Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. பாடசாலை மட்ட தேசிய பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவிக்கு வெள்ளிப்பதக்கம் பாடசாலை மட்ட தேசிய பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவிக்கு வெள்ளிப்பதக்கம். இலங்கைப் பாடசாலைகள் பளுதூக்கல் சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி மாணவி எஸ்.லயன்சிகா வெள்ளிப்பதக்கம் வென்றார். கண்டி அறநாயக்கா மத்திய கல்லூரியில் இப் போட்டிகள் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றன. 19வயதுக்குட்பட்ட 53 கிலோகிராம் பிரிவில் பங்குபற்றிய இம் மாணவி 90 கிலோகிராம் எடையை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார். இப்பாடசாலை அண்மைக்காலமாக தேசிய மட்ட பளுதூக்கல் போட்டியில் அதிக பதக்கங்களை வென்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. #நிரூஜன் செல்வநாயகம்…

  2. திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி ; மயிரிலையில் ஆஸி தோல்வி நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியுஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியுஸிலாந்து அணி சார்பில் புரூம் 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் கடும் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. ஒரு கட்டத்தில் அ…

  3. ஓய்வை அறிவித்தார் ஷேன் வொற்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 …

  4. இங்கிலாந்து தொடருக்கான இலங்கை டெஸ்ட் அணி இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த மாதம் நான்காம் திகதி இங்கிலாந்து பயணமாகவுள்ளது. அடுத்த மாதம் 19 ஆம் திகதி மூன்று போட்டிகள் அடங்கிய தொடர் ஆரம்பிக்கவுள்ளது. பயிற்சிப் போட்டிகள் எட்டாம் திகதியும், 13 ஆம் திகதியும் ஆரம்பிக்கவுள்ளன. இந்த தொடருக்கான இலங்கை அணி ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இலங்கை அணியின் அண்மைக்கால வீழ்ச்சி மற்றும் இலங்கை கிரிக்கெட் நிர்வாக மாற்றம் என்பன இந்த எதிர்பார்ப்புக்கு காரணங்கள். சரி அவை எவ்வாறு அமைந்தாலும் இந்த அணி பற்றி வீரர்கள் பற்றி அவர்களின் தெரிவுகள் பற்றி இந்தக் கட்டுரை அலசப்போகின்றது. இங்கிலாந்து ஆடுகளங்களுக்கு ஏற்றாற்போல் இந்த அணி தெரிவு …

  5. வார்னர், மிட்செல் மார்ஷ் அபாரம்: நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா 2016 Getty Images நியூஸிலாந்தை 2-வது போட்டியில் வீழ்த்திய பிறகு மார்ஷ்-ஹேஸ்டிங்ஸ். | கெட்டி இமேஜஸ். வெலிங்டனில் நடைபெற்ற 2-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி முதல் ஒருநாள் போட்டியின் படுதோல்விக்கு பழி தீர்த்து தொடரில் 1-1 என்று சமனிலை எய்தியது. முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுக்க, தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா வார்னர் (98), கவாஜா (50), மிட்செல் மார்ஷ் (69) ஆகியோர் அதிரடியில் 46.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டாஸ் வென்ற பிரெண்டன் மெக்கல்லம் முத…

  6. 2018-ம் ஆண்டு உலக கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு ஜெர்மனி, இங்கிலாந்து தகுதி பெற்றன. அடுத்த ஆண்டு (2018) ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் கண்டங்கள் வாரியாக நடந்து வருகிறது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் நேற்று நடந்த போட்டியில் ஜெர்மனி 3-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்தை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில் இங்கிலாந்து 1-0 என்ற கோல் கணக்கில் சுலோவாக்கியாவை வீழ்த்…

  7. நேசத்துடன் இந்தியா செல்கிறோம்: லாகூர் லயன்ஸ் கேப்டன் மொகமது ஹபீஸ் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தானின் லாகூர் லயன்ஸ் அணி வீரர்களுக்கு விசா வழங்கப்பட்டது. இதனையடுத்து கேப்டன் மொகமது ஹபீஸ் தனது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார். லாகூர் லயன்ஸ் அணியில் பாகிஸ்தான் அணிக்கு விளையாடும் உமர் அக்மல், அகமது ஷேஜாத், வஹாப் ரியாஸ், நசீர் ஜாம்ஷேட் ஆகியோர் உள்ளனர். மேலும் அய்ஜாஸ் சீமா என்ற வீரரும் உள்ளார். விசா கிடைத்தது பற்றிய மகிழ்ச்சியைத் தெரிவித்த மொகமது ஹபீஸ், “நாங்கள் நேசம் என்ற செய்தியுடன் இந்தியா செல்கிறோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை அங்கு எவ்வளவு நேசிக்கிறார்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். பாகிஸ்தான் நாட்டின் தூதர்களாக நாங்கள் அங்கு செல்ல…

  8. பாகிஸ்தான் வீரர் நசீர் ஜம்ஷீடுக்கு 10 ஆண்டுகள் தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நசீர் ஜம்ஷீட், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை 10 ஆண்டுகள் போட்டித் தடை விதித்துள்ளது. கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் பாகிஸ்தான் சுப்பர் லீக் (PSL) தொடரின், 2016/17 பருவகாலத்தின் போது, நசீர் ஜம்ஷீட் ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த தண்டனையை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின், ஊழல் எதிர்ப்பு பிரிவு வழங்கியுள்ளது. இதுதொடர்பில் செய்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் ஊழல் தடுப்பு பிரிவு, நசீர் ஜம்ஷீட் …

  9. இலங்கை அணியின் ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் மாலிங்க இலங்கை -பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (26) நடைபெற்ற ஒரு நாள் சர்வதேச போட்டியுடன் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தனது 15 வருடகால சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். இலங்கை அணி சார்பில் தனது இறுதிப் போட்டியில் விளையாடிய லசித் மாலிங்க பங்களாதேஷ் அணியின் 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.dailyceylon.…

    • 0 replies
    • 409 views
  10. கைவிட்டது மே.இந்தியத்தீவுகள்; கைகொடுத்தது இலங்கை வெள்ளிக்கிழமை, 31 ஒக்டோபர் 2014 மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் சபைக்கும் வீரர்களுக்குமிடையேயான சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய கிரிக்கெட் தொடரை கைவிட்டுவிட்டு மேற்கு இந்திய வீரர்கள் நாடு திரும்பிவிட்டனர். இதன் காரணமாக, மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட்டுக்கும் இந்திய‌ கிரிக்கெட்டுக்கும் இடையே பாரிய விரிசல் விழுந்துள்ளது. மேற்கு இந்திய வீரர்கள், இந்தியாவுக்குச் செல்லும் முன்பே சம்பளப் பிரச்சினை உண்டாகியது. தமது எதிர்ப்பைக் காட்டுவதற்காக முதல் நாள் போட்டியில் கறுப்பு பட்டி அணிந்து விளையாடினார்கள். தொடர் முடியும் வரை எதுவிதமான பிரச்சினையும் ஏற்படாது என இந்தியா எதிர்பார்த்தது. நான்காவது ஒருநாள் போட்டி முடிந்ததும், தொடரை…

  11. மற்றைய அணிகளிடமிருந்து இலங்கை பாடம் கற்க வேண்டும் : சங்கக்கார r தற்போது வெற்றிகரமாக அமையாத இலங்கை கிரிக்கெட் அணி குறித்து பலராலும் பலவிதமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான குமார் சங்கக்காரவும் தற்போதைய தனது தாயக அணி தொடர்பான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் ஜாம்பவான்களாகத் திகழும் அனைத்து அணிகளினதும் வரலாற்றை எடுத்துப்பார்க்கும்போது, அனைத்து அணிகளுக்கும் ஒரு மோசமான காலம் காணப்பட்டிருக்கின்றது. அனைத்து நாடுகளும் அந்த மோசமான காலகட்டத்தினை கடந்தே இன்று சாதனை அணிகளாக மாறியுள்ளன. …

  12. நாட்டிங்காம்: உள்ளூர் ‘டுவென்டி–20’ போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், தொடர்ந்து 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். இங்கிலாந்தில் நாட்வெஸ்ட் ‘டுவென்டி–20’ தொடர் நடத்தப்படுகிறது. இதன் லீக் போட்டியில் நாட்டிங்காம்ஷயர், வார்விக் ஷயர் அணிகள் மோதின. வருண் சோப்ரா 80 ரன்கள் விளாச, வார்விக் ஷயர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹேல்ஸ் அபாரம்: பின் களமிறங்கிய நாட்டிங்காம்ஷயர் அணிக்கு வெசல்ஸ் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடி காட்டிய ஹேல்ஸ், ரான்கின் வீசிய 11வது ஓவரின் கடைசி 3 பந்தில் சிக்சர் விளாசினார். பின் ஜாவித் வீசிய அடுத்த ஓவரில் தான் சந்தித்த 3 பந்திலும் வரிசையாக சிக்சர் அடித்தார்…

  13. தீப்பொறி பறக்கும் பார்மில் இருக்கும் ஃபகார் ஜமானை வீழ்த்துவது எப்படி? - இந்திய பவுலர்களுக்கு மைக் ஹஸ்ஸி ஆலோசனை பாகிஸ்தான் சரவெடி வீரர் ஃபகார் ஜமான். | ஏ.பி. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியப் பந்து வீச்சைப் புரட்டி எடுத்து 106 பந்துகளில் 114 ரன்கள் விளாசி வெற்றிக்கு முக்கியமாகத் திகழ்ந்த ஃபகார் ஜமான் சமீபத்தில் தீப்பொறி பறக்கும் பார்மில் இருந்து வருகிறார், ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடித்ததோடு பல ஒருநாள் சாதனைகளை அந்தத் தொடரில் முறியடித்துள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இவரைக் கட்டுப்…

  14. ஆஸ்திரேலியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தைத் தக்கவைக்கப் போராடி வரும் ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீர்ர்களில் அதிகம் பணம் ஈட்டுபவராக உள்ளார், 2014ஆம் ஆண்டுக்கான பி.ஆர்.டபிள்யூ.வின் டாப் 50 பணக்கார ஆஸ்திரேலிய விளையாட்டு வீரர்களின் பட்டியலில் ஷேன் வாட்சன் 8-வது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் மிட்செல் ஜான்சன் 10-வது இடத்திலும், கேப்டன் மைக்கேல் கிளார்க் 11-வது இடத்திலும், டேவிட் வார்னர் 12-வது இடத்திலும் உள்ளனர். ஷேன் வாட்சன் கடந்த ஆண்டு ஈட்டிய தொகை 4.5 மில்லியன் டாலர்கள். மிட்செல் ஜான்சன் 4.1 மில்லியன் டாலர்களையும், மைக்கேல் கிளார்க் 4 மில்லியன் டாலர்களையும் ஈட்டியுள்ளனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலிய கூ…

  15. 13 JUL, 2024 | 12:08 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) பெண்களுக்கான உயரம் பாய்தலில் 37 வருட காலமாக இருந்து வந்த உலக சாதனையை 22 வயதான உக்ரைனின் யரோஸ்லாவா மஹுச்சிக் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார். உக்‍ரைனின் உயரம் பாய்தல் வீராங்கனையான யரோஸ்லாவா மஹுச்சிக்,பாரிஸ் டயமண்ட் லீக்கின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் 2.10 மீற்றர் உயரம் பாய்ந்து புதி உலக சாதனையை படைத்தார். கடந்த 1987 இல் இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்ற தடகள போட்டியின் பெண்களுக்கான உயரம் பாய்தலில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஸ்டெப்க்கா கொஸ்ட்டாடினோவா (Stefka Kostadinova) 2.09 மீற்றர் உயரம் பாய்ந்து உலக சாதனை நிகழ்த்தியிருந்தார். இந்நிலையில்,…

  16. செல்சி தோல்வி எஃப்.ஏ கிண்ண காலிறுதிப் போட்டியொன்றில் எவெர்ற்றனும் செல்சியும் மோதிய நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்ற எவெர்ற்றன், எஃப்.ஏ கிண்ண அரையிறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இப்போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் செல்சியை எவெர்ற்றன் தோற்கடித்திருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் செல்சியின் முன்னாள் வீரரான ரொமேலு லூகாகு என்பவரே பெற்றிருந்தார். இப்போட்டி முடிவினைக் காட்டிலும் இப்போட்டியின் கவனத்தை சர்ச்சைக்குரிய வீரரான செல்சியின் டியகோ கோஸ்டாவே கவனத்தை ஈர்த்திருந்தார். போட்டியின் 84ஆவது நிமிடத்தில் எவெர்ற்றனின் கரித் பரியுடன் முரண்பட்டுக் கொண்டமைக்காக ம…

  17. மதி மயங்கியது ஏனோ ஸ்டீவ் ஸ்மித் ? ஸ்டீவ் ஸ்மித் - Getty Images மீண்டும் ஒரு முறை ஸ்டீவ் ஸ்மித்துக்கு மதி மயங்கியுள்ளது. ஜென்டில்மேன் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் சரியாக திட்டமிட்டு ஏமாற்றி, மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது செயலால் ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய தேசத்துக்கும் தலைக்குனிவை ஏற்படுத்தி உள்ளார் ஸ்மித். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது, ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது கேமராவில் பதிவானது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துவிடக்கூடாது என தாமாகவே முன்வந்து, ரிவர்ஸ் ஸ்விங் வீசு…

  18. டென்னிஸ் மைதானத்தில் முத்தத்துக்கு போட்டிபோட்ட ஜோகோவிச்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வீரர்கள் ஜோகோவிச், ரிச்சர்டுக்கு இளம் ரசிகைகள் முத்தம் கொடுத்து மைதானத்தையே அதிர வைத்தனர். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஸ்டோக் பார்க்கில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சுடன், பிரான்ஸ் வீரர் ரிச்சர்டு மோதினார். போட்டி நடைபெற்று கொண்டிருந்தபோது ஜோகோவிச் திடீரென தனது சட்டையை பார்வையாளர் மாடத்தில் இருந்த இளம் ரசிகை ஒருவரிடம் வீசினார். அதை பார்த்த வீரர் ரிச்சர்டு பதிலுக்கு தனது சட்டையை கழற்றி மற்றொரு இளம் ரசிகையிடம் கொடுத்தார். பதிலுக்கு அ…

  19. சதுரங்கத்தில் மட்டுமன்றி கராத்தேயிலும் சளைக்காத ஹரிகிஷன் இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகள் பலவற்றிலும் நடைபெற்ற சதுரங்க போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்திய, சாம்பியன் பட்டங்களையும் பதக்கங்கiயும் சான்றிதழ்களையும் தம்வசப்படுத்திய கண்டி, புனித திருத்துவ கல்ல}ரியில் 6ஆம் தரத்தில் பயிலும் மாணவனான கிருபாகர் ஹரிகிஷன், கராத்தேயிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை சோடோகன் கராத்தே கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 8ஆவது தேசிய கராத்தே சம்பியன் கிண்ண போட்டி, கொழும்பு, சுகததாச உள்ளக அரங்கில் கடந்த 14ஆம் திகதி நடைபெற்றது. இரண்டரை வயது முதல் சதுரங்கத்தில் தன்னுடைய திறமையை காண்பித்துவரும் இவர், போலந்து, இந்தியா, ரஷ்யா மற்ற…

  20. ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி By Mohamed Azarudeen - நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி, இந்தியான் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரி என இரண்டு பதவிகளில் செயற்படவுள்ளார். இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இஸ் சோதி, ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சாய்ராஜ் பஹதுலே மற்றும் தலைமை செயற்பாட்டு நிர்வாகி ஜெக் லஸ் மெக்ரம் ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார். இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், ஐ…

    • 0 replies
    • 408 views
  21. வில்லியர்ஸ்தான் வில்லன் November 22, 2015 தான் சந்தித்ததில் மிகவும் கடினமான துடுப்பாட்ட வீரர் என்றால் அது தென்னாபிரிக்காவின் வில்லியர்ஸ்தான் என்று தெரிவித்துள்ளார் ஜோன்சன். நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் ஆட்டத்துடன் சர்வதேச ஆட்டங்களில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் ஜோன்சன். ஓய்வின் பின்னர் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த சில சுவாரஷ்யமான விடயங்களை அவர் பகிர்ந்துள்ளார். இதன்படி தனக்கு சவாலான வீரராக வில்லியர்ஸை குறிப்பிட்டுள்ளார். வில்லியர்ஸ் தொடர்பாக ஜோன்சன் குறிப்பிடுகையில் – ‘2012ஆம் ஆண்டு சென்சூரியன் நகரில் நடந்த ஆட்டம் எனக்கு நினைவுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் சில இலக்குகளை வீழ்த்தி, கம்பீரமாக வலம் வந்தேன். அப்போது கள…

  22. எனது நீண்ட நாள் கனவு நனவாகியது – திசர பெரேரா தேசிய அணிக்கு தலைவராவது தனது நீண்ட நாள் கனவு எனவும், இலங்கை டி T20 அணியின் தலைவராக தான் நியமிக்கப்பட்டது தொடர்பில் பெருமையடைவதாக இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் திசர பெரேரா தெரிவித்துள்ளார். அனைத்து வீரர்களுக்கும் தலைமைப் பதவி என்பது ஒரு கனவாகும். அதே போன்று இதுவும் எனது நீண்ட நாள் கனவு என இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 26ஆம் திக…

  23. மைலோ பாடசாலைகள் வர்ண விருது விழா இன்று வட பகுதி மாணவர்கள் ஐவருக்கு விருதுகள் (நெவில் அன்தனி) கல்வி அமைச்சு, இலங்கை பாடசாலைகள், விளையாட்டுத்துறைப் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 24ஆவது இலங்கை பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழா பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00 மணி முதல் நடைபெறவுள்ளது. நெஸ்ட்லே லங்கா லிமிட்டட் 24ஆவது வருடமாக பாடசாலைகள் மைலோ வர்ண விருது விழாவுக்கு அனுசரணை வழங்குகின்றது. இலங்கை சார்பாக சர்வதேச அரங்கில் கடந்த வருடம் பங்குபற்றியவர்கள், பதக்கங்கள் வென்ற பாடசாலை மாணவர்களுக்கு மைலோ வர்ண விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. …

  24. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென் கொரியாவில் தொடக்கம்: 92 நாடுகளை சேர்ந்த 3 ஆயிரம் வீரர்கள் பங்கேற்பு குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென் கொரியாவில் நாளை கேலாகலமாக தொடங்குகிறது. தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கேலாகலமான தொடக்க விழாவுடன் நாளை தொடங்குகின்றன. 23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தென் கொரியாவுடன், தீவிர பகை நாடான வட கொரியாவும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சிகள் நாளை நடைபெற்றாலும் ஒருசில பிரிவுகளில்…

  25. ஒருநாள் அணியில் அஸ்வின், ஜடேஜா இடம்பெறாததற்கு இதுதான் காரணம்: தேர்வுக்குழுத் தலைவர் விளக்கம்! சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அஸ்வினும் ஜடேஜாவும் பந்துவீசியதை அவர்களை அணியிலிருந்து நீக்கவில்லை என தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத் பேட்டியளித்துள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு இந்திய ஒருநாள், டி20 அணிகளில் இடம் அளிக்கப்படுவதில்லை. இளம் சுழற்பந்து வீச்சாளர்களான, மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் ஆகியோர் சிறப்பாக ஆடி வருவதால் இனி அஸ்வின், ஜடேஜாவுக்கு ஒருநாள், டி20 அணிகளில் வாய்ப்பு கிடைப்பது கடினம் என தெரிகிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.