Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பொக்சிங் டே டெஸ்ட்டில் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் December 23, 2015 தென் ஆபிரிக்க அணியுடனான பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி வீரரான அண்டசன் வலது கையில் தசை இறுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பித்து 30 ஆம் திகதி வரை டர்பனில் நடைபெறவுள்ள பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பங்கேற்பது சாத்தியம் இல்லை என தெரியவருகின்றது. தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆன்டர்ஸன் பங்கேற்கவில்லை எனில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டீபன் பின…

  2. ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்ட ஆன்ட்ரே ரஸல்ஸ் March 03, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்ட வீரர் ஆன்ட்ரே ரஸல்ஸ் பன்னிரண்டு மாத காலப் பகுதியினுள் மூன்று ஊக்கமருந்து சோதனைகளை தவறவிட்டதாக ஜமைக்கா ஊக்கமருந்து எதிர்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. ஊக்கமருந்து சட்ட விதிமுறைகளின் பிரகாரம் மூன்று ஊக்கமருந்து சோதனைளை தவறவிடுவது குறித்த வீரர் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதிப்படுத்தப்பட்டமைக்கு நிகரானது என்பதால் ரஸல்ஸ் தடைகளை எதிர்கொள்ள வேண்டும் என தெரியவருகின்றது. கடந்த மாதம் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இஸ்லாமபாத் அணியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய ரஸல்ஸ் தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவானார். இந்த நிலையில் எதிர்வரும்…

  3. அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297

  4. முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று.. இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இங்கிலாந்து அணி தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில், தென்னாபிரிக்காவின் கிழக்கு லண்டன் நகரில் இன்றிரவு இடம்பெறவுள்ள முதலாவது 20 க்கு 20 போட்டி இலங்கை நேரப்படி இரவு 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று 20 க்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://…

  5. செல்சியை வீழ்த்தி நம்பிக்கையை தக்கவைத்துக்கொண்ட மன்செஸ்டர் யுனைடட் By Mohamed Shibly - செல்சி அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டிய மன்செஸ்டர் யுனைடட் ப்ரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் காணும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டது. செல்சியின் சொந்த மைதானமான ஸ்டாம்போர்ட் பிரிட்ஜில் இலங்கை நேரப்படி இன்று (18) அதிகாலை நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் மன்செஸ்டர் யுனைடட் 38 புள்ளிகளுடன் ஏழாவது இடத்திற்கு முன்னேறியது. எனினும் நான்காவது இடத்தில் இருக்கும் செல்சியை விடவும் அந்த அணி 3 புள்ளிகளாலேயே பின்தங…

  6. 5.77 நிமிடத்தில் 9 ஒலிம்பிக் தங்கம் #UsainMagic சென்னை வார் மெமோரியலில் இருந்து கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோ மீட்டர் தூரம் ஓடினால் என்ன வாங்கலாம். நம்மால் மூச்சு மட்டுமே வாங்க முடியும். ஆனால் உசேன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வாங்கியுள்ளார். 2004,2008,2012,2016 ஆகிய நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் உசேன் போல்ட் மொத்தம் ஓடியதே மூன்றரை கிலோமீட்டர்தான். இந்த மூன்றரை கிலோ மீட்டரை ஓட போல்ட் எடுத்துக் கொண்ட நேரம் 5.77 நிமிடங்கள் மட்டுமே. கூகுளில் தேடுங்கள், பஸ்ஸில் செல்லவே 13 நிமிடங்கள் ஆகுமாம். 2004 ஒலிம்பிக்கின், 200 மீட்டர் போட்டியில் தோல்வியுடன் தொடங்கிய போல்ட், இலக்கை அடைய எடுத்துக் கொண்ட நேரம் 21.05 வினாடிகள். ஆனால் …

  7. ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து விலகினார் அஞ்சேலோ மத்தியூஸ் ஆஸ்திரேலிய அணியுடனான தொடரிலிருந்து விலகினார் அஞ்சேலோ மத்தியூஸ். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் தசைப்பிடிப்பு உபாதையால் அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். ஆஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இறுதி ஒருநாள் போட்டி மற்றும் 2 T20 சர்வதேசப் போட்டிகளிலும் அஞ்சேலோ மத்தியூஸ் பங்கு கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்ரீலங்கா கிரிக்கட்’ இன்னும் அஞ்சேலோ மத்தியூஸ்ற்குப் பதிலாக மாற்று வீரரை அணிக்கு அழைக்காத நிலையில் உப்புல் தரங்க அணிக்கு அழைக்கப்படலாம் என்று அறியக் கிடைக்கிறது. அணித்தலைவர் மத்தியூஸ் நேற்றைய போட்டியில் 40 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தசைப…

  8. தோனி சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது; தொடர்ந்து 4-ம் நிலையில் ஆட வேண்டும்: கங்குலி வலியுறுத்தல் மொஹாலியில் 4-ம் நிலையில் தோனி களமிறங்கி விளாசியதால் இந்திய வெற்றி சுலபமானது என்று கூறிய கங்குலி அவர் தொடர்ந்து அந்த டவுனில்தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொடர்ந்து தோனி இதே 4-ம் நிலையில் இறங்குவார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அனில் கும்ப்ளே, தோனியை இதே நிலையில் களமிறங்க வலியுறுத்த வேண்டும். இதனால் அவருக்கும் எளிதாகிறது, பின்னால் வருபவர்களுக்கும் எளிதாகிறது. அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளி ஒரு சதம் கூட எடுக்கவில்லை. காரணம் 40-50 பந்துகளையே அவர் எதிர்கொள்ள முடிகிறது. இது…

  9. இப்படித்தான் 2016-ன் நம்பர் 1 பவுலர் ஆனார் அஷ்வின்! #Statistics டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு பல பவுலர்கள் ஆச்சர்யங்களை நிகழ்த்தினார்கள். பவுலர்கள் ஆதிக்கம் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது. ஒவ்வொரு அணியிலும் நல்ல பவுலர்கள் இருந்தனர். இதனாலேயே டிரா ஆகும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை குறைந்து ரிசல்ட் கிடைக்கும் டெஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்தன. சரி, இந்த ஆண்டில் சிறந்த பத்து டெஸ்ட் பவுலர்கள் யார்? 10.நெயில் வாக்னர்:- நியூசிலாந்து அணியில் சவூத்தீ, போல்ட் ஆகியோரை ஓரங்கட்டிவிட்டு நெயில் வாக்னர் அபாரமாக பந்து வீசினார். தென் ஆப்பிரிக்கச் சுற்றுப்பயணத்தில் வாக்னரின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. ஆஸ்திரேலியா நியூசிலாந்துச் சுற்றுப்பயணம் வந்…

  10. இலங்கை அணித் தலைவர்களாக சந்திமல், தரங்க இலங்கை கிரிக்டெ் அணியின் டெ்ஸ்ட் தலைவராக டினேஸ் சந்திமல் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 போட்டிகளின் அணித் தலைவராக உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில் சிம்பாப்வே அணிக்கொதிரான ஒருநாள் தோடரில் 3-2 என்ற கணக்கில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்த நிலையில் அணித்தலைவர் பதிவியில் இருந்து ராஜிநாமா செய்வதாக அஞ்சலோ மெத்தியூஸ் அறிவித்திருந்்த நிலையில் இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இவ்வாறான மாற்றம் ஏற்றபட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/article/21788

  11. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ரபாடா வருகையால் தென் ஆப்ரிக்கா உற்சாகம் ரபாடா - Getty Images ரபாடா - AFP ரபாடா - Getty Images ரபாடா - AFP தென் ஆப்ரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. கடந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்குப் பின் இந்த டெஸ்ட் போட்டியில் ரபாடா ஆடுவதால் தென் ஆப்ரிக்க அணி அதிக உற்சாகத்துடன் உள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து…

  12. ரஷ்யாவில் இடம்பெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு இஸ்லாமிய போராளிக் குழு எதிர்ப்பு! [Wednesday, 2014-02-12 12:37:47] ரஷ்யா நாட்டின் சோச்சி நகரில் கடந்த 7ஆம் தேதி ஆரம்பித்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் இந்தப் போட்டிகளைத் தனது தனிப்பட்ட மற்றும் அரசியல் செல்வாக்கினை உயர்த்த உதவும் நிகழ்ச்சியாகக் கருதுகின்றார். எனவே இதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வடக்கு காகசஸ் மலைப்பகுதியில் உள்ள இஸ்லாமியப் போராளிக் கழகங்கள் இப்போட்டிகளைத் தீவிரமாக எதிர்த்து வந்த போதிலும் பலத்த பாதுகாப்புடன் அவர் இப்போட்டிகளை நடத்தி வருகின்றார். இவற்றில் சில போட்டிகள் 19ஆம் நூற்றாண்டில் வெளியேற்றப்பட்ட சிர்ச…

  13. மொகமது ஷமி. | கோப்புப் படம் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி கொல்கத்தாவைச் சேர்ந்த மாடல் அழகி ஹசின் ஜஹன் என்பவரைத் திருமணம் செய்தார். ஐபிஎல் நிகழ்ச்சி ஒன்றில் ஹசின் ஜஹனைச் சந்தித்திருந்தார் மொகமது ஷமி. மொராதாபாதில் நடைபெற்ற எளிமையான இந்த திருமணத்திற்கு நண்பர்களும் உறவினர்களும் வந்திருந்தனர். இந்திய வீரர்கள் ஒருவரும் திருமணத்திற்கு வரவில்லை. இதற்கான காரணத்தை மொகமது ஷமியின் தந்தை கூறுகையில், “ஷமியின் சக இந்திய வீரர்களை நாங்கள் அழைக்கவில்லை, காரணம் அவர்களது நிலைமை பற்றி தெரியவில்லை. எனினும் கொல்கத்தா அல்லது டெல்லியில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதில் இந்திய வீரர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்” என்றார். வங்கதேசத் தொடருக்கு ஷமிக்கு ஓய்வு அளிக்கப…

    • 0 replies
    • 536 views
  14. டென்னிஸ் ராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்த தாங்க முடியாத துயரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஜனவரி 2023 2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றிலேயே நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வி கண்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட்- நடப்பு சாம்பியனும் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவருமான ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர். இடுப்பு வலியால் அவதிப்பட்ட நடால் இந்த ஆட்டத்தில் மெக்கன்ஸியை எதிர்த்து ஆடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டார். வி…

  15. கால்பந்தாட்டத்தில் வட மாகாணத்திற்கு வெள்ளிப் பதக்கம் முன்னாள் இலங்கை வீரர் ஈ. பி. சன்னக்கவின் புத்திசாதுரியமான ஆற்றல்களின் உதவியுடன் வட மாகாண அணியை 3 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிகொண்ட தென் மாகாண அணி 40ஆவது தேசிய விளையாட்டு விழாவில் கால்பந்தாட்டத் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டது. 2009இலும் 2012இலும் தங்கப் பதக்கத்தைத் தவறிவிட்ட வட மாகாணம் இவ்வருடமும் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது. ஞாயிறன்று மின்னல் மற்றும் கடும் மழை காரணமாக 8 நிமிடங்களுடன் இடைநிறுத்தப்பட்ட கால்பந்தாட்ட இறுதிப் போட்டி அநுராதபுரம் சிறைச்சாலை மைதானத்தில் நேற்றுக்காலை 10.10 மணியளவில் மீண்டும் தொடர்ந்தது. இப் போட்டியில் தென் மாகாணம் சார்பாக 22ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் ட…

  16. “டெஸ்ட் போட்டியில் இப்படித்தான் பேட்டிங் செய்வார்களா?” ஷிகர் தவணை திட்டித் தீர்த்த சுனில் கவாஸ்கர் ஷிகர் தவண் தன்னுடைய பேட்டிங்கை மாற்றிக்கொள்வது போல் தெரியவில்லை, டெஸ்ட் போட்டிக்கு ஏற்றார்போல் அவர் பேட்டிங் செய்யவிட்டால் வெற்றி பெற முடியாது என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பர்மிங்ஹாமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் பரிதாபமாகத் தோல்வியுள்ளது. இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோலியைத் தவிர மற்ற எந்த வீரர்களும் பேட்டிங்கில் சிறப்பாகச் செயல்படவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததும், தேவையில்லாத பந்து…

  17. டெஸ்ட் தரவரிசை பட்டியல் வெளியீடு : முதல் மூன்று இடங்களுக்குள் சங்கா, ஹேரத் சர்­வ­தேச கிரிக்கெட் சபை­யினால் டெஸ்ட் துடுப்­பாட்ட மற்றும் பந்­து­வீச்சு வீரர்­க­ளுக்­கான புதிய தர­வ­ரி­சைப்­பட்­டியல் வெளியி­டப்­பட்­டுள்­ளது. இலங்கை அணி வீரர் குமார் சங்கக்­கார இரண்டாம் இடத்தை பெற்­றுள்ளார். இப்­பட்­டி­யலில் தென் ஆபி­ரிக்க அணி வீரர் ஏ.பி.டி.வில்­லி­யர்ஸ் முத­லி­டத்தில் உள் ளார். மூன்றாம் இடத்தில் தென் ஆபி­ரிக்க டெஸ்ட் அணித்­த­லைவர் ஹசிம் அம்லா தெரிவு செய்­யப்­பட்­டுள்ளார். அவுஸ்தி­ரே­லிய அணியின் தற்­கா­லிக தலைவர் ஸ்டீபன் ஸ்மித் இந்த பட்­டி­யலில் 5 ஆவது இடத்தில் காணப்­ப­டு­கின்றார். இந்த பட்­டி­யலில் இந்­திய டெஸ்ட் அணி யின் புதிய தலைவர் விராட் கோலி 15 ஆவது இடத்தை பெற்…

  18. இலங்கை அணி ரசிகர்களுக்கு மஹேலவின் வேண்டுகோள் ! இலங்கை அணியை சிக்கலில் இருந்து ரசிகர்களாகிய நாம் முன்னோக்கிக்கொண்டு செல்வதற்கு தேவையான தீர்வுகளை ஆராய வேண்டுமென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இடம்பெற்றுவரும் ஆசியக் கிண்ணத் தொடர்ரில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியிடமும் ஆப்கானிஸ்தான் அணியிடமும் படு மோசமாக தோல்வியடைந்தது. இந்நிலையில் இலங்கை அணி மீதும் வீரர்கள் மீதும் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் மிக மோசமாக விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திரவீரருமான மஹேல ஜெயவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்க…

  19. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தடையை நீக்ககோரி மனு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை அணியின் மேலாளர் ஜோர்ஜ் ஜான் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிகாரி ஒருவர் செய்த தவறுக்காக அணியை முடக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் தடையால் முக்கிய வீரர்கள் அணியை விட்டு சென்றுவிடுவார்கள் என்றும் வீரர்களை மீண்டும் அணிக்கு கொண்டுவருவது கடினமானது எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அமைத்த ஆர்.எம் லோதா தலைமையிலான குழு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் 2 ஆண்டுகளுக்கு போட்டியில் …

  20. ஜ‌ந்து நாள் தொட‌ரில் இங்லாந் அணி முத‌லாவ‌து இனிங்சில் 67 ஓட்ட‌ம் all out , ஒரு ப‌ல‌மான‌ அணி இப்ப‌டி சுத‌ப்பி விளையாடுவ‌து வெக்க‌க் கேடு , அவுஸ்ரேலியா இர‌ண்டாவ‌து வெற்றியையும் பெற‌ போகுது , சிமித் அணியில் இல்லாம‌ விளையாடியும் அவுஸ்ரேலியா ந‌ல்ல‌ நிலையில் நிக்குது , அவ‌ர்க‌ளின் வெற்றி உறுதி , அவுசின் ப‌ந்து வீச்சை இங்லாந் வீர‌ர்க‌ளால் ச‌மாளிக்க‌ முடிய‌ல / த‌டுமாற்ற‌ம் நிலைச்சு நின்று விளையாடின‌ம் இல்லை இங்லாந் வீர‌ர்க‌ள் 😉😁😂 /

  21. தற்போதைய துடுப்புகள் ஆபத்தை விளைவிக்கலாம் : தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் எச்சரிக்கை சம­கால சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் எத்­த­னையோ மாற்­றங்கள் நடை­பெற்­று­வ­ரு­கின்ற நிலையில் துடுப்­பு­களின் அள­வு­களும் நாளுக்கு நாள் மாறு­பட்­ட­வண்ணம் இருக்­கின்­றன. 138 வரு­டங்­க­ளுக்கு முன்னர் முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி விளை­யா­டப்­பட்­டது முதல் இற்­றை­வரை துடுப்­பு­களின் அளவு பெரும் மாற்றம் பெற்­றுள்­ளதை அவ­தா­னிக்­கலாம். தற்­போதைய துடுப்­பு­களின் அளவை குறிப்­பாக டேவிட் வோர்னர் பயன்­ப­டுத்தும் துடுப்பின் அளவு தன்னைப் பிர­மிக்க வைப்­ப­தாக தென் ஆபி­ரிக்­காவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் பெற…

  22. தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்! சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது. இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.…

  23. ஆசிய மெய்வல்லுனர் போட்டி,யாழ் உதவி கல்விப்பணிப்பாளர் தகுதி March 03, 2016 ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் பங்கேற்பதற்கு யாழ்ப்பாணம் உதவி கல்வி பணிப்பாளர் திரு.சண் தயாளன் தகுதி பெற்றுள்ளார். கடந்த 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் தகுதிச் சுற்றுப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் பங்கேற்றிருந்த சண் தயாளன் சிங்கப்பூரில் நடைபெற்றவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளார். இதன் பிரகாரம் எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்து 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஆசிய மாஸ்டர்ஸ் மெய்வல்லுனர் போட்டியில் தயாளன் பங்கேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஆசிய மெய்வல்…

  24. ஷேன் வோர்னின் அணிக்கு பயிற்சியளிக்கும் சச்சின் டெண்டுல்கர் By Mohammed Rishad - ©Getty image அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டுவதற்கான நல நிதி கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர்களான ரிக்கி பொண்டிங், ஷேன் வோர்ன் ஆகியோர் தலைமையில் இரு அணிகள் பெயரிடப்பட்டுள்ளன. ரிக்கி பொண்டிங்கின் அணிக்கு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் கோர்ட்னி வோல்ஷ் பயிற்சியாளராகவும், ஷேன் வோர்ன் தலைமையிலான அணிக்கு சச்சின் டெண்டுல்கர் பயிற்ச…

    • 0 replies
    • 385 views
  25. தென்னாபிரிக்க தொடரை தவறவிடும் க்ளென் மெக்ஸ்வெல்! By A.Pradhap - தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் க்ளென் மெக்ஸ்வெல் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. க்ளென் மெக்ஸ்வெலின் இடது முழங்கை பகுதியில் உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக அவர், தென்னாபிரிக்காவுக்கு எதிரான சுற்றுத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த பிக் பேஷ் லீக் தொடரின் இறுதிப் போட்டியின் போது, இடது முழங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.