விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இந்திய அணியால் அப்ரிடி நடந்த கொடுமை! பாகிஸ்தான் டி20 அணி தலைவர் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளது. உலகக் கிண்ண போட்டியில் இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோற்றதால் அப்ரிடியின் பதவிக்கு ஆபத்து வந்துள்ளதாம். அவரை பதவியிலிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்ரிடியின் செயல்பாடுகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியததிற்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளதாம். குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றதை அது ரசிக்கவில்லையாம். மேலும் இந்தியாவில் விளையாடும்போது எனக்கும், எனது அணி வீரர்களுக்கும் பாகிஸ்தானில் கிடைப்பதை விட அதிக அன்பு கிடைப்பதாக அப்ரிடி கூறியதையும் பாகிஸ்தான் கிரி்க்கெட் வாரியம்…
-
- 0 replies
- 542 views
-
-
எனது பங்கு பெரிதளவல்ல: மஹேல தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில், அவ்வணியால் விதிக்கப்பட்ட 230 என்ற இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, அவ்விலக்கை அடைந்திருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் குறித்து மஹேல ஜெயவர்தன, சிறப்பான பாராட்டை வழங்கியுள்ளார். இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராகச் செயற்பட்டுவரும் மஹேல ஜெயவர்தன, இங்கிலாந்து அணிக்கு அனுபவமின்மை காணப்படுகின்ற போதிலும், அவ்வணியின் திறமைகள் என்பன பரந்தவை என்றார். இங்கிலாந்து அணி வெற்றிபெற்ற போதிலும், தனது பங்கு சிறியதே என அவர் குறிப்பிட்டார். 'உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் பெரிதாக எதையும் செய்யவில்லை. திறமையுள்ள வீரர்கள் குழாமுடன் நீங்கள்…
-
- 0 replies
- 477 views
-
-
ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார் மொரின்ஹோ செல்சி அணியின் முன்னாள் முகாமையாளர் ஜொஸ் மொரின்ஹோ, மன்செஸ்டர் யுனைட்டெட் கழகத்துடன் ஒப்பந்தத்துக்கு முன்னரான உடன்பாடொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டு ஜூன் மாதத்துக்கு முன்னர், அக்கழகத்தின் முகாமையாளராக மொரின்ஹோ நியமிக்கப்படாதுவிடின், அவருக்கு 15 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ்கள் வழங்கப்பட வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது. கடந்தாண்டு டிசெம்பரில், செல்சி அணியின் முகாமையாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட மொரின்ஹோ, அதன் பின்னர், மன்செஸ்டர் யுனைட்டெட் அணியுடன் இணைந்து கொள்வார் எனத் தகவல்கள் தெரிவித்த போதிலும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை. இ…
-
- 0 replies
- 345 views
-
-
கடுப்பில் தொலைக்காட்சிப் பெட்டிகளை வீதியில் உடைத்த ரசிகர்கள் இந்தியாவுக்கு எதிரான நேற்றைய உலகக் கிண்ண ‘ருவென்ரி 20′ போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் காராச்சியில் பெரும் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பாரிய தொலைக்காட்சிப் பெட்டிகளை நடு வீதியில் கொண்டு வந்து கீழே போட்டு உடைத்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அவர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு எதிராகவும் கோஷமிட்டனர். உலகக் கிண்ணப்போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் சாதனை தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை 6 முறை வென்று இருக்கிறது. ‘ருவென்டி 20′ போட்டிகளிலும…
-
- 2 replies
- 580 views
- 1 follower
-
-
விராட் கோலி தலை வணங்கியதற்கான காரணம் வெளியானது..! ஐசிசி இருபது - 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றிபெற்றது. விராட் கோலியின் அபார ஆட்டம் மூலம் வெற்றியை இந்திய வசமாக்கி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் மூழ்க செய்தார். பாகிஸ்தான் முதலில் நிர்ணயம் செய்த 119 ஓட்ட இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு தொடக்கம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. ரோகித் சர்மா 10 ஓடடங்களுடனும், ஷிகர் தவான் 6 ஓட்டங்களுடனும், சுரேஷ் ரெய்னா ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். இதனையடுத்து விராட் கோலியும், யுவராஜ்சிங்கும் கைகோர்த்து அணியை சரிவில் இரு…
-
- 0 replies
- 616 views
-
-
உலகக்கிண்ணத்தை இலங்கை கைப்பற்றி 20ஆவது ஆண்டு பூர்த்தி விழா 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக்கிண்ணத்தை தன தாக்கியிருந்தது. இதன் 20ஆவது வருடத்தை முன்னிட்டு நேற்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காட்சி ஆட்டத்துக்குப் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்டத்தில் பங்குபற்றிய வீரர்களுக்கு நினைவுப் பரிசில்களையும் வழங்கினார். http://www.onlineuthayan.com/sports/?p=10969
-
- 0 replies
- 367 views
-
-
வங்கதேச வீச்சாளர்கள் தஸ்கின் அகமட், அராபத் சன்னி பந்து வீசத் தடை வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமட், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அரபாத் சன்னி ஆகியோர் முறைதவறிய பந்துவீச்சிற்காக ஐசிசி-யால் தடை செய்யப்பட்டனர். இருவர் பந்து வீச்சு மீதும் ‘த்ரோ’ புகார் எழுந்ததையடுத்து சென்னையில் இருவரது பந்துவீச்சின் மீதும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவரது வீச்சும் விதிமுறைகளுக்குப் புறம்பாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரும் பந்து வீச இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இவர்கள் தங்கள் பந்துவீச்சு முறையை சீர் செய்து கொண்டு மறுஆய்வுக்கு முறையிடலாம். மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதித்தால் இவர்கள் இருவரும் வங்கதேச உள்நாட்டு கிரி…
-
- 1 reply
- 387 views
-
-
”ஓய்வு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை” டில்சான் ஓய்வு குறித்து தற்போதைக்கு சிந்திக்க மாட்டேன் என இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் டில்சான் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண ‘ருவென்ரி-20′ தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 56 பந்துகளை எதிர்கொண்டு 83 ஓட்டங்களை பெற்றிருந்த டில்சான் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த டில்சான், ‘ இவ்வாறு தொடர்ந்தும் விளையாடும் பட்சத்தில் தற்போதைக்கு ஓய்வு குறித்து சிந்திக்க மாட்டேன். கிரிக்கட்டை அனுபவித்து விளையாடுகின்றேன். ஓய்வு …
-
- 0 replies
- 399 views
-
-
ஆஸ்திரேலிய அணியின் கோப்பை ஆசை கைகூடுமா? சிக்ஸர் ஃபீவர் - மினி தொடர் 7 ஐந்து ஒருதின உலகக்கோப்பையை வென்றுவிட்ட ஆஸ்திரேலிய அணியால், இன்னும் ஒரு முறை கூட டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை. கிரிக்கெட்டில் பெரும்பாலான சாதனைகளுக்கு சொந்தமான ஆஸ்திரேலிய அணியின் நிறைவேறாத ஆசை டி உலகக் கோப்பையை வெல்வதுதான். இருபது ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் சூத்திரத்தை இன்னமும் ஆஸ்திரேலிய அணியால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஐ.பி.எல்லாக இருந்தாலும் சரி, பிக்பாஷ் போட்டிகளாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலிய வீரர்களின் ஆதிக்கம் எங்குமே நிறைந்திருக்கும். ஷேன் வாரன், ஸ்மித், வார்னர், வாட்சன், பெய்லி என பலர் ஐ.பி.எல்லில் அணிக்கு தலைமை தாங்கியிருக்கின்றனர். …
-
- 0 replies
- 681 views
-
-
10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் அப்ரிடி வங்கதேச அணிக்கு எதிரான உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்55 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆட்ட நாயகனாக ஷாகித் அப்ரிடி தெரிவானார், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் அவர் ஆட்டநாயகன் விருது பெறுவது இது 11-வது நிகழ்வாகும். 10 முறைக்கு மேல் ஆட்டநாயகன் விருது பெற்ற ஒரே வீரர் இவர் தான். முகமது ஷாசத்(ஆப்கானிஸ்தான்), ஷேன் வாட்சன்(அவுஸ்திரேலியா) தலா 9 முறை ஆட்டநாயகன் விருது பெற்று 2-வது இடத்தில் உள்ளனர் http://www.onlineuthayan.com/sports/?p=10768&cat=2
-
- 0 replies
- 384 views
-
-
ராயல் சேலஞ்சர்ஸ் அணி இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் மல்லையா விலகல்! புதுடெல்லி: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பதவியை விஜய் மல்லையா திடீரென ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல், வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற விஜய் மல்லையா மீது, வங்கிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மேலும் அவர் மீது சி.பி.ஐ. அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2-ம் தேதி இங்கிலாந்துக்கு விஜய் மல்லையா தப்பிச் சென்று விட்டார். இந்நிலையில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து விஜய் ம…
-
- 0 replies
- 418 views
-
-
இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? : அப்ரிடி விளக்கம் இந்தியாவை புகழ்ந்து பேசியது ஏன்? என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி விளக்கம் அளித்துள்ளார். அப்ரிடி கருத்துக்கு எதிர்ப்பு ஐ.சி.சி. இருபது-20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாடுவதற்காக இந்தியா சென்றுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் அப்ரிடி கொல்கத்தாவில் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானை விட இந்தியாவில் எங்கள் மீது அதிக அன்பு காட்டப்படுகிறது. வேறு எங்கும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறோம். இங்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை நாங்கள் ஒருபோதும் உணர்ந்தது இல்லை’ என்று தெரிவித்து இருந்தார். …
-
- 1 reply
- 429 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்…
-
- 0 replies
- 681 views
-
-
”கிரிக்இன்போ’ விருதை வென்றார் ரோஹித் சர்மா இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ரோஹித் சர்மா தொடர்ச்சியாக 3வது முறையாக ’கிரிக்இன்போ’ விருதை பெற்றுள்ளார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் தரம்சாலாவில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் ரோஹித் சர்மா 66 பந்தில் 106 ஓட்டங்கள் குவித்தார். இந்த சிறந்த இன்னிங்சிற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை இலங்கை அணியின் முன்னாள் தலைவரான ஜெயவர்த்தனே பரிந்துரை செய்தார். இவருடன் முன்னாள் தலைவர்களான வாலஷ் (மேற்கிந்திய தீவுகள்), ஜான் ரைட் (நியூசிலாந்து) ஆகியோரும் அந்த விருது வழங்கும் தெரிவு குழுவில் இடம்பெற்றிருந்தனர். மேலும் ஆண்டின் சிறந்த தலைவருக்கான விருது சமீபத்தில் ஓ…
-
- 0 replies
- 674 views
-
-
6 ப்ளஸ்! ஒரு மைனஸ்! சொல்லி அடிக்குமா கில்லி இந்தியா? சிக்ஸர் பீவர் (மினி தொடர் -6) அக்ரசிவ் பேட்ஸ்மேன்கள், அசத்தல் ஆல்ரவுண்டர்கள், ஆக்ரோஷ பந்து வீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த சிறந்த கேப்டன் என டி20 போட்டிகளில் உலகின் மிகச்சிறந்த அணியாக மாறியிருக்கிறது இந்தியா. இம்முறை உலகக்கோப்பையை வெல்லப்போவது இந்தியாதான் என ரசிகர்கள் மட்டுமல்ல, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் முதற்கொண்டு வரிசையாக பேட்டி தட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு ஐந்து டி20 போட்டியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்ற இந்திய அணியின் நிலை தற்போது தலைகீழ். ஆஸ்திரேலியா, இலங்கை, ஆசிய கோப்பை தொடர் என இந்தாண்டு இதுவரை விளையாடிய பதினோரு போட்டியில் பத்தில் வென்று அசாத்திய சாதனை புரிந்திரு…
-
- 0 replies
- 391 views
-
-
தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி...- சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தோனி அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி....: சச்சின் நம்பிக்கை. | படம்: ஏ.எஃப்.பி. தோனி அதிரடி ஆட்ட வழிமுறைக்குத் திரும்பியதன் அறிகுறியாக அவர் பந்தை அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி உள்ளது என்றும் இது உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு நல்ல பலன் அளிக்கும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தனியார் சேனல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் இது பற்றி கூறியதாவது: உலகில் எந்த ஒரு வீரரும் வாழ்நாள் முழுதும் சிறந்த ஃபார்மில் இருந்து விட முடியாது, மேலும் அவர் எந்திரமல்ல. ஆனால் தோனியின் மட்டையில் பந்து படும்போது ஏற்படும்…
-
- 0 replies
- 368 views
-
-
தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட் சர்பராஸ் அகமட். | படம்: ஏ.பி. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுட…
-
- 0 replies
- 451 views
-
-
தோனி 7, கோலி 18, அஸ்வின் 99 ஏன்! ஜெர்சி ரகசியம் சொல்லும் இந்திய கில்லிகள்! கிரிக்கெட் வீரர்களின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று ஜெர்சி எண். தோனியின் 7ம் நம்பர் ஜெர்சி துவங்கி, புதிதாக அணிக்கு அறிமுகமாகியுள்ள ஹர்திக் பாண்ட்யாவின் 228ம் நம்பர் ஜெர்சி வரை நம்பர் ரகசியம் என்ன என்பதை கூறியிருக்கிறார்கள். தோனி தனது பிறந்த தினமான 7ம் தேதியை குறிக்கும் வகையில் 7ம் நம்பர் ஜெர்சியையும், ரோஹித் ஷர்மா தனது அம்மா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக்கு முன் ராசியான எண் என்று 45-ம் நம்பரை அளித்ததாகவும் கூறியுள்ளார். கோலி, "எனது ஜெர்சி எண்களுக்கு பின்னால் பெரிய ராசியெல்லாம் ஒன்றுமில்லை. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் எனக்கு இந்த எண் வழங்கப்ப…
-
- 1 reply
- 605 views
-
-
'தெறிமாஸ்' காட்டுமா வெஸ்ட் இண்டீஸ் - சிக்ஸர் பீவர் (மினி தொடர் -5) உலகில் நடக்கும் ஐ.பி.எல் முதலான அத்தனை டி20 லீக்களிலும் 'தெறிமாஸ்' காட்டும் சிறுத்தைகள் வெஸ்ட் இண்டீஸ் அணியில் தான் இருக்கிறார்கள். 1983 ஆம் ஆண்டு உலககோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவிடம் தோல்வியடைந்தது. கிரிக்கெட் உலகில் அசைக்க முடியாத டானாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் அதன் பின்னர் இறங்குமுகத்தையே சந்தித்தது. லாரா, கூப்பர், கெய்ல் என பல்வேறு சிறந்த வீரர்கள் அணிக்கு வந்தாலும் உலககோப்பையில் அரையிறுதிக்கு கூட தகுதி பெறமுடியாமல் பரிதாபமாக வெளியேறிக்கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2012 உலககோப்பையில் திடீரென விஸ்வரூபம் எடுத்தது வெஸ்ட் இண்டீ…
-
- 0 replies
- 670 views
-
-
செல்சி தோல்வி எஃப்.ஏ கிண்ண காலிறுதிப் போட்டியொன்றில் எவெர்ற்றனும் செல்சியும் மோதிய நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற்ற எவெர்ற்றன், எஃப்.ஏ கிண்ண அரையிறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இப்போட்டியில், 2-0 என்ற கோல்கணக்கில் செல்சியை எவெர்ற்றன் தோற்கடித்திருந்தது. இப்போட்டியில் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் செல்சியின் முன்னாள் வீரரான ரொமேலு லூகாகு என்பவரே பெற்றிருந்தார். இப்போட்டி முடிவினைக் காட்டிலும் இப்போட்டியின் கவனத்தை சர்ச்சைக்குரிய வீரரான செல்சியின் டியகோ கோஸ்டாவே கவனத்தை ஈர்த்திருந்தார். போட்டியின் 84ஆவது நிமிடத்தில் எவெர்ற்றனின் கரித் பரியுடன் முரண்பட்டுக் கொண்டமைக்காக ம…
-
- 0 replies
- 410 views
-
-
பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை: ஷாகித் அப்ரிடி கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் ஷாகித் அப்ரிடி | படம்: ஏ.பி. 'பாகிஸ்தானில்கூட இவ்வளவு அன்பை நான் அனுபவித்தது இல்லை' டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகித் அப்ரிடி, தனது நாட்டில்கூட இவ்வளவு அன்பை தான் அனுபவித்தது இல்லை என தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் அணியினர் இந்தியா வருவது தள்ளிக்கொண்டே சென்ற நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு பாகிஸ்தான் அணி வீரர்கள் டுவென்டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்தடைந்தனர். வ…
-
- 2 replies
- 886 views
-
-
இருபதுக்கு 20 உலகக் கிண்ணம் 2016 – ஒரு கண்ணோட்டம் 16 அணிகள் பங்கேற்கும் 35 போட்டிகளைக் கொண்ட 6வது இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் இன்று (மார்ச் 08) முதல் ஏப்ரல் 3ஆம் திகதி வரை இந்தியாவில் கோலாகலமாக ஆரம்பிக்கவுள்ளது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என இரண்டு பிரிவாக போட்டிகள் நடைபெறுகிறது. முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளும் ‘பி’ பிரிவில் ஸ்காட்லாந்து, சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தல…
-
- 0 replies
- 543 views
-
-
நடந்தது இதுதான்: டென்னிஸ் ரசிகர்களுக்கு ஷரபோவா மனம் திறந்த கடிதம் மரியா ஷரபோவா மரியா ஷரபோவா, தன் பதிவோடு இணைத்துள்ள வாலட் கார்டு (ஊக்க மருந்து தொடர்பான தகவல்கள் அச்சிடப்பட்ட) அட்டைகள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கி தடையை எதிர்கொண்டுள்ள மரியா ஷரபோவா, தன்னுடைய வலைதளம் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக, அவரின் டென்னிஸ் ரசிகர்களுக்கு மனம் திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'ஊக்க மருந்து குறித்து தனக்கு ஐந்து முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்தி தவறானது' என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய …
-
- 0 replies
- 634 views
-
-
’’ஸ்டெம்பை வைத்து வீட்டை சுற்றி வேலி அமைத்துக் கொள்வேன்’’ டோனி March 12, 2016 இந்திய அணி வெற்றி பெறும் போட்டியில் ஸ்டம்பை கையோடு எடுத்துச் செல்வது பற்றி அணித்தலைவர் டோனி மனம் திறந்து பேசியுள்ளார். பலப் போட்டிகளில் இந்தியா வெற்றி பெறும் போது அந்த அணியின் தலைவரான டோனி ஓடி வந்து முதலில் ஸ்டெம்பை பிடுங்கி கையோடு எடுத்துச் செல்வதை பார்த்திருக்கலாம். அது எதற்கு என்று நமக்கு தெரியாது. தற்போது அதற்கான காரணத்தை அவரே கூறியுள்ளார். இது குறித்து டோனி கூறுகையில், ”அது ஒரு சிறந்த விடயத்திற்காக தான் செய்கிறேன். அந்த ஸ்டம்பில் நான் ஏதும் எழுதி வைக்கவில்லை. நான் ஓய்வு பெற்ற பிறகு வீடியோவில் பார்த்து இது எந்தப் போட்டியின் ஸ்டம்ப் என கண்டுபிடிப்பேன். இதற…
-
- 0 replies
- 344 views
-
-
இந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான்? சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4) பாகிஸ்தான் இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவை வென்றதே இல்லை. ஆனால் இம்முறை இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பையை வென்றால் எவ்வளவு வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும் என நினைத்துப்பாருங்கள். இதுவரை உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் பத்து முறை மோதியுள்ளன. பத்திலும் பாகிஸ்தான் தோல்வியடைந்திருக்கிறது. உலகக் கோப்பை என்றாலே இந்தியாவிடம், பாகிஸ்தான் தோற்றுவிடும் என மக்கள் எண்ணுகிறார்கள், இதுவரை ஏற்பட்ட தோல்விகளுக்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக, " இந்த உலகக்கோப்பையில் இந்தியாவையும் வெல்வோம், இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பையை வென்று சாம்பியனும் ஆவோம்" என சூளுரைத்து இந்…
-
- 0 replies
- 1k views
-