Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1.  'உயர்ந்து நிற்கிறார் சான்ட்னெர்' இந்தியாவுக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் இழந்த நியூசிலாந்து அணி, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் ஓரளவு முன்னேற்றமான திறமை வெளிப்பாட்டை வெளிப்படுத்திய போதிலும், அத்தொடரையும் 2-3 என்ற கணக்கில் இழந்துள்ளது. இந்நிலையில் கருத்துத் தெரிவித்த நியூசிலாந்து அணித்தலைவர் கேன் வில்லியம்ஸன், "இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடினமான டெஸ்ட் தொடருக்குப் பின்னர், மிகவும் சிறப்பான இந்திய அணிக்கெதிராக 2-2 என்ற நிலையில் காணப்பட்ட நிலைக்கு, சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தினோம். அது மிகவும் அற்புதமான செயற்பாடு. ஆனால், இறுதித் திறமை வெளிப்பாட்டைத் தாண்டிப் பார்க்க முடியாதுள்ளது" என்றார். 5ஆவது போ…

  2. தீபாவளி பரிசாக ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி வெற்றி ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இறுதி போட்டியில் இந்தியா 3:2 என்ற புள்ளிக்கணக்கில் சம்பியன் பட்டம் வென்றிருக்கிறது. நிக்கின் திம்மையா அடித்த கோல் இந்தியாவின் வெற்றிக்கு உதவியது 2011 ஆம் ஆண்டு இதே போட்டியில் இவ்விரு அணிகளும் ஆடி பெற்ற வெற்றிக்கு பின்னர் இரண்டாவது முறையாக மீண்டும் இந்தியா வென்றுள்ளது. தற்காத்து விளையாடுவதில் ஏற்பட்ட சில சறுக்கல்களுக்கு பின்னர், பொதுவான இந்தியாவின் ஆதிக்கமே விளையாட்டில் தொடர்ந்தது. இந்தியா வீரர் ருபின்தர் பால் சிங் 18-வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்து இந்தியாவின…

  3. இங்கிலாந்து பிறீமியர் லீக்: லிவர்பூல், சிற்றி, ஆர்சனல் வெற்றி இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்றுவரும் பிறீமியர் லீக் தொடரில், நேற்றுச் சனிக்கிழமை (29), இடம்பெற்ற போட்டிகளில், லிவர்பூல், மன்செஸ்டர் சிற்றி, ஆர்சனல், வட்போர்ட், மிடில்ஸ்பேர்க் ஆகிய அணிகள் வெற்றி பெற்றுள்ளதோடு, டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர், லெய்செஸ்டர் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் மன்செஸ்டர் யுனைட்டெட், பேர்ண்லி ஆகிய ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. லிவர்பூல், கிறிஸ்டல் பலஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், 4-2 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் வெற்றி பெற்றது. லிவர்பூல் சார்பாக, எம்ரே கான்,டெஜான் லொவ்ரென், ஜோயல் மட்டிப், ரொபேர்ட்டோ…

  4. இந்திய அணியை அச்சுறுத்த இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ வருகிறார் சக்லைன் முஷ்டாக் அடில் ரஷீத்துடன் சக்லைன் முஷ்டாக். | கெட்டி இமேஜஸ் முன்னாள் பாகிஸ்தான் ‘கிரேட்’ சக்லைன் முஷ்டாக், இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களுக்கு பயிற்சி அளிக்க ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இங்கிலாந்து தொடரில் சக்லைனின் அறிவுரைகள் இங்கிலாந்து அணிக்கு உதவியது. இதனையடுத்து இந்திய அணிக்கு எதிரான தொடரிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களுக்கு உதவ சக்லைன் முஷ்டாக் ஒப்பந்திக்கப்பட்டுள்ளார். நவம்பர் 2-ம் தேதி முதல் இவர் இங்கிலாந்து அணியுடன் இருந்து பயிற்சி அளிப்பார். காரெத் பாட்டீ, அடில் ரஷீத், சஃபர் அன்சாரி ஆகியோர் தங்க…

  5. ஸ்டோக்ஸ் பவுன்சரில் கீழே விழுந்த முஷ்பிகுர்; தமிம் சதத்திற்கு பிறகு சரிந்த வங்கதேசம் ஸ்டோக்ஸ் பவுன்சரில் தலையில் வாங்கி கீழே விழுந்த முஷ்பிகுர் ரஹிம் எழுந்து நிற்க முயல்கிறார். | படம்: ஏ.எஃப்.பி. 2-வது டெஸ்டில் இங்கிலாந்துக்கு எதிராக சதம் எடுத்த தமிம் இக்பால். | படம்: ஏ.பி. டாக்காவில் இன்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் முதல் இன்னிங்சில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட முடிவில் இங்கிலாந்து குக் (14), டக்கெட் (7), பாலன்ஸ் (…

  6. ஒருநாள் தொடரிலும் ஆவேசமாகவே விளையாடுவோம்: அஜிங்கிய ரஹானே உறுதி ரஹானே. | படம்: விவேக் பெந்த்ரே. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடைபிடித்த அதே ஆவேசமான அணுகுமுறையையே ஒருநாள் தொடரிலும் கடைபிடிப்போம் என்று அஜிங்கிய ரஹானே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தரம்சலாவில் அவர் கூறியதாவது: கட்டுக்கோப்பு மிக முக்கியமானது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆவேசமான கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஒருநாள் தொடரிலும் அதே அணுகுமுறையிலேயே ஆடுவோம். தீவிர கிரிக்கெட்டை எங்கள் பலத்திற்குத் தக்கவாறு ஆடுவோம். எதிரணியினரின் பலம், பலவீனத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை. டெஸ்ட் தொடருக்குப் பிறகே ஒருநாள் தொடரை ஆவலுடன் நான் எதிர்நோக்கினேன். இங்கும் புதிதாகவே தொடங்க …

  7. WTA டென்னிஸ்: சானியா - ஹிங்கிஸ் இணை தோல்வி WTA டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா - மார்டினா ஹிங்கிஸ் இணை போராடி தோல்வி அடைந்துள்ளது. ரஷ்யாவின் மகாரோவா - வெஸ்னினா ஜோடியிடம் தோல்வி கண்டது சானியா இணை. 6-3, 2-6, 6-10 என்ற செட் கணக்கில் வீழ்ந்துள்ளது. இதன் மூலம் சிறிய இடைவெளிக்கு பின் இணைந்த இந்திய - ரஷ்ய வெற்றி இணையின் பட்டக்கனவு முடிவுக்கு வந்தது. http://www.vikatan.com/news/sports/70880-wta-tennis-sania---hingis-lost-in-semi-final.art

  8. 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம் 1996 வில்ஸ் உலகக்கிண்ணம் – ஒரு சுகானுபவம். ***** இப்பொழுது போலல்ல அப்பொழுதெல்லாம் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பதில் கிரிக்கெட் பிரியர்களுக்கு வெறித்தனம் இருக்கும். சீவிய தென்னம்மட்டை அல்லது சிறிய அளவிலான மரத்தாலான பற் சகிதம் வெள்ளை , மஞ்சள் பந்துகளில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த காலத்தில்தான் 1996 உலகக்கிண்ணபோட்டிகள் ஆரம்பமாயிற்று. சங்கக்கடையில எப்பிடியாவது கஷ்டப்பட்டு 2 போத்தில் மண்ணெண்ணெய் உசார் செய்து கிடைக்காத பட்சத்தில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சியில் டைனமோ சுத்தி கரண்டெடுத்து அன்ரனாக்கு இரண்டு எக்ஸ்ட்ரா பைப் போட்டு உயர்த்தி அப்பிடி சுத்தி இப்பிடி சுத்தி ஒருவாறாக ரூபவாஹினியை பிடி…

  9. ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது பாரிய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊக்க மருந்து சோதனைகள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனைகள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது எனவும்குறிப்பிட்டுள்ளது. சில நாட்களில் சுமார் 50 வீதமான சோதனைகள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தகவல் உள்ளீட்டு தவறுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்களில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/5076 Tags50 வீதமான சோதனைகள்

    • 0 replies
    • 211 views
  10. 900 ! - போட்டிகள், சாதனைகள், நட்சத்திரங்கள்... ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 900 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி புதிய மைல் கல்லைப் பதித்திருக்கிறது இந்திய அணி. அதுவும் 900 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி இந்தியாதான். அக்டோபர் 16-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற நியுசிலாந்துக்கு எதிரான போட்டிதான் இந்தியாவுக்கு 900-மாவது போட்டி. இந்தத் தருணத்தில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் முத்தான முதல் முத்திரைகளைப் பதித்த 10 வீரர்களைப் பார்ப்போமா? அஜித் வடேகர் இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியை வழி நடத்திய முதல் கேப்டன் இவர்தான். 1974-ம்ஆண்டு ஜூலை 13-ம் தேதி இங்கிலாந்துக்கு…

  11. பாகிஸ்தானுக்கு வரவேண்டாம்! தற்போது பாதுகாப்பு இல்லை என்கிறார் சொய்ப் அக்தர் பாகிஸ்­தானில் வெளி­நாட்டு அணி­க­ளுக்கு தற்­போது பாது­காப்பு இல்லை என முன்னாள் வேகப்­பந்து வீச்­சாளர் சொய்ப் அக்தர் கூறி­யுள்ளார். பாகிஸ்­தானின் குவெட்டா நகரில் உள்ள பொலிஸ் அகா­ட­மியில் தற்­கொலைப் படை தீவி­ர­வா­திகள் சமீ­பத்தில் அதி­ரடி தாக்­குதல் நடத்­தி­னார்கள். இதில் 62 பொலிஸார் மற்றும் 2 இரா­ணுவ வீரர்கள் பலி­யா­னார்கள். 170 பேர் காயம் அடைந்­தனர். இந்த சம்­ப­வத்தை தொடர்ந்து வெளி­நாட்டு அணி­க­ளுக்கு பாகிஸ்­தானில் பாது­காப்பு இல்லை என்று முன்னாள் வேகப்­பந்து வீச்சாளர் சொய்ப் அக்தர் கூறி­யுள்ளார். ராவல்­பிண்டி எக்ஸ்­பிரஸ் என்று வர்­ணிக்­கப்­படும் சொய்ப் அக்த…

  12. கொண்டாட்ட பாணியை மாற்றுங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்­கி­லாந்­திற்கு எதி­ராக வெற்­றி­பெற்­ற­போது வெற்­றியைக் கொண்­டா­டிய விதம் குறித்து கருத்­துக்கள் வெளியா­கி­யுள்­ளன. டெஸ்ட் கிரிக்­கெட்டில் வெற்றி பெற்­றதும், அதை கொண்­டாடும் வித­மாக மைதா­னத்­திற்­குள்­ளேயே பாகிஸ்தான் வீரர்கள் ‘உடற்பயிற்சி’ எடுக்கும் வித்­தி­யா­ச­மான பாணியை அவ்­வப்­போது கடைப்­பி­டிக்­கி­றார்கள். இங்­கி­லாந்து சுற்­றுப்­ப­ய­ணத்தின் போது இந்த பாணியில் வெற்­றியை கொண்­டாடி மகிழ்ந்­தனர். இது இப்­போது சர்ச்­சையை கிளப்­பி­யுள்­ளது. பாகிஸ்­தானின் ஆளுங்­கட்­சியை சேர்ந்த எம்.பி. ராணா அப்சல் கான், ‘இது போல் நடந்து கொள்­வது பாகிஸ்தான் மீது எதிர்­மறை எண்­ணத்தை உர…

  13. கிளார்க் தலைமையில் ‘நச்சுக் கலாச்சாரம்’ பரவியது: மிட்செல் ஜான்சன் கடும் தாக்கு மைக்கேல் கிளார்க், மிட்செல் ஜான்சன். | படம்: ஏ.பி. ஓய்வு பெற்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க் கேப்டன்சி காலக்கட்ட பிரச்சினைகளை அலசி எழுதும் போது “நச்சுக் கலாச்சாரம்’ பரவியது என்று கடுமையாக சாடியுள்ளார். தனது ‘Resilient’ என்ற சுயசரிதை நூலில், பாண்டிங் சென்ற பிறகே கிளார்க் தலைமையில் அணியில் கடும் கோஷ்டிகள் உருவானதால் சில வீரர்கள் விளையாடுவதையே விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு வந்தனர் என்று எழுதி அதிர்ச்சி அலை பரப்பியுள்ளார். ஃபாக்ஸ் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு ஜான்சன் கூறும்போது, “பாண்டிங்கிற்குப் பிறகு நடைமுறைகள் மிகவு…

  14. களமிறங்கப்போகும் உலகக் கிண்ண அணி 1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான அதே இலங்கை கிரிக்கெட் அணி இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் விளை­யா­ட­வுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் போட்டி அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னியில் நடை­பெ­ற­வுள்­ளது. இந்தப் போட்­டியில் விளை­யா­டு­வ­தற்கு அர்­ஜுன ரண­துங்க, சுழல் ஜாம்­பவான் முத்­தையா முர­ளி­தரன் மற்றும் அர­விந்த டி சில்வா ஆகியோர் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்தப் போட்­டியின் மூலம் சமூக தொண்­டாற்று­வ­தற்கு நிதி சேக­ரிப்­பதே முக்­கிய நோக்கம் என்றும் பழைய வீரர்­களை மீண்டும் ஒ…

  15. இருபதுக்கு-20 போட்டிகளில் ஜொலிஸ்ரார் முதலிடம் -குணசேகரன் சுரேன் யாழ். மாவட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இருபதுக்கு-20 போட்டிகளின் தரப்படுத்தல்களில், 54.54 புள்ளிகளைப் பெற்ற ஜொலிஸ்ரார்ஸ் விளையாட்டுக் கழகம், முதலிடத்தைப் பெற்றுள்ளது. சென்ரல் விளையாட்டுக் கழகம், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் வெற்றிக்கிண்ணத்துக்காக யாழ்.மாவட்ட கிரிக்கெட் அணிகளில் சிறந்த அணியை தெரிவு செய்யும் தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 2010ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் இந்தத் தரப்படுத்தலில், 50, 40, 30 ஓவர்கள் மற்றும் இருபதுக்கு-20 ஆகிய போட்டிகளுக்கு தனித்தனியாக புள்ளிகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த வருடத்துக்கான அனைத்து இருபதுக்கு-20 போட்ட…

  16. ரஹீமோடு முரண்படுகிறார் தமிம் பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், ஓரளவு போட்டித்தன்மையை வெளிப்படுத்திய போதிலும், பங்களாதேஷ் அணி, அப்போட்டியில் தோல்வியடைந்த நிலையில், அப்போட்டியிலிருந்து பெறப்படக்கூடிய முடிவு என்னவென்பது குறித்து, அவ்வணியின் தலைவர் முஷ்பிக்கூர் ரஹீமோடு, அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால், முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். 22 ஓட்டங்களால் தோல்வியடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த ரஹீம், அப்போட்டியில் பங்களாதேஷ் அணி போட்டித்தன்மையுடன் விளையாடியதை முன்னிறுத்தியதோடு, தங்களால் முடிந்ததை, தாங்கள் செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அத்தோடு, அப்போட்டியில் வெ…

  17. வெஸ்ட் ஹாம், செல்சி போட்டியில் இரசிகர்கள் இரகளை வெஸ்ட் ஹாம் யுனைட்டெட், செல்சி ஆகிய அணிகளுக்கிடையில், இரசிகர்களின் இரகளையுடன் வெஸ்ட் ஹாம் கழக இலண்டன் அரங்கத்தில் இடம்பெற்ற, ஈ.எஃப்.எல் கிண்ண நான்காவது சுற்றுப் போட்டியில், செல்சியை வெஸ்ட் ஹாம் வென்றபோதும், பொலிஸாரினால் எழுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2-1 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ஹாம் வென்ற இப்போட்டியின்போது, நூற்றுக்கணக்கான இரசிகர்கள் மோதி, கலமடக்கும் பொலிஸார் சனத்திரளினுள் நுழைந்த நிலையில், பிளாஸ்டிக் போத்தல்கள், இருக்கைகைகள், நாணயக் குற்றிகள் எறியப்பட்டிருந்தன. இப்பருவ காலத்திலேயே, புதிய அரங்குக்கு வெஸ்ட் ஹாம் நகர்ந்த நிலையில், கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மிடில்ஸ்பேர்க் அணியுடனான போட்…

  18. 1970இல் உலக சம்பியனான பிரேஸில் அணித் தலைவர் கார்லோஸ் காலமானார் 2016-10-27 10:05:40 பிரேஸில் கால்­பந்­தாட்ட ஜாம்­ப­வான்­களில் ஒரு­வரும் 1970 உலக சம்­பி­ய­னான பிரேஸில் அணியின் தலை­வ­ரு­மான கார்லோஸ் அல்­பர்ட்டோ தனது 72ஆவது வயதில் கால­மானார். ரியோ டி ஜெனெய்­ரோவில் இருந்­த­போது அவ­ருக்கு மார­டைப்பு ஏற்­பட்டு கால­மா­ன­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இத்­தா­லிக்கு எதி­ராக 1970 இல் நடை­பெற்ற இறுதிப் போட்­டியில் கார்லோஸ் புகுத்­திய கோல், உலகக் கிண்ண கால்­பந்­தாட்ட வர­லாற்றில் அதி சிறந்த கோலாக இன்றும் புக­ழப்­ப­டு­கின்­றது. பின்­கள வீர­ரான கார்லோஸ், முன்­க­ளத்­திற்கு நகர்ந்து தன்னை நோக்கி பரி­மா­றப்­பட்ட பந்தை எவ­ருமே எதிர்…

  19. இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு- ஆண்டர்சன் அணியில் இல்லை. இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள அலிஸ்டயார் குக் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விபரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பங்களாதேஷ் அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவரும் அணியில் எதுவித மாற்றமுமின்றி அதே அணியே அறிவிக்கப்பட்டுள்ளது. உபாதைகள் காரணமாக அவதிப்பட்டு வரும் அந்த அணியின் பிரதான வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தியத் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நவம்பர் மாதம் 9 ம் தி…

  20. உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். உலக கிண்ணப் போட்டிகள்வரை டோனி விளையாட வேண்டும் -காவஸாகர் விருப்பம். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் தற்போதைய வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் டோனி தொடர்பில் ஒரு சாதகமான கருத்தை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் ஒருநாள் போட்டிகளுக்கான அணித்தலைவர் டோனி, இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள 2019 உலக கிண்ணப் போட்டிகள் வரை இந்தியாவுக்காக விளையாடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 4 வது ஒருநாள் போட்டி டோனியின் சொந்த மைதானமான ராஞ்சியில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியில் வர்ணனையாளராக கலந்துகொண்டுள்ள சுனில் கவாஸ…

  21. 2-வது டெஸ்ட்: யூனிஸ் கானின் 33-வது சதத்துடன் மே.இ.தீவுகளுக்கு எதிராக பாக். ஆதிக்கம் 33-வது டெஸ்ட் சதம். | மிஸ்பா உல் ஹக். | படம்: கெட்டி இமேஜஸ். அபுதாபியில் தொடங்கிய மே.இ.தீவுகள்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்துள்ளது. யூனிஸ் கான் 127 ரன்கள் எடுத்து தனது 33-வது டெஸ்ட் சதத்தை சாதித்தார். 42/2 என்ற நிலையிலிருந்து ஆசாத் ஷபிக்(68), யூனிஸ் கான் (127), மற்றும் மிஸ்பா உல் ஹக் (90 நாட் அவுட்) ஆகியோர் பாகிஸ்தானை தூக்கி நிறுத்தினர். ஆசாத் ஷபிக், யூனிஸ் கான் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 87 ரன்களைச் சேர்த்தனர். மிஸ்பா-யூனிஸ் கான் ஜ…

  22. விவியன் ரிச்சர்ட்ஸ் + சச்சின் + ரிக்கி பாண்டிங் = கோஹ்லி! சொல்வது யார்? கோஹ்லிக்கு பாராட்டுகள் 360 டிகிரியில் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இப்போது இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மொகிந்தர் அமர்நாத் டர்ன். கொஞ்சம் அதீதமாக தோன்றினாலும் பரவாயில்லை என கோஹ்லியை விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், ரிக்கி பாண்டிங் சேர்ந்த காம்போ என்கிறார் அமர்நாத். கோஹ்லியை பற்றி அவர் வாசித்த பாராட்டுப் பத்திரம் இதோ... ”ஒரே வீரரை திரும்ப திரும்ப புகழ்வது சலிப்பை ஏற்படுத்தலாம். ஆனால், விராட் கோஹ்லியைப் புகழ்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. கோஹ்லியைப் போல ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ச்சியாக நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய பேட்ஸ்மேனைப் பார்த்ததில்லை. உண்…

  23. தலைமைத்துவம் அற்றவர் டெய்லர்: டெய்லரை விமர்சிக்கிறார் மக்கலம் நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் றொஸ் டெய்லர் மீது, அவ்வணியின் மற்றொரு முன்னாள் தலைவரான பிரென்டன் மக்கலம், விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டெய்லரின் தலைமைத்துவம் தொடர்பாகவே, இந்த விமர்சனம் அமைந்துள்ளது. பிரென்டன் மக்கலம் வெளியிட்டுள்ள அவரது சுயசரிதையில், "இடம்பெறாத அந்த சதித்திட்டம்" என்ற பிரிவில், இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் தலைவராக இருந்த டானியல் விற்றோரி, 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து தலைவராகப் பதவி வகித்த றொஸ் டெய்லரிடமிருந்து அப்பதவி, திடீரெனப் பறிக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு மக்கலத்திடம் வழங்கப்பட்டது. மேற…

  24. தோல்வி வெறுப்பல்ல; பாடம் கற்றுத்தரும் அனுபவம்: முஷ்பிகுர் ரஹிம் முஷ்பிகுர் ரஹிம் பேட்டிங். | படம்: ஏ.எஃப்.பி. இங்கிலாந்துக்கு எதிராக அரிய வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி தழுவியது பாடம் கற்றுத்தரும் அனுபவம் என்று வங்கதேச அணியின் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்தார். “சில வேளைகளில் தோல்வி ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்தும். 15 மாதங்கள் டெஸ்ட் போட்டியே ஆடாமல் வங்கதேச அணி இப்படி ஆடுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனவே எங்களால் ஓரளவுக்கு நிரூபிக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளோம். இங்கிலாந்து போன்ற ஒரு அனுபவமிக்க அணிக்கு எதிராக நாங்கள் எங்கள் உறுதிப்பாட்டை தெரிவிக்குமாறு ஆடினோம். தோல்வி வெறுப்பேற்றுகிறது என்ற வார்த்தையை நா…

  25. ஸிம்பாப்வேயில் திறமையை வெளிப்படுத்த முடியும் – ரங்கன ஹேரத் நம்பிக்கை 2016-10-25 10:38:06 நெவில் அன்தனி ஸிம்­பாப்வே அணிக்கு எதி­ரான டெஸ்ட் தொடரில் திற­மையை வெளிப்­ப­டுத்த முடியும் என்ற நம்­பிக்கை இருப்­ப­தாக இலங்கை அணிக்கு தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ரங்­கன ஹேரத் தெரி­வித்தார். வழ­மை­யான அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் உபா­தைக்­குள்­ளா­கி­யி­ருப்­ப­தாலும் உதவித் தலைவர் தினேஷ் சந்­தி­மாலின் வலது பெரு விரல் காயம் பூரண குணம் அடை­ய­த­தாலும் இரு­வரும் ஸிம்­பாப்வே கிரிக்கெட் விஜ­யத்தில் இடம்­பெ­ற­வில்லை. அவர்கள் அணியில் இடம்­பெ­றா­தது அணிக்கு பேரி­ழப்பு எனவும் அவர் கூறினார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறு­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.