Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 6 வருடத்திற்குப் பின் பாக்.கில் கிரிக்கெட்... அன்று தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானவரே இன்றும் நடுவர்! இஸ்லாமாபாத்: ஆறு வருடங்களுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடும் அணி ஒன்று பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்யப்போகிறது. ஆம்.. ஜிம்பாப்வே அணி, பாகிஸ்தானில் 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஜிம்பாப்வே அணி பங்கேற்கிறது. 2009ம் ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்த இலங்கை கிரிக்கெட அணியினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். அதுவும், பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் இந்த துப்பாக்கி சூடு நடந்தது. அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் இலங்கை வீரர்கள் காயமின்றி தப்பினர். தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலின…

  2. தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி January 28, 2019 தென்னாபிரிக்காவுக்கெதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியுள்ளது. ஜோகனஸ்பர்கில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 41 ஓவரில் 164 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது இதனையடுத்து, 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 31.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடர் 2 – 2 என சமனிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது …

  3. ஸ்டீவ் ஸ்மித் ஆடும் புதிய ஷாட்டுக்குப் பெயர் ‘ட்வீனர்’ ஸ்டிவ் ஸ்மித் மோர்னி மோர்கெலுக்கு எதிராக ஆடிய ‘ட்வீனர்’ ஷாட். படம்: ஏ.எஃப்.பி. ஆஷஸ் தொடர் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 215 ரன்களையும் 2-வது இன்னிங்சில் 58 ரன்களையும் விளாசி இங்கிலாந்தை படுத்தி எடுத்த ஸ்டீவ் ஸ்மித் புதிய ஷாட் ஒன்றை பயன்படுத்தினார். ஆஃப் திசையில் முற்றிலும் ஒதுங்கிக் கொண்டு தனது இருகால்களுக்கும் இடையே பந்தை லெக் திசையில் அடிக்கும் கடினமான ஒரு ஷாட்டை ஸ்மித் பயன்படுத்தி வருகிறார். இந்த ஷாட் ‘ட்வீனர்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது in-between என்பதை குறிக்க ட்வீனர் (tweener) என்று அழைக்கின்றனர். அதாவது இந்த ஷாட் கிரிக்கெட்டுக்குப் புதிது ஆனால் டென்னிஸ், கூடைப்பந்து ஆகியவற்றில் இந்த வ…

  4. உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட ஐ.சி.சி. Published by J Anojan on 2019-04-11 12:04:45 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூலை 14 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந் நிலையில் போட்டியில் கலந்துகொள்ளவுள்ள 10 அணிகளுக்கிடையேயான பயிற்சிப் போட்டி அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணையின் விபரம் பின்வருமாறு : http://www.virakesari.lk/article/53831

  5. குருட்டு அதிர்ஷ்டத்தால் 20 ஓவர் சாம்பியனாகவில்லை என்பதை அவுஸ்திரேலிய போட்டியில் நிரூபித்துள்ளோம் [23 - October - 2007] [Font Size - A - A - A] * இந்திய கப்டன் தோனி கூறுகிறார் 20 ஓவர் போட்டியில் சாம்பியன் என்பதை நிரூபித்து விட்டதாக இந்திய அணியின் கப்டன் தோனி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டி வெற்றி குறித்து இந்திய அணியின் கப்டன் தோனி கூறியதாவது; குருட்டு அதிர்ஷ்டத்தால் 20 ஓவர் உலகச் சாம்பியன் ஆகவில்லை என்பதை இந்த வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கின்றோம். இது எங்களது திறமைக்கு கிடைத்த வெற்றி. வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பொறுப்பானவர்கள்.காம்பிர், உத்தப்பாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இருவரது ஆட்டத்திலும் நல்ல முதிர்ச்சி தெரிகிற…

    • 0 replies
    • 1.1k views
  6. இரட்டை ஆதாய விவகாரம்: பிசிசிஐயின் முடிவுக்கு கங்குலி ஆதரவு இரட்டை ஆதாயம் பெறும் வகையில் எந்த பணியிலும் ஈடுபடவில்லை என மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உறுதியளிக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் முடிவுக்கு முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்துள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கியதால் இரட்டை ஆதாய விவகாரத்தில் சிக்கினார். ஐபிஎல் சூதாட்ட பிரச்சினை எழுந்தபோது இரட்டை ஆதாய விவகாரம் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளானது பிசிசிஐ. அதைத்தொடர்ந்து இரட்டை ஆதாய சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வருவதில் பிசிசிஐ தீவிரமாக இருக்கிறது. அது தொடர்பாக அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கும் பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் கடிதம் எழுதி…

  7. முத்தரப்பு கிரிக்கெட் தொடர்: அகர்வால் சதம்; இந்தியா அபார வெற்றி சதமடித்த மகிழ்ச்சியில் மயங்க் அகர்வால். படம்: எம்.மூர்த்தி. ஏ அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியா சத்தில் தென் ஆப்பிரிக்காவைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் இந்திய அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. சென்னையில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹென்ரிக்ஸ் 1 ரன்னில் ஆட்ட மிழந்தபோதும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான குயின்டன் டி காக் சதமடித்தார். 124 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 108 ரன்கள் எடுத்தார். பின்வரிசையில் விக்கெட் கீப்பர் டேன் விலா…

  8. 24 தடவை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை காத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரமாகும்.கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரிடா ஷெர்பா 50. இவர் ஏற்கனவே 22 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 23வது முறையாக கடந்த 15ல் எவரஸ்ட் சிகரத்தில் ஏறினார். இந்நிலையில் இந்திய காவல்துறையை சேர்ந்த மலையேறும் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஷெர்பா மீண்டும் புறப்பட்டார். நேற்று காலை 6:38 மணிக்கு இந்திய குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தார். …

  9. சாம்பியன்ஸ் லீக் தொடங்கியது : ஐரோப்பாவின் கால்பந்து அரசன் யார்? (அலசல் கட்டுரை) உலக கால்பந்து காதலர்களின் தாகத்தைத் தணிக்க வந்துவிட்டது யூஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ஜூன் இறுதியில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று, 17 நாடுகளைச் சார்ந்த 32 அணிகள் இத்தொடரில் விளையாட தகுதிபெற்றுள்ளன. செப்டம்பர் 15 தொடங்கும் 61ஆவது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், பங்கேற்கும் 32 அணிகளும் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலிருந்தும் இரண்டு அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இத்தாலியின் சான் சிரோ நகரில் நடைபெறும். வெற்றி பெரும் அணிக்கு பரிசுத் தொகையாக 15 மில்லியன் யூரோ வழங்கப்படும். தற்போது இக்கோப்ப…

  10. முன்னதாக ஆரம்பிக்கும் போர்மியுலா வன் 2016 பருவகாலம் ஏற்கனவே திட்டமிடப்பட்டது போன்று இல்லாமல், அடுத்த 2016ஆம் ஆண்டு பருவகாலம் இரண்டு வாரங்கள் முன்பதாக அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. மெல்போர்ன் ஓட்டப்பந்தயம் முன்னர் எதிர்வரும் ஏப்ரல் மூன்றாம் திகதி ஆரம்பிப்பதாய் இருந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில், எதிர்வரும் வருடமே முன்னதாய் ஆரம்பிக்கவுள்ளது. எனினும் ஒரு வருட காலத்தில் சாதனை ரீதியாக 21 பந்தயங்களை நடாத்தும் பொருட்டு, நெருக்கடியான அட்டவணையைத் தயாரித்ததாக அணிகள் முறைப்பாடு செய்ததையடுத்தே, பருவகாலத்தின் ஆரம்பம் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து பஹ்ரெயின், சீனா, ரஷ்யாவில் இரு வார இடைவெளிகளில் பந்தயங்கள் இ…

  11. ஹத்துருசிங்கவுடனான ஒப்பந்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இலங்கை கிரிக்கெட் Published by J Anojan on 2019-10-21 13:48:21 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் சந்திக ஹத்துருசிங்கவுடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களிலிருந்தும் விலகுவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது. அடுத்தவாரம் சந்திக ஹத்துருசிங்க இந்த ஒப்பந்தங்களிலிருந்து நீக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்கத் தவறியதை அடுத்து, பங்களாதேஷுடனான ஒரு நாள் தொடருக்குப் பின்னர், பயிற்றுவிப்பு குழாமை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் இலங்கை கிரிக்கெட் சபைக்கு உத்தரவு விடுக்கப்பட்டிருந்தத…

    • 0 replies
    • 330 views
  12. லூயி வன் கால் பதவி விலக எண்ணுகின்றார் ஆங்­கி­லேய ப்றீமியர் லீக் கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் மென்­செஸ்டர் யுனைட்டட் நான்­கா­வது தொடர்ச்­சி­யான தோல்­வியை அடுத்து அவ்­வணி பயிற்­றுநர் லூயி வன் காலின் பதவி கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. தன்னைப் பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கு முன்னர் தானாக வில­கிக்­கொள்­வது மேல் என வன் கால் தெரி­வித்­துள்ளார். 1989-– 90 கால்­பந்­தாட்டப் பரு­வ­கா­லத்­திற்குப் பின்னர் முதல் தட­வை­யாக மென்­செஸ்டர் யுனைட்டட் மிக மோச­மான பெறு­பே­று­களை சந்­தித்த வரு­கின்­றது. கடந்த ஏழு போட்­டி­களில் அக் கழ­கத்­தினால் ஒரு வெற்­றி­யைத்­தானும் பதிவு…

  13. SAG இல் பாலுராஜுக்கு முதல் பதக்கம் : ரனுக மூலம் இலங்கைக்கு முதல் தங்கம் By Mohammed Rishad - நேபாளத்தின் கத்மண்டுவில் நடைபெற்று வருகின்ற தெற்காசிய விளையாட்டு விழா (SAG) போட்டிகளின் முதல் நாளான இன்று (02) காலை நடைபெற்ற ஆண்களுக்கான தனிநபர் கராத்தேயில் பங்குகொண்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சௌந்தரராஜா பாலுராஜ் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார். இதன்மூலம் தெற்காசிய விளையாட்டு விழாவில் முதல் பதக்கத்தை வென்ற தமிழ் பேசுகின்ற வீரராக பாலுராஜ் இடம்பிடித்தார். 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழா நேற்று (01) மாலை கத்மண்டுவில் உள்ள தசரத் ரங்கசாலா விளையாட்டரங்கில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்த நில…

    • 0 replies
    • 496 views
  14. பெனால்டியை பாஸ் செய்த மெஸ்ஸி: சக வீரருக்கு உதவிய பெருந்தன்மை! தனக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், பந்தை கோல் நோக்கி அடிக்காமல், சுவாரஸ் கோல் அடிப்பதற்காக பாஸ் செய்து அப்ளாஸ் அள்ளியுள்ளார் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி. தனது 300-வது கோலைப் பொருட்படுத்தாமல், சுவாரசின் சாதனைக்கு உதவிய அவரது இந்தப் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டியுள்ளனர். நேற்று நடந்த லா லிகா போட்டியில் பார்சிலோனா அணி, செல்டா டி விகோ அணிக்கெதிராக விளையாடியது. முதல் பாதியில் மெஸ்ஸியும், செல்டா அணியின் குடேட்டியும் கோல் அடிக்க, ஆட்டம் 1-1 என சமநிலை வகித்தது. இரண்டாம் பாதியில் ருத்ரதாண்டவம் ஆடிய சுவாரஸ், 59 வது மற்றும் 75 வது நிமிடங்களில் கோலடித்தார். இந்நிலையில்தான் அந…

  15. இலங்கை அணியின் அடுத்த கட்ட நகர்வு எப்படி இருக்க வேண்டும் – ரசல் ஆர்னல்ட் பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணியால், ஏன் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளை வீழ்த்த முடியவில்லை. அதுமாத்திரமின்றி T20I உலகக் கிண்ணத்துக்கு முன்னர் இலங்கை அணி என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மொழியில் விளக்கும் முன்னாள் வீரர் ரசல் ஆர்னல்ட் http://www.thepapare.com/video-russel-arnold-on-sri-lanka-performance-in-india-2020-tamil/

    • 0 replies
    • 561 views
  16. பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு By Mohamed Azarudeen இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான “பழுப்பு வர்ணங்களின் சமர்” (Battle ot the Maroons) என அழைக்கப்படும் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது. கொழும்பு SSC மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கனிஷ்க ரன்திலக்க தலைமையிலான ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரி வீ…

    • 0 replies
    • 781 views
  17. வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு 23 AUG, 2025 | 02:26 PM 2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்ட…

  18.  மோர்கன் வெளியேறினார்: தலைவராக ஜொஸ் பட்லர் பங்களாதேஷுக்கான கிரிக்கெட் தொடரிலிருந்து விலகுவதாக, இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரின் தலைவர் ஒய்ன் மோர்கனும், இங்கிலாந்தின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர். இங்கிலாந்து அணி, 3 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்காக, பங்களாதேஷுக்குச் செல்லவுள்ளது. இத்தொடர், ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. எனினும், பங்களாதேஷில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, இத்தொடரில் இணைவதிலிருந்து விலகுவதாக, மோர்கனும் ஹேல்ஸும் அறிவித்துள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத…

  19. 500-வது டெஸ்ட் போட்டியை காண அசாரூதீனுக்கு பிசிசிஐ அழைப்பு அசாரூதீன் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இது இந்திய அணியின் 500-வது டெஸ்ட் போட்டியாகும். இதனை நினைவு கூரும் வகையில் இந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு வெள்ளி நாணயம் பயன்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன்களை அழைத்து கவுரவப்படுத்தவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. முன்னாள் கேப்டன்களான சந்து போர்டே, வெங்சர்க்கார், கபில்தேவ், ரவிசாஸ்திரி, கவாஸ்கர், சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், காந்த், ராகுல் டிராவ…

  20. வீதி விபத்தில் கிரிக்கெட் வீரர் பலி வாகன விபத்தொன்றில் பீ.ஆர்.சி கிரிக்கெட் கழக வீரரான பூர்ண பிரபஷ்வர அளுத்கே உயிரிழந்துள்ளார். பொரஸ்கமுவ பகுதியில் இடம்பெற்ற இடம்பெற்ற விபத்திலேயே குறித்த கிரிக்கெட் வீரர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த கிரிக்கெட் வீரர், கெப் வாகனமொன்றுடன் மோதுண்டதிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கெப் வாகனத்தை ஓட்டிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 1994 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்த பூர்ண, வலதுகை துடுப்பா…

  21. பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . பிரீமியர் லீக் 2016/2017 போட்டிகளின் 9 ஆவது வார போட்டி முடிவுகள். . #Bournemouth 0-0 Tottenham Hotspur புள்ளி பட்டியலில் 3 ஆம் இடத்தில் இருந்த டோட்டன்ஹாம் அணி பெர்னெமௌத் அணியுடனான போட்டியை சமன் செய்ததன் மூலம் 5 புள்ளி பட்டியலில் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. #Arsenal 0-0 Middelsbrough ஆர்சனல் அணி அறிமுக அணியான மிடில்ஸ்ப்ரு அணிக்கெதிராக கோல் ஏதும் இல்லாத நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. #Burnley 2-1 Everton எவெர்ட்டன் அணிக்கெதிராக இறுதி நேர கோல் உதவியுடன் வெற்றியை பெற்றுள்ளது பெர்ன்லி. பெர்ன்லி சார்பாக வொர்க்ஸ் மற்றும் ஆர்ப…

  22. 'இப் புவியில் எனக்கு இலங்கைதான் சொர்க்கம்' - வசிம் அக்ரம் (நெவில் அன்தனி) இப் புவியில் தனது சொர்க்­க­புரி இலங்கை என பாகிஸ்தான் கிரிக்கெட் மேதையும் தொலைக்­காட்சி வர்­ண­ணனை­யா­ள­ரு­மான வசிம் அக்ரம் தெரி­வித்தார். டயலொக் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் விசேட அதி­தி­யாக கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இவ் விருது விழாவில் பேசிய வசிம் அக்ரம், ‘‘விளை­யாட்­ட­ரங்­கிலும் அரங்­கிற்கு வெளி­யேயும் எங்­க­ளுக்கு இடையில் (பாகிஸ்தான், இலங்கை) பல்­வேறு போட்­டிகள் இடம்­பெற்­றன. பெரும்­பா­லா­னவை அரங்­கிற்கு வெளியே இடம்…

  23. விரைவாக 1000 ஓட்டங்களைப் பெற்று விவியன் ரிச்சர்ட்ஸின் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர் அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியில் பாகிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தான் அணியின் 22 வயதான இளம் வீரர் பாபர் அஸாம் 100 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 84 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த போட்டிக்கு முன் 20 போட்டியில் 3 சதம், 5 பவுண்டரியுடன் 953 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இன்றைய போட்டியில் 47 ஓட்டங்களை எடுத்ததன் மூலம் விரைவாக …

  24. ஐபிஎல் கிரிக்கெட்: யாருக்கு லாபம்? கிரிக்கெட் விளையாட்டில் உலக அளவில் அதிக ரசிகர்களால் மிகுந்த ஆர்வத்துடன் கவனிக்கப்படும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக்- டி20 கிரிக்கெட்டின் 10-வது தொடர் ஏப்ரல் 5-ஆம் தேதி (புதன்கிழமை) ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு பெருமளவில் உள்ளது 56 லீக் ஆட்டங்கள், ஃபிளே ஆப் சுற்றில் 3 ஆட்டங்கள் மற்றும் இறுதிப் போட்டி என மொத்தம் 60 ஆட்டங்கள் 2017 ஐபிஎல் தொடரில் நடைபெறுகின்றன. இந்த தொடரில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட…

  25. மலிங்கவும் சர்வதேச கிரிக்கெட் பயணமும் ஐ.சி.சி. ஆண்கள் கிரிக்கெட் உலகில் மிகச் சிறந்த டி-20 பந்து வீச்சாளராக கருதப்படும் லசித் மலிங்க, அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லசித் மலிங்க தனது யூடியூப் அலைவரிசை மூலமாக இந்த அறிவிப்பினை நேற்று அறிவித்தார். மலிங்கா இலங்கைக்காக 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒருநாள் போட்டிகள் மற்றும் 84 டி-20 போட்டிகளில் விளையாடி 546 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2004 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான மலிங்க, குறுகிய காலத்திலேயே இலங்கை அணியின் அனைத்து சர்வதேச சுற்றுப் பயணங்களிலும் இடம்பிடித்தார். புகழ்பெற்ற சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் மலிங்க, இலங்கை அணி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.