விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7847 topics in this forum
-
சாமுவெல்ஸ் சொல்லும் கண்ணீர் கதை.... தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை வார்னேவுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ். 6-வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது மேற்கிந்திய தீவுகள். இதன் பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பேசிய டேரன் சமி “கடவுளுக்கு நன்றி. நாங்கள் தொடர்ந்து பிராத்தனைக் செய்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் வெற்றி பெறுவோம் என்று யாருமே நம்பவில்லை. எங்கள் கிரிக்கெட் வாரியம் எங்களை அவமதித்தது. ஜெர்ஸி கூட இல்லாமல் தான் நாங்கள் இந்தியா வந்தோம். ஆனால் எங்கள் நாட்டு மக்களுக்காக கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று உறுதி…
-
- 0 replies
- 640 views
-
-
இந்தியாவின் இருபது 20 கிரிக்கெட் ஆட்ட முறைபற்றி மீளாய்வு செய்வது அவசியம் - அணித்தலைவர் எம்.எஸ். தோனி 2016-04-04 10:19:39 தளர்ந்து போயுள்ள தனது இருபது 20 கிரிக்கெட் விளையாட்டை துடிதுடிப்பு மிக்கதாக்குவதற்கு ஆழமாக சிந்திக்க வேண்டிய நிலையில் இந்தியா இருக்கின்றது. இண்டியன் ப்ரீமியர் லீக் மூலம் இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் விறுவிறுப்பையும் பரபரப்பையும் உச்ச நிலைக்கு இட்டுச் சென்றுள்ள இந்தியாவால் சர்வதேச அரங்கில் துணிச்சலுடன் விளையாட முடியாமல் போனதை நேற்றுடன் நிறைவு பெற்ற ஆறாவது உலக இருபது 20 கிரிக்கெட் அத்தியாயம் எடுத்துக்காட்டியது. மேற்கிந்தியத் தீவுகளு…
-
- 0 replies
- 334 views
-
-
'பெண்கள் ஐ.பி.எல் அற்புதமாக இருக்கும்' பெண்களுக்கான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரொன்று ஏற்பாடு செய்யப்படுதல் அற்புதமாக அமையுமென, அவுஸ்திரேலிய பெண்கள் அணித்தலைவி மெக் லனிங் தெரிவித்துள்ளார். இது, பாரிய மாற்றமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார். பெண்களுக்கான பிக் பாஷ் லீக் தொடர் அண்மையில் இடம்பெற்றிருந்த நிலையில், அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. அத்தொடரில், மெல்பேண் ஸ்டார்ஸ் அணித்தலைவியாகச் செயற்பட்ட மெக் லனிங், அத்தொடரின் வெற்றி, கிரிக்கெட்டுக்கு மிகச்சிறப்பானதாக அமைந்ததாகத் தெரிவித்தார். அதேபோல், பெண்கள் சுப்பர் லீக் என்ற பெயரில், தனியான தொடரொன்றை இங்கிலாந்து கிரிக்கெட் சபை ஏற்பாடு செய்யவுள்ளது. …
-
- 0 replies
- 490 views
-
-
இலங்கைக்குக் காத்திருக்கும் சோதனைக் காலம் -கனகலிங்கம் கோபிகிருஷ்ணா உலக இருபதுக்கு-20 தொடர் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. ஆனால், இத்தொடருக்குள் நடப்புச் சம்பியன்களாகக் களமிறங்கிய இலங்கை அணிக்கு, அவ்வணியின் சுப்பர் 10 சுற்றில் ஒரு போட்டி மீதமிருக்கும் போதே, இத்தொடர் முடிவடைந்திருந்தது. இதற்கு முன்னரும் கூட நடப்புச் சம்பியன்களாக இருந்த அணிகள், அடுத்த தொடரில் ஆகக்கூடுதலாக அரையிறுதிவரையே முன்னேறியிருந்தன என்ற வரலாறு இருந்ததோடு, இம்முறை இலங்கை அணி சாதிக்காது என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது. இலங்கை அணியிலும் கிரிக்கெட் சபையிலும் காணப்பட்ட குழப்பங்கள் அவ்வாறு இருந்தன. …
-
- 0 replies
- 389 views
-
-
மெல்பர்ணில் நடைபெற்ற கால்பந்து போட்டி ஒன்றில் இஸ்லாத்துக்கு எதிரான பதாதை ஒன்றைக் காண்பித்த ரசிகர்களுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கமும் ஆஸ்திரேலிய கால்பந்து லீகும் கண்டனம் தெரிவித்துள்ளன.அதிதீவிர வலதுசாரி எதிர்ப்புக் குழுவான ஐக்கிய தேசப்பற்றாளர் முன்னணியினர் " பள்ளிவாசல்களை நிறுத்தவும்" என தமது முத்திரையுடன் எழுத்தப்பட்டிருந்த பதாதையை அவர்கள் காண்பித்திருந்தனர். அந்தப் பதாதை கூறப்பட்டிருந்தது எந்த வகையிலும் "மேலும் விவாதங்களுக்கு வழி வகுக்காது" என ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் ஜுலி பிஷப் கூறியுள்ளார்.விரும்பத்தாக இந்தச் சம்பத்துக்கு பொறுப்பானவர்களை தாம் தடைசெய்வோம் என ஆஸ்திரேலிய கால்பந்து லீக் தெரிவித்துள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=154727&category=W…
-
- 0 replies
- 284 views
-
-
கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் 8-ம் தேதி ஐபிஎல் தொடக்க விழா ஐபிஎல் 9-வது சீசன் போட்டிகள் வரும் 9-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. தொழில்முறை கிரிக்கெட் போட்டியான இந்த தொடரின் தொடக்க விழா வரும் 8-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் இங்கிலாந்தின் பாப் பாடல் இசைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலிவுட் நடிகைகளான கேத்ரினா கைஃப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், நடிகர் ரன்வீர்சிங் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மேலும் டெல்லி பாப் பாடகர் யோ யோ ஹனி சிங்கும் கலந்து கொண்டு பாடுகிறார். சுமா…
-
- 209 replies
- 12.8k views
-
-
பார்சிலோனாவை பழிவாங்கியது ரியல் மாட்ரிட்! ஸ்பெயினின் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகள் நேற்று மோதிய எல் கிளாசிக்கோ போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. கால்பந்து உலகின் மிகப்பெரிய போட்டி என்றால் அது எல் கிளாசிகோ தான். புகழ்பெற்ற இவ்விரு அணிகள் மோதும் இப்போட்டி என்றுமே கால்பந்து ரசிகர்களின் இதயத்துடிப்பைக் கட்டிப்போட்டுவிடும். எம்.எஸ்.என் எனப்படும் மெஸ்ஸி, சுவாரஸ், நெய்மர் கூட்டணிக்கும் பி.பி.சி எனப்படும் பேலே, பென்சிமா, கிறிஸ்டியானோ ரொனால்டோ கூட்டணிக்குமான இந்த யுத்தத்தின் முதல் அத்தியாயத்தை பார்சிலோனா அணி 4-0 என்ற கணக்கில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கேம்ப் நௌ மைதானத்தில் நடந்த இப்போட்டி, மறைந்த முன்னாள் பார்சிலோனா வீரர்…
-
- 1 reply
- 640 views
-
-
இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? இரண்டு ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவி முடிவதையொட்டி, அடுத்த பயிற்சியாளராகப் போவது யார் என்ற மாபெரும் கேள்வி எழுந்துள்ளது. கங்குலி, சச்சின் மற்றும் லக்ஷ்மன் அடங்கிய ஆலோசனைக் குழுவே அடுத்த பயிற்சியாளரை முடிவு செய்யும் என்று பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலாளர் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் அமர்த்தப்படலாம் என்று சில தகவல்கள் கூறினாலும் டிராவிட், வார்னே, ஸ்டீவ் வாக் என்ற சில பெயர்களும் அடிபடுகின்றன. கிரிக்கெட் உலகின் கௌரவமிக்க பதவியான இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு யார் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது? யார் நியமிக்கப்பட்டால் அணி மேம்…
-
- 0 replies
- 507 views
-
-
கையிலிருந்து நழுவியது கோப்பை தோல்வி அதிர்ச்சியில் இந்திய அணி வீரர்கள். லெண்டில் சிம்மன்ஸ் இந்தியா வுக்கு வந்து இறங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. பெரிய அளவில் பயிற்சியோ முன்தயாரிப்போ இல்லாமல் அவர் களம் இறங்கி னார். அவர் இறங்கிய களம் ஒரு விதத்தில் அவரது ‘சொந்த’ஊர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் அவருக்கு மும்பையின் ஆடுகளம் மிகவும் பரிச்சயமானது. அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கிறிஸ் கெய்லும் மார்லன் சாமுவேல்ஸும் விரைவிலேயே ஆட்டமிழந்த பிறகு அணியின் நம்பிக்கையை ஜான்சன் சார்லஸுடன் இணைந்து புதுப்பித்தார் சிம்மன்ஸ். தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே அணியை வெற்றிபெறச்செய்து இறுதி ஆட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அஜிங்க…
-
- 1 reply
- 644 views
-
-
ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து கிரிக்கெட் வீரர் ஓய்வு! நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி அரை இறுதியில் தோல்வி கண்ட சில தினங்களுக்குள் அந்த அணியின் ஆல்-ரவுண்டர் கிராண்ட் எலியாட் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 37 வயதான கிரான்ட் எலியாட் தனது ஒருநாள் போட்டி வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மற்ற வகையான (டெஸ்ட், 20 ஓவர்) போட்டியில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. கடந்த ஒருநாள் உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்து அணி…
-
- 0 replies
- 426 views
-
-
மத்தியின் வர்ண இரவு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 200 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் வழங்கப்படவுள்ள வர்ண இரவு விருதிற்கான விண்ணப்பங்கள் கல்லூரியின் பழைய மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் எஸ்.கே. எழில் வேந்தன் அறிவித்துள்ளார். மத்திய கல்லூரியில் கல்வி கற்று விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வியமைச்சு, இளைஞர் விவகார அமைச்சு, ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்ட தேசிய மட்ட சங்கங்கள் போன்றன நடத்திய தொடர்களில் தேசிய மட்டத்தில் வெற்றியீட்டிய, தேசிய அணியில் இடம் பெற்ற, சர்வதேசப் போட்டிகளில் கலந்து கொண்ட, சர்வதேச போட்டிகளில் வெற்றியீட்டிய பழைய மாணவர்களிடமிருந்தே விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பப் படிவங்களையும் ச…
-
- 0 replies
- 292 views
-
-
ஜடேஜா உலகத்தர ஸ்பின்னர் இல்லை... ஏன்? - ஒரு பார்வை ஜடேஜா, தோனி, பின்னால் அஸ்வின். | கோப்புப் படம். உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி அமையவில்லை. நேற்று அரையிறுதியில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரன் இல்லாத 5 பந்துகள் போக 4 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஆக, 12 பந்துகளில் 34 ரன்கள், சரியாகக் கூறுவதென்றால் 7 பந்துகளில் 34 ரன்கள், ஆனால் டாட் பந்துகளையும் சேர்த்துதான் ஆகவேண்டும் எனவே கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில், இவர் அளவுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடும் மற்ற இடது கை சுழற்…
-
- 0 replies
- 869 views
-
-
மறக்கப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டு வீரர்
-
- 1 reply
- 552 views
-
-
இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்ன் விருப்பம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தன்னை அழைத்தால் நிச்சயம் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வேன் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணியுடன் பணியாற்ற எனக்கு மிகவும் விருப்பம். இந்த அணி திறமை மிக்க அணி, பணியாற்ற மகிழ்ச்சியளிக்கும் அணி. இந்திய வீர்ர்களுக்கு நெருக்கடி அதிகம், கோடிக்கணக்கானோர் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே வாய்ப்பு வந்தால் நான் நிச்சயம் இது பற்றி பரிசீலிப்பேன். என் வாழ்க்கையில் நான் எதையும் இதுவரை மறுத்ததில்லை. இந்திய அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் அல்லது ஐபிஎல் அணியை பயிற்சி செய்வதிலாகட்டும்…
-
- 0 replies
- 435 views
-
-
நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? நிருபரை கலாய்த்த தோனி! உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தவுடன் நிருபர்களை சந்தித்தார் தோனி. முதல் கேள்வியே நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியாக தான் வந்தது. சட்டென்று நிருபரை அழைத்த தோனி "வாங்க வாங்க வாங்க.. இங்க வந்து உட்காருங்க.." தன் அருகில் இருக்கிற நாற்காலியை இழுத்து அந்த நிருபரை அமர சொன்னார். அவரது தோளில் கை போட்டு நான் இந்திய ஊடகத்திலிருந்து ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர் சகோதரனோ, உறவினரோ இந்தியாவுக்காக விளையாட ரெடியாக இருப்பாங்க அதனால் தான் இந்த கேல்வியை கெட்டிருப்பார் என நினைத்தேன் என் ஆரம்பித்தார் கேப்டன் கூல். பின்பு கேள்வி கேட்க …
-
- 0 replies
- 518 views
-
-
கெய்லை சமாளிக்க தயாராகும் ஜெயவர்த்தனே March 31, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்…
-
- 0 replies
- 555 views
-
-
'இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?' பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல…
-
- 0 replies
- 551 views
-
-
அப்போ புறக்கணிச்சாங்க.. இப்போ ஃபீல் பண்றாங்க! ரஹானே, ஷான் மார்ஷ், அஷ்வின், மோரிஸ், பூம்ரா என எண்ணற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் மட்டுமின்றி மோரிஸ், போலிங்கர் போன்று அதிகம் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களின் வாழ்க்கையும் ஐ.பி.எல் லிற்குப் பிறகு மாறியுள்ளது. ஆனால் வெளிச்சத்திலிருந்த எத்தனையோ வீரர்கள், ஐ.பி.எல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. தொடக்கத்தில் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்கள், பின்னர் போன ஏலத்தில் இலங்கை வீரர்கள் என இரு நாடுகளே ஏறக்குறையப் புறக்கணிக்கப்பட்டன. தமீம் இக்பால், பிரெண்டன் டெய்லர், கெவின் ஓ பிரையன…
-
- 0 replies
- 446 views
-
-
ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு உலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்கான் ரசிகர்கள் வீதியிலிறங்கி நாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு நடனமாடி தமது வரவேற்பை வீரர்களுக்கு அளித்தனர். http://www.virakesari.lk/article/4720
-
- 0 replies
- 605 views
-
-
ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் அபாரமான முறையில் ஆடி தொடர்ந்து வெற்றி பெற்றுத் தரும் விராட் கோலி ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியும் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளது. விராட் கோலி நடப்பு ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரில் 4 போட்டிகளில் 184 ரன்களை 92 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 132க்கு சற்று கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் இவர…
-
- 0 replies
- 528 views
-
-
தோனி ஏன் சிறந்த கேப்டன் ? ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று. இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே! சோடை போன பாகிஸ்தான் - இலங்கை : - டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான். இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாக…
-
- 0 replies
- 607 views
-
-
அனுஷ்கா ஷர்மாவை திட்டுபவர்கள் அசிங்கமானவர்கள்: விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலியை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் சிலர் அவரது காதலியான அனுஷ்கா ஷர்மாவை திட்டி தீர்த்தனர். அதற்கு கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அனுஷ்கா ஷர்மா தான் என் பாசிட்டிவ். அவரை திட்டுபவர்களை கண்டு நான் வெட்கப்படுகிறேன். ஏன் இது போன்ற அசிங்கமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள் என ட்விட்டியுள்ளார். சமீபத்தில் கோலிக்கும் அனுஷ்காவுக்கு காதல் முறிந்தது என்ற செய்தி பரவி வந்தது. Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity சுல்தான் பட…
-
- 3 replies
- 501 views
-
-
ஆஸி சிங்கம் வாட்சனை ஏன் மிஸ் செய்கிறோம்? இன்றைய சூழலில் ஷேன் வாட்சன் – சுமார் 14 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கம் வகித்த இப்பெயர் இன்று முன்னாள் வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளது. பேட்டிங், ஸ்பீட் பவுலிங் என இரண்டிலும் சரிசமமாக அசத்தும் ஆல்ரவுன்டர்கள் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட கருதப்படுகின்றனர். கபில் தேவ், இயான் போதம், காலிஸ் வரிசையில் தன்னையும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நிலைநிருத்திக் கொண்ட வாட்சனின் கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே தொடங்கியது. ஜாம்பவான்கள் நிறைந்த ஆஸி அணியில் இடம்பிடித்து, அதை நிலைனிறுத்தி, பின்னர் தானும் ஒரு ஜாம்பவனாய் ஓய்வு பெற்ற வாட்சனின் கிரிக்கெட் பயணம் அபாரமானது. எல்லா கிரிக்கெட் வீரர்களும் ஓய்…
-
- 0 replies
- 677 views
-
-
'கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்': அமீர் ஹுசைனின் கதை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட்அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை. கைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ஆளான அ…
-
- 0 replies
- 522 views
-
-
ஓய்வுக்கு தயாராகும் ஹேரத் March 26, 2016 டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எனது முழுகவனமும் டி20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே. அதேசமயம் இந்த தொடர் முடிந…
-
- 0 replies
- 1.2k views
-