Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஆட்டம் காண்கிறது அவுஸ்திரேலிய கிரிக்கெட்! தேர்வாளர் ரொட்னி மார்ஷ் பதவி விலகினார் 2016-11-18 11:26:25 அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணியின் படு­தோல்­வி­க­ளி னால் மனம் நொந்­து­போன ரொட்னி மார்ஷ், அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவர் பத­வியை இரா­ஜி­னாமா செய்­துள்ளார். தென் ஆபி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் தோல்வி அடைந்த பின்னர் மார் ஷும் தெரிவுக்குழு உறுப்­பி­னர்­க­ளான ட்ரவொ ஹோன்ஸ், மார்க் வோ ஆகி­யோரும் ஹோபார்ட்டில் கூடினர். அந்தச் சந்­தர்ப்­பத்தில் தனது பத­வியை உட­ன­டி­யாக இரா­ஜி­னாமா செய்­வ­தாக ரொட்னி மார்ஷ் அறி­வித்தார். அவ­ரது பதவிக்காலம் அட…

  2. இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு Tamil இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் சீருடையை அணிவதே சாருஜனின் இலக்கு கடந்த சில காலமாக குட்டி சங்கக்கார என பல்வேறு ஊடகங்களில் இடம்பிடித்திருந்த சாருஜன் சன்முகனாதன் அண்மைக் காலமாக எந்த ஊடகங்களிலும் பேசப்படவில்லை. எனினும், அவர் அன்று காண்பித்த அதே திறமையையும், சிறப்பாட்டங்களையும் இன்றும் காண்பித்து வருகின்றார். இதன் காரணமாக அவர் குறித்த ஒரு தேடலை ThePapare.com மேற்கொண்டது. கடந்த 2011…

  3. ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள்... நடைபெறும் இடத்திற்கு அருகாமையில் கத்திக்குத்து: 10பேர் காயம்! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் பயணிகள் ரயிலில் ஒருவர் குறைந்தது 10 பயணிகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளதா, ஜப்பானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, நகரின் மேற்கில் உள்ள செடகயா வார்டில் ரயிலில் இந்த கத்திக்குத்து தாக்குதல் நடந்தது. செடாகயா வார்டில் உள்ள சீஜோகாகுன்-மே ஸ்டேஷனுக்கும் சோஷிகாயா-ஒகுரா ஸ்டேஷனுக்கும் இடையே உள்ள ஒடக்யூ லைன் ரயிலில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தளம் ஒலிம்பிக் குதிரையேற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காயமடைந்த 10 பயணிகளில் ஒன்பது …

  4. அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சே…

  5. என் உடல், என் மனம், என் கிரிக்கெட்; எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: விராட் கோலி மும்பை விளம்பரதாரர் நிகழ்ச்சியில் விராட் கோலி. - படம். | விஜய் பேட். கிரிக்கெட் ஆட்டத்தில் பணிச்சுமை குறித்து பல நாட்டு வீரர்களும் தங்கள் கவலைகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியும் பணிச்சுமை கொஞ்சம் அவரது உடலையும் பதம்பார்த்து வருகிறது, எனவே எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். மும்பையில் விளம்பர நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அவர் கூறும்போது, “உடல் ரீதியாக கொஞ்சம் காயங்கள் இருந்தன. அதனை தற்போது கடந்து வந்திருக்கிறேன். பணிச்சுமை என்னுடன் கொஞ்சம் ஒத்துப் போகாமல் கொஞ்…

  6. மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 10:16 AM மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார். பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன…

  7. ஆஸ்திரேலியா அபார வெற்றி அக்டோபர் 06, 2014. துபாய்: பாகிஸ்தானுக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில், ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதிய ‘டுவென்டி–20’ போட்டி, துபாயில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் அப்ரிதி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் ஜியா (3), அமின் (0), மக்சூத் (0), ஷேசாத் (10) நிலைக்கவில்லை. பின் வரிசையில் உமர் அக்மல் (1), அப்ரிதி (2), அன்வர் அலி (5) ஒற்றை இலக்க ரன்களில் திரும்பினர். நசிம் மட்டும் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 96 ரன்கள் மட்டும் எடுத்தது. ஹசன் (13), இர்பான் (1) அவுட்டாகாமல் இருந்தனர். எளிய இலக்கைத் துரத்தி…

  8. மைக்கேல் கிளார்க்கிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்கக் கூடாது: இயன் சாப்பல் முதுகுவலியினால் கடுமையாக அவதிப்படும் மைக்கேல் கிளார்க் குணமடைந்து வந்தால் கூட அவரிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பை அளிக்கக் கூடாது என்கிறார் இயன் சாப்பல். கிளார்க் மீண்டும் வந்தால் அவரை பேட்ஸ்மெனாக மட்டுமே வைத்துக் கொள்வது நலம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் இயன் சாப்பல். சானல் 9-இல் அவர் இது குறித்து கூறியதாவது: “சிறிது காலத்திற்கு ஸ்மித் கேப்டனாக நீடிப்பதை அனுமதிக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் சிறப்பாக செயல்பட்டால் மைக்கேல் கிளார்க் திரும்பி வரும்போது அவரிடம் மீண்டும் கேப்டன்சியை அளிக்க வேண்டிய அவசியமில்லை. ஸ்மித்தை முழு நேர கேப்டனாகத் தொடர அனுமதிக்க வேண்டும். மைக்கேல் கிளார்க் ம…

  9. இந்தியாவின் மனநிலை மாறுமா * மனம் திறக்கிறார் கும்ளே புதுடில்லி: ‘‘வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களின் போது பவுலர்களை தேர்வு செய்வதில் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் மனநிலை மாற வேண்டும். மூன்று ‘வேகங்கள்’, ஒரு ‘ஸ்பின்னர்’ என்ற ‘பார்முலா’ எப்போதும் கைகொடுக்காது,’’ என, கும்ளே தெரிவித்தார். சமீபத்தில் முடிந்த டெஸ்ட் தொடரில், இந்திய அணி வீரர்கள் ஒரு போட்டியில் கூட, ஆஸ்திரேலிய அணியில் 20 விக்கெட்டுகளையும் முழுமையாக வீழ்த்தவில்லை. இதனால், பேட்டிங்கில் அசத்திய போதும், டெஸ்ட் தொடரை இழக்க நேரிட்டது. இதுகுறித்து இந்திய அணி சார்பில் ஒருநாள் (337) மற்றும் டெஸ்ட் (619) போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய, ‘சுழல்’ ஜாம்பவான் கும்ளே, 44, கூறியது: இந்திய அணியில் …

  10. டெஸ்ட் போட்டிகளில் எனக்கு போதிய வாய்ப்புகள் அளிக்கவில்லை: சுரேஷ் ரெய்னா ஆதங்கம் 2011 இங்கிலாந்து தொடரில், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கிரேம் ஸ்வான் பந்தில் எல்.பி.ஆகி டக் அடித்த சுரேஷ் ரெய்னா. | படம்: ராய்ட்டர்ஸ். ஜேம்ஸ் ஆண்டர்சன் பவுன்சருக்கு கண்களை மூடிக் கொண்டு எம்பிக் குதிக்கும் சுரேஷ் ரெய்னா. | படம்: ஏ.எஃப்.பி. தான் ஒரு டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்பதை நிரூபிக்க போதுமான வாய்ப்புகள் தனக்கு வழங்கப்படவில்லை என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் இது குறித்து அளித்த பேட்டியில் கூறும்போது, “ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சீரான முறையில் ரன்களை எடுத்து வருகிறேன். ஐபிஎல் கிரிக்கெட்டிலும் கூட ரன்கள் எடுத்தேன். ஆனால், 2012-ம் ஆண்டு 3 டெஸ்ட் இ…

  11. பிராட் ஹாடின் ஓய்வு சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் பிராட் ஹாடின் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றார். ஆஸ்திரேலிய அணி விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், 37. இதுவரை 66 டெஸ்ட் (3266 ரன்), 126 ஒரு நாள் (3122), 34 ‘டுவென்டி–20’ (402) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த உலக கோப்பை (2015) தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியில் இடம் பெற்றிருந்தார். இதன் பின் ஒரு நாள போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், இவரின் 4 வயது மகள் மியா கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் பங்கேற்ற ஹாடின், அடுத்த 4 போட்டியிலும் விளையாடவில்லை. இந்நிலையில், சர்வதே…

  12. டெஸ்ட்டில் தோனியின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல: விருத்திமான் சஹா தோனி, விருத்திமான் சஹா. | கோப்புப் படங்கள். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனியின் இடத்தை நிரப்புவது என்பது அவ்வளவு எளிதானதல்ல என்று கூறியுள்ளார் விருத்திமான் சஹா. டெல்லி-வங்காள ரஞ்சி போட்டியை அடுத்து பிடிஐ-யிடம் சஹா தெரிவிக்கும் போது, “தோனியின் சாதனைகளை பரிசீலிக்கும் போது, தோனியின் நிழல்கள் சுமத்தும் சுமையிலிருந்து வெளிவருவது கடினம். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை, இன்னும் நிறைய ஆடினால்தான் எனக்கான ஒரு இடத்தை நான் தருவித்துக் கொள்ள முடியும். என்னைக் கேட்டால் தோனி 9/10 என்றால் நான் 2.5/10 என்றே கூறுவேன். ஏன் இந்த வரையறை என்றால் தோனியின் சாதனைகள் அப்படிப்பட்டவை. …

  13. நைரோபி மாரத்தான் ஓட்டத்தில் கடைசி நேரத்தில் நுழைந்து ஏமாற்றிய வீரர் கைது கடந்த ஞாயிறன்று நடைபெற்ற நைரோபி மாராத்தான் ஓட்டம். | படம்: ராய்ட்டர்ஸ். கென்யாவில் நடைபெற்ற நைரோபி சர்வதேச மாரத்தான் ஓட்டத்தில் திடீரென இடையே நுழைந்து 2-வதாக வந்த மோசடி வீரர் கைது செய்யப்பட்டார். இவர் மீது மோசடி மற்றும் ஏமாற்று வேலை தொடர்பான வழக்குகள் தொடரப்படலாம் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். ஞாயிறன்று நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 28-வயது ஜூலியஸ் நஜோகு என்ற வீரர் 42 கிமீ தூரம் ஓடாமல், கடைசி நேரத்தில் ஓட்டத்தின் இடையே புகுந்து 2-வதாக வந்தார். இந்த இடத்துக்கான பரிசுத் தொகை 7,000 டாலர்கள் ஆகும். ஆனால் அவர் செய்த மோசடி அம்பலமாக, கைது செய்யப்பட்டார். 42 கிமீ ஓடியதற்கான…

  14. 'பல்லான் டி ஆர்' தோல்வி : ரொனால்டோ சிலையில் மெஸ்சியின் பெயரை எழுதிய ரசிகர்கள்! கால்பந்து உலகின் உயரிய விருதாக கருதப்படும் 'பல்லான் டி ஆர்' விருதினை பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சி, 5வது முறையாக கைப்பற்றினார். இதையடுத்து போர்ச்சுகலில் அமைக்கப்பட்டுள்ள ரொனால்டோவின் சிலையில் மெஸ்சியின் பெயரையும், அவர் அணிந்து விளையாடும் 10-ம் எண் ஜெர்சி எண்ணையும் பதித்து ரசிகர்கள் அவமரியாதை செய்துள்ளனர். ஃபிபா அளிக்கும் இந்த விருதுக்கான இறுதி பட்டியலில், பார்சிலோனாவின் லயனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ரியல்மாட்ரிட்டின் ரொனால்டோ (போர்ச்சுகல் ) பார்சிலோனாவின் மற்றொரு வீரர் நெய்மர் ( பிரேசில் ) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பார்சிலோனா சூப்பர் ஸ்டார், ல…

  15. உலகக்கிண்ண T-20 தொடரில் நரேன் January 24, 2016 எதிர்வரும் உலகக்கிண்ண T-20 தொடர் மூலம் சர்வதேச கிரிக்கட் போட்டிகளுக்குள் நுழைவதே தனது நோக்கம் என மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரேன் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கட் விதிமுறைகளை மீறி பந்து வீசியதாக 27 வயதுடைய சுனில் நரைனிற்கு சர்வதேச கிரிக்கட் சபையால் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் உலகக்கிண்ண T-20 தொடரிற்கு முன்னர் மீண்டும் பந்து வீச்சு பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதால், உலகக்கிண்ண T-20 தொடரில் பங்கேற்க முடியும் என நம்புவதாக சுனில் நரைன் தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் இலங்கையுடன் நடைபபெற்ற ஒருநாள் போட்டித் தொடரின் மூன்றாவது போட்டியி…

  16. கால்பந்து வாழ்க்கையில் 500வது கோல் அடித்தார் லயனல் மெஸ்சி கோபா டெல்ரே கால்பந்து தொடரின் அரையிறுதி முதல் லெக் ஆட்டம் நேற்று கேம்ப் நியூ மைமானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா 7-0 என்ற கோல் கணக்கில் வாலென்சியா அணியை வீழ்த்தியது. பார்சிலோனாவின் லூயீஸ் சவுரஸ் 4 கோல்களும் லயனல் மெஸ்சி 3 கோல்களும் அடித்தனர். இந்த போட்டியில் லயனல் மெஸ்சி தனது கால்பந்து வாழ்க்கையில் 500வது கோலை அடித்தார். இதில் பார்சிலோனாவுக்காக 435 கேல்களும் அர்ஜென்டினாவுக்காக 49 கோல்களும் அர்ஜென்டினா 23 வயதுக்குட்பட்டோருக்காக அணிக்காக 2 கோல்களும் அர்ஜென்டினா 20 வயதுக்குட்பட்ட அணிக்காக 20 கோல்களும் அடங்கும் http://www.vikatan.com/news/sports/58540-lionel-me…

  17. டக்கரா விளையாடலாம் 'டக்ரா'! உலகில் அளவில் பிரபலமான விளையாட்டுகள் பட்டியலை சொல்லுங்கள் என்றால் கடகடவென சொல்லிவிடும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு கூட , இந்த விளையாட்டுகள் பற்றி கேட்டால் கொஞ்சம் யோசிக்கதான் செய்வார்கள். ஆனால் சில நாடுகளில் இந்த விளையாட்டுகளை உற்சாகமாக விளையாடுகின்றார்கள். வேடிக்கை, மகிழ்ச்சி, த்ரில் என பல சுவாரஸ்யங்களை கொண்ட இந்த விளையாட்டுகளின் பெயர்களை கூட இந்தியர்கள் அறிந்திருப்பது அரிதுதான். அப்படி சில வித்தியாச விளையாட்டுகளின் பட்டியல் இங்கே.... டக்ரா- Takraw வாலிபால் விளையாட்டின் சிறு மாற்றம்தான் டக்ரா. இந்த விளையாட்டு, தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இப்போது பிரபலமாகி வருகிறது. வாலிபால் விளையாட்டில், கையால் மட்டுமே …

  18. நடுவரின் தீர்ப்புக்கு எதிராக ஆதங்கத்தை வெளிப்படுத்திய சங்கா கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் மீள்பரிசீலனை முறைக்கெதிராகவும் நடுவர்களின் முறையற்ற தீர்ப்புகளுக்கெதிராகவும் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவானுமாகிய குமார் சங்கக்கார தனது ஆதங்கத்தை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லோட்ஸில் இடம்பெற்று வருகின்றது. நேற்று ஆரம்பமான இப்போட்டியில் இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடிவருகின்றது. இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜெனி பேர்ஸ்டோவ் எல்.பி.டபிள்யு. முறையில்…

  19. ஒற்றைக் காலுடன் உசேன் போல்டுக்கே சவால் கொடுத்த சாம்பியன்! உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் தொடரில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சார்ந்த ஜானி பீகாக். பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சபட்சத் தொடர். வாழ்க்கையில் எத்தனையோ இழந்தாலும் …

  20. தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி. தென் ஆபிரிக்க, அவுஸ்திரேலியா 2 வது ஒருநாள் போட்டி-142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி. ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும்,பிளாசிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணிக்கும் இடையில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இடம்பெற்று வருகின்றது. இந்த இரு அணிகளுக்கும் இடையில் தென் ஆபிரிக்காவின் ஜோகான்னஸ்பேர்கில் நிறைவுக்கு வந்த 2 வது ஒருநாள் போட்டியில் 142 ஓட்டங்களால் தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்று அவுஸ்திரேலியா அணியின் தலைவர் ஸ்மித் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார் . அத…

  21. ரியோ 150 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் போல்ட் சாம்பியன் உசெய்ன் போல்ட் பிரசிலின் ரியோ டி ஜனீரோவில் கோபாகபானா கடற்கரையில் நடந்த ஓட்டப்பந்தயப் போட்டியில் 150 மீட்டர் பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய பந்தய பருவத்தை வெற்றிக் கணக்கோடு துவங்கிருக்கிறார் உலகின் அதிவேக மனிதர் என்ற பட்டத்துக்கு சொந்தக்காரரான உசெய்ன் போல்ட். ஆறு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றவரான உசெய்ன் போல்ட் 14.42 விநாடிகளில் இந்தப் போட்டியில் 150 மீட்டங்களை ஓடிக் கடந்தார். மான்செஸ்டரில் நடந்த ஒரு பந்தயத்தில் 150 மீட்டர் பிரிவில் போல்ட் ஏற்படுத்திய சாதனை நேரத்தை இந்த முறை அவரால் எட்ட முடியவில்லை. இந்த வருடத்தில் இதுதான் தனது முதல் பந்தயம் என்பதால், ஆரம்பத்திலேயே வந்துள்ள வெற்றி மகிழ்ச்சியைத் தருகிறத…

    • 0 replies
    • 389 views
  22. ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்த முடியாமல் திணறும் இந்தியா: 55-ல் 17 மட்டுமே வெற்றி ரிவியூ வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இந்தியா திணறி வருகிறது. 55-ல் 17 மட்டுமே அணிக்கு சாதகமாக முடிந்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டி.ஆர்.எஸ். என்ற ரிவியூ முறை பயன்படுத்தப்படுகிறது. நடுவர் கொடுக்கும் எல்.பி.டபிள்யூ. மற்றும் கேட்ச் போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். டோனி இருக்கும் வரை இந்த டி.ஆர்.எஸ். முறைக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டனாக வந்த பின்னர் டி.ஆர்.எஸ். முறைக…

  23. 500 விக்கெட்கள்: புதிய சாதனை படைத்த இலங்கை வீரர் இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இலங்கை- வங்கதேச அணிகள் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வங்கதேசத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் வங்கதேச அணி 513 ஓட்டங்களுக்கு ஆல் ஆவுட்டானது. இலங்கை பந்துவீச்சாளர் ரங்கன ஹெரத் இதில் 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 500 விக்கெட்கள் வீழ்த்திய மூன்றாவது இலங்கை வீரர் என்ற பெருமையை ஹெரத் பெற்றுள்ளார். அவர் மொத்தமாக டெஸ்டில் 408 விக்கெட்களும், ஒருநாள் போட்டிகளில் 74 விக்கெட்களும், டி20 போட்டிகளில் …

  24. தேசிய ரீதியிலான கூடைப்பந்தாட்ட தொடரில் யாழ். வேம்படி மகளிர் கல்லூரி சம்பியன்! 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு “C” மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான இந்தப் பருவகாலத்திற்கான நாடளாவிய கூடைப்பந்து தொடரின் இறுதிப் போட்டியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியும் நேற்று புனித அந்தோனியார் கல்லூரியின் மகளிர் கூடைப் பந்தாட்ட அரங்கில் இடம்பெற்றிருந்தது. இறுதிப் போட்டி யாழ்ப்பாணம் வேம்படி உயர்தர மகளிர் பாடசாலை அணியும், கண்டி புனித அந்தோனியர் மகளிர் கல்லூரி அணியும் மோதியிருந்த இந்த இறுதிப் போட்டியில், யாழ்ப்பாண வீராங்கனைகள் 66-37 என்ற புள்ளிகள் கணக்கில் மைதான சொந்தக்காரர்களான அந்தோனியார் மகளிர் கல்லூரி அணியை வீழ்த்தி சம்பி…

  25. 40 நிமிடங்களில் ஆட்டம் முடிந்தது; காட்டடி பேட்டிங் செய்த கப்தில்: 38 பந்துகளில் 108 ரன்கள் விளாசல் மார்ட்டின் கப்தில் சதம் அடித்த மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்ட காட்சி இங்கிலாந்தில் நடந்த கவுண்டி அணிகளுக்கு இடையிலான டி20 போட்டியில் பொளந்து கட்டிய நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 38 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து 40 நிமிடங்களில் வோர்செஸ்டர்ஷையர் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். நார்த்தாம்டன் நகரில் உள்ள கவுண்டி மைதானத்தில் நேற்று வோர்செஸ்டர்ஷையர் அணிக்கும், நார்த்தாம்டன்ஷையர் அணிக்கும் இடையிலான டி20 போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நார்த்தாம்டன்ஷையர் அணி, 188 ரன்கள் குவித்தது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.