விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7848 topics in this forum
-
இலங்கை அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி மஹேலவை வழியனுப்பியது பாகிஸ்தானுக்கு எதிரான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 105 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2-0 என தொடரை தன் வசமாக்கியது. இதன்மூலம் இலங்கை அணியின் சிரேஷ்ட வீரரும் முன்னாள் அணித் தலைவருமான மஹேல ஜெயவர்தனவுக்கு சிறந்ததொரு பிரியாவிடை வழியனுப்புதலையும் இலங்கை அணி அளித்துள்ளது. இங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கடந்…
-
- 0 replies
- 791 views
-
-
கங்குலி சட்டையை கழற்றிதான் சுற்றினார்; 2019-ல் உ.கோப்பையை வென்றால், நான் சட்டை இல்லாமல் ஆக்ஸ்போர்ட் தெருவில் நடப்பேன்: விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியுடன், தற்போதைய கேப்டன் விராட் கோலி: கோப்புப் படம் - படம்: ஏஎப்ஃபி 2002-ல் நடந்த நாட் வெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் வென்ற போது கங்குலி சட்டையைக் கழற்றிதான் சுற்றினார். ஆனால் 2019-ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வென்றால், ஆக்ஸ்போர்ட் தெருவில் சட்டையில்லாமல் நடப்பேன் என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார். கடந்த 2002ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு கங்குலி தலைமையிலான இந்திய அணி பயணம் மேற்கொண்டது. அதில் நா…
-
- 0 replies
- 293 views
-
-
சாதனை வெற்றியாளர்களைத் தந்த அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் ஒவ்வொரு ஆண்டினதும் முதலாவது டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் ஆக இடம்பெறும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் சுற்றுப் போட்டிகள் நேற்று முன்தினம் மெல்பேர்னில் முடிவுக்கு வந்தன. இந்த சுற்றுப்போட்டிகள் ஆரம்பிக்கு முன்னரேயே ஆடவர் ஒற்றையர் மற்றும் மகளிர் ஒற்றையர் பட்டங்களை வெல்ல யாருக்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன என்று கணிக்கப்பட்டு முதல் நிலை seed வழங்கப்பட்டனரோ, அந்த இருவரே தங்கள் சாதனைப் பட்டங்களை வசப்படுத்திக்கொண்டனர் என்பது விசேடமானது. அவுஸ்திரேலிய பகிரங்க ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஐந்தாவது தடவை தன் வசப்படுத்திய நோவாக் ஜோக்கோவிக், பகிரங்க டென்னிஸ் விளையாட்டு ஆரம்பிக்கப்பட்ட பிறகு அதிக தடவை அவுஸ்திரேலிய பட்டத்தை வென்…
-
- 0 replies
- 361 views
-
-
போர்முலா வன் கார்பந்தயப் போட்டி – ஹமில்டன் 5வது முறையாக சம்பியன் October 29, 2018 போர்முலா வன் கார்பந்தயப் போட்டியில் மெர்சிடிஸ் அணிக்காக விளையாடும் நடப்பு சம்பியனான இங்கிலாந்தின் லுயிஸ் ஹமில்டன் ( Lewis Hamilton) 5வது முறையாக சம்பியன் பட்டத்தினை கைப்பற்றியுள்ளார். இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார்பந்தயப் போட்டி உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடைபெற்று வருகின்ற நிலையில் மெக்சிகோ சிட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 19-வது சுற்றான மெக்சிகோ கிராண்ட்பிரி போட்டியில்; நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் முதலிடத்தினை பெற்றிருந்தார். ஹாமில்டன் 4-வது இடம் பிடித்து 12 புள்ளிகள் பெற்றார். இந்த போட்டியில் 7-வது இடத்துக்குள் வந்தாலே சம்…
-
- 0 replies
- 341 views
-
-
”அலப்பறை கெளப்புறோம்”; சச்சின் சாதனையை முறியடித்த டேவிட் வார்னர்! ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டேவிட் வார்னர் இன்று வரை சிறப்பாக விளையாடி வரும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களில் முக்கியமானவர். ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் உள்ளிட்ட அணிகளுக்கு விளையாடியுள்ள டேவிட் வார்னர் இந்திய பாடல்களுக்கு டிக்டாக் செய்வதன் மூலம் இந்திய ரசிகர்களிடையே தனக்கான இடத்தையும் பிடித்துள்ளார். நீண்ட காலமாக கிரிக்கெட்டில் இருந…
-
- 0 replies
- 214 views
-
-
அப்பாவுக்கு டார்ச்லைட், மகனுக்கு சாம்பியன்ஷிப்: தங்க மகன் சாய்நரேன்! வீட்டில் சுவரில் மாட்டியிருக்கும் ஒரு கடிகாரத்தைத் தவிர அந்த ஒற்றை அறை வீடு முழுக்க நிரம்பி யிருப்பவை பதக்கங்களும், கோப்பைகளும், சான்றிதழ்களும்தான். இத்தனைக்கும் சொந்தக்காரன் சிறுவன் சாய்நரேன். சென்னை கே.கே நகரைச் சேர்ந்த கார்த்திக்கின் மகன் சாய்நரேன் தாய்லாந்தில் நடந்த சர்வதேச ஓப்பன் ரோலர் ஸ்கேடிங் போட்டியில் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று திரும்பியிருக்கிறான். கே.கே. நகர் ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சாய்நரேன் மாவட்ட, மாநில, தேசிய அளவில் ஸ்கேட்டிங், இசை, ஓவியம் என்று பல போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை வாங்கிக் குவித்து வருகிறான். தாய்லாந்து நாட்டில் …
-
- 0 replies
- 287 views
-
-
கிரிக்கெட் மைதானத்தை ரெஸ்லிங் மேடையாக்கியவருக்கு வாழ்நாள் தடை! (வீடியா) பெர்முடாவில் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி நடந்தது. இறுதி ஆட்டத்தில் கிளைவ்லேண்ட் அணியுடன் வில்லோ கட் அணி மோதியது. பெர்முடா அணிக்காக 14 சர்வதேச போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், கிளைவ்லேண்ட் அணியில் இடம் பெற்றிருந்தார். இந்த போட்டியின் போது, கிளைவ்லேண்ட் அணியின் விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சனுக்கும் வில்லோ கட் அணியின் பேட்ஸ்மேன், ஜார்ஜ் ஓ பிரையனுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது விக்கெட் கீப்பர் ஜேசன் ஆண்டர்சன், ஓ பிரையன் முகத்தில் கையால் குத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஓ பிரையனும் பதிலுக்கு ஜேசன் ஆண்டர்சனை பேட்டால் தாக்கினார். பின்னர் இருவரும் …
-
- 0 replies
- 434 views
-
-
தேசிய குத்துச்சண்டை போட்டியில் 19 பதக்கங்களை வென்ற வடமாகாண வீரர்கள் மாத்தறையில் நடைபெற்ற தேசிய மட்டத்திலான குத்துச் சண்டை போட்டியில் வடக்கிலிருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 19 பதக்கங்களை வென்று வடமாகாணத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். மாத்தறை, அக்குறஸ்ஸ, அத்துருகிரிய பிரதேச சபை மண்டபத்தில் கடந்த 28, 29 மற்றும் 30 ஆகிய மூன்று தினங்கள் இந்தப் போட்டி நடைபெற்றது. இலங்கை பிரான்ஸ் 'சவேட்' அமைப்பின் ஏற்பாட்டில், அந்த அமைப்பின் தலைவரும், தேசிய மற்றும் சர்வதேச குத்துச் சண்டை பயிற்றுனருமாகிய சி.யூ.பிரசாத் விக்கிரமசிங்க தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. வவுனியா ஏழாம் அறிவு தற்காப்புகலை சங்கத்தின் தலைவரும், வடமாகாண குத்துச்சண்டை (கிக் பொக்சிங்) பயிற்று…
-
- 0 replies
- 734 views
-
-
இலங்கையுடனான T20I தொடருக்கான பாகிஸ்தான் குழாம் இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20I கிரிக்கெட் தொடருக்கான 16 பேர்கொண்ட பாகிஸ்தான் குழாம் இன்று (02) அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான T20I தொடர் எதிர்வரும் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை லாஹூரில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டித் தொடருக்கான பாகிஸ்தான் குழாத்தினை அந்த அணியின் பயிற்றுவிப்பாளரும், தேர்வுக்குழு தலைவருமான மிஸ்பா உல் ஹக் இன்று (02) வெளியிட்டுள்ளார். அறிவிக்கப்பட்டிருக்கும் T20I குழாத்தை பொருத்தவரை, இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருந்த ஒருநாள் குழாத்திலிருந்து மூன…
-
- 0 replies
- 393 views
-
-
Yohan Blake vs Usain Bolt – A New 100 Meter King? http://youtu.be/heHUiRrYq_U 22 Year old Yohan Blake already shocked everyone a year ago at the World Championships in Daegu, winning gold in the 100 meters while Usain Bolt was disqualified. Now, he’s beaten Bolt head on, taking first place in the Jamaican trials to the 2012 Olympic games in London, running a [size=3]career[/size] best of 9.75. The Jamaican trials, especially in the 100 meters, might as well be the Olympics finals, with Blake, Bolt and perennial second-third place finisher and former world record holder, Asafa Powell. If you look at it like that, Blake is the best sprinter in the world …
-
- 0 replies
- 569 views
-
-
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி சூப்பர் ஓவர் முறையில் அசத்தல் வெற்றி பெற்றது. வெல்லிங்டனில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையேயான 4ஆவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ரன்களை சேர்த்தது. அதிகப்பட்சமாக மணிஷ் பாண்டே 50 ரன்களும், கே.எல். ராகுல் 39 ரன்களும் விளாசினர். பின்னர் 166 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடியது. துவக்க ஆட்டக்காரர் குப்தில் ((guptil)) 4 ரன்னில் வெளியேறிய போதிலும், 2ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த மன்ரோ 64 ரன்களும…
-
- 0 replies
- 572 views
-
-
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் சர்வதேசப் போட்டிகள் நடத்த தீர்மானம் By Mohammed Rishad - ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ கிரிக்கெட் மைதானத்தில் 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் எந்தவொரு சர்வதேசப் போட்டிகளும் நடத்தப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வந்ததாகத் தெரிவித்த விளையாட்டுத்துறை அமைச்சர் டலஸ் அழகபெரும, எதிர்வருகின்ற காலங்களில் அதிகளவு சர்வதேசப் போட்டிகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதற்கான ஆரம்பமாக எதிர்வரும் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டிகளும் அமையும் என குற…
-
- 0 replies
- 463 views
-
-
இலங்கை அணியுடனான சர்வதேச மகளிர் இருபதுக்கு : 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளினால் வெற்றிபெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்று வரும் சர்வதேச இருபதுக்கு - 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்றைய தினம் பேர்த்தில் இடம்பெற்ற 5 ஆவது லீக் போட்டியில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதின. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்களை குவித்தது. இலங்கை அணி சார்பில் அணித் தலைவி சாமரி அத்தபத்து 38 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்களையும், உமேஷா தமாஷினி 20 ஓட்டங்களையும், அனுஷ்கா சஞ்ஜிவனி 25 ஓட்டங்களை…
-
- 0 replies
- 488 views
-
-
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் தொடக்கத்தில் இருந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற அமெரிக்கா, நேற்று ரியோ ஒலிம்பிக்கில் 4x100 மீட்டர் மகளிர் மெட்லி ரிலே நீச்சல் போட்டியில் வென்ற தங்கத்துடன் சேர்த்து இதுவரை 1000 தங்கப் பதக்கங்களை குவித்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்கில் மட்டும் அமெரிக்கா நேற்றுவரை 23 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் அமெரிக்க நீச்சல் வீரரான மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஒலிம்பிக் ஸ்டாட்ஸ் என்ற இணையதளத்தில் காணப்படும் புள்ளிவிபரங்களின்படி, இதுவரை அமெரிக்கா 977 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளதாக காணப்படுகிற…
-
- 0 replies
- 454 views
-
-
ஒலிம்பிக் விளையாட்டில் பங்கேற்க உங்களுக்கு எத்தனை வயது ஆகியிருக்க வேண்டும்? குதிரைகள் எவ்வாறு குதிரைச்சவாரி நிகழ்வுகளில் பங்கேற்கின்றன?ஒலிம்பிக்ஸ் குறித்து நீங்கள் கேட்க வேண்டும் என்று எண்ணிய கேள்விகளுக்கு எங்களிடம் பதில்கள் உள்ளன. பிற தடகள வீரர்களைப் போல, குதிரைகளும் விமானத்தில் பயணித்து வந்து சேருகின்றன. விமானத்தில் உயர் வகுப்புக்கு இணையான வசதியான முறையில், ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து ரியோ டி ஜெனிரோவிற்கு குதிரைகள் வந்து சேர்ந்தன. விமானத்தில் குதிரைகளுக்கான ஓர் அடைப்பில் இரண்டு குதிரைகள் பயணித்தன. ஆனால் ஓர் அடைப்பில் மூன்று குதிரைகள் பயணிக்க முடியும். தரையில், குதிரைகள் தொழுவ அடைப்பிற்குள் அனுப்பட்டு பின் விமானத்தில் ஏற்றப்படுகின்றன. அந்த குதிரைகள் நின்று கொண்டுதா…
-
- 0 replies
- 526 views
-
-
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா சாதனை 2016-09-13 10:50:22 மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்களா தேஷ் சார்பாக முதலாவது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹமதுக்கு சொந்தமாகியுள்ளது. அயர்லாந்துக்கு எதிராக பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ருமானா ஹட்-ரிக் முறையில் விக்கெட்களை சரித்ததன் மூலம் 10 ஓட்டங்களால் பங்களாதேஷ் வெற்றிபெற்றது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலிரண்டு போட்டிகள் மழையினால் தடைப்பட்டதால் பங்களாதேஷ் 1–0 என தொடரை வென்றது. பங்களாதே…
-
- 0 replies
- 522 views
-
-
பார்முலா 1 கார் பந்தயம்: பிரேசில் பந்தயத்திலும் ஹேமில்டன் வெற்றி பார்முலா 1 கார் பந்தயம் போட்டியின் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹேமில்டன் வெற்றி பெற்றார். சாபாவ்லோ: கார் பந்தய போட்டிகளில் மிகவும் பிரசித்தி பெற்றது ‘பார்முலா-1’ கார்பந்தயம் ஆகும். இந்த ஆண்டுக்கான ‘பார்முலா-1’ கார் பந்தயம் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 20-வது ரவுண்டான பிரேசில் கிராண்ட் பிரீ பந்தயம் சாபாவ்லோ நகரில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து வீரர் லீவிஸ…
-
- 0 replies
- 223 views
-
-
மலிங்க தயாராம் கிரிக்கெட் நிறுவனம் தயாரில்லையாம் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் விளையாடும் வாய்ப்பை இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்க இழந்துள்ளார். மலிங்க இன்னும் முழு உடல் தகுதி பெறாமையே அவர் அணியில் இடம்பெறாததற்கு காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு கடந்த மாதம் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் சீரான பயிற்சியிலும் அவர் ஈடுபடவில்லை. அதன் காரணமாகவே மலிங்கவை அணியில் சேர்த்துக்கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 க…
-
- 0 replies
- 538 views
-
-
வஸிம் அக்ரமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு வக்கார் யூனிஸ் கடும் கண்டனம் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வஸிம் அக்ரம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தை மறுத்திருக்கும் அவரது சக வீரர் வக்கார் யூனிஸ், அது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் பதிவுசெய்திருக்கிறார். 1999ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில், டெல்லி - கோட்லா மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது, இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளரும் தற்போதைய இந்திய அணியின் பயிற்றுவிப்பாளருமான அனில் கும்ப்ளே 74 ஓட்டங்களுக்கு பத்து விக்கட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். இந்த நிகழ்வை நினைவு கூர்ந்திருக்கும் வஸிம் அக்ரம், சர்ச்சைக்குரிய மற்றொரு சம்பவத்தையும் அண்மையில் பதிவ…
-
- 0 replies
- 368 views
-
-
அதிக டக்: 24 முறை அவுட்டாகி பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மர் முதலிடம் 24 முறை டக்அவுட் முறையில் வெளியேறிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன் உமர் அக்மல், அதிக டக் அவுட் ஆன வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இதற்கு முன் கிப்ஸ், தில்ஷன் 23 முறை அவுட்டாகியிருந்தனர். 26 வயதான பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன் உமர் அக்மல். அதிரடியாக விளையாடும் அவர் அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்து வருகிறார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் லாகூ…
-
- 0 replies
- 382 views
-
-
ஆஸ்கர் ஃபிகாரோ: தண்டு வட சிகிச்சையைத் தாண்டி தங்கம் வென்ற ஒலிம்பிக் நாயகனின் கதை கெளதமன் முராரி பிபிசி தமிழுக்காக 29 ஜூலை 2021 பட மூலாதாரம்,GETTY IMAGES 2008 பீய்ஜிங் ஒலிம்பிக்கில் படுதோல்வி, ஒரு முறை கூட எடையை தூக்க முடியாமல் மிக மோசமான செயல்பாடுகளோடு போட்டியில் இருந்து வெளியேற்றம். கடுமையான விமர்சனங்கள், முதுகுத் தண்டில் வலி, மெல்ல செயலிழக்கும் வலது கை, உடல் மீது போர் தொடுக்கும் வயது என தன்னையும், தன் சூழலையும் வென்ற ஒலிம்பிக் நாயகன் ஆஸ்கர் ஃபிகாரோ (Oscar Figueroa) குறித்து பார்க்கப் போகிறோம். நானும் இவர்களோடு சேர்ந்து பயிற்சி பெற விரும்புகிறேன் என சிறுவனாக இருந்த ஆஸ்கர் க…
-
- 0 replies
- 292 views
- 1 follower
-
-
இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான பந்துல வர்ணபுர இன்று, தனது 68 ஆவது வயதில் காலமானார்.உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணிக்கு சர்வதேச டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தபின்னர், அணியின் முதலாவது தலைவராக இவர் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் காலமானார்! – Athavan News
-
- 0 replies
- 617 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணிக்கான இனிப்பு பிஸ்கட் தடையும் ரசிகர்களின் கோபமும்! இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ந்து மோசமான தோல்விகளை சந்தித்து வருவதால் பொறுமையிழந்த ரசிகர்கள் நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியின் முடிவில் தங்கள் எதிர்ப்பை காட்டிவிட்டனர். ஆத்திரமடைந்த ரசிகர்கள் இலங்கை வீரர்கள் சென்ற பஸ்ஸையும் மறித்து 'ஹூ' என கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை காட்டியுள்ளனர். இதேவேளை இலங்கை வீரர்களுக்கு போட்டியின் இடைவேளையின் போது வழங்கப்படும் இனிப்பு பிஸ்கட்டை தடை செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய – இலங்கை அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டி தம்புள்ளையில் நேற்று முன்தினம் பகலிரவு போட…
-
- 0 replies
- 181 views
-
-
ஐபிஎல் ஒப்பந்தத்திற்காக ஆஸ்திரேலிய வீரர்கள் ‘ஸ்லெட்ஜ்’ செய்யவில்லை: சேவாக் அதிரடி சேவாக். - கோப்புப் படம். | கே.பாக்யபிரகாஷ். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-4 என்று ஆஸ்திரேலியா இழந்துள்ள நிலையில், அடுத்த ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் வலுவான ஒப்பந்தங்களை எதிர்நோக்குவதால் ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய வீரர்கள் மீது ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடவில்லை என்று அதிரடி மன்னன் சேவாக் அதிரடி கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “அடுத்த ஆண்டு பெரிய அளவில் ஐபிஎல் ஏலங்கள் உள்ளன, இதனால் அவர்கள் பயந்து விட்டார்கள். இந்திய வீரர்களை அவர்கள் ஸ்லெட்ஜ் அல்ல…
-
- 0 replies
- 355 views
-
-
இரணைமடு ஆதவன் வி.கழக கரப்பந்தாட்ட சுற்றுத் தொடர் கிளிநொச்சி புதிய பாரதி சம்பியன் 2014-09-01 10:26:46 இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழகம் நடத்திய மாபெரும் கரப்பந்தாட்ட தொடரின் வெற்றிக் கிண்ணத்தை புதிய பாரதி அணி கைப்பற்றிக் கொண்டது. கிளிநொச்சி மாவட்ட கரப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்தப்பட்ட இப் போட்டித் தொடரின் இறுதி ஆட்டம் அண்மையில் இரணைமடு ஆதவன் விளையாட்டுக் கழக மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் இளந்தென்றல் அணியும் புதிய பாரதி அணியும் மோதிக் கொண்டன. இரு அணிகளும் தலா ஒவ்வொரு செட்டினை பெற்று சமநிலையில் இருந்தன. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி செட்டில் வெற்றிபெற்று 2:1 என்ற கணக்கில் கிளிநொச்சி புதிய பாரதி அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. …
-
- 0 replies
- 533 views
-