Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. நியூஸிலாந்து ரசிகர்கள் எல்லை மீறுகின்றனர்: டேவிட் வார்னர் பாய்ச்சல் ஸ்மித், வார்னர். | படம்: ஏ.எஃப்.பி. நடந்து முடிந்த நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர்களை கடுமையாக வசைமழை பொழிந்ததாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கொதித்தெழுந்துள்ளார். எல்லைக்கோட்டருகே பீல்ட் செய்த ஜோஷ் ஹேசில்வுட் உட்பட மற்றொரு பவுலர் ஆகியோரை கிறைஸ்ட்சர்ச் டெஸ்டின் போது ரசிகர்கள் ஆபாசமான வசைமொழியினால் திட்டினார்கள் என்று டேவிட் வார்னர் ஆவேசமடைந்துள்ளார். இது குறித்து ஏபிசி-க்கு டேவிட் வார்னர் கூறியதாவது: உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ, வீரர்களுக்கு சில வசைகள் வந்து விழும் என்பது தெரிந்ததே. ஆனால் நாள் முழுதும், …

  2. தோனியை கரூரிலும் கோலியை தஞ்சாவூரிலும் ஏன் தேடுகிறார்கள்? - இது என்னடா புது டிஸைன்! சர்வதேச அளவில் ட்ரெண்டாகும் விஷயங்களை கணிப்பது கடினம். ஆனால் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு அந்த பிரச்னை இல்லை. அது ஆல்டைம் ட்ரெண்டில் இடம் பெறும் விஷயம்தான். ஆனால் நேற்று முதல் இந்தப் போட்டி பற்றிய செய்திகள் காட்டுத்தீ போல பரவிவருகிறது. இதுவரை ஐசிசி ஆட்டங்களில் பாகிஸ்தான், இந்தியாவை வென்றதில்லை என்ற புள்ளிவிவரம் துவங்கி, தோனிக்கு அடிபட்டுள்ளது வரை டாப் ட்ரெண்டில் உள்ளது இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆசியக் கோப்பை ஆட்டம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் கூகுள் ட்ரெண்டில் உள்ள இந்திய வீரர்களில் தோனிக்குதான் முதலிடம், அடுத்து கோலி, யுவராஜ், ரோஹித், அஸ்வின் உள்ளனர்.…

  3. 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை வாங்கிய சன்னி லியோன் ஐ.பி.எல், சி.சி.எல். போன்று சின்னத்திரை நடிகர்கள் விளையாடும் பி.சி.எல். எனப்படும் பாக்ஸ் கிரிக்கெட் 'லீக்' போட்டி விரைவில் தொடங்க இருக்கிறது. இந்தப் போட்டியில் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்தப் போட்டியில் பங்கேற்க இருக்கும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வாங்கியுள்ளார். சன்னி லியோன் ஆங்கிலம் மற்றும் பல்வேறு இந்திப் படங்களில் நடித்துள்ளார். 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். தோனியை போல இவரும் 'சென்னை சுவாக்கர்ஸ்' அணியை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு விளம்பரங்களிலும் தோன்ற இருக்கிறார். http://www.vikatan.com/news/sports/59713-sun…

  4. 'போர்ப்ஸ்' மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி, சானியா மிர்ஷா! ஆசியாவின் மதிப்புமிக்க இளைஞர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தை பெற்றுள்ளார். சானியா மிர்ஷா, சாய்னா நேவால் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர். வணிக பத்திரிக்கையான 'போர்ப்ஸ்' ஆசிய கண்டத்தில் 30 வயதுக்குட்பட்ட மதிப்புமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வியட்நாம், சிங்கப்பூர், ஹாங்காங் ஆய்வு நடத்தி நம்பிக்கைக்குரிய இளம் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் என 300 பேர் பட்டியலை தயாரித்தது. இந்த பட்டியலில் 56 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்கள் பிரிவில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்…

  5. பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக சங்ககார? February 26, 2016 பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரவை நியமிப்பது குறித்து ஆலோசிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபையின் தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கட் தொடரில் பங்கேற்ற சங்ககார அங்கு பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாகி இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண ரி-20 தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சங்ககாரவை ஆலோசகராக நியமிப்பது குறித்து ஷகார்யார் கான் கருத்து வெளியிட்டுள்ளார். மேலும்; இது குறித்த முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாகி…

  6. ஃபீஃபா தலைவர் பதவி தேர்தல்: முதல் சுற்றில் இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகள், ஷேய்க் சல்மானுக்கு 85 வாக்குகள் சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (ஃபீஃபா) புதிய தலைவர் பதவிக்கான தேர்தலின் முதல் சுற்றில் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் பொதுச் செயலாளரான சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ஜியானி இன்ஃபன்டீனோ, ஆசிய கால்பந்தாட்டக் கூட்டுச் சம்மேளனத்தின் தலைவரான பஹ்யெ;னின் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகிறது சூரிச்சில் தற்போது நடைபெறும் தேர்தலின் முதல் சுற்றில் ஜியானி இன்ஃபன்டீனோவுக்கு 88 வாக்குகளும் ஷேய்க் சல்மான் பின் இப்ராஹிம் அல் கலீஃபாவுக்கு 85 வாக்…

  7. ஆரோனின் பந்துவீச்சில் சந்தேகம் February 26, 2016 தென் ஆப்பிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆரோன் பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் இருப்பதாக புகார் கிளம்பியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்தவர் ஆரோன் பாங்கிசோ. இடக்கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 20 ஓவர் உலகக் கிண்ணத்திற்கான தென் ஆப்பிரிக்க அணியிலும் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் உள்ளூர் ஆட்டம் ஒன்றில் கலந்து விளையாடிய பாங்கிசோவின் பந்துவீச்சில் சந்தேகம் எழுந்தது. அவரது பந்துவீச்சு சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் விதிமுறைகளுக்கு எதிராக உள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு சோதனை நடந்த ஐ.சி.சி. உத்தரவுட்டுள்ளது. மார்ச் 8ம் திகதிக்குள் அவர் பந்துவீச்சை முறையை நிரூபிக்…

  8. ’’ஒய்வு பெற வாய்ப்பு உள்ளது’’ மலிங்கா February 26, 2016 டி20 உலக கிண்ணம் தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதாக இலங்கையின் பந்துவீச்சாளர் மலிங்கா சூசகமாக தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா உலகளவில் முன்னணி பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள், 191 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 62 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 470 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சமீப நாட்களாக காயத்தில் அவதிப்பட்டு வரும் அவர், யு.ஏ.இ. அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகவே பந்துவீசினார். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் கூறியதாவது, கடந்த 12 ஆண்டுகளாக இலங்கை அணிக…

  9. மகாஜனாக் கல்லூரி வெற்றி -குணசேகரன் சுரேன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை பாடசாலைகளில் 19 வயதுப் பிரிவு கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியொன்றில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி அணி 9 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. அலவ ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப் போட்டியில், தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியும் ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணியும் மோதின. நாணயச் சுழற்சியில் வென்ற மகாஜனாக் கல்லூரி அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதற்கிணங்க களமிறங்கிய ஸ்ரீ ராகுல தேசிய பாடசாலை அணி, 21 ஓவர்களில் 69 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவ…

  10. ஆப்கன் சிறுவனுக்கு கையெழுத்திட்ட சட்டைகளை அனுப்பினார் மெஸ்ஸி மெஸ்ஸி அனுப்பிய கையெழுத்திட்ட சட்டையுடன் அகமதி | படம்: ஏ.பி. பிளாஸ்டிக் பையினால் ஆன உடையில் அகமதி | கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் ஆப்கானிஸ்தான் சிறுவன் அகமதிக்கு கால்பந்து வீரர் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட சட்டைகளையும், கால்பந்தையும் அனுப்பியுள்ளார். கால்பந்து விளையாட்டில் சிறுவன் அகமதிக்கு அதிக ஆர்வம். ஆர்வ மிகுதியில், அர்ஜென்டினா கால்பந்து அணியின் சீருடையில் உள்ள வடிவத்தைக் கொண்ட பிளாஸ்டிக் பையை ஆப்கன் சிறுவன் முர்தசா அகமதி அணிந்திருந்த புகைப்படம் உலகம் முழுவதும் இணையவ…

  11. விளையாட்டுச் செய்தித்துளிகள்: இந்திய டி20-ல் பாக். அணி # மெக்ஸிகோ ஓபன் முதல் சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், பிரான்ஸின் ஜெர்மி ஷார்டி ஜோடி 2-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரியாவின் ஆலிவர் மராக், பேப்ரைஸ் மார்ட்டின் ஜோடியிடம் தோல்வியடைந்தது. # இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி பங்கேற்க அந்நாட்டு அரசு மனுமதி வழங்கியுள்ளது. # மார்ச் 8ம் தேதி இந்தியாவில் தொடங்கும் டி 20 உலகக்கோப்பைக்கான 31 பேர் கொண்ட நடுவர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் ஜவகல் ஸ்ரீநாத், அனில் சவுத்ரி, வினீத் குல்கர்னி, சிகே நந்தன், ஷம்ஸூதின், ரவி சுந்தரம் உள்ளிட்ட 6 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த கேத்லின் …

  12. டென்னிஸ் ஊழலில் 16 வீர வீரராங்கனைகள் சிக்கியுள்ளனர் February 25, 2016 கடந்த 2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற டென்னிஸ் போட்டிகளில் 246 போட்டிகளில் ஊழல் இடம்பெற்றிருப்பதாக டென்னிஸ் நேர்மை அலகின் தலைவர் நைஜல் வெல்லேர்டன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இவற்றுள் மூன்று கிறான்ஸிலாம் போட்டிகள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,’ வருடம் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கடந்த வருடத்தில் ஊழல் தொடர்பான 246 எச்சரிக்கைகள் எமக்கு கிடைக்கப் பெற்றது. இந்த எண்ணிக்கையானது வருடம் ஒன்றுக்கு நடைபெறும் டென்னிஸ் போட்டிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைந்த எண்ணிக்கை. இது மிகப் பெரு…

  13. ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடர் -ச.விமல் ஆசியக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் இன்று ஆரம்பிக்கவுள்ளது. முதற் தடவையாக 5 அணிகள் பங்குபற்றும் தொடராக அமையவுள்ள அதேவேளை முதற் தடவையாக இருபதுக்கு-20 தொடராக நடைபெறவுள்ளது. 1986ஆம் ஆண்டு ஆசியக் கிரிக்கெட் சம்மேளனத்தினால் இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் சாஜாவில் நடாத்தப்பட்டது. இரண்டு வருடத்துக்கு ஒரு தடவை இந்த தொடர் நடாத்தப்பட்டு வருகின்றது. 2014ஆம் ஆண்டு இறுதியாக பங்களாதேஷில் இந்த தொடர் நடைபெற்றது. நான்கு நாடுகள் பங்குபற்றிய இந்த தொடரில் இந்த வருடம் ஆசியக் கண்ட நான்கு துணை அங்கத்துவ நாடுகளில் இருந்து ஒரு நாடு தெரிவுகாண் போட்டிகள் மூலம் தெரிவாகி ஐந்தாவது நாடாக இணைந்துள்ளது. …

  14. பிளட்டர், பிளட்டினியின் குற்றம் உறுதியானது சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் வெளிச்செல்லும் தலைவர் செப் பிளட்டர், அதன் உப தலைவரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சம்மேளனங்களின் சங்கத்தின் தலைவருமான மைக்கல் பிளட்டினி ஆகியோர், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தடைக்கெதிராக மேற்கொண்டிருந்த மேன்முறையீட்டில், அவர்களது குற்றம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தண்டனை, குறைக்கப்பட்டுள்ளது. மைக்கல் பிளட்டினிக்கு செப் பிளட்டர் வழங்கிய 1.3 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் கொடுப்பனவில், அவர்களிருவருமே குற்றம் இழைத்தார்கள் என, சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் மேன்முறையீட்டுக் குழு அறிவித்தது. எனினும், அவர்களு…

  15. நாளை பீபா தலைவருக்கான தேர்தல் பீபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை (26), சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது. கடந்த 18 வருடங்களாக, கால்பந்தாட்ட உலகை ஆளும் கூட்டமைப்பின் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், எந்தவொரு பீபா நடவடிக்கையிலும் ஈடுபட எட்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதியீடு செய்யவுள்ளார். மேற்படி பீபா தலைவருக்கான வாக்கெடுப்பில், பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 209 அங்கத்துவ நாடுகளும் தலா ஒவ்வொரு வாக்குகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இரகசிய வாக்களிப்பு நிலையத்தில் அவை தமது வாக்குகளை அள…

  16. அவுஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தில் February 24, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்டில் வெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 370 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 505 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 135 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடி…

  17. நடுவருக்கு சிவப்பு அட்டை காட்டிய வீரர் February 24, 2016 துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் நடுவருக்கே ’சிவப்பு அட்டை’ காட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளார். துருக்கியில் நடக்கும் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இஸ்தான்புல்லை சேர்ந்த கலாட்டாசாரே- டிரப்ஜான் அணிகள் மோதின. இதில் வீரர்களின் மோசமான நடத்தை காரணமாக டிரப்ஜான் அணியின் ஹர்மாச்சி, டெமிர் ஆகிய இருவரும் இரண்டு முறை ’மஞ்சள் அட்டை’ பெற மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் 86வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த கவாண்டாவும் வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த வீரர்கள் நடுவர் டெனிஸ் பிட்னெலை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் தர்சுன் என்ற வீரர் நடுவரிடம் இரு…

  18. பாகிஸ்தான் சூப்பர் லீக்,இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் February 24, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகளால் குவெட்டா கிளாடியேட்டஸ் அணியை வீழ்த்திய இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டஸ்- இஸ்லாமாபாத் யுனிடைட் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டஸ் அணி சங்கக்காரா, ஷேஷாட் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. சங்கக்காரா 32 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 55 ஓட்டங்களும், ஷேஷாட் 39 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்…

  19. நடுவரை திட்டிய அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் February 24, 2016 நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ’அவுட்’ கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் 4வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஹாசெல்வுட் வில்லியம்சனுக்கு யார்க்கராக ஒரு பந்துவீசினார். அது அவரது காலில் பட்டதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், …

  20. உலகின் நம்பர் 1 அணி என்று ஆஸி. நிரூபித்து விட்டது: பிரியாவிடை பேச்சில் பிரெண்டன் மெக்கல்லம் கடைசி முறையாக நியூஸிலாந்து அணியை வழிநடத்திச் செல்லும் மெக்கல்லம். | படம்: ஏ.பி. நியூஸிலாந்து கேப்டனும் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம்மின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ரன்களை 38.64 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ள மெக்கல்லம், அதிகபட்ச ஸ்கோராக 302 ரன்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். இதில் 12 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இந்த ரன்களில் 776 பவுண்டரிகளையும் 107 சிக்சர்களையும் சாதித்துள்ளார் மெக்கல்லம். 198 கேட்ச்களை பிடித்ததோடு 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 2004-ம் ஆண…

  21. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை எதிர்த்து சு.சுவாமி மனு- சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்பு டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு(சிஎஸ்கே) 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணி சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மற்றும் பல வீரர்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது பெரும் புயலைக் கிளப்பியது இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் கொடுத்தது. இதனடிப்படையி…

  22. சாம்பியன்ஸ் லீக் : பார்சிலோனாவிடம் ஆர்சனல் தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கின. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 71வது நிமிடத்தில் மெஸ்சி பார்சிலோனாவுக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றினார். இறுதியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது லெக் ஆட்டத்தில் ஒரு கோல் வாங்கி தோற்றாலும் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முன்னேறி விடும். இத்தாலியின் டூரின் நகரில் மற்றொரு ஆட்டத்தி…

  23. டில்ஸ்கூப் அடித்து அசத்திய சங்கக்காரா February 22, 2016 மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் வித்தியாசமான ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது. சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஜெமினி அரபியன்ஸ் அணிக்காக விளையாடிய சங்கக்காரா ஒரு போட்டியில் “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் சிக்சர் விளாசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். இந்த ஷாட்டுக்கு பெயர் போனவர் சக இலங்கை வீரரான டில்ஷான் தான், தவிர, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், நியூசிலாந்தின் மெக்கல்லம் ஆகியோரும் அதிகம் இது போன்ற ஷாட்டுகளை அதிகம் ஆடுவர். இந்த தொடரில் ஷேவாக் தலைமையிலான ஜெம…

  24. 50 ஓவர் போட்டியில் 306 ஓட்டங்கள் குவித்த வீரர் 2016-02-22 21:33:25 இந்­தி­யாவின் மஹா­ராஷ்­டி­ராவைச் சேர்ந்த மற்­றொரு கிரிக்கெட் வீர­ரான பிரித்தம் பட்டில், ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 306 ஓட்­டங்­களைக் குவித்து சாதனை ஒன்றை நிலை­நாட்­டி­யுள்ளார். மும்­பையைச் சேர்ந்த பிரணவ் தன்­வாடே கடந்த மாதம் ஆட்­ட­மி­ழக்­காமல் 1009 ஓட்­டங்­களைக் குவித்து ஒரே இன்­னிங்ஸில் 1000 ஓட்­டங்­களைப் பெற்ற முதல் வீரர் என்ற உலக சாத­னைக்கு சொந்­தக்­கா­ர­ரா­கி­யி­ருந்தார். இப்­போது அவ­ரது மாநி­லத்தைச் சேர்ந்த மற்­றொரு வீரர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 300 ஓட்­டங்­களைக் கடந்த முத­லா­வது வீரர் என்ற சாத­னையை நிலை­நாட்­டி­யுள்ளார்.…

  25. 25 ஓட்டங்களுடன் விடை பெற்றார் மெக்கல்லம் நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 505 ஓட்டங்களைக் குவித்துள்ளது. பிறகு தொடர்ந்த நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில், மெக்கல்லம், 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 370 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 79 பந்துகளில் 145 ஓட்டங்களையும், ஆண்டர்சன் 72 ஓட்டங்களையும் குவித்தனர். அவுஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 3 விக்கெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.