விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
பரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றது இலங்கை (காணொளி இணைப்பு) ரியோ பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் பதக்கம் வென்றுள்ளார். ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் போட்டியில் தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இவர் இறுதி சுற்றில் 58.23 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/11300
-
- 0 replies
- 296 views
-
-
ஆஸ்கார் பிஸ்டோரியஸின் சாதனையை முறியடித்த லியாம் மாலோன் லியாம் மாலோன் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் மாற்றுத் திறனாளர் (பாராலிம்பிக்) ஒலிம்பிக் போட்டிகளில் நியூஸிலாந்து மாற்றுத் திறனாளி தடகள வீரரான லியாம் மாலோன், தென்னாப்பிரிக்காவின் ஆஸ்கார் பிஸ்டோரியஸின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். நியூஸிலாந்தில் உள்ள நெல்சன் நகரை சேர்ந்த 22 வயது இளைஞரான லியாம் மாலோன், மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்கள் 200 மீட்டர் டி 44 போட்டி பிரிவில், பந்தய தூரத்தினை 21.06 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்த பிரிவில், பந்தய தூரத்தை ஆஸ்கார் பிஸ்டோரியஸ் 21.30 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது குறிப்பிட…
-
- 0 replies
- 337 views
-
-
திருப்பு முனை ஏற்படுத்தியது மைக் கேட்டிங்கிற்கு வீசிய பந்து அல்ல: ஷேன் வார்ன் கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். ஷேன் வார்னின் ‘நூற்றாண்டின் சிறந்த பந்து’ என்று வர்ணிக்கப்பட்ட மைக் கேட்டிங்கை வீழ்த்திய அந்த பந்து தனது திருப்பு முனை அல்ல மாறாக அதற்கு 6 மாதங்கள் முன்னதாக ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய பந்துதான் என்று கூறியுள்ளார் வார்ன். இது குறித்து அவர் ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ரிச்சி ரிச்சர்ட்சனை வீழ்த்திய அந்தப் பந்து பற்றி குறிப்பிட்டுள்ளார். இது மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். அந்தத் தொடரின் முதல் டெஸ்டில் ஷேன் வார்ன் தேர்வு செய்யப்படவில்லை, போட்டி டிராவில் …
-
- 1 reply
- 389 views
-
-
விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்: நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் கேன் வில்லியம்சன். | படம்: ஏ.பி. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். அவர் 3 வடிவங்களிலும் சிறந்த வீரர் என நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார். 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 22-ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முன்னதாக நியூஸிலாந்து அணி 16-ம் தேதி மும்பை அணிக்கு எதிராக 3 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்த ஆட்டம் டெல்லி பெரோ…
-
- 0 replies
- 274 views
-
-
பரா ஒலிம்பிக் ; பதக்கத்தை நழுவவிட்ட இலங்கை பரா ஒலிம்பிக் போட்டியில் 4x100 அஞ்சல் ஓட்டப்போட்டியில் 3.06 செக்கன்களால் இலங்கை வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டுள்ளது. 47.12 விநாடிகளில் போட்டியை நிறைவுச்செய்து இலங்கை நான்காவது இடத்தை பிடித்துக்கொண்டுள்ளது. இந்த போட்டியில் அமெரிக்கா முதலிம் பிடித்திருந்த நிலையில், விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக போட்டியிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில் ஜேர்மனி முதலாவது இடத்தையும் , பிரேசில் இரண்டாவது இடத்தையும் பிடித்ததோடு ஜப்பான் 3 ஆவது இடத்தை பெற்றுக்கொண்டது. ஜப்பான் 44.06 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்திருந்த நிலையில் இலங்கை 47.12 செக்கன்களில் போட்டியை நிறைவு …
-
- 0 replies
- 361 views
-
-
வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. வட மாகாண வரலாற்றில் முதன் முறையாக மன்னார் மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை தேசிய ரீதியில் தங்கம் வென்று சாதனை. மன்னார் மாவட்டத்தின் மடு வலயத்தை சேர்ந்த மளுவராயர் கட்டை அடம்பன் பாடசாலை 15 வயது கபடி அணி தேசிய ரீதியில் முதல் இடம் பெற்று தங்கம் வென்றுள்ளது. மாத்தறை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு மாகாணத்தில் இருந்து மூன்று அணிகள் வீதம் ஒன்பது மாகாணத்தில் இருந்தும் 27 அணிகள் கலந்து கொண்டன. கடந்த வருடம் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்று தேசிய ரீதியில் தோல்வியை சந்தித்த போதிலும் இம்முறை கடின உழைப்பின் மூலம் தங்கம் வென்றுள்ளது மளுவ…
-
- 1 reply
- 358 views
-
-
அப்ரிடி ஓய்வு? பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சாஹித் அப்ரிடி. 36 வயதாகும் அப்ரிடி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். டி20 போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக்கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியின் தலைவராக அப்ரிடி செயல்பட்டார். இந்த தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியதால் தலைவர் பதவியில் இருந்து அப்ரிடி நீக்கப்பட்டார். அத்துடன் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்ரிடி தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் விளையாட விரும்பினார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய ஒரேயொரு டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் அப்ரிடிக்கு இடம் கொடுக…
-
- 0 replies
- 420 views
-
-
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா சாதனை 2016-09-13 10:50:22 மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்களா தேஷ் சார்பாக முதலாவது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹமதுக்கு சொந்தமாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்களை சரித்ததன் மூலம் 10 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகள் மழையினால் தடைப்பட்டதால் பங்களாதேஷ் 1–0 என தொடரை வென்றது. பங்களாதே…
-
- 0 replies
- 522 views
-
-
ஓய்ந்தது டில்ஸ்கூப் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கை சார்பாக கிரிக்கெட் விளையாடி, ஜாம்பவான்களாகக் கருதப்படுவோர் என்ற பட்டியலொன்று வாசிக்கப்படுமாயின், முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன, அரவிந்த டி சில்வா, சனத் ஜெயசூரிய என்ற பெயர்கள், நிச்சயமாகப் பேசப்படும் பெயர்களாகும். அதேபோல், சமிந்த வாஸ், லசித் மலிங்க, அர்ஜுன ரணதுங்க, ரொஷான் மஹாநாம என, வேறு சில பெயர்களும் முன்வைக்கப்படும். ஆனால், திலகரட்ண டில்ஷான் என்ற பெயர், அடிக்கடி அடிபடும் ஒன்று கிடையாது. ஆனால், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், இலங்கை சார்பாகத் தோன்றிய, இரண்டாவது மிகப்பெரிய வீரராக, திலகர…
-
- 0 replies
- 502 views
-
-
யாழ். பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டியில் யாழ். பல்கலைக்கழக அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான 12 ஆவது கால்பந்தாட்டத் தொடர் வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் நேற்று 12 ஆம் திகதி வரை இடம்பெற்றது. இத் தொடரின் இறுதிப்போட்டி நேற்று வயம்ப பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி, ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக அணியை எதிர்த்தாடியது. மிகவும் விறுவிறுப்பாக இடம்பெற்ற இப் போட்டியில் …
-
- 0 replies
- 341 views
-
-
பராஒலிம்பிக் 2016: தங்கங்களைக் குவிக்கிறது சீனா இடம்பெற்றுவரும் பராஒலிம்பிக் போட்டிகளில், 5ஆவது நாளான திங்கட்கிழமைமுடிவில், பதக்கப் பட்டியலில், சீனாவே முதலிடத்தில் காணப்படுகிறது. 26 தங்கப் பதக்கங்களுடன் 5ஆவது நாளை ஆரம்பித்த சீனா, 13 தங்கங்களை மேலதிகமாகப் பெற்று, 39 தங்கங்கள், 30 வெள்ளிகள், 23 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடத்தில் காணப்படுகிறது. 8 தங்கங்களை வென்ற பெரிய பிரித்தானியா, மொத்தமாக 23 தங்கங்கள், 14 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாமிடத்திலும் 18 தங்கங்கள், 13 வெள்ளிகள், 19 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாமிடத்தில் உக்ரைனும் காணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்கா (13), பிரேஸில் (6), உஸ்பெகிஸ்தான் (6), அவுஸ்திரேலியா (5)…
-
- 0 replies
- 469 views
-
-
மோர்கன் வெளியேறினார்: தலைவராக ஜொஸ் பட்லர் பங்களாதேஷுக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் தலைவர் ஒய்ன் மோர்கனும், இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர். இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக, பங்களாதேஷுக்குச் செல்லவுள்ளது. இத்தொடர், ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. எனினும், பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இத்தொடரில் இணைவதிலிருந்து விலகுவதாக, மோர்கனும் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத…
-
- 0 replies
- 401 views
-
-
பாராலிம்பிக்: குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் வெள்ளி பதக்கம் ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் உட்பட இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வெற்ற நிலையில் தற்போது இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார். http://www.dinamalar.com/news_detail.as…
-
- 1 reply
- 434 views
-
-
தேசிய மட்டத்தில் சம்பியனானது சென்.பற்றிக்ஸ் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்டக் கால்பந்தாட்டப்போட்டியில் 15 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி சம்பியனானது. இந்த பிரிவில் வெள்ளிப்பதக்கத்தை இளவாலை சென் .ஹென்றிஸ் கல்லூரியும், வெண்கலப்பதக்கத்தை மன்னார் சென் . லூசியஸ் கல்லூரியும் தாமதாக்கிக்கொண்டன. அநுராதபுரத்தில் இடம்பெற்றுவரும் இத் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை எதிர்த்து சென்.ஹென்றிஸ் கல்லூரி அணி மோதியது. இந்நிலையில், கோல்கள் இல்லாமல் முடிவுக்கு வந்தது முதல் பாதி ஆட்டம். இரண்டாம் பாதியின் 33 ஆவது நிமிடத்தில் சென். பற்றிக்ஸின் முதல் கோலைப் பதிவு செய்தார் …
-
- 0 replies
- 570 views
-
-
இந்திய அணியில் இந்த முறையும் இவருக்கு இடமில்லை! #INDvsNZ செப்டம்பர் 22ம் தேதி தொடங்கும் நியூஸிலாந்துக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்த அணியில் அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி விவரம் பின் வருமாறு! விராட் கோலி (கேப்டன்), அஜின்க்யா ரஹானே (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், புஜாரா, முரளி விஜய்ரோ, ஹித் ஷர்மா, அஸ்வின், சஹா(விக்கெட் கீப்பர்) , ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷவர் குமார், ஷிகர் தவான், அமித் மிஸ்ரா, உமேஷ் யாதவ். மும்பையில் நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் கும்…
-
- 1 reply
- 575 views
-
-
ஒற்றைக் காலுடன் உசேன் போல்டுக்கே சவால் கொடுத்த சாம்பியன்! உசேன் போல்ட் – மின்னல் மனிதன். மொத்த உலகையும் 10 விநாடிகள் தன்னை மட்டுமே பார்க்க வைத்த ஒரு தடகள் சகாப்தம். தொடர்ந்து 3 ஒலிம்பிக் தொடர்களில் தங்கம் வென்று சரித்திரம் படைத்தவர். அவர் ஓடிய அதே களத்தில் இன்னுமொரு உசேன் போல்டை உலகம் கண்டுகளித்துள்ளது. ஆனால் போல்டைப் போல இரண்டு கால்களால் பறந்தவரல்ல இவர். உடலளவில் குறைகள் கொண்டிருந்தாலும் சோதனைகள் வென்று சாதனை படைத்த நாயகர்கள் பங்கேற்ற பாராலிம்பிக் தொடரில் இரண்டாவது ஒலிம்பிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் இங்கிலாந்தைச் சார்ந்த ஜானி பீகாக். பாராலிம்பிக் தொடர். மாற்றுத்திறனாளிகளுக்கான உச்சபட்சத் தொடர். வாழ்க்கையில் எத்தனையோ இழந்தாலும் …
-
- 0 replies
- 546 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்து இன்றோடு 31 ஆண்டுகள் பூர்த்தி. இலங்கை கிரிக்கெட் அணிக்கு முதல் டெஸ்ட் வெற்றி கிடைத்து இன்றோடு 31 ஆண்டுகள் பூர்த்தி. இலங்கை கிரிக்கெட் அணி தன்னுடைய முதலாவது டெஸ்ட் வெற்றியை ருசித்து இன்றோடு 31 ஆண்டுகள் கடந்திருக்கிறது. 1985 ம் ஆண்டு இலங்கைக்காகன கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய அணிக்கெதிராக, பி, சரவணமுத்து மைதானத்தில் வைத்து இலங்கை அணி அந்த வரலாற்று சாதனையை எட்டியது. இலங்கை அணிக்கு டுலிப் மெண்டீசும், இந்திய அணிக்கு கபில் தேவும் தலைவர்களாக செயற்பட்டனர்.ரொமேஷ் ரட்னாயக்க இந்தப் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இலங்கை கிரிக்கெட் அணி இதுவரை விளையாடியுள்ள 251 டெஸ்ட் போட்…
-
- 0 replies
- 312 views
-
-
பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பிரீமியர் லீக் போட்டிகளின் 4 ஆவது வார போட்டிகள் நேற்று நடைபெற்றன.ஒட்டுமொத்த முடிவுகள் ஒரே பார்வையில். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மான்செஸ்டர் டெர்பி என அழைக்கப்படும் மான்செஸ்டர் பிராந்திய அணிகளுக்கிடையிலான போட்டியில் மான்செஸ்டர் சிட்டி மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. காற்பந்து அரங்கில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த மான்செஸ்டர் டெர்பி நேற்று ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்றது. டெர்பி போட்டி என்பதைவிட இரு அணி முகாமையாளர்களினதும் நேரடி மோதல் இப்போட்டிக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்தது. முன…
-
- 0 replies
- 267 views
-
-
அமெரிக்க ஓபன்: ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் வாவ்ரிங்கா நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்கா சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜோகோவிச்சும், சுவிட்சர்லாந்து வீரர் வாவ்ரிங்காவும் மோதினர். இதில் 6-7 (1), 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகேவிச்சை வென்றார் வாவ்ரிங்கா. முதல் செட்டை இழந்தாலும் தனது சாமர்த்தியமான ஆட்டத்தினால் அடுத்தடுத்து செட்களை கைப்பற்றினார் வாவ்ரிங்க. இது அவர் …
-
- 0 replies
- 479 views
-
-
பராலிம்பிக்கில் 25 இற்கும் அதிகமான புதிய சாதனைகள்; சக்கர இருக்கை டென்னிஸ் 2 ஆம் சுற்றில் ராஜகருண 2016-09-12 09:48:49 ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் 15ஆவது பராலிம்பிக் விளையாட்டு விழாவில் உலக சாதனைகளும் பராலிம்பிக் சாதனைகளும் தாராளமாக புதுப்பிக்கப்பட்ட வண்ணம் உள்ளன. இவ் விளையாட்டு விழாவில் முதல் மூன்று நாள் போட்டி நிகழ்ச்சிகளில் 25க்கும் மேற்பட்ட உலக சாதனைகளும் 40க்கும் மேற்பட்ட பராலிம்பிக் சாதனைகளும் நிலைநாட்டப்பட்டுள்ளன. சீன பராலிம்பிக் விளையாட்டு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் குவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இரண்டாம் சுற்றில் உபாலி ராஜ…
-
- 0 replies
- 339 views
-
-
மன்செஸ்டர்களின் மோதல்: யுனைட்டெட்டை வென்றது சிற்றி இங்கிலாந்தில் இடம்பெறுகின்ற பிறீமியர் லீக் கால்பந்தாட்டத் தொடரில், இவ்வருடத்தின் பாரிய மோதலாக வர்ணிக்கப்பட்ட பெப் குவார்டிலோ, ஜொஸே மொரின்யோ ஆகியோரிடையேயான மோதலில், முதலாவது சுற்றில், குவார்டிலோ வெற்றி பெற்றுள்ளார். மன்செஸ்டர் யுனைட்டெட்டின் மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில், 1-2 என்ற கோல்கணக்கில், மன்செஸ்டர் சிற்றியிடம் மன்செஸ்டர் யுனைட்டெட் தோல்வியடைந்திருந்தது. சிற்றி சார்பாக, கெவின் டி ப்ரூனே, கெலெச்சி லெஹாஞ்சோ ஆகியோர் முதற்பாதியில் கோல்களைப் பெற்றிருந்தனர். இந்நிலையில், சிற்றி, 2-0 என்ற கோல்கணக்கில் முன்னிலை பெற்றி…
-
- 0 replies
- 377 views
-
-
அந்த இந்திய பேட்ஸ்மேன் தான் எனக்கு கடும் சவால் அளித்தார் - நிஜம் பேசும் மலிங்கா காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்கா. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார். பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் கமெண்ட் அடிக்க மாட்டார் மலிங்கா. இந்நிலையில் சிலோன் டுடே நாளிதழுக்கு மனம் திறந்த பேட்டி ஒன்றை சமீபத்தில் அளித்திருந்தார். அதில் சில துளிகள் ... காயம் ? "இப்போதைக்கு வேகமாக ஆறிவருகிறது. நெட்டில் பவுலிங் செய்ய ஆரம்பித்து விட்டேன். விரைவில் அணிக்குள் வருவேன் என நினைக்கிறேன். என்னுடைய உடல் தகுதியை வைத்து பார்க்கும்போது இன்னும் 2-3 ஆண்டுகள் நன்றாக விளையாட முடியும…
-
- 0 replies
- 440 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மகளிர் பிரிவில் ஜெர்மனியின் கெர்பர் 'சாம்பியன்'! அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் 'சாம்பியன்' பட்டம் வென்றார். ஞாயிறு காலை நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர் மற்றும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா ஆகிய இருவரும் பலப்பரீட்சையில் ஈடுபட்டனர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கெர்பர் 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கரோலினாவைத் தோற்கடித்து 'சாம்பியன்' பட்டம் வென்றார். 28 வயதான கெர்பர் வெல்லும் இரண்டாவது க்ராண்ட் ஸ்லாம் பட்டமாகும் இது. முன்னதாக இந்த ஆண்டு …
-
- 0 replies
- 465 views
-
-
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிச் சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ஆக்ரோஷமாக பந்தை அடித்து ஆடும் செர்பிய வீரர் ஜோகோவிச். (அடுத்த படம்) வெற்றியைக் கொண்டாடும் வாவ்ரிங்கா | படம்: ஏஎப்பி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச், வாவ்ரிங்கா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான ஜோகோவிச், பிரான்ஸ் வீரரான மான்பில்ஸை எதிர்த்து ஆடினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின் முதல் இரண்டு செ…
-
- 0 replies
- 309 views
-
-
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் மீண்டும் உமர் அக்மல். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் உமர் அக்மல் ,மீண்டும் பாகிஸ்தான் தேசிய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். T20 உலக கிண்ண போட்டிகளுக்குப் பின்னர் ஒழுங்குப பிரச்சனைகள், மற்றும் அணியின் தலைமைக்கு கீழ்ப்படியாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் உமர் அக்மல் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். இந்த நிலையில், மேற்கிந்திய தீவுகளின் கரீபியன் பிரிமியர் லீக், மற்றும் பாகிஸ்தானின் உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் மிகப்பெரிய அளவில் சாதித்து மீண்டும் அணைக்கு திரும்பியுள்ளார். அபுதாபியில் எதிர்வரும் 23 ம் திகதி மேற்கிந்திய தீவுக…
-
- 0 replies
- 491 views
-