விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7861 topics in this forum
-
இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்.. மகிழ்ச்சியும் வருத்தமும் டெஸ்ட் போட்டிகளில் கடைசி நாளன்று மட்டை பிடித்து நிற்பது சவாலான விஷயம். பந்து வீசப்படும் களத்தில் பல விரிசல்கள் ஏற்பட்டிருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் ஓடிய கால் தடங்கள் பிட்சின் மீது ஏற்படுத்திய சிறு பள்ளங்கள் பந்து தாறுமாறாக எகிறவும் கூடுதலாகத் திரும்பவும் உதவும். ஒரு பந்து எதிர்பார்ப்புக்கு மேல் எழும். இன்னொறு நினைத்ததைவிட அதிகம் தாழும். வழக்கமான உத்திகளை வைத்துக்கொண்டு கரைசேர்ந்துவிட முடியாது. இத்தகைய ஐந்தாவது நாளில் ஆடும் வாய்ப்பு இந்தியாவுக்கு இந்தத் தொடரில் மூன்று முறை கிடைத்தது. மூன்றிலுமே இந்தியா மெச்சத்தக்க விதத்தில் ஆடியது. ஒன்றில் தோல்வி என்றாலும் தீரமான போராட்டத்துக்குப் பிறகு கிடைத்த …
-
- 0 replies
- 383 views
-
-
செஞ்சூரியன் டெஸ்ட் – 223 ஓட்டங்களுக்குள் அட்டமிழந்தது தென் ஆபிரிக்கா! செஞ்சூரியனில் இன்று ஆரம்பமாகிய முதல் டெஸ்டில் முதலாவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்கா அணி 223 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட் செஞ்சூரியனில் புதன்கிழமை ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 181 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது. தென்னாபிரிக்கா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவியர் 6 விக்கெட்டுக்களும், ரபாடா 3 ஸ்டெயின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதன் பின்னர் தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா…
-
- 0 replies
- 670 views
-
-
'ஸ்லெட்ஜிங்' செய்வது ஒருநாள் கைகலப்பில் போய் முடியும்: ஹோல்டிங் எச்சரிக்கை எதிரணி வீரர்களை தனிப்பட்ட முறையில் வசை பாடும் ‘ஸ்லெட்ஜிங்’ போக்கினால் என்றாவது ஒருநாள் மைதானத்திலேயே கைகலப்பு நடக்கப் போகிறது என்று மேற்கிந்திய தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் எச்சரித்துள்ளார். "நான் விளையாடும் காலக்கட்டங்களில் ஸ்லெட்ஜிங் கிடையாது. ஒரு சில வீரர்கள் சிலர் பற்றி ஓரிரு வார்த்தைகளை நகைச்சுவையாகக் குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது நான் பார்ப்பதெல்லாம் என்னவெனில் பெவிலியனுக்குச் செல்லும் போது ஒருவர் முகத்துக்கு நேராக ஒருவர் சில வசைகளை பொழிவதையே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சமீபத்தில் டேவிட் வார்னர், ரோஹித் சர்மாவிடையே நடந்த…
-
- 0 replies
- 648 views
-
-
பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது தடுத்து நிறுத்த முயல்வார்களா [01 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய வீரர்கள்டெஸ்ட் போட்டிகளிலும் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் வென்ற உற்சாகத்தில் இருக்கும் `பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது. நாளை 2 ஆம் திகதி சிட்னியில் தொடங்கும் இரண்டாவது போட்டியில் அசத்தினால், தொடர்ந்து 16 டெஸ்களில் வென்ற ஸ்ரீவோவின் சாதனையை சமன் செய்யலாம். இந்தச் சாதனைக்கு இந்திய வீரர்கள் முட்டுக் கட்டை போடுவார்களா? ஷேன் வோர்ன் (708 விக்.), மெக்ராத் (563 விக்.), ஜஸ்ரின் லாங்கார் (7,696 ஓட்டங்கள்), டேமியன் மார்ட்டின் (4,406 ஓட்டங்கள்) போன்ற அனுபவ வீரர்கள்…
-
- 0 replies
- 974 views
-
-
காதலுக்காக தென்ஆப்ரிக்கா அணியில் விளையாடும் இம்ரான் தாகீர்! தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்று சுழற்பந்து வீச்சில் கலக்கி வரும் இம்ரான் தாகீர், பாகிஸ்தானை சேர்ந்தவர். இந்திய வம்சாவளி பெண்ணை காதலித்து மணந்து கொண்ட இம்ரான் தாகீர், பின்னர் தென்ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றார். கடந்த 1979-ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூரில் பிறந்த இம்ரான் தாகீருக்கு தற்போது 36 வயதாகிறது. 1998-ம் ஆண்டு பாகிஸ்தான்' ஏ 'அணியில் இடம் பெற்றிருந்த தாகீர், தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அணியில் இடம் பெற்றிருந்தார். அப்போது சுமையா தில்தர் என்ற இந்திய வம்சாவளி பெண்ணை சந்தித்துள்ளார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. தொடர்ந்து இம்ரான் தாகீர் சுமையாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தென்…
-
- 0 replies
- 248 views
-
-
ஆரம்ப ஏலம் ரூ.40 கோடி: ஐபிஎல் அணியை வாங்குகிறார் தாேனி? புதுடெல்லி: டிசம்பர் 8ம் தேதி புதியதாக ஏலம் விடப்பட உள்ள ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்க இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளை, ஐபிஎல் போட்டிகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்து நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான மூவர் குழு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த இரு அணிகளுக்கும் பதிலாக புதிய அணிகளை தேர்வு செய்ய ஐபிஎல் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. புதிதாக சேர்க்கப்படும் 2 அணிகள் குறித்த விவரம் டிசம்பர் 8-ம் தேதி தெரிய வரும். ஏனெனில் அன்றைய தினம்தான் ப…
-
- 0 replies
- 309 views
-
-
இறுதி சுற்றில் இந்தியா . Tuesday, 26 February, 2008 11:13 AM . ஹோபர்ட், பிப்.26: ஹோபர்ட்டில் இன்று நடைபெற்று வரும் ஒருநாள் போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. . இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆஸதிரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதிய கடைசி லீக் சுற்று போட்டி நடைபெற்றது. இதில் டாசில் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் பிரவீன் குமார் ஆகியோரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. 47.1 ஓவரில் இலங்கை அணி 179 ர…
-
- 0 replies
- 889 views
-
-
செய்தித் துளிகள்: விராட் கோலிக்கு ஓய்வு விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் டெல்லி-பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஷிகர் தவண், இஷாந்த் சர்மா ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடுவார்கள் என்றும் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக ஷிகர் தவண் களமிறங்குவார் எனவும் அணியின் பயிற்சியாளர் விஜய் தாகியா தெரிவித்துள்ளார். ---------------------------------------------------------------------- சர்ச்சையில் ஷிகர் தவண் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பகுதி நேர பந்து வீச்சாளராக இந்தியாவின் ஷிகர் தவண் 3 ஓவர்கள் வீசினார். இந்நிலையில் அவரது பந்து வீச்சு விதிமுறை…
-
- 0 replies
- 613 views
-
-
'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை வாங்கிய சன்னி லியோன் ஐ.பி.எல், சி.சி.எல். போன்று சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் பி.சி.எல். எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் 'லீக்' போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார். சன்னி லியோன் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திப் படங்களில் நடித்துள்ளார். 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தோனியை போல இவரும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளம்பரங்களிலும் தோன்ற இருக்கிறார். http://www.vikatan.com/news/sports/59713-sun…
-
- 0 replies
- 395 views
-
-
பெறுபேறுகள் தொடர்பாக மத்தியூஸ்: திரிமான்ன தொடர்பில் மௌனம் இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அணி வீரர்களான குசால் மென்டிஸ், ரங்கன ஹேரத் ஆகியோரைப் பாராட்டிய போதிலும், லஹிரு திரிமான்ன தொடர்பாகத் தெளிவான தகவல்களை வழங்கவில்லை. இத்தொடரில் ஓரளவு தொடர்ச்சியான துடுப்பாட்டப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய இளம் வீரரான குசால் மென்டிஸ், 6 இனிங்ஸ்களில் 31.20 என்ற சராசரியில் 156 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இது, இலங்கை சார்பாக இத்தொடரில் பெறப்பட்ட 3ஆவது அதிக ஓட்டங்களாகும். இத்தொடரில் இலங்கையின் நாயகனாகத் தெரிவான கௌஷால் சில்வா, 193 ஓட்டங்களைப் பெற்றதோடு, ட…
-
- 0 replies
- 323 views
-
-
துரித சதுரங்க போட்டியில் இலங்கைக்கு தங்கம் வென்றுக்கொடுத்த சிறுமி உலக பாடசாலைகள் பங்கேற்கும் துரித சதுரங்க (fast chess) போட்டியில் இலங்கையின் விசாக வித்தியாலயத்தைச் சேர்ந்த ஹேஷா மிச்சலா பல்லி என்ற மாணவி 9 வயதுக்குட்பட்டோர் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். துரித சதுரங்க போட்டிகள் ரஸ்யாவின் சொச்சி நகரில் இடம்பெற்றுவருகின்றது. குறித்த போட்டியில் பங்குகொண்ட போதே இவர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈரானில் இடம்பெற்ற 9 வயதுக்குற்பட்ட ஆசிய சதுரங்க போட்டியில் ஹேஷா ஒரு தங்கப்பதக்கம் உட்பட 3 பதக்கங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/1437…
-
- 0 replies
- 328 views
-
-
லா லிகா: பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை; எதிரணிகளை நையப் புடைத்தன லா லிகா தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டிகளில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் கோல் மழை பொழிந்தன. பார்சிலோனா 7-1 எனவும், ரியல் மாட்ரிட் 6-2 எனவும் எதிரணிகளை வீழ்த்தின. லா லிகா தொடரில் நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் பார்சிலோனா- ஒசாசுனா அணிகள் மோதின. பலம் வாய்ந்த பார்சிலோனா அணியின் முன் ஒசாசுனா அணியால் ஈடுகொடுக்க முடியவில்லை. ஆட்டம் தொடங்கிய 12-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய…
-
- 0 replies
- 409 views
-
-
போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம் Tamil போராட்டத்தின் பின் சென் மேரிஸ் அணியை வீழ்த்தியது ரட்ணம் களனிய கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான டிவிஷன் I (பிரிவு 1) கால்பந்து சுற்றுப் போட்டியின் முதல் நாள் ஆட்டமொன்றில் இரண்டாம் பாதியில் பெற்றுக்கொண்ட கோலின் மூலம் யாழ்ப்பாணம் சென் மேரிஸ் விளையாட்டுக் கழகத்தை 1-0 என கொழும்பு ரட்ணம் விளையாட்டுக் கழகம் வீழ்த்தியது. கடந்த முறை பிரிவு இரண்டில் இரண்டாம் இடம் பெற்று இம்முறை பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்ட ரட்ணம் அணி வீரர்கள் இந்தப் போட்டியின் ஆரம்பம் முதலே தமது ஆதிக்கத்தை…
-
- 0 replies
- 555 views
-
-
துபாயை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 7 அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். 7 அணிகளுக்கும் அபுதாபி, அஜ்மான், துபை, புஜைரா, சார்ஜா, ரசல்-ஹைமா, உம் அல்-கைவாய்ன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டும் தான் இடம் பெறுவார்கள். போட்டியும் 7 ஓவர்களை கொண்டதாக இருக்கும். இந்த கிரிக்கெட் போட்டி அறிமுக விழா இந்த வார இறுதியில் துபாயில் நடக்கிறது. இதற்கான விழாவில் இந்திய அணியின் கேப்டன் டோன…
-
- 0 replies
- 448 views
-
-
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவினர் இலங்கையில் விசாரணை இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது சுமத்தப்பட்ருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது. இதற்காக, சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் இலங்கை வந்துள்ளனர். இது குறித்துத் தெரிவித்த சர்வதேச கிரிக்கெட் சபையின் இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல், “கிரிக்கெட்டின் கௌரவத்தைத் தக்க வைத்துக்கொள்வதே இந்தப் பிரிவின் பொறுப்பு. அதற்காக, தேவைகள் ஏற்படின் விசாரணைகளையும் இப்பிரிவு நடத்தும். இலங்கை கிரிக்கெட் அணி குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகிவிட்டன. இதுவரை ஒரு சிலரிடம் விசாரணைகள் நடத…
-
- 0 replies
- 371 views
-
-
'எங்களுக்கு எதிராக கோலியால் சதம் அடிக்க முடியுமா?'- பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் கோப்புபடம்: விராத் கோலி, மிக்கி ஆர்தர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அனைத்து அணிகளுக்கும் எதிராக சதம் அடித்து இருக்கலாம், ஆனால், இப்போது இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடிக்க முடியாது என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் சவால் விடுத்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனும், கேப்டனுமான விராட் கோலி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது, தனது 33-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க…
-
- 0 replies
- 530 views
-
-
`கூல்’ கேப்டன் தோனி கோபப்பட்ட`ஆங்ரி பேர்ட்' தருணங்கள்! ஆக்ரோஷ ஆக்ஷன்கள் எல்லாம் தன் அகராதியிலேயே இல்லை என்பதுதான் தோனியின் கேரக்டர். கடந்த 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில், மகேந்திர சிங் தோனியின் அணுகுமுறை என்பது புத்திக்கூர்மைகொண்ட ஒரு புல்லட் புரூஃப் ஜாக்கெட் போன்று தக்க பாதுகாப்பானதாக இருக்கும். ஆம், எதிரணிகளின் ஸ்லெட்ஜிங் பிரெஷர் பூச்சாண்டி எல்லாவற்றையும் பில்டப் இல்லாமல் ஹேண்டில் பண்ணுவதுதான் தோனியின் சிறப்பம்சம்! அதேசமயம், அவ்வப்போது சிங்கத்தைச் சீண்டிப்பார்க்கும் சில வீரர்களை தண்டிக்கவும் தவறியதில்லை. `தோனியின் `கோபம்'ங்கிறது வேலூர் வெயில்ல குளிர்க்காய்ச்சல் வருவது மாதிரி ஒவ்வொருத்தரையும் வித்தியாசமா டீல் செய்யும்.' 2016-…
-
- 0 replies
- 628 views
-
-
பாதுகாப்பற்ற கார் பந்தயம்... ஃபெராரி நிறுவனத்துக்கு ரூ.40 லட்சம் அபராதம்! கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் பந்தயத்தில் மெக்கானிக்குக்கு ஏற்பட்ட விபத்தால் ஃபெராரி நிறுவனத்துக்கு 50,000 யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே அதிவேக கார் பந்தயமாக இருப்பது ஃபார்முலா ஒன்தான். இங்கு வேகத்தை மட்டுமே மனதில்வைத்து அனைத்து கார்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பந்தயத்தில் ஒவ்வொரு நொடியும் மிகமுக்கியம். 300 கி.மீ-க்கு மேல் பறக்கும் கார்களுக்கு டயர்கள் வேகமாக தேய்ந்துவிடும். அதனால், ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில் டயர்களை மாற்றுவதற்காக டிரைவர்கள் காரை பிட் ஸ்டாப்பில் நிறுவத்துவது சகஜம். இப்படி …
-
- 0 replies
- 355 views
-
-
ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட வவுனியா இளைஞனும் தெரிவு ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட அணியில் வவுனியா இளைஞனும் தெரிவாகியுள்ளார். ஐந்து நாடுகள் பங்கு கொள்ளும் ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாடுவதற்காக பங்களாதேஷ் தலைநகர் டாக்கா செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து போன்ற விளையாட்டுக்களில் மாகாண மட்டத்தில் பல பதக்கங்கள…
-
- 0 replies
- 370 views
-
-
கிரிக்கெட்டின் உயர்தர ஹாட்ரிக்: இங்கிலாந்தின் ஜோர்டான் கிளார்க் சாதனை ஜோர்டான் கிளார்க். | கெட்டி இமேஜஸ். ஓல்ட் டிராபர்ட் மைதானத்தில் நடைபெறும் ரோஸஸ் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் லங்காஷயர் வேகப்பந்து வீச்சாளர் ஜோர்டான் கிளார்க் கிரிக்கெட் ஆட்டத்தின் உயர்தர ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதாவது டெஸ்ட் போட்டிகளில் சுமார் 14,639 ரன்களை தங்களிடையே பகிர்ந்து கொள்ளும் ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வரிசையாக வீழ்த்தினார் ஜோர்டான் கிளார்க். யார்க்ஷயர் அணிக்கு எதிராக ஜோர்டான் கிளார்க் நிகழ்த்தும் இந்த ஹாட்ரிக் சாதனையின் போது ஹாட்ரிக் ஓவரின் 2வது மற்றும் …
-
- 0 replies
- 217 views
-
-
கிரிக்கெட்டின் நேர்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு- ஐசிசி தலைவர் பந்தை சேதப்படுத்துவது மற்றும் எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது போன்ற விடயங்கள் கிரிக்கெட்டின் கௌரவத்திற்கும் நேர்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் டேவிட் ரிச்சட்சன் சமீபத்தைய மோசமான நடத்தைகளை வீரர்கள் நிறுத்திக்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். நேர்மையே கிரிக்கெட் மரபனு என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பல விடயங்கள் சமீபத்தில் இடம்பெற்றுள்ளன இதனை முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிரணி வீரர்களை வார்த்தைகளால் நிந்திப்பது அவர்களை வார்த…
-
- 0 replies
- 286 views
-
-
சங்கா தவறவிட்ட சாதனை 28-12-2014 ஒரு வருடத்தில் அதிகூடிய ஓட்டங்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை 21 ஓட்டங்களால் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தவறவிட்டுள்ளார். குறித்த சாதனை தற்சமயம் அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங்கிடம் இருக்கிறது. ஒரு வருடத்தில் அனைத்துவிதமான போட்டிகளிலும் 2,833 ஓட்டங்களை 2005ஆம் ஆண்டு ரிக்கி பொன்டிங் பெற்றுக்கொண்டமையே இதுவரை சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை குமார் சங்கக்கார முறியடிப்பார் என எதிர்பார்த்த வேளையில், 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 2,813 ஓட்டங்களை இதுவரை சங்கக்கார பெற்றுள்ளார். இன்னமும் 21 ஓட்டங்கள் பெற்றிருந்தால் பொன்டிங்கின் சாதனையை சங்கக்கார முறியடித்திருப்பார். இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடைய…
-
- 0 replies
- 745 views
-
-
என்னுடைய ஒருநாள் போட்டி சிறப்புக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் காரணம்: ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மேட்ச்-வின்னராகத் தான் மாறியதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் பெரும்பங்கு வகித்துள்ளதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுக்கு முன்னதாக ஸ்டீவ் ஸ்மித்தை ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் ஒரு பிரதான வீரராகக் கருதியதில்லை. ஆனால். அணியில் தேர்வு செய்யப்பட்டவுடன் அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு எதிராக தற்போது முத்தரப்பு ஒருநாள் தொடர் ஆகியவற்றில் ஒரு மேட்ச் வின்னராகத் திகழ்ந்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதும் அவருக்குக் கிடைத்துள்ளது. தன்னுடைய இந்த எழுச்சிக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் …
-
- 0 replies
- 353 views
-
-
அவுஸ்ரேலிய ஓபன் – ஒசாகா, சுவிட்டோலினா காலிறுதிக்கு தகுதி பெற்றனர்! கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று காலை இடம்பெற்ற 4 வது சுற்று டென்னிஸ் போட்டியொன்றில் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நயோமி ஒசாகா, லாட்வியா வீராங்கனை சுலெஸ்டானா ஆகியோர் விளையாடினர். இதில் ஒசாகா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 13-வது இடத்தில் இருக்கும் சுவஸ்டோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரான்ஸ்லாம் பட்டத்தை வென்ற அவர் முதல் முறையாக அவுஸ்ரேலிய ஓபனில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். கடந்த முறை 4-வது சுற்று வரை முன்னேறியமையே அவரது சிறந்த …
-
- 0 replies
- 393 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு: கதாயுதத்தை ஏந்தியது இந்தியா! டெஸ்ட் கிரிக்கெட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. அதன்படி, டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது, கிரிக்கெட் அணிகளுக்கு மிக முக்கியமான தரவரிசைப் பட்டியலாக பார்க்கப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ஆம் திகதி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிடும். இந்த பட்டியலில், முதல் இடத்தில் இருக்கும் அணிக்கு சம்பியன்ஷிப் பட்டத்தோடு, ஐசிசி.யின் கதாயுதமும் வழங்கப்…
-
- 0 replies
- 559 views
-