விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
உலக சாதனை படைத்த தடகளவீரர் மாரிஸ் கிரீன் ஓய்வுபெற்றார் [06 - February - 2008] [Font Size - A - A - A] உலகசாதனை படைத்த அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் மாரிஸ் கிரீன் தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாரின் கிரீன். 33 வயதான கிரீன் சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் பீஜிங் ஒலிம்பிக் போட்டிக்கான வசதிகளை நேரில் பார்வையிடச் சென்றுள்ள கிரீன், தடகளத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அங்கு அறிவித்துள்ளார். இது குறித்து மாரிஸ் கிரீன் கூறுகையில்; `கடந்த சில வருடங்களாக எனக்கு அடுத்தடுத்து ஏற்பட்ட காயம் எனது பயிற்சியை தடுத்தது. எனவே ஓய்வு பெற இது சரியான நேரம் என்று ஓய்வு முடிவை எடுத்தேன். ஓய்வு முட…
-
- 0 replies
- 1k views
-
-
சோதனைகளில் சாதித்த இம்ரான் கான் - சிறப்பு பகிர்வு.. உலகக்கோப்பையில் ஆசிய அணிகளின் ஆதிக்கத்தை கபில் தேவ் துவங்கி வைத்தார் என்றால் அதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர் இம்ரான் கான். அவரின் பிறந்த தினம் நவம்பர் 25. 92 ஆம் வருடம் உலககோப்பையை பாகிஸ்தான் அணி வென்றதே எதோ ஒரு தேவதைக்கதை போல மாயங்களும்,அதிர்ஷ்டங்களும்,அற்புதமான சுவாரசியங்களும் நிரம்பியது. இம்ரான் கான் தான் அணியின் தலைவர். அம்மாவுக்கு கேன்சர் வந்து இறந்து போயிருக்க அவரைப்போல துன்பப்படும் எண்ணற்ற பிரஜைகளுக்கு உதவும் மருத்துவமனையை கட்டிக்கொண்டு இருந்தார் அதற்கு பணம் தேவைப்பட்டது. நாற்பது வயதில் அணியின் கேப்டனாக அந்த ஆசையோடு பொறுப்பேற்றுக்கொண்டார். வேகப்புயல் வக்கார் யூனிஸ் போட்டிக்கு சில வாரங்கள…
-
- 0 replies
- 745 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டே முக்கியம்: உலகக் கோப்பை டி20-யை உதறிய டேரன் பிராவோ டேரன் பிராவோ. | படம்: பிடிஐ. பணமழை பொழியும் டி20 கிரிக்கெட் உலகில் நுழையும் வாய்ப்பை உதறிய அதிசய வீரரானார் மே.இ.தீவுகளின் இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ. உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான மே.இ.தீவுகள் அணியிலிருந்து இடது கை பேட்ஸ்மேன் டேரன் பிராவோ, கெய்ரன் பொலார்ட், சுனில் நரைன் ஆகியோர் விலகியுள்ளனர். இதில் கெய்ரன் பொலார்ட் காயத்திற்குப் பிறகான சிகிச்சை முழுமை பெறாததைக் காரணம் காட்டி விலகியுள்ளார். சுனில் நரைன் பந்து வீச்சு முறை இன்னமும் சீராகவில்லை என்ற காரணத்தினால் விலகியுள்ளார். இதில் பொலார்ட், நரைனுக்குப் பதிலாக கார்லோஸ் பிராத்வெய்ட் மற்றும…
-
- 0 replies
- 363 views
-
-
சாதனையை சமன் செய்தார் நடால் நடால். | படம்: ஏ.எஃப்.பி. பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் பட்டம் வென்றார். இறுதிப்போட்டியில் அவர் நடப்பு சாம்பியனான ஜப்பானின் நிஷிகோரியை 6-4, 7-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தினார். வெற்றி குறித்து நடால் கூறும்போது, "இந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக சர்வீஸ் செய்தேன். இது தான் முக்கியமாக அமைந்தது. ஆரம்பத்திலேயே சர்வீஸ்கள் நல்ல முறையில் அமைந்தால் சிறந்த ஆட்டத்தை கொடுக்க முடிந்தது. இரண்டாவது செட்டில் அதிக வாய்ப்புகள் நழுவிய போதிலும் மனதளவில் போராடி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். பார்சிலோனா போட்டியில் பட்டம் வென்றதன் மூலம் களிமண் தரையில் …
-
- 0 replies
- 335 views
-
-
இலங்கை - அவுஸ்திரேலிய தொடரின் போது மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை திறக்க ஏற்பாடு கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மிகப்பெரிய உள்ளக கிரிக்கெட் மையத்தை அவுஸ்திரேலிய - இலங்கை தொடரின் போது திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுவருவதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த உள்ளக கிரிக்கெட் மையத்தின் கட்டுமான வேலைகளை, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா, ஐ.சி.சி.யின் பிரதம நிறைவேற்றதிகாரி டேவிட் ரிச்சட்சன் ஆகியோர் இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபாலவுடன் விஜயம் செய்து பார்வையிட்டனர். குறித்த உள்ளக கிரிக்கெட் மையம் இலங்கை கிரிக்கெட் ச…
-
- 0 replies
- 325 views
-
-
ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது பாரிய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊக்க மருந்து சோதனைகள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனைகள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது எனவும்குறிப்பிட்டுள்ளது. சில நாட்களில் சுமார் 50 வீதமான சோதனைகள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தகவல் உள்ளீட்டு தவறுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்களில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/archives/5076 Tags50 வீதமான சோதனைகள்
-
- 0 replies
- 211 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்ற சூதாட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகிய 3 வீரர்கள் 'ஸ்பாட் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டு டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அங்கீத் சவான் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மற்ற இருவரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சூதாட்டம் தொடர்பாக முன்னாள் வீரர்கள் 4 பேர், சூதாட்ட தரகர்கள் உள்பட நாடு முழுவதும் 30 பேர் கைதாகி உள்ளனர். 'ஸ்பாட்பிக்சிங்' சூதாட்டத்தில் பெற்ற பணத்தில் ஸ்ரீசாந்த் மாடல் அழகிகளுக்கும் ஏராளமான பரிசு பொருட்களை வாங்கி இருந்தார். அவைகளை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். சூதாட்ட தரகர்களிடம் அவர் பெ…
-
- 0 replies
- 517 views
-
-
20 ஆண்டுகள் ஆடிய பெரிய ‘தலைகள்’ சாதிக்காததை கோலி தலைமையில் சாதிக்கிறோம்: ரவி சாஸ்திரி இந்திய அணியுடன் சாஸ்திரி. - படம்.| ஏ.பி. பழைய அணியில் மிகப்பெரிய பெயர்கள் அடிபட்டாலும் அவர்கள் ஆடிய இந்திய அணியினால் இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்ல முடிந்ததில்லை, கோலி தலைமையிலான இந்த அணியே இதனைச் சாதித்துள்ளது என்று ரவி சாஸ்திரி பட்டவர்த்தனமாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது: இந்த இந்திய அணியில் வீரர்கள் ஒருவருடன் ஒருவர் 2 ஆண்டுகளாக ஆடிவருகின்றனர். இப்போது இவர்கள் அனுபவம் பெற்றவர்கள். இதற்கு முந்தைய இந்திய அணியும், மிகப…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழ்மகள் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் டைக்கொண்டோ போட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி பெண் தங்கப்பதக்கம் பெற்று சாதனை 43 ஆவது தேசிய விளையாட்டுப் பொட்டியில் இடம்பெற்ற தைக் கென்டோ போட்டியில் கிளிநொச்சி பெண் தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். கொழும்பு, ரொறின்டன் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் டைக்கொண்டோ போட்டியில் 57-62 கிலோகிராம் நிறைப் பிரிவில் வடமாகாணத்தின் கிளிநொச்சியைச் சேர்ந்த ஆர். தமிழ்மகள் தங்கப்பதக்கத்தை பெற்று கொண்டார். இவர் மேல் மாகாணத்தை சேர்ந்த வீராங்கனையுடன் 28:17 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றார். விளையாட்ட…
-
- 0 replies
- 459 views
-
-
இந்திய கிரிக்கெட் வீரர் கவாஸ்கரின் பெயரில் அமெரிக்காவில் விளையாட்டு மைதானம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்து கவுரவிக்க உள்ளனர். புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சுனில் கவாஸ்கரின் பெயரை அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்திற்கு வைத்துள்ளனர். இந்த மைதானம் அக்டோபர் மாதம் திறக்கப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள மைதானங்களுக்கு பொதுவாக அரசியல் தலைவர்களின் பெயர்களை மட்டுமே சூட்டுவர். …
-
- 0 replies
- 571 views
-
-
இன்று கூடுகிறது தேர்வுக்குழு: கோலிக்கு ஓய்வு, ரஹானே கேப்டன்? தற்போது நடந்துவரும் இலங்கைத் தொடர், அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணியைத் தேர்வுசெய்ய, தேர்வுக்குழு இன்று கூடுகிறது. இதில், மீதம் இருக்கும் இலங்கைத் தொடரிலிருந்து கேப்டன் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. கடந்த ஐ.பி.எல் தொடர் முதல் தொடர்ந்து பல போட்டிகளில் விளையாடிவருகிறார் கேப்டன் கோலி. இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ‘தனக்கும் ஓய்வு தேவைப்படும். அது தேவைப்படும்போது அதைக் கேட்டுப் பெற்றுக்கொள்வேன்’ எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நான்க…
-
- 0 replies
- 270 views
-
-
பிரேஸில் கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரரான நெய்மர், அனுமதிக்கப்படாத உள்ளாடையொன்றை உலக கிண்ண போட்டி மைதானத்தில் பகுதியளவில் வெளிப்படுத்தியமை தொடர்பாக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (ஃபீஃபா) விசாரணை நடத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 23 ஆம் திகதி பிரஸிலியா நகரில் நடைபெற்ற கமரூன் அணியுடனான போட்டியில் 4:1 விகிதத்தில் பிரேஸில் அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு கோலக்ளை அடித்த நெய்மர், போட்டி முடிந்தவுடன் மைதானத்தில் வைத்து கெமரூன் வீரர் ஒருவருடன் ஜேர்ஸியை பரிமாறிக்கொண்டார் நெய்மர். அதன்பின் நெய்மர் தனது காற்சட்டையை சற்று கீழிறக்கியபோது அவர் அணிந்திருந்த உள்ளாடை பகுதியளவில் வெளிப்பட்டது. சாதாரணமாக இது ஒரு பிரச்சினையாக கருதப்பட்டிருக்க மாட்டாது. ஆன…
-
- 0 replies
- 636 views
-
-
இருபதுக்கு - 20 அணிக்கு சந்திமல் தலைவர் ; இலங்கை குழாம் அறிவிப்பு பங்களாதேஷ் அணிக்கெதிரான இரபதுக்கு - 20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. பங்களாதேஷுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணிக்கு எதிராக 2 இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 15 ஆம் திகதியும் 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 18 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. …
-
- 0 replies
- 184 views
-
-
16 வயது ஆப்கான் ஸ்பின்னர் முஜீப் ஸத்ரானிடமிருந்து வித்தைகளைக் கற்க விரும்புகிறேன்: அஸ்வின் ஓபன் ரவிச்சந்திரன் அஸ்வின். - படம். | பிடிஐ. இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறாததால் தூக்கத்தை இழந்து விடாத அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு சவாலானது என்றும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கு ஐபிஎல் கிரிக்கெட்டை நடைமேடையாகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். “இந்த ஐபிஎல் தொடரை இந்திய அணிக்குள் திரும்புவதற்கான ஒரு நடைமேடையாக பாவிக்கப் போவதில்லை., ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் என்ன மனநிலையில் நுழைந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். இந்த ஐப…
-
- 0 replies
- 310 views
-
-
அதிர்ச்சித் தோல்விக்கு மத்தியில் அரையிறுதிக்குள் நுழைந்த ரியல் மெட்ரிட் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்ட காலிறுதிப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 98ஆவது நிமிடத்தில் பெற்ற பெனால்டி கோல் மூலம், நடப்புச் சம்பியன் ரியல் மெட்ரிட் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, செவில்லா அணியுடனான போட்டியை கோலின்றி சமநிலையாக்கியதன் மூலம் பயேர்ன் முனிச் அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. சம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாம் கட்டத்தின் கடைசி இரண்டு காலிறுதிப் போட்டிகளும் நேற்று (11) நடைபெற்றன. இதில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிராக ஜுவன்டஸ் மூன்று கோல்களை புகுத்தி அதிர்ச்சி வெற்றியை பெற்றபோதும், துரதிஷ்டவசமாக மேலதிக நேரத்தில் எதிரணிக்கு பெனால்டி க…
-
- 0 replies
- 346 views
-
-
ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட்: ஸ்டார் குழுமத்துக்கு ஒளிபரப்பு உரிமை வரும் 2015 முதல் 2023-ம் ஆண்டு வரையிலான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) ஒளிபரப்பு உரிமையை ஸ்டார் இந்தியா நிறுவனமும், ஸ்டார் மத்திய கிழக்கு நிறுவனமும் பெற்றுள்ளன. இதன் மூலம் இரண்டு டி-20 மற்றும் இரண்டு சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை இந்நிறுவனங்கள் பெற்றுள்ளன. இந்த ஒளிபரப்பு உரிமையைக் கோரி மொத்தம் 17 ஒப்பந்தப் புள்ளிகள் ஐசிசிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. “துபாயில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஐசிசி பிசினஸ் கார்ப்பரேஷன் இம்முடிவை எடுத்தது” என ஐசிசி தலைவர் ஸ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். வரும் 2015-ம் ஆண்டு ஒரு நாள் உ…
-
- 0 replies
- 391 views
-
-
5 ஆண்டுகளுக்குப் பின் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா! துபாய்: ஒருநாள் போட்டிகளுக்கான தர வரிசையில் தென் ஆப்பிரிக்கா அணி முதலிடம் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டுக்கு பிறகு இந்த இடத்துக்கு தென் ஆப்பிரிக்கா வந்து அசத்தியுள்ளது. ஐசிசி இன்று வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் 115 புள்ளிகளுடன் தெ.ஆப்பிரிக்கா முதலிடத்திலும், 114 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், ஒரு புள்ளிகள் குறைவாக அதாவது 113 புள்ளிகளுடன் இந்திய அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன. நவம்பரில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ள இலங்கை 111 புள்ளிகளுடன் நான்காம் இடத்திலும், 107 புள்ளிகளுடன் இங்கிலாந்து ஐந்தாம் இடத்திலும், 98 புள்ளிகள், 96 புள்ளிகளுடன் முறை…
-
- 0 replies
- 559 views
-
-
சந்திமல், ஹத்துருசிங்க உள்ளிட்ட மூவருக்கு போட்டி தடை இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல் உள்ளிட்ட மூவருக்கு தலா இரு போட்டிகளுக்கு ஐ.சி.சி தடை விதித்துள்ளது. இலங்கை அணித் தலைவர் தினேஸ் சந்திமல், இலங்கை அணிப் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக்க ஹத்துருசிங்க மற்றும் இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கே குறித்த தடை உத்தரவு ஐ.சி.சி யினால் விதிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக மைதானத்திற்கு வரமறுத்தமை மற்றும் போட்டியை தாமதமாக ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்தமை போன்ற செயற்பாடுகளால் அவர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த மூவரும்…
-
- 0 replies
- 429 views
-
-
இந்தியா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: ஆஸி 277 ஓட்டங்கள் சேர்ப்பு அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்டம், நிறைவுக்கு வந்துள்ளது. இதற்கமைய முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வரும் அவுஸ்ரேலியா அணி, ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்போது ஆட்டநேர முடிவில் அணித்தலைவர் டிம் பெய்ன் 16 ஓட்டங்களுடனும், பெட் கம்மிண்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெர்த் மைதானத்தில் இன்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ஞ்…
-
- 0 replies
- 410 views
-
-
எவ்வளவு செலவானாலும் உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடம் அமைக்கப்படவேண்டும் : சிதத் வெத்தமுனி கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக உள்ளக கிரிக்கெட் பயிற்சிக்கூடத்தை நிச்சயமாக அமைத்துக்கொடுப்போம் என்றும், இதற்கு 50 மில்லியன் ரூபா செலவாகும் என்று கணக்கிட்டுள்ளதாகவும் அதற்கு மேல் சென்றாலும் பரவாயில்லை எவ்வளவு செலவானாலும் அதை செய்துகொடுப்போம் என இலங்கைக் கிரிக்கெட்டின் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். இலங்கைக் கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் பேசிய சிதத் வெத்தமுனி, உள்ளக பயிற்சிக்கூடங்களை அமைப்பதன் மூலம் வீரர்களின் த…
-
- 0 replies
- 260 views
-
-
விளையாட்டுத் துளிகள் நார்வே செஸ்: 3-வது சுற்றிலும் ஆனந்த் டிரா கிராண்ட் செஸ் தொடரின் ஒரு பகுதியாக நார்வேயின் ஸ்டவாங்கர் நகரில் நடைபெற்று வரும் நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் தனது 3-வது சுற்றிலும் டிரா செய்துள்ளார். ஏற்கெனவே முதல் இரு சுற்றுகளிலும் டிரா செய்திருந்த ஆனந்த், இப்போது 3-வது சுற்றில் ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசுக்குடன் டிரா செய்துள்ளார். 3 சுற்றுகளின் முடிவில் 1.5 புள்ளிகளைப் பெற்றுள்ள ஆனந்த், இத்தாலியின் பேபியானோ கருணா, பிரான்ஸின் வச்சியர் ஆகியோருடன் 4-வது இடத்தில் உள்ளார். அமெரிக்காவின் ஹிகாரு நாகமுரா, பல்கேரியாவின் வெசலின் டோபலோவ் ஆகியோர் தலா 2.5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், நெதர்லாந்தின் அனீஷ் கிரி 2 புள்ளிகளுடன் 3-…
-
- 0 replies
- 254 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டுக்குள் வந்த 10 மாதத்திற்குள் 50 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை ! சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்த 10 மாதங்களில், 50 விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வீரர் யாஷிர் ஷா புதிய வரலாறு ஏற்படுத்தியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாஷிர் ஷா களதிறங்கும் 9வது டெஸ்ட் போட்டி ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத்தான் பாகிஸ்தான் அணிக்காக முதன் முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் யாஷிர் ஷா 3 விக்கெட்டுகள…
-
- 0 replies
- 218 views
-
-
'டக் அவுட்' பிரபலம் லார்ட்சில் சதமடித்தது எப்படி? இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் அஜித் அகர்கர், எதுக்கு ரொம்ப ஃபேமஸ்னு கேட்டா... சின்னப்புள்ள கூட கண்ண மூடிட்டு சொல்லும் டக் அவுட்டுக்கு ரொம்ப பேமஸ்னு. அஜித் அகர்கர் தொடர்ந்து 7 முறை டக்அவுட் ஆகியெல்லாம் வரலாறு படைத்துள்ளார். இதில் 4 முறை, முதல் பந்திலேயே மனிதர் வெளியேறியிருக்கிறார். இப்படி 'டக் அவுட்' ஆகியே பிரபலம் ஆன அஜித் அகர்கர், லார்ட்ஸ் மைதானத்தில் சதமடித்து அசத்தியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா? கடந்த 2002ஆம் ஆண்டு இந்திய அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதே நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அஜித் அகர்கர் 190 பந்துகளில், 109 ரன்களை அடித்து அசத்தினார். இதில் 1…
-
- 0 replies
- 506 views
-
-
முக்கோண கிரிக்கெட் அட்டவணை [27 - January - 2008] [Font Size - A - A - A] இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 3 ஆம் திகதி பிறிஸ்பேர்னில் ஆரம்பமாகின்றது. இப்போட்டி பற்றிய அட்டவணை வருமாறு: திகதி, அணிகள் , இடம் 03.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, பிறிஸ்பேர்ன் 05.02.08 , இந்தியா எதிர் இலங்கை, பிறிஸ்பேர்ன் 08.02.08, அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, சிட்னி 10.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, மெல்பேர்ன் 12.02.08 , இந்தியா எதிர் இலங்கை, ஹன்பரா 15.02.08 , அவுஸ்திரேலியா எதிர் இலங்கை, பெர்த் 17.02.08, அவுஸ்திரேலியா எதிர் இந்தியா, அடிலெய்ட் 19.02.08 …
-
- 0 replies
- 851 views
-
-
இலங்கையை வீழ்த்தியது இந்தியா Tuesday, 19 February, 2008 09:36 AM . அடிலெய்டு, பிப்.19: இலங்கைக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் போட்டி வரிசையில் இந்தியாஇலங்கை மோதும் ஒருநாள் போட்டி இன்று அடிலெய்டில் நடைபெறுகிறது. இலங்கை கேப்டன் ஜெயவர்த்தனே டாசில் வெற்றி பெற்று முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். . இதனையடுத்து அந்த அணியின் துவக்க வீரர்கள் தில்சன் மற்றும் ஜெயசூர்யா களமிறங்கினர். முதல் ஓவரியிலேயே தில்சன் முனாப் பட்டேல் பந்துவீச்சில் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரை அடுத்து ஜெயசூர்யா ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். அவர் ரன் அவுட் முறையில் …
-
- 0 replies
- 866 views
-