாக வழிநடத்தியவர் கங்குலி. இவர் கடந்த 1996ல் பிரித்தானியா சென்ற போது, தனது வாழ்க்கையில் நடந்த மோசமான நிகழ்வை தற்போது வெளியிட்டுள்ளார். கடந்த 1996 ஆம் ஆண்டு லண்டன் சென்ற போது, ஒரு கும்பலிடம் துப்பாக்கி முனையில் சிக்கிய சம்பவத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்கிய கங்குலி, லண்டனின் பின்னர் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் நாங்கள் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது எங்கள் கே…
-
- 0 replies
- 359 views
-
-
ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் இலங்கை அணிக்கெதிரான டி20 கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக பாண்டிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கை அணி பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. முதல் போட்டி 17-ந்தேதியும், 2-வது போட்டி 19-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 22-ந்தேதியும் நடக்கிறது. 23-ந்தேதி ஆஸ்திரேலியா இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் மோதுகிறது. 22-ந்தேதி போட்டியை முடித்துக் கொண்டு 23-ந்தேதி இந்தியாவிற்கு ஆ…
-
- 0 replies
- 250 views
-
-
என்னால் அணிக்கு பங்களிப்பு இல்லையெனில் ஆடுவதில் பயனில்லை அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்த நிலையில் ஓய்வு பற்றி யோசனை எழுந்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார். சிட்னி டெஸ்ட்டுக்கு முன்னதாகவே அவர் ஓய்வை அறிவிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியில்லையெனில் இந்தத் தொடர் முடிந்து ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது. மெல்போர்ன் தோல்வி, தொடர் தோல்வியானதையடுத்து பாகிஸ்தானின் மிகச்சிறந்த வெற்றி தலைவரான மிஸ்பா கூறியதாவது: ஓய்வு பெறுவது குறித்து நான் முடிவெடுக்க வேண்டியுள்ளது. அணிக்கு பங்களிப்பு செய்ய முடியாதபோது ஆடி என…
-
- 0 replies
- 275 views
-
-
அதிக தடவை எல்.பி.டபிள்யூ.வில் வீழ்ந்த சச்சின் டெஸ்ட் கிரிக்கெட்டில், எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்த 10000-ஆவது வீரர் என்கிற பதிவு தென்னாபிரிக்க வீரர் அம்லாவுக்குக் கிடைத்துள்ளது. இவர் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நுவன் பிரதீப்பிடம் 48 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் தனது விக்கெட்டை இழந்து கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து எல்.பி.டபிள்யூ. தொடர்புடைய ஏராளமான புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன. இதில் இரண்டு முக்கிய புள்ளிவிவரங்களில் இரு இந்தியர்கள் இடம்பிடித்துள்ளார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக தடவை எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தவர் சச்சின் டெண்டுல்கர். இவர் 200 டெஸ்ட் போட்டிகளில் 296 தடவை ஆ…
-
- 0 replies
- 349 views
-
-
உலக சாம்பியன்ஷிப் தொடரில் நடால் வெற்றி! முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடந்து வந்தது. அபுதாபியில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடால் - பெல்ஜியம் நாட்டின் டேவிட் கோஃபின் மோதினர். இதில் 6-4, 7-6 என்ற செட் கணக்கில், டேவிட்டை வீழ்த்தி நடால் வெற்றி பெற்றார். இதன் மூலம் சாம்பின்ஷிப் பட்டத்தை நடால் தக்க வைத்துள்ளார். நடால் முபாதலா உலக டென்னிஸ் சாம்பியன் ஷிப்பை கைப்பற்றுவது இது நான்காவது முறை. http://www.vikatan.com/news/sports/76487-rafael-nadal-wins-mubadala-tennis-championship.art
-
- 0 replies
- 260 views
-
-
ஒருநாள் தொடரில் ஸ்மித்துதான் என் இலக்கு: இர்பான் சொல்கிறார் ஆஸ்திரேலியாவின் ஆடுகளத்தை பயன்படுத்தி நல்ல பாஃர்மில் இருக்கும் ஸ்மித்தை வீழ்த்துவதே என் இலக்கு என பாகிஸ்தான் வீரர் இர்பான் சொல்கிறார். பாகிஸ்தானின் உயரமான வேகப்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் மொகமது இர்பான் 7 அடியும் ஒரு இஞ்ச் உயரம் கொண்டவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ளார். இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 13-ந்தேதி தொடங்குகிறது. இதுகுறித்து மொகமது இர்பான் கூறுகையில் ‘‘நான்தான் மிகவும் அதிக உயரம் கொண்…
-
- 0 replies
- 230 views
-
-
பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் அணியில் இடம்பிடித்த இம்தியாஸ் அஹமது மரணம் பாகிஸ்தானின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த மூத்த வீரரான இம்தியாஸ் அஹமது தனது 88-வது வயதில் மரணம் அடைந்தார். 1952-ம் ஆண்டு அக்டோபர் மாதம் டெல்லியில் நடைபெற்ற டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி முதன் முதலாக டெஸ்ட் அரங்கில் கால்பதித்தது. அந்த அணியில் இம்தியாஸ் அஹமதும் ஒருவர். இவர் பாகிஸ்தான் அணிக்காக 41 போட்டிகளில் விளையாடியுள்ளார். 88 வயதாகும் இவர் லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று அவரத…
-
- 1 reply
- 439 views
-
-
121 மீட்டர் மெகா சிக்ஸர் அடித்த கிறிஸ் லின்! (வீடியோ) ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் டி20 லீக் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் கிறிஸ் லின் அடித்த சிக்ஸர் தற்போது வைரலாகி வருகிறது. ஹோபார்ட் ஹரிக்கேன் அணியும், பிரிஸ்பேன் ஹீட் அணியும் நேற்று பிரிஸ்பேன் மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற பிரிஸ்பேன் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்குல்லம் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ஹோபர்ட் ஹரிக்கேன் அணி பேட்டிங் பிடித்தது. ஹரிக்கேன் அணியில் ஜோனாதன் வெல்ஸ், குமார் சங்கக்காரா, ஜார்ஜ் பெய்லி, டேனியல் கிறிஸ்டியன், ஸ்டூவர்ட் பிராட், ஷான் டெயிட் என நட்சத்திர வீரர்கள் இருந்தனர். பிரிஸ்பேன் அணியில் பவுலிங்கில் சாமு…
-
- 0 replies
- 480 views
-
-
ஒருநாள் தொடரை கைப்பற்றியது நியுஸிலாந்து பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் வெற்றிபெற்ற நியுஸிலாந்து அணி தொடரை 3 - 0 என கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்று முடிந்த 3 ஆவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 8 விக்கட்டுகள் மற்றும் 52 பந்துகளினால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 236 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 59 ஓட்டங்களையும், இம்ருல் கையிஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் ஜீடன் படேல் மற்றும் சென்ட்னர் தலா 2 விக்கட்டுகளை கைப்பற்றினர். பதிலுக்க…
-
- 1 reply
- 424 views
-
-
2016-ன் நம்பர் ஒன் டி20 பவுலர் எத்தனை மெய்டன் ஓவர் வீசியிருக்கிறார்? #2016Rewind டி20 கிரிக்கெட்டைப் பொறுத்தவரை பந்துவீச்சாளர்கள் பங்கு அளப்பரியது; கடினமானதும் கூட . சிக்ஸர் விளாச வேண்டும் என வெறியோடு கிரீஸை விட்டு இறங்கி ஒருவரை ஏமாற்ற வேண்டும், இக்கட்டான சூழ்நிலையில் சிங்கிள் அடிக்கத் துணிபவருக்கு, ஆசை காட்டி அவுட்டாக்கத்தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு வீரருக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு பந்தையும் பலவாறாக யோசித்துச் சிறப்பாக பந்துவீச வேண்டும். அப்படி இந்த ஆண்டு சிறப்பாக பந்து வீசியவர்கள் பட்டியல் தான் இது. 10. ஃபால்க்னர் :- அதிக ரன்கள் விட்டுக்கொடுக்கிறார் என இவர் மீது எப்போதும் ஒரு வருத்தம் ஆஸி ரசிகர்ளுக்கு இருக்கும். அதே சமயம் விக்கெட்டுக…
-
- 0 replies
- 368 views
-
-
இப்படித்தான் 2016-ன் நம்பர் 1 பவுலர் ஆனார் அஷ்வின்! #Statistics டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல பவுலர்கள் ஆச்சர்யங்களை நிகழ்த்தினார்கள். பவுலர்கள் ஆதிக்கம் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு அணியிலும் நல்ல பவுலர்கள் இருந்தனர். இதனாலேயே டிரா ஆகும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து ரிசல்ட் கிடைக்கும் டெஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்தன. சரி, இந்த ஆண்டில் சிறந்த பத்து டெஸ்ட் பவுலர்கள் யார்? 10.நெயில் வாக்னர்:- நியூசிலாந்து அணியில் சவூத்தீ, போல்ட் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு நெயில் வாக்னர் அபாரமாக பந்து வீசினார். தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் வாக்னரின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. ஆஸ்திரேலியா நியூசிலாந்துச் சுற்றுப்பயணம் வந்…
-
- 0 replies
- 556 views
-
-
மெல்பர்னில் பார்வையாளர்களை சுண்டி இழுத்த தோனியின் பாகிஸ்தான் ரசிகர் 2016-12-30 16:58:54 மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அணிந்திருந்த ஜேர்சி (சீருடை) பார்வையாளர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணித் தலைவர் தோனியின் பெயரையும் இலக்கத்தையும் (7) தாங்கிய அந்த ஜேர்சி பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் அணியின் ஜேர்சியை ஒத்ததாக இருந்தது. இந்த ஜேர்சியுடன் பாகிஸ்தான் அணியை அந்த ரசிகர் ஊக்குவித்தபோது அரங்கிலிருந…
-
- 0 replies
- 247 views
-
-
பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணக்கிறார் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் தொழிலதிபரை மணப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ். அமெரிக்காவை சேர்ந்த அவர் 22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். நீண்ட நாள் நம்பர் ஒன் இடத்தில் இருந்த செரீனா வில்லியம்ஸ் தற்போது 2-வது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் தொழில் அதிபர் அலெக்சிஸ் ஒஹனியனை மணப்பதாக செரீனா வில்லியம்ஸ் அறிவித்து உள்ளார். அலெக்சிஸ், ரெட்டிட் இணையதளத்த…
-
- 1 reply
- 399 views
-
-
-
2016ன் டாப்10 டி20 பேட்ஸ்மென் இவர்கள்தான்! #Top10T20Batsmen டி20! கிரிக்கெட் விளையாட்டின் ஸ்டார் ஃபார்மெட்! அடித்து ஆடு அல்லது அவுட் ஆகு என்பதுதான் டி20 கிரிக்கெட்டின் பாலிசி. மூன்றரை மணி நேர ஆட்டம் தான், ஆனால் ஓவருக்கு ஓவர் எகிறும் சஸ்பென்ஸ் காரணமாக டி20 கிரிக்கெட்டுக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றார்கள். ஆறு பந்துகள் உங்கள் வாழ்க்கையை மாற்றிப் போடலாம். ஒரே ஒரு கேட்ச், ஒரே ஒரு விக்கெட், ஒரே ஒரு சிக்ஸர், ஒருவரை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கும் என்றால் எந்த கிரிக்கெட் வீரனுக்குத் தான் டி20 கிரிக்கெட் ஆட ஆசை வராது? ஜென் Z க்கு கிரிக்கெட்னா டி20 தான். சினிமாவை போல, சூதாட்டத்தை போல, ஷேர் மார்க்கெட்டைப்போல ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெரும…
-
- 0 replies
- 558 views
-
-
புரூம் சதம் ; நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றி பங்களாதேஷ் மற்றும் நியுஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி 67 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 251 ஓட்டங்களை பெற்றது. நியுஸிலாந்து அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய புரூம் 109 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் மஷ்ரபீ மூர்தஷா 3 விக்கட்டுகளை கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ…
-
- 0 replies
- 374 views
-
-
டென்னிஸ் வீராங்கனை அனா இவானோவிச் விடைபெற்றார்! செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான அனா இவனோவிச். டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் சாம்பியன் பட்டம் பெற்று, தரவரிசையில் முதலிடம் பெற்றார். 12 வாரங்கள் தொடர்ந்து நம்பர் 1 இடம் வகித்த இவர் 15 மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸில் அதிகம்பேர் ரசிக்கும் வீராங்கனை யார் என்று 2015ம் ஆண்டில் ஆங்கில பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் இவர் முதலிடத்தைப் பிடித்திருந்தார். முன்னணி வீராங்கனையாக விளங்கி வந்த அவர், சமீப காலமாக தொடர் தோல்விகளால் தரவரிசையில் பின் தங்கியிருந்தார். இந்த நிலையில் …
-
- 0 replies
- 346 views
-
-
டெஸ்ட் சாம்பியன்களின் மறுபக்கம் சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து வருகிறது இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 18 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட தோற்காமல் முன்னேறி வரும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள். விராட் கோலி தன் தந்தையார் இறந்ததற்கு அடுத்த நாளே டெல்லி அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆடிய கோலி, துக்கத்துக்கு நடுவிலும் 90 ரன்களைக் குவித்தார். கோலிக்கு டாட்டூக்கள் பிடிக்கும். அவருக்கு மிகவும் பிடித்தது சாமுராய் வீரன் உருவம் பொறித்த டாட்டூ. ரவீந்திர ஜடேஜா இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடே…
-
- 0 replies
- 397 views
-
-
விராட் கோலியைச் சீண்டி கோபப்படுத்துவோம்: ஆஸி. கேப்டன் ஸ்மித் டிசம்பர் 28, 2014-ல் மெல்போர்னில் சதம் எடுத்துத் துள்ளிக் குதிக்கும் கோலியை பார்க்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்: ஏ.எஃப்.பி. இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளை ஆடவுள்ள நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித், இந்திய கேப்டன் விராட் கோலியின் பண்பை சோதிப்போம் என்ற தொனியில் கருத்து தெரிவித்துள்ளார். 3 வடிவங்களிலும் 50 ரன்கள் சராசரி என்ற சாதனை ஆண்டை கோலி அணியின் வெற்றிகளுடன் கொண்டாடி வரும் நிலையில் பயணிக்கவிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் அவரது குணாம்சத்திற்கு சோதனை கொடுப்போம் என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றில் கூறும்…
-
- 0 replies
- 319 views
-
-
இந்திய கிரிக்கெட் 2016: களம் ஆளும் கோலி-கும்ப்ளே கூட்டணி! கோலி, கும்ப்ளே | கோப்புப் படம்: சம்பத் குமார் 2016... இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறந்த ஆண்டு. வீரர்கள் அனைவரும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்த, டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. ஐசிசி பவுலிங் தரவரிசையிலும், ஆல்ரவுண்டர் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடம் வகித்தார். மேலும், பவுலிங் தரவரிசையில் அஸ்வின், ஜடேஜா இருவரும் முதல் இரண்டு இடங்களை முதல் முறையாகப் பிடித்தனர். கோலி கேப்டனாக வீரராக பல சாதனைகளை நிகழ்த்திய ஆண்டாக 2016 அமைந்தது. உலக அளவில் இந்திய அணியை பெரிய டெஸ்ட் அணியாக வீழ்த்த முடியாத டெஸ்ட் அணியாக மாற்றமடையச் …
-
- 0 replies
- 449 views
-