Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. சங்கா மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/01/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9…

  2. சங்கா, மஹேல மீது அர்ஜுன காட்டம் இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் மீது, அமைச்சரும் இலங்கை அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இருவருமே அண்மையில் ஓய்வுபெற்றுள்ள போதிலும், அவர்கள் ஓய்வுபெறும் வரை தங்களது துடுப்பாட்ட நிலையை மாற்றி, இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 'இன்று, வீரர்களின் ஒழுக்கமென்பது முழுமையாக அழிவடைந்துள்ளது. நான்காம் இலக்கத் துடுப்பாட்ட வீரராக விளையாடிய நான், எனது கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தில், ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கினேன். துடுப்பாட்ட இடமொன்றில் ஏனைய இளைய வீரர்கள் பரிச்சயத்தைப் பெறுவதற்கே அதைச் செய்தேன்"…

  3. இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிய இவர்கள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் நேற்று (21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு ஒழுக்காற்றுக்குழுவிடம் …

  4. சங்கா, மஹேலவுக்கு மெத்தியூஸ் புகழாரம் குமார் சங்கக்கார மற்றும் ஜெயவர்தன போன்ற மூத்த வீரர்களிடமிருந்து இளம் வீரர்கள் அதிகமாக கற்றுக்கொள்ள வேண்டுமென இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதன் முதல் இரு போட்டிகளில் இலங்கை அணி வெற்றிபெற்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் 2 ஆவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், இந்திய தொடரின் போது நாங்கள் முழு நம்பிக்கை இழந்தவர்களாகவே இருந்தோம். தற்போது கிடைத்திருக்கும் …

  5. சங்கா, மஹேலவை இன்று சந்திக்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர் இலங்கை அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரை, விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் தொடர்பில் இதன்போது அமைச்ர் கலந்துரையாடவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி அண்மைக்கால­மாக அடைந்து வரும் தோல்­வி­களால் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வ­னமும் விளையாட்­டுத்­துறை அமைச்­சரும் பெரும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்­ளனர். இந்­நி­லையில் பின்­ன­டைவை சந்­தித்­துள்ள இலங்கைக் கிரிக்கெட் அ…

  6. சங்காவின் அதிரடி தொடர்கிறது இங்கிலாந்தின் பிராந்திய கிரிக்கெட் போட்டிகளில், சரே அணிக்காக விளையாடிவரும், இலங்கையின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இந்தப் பருவகாலத்தில் 1,000 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். பலமிக்க யோர்க்‌ஷையர் அணிக்கெதிராக, லீட்ஸில் இடம்பெற்றுவரும் போட்டியிலேயே, இந்தச் சாதனையை அவர் படைத்தார். பகல் - இரவுப் போட்டியாக, மென்சிவப்புப் பந்தைப் பயன்படுத்தி இடம்பெற்றுவரும் இப்போட்டியில், அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய குமார் சங்கக்கார, 183 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 180 ஓட்டங்களைக் குவித்தார். தனது சதத்தை 136 பந்துகளில் கடந்த அவர், அதன் பின்னர் மேலும் அதிரடியாக…

  7. சங்காவின் அதிரடி வீண் : CPL தொடரிலிருந்து ஜமெய்க்க அணி வெளியேற்றம் Image Courtesy - Getty image மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான கரீபியன் பிரீமியர் லீக் தொடரின், பிளே ஒப் சுற்று தற்போது நடைபெற்று வருகின்றது. இச்சுற்றில் நடைபெற்று முடிந்திருக்கும் வெளியேறல் (Eliminator) நொக்அவுட் போட்டியில் கயானா அமேசான் வோரியர்ஸ் அணியினால் 5 விக்கெட்டுக்களால் வீழ்த்தப்பட்டிருக்கும் நடப்புச் சம்பியன் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி தொடரில் இருந்து வெளியேறுகின்றது. கடந்த மாத ஆரம்பத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளை ஒத்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் பிளே ஒப் போட்…

  8. சங்காவின் அதிரடியோடு கரீபியன் பிரிமியர் லீக் தொடரின் பிளே ஒப் சுற்றில் ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி Image Courtesy - Getty Image விறுவிறுப்பான முறையில் நடைபெற்று வரும், மேற்கிந்திய தீவுகளின் கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ‘கரீபியன் பிரிமியர் லீக்’ T-20 தொடரில் பிளே ஒப் சுற்றிற்கு, குமார் சங்கக்கார தலைமையிலான ஜமெய்க்கா தல்லாவாஸ் அணி, சென்.கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியட்ஸ் அணியினை வீழ்த்தியதன் 41 ஓட்டங்களால் வீழ்த்தியதன் மூலம் தெரிவாகியுள்ளது. இம்மாதம் (ஒகஸ்ட்) 4 ஆம் திகதி முதல் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் சேர்ந்த அணிகளின் பங்குபெற்றதலுடன் நடைபெற்று வரும் மேற்கிந்திய தீவுகளின் உள்ளூர் T-20 தொடரின், குழு நிலை ஆட்டங்கள் அனைத்தும் நிறை…

  9. சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி சங்காவின் சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி. இங்கிலாந்தின் கழக மட்ட அணிகளுக்கு இடையில் நடைபெறும் ரோயல் லண்டன் கிண்ணத்தின் 3 ஆவது காலிறுதிப் போட்டியில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர வீரர் சங்காவின் ஆட்டமிழக்காத சதத்தின் துணையுடன் சர்ரே அணி அரை இறுதிக்கு தகுதி பெற்றது. நோர்த்தம்டம்ஷயார் மற்றும் சர்ரே அணிகள் மோதிய இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நோர்த்தம்டம்ஷயார் அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தீர்மானித்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோர்த்தம்டம்ஷயார் அணி 49 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 276 ஓட்டங்களைப் பெற்றது. சர்ரே அணியின் பந…

  10. சங்காவின் சதத்துடன் முதல் இன்னிங்சில் வலுவடைந்திருக்கும் சர்ரே கழகம் இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான போட்டியொன்றில், இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார பெற்றுக்கொண்ட சதத்துடன் சர்ரே (Surrey) அணி யோர்க்ஷையர் (Yorkshire) அணிக்கு எதிராக தமது முதல் இன்னிங்சில் 592 ஓட்டங்களைக் குவித்துள்ளது. டிவிஷன் – I அணிகளான சர்ரே மற்றும் யோர்க்ஷையர் அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகியிருந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சர்ரே அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது. சர்ரே அணிக்கு ஆ…

  11. சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி சங்காவின் சாதனையை முறியடித்தார் கோஹ்லி. சர்வதேசக் கிரிக்கெட் அரங்கில் ஓட்ட இயந்திரமாக வர்ணிக்கப்படும் இந்தியக் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் அணித்தலைவரும், ஒருநாள் போட்டி அணியின் உதவித்தலைவருமான விராட் கோஹ்லி நாளுக்குநாள் சாதனைகள் பலவற்றைப் புதுப்பித்துக் கொண்டே வருகின்றார். இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் மொஹாலியில் நிறைவுக்கு வந்த 3 வது ஒருநாள் போட்டியின் போது ஆட்டம் இழக்காத 154 ஓட்டங்கள் பெற்றதன் மூலம் கோஹ்லி தனது 26 வது சதத்தைப் பூர்த்தி செய்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் பெற்றவர்கள் வரிசையில் விராட் கோஹ்லி தற்போது, சங்கக்காரவை பின்தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். தன்ன…

  12. சங்காவின் சாதனையை முறியடித்தார் டோனி 27-12-2014 இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி, சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் கூடுதலான ஸ்டம்ப் முறையிலான ஆட்டமிழப்புக்களை செய்தவர் என்ற சாதனையை இன்று முறியடித்தார். அவுஸ்திரேலியா வீரர் மிச்சல் ஜோன்சனை ஆட்டமிழக்க செய்ததன் மூலம் இலங்கை அணியின் குமார் சங்ககாராவுக்கு சொந்தமாக இருந்த இந்த சாதனையை தனதாக்கினார். 460 இன்னிங்சில் 134 ஸ்டம்புகளை செய்துள்ளார் டோனி. 485 இன்னிங்சில் 133 ஸ்டம்புகளை செய்துள்ளார் குமார் சங்ககார. இந்த பட்டியலில் மூன்றாமிடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் ரொமேஷ் களுவிதாரண. சகலவித கிரிக்கெட் போட்டிகளிலும் இலங்கை அணியின் குமார் சங்கார 724 ஆட்டமிழப்புக்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. டோனி 638 …

  13. சங்காவின் தலைமையில் களமிறங்கும் மஹேல பாகிஸ்தான் சூப்பர் லீக் கராச்சி கிங்ஸ் அணியின் தலைவராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான குமார் சங்கக்கார இம்முறை பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார். இந்நிலையில் கராச்சி கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரராகவும், அணியின் ஆலோசகராகவும். சங்கா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். குமார் சங்கக்காரவுடன் இலங்கை அணியின் மற்றுமொரு ஜாம்பவான் மஹேல ஜெயவர்தன, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கிறிஸ் கெயில்…

  14. சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். சங்காவும் ,மஹேலவும் ஒரே அணியில் பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களுமான சங்கா, மஹேல இருவரும் ஒன்றாக ஒரே அணியில் விளையாடுவதை காணும் சந்தர்ப்பம் வந்திருக்கின்றது. எதிர்வரும் நவமபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்களாதேஷ் பிரிமியர் லீக் போட்டிகளில்தான் இருவரும் ஒரே அணியில் விளையாடவுள்ளனர். டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக சங்கா, மஹேல இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர், அத்தோடு இலங்கையின் 7 வீரர்களும் இந்தப் போட்டிகளில் விளையாடவுள்ளனர். டஸுன் சாணக்க, திஸ்ஸர பெரேரா, நுவான் க…

  15. சங்காவை துரத்தும் டோனி January 18, 2016 விக்கட் கீப்பராக செயல்பட்டடுவரும் டோனி, ஜார்ஜ் பெய்லியை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து ஆட்டமிழக்க செய்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ஸ்டம்பிங் செய்த விக்கட் கீப்பர்கள் வரிசையில் டோனி (415 போட்டி, 138 ஸ்டம்பிங்) 2வது இடம்பிடித்தார். இலங்கை அணியின் சங்கக்காரா 594 போட்டிகளில் 139 ஸ்டம்பிங்கள் செய்து முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்க்கது http://www.onlineuthayan.com/sports/?p=7975

  16. சங்காவை முந்தினார் மெத்தியூஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தரவரிசைப் பட்டியலை சர்­வ­தேச கிரிக்கெட் சம்­மே­ளனம் வெளியிட்டுள்ளது. இதன்படி டெஸ்ட் துடுப்­பாட்ட வீரர்­களின் தர­வ­ரிசை பட்­டி­யலில் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜோ ரூட் முதலிடத்தைப் பெற்றுள்ளார். இந்தப் பட்டியலில் இலங்கை அணித் தலைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் 860 புள்­ளி­க­ளுடன் 5ஆவது இடத்தை பெற்­றுள்ளார். அதே சமயம் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் அணியின் முன்னாள் தலை­வ­ருமான குமார் சங்­கக்­கார 851 புள்­ளிகள் பெற்று 6ஆவது இடத்­திற்கு தள்­ளப்­பட்­டுள்ளார். இலங்கை விக்கெட் காப்­பாளர் சந்­திமால் (646 புள்­ளிகள்) 23ஆவது இடத்­திலும், திரி­மான்ன 4 இடங்கள் முன்­னேறி 78ஆவது இடத்­தையும் பிடித்­த…

  17. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சாளர் சசித்திர சேனநாயக்க பந்தை வீசி எறிவதாக சர்வதேசக் கிரிக்கெட் சபையிடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ஒரு நாள் சர்வதேசப் போட்டியின் பின்னர் போட்டியின் நடுவர்களான மரையஸ் ஏறஸ்மாஸ், இயன் குட் மற்றும் மூன்றாவது நடுவரான கிறிஸ் கபனி ஆகியோர் குறித்த போட்டியின் மத்தியஸ்த்தரான ஜெவ் குரோவிடம் இந்த முறையீட்டை செய்துள்ளனர். சசித்திர சேனநாயக்க வீசும் சில பந்து வீச்சுக்கள் விதி முறையை மீறியுள்ளதாக நடுவர்கள் முறையீடு செய்துள்ளனர். இதனடிப்படையில் 21 நாட்களுக்குள் சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் பரிசோதனைக்கு சசித்திர சேனநாயக்க செல்ல வேண்டும். அதில் அவரின் பந்துவீச்சு பற்றி முடிவு எடுக்கப்படும். அதுவ…

    • 0 replies
    • 556 views
  18. சச்சித்ர சேனநாயக்க பந்துவீசுவதற்கு ஐ.சி.சி. தடை 2014-07-12 19:50:00 இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சச்சித்ர சேனநாயக்கவின் பந்துவீச்சுப்பாணி விதிகளுக்கு முரணானது என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. அதனால் சர்வதேச போட்டிகளில் அவர் பந்துவீசுவதற்கு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. பிரிட்டனின் கர்டிவ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையைடுத்து அவர் அனுமதிக்கப்பட்ட சச்சித்ரவுக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 29 வயதான சச்சித்ர சேனநாயக்க 37 சர்வதேச போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். கடந்த மே மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்துடனான இரண்டாவது போட்டியில் அவர் 13 ஓட்டங்களு…

  19. சச்சினின் 100 வது சதத்தைத் தடுத்ததால் கொலை மிரட்டல் வந்தது 100 வது சதத்தைத் தடுத்து, சச்சினை ஆட்டமிழக்கச் செய்ததால் எனக்கும் நடுவருக்கும் கொலை மிரட்டல்கள் வந்தன என இங்கிலாந்து முன்னாள் வீரர் டிம் பிரெஸ்னன் கூறியுள்ளார். 2011 இல் இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் ஆட்டத்தில் 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார் சச்சின் டெண்டுல்கர். பிரெஸ்னன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் சச்சின் ஆட்டமிழந்ததாக கள நடுவர் ராட் டக்கர் அறிவித்தார். ஆனால் பந்து, லெக் ஸ்டம்பை உரசிச் செல்வதைத் தொலைக்காட்சிகளில் பார்த்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள். அந்த ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் அது சச்சினின் 100 வது சதமாக இருந்திருக்கும். எனினும் 2012 மார்ச் மாதத்தில் பங்களாதேஷூக்கு…

    • 0 replies
    • 602 views
  20. சச்சினின் 100வது சதம் குறித்த அதீத எதிர்பார்ப்பு இந்தியாவைப் பாதிக்கும்-ஆண்டர்சன் ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 17, 2011, 14:32 லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் குறித்து இந்திய அணியினரின் அதீத எதிர்பார்ப்பு, இந்திய அணியின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார். அதீத எதிர்பார்ப்புகள் காரணமாக சச்சின் கவனமும், அவரது அணியினரின் கவனமும் திசை திரும்பி அவர்களது செயல்பாடுகளை அது பாதிக்கும் என்றும் ஆண்டர்சன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,99 சதங்களைப் போட்டு விட்டு சச்சின், தனது 100வது சதத்தை லார்ட்ஸ் மைதானத்தி்ல போடுவார் என்ற அதீத எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்களும், அணியினரும் உள்ளனர். அது சச்சின் மற்றும் …

  21. சச்சினின் அதிவேக ஒருநாள் அரைச்சத சாதனையை முந்திய நேபாள வீரர் By Mohammed Rishad நேபாளம் கிரிக்கெட் அணியின் 15 வயதான கௌஷால் மல்லா ஒருநாள் கிரிக்கெட்டில் இளம் வயதில் அரைச்சதம் அடித்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். நேபாளத்தில் முதன்முறையாக நேபாளம், ஓமான், அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான ஐ.சி.சியின் உலகக் கிண்ண லீக் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கிர்திபூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற 27ஆவது லீக் ஆட்டத்தில் நேபாளம் – அமெரிக்கா அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 190 ஓட்டங்களை எடுத்தது…

  22. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா குக்? இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைவர் அலாஸ்டர் குக் இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்கக் காத்திருக்கிறார். 31 வயதாகும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான அலாஸ்டர் குக் டெஸ்ட் போட்டிகளில் 10000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட அவருக்கு இன்னும் 36 ஓட்டங்களே தேவை. இந்த மைல்கல்லை சச்சின் டெண்டுல்கர் 2005ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் எட்டினார். அப்போது அவருக்கு வயது 32. இந்நிலையில் இலங்கைக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் தொடரில் குக் 10,000 ஓட்டங்கள…

    • 1 reply
    • 346 views
  23. சச்சினின் சாதனையை முறியடிப்பாரா சங்கா? சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்காரா நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்காரா களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார். பல சாதனைகளையும் குவித்து வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 13000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டிய சங்கக்காரா அடுத்து இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் அதிக அரைச்சதம் என்ற சாதனையை முறியடிக்க காத்திருக்கிறார். 452 இன்னிங்ஸில் விளையாடியுள்ள சச்சின் 96 அரைச்சதம் அடித்துள்ளார். ஆனால் 386 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சங்கக்காரா இப்போழுதே 89 அரைச்சதம் கடந்து விட்டார். சச்ச…

  24. சச்சினின் துடுப்பாட்டத்தைத் திருத்திய ஹோட்டல் சிப்பந்தி தனது ‘பேட்’டை லாவகமாகத் திருப்பி விளையாடுவதற்கு சென்னை ஹோட்டல் ஒன்றின் சிப்பந்தியே யோசனை கூறியதாகத் தெரிவித்திருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். மும்பையில், ‘சச்சின் பை ஸ்பார்ட்டன்’ என்ற விளையாட்டு உபகரணங்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட சச்சின் அங்கு பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: போட்டி ஒன்றுக்காக நான் சென்னை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தேன். அப்போது என்னிடம் வந்த ஹோட்டல் சிப்பந்தி ஒருவர், ‘நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் நான் உங்களுக்கு ஒரு யோசனை சொல்லலாமா?’ என்று பணிவாகக் கேட்டார். தயங்காமல் சொல்லுங்கள் என்று நான் கூறினேன். ‘உங்கள் முழங்கைக் கவசம்…

  25. சச்சினுக்கு கைதட்ட சொன்ன அப்பாக்கள், இவர்களை அறிமுகப்படுத்தியதுண்டா? மூன்று போட்டிகள்... மூன்றிலும் 290க்கும் மேற்பட்ட ரன்கள். ஆனால் மூன்றிலும் தோல்வி. இதற்குக் காரணம் மோசமான பந்துவீச்சு என்று தோனி சொல்லித்தான் நமக்கு புரிய வேண்டுமென்பதில்லை. இப்போது மட்டுமல்ல, கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பந்துவீச்சாளர்கள் இந்தியாவில் விளையாடிய காலம் தொட்டு இந்திய பந்துவீச்சு என்பது இப்படித்தான். கவாஸ்கர், சச்சின், கோலி என ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களை உருவாக்கிவிடும் இந்திய அணியால், வாசித்அக்ரம் போலவோ அல்லது பேட்ரிக் பேட்டர்சன் போலவோ ஒரு பந்துவீச்சாளரை உருவாக்க முடியாமல் போவது ஏன்? என்ற கேள்வி இன்றும் எழாமல் இல்லை. கிரிக்கெட்டைத் தவிர்த்து பிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.