விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் ஏன் அவ்வளவு ஸ்பெஷல்?! சச்சின் என்றால் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ், ராகுல் டிராவிட் என்றால் லேட் கட், விராட் கோலி என்றால் கவர் ட்ரைவ், ரோஹித், ரிக்கி பாண்டிங் என்றால் புல் ஷாட்... இந்த வரிசையில் மகேந்திர சிங் தோனிக்கு... ஹெலிகாப்டர் ஷாட். நவீன கிரிக்கெட் உலகில் எல்லோரும் எல்லா ஷாட்களும் ஆடுகின்றனர் எனிலும், குறிப்பிட்ட சில ஷாட்களை அவர்கள் அடித்தால்தான் அழகு. சந்தோஷம். பிரமிப்பு. நியூஸிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியில் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்தி இருக்கலாம், ஆனால் அதைப் பிரபலப்படுத்தியது தோனிதான். இன்றும் தோனி களத்தில் இருக்கும்போது கண்ணுக்குக் குளிர்ச்சியாக ஒரேயொரு ஹெலிகாப்டர் ஷாட் அடி…
-
- 0 replies
- 493 views
-
-
ஊக்கமருந்து தடையிலிருந்து மீண்ட ஷரபோவா சம்பியனானார் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாத தடைக்குபின்னர் திரும்பிய ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் இறுதிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில் இடம்பெற்றுவரும் டியான்ஜின் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் முன்னாள் வீராங்கனை மரியா ஷரபோவா பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்காவை எதிர்கொண்டார். ஆரம்பத்தில் 1-4 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கினாலும்இ அதன் பின்னர் சரிவிலிருந்து மீண்டு 7-6இ 7-6 (10-8) என்ற நேர் செட்களில் அரினா சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தினை கைப்பற்றினார். கடந்த ஏப்ரல் மாதம் ஊக்கமருத்துத்…
-
- 0 replies
- 345 views
-
-
2017: மறக்க முடியுமா? - விளையாட்டு ஜனவரி ஜன. 4: ஒரு நாள் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து எம்.எஸ்.தோனி விலகினார். பிப்ரவரி பிப். 20: ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென்ஸ்டோக்ஸை ரூ.14 கோடிக்கு புனே அணி ஒப்பந்தம்செய்தது. ஏப்ரல் ஏப். 30: சென்னையில் நடந்த ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல் சாம்பியன் பட்டம் வென்றார். மே மே. 21: ஹைதராபாத்தில் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி புனே அனியை ஒரு ரன்னில் வீழ்த்தி 3-வது முறையாகக் கோப்பையை வென்ற…
-
- 0 replies
- 669 views
-
-
T-20 போட்டிகளில் மீண்டும் களமிறங்கவுள்ள சங்கக்கார Image Courtesy - Cricinfo இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கார எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி முதல் 11 வரை ஹொங் கொங்கில் நடைபெறவுள்ள T-20 பிலிட்ஸ் போட்டித் தொடரில் கெலெக்ஸி கிளெடியேட்டர்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடவுள்ளார். டெஸ்ட் அரங்கில் 12,400 ஓட்டங்களையும், ஒரு நாள் அரங்கில் 14,200 ஓட்டங்களையும் குவித்துள்ள 40 வயதான சங்கக்கார, இத்தொடரில் கலந்துகொண்டு ஹொங் கொங் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யவும், அந்நாட்டு வீரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் எதிர்பார்த்துள்ளதாக போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.…
-
- 0 replies
- 506 views
-
-
இவ்வாண்டின் பேஸ்போல் World Series போட்டித் தொடரில், சான் பிறான்சிஸ்கோ ஜயன்ட்ஸ் (San Francisco Giants) அணி வெற்றி பெற்றது. நேற்று அந்தப் போட்டித் தொடரின் ஐந்தாவது போட்டி இடம்பெற்றது. ரெக்சாசில் இடம்பெற்ற நேற்றைய போட்டியில், மூன்றுக்கு ஒன்று என்ற அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி, ரெக்சாஸ் ரேஞ்சேர்ஸ் (Texas Rangers) அணியைத் தோற்கடித்தது. அதன் மூலம், நான்குக்கு ஒன்று என்ற போட்டிகளின் அடிப்படையில் சான் பிறான்சிஸ்கோ அணி World Series போட்டித் தொடரில் வெற்றி பெற்றது. 1954 ஆம் ஆண்டின் பின்னர் முதன் முறையாக சான் பிறான்சிஸ்கோ அணி, வேர்ல்ட் சீரிஸ் போட்டித் தொடர் ஒன்றில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. [11/2/2010 ] [cmr news bulletin ]
-
- 0 replies
- 727 views
-
-
ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்கள் 16 வயது வீரர் சாதனை! ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டியில் 16 வயது வீPரர் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதும் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் ஏற்கனவே நடைபெற்ற 2 இருபதுக்கு 20 போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த 9 ஆம் திகதி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இப் போட்டியில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகளிலும், ஜிம்பாபே அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள…
-
- 0 replies
- 284 views
-
-
என் கணவரின் தவறுக்கு நானே காரணம்- வார்னரின் மனைவி உருக்கம்: வெளிவராத புதிய தகவல்கள் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், அவரின் மனைவி கேண்டிஸ் வார்னர் - படம்: ஏஎப்ஃபி பந்தை சேதப்படுத்தியதில் சிக்கி 12 மாதங்கள் தடைவிதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரின் செயலுக்கு தானே காரணம் என்று அவரின் மனைவி கேன்டிஸ் தெரிவித்துள்ளார். கேப்டவுனில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில்ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப் ஆகியோர் சிக்கினார்கள். இதில் டேவிட் வார்னர், ஸ்மித்துக்கு 12 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 338 views
-
-
சச்சின் - திராவிட் சாதனையை முறியடித்து தென் ஆப்பிரிக்க வீரர்கள் உலக சாதனை ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோடி சேர்ந்து அதிக ரன்கள் எடுத்த வகையில் உலக சாதனையை வைத்திருந்த சச்சின் - திராவிட் சாதனையை தென் ஆப்பிரிக்க ஜோடி உடைத்துள்ளனர். நேற்று புளூம்ஃபாண்டீன் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. தென் ஆப்பிரிக்க உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் (லிஸ்ட் ஏ) டால்பின் அணியின் தொடக்க வீரர்களான மோர்னி வான் விக் மற்றும் கேமருன் டெல்போர்ட் ஜோடி 50 ஓவர்கள் முழுதையும் ஆட்டமிழக்காமல் விளையாடி 367 ரன்களைக் குவித்தனர். நைட்ஸ் அணிக்கு எதிராக நேற்று இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின், திராவிட் ஜோடி இணைந்து 1999ஆம் ஆண்டு நியுசீலாந்துக்கு எதிராக ஐதரா…
-
- 0 replies
- 336 views
-
-
இந்தியா, தென் ஆப்ரிக்கா: சென்னையில் மோதல் கோல்கட்டா: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது. வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க அணி நான்கு டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் மூன்று சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான போட்டிகள் நடக்கும் மைதானங்களை, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) பயணம் மற்றும் அட்டவணை கமிட்டி நேற்று அறிவித்தது. இதன்படி தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் டில்லி, பெங்களூரு, ஆமதாபாத், நாக்பூரில் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஐந்து ஒருநாள் போட்டிகள் சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்…
-
- 0 replies
- 425 views
-
-
உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனிக்கு 9வது இடம் உலகிலேயே அதிக மதிப்புள்ள விளையாட்டு வீரர்களில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனிக்கு 9வது இடம் கிடைத்துள்ளது. அவருக்கு பின்னரே கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் ரொனால்டோ, லயனல் மெஸ்சி இந்த பட்டியலில் வருகின்றனர். லண்டன் ஸ்கூல் ஆப் மார்க்கெட்டிங் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர்கள் ரொனால்டோ, மெஸ்சி ஆகியோரை விட இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு சந்தையில் அதிக மதிப்பு இருக்கிறது. தோனியின் ஆண்டு வருமானம் 31 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் விளம்பரங்கள் மூலம் கிடை…
-
- 0 replies
- 198 views
-
-
தென்ஆப்ரிக்காவுக்கு வீரரை கடன் கொடுத்த இந்தியா...இதுவல்லவோ விளையாட்டு உணர்வு! பொதுவாக சிறுவர்கள் விளையாடும் கிரிக்கெட்டில்தான் எதிரணி வீரர்கள், ஆள் பற்றாக்குறை காரணமாக பீல்டிங் செய்வார்கள். தற்போது ஆள்பற்றாக்குறை காரணமாக சர்வதேச போட்டியிலும் மாற்று அணி வீரர் பீல்டிங் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் இந்தியா, தென்ஆப்ரிக்கா, ஆஸ்திரேலிய 'ஏ ' அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க வந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் சென்னையில் உள்ள வணிக வளாகம் சென்று உணவருந்தியுள்ளனர். உணவு அவர்களுக்கு ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் 10க்கும் மேற்பட்ட தென்ஆப்ரிக்க வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட வீரர்கள் சென்னை அப்பல்லோ மருத்த…
-
- 0 replies
- 877 views
-
-
யாழ். அரச அதிபர் வெற்றிக்கிண்ணப் போட்டிகள் யாழ். மாவட்ட அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்திற்கான போட்டிகள் நேற்று ஆரம்பமாகின. முதலாவது போட்டியாக கரம் போட்டி யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று ஆரம்பமானது. இன்றும் இப்போட்டிகள் நடைபெறவுள்ளன. பூப்பந்தாட்டம் எதிர்வரும் 7ஆம் மற்றும் 8ஆம் திகதி அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலும் யாழ். இராணுவ நீதிமன்ற மைதானத்திலும், கால்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் யாழ். குருநகர் பாடுமீ ன் விளையாட்டு மைதானத்திலும் பாசையூர் சென். அன்டனி மைதானத்திலும் நடைபெறவுள்ளன. வலைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டப் போட்டிகள் எதிர்வரும் 22ஆம் திகதி நாயன்மார்க்கட்டு பாரதி வ…
-
- 0 replies
- 347 views
-
-
வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதால் பயிற்சியாளர் பதவியைத் துறந்தேன்: ஜாவேத் மியாண்டட் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜாவேத் மியாண்டட். | கோப்புப் படம். 1999-ம் ஆண்டு தான் பயிற்சியாளர் பொறுப்பை உதறியதற்குக் காரணம் சில வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டம் உள்ளிட்ட ஊழல்களில் ஈடுபட்டு வேண்டுமென்றே சரியாக ஆடாததே என்று ஜாவேத் மியாண்டட் தெரிவித்துள்ளார். "நான் இது பற்றி அப்போதைய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கலீத் மெஹ்மூதிடம் தெரிவித்தேன், உடனே நடவடிக்கை எடுங்கள் இல்லையேல் சரிசெய்ய முடியாத அளவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சீரழிந்து விடும் என்றேன். பயிற்சியாளராகத் தொடர எனது மனசாட்சி இடம் கொடுக்கவில்லை, இதனால் பதவியை உதறினேன். 1999-ம் ஆண்டில் சூதாட்ட அச்சு…
-
- 0 replies
- 278 views
-
-
சரணடைந்தது இந்தியா ; இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து இந்திய அணியை 18 ஓட்டத்தினால் வீழ்த்தி நியூஸிலாந்து அணி இரண்டாவது தடவையாகவும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் முதலாவது அரையிறுதி ஆட்டம் இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கிடையே நேற்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. நேற்றைய தினம் நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 211 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை மழை காரணமாக போட்டி இடை நிறுத்தப்பட்டு இன்றைய தினம் தொடரப்பட்டது. இன்றைய தினம் 211 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி இறுதியாக 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 240…
-
- 0 replies
- 477 views
-
-
எலைட் சம்பியன்ஷிப்’ என்ற புதிய பெயரில் மூவகை முதல் தர உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் முதல் தர கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் மூவகை ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எலைட் சம்பியன்ஷிப் போட்டிகள் என அழைக்கப்படவுள்ளன. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர்களுடான சந்திப்பின்போது இந்தத் தகவலை இடைக்கால நிருவாக சபைத் தலைவர் சிதத் வெத்தமுனி தெரிவித்தார். கொழும்பை பிரதான இடமாகக் கொண்டு விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட் விளையாட்டுத்துறை நாட்டின் சகல பாகங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் …
-
- 0 replies
- 313 views
-
-
ஹாக்கி: ஒலிம்பிக் கனவு தகர்ந்தது Monday, 10 March, 2008 09:59 AM . சான்டியாகோ, மார்ச். 10: சான்டியாகோவில் நடை பெற்ற உலக ஹாக்கி தகுதி சுற்று போட்டியில் நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் பிரிட்டனிடம் இந்தியா படுதோல்வி அடைந்தது. . இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணியின் கனவு தகர்ந்தது. ஒலிம்பிக் போட்டிகளில் கடந்த 1928 ஆம் ஆண்டு முதல் ஹாக்கியில் இந்தியா விளையாடி வருகிறது. இதுவரை 8 முறை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்க பதக்கம் வென்று உலகின் வலுவான ஹாக்கி அணியாக முன்னிலை பெற்று விளங்கி வந்துள்ளது. இந்தநிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி…
-
- 0 replies
- 926 views
-
-
செய்தித் துளிகள் பிரிமியர் பாட்மிண்டன் லீக்கில் சென்னை ஸ்மாஷர்ஸ், டெல்லி ஏஸர்ஸ் அணியை 4-3 என்ற கணக்கில் தோற்கடித்து 2வது வெற்றியை பதிவு செய்தது. ----------------------------------------------------- டி 20 உலககோப்பைக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெறக்கூடும் என தகவல்கள் பரவி வரும் நிலையில், ஓய்வு முடிவை சரியான நேரத்தில் எடுப்பேன். ஆஸி. தொடரில் 6 அல்லது 7வது இடத்தில் புதுமுக வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தோனி தெரிவித்துள்ளார். ----------------------------------------------------- பாதுகாப்பு காரணம் கருதி வரும் 27ம் தேதி வங்கதேசத்தில் நடைபெறும் 19 வயதுக்குட்டோருக்கான உலககோப்பையை ஆஸி. அணி புறக்கணித்துள்ளது. …
-
- 0 replies
- 598 views
-
-
”பீட்டர்சன் இங்கிலாந்து அணிக்கு திரும்ப முடியாது” மோர்கன் February 10, 2016 இங்கிலாந்து அணிக்கு பீட்டர்சன் திரும்புவதற்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டு விட்டதாக அந்த அணியின் தலைவர் மோர்கன் கூறியுள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான பீட்டர்சன் மீண்டும் அணிக்கு திரும்ப போராடி வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தார். ஆனால் பீட்டர்சனை அணியில் இணைத்துக் கொள்ள முடியாது என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் பீட்டர்சன் பல்வேறு நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.…
-
- 0 replies
- 367 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : ரியல்மாட்ரிட்டிடம் ரோமா வீழ்ந்தது! சாம்பியன்ஸ் லீக் நாக்அவுட் சுற்று ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் ரோமா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ரோம் நகரில் நடந்த 2வது லெக் ஆட்டத்தில், முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 64வது நிமிடத்தில் ரெனால்டோவும் 68வது நிமிடத்தில் ரோட்ரிகசும் இரு கோல்கள் அடித்தனர். ஏற்கனவே நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்ததால், 4-0 என்ற ஒட்டு மொத்த கோல்கள் அடிப்படையில், காலிறுதிக்குள் நுழைந்தது. பார்சிலோனா புதிய மைதானம் இதற்கிடையே பார்சிலோனா அணி தனது நியூகேம்ப் மைதானத்தை புதியதாக பொலிவுற கட்ட முடிவு செய்துள்ளது. தற்போது உலகின…
-
- 0 replies
- 308 views
-
-
கிரிக்கெட் விளையாட்டுக்கு மீளும் குமார் சங்கக்கார By Mohamed Azarudeen - இலங்கையின் கிரிக்கெட் காதலர்களுக்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பம் மீண்டும் கிடைத்திருக்கின்றது. கடந்த பருவகாலத்திற்கான இங்கிலாந்தின் உள்ளூர் கவுண்டி தொடரில் சம்பியன் பட்டம் வென்ற எசெக்ஸ் கிரிக்கெட் கழகம், கிரிக்கெட் விளையாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்கும் மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்துடன் (MCC) சம்பிரதாய கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடவுள்ளது. நான்கு நாட்கள் …
-
- 0 replies
- 568 views
-
-
டேவிட் வோர்னரின் போராட்டம் வீண், தொடரை சமப்படுத்தியது தென்னாபிரிக்கா By Akeel Shihab ICC தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களின் இறுதி நேர அபாரத்தால் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் தென்னாபிரிக்க அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலிய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 107 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிக…
-
- 0 replies
- 700 views
-
-
கோலிக்கு இந்த வாரம் அபராத வாரம்! இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலிக்கு இவ்வாண்டு மிகவும் அற்புதமான ஆண்டு. தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல் ரன் மழையாகப் பொழிந்து வருகிறார். டி20 உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது பெற்றார். இப்போது ஐ.பி.எல் தொடரில் அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசமே வைத்துள்ளார். ஆனால் இந்த வாரம், ஏனோ தெரியவில்லை கோலிக்கு பிரச்சனைகள் படையெடுத்த வண்ணம் உள்ளன. கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி மெதுவாகப் பந்துவீசியதால் கேப்டன் கோலிக்கு 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இணை உரிமையாளராக உள்ள ஐ.எஸ்.எல் கால்பந்து அணியான கோவா அணிக்கு தற்போது 11 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பெரிதும…
-
- 0 replies
- 489 views
-
-
சுனில் கவாஸ்கர் சாதனையை முறியடித்த அலிஸ்டர் குக் படம்: ராய்ட்டர்ஸ்/ இந்து ஆர்கைவ்ஸ். தொடக்க வீர்ராகக் களமிறங்கி அதிக ரன்களைக் குவித்ததற்கான சுனில் கவாஸ்கர் சாதனையை இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக் முறியடித்தார். பாகிஸ்தானுக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 81 ரன்கள் எடுத்த குக், மொகமது ஆமிர் பந்தில் பவுல்டு ஆனார். இவர் மொகமது ஆமிர் பந்தை கட் செய்து பவுண்டரிக்கு அனுப்பிய 61 ரன்களுக்குச் சென்ற போது கவாஸ்கர் சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் தொடக்க வீரராக சுனில் கவாஸ்கர் எடுத்திருந்த 9,607 ரன்கள் என்ற சாதனையை அலிஸ்டர் குக் முறியடித்து தற்போது 9,630 ரன்கள் எடுத்து முதலிடம் வகிக்கிறார். 123 டெஸ்ட் போட்டிக…
-
- 0 replies
- 263 views
-
-
போலந்தில் சர்வதேச தடகள சம்மேளனம் சார்பாக நடத்தப்பட்டு வரும் ஜுனியர் தடகளப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதல் பிரிவில் உலக சாதனையுடன் தங்கம் வென்றுள்ளார். போலந்தின் பிட்கோசெஸ்க் நகரில் நடந்து வரும் இந்த போட்டியில் 18 வயது நீரஜ், 86.48 மீட்டர் வீசினார். இதற்கு முன் லாத்வியா வீரர் சிஜிஸ்முன்ட்ஸ், 84.69 மீட்டர் துாரம் வீசியதே 20 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உலக சாதனையாக இருந்தது. முதல் முயற்சியில் 79.66 மீட்டர் வீசிய நீரஜ் 2வது முயற்சியில்தான் இந்த உலக சாதனையை படைத்தார். லண்டன் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள டிரினிடாட் டொபாக்கோ வீரர் கெசோன் வால்காட், இந்த ஆண்டில் அதிகபட்சமாக 86.35 மீட்டர்தான் வீசியது குறிப்பிடத்தக்கது. இதற்…
-
- 0 replies
- 301 views
-
-
டெஸ்ட் பந்துவீச்சாளர் தரநிலையில் மீண்டும் முதலாமிடத்தில் அஷ்வின் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அன்டிகுவாவில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 83 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய சுழல்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஐ. சி. சி. பந்துவீச்சாளர் தரநிலையில் மீண்டும் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததன் மூலம் முதலாம் இடத்தை முதல் தடவையாக அடைந்த பாகிஸ்தானின் யாசிர் ஷா ஐந்தாம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். அவர் ஓல்ட் ட்ரஃபோர்டில் நடைபெற்ற இ…
-
- 0 replies
- 373 views
-