Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்திய அணியின் பயிற்சியாளராக ஷேன் வார்ன் விருப்பம் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக தன்னை அழைத்தால் நிச்சயம் அந்தப் பணியை ஏற்றுக் கொள்வேன் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய அணியுடன் பணியாற்ற எனக்கு மிகவும் விருப்பம். இந்த அணி திறமை மிக்க அணி, பணியாற்ற மகிழ்ச்சியளிக்கும் அணி. இந்திய வீர்ர்களுக்கு நெருக்கடி அதிகம், கோடிக்கணக்கானோர் இந்திய அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே வாய்ப்பு வந்தால் நான் நிச்சயம் இது பற்றி பரிசீலிப்பேன். என் வாழ்க்கையில் நான் எதையும் இதுவரை மறுத்ததில்லை. இந்திய அணியை பயிற்சி செய்வதிலாகட்டும் அல்லது ஐபிஎல் அணியை பயிற்சி செய்வதிலாகட்டும்…

  2. நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? நிருபரை கலாய்த்த தோனி! உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்தவுடன் நிருபர்களை சந்தித்தார் தோனி. முதல் கேள்வியே நீங்கள் எப்போது ஓய்வு பெறுவீர்கள் என்ற கேள்வியாக தான் வந்தது. சட்டென்று நிருபரை அழைத்த தோனி "வாங்க வாங்க வாங்க.. இங்க வந்து உட்காருங்க.." தன் அருகில் இருக்கிற நாற்காலியை இழுத்து அந்த நிருபரை அமர சொன்னார். அவரது தோளில் கை போட்டு நான் இந்திய ஊடகத்திலிருந்து ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருப்பார் என்று நினைத்தேன். ஏனென்றால் அவர் சகோதரனோ, உறவினரோ இந்தியாவுக்காக விளையாட ரெடியாக இருப்பாங்க அதனால் தான் இந்த கேல்வியை கெட்டிருப்பார் என நினைத்தேன் என் ஆரம்பித்தார் கேப்டன் கூல். பின்பு கேள்வி கேட்க …

  3. கெய்லை சமாளிக்க தயாராகும் ஜெயவர்த்தனே March 31, 2016 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே இங்கிலாந்தின் கிளப் அணியான சோமர்செட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஜெயவர்த்தனே பிற நாடுகளில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். ஐபிஎல், பிக் பாஷ், நாட்வெஸ்ட் தொடரில் விளையாடிய ஜெயவர்த்தனே தற்போது இங்கிலாந்தின் கவுண்டி அணியான சோமர்செட்டில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அந்த அணியில் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ரோஜர்ஸ் (அவுஸ்திரேலியா), கிறிஸ் கெய்ல் (மேற்கிந்திய தீவுகள்) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து அதிரடி காட்ட தயாராகி வருகிறார் ஜெயவர்த்…

  4.  'இரகசிய அறிக்கை கசிந்தது எவ்வாறு?' பாகிஸ்தான் அணியின் அண்மைக்காலப் பெறுபேறுகள் தொடர்பாகவும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், அவ்வணியின் பயிற்றுநர் வக்கார் யுனிஸால் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்கு அனுப்பப்பட்ட இரகசியமானதும் தனிப்பட்டதுமான அறிக்கை, ஊடகங்களுக்கு எவ்வாறு கிடைத்தது என, வக்கார் யுனிஸ் கேள்வியெழுப்பியுள்ளார். குறித்த அறிக்கை, பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவரிடமும் நேரடியாகச் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அது எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றது எனவும் இது குறித்து பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப், கவனமெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை விட அதிகமாக அரசியல…

  5. அப்போ புறக்கணிச்சாங்க.. இப்போ ஃபீல் பண்றாங்க! ரஹானே, ஷான் மார்ஷ், அஷ்வின், மோரிஸ், பூம்ரா என எண்ணற்ற கிரிக்கெட் நட்சத்திரங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு பெரும் பங்குண்டு. ஒவ்வொரு தொடரிலும் இந்திய வீரர்கள் மட்டுமின்றி மோரிஸ், போலிங்கர் போன்று அதிகம் அறியப்படாத வெளிநாட்டு வீரர்களின் வாழ்க்கையும் ஐ.பி.எல் லிற்குப் பிறகு மாறியுள்ளது. ஆனால் வெளிச்சத்திலிருந்த எத்தனையோ வீரர்கள், ஐ.பி.எல் அணிகளால் புறக்கணிக்கப்பட்ட சோகமும் நிகழ்ந்துள்ளது. தொடக்கத்தில் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தான் வீரர்கள், பின்னர் போன ஏலத்தில் இலங்கை வீரர்கள் என இரு நாடுகளே ஏறக்குறையப் புறக்கணிக்கப்பட்டன. தமீம் இக்பால், பிரெண்டன் டெய்லர், கெவின் ஓ பிரையன…

  6. ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பு உலகக் கிண்ண இருபதுக்கு -20 கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியை வரலாற்று வெற்றிகொண்டு தாயகம் திரும்பிய ஆப்கான் அணிக்கு அந்நாட்டில் பலத்த வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆப்கான் ரசிகர்கள் வீதியிலிறங்கி நாட்டுக் கொடிகளை ஏந்தியவாறு நடனமாடி தமது வரவேற்பை வீரர்களுக்கு அளித்தனர். http://www.virakesari.lk/article/4720

  7. அனுஷ்கா ஷர்மாவை திட்டுபவர்கள் அசிங்கமானவர்கள்: விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக ஆடி இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலியை ஒரு பக்கம் வாழ்த்தினாலும் சிலர் அவரது காதலியான அனுஷ்கா ஷர்மாவை திட்டி தீர்த்தனர். அதற்கு கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அனுஷ்கா ஷர்மா தான் என் பாசிட்டிவ். அவரை திட்டுபவர்களை கண்டு நான் வெட்கப்படுகிறேன். ஏன் இது போன்ற அசிங்கமான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறீர்கள் என ட்விட்டியுள்ளார். சமீபத்தில் கோலிக்கும் அனுஷ்காவுக்கு காதல் முறிந்தது என்ற செய்தி பரவி வந்தது. Shame on people for trolling @AnushkaSharma non-stop. Have some compassion. She has always only given me positivity சுல்தான் பட…

  8. ஐசிசி டி20 கிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார் ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் விராட் கோலி முதலிடம். | படம்: ராய்ட்டர்ஸ். உலகக்கோப்பை டி20 கிரிக்கெட்டில் அபாரமான முறையில் ஆடி தொடர்ந்து வெற்றி பெற்றுத் தரும் விராட் கோலி ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியும் நம்பர் 1 இடத்தைத் தக்கவைத்துள்ளது. விராட் கோலி நடப்பு ஐசிசி உலகக்கோப்பை டி20 தொடரில் 4 போட்டிகளில் 184 ரன்களை 92 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார் என்பதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட் 132க்கு சற்று கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடக்க வீரர் ஏரோன் பிஞ்ச் இவர…

  9. தோனி ஏன் சிறந்த கேப்டன் ? ஜிலீர் திரில்லுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது சூப்பர் 10 சுற்று. இந்தியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதியில் மல்லுகட்டவுள்ளன. சூப்பர் 10 சுற்றில் பல போட்டிகளில் பிபி எகிறவைத்தன. அரையிறுதி போட்டிகள் வரும் புதன் கிழமை முதல் தொடங்கவுள்ளது. சூப்பர் 10 இல் என்ன நடந்தது என ஒரு ஷார்ட் அலசல் பார்வை இங்கே! சோடை போன பாகிஸ்தான் - இலங்கை : - டி20 உலககோப்பை வரலாற்றில் அதிக முறை அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள் இவ்விரண்டும் தான். இரண்டு அணிகளும் சுழற்பந்தை சிறப்பாக கையாளகூடியவர்கள். ஆனால் பாகிஸ்தான், இலங்கை இரண்டு அணிகளுமே அரையிறுதிக்கு இம்முறை தகுதி பெறவில்லை. வங்கதேசத்தை அபாரமாக வீழ்த்திய பாக…

  10. ஆஸி சிங்கம் வாட்சனை ஏன் மிஸ் செய்கிறோம்? இன்றைய சூழலில் ஷேன் வாட்சன் – சுமார் 14 ஆண்டு காலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் முக்கிய அங்கம் வகித்த இப்பெயர் இன்று முன்னாள் வீரர்கள் வரிசையில் இணைந்துள்ளது. பேட்டிங், ஸ்பீட் பவுலிங் என இரண்டிலும் சரிசமமாக அசத்தும் ஆல்ரவுன்டர்கள் கிரிக்கெட்டின் தனித்தன்மை கொண்ட‌ கருதப்படுகின்றனர். கபில் தேவ், இயான் போதம், காலிஸ் வரிசையில் தன்னையும் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக நிலைநிருத்திக் கொண்ட வாட்சனின் கிரிக்கெட் பயணம் சற்று கடினமாகவே தொடங்கியது. ஜாம்பவான்கள் நிறைந்த ஆஸி அணியில் இடம்பிடித்து, அதை நிலைனிறுத்தி, பின்னர் தானும் ஒரு ஜாம்பவனாய் ஓய்வு பெற்ற வாட்சனின் கிரிக்கெட் பயணம் அபாரமானது. எல்லா கிரிக்கெட் வீரர்களும் ஓய்…

  11. 'கைகள் இல்லாத கிரிக்கெட் வீரன்': அமீர் ஹுசைனின் கதை உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக உள்ளனர். ஆனால் கைகளே இல்லாமல், ஒரு கிரிக்கெட்அணியின் தலைவராக பரிமளிப்பவர் தான் அமீர் ஹுசைன். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளின் கிர்க்கெட் அணிக்குத் தான் அவர் தலைவர். எட்டு வயதில் வீட்டில் இருந்த மரமறுக்கும் இயந்திரத்தில் சிக்கி ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் அமீர் ஹுசைன் இழந்தாலும் உறுதியை இழக்கவில்லை. கைகள் இல்லாமல் அண்டை-அயலாரின் பரிகாசங்களுக்கு ஆளான அ…

  12. ஓய்வுக்கு தயாராகும் ஹேரத் March 26, 2016 டி20 உலகக்கிண்ண தொடர் முடிந்த உடன் ஓய்வு பற்றிய முடிவை எடுக்க உள்ளதாக இலங்கை அணியின் முன்னணி சுழல் வீரர் ரங்கண ஹேரத் தெரிவித்துள்ளார். தற்போதைய இலங்கை அணி அனுபவமற்ற இளம் வீரர்களால் தடுமாறி வருகிறது. இலங்கை அணியின் இரு தூண்களாக விளங்கிய சங்கக்காரா, ஜெயவர்த்தனே ஆகியோரின் ஓய்வையே இன்னும் சரிகட்டவில்லை. இந்நிலையில் இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீரரான ரங்கண ஹேரத் (38 வயது) ஓய்வு பெறும் முடிவில் இருக்கிறார். அவர் கூறுகையில், “நான் ஒரு சில விடயங்களை கண்டிப்பாக கருத்தில் கொள்ள வேண்டும். இப்போதைக்கு எனது முழுகவனமும் டி20 உலகக்கிண்ணத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே. அதேசமயம் இந்த தொடர் முடிந…

  13. கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம் நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று தனது 68 ஆவது வயதிதில் மரணம் அடைந்தார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை 3 முறை பெற்றவர் ஜோஹன் கிரப். இவரது தலைமையிலான நெதர்லாந்து அணி 1974 ஆம் ஆண்டு உலக கோப்பையில் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறி இருந்தது. http://www.virakesari.lk/article/4540

  14. மாடல் அழகியை துரத்தும் ஹர்திக் பாண்ட்யா இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரராக உருவெடுத்துள்ளார் இளம் வீரரான ஹர்திக் பாண்ட்யா. பங்களாதேஷ் அணிக்கு எதிரான உலகக் கிண்ணத் தொடரின் லீக் ஆட்டத்தில் இறுதி ஓவரை பாண்ட்யா அற்புதமாக வீசினார். இதனால் இந்தியா ஒரு ஓட்டத்தால் ‘திரில்’ வெற்றி பெற்றது. நாங்கள் வகுத்த திட்டத்தை ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்படுத்தி இறுதி பந்தை வீசினார் டோனியும் பாண்ட்யாவை பாராட்டினார். அந்த நெருக்கடியான நேரத்திலும் சிரித்த முகத்தோடு எதையும் காட்டிக் கொள்ளாமல் அவர் சிறப்பாக பந்துவீசியதை அனைவரும் பாராட்டினர். இந்நிலையில் கிரிக்கெட் மூலம் பிரபலமாகத் தொடங்கிவிட்டதால், பாண்ட்யா கொ…

  15. ஓய்வை அறிவித்தார் ஷேன் வொற்சன் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷோன் வொற்சன், சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். தற்போது இடம்பெறும் உலக இருபதுக்கு-20 தொடரின் முடிவிலேயே ஓய்வுபெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். கடந்தாண்டு இடம்பெற்ற ஆஷஸ் தொடரின் முடிவில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஷேன் வொற்சன், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடுவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தார். எனினும், ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில், கடந்தாண்டு செப்டெம்பருக்குப் பின்னர், அவர் பங்குபற்றியிருக்கவில்லை. இந்நிலையிலேயே, உலக இருபதுக்கு-20 …

  16. பூரண அங்கத்துவ நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் தரவேண்டும் என்கிறார் ஆப்கான் அணித்தலைவர் 2016-03-24 09:45:58 இணை உறுப்பு நாடு­க­ளுக்கு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் கூடுதல் வாய்ப்பு வழங்­குமாறு கிரிக்கெட் விற்­பனர்­க­ளான சச்சின் டெண்­டுல்கர், பிறையன் லாரா, மைக்கல் வோன் ஆகியோர் குரல் கொடுத்­தி­ருப்­பது தங்­களை நெகி­ழ­ வைத்­துள்­ள­தாக ஆப்­கா­னிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையில் பூரண அந்­தஸ்து வகிக்கும் எந்­த­வொரு நாட்­டையும் வெற்­றி­கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை தங்­க­ளுக்கு இருப்­ப­தா­கவும் அவர் கூறினார். ஆப்…

  17. தஸ்கீன் அஹ்மதுக்கு தொடர்ந்தும் தடை! சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவிப்பு (டெல்­லி­யி­லி­ருந்து நெவில் அன்­தனி) சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டி­களில் பங்­க­ளாதேஷ் சுழல்­பந்­து­வீச்­சாளர் தஸ்கின் அஹ­மத்­துக்கு பந்­து­வீச விதிக்­கப்­பட்­டுள்ள தடை அவ்­வாறே அமுலில் இருக்கும் என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று அறி­வித்­தது. தஸ்கின் அஹ்மத் மீதான பந்­து­வீச்சுப் பாணி தொடர்­பாக தொலை­பேசி மூலம் விசா­ரணை ஆணை­யாளர் நடத்­திய விசா­ர­ணையின் மூலம் தஸ்­கினின் பந்­து­வீச்­சுப்­பாணி (பெரும்­பா­லா­னவை) தவ­றா­னது என்­பது ஊர்­ஜி­தப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக சர்­வதேச கிரிக்கெட் பேரவை தெரி­வித்­தது.…

  18. தோனியின் தலை வெட்டப்பட்டது - ரசிகர்களின் பதிலடி! (காணொளி) சமீபத்தில் நடந்த ஆசிய கிண்ண இறுதி போட்டிக்கு முன்பாக இந்திய அணி தலைவர் தோனியின் வெட்டப்பட்ட தலையுடன் பங்காளதேஷ் பந்துவீச்சாளர் தஸ்கின் ஓடிவருவது போன்று ஒரு போட்டோவை மார்பிங் செய்து வெளியிட்டார்கள் பங்காளதேஷ் ரசிகர்கள். இந்த மார்பிங் போட்டோ இந்திய ரசிகர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது நடந்துவரும் டி20 உலக கிண்ண தொடரில் இன்று பங்காளதேஷூம் இந்தியாவும் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு முன்பாக பங்களதேஷ் ரசிகர்களை கலாய்த்து இந்திய ரசிகள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவனாது தற்போது வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் போட்டோஷாப் வைத்திருக்கும் இந்திய …

  19. அதிக விக்கெட்டுக்களை பெற்று அப்ரிடி சாதனை! கடந்த போட்டியில் பாகிஸ்தான் தலைவனும், சுழற்பந்து வீச்சாளருமான அப்ரிடி 4 ஓவர்கள் பந்து வீசி 40 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 20 ஓவர் உலக கிண்ணத்தில் அவரது விக்கெட் எண்ணிக்கை 39-ஆக (33 போட்டி) உயர்ந்தது. இதையடுத்து 20 ஓவர் உலக கிணண கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை இலங்கையின் மலிங்கவிடம் இருந்து (38 விக்கெட், 31 போட்டி) தட்டிப்பறித்தார். 36 வயதான அப்ரிடி ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டிலும் 97 விக்கெட்டுகளுடன் (97 போட்டி) முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=78297

  20. வங்கதேச வீச்சாளர்கள் தஸ்கின் அகமட், அராபத் சன்னி பந்து வீசத் தடை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோர் முறைதவறிய பந்துவீச்சிற்காக ஐசிசி-யால் தடை செய்யப்பட்டனர். இருவர் பந்து வீச்சு மீதும் ‘த்ரோ’ புகார் எழுந்ததையடுத்து சென்னையில் இருவரது பந்துவீச்சின் மீதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவரது வீச்சும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் பந்து வீச இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பந்துவீச்சு முறையை சீர் செய்து கொண்டு மறுஆய்வுக்கு முறையிடலாம். மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் இவர்கள் இருவரும் வங்கதேச உள்நாட்டு கிரி…

  21. அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்ப்டுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகாரியார் கான் கூறியுள்ளார். இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷகாரியார் கான் கூறுகையில், டி20 உலகக்கிண்ணத்தோடு தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதை அப்ரிடி புரிந்துக்கொண்டுள்ளார். அவர் பதவி விலகாத பட்சத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். மேலும், அவர் ஒரு வீரராக மட்டும் அணியில் நீடிக்க விரும்பினால், அவரை தேர்வு செய்வதா வேண்டாமா என்பது பற்றி பிறகு முடிவு செய்யப்படும். அதேபோல் பயிற்சியாள…

  22. இந்தியா- பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் ரூ.30 லட்சம் செலவு செய்தார்: மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் தகவல் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது தேசிய கீதம் பாடிய அமிதாப் பச்சன். கொல்கத்தாவில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண அமிதாப் பச்சன் தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.30 லட்சம் செலவு செய்ததாக மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் போது அமிதாப் தேசிய கீதம் பாட ரூ.4 கோடி வாங்கியதாக எழுந்த புகாரையும் கங்குலி திட்டவட்டமாக மறுத்தார். டி 20 உலகக் கோப்பையில் கடந்த 19ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்க…

  23. ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் உசேன் போல்ட் ஓய்வு 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற உசேன் போல்ட். படம்:ஏஎப்பி ரியோ ஒலிம்பிக் போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக ஜமைக்காவின் ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்ற பின்னர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக உசேன் போல்ட் தெரிவித்துள்ளார். 6 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற உசேன்போல்ட் முன்னதாக 2020-ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறுவேன் எனக் கூறியிருந்தார். அவரது பயிற்சியாளர் கிளென் மில்ஸின் அ…

  24. இந்தியா vs பாகிஸ்தான் - தொடரும் வரலாறு! சுதந்திரம் வாங்கிய காலத்தில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் எதிரும் புதிருமாகவே இருக்கிறது. உடன்பாட்டை மீறி நம் நாட்டின் எல்லைக்குள் நுழைவது, மக்களைத் துன்புறுத்துவது போன்ற கொடூர செயல்களைக் காலம்காலமாக செய்து வருவதோடு, தீவிரவாதத்தையும் ஊக்குவிக்கிறது பாகிஸ்தான். என்னதான் இந்தியாவைத் தோற்கடிக்க பலமுறை முயற்சித்தாலும், இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பைக் கிரிக்கெட் ஆட்டத்தில், 1992 முதல் வெற்றியை இந்தியா மட்டுமே உரித்தாக்குகிறது. இந்த ஆண்டும் அவ்வாறு நடந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. மேலும், ஈடன் கார்டனில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த 4 ஆட்டத்திலும், தொடர்ந்து வெற்றியைத் தனதாக்கியிருந்தது பாகிஸ்தான். அந்த சாதனையும் தற…

  25. கத்தார் உலகக்கோப்பை ரசிகர்கள் பலர் கூடாரங்களில் தங்க வேண்டிவரும் ! கத்தாரில் வரும் 2022ம் ஆண்டு நடக்கவிருக்கும் உலக்கோப்பை கால்பந்து போட்டியைக் காணவரும் ரசிகர்கள் பாலைவனங்களில் பெதுவான் இனப்பழங்குடியினர் தங்கும் கூடாரங்கள் போன்ற கூடாரங்களில் தங்கவேண்டிவரும். கத்தார் உலகக் கோப்பையில் இருப்பிட நெருக்கடி ; கூடாரங்கள் தீர்வாக அமையும் ! உலகக் கால்பந்து சங்கமான, ஃபிஃபாவினால் கோரப்படும் சுமார் 60,000 அறைகளை கத்தாரால் தரமுடியாத அளவுக்கு, தற்போதைய கட்டுமான வேலைகளின் முன்னேற்றம் காணப்படும் நிலையில், இந்த யோசனையை , போட்டி ஏற்பாட்டாளர்கள் தீவிரமாகப் பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூடாரங்களை அமைக்கும் யோசனை, ஃபிஃபாவின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய, ஒரு ஆ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.