விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
அவுஸ்திரேலியா மீண்டும் முதலிடத்தில் February 24, 2016 நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இதில் முதல் டெஸ்டில் வெற்ற அவுஸ்திரேலியா தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்த நிலையில் அவுஸ்திரேலியா– நியூசிலாந்து அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 370 ஓட்டங்களும், அவுஸ்திரேலிய அணி 505 ஓட்டங்களும் எடுத்தன. பின்னர் 135 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை ஆடி…
-
- 0 replies
- 354 views
-
-
நடுவருக்கு சிவப்பு அட்டை காட்டிய வீரர் February 24, 2016 துருக்கி சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் வீரர் ஒருவர் நடுவருக்கே ’சிவப்பு அட்டை’ காட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளார். துருக்கியில் நடக்கும் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் இஸ்தான்புல்லை சேர்ந்த கலாட்டாசாரே- டிரப்ஜான் அணிகள் மோதின. இதில் வீரர்களின் மோசமான நடத்தை காரணமாக டிரப்ஜான் அணியின் ஹர்மாச்சி, டெமிர் ஆகிய இருவரும் இரண்டு முறை ’மஞ்சள் அட்டை’ பெற மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் 86வது நிமிடத்தில் அதே அணியை சேர்ந்த கவாண்டாவும் வெளியேற்றப்பட்டார். இதனால் கோபமடைந்த வீரர்கள் நடுவர் டெனிஸ் பிட்னெலை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் தர்சுன் என்ற வீரர் நடுவரிடம் இரு…
-
- 0 replies
- 491 views
-
-
பாகிஸ்தான் சூப்பர் லீக்,இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் February 24, 2016 பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் 6 விக்கெட்டுகளால் குவெட்டா கிளாடியேட்டஸ் அணியை வீழ்த்திய இஸ்லாமாபாத் யுனிடைட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் குவெட்டா கிளாடியேட்டஸ்- இஸ்லாமாபாத் யுனிடைட் அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய குவெட்டா கிளாடியேட்டஸ் அணி சங்கக்காரா, ஷேஷாட் அதிரடியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 174 ஓட்டங்கள் எடுத்தது. சங்கக்காரா 32 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சர் என 55 ஓட்டங்களும், ஷேஷாட் 39 பந்தில் 9 பவுண்டரி, 1 சிக்சர் என 64 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் சற்று கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இஸ்…
-
- 0 replies
- 288 views
-
-
நடுவரை திட்டிய அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் February 24, 2016 நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ’அவுட்’ கொடுக்க மறுத்த நடுவரை அவுஸ்திரேலிய வீரர் ஹாசெல்வுட் தகாத வார்த்தையால் திட்டியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அவுஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்ச்சர்ச்சில் நடந்து வருகிறது. இதில் 4வது நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது 4 விக்கெட்டுக்கு 196 ஓட்டங்கள் எடுத்திருந்த போது அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஹாசெல்வுட் வில்லியம்சனுக்கு யார்க்கராக ஒரு பந்துவீசினார். அது அவரது காலில் பட்டதில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இந்நிலையில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித், …
-
- 0 replies
- 337 views
-
-
உலகின் நம்பர் 1 அணி என்று ஆஸி. நிரூபித்து விட்டது: பிரியாவிடை பேச்சில் பிரெண்டன் மெக்கல்லம் கடைசி முறையாக நியூஸிலாந்து அணியை வழிநடத்திச் செல்லும் மெக்கல்லம். | படம்: ஏ.பி. நியூஸிலாந்து கேப்டனும் அதிரடி வீரருமான பிரெண்டன் மெக்கல்லம்மின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை புதன்கிழமையுடன் முடிவுக்கு வந்தது. 101 டெஸ்ட் போட்டிகளில் 6,453 ரன்களை 38.64 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ள மெக்கல்லம், அதிகபட்ச ஸ்கோராக 302 ரன்களை இந்தியாவுக்கு எதிராக எடுத்தார். இதில் 12 சதங்கள், 31 அரைசதங்கள் அடங்கும். இந்த ரன்களில் 776 பவுண்டரிகளையும் 107 சிக்சர்களையும் சாதித்துள்ளார் மெக்கல்லம். 198 கேட்ச்களை பிடித்ததோடு 11 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். 2004-ம் ஆண…
-
- 1 reply
- 439 views
-
-
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடையை எதிர்த்து சு.சுவாமி மனு- சுப்ரீம்கோர்ட் விசாரணைக்கு ஏற்பு டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு(சிஎஸ்கே) 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அணி சென்னை அணியின் உரிமையாளர் குருநாத் மெய்யப்பன் மற்றும் பல வீரர்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டது பெரும் புயலைக் கிளப்பியது இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி முட்கல் தலைமையில் விசாரணை குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்திடம் கொடுத்தது. இதனடிப்படையி…
-
- 0 replies
- 401 views
-
-
சாம்பியன்ஸ் லீக் : பார்சிலோனாவிடம் ஆர்சனல் தோல்வி! சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நேற்று நாக்அவுட் சுற்று ஆட்டங்கள் தொடங்கின. லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி ஆர்சனல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பிற்பாதியில் 71வது நிமிடத்தில் மெஸ்சி பார்சிலோனாவுக்கான முதல் கோலை அடித்தார். தொடர்ந்து 83-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பையும் கோலாக மாற்றினார். இறுதியில் பார்சிலோனா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது லெக் ஆட்டத்தில் ஒரு கோல் வாங்கி தோற்றாலும் பார்சிலோனா அணி காலிறுதிக்கு முன்னேறி விடும். இத்தாலியின் டூரின் நகரில் மற்றொரு ஆட்டத்தி…
-
- 0 replies
- 413 views
-
-
டில்ஸ்கூப் அடித்து அசத்திய சங்கக்காரா February 22, 2016 மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவின் வித்தியாசமான ஷாட் ரசிகர்களை வியக்க வைத்தது. சமீபத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்ட மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஜெமினி அரபியன்ஸ் அணிக்காக விளையாடிய சங்கக்காரா ஒரு போட்டியில் “டில்ஸ்கூப்” ஷாட் மூலம் சிக்சர் விளாசி ரசிர்களை உற்சாகப்படுத்தினார். இந்த ஷாட்டுக்கு பெயர் போனவர் சக இலங்கை வீரரான டில்ஷான் தான், தவிர, தென்ஆப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், நியூசிலாந்தின் மெக்கல்லம் ஆகியோரும் அதிகம் இது போன்ற ஷாட்டுகளை அதிகம் ஆடுவர். இந்த தொடரில் ஷேவாக் தலைமையிலான ஜெம…
-
- 0 replies
- 564 views
-
-
50 ஓவர் போட்டியில் 306 ஓட்டங்கள் குவித்த வீரர் 2016-02-22 21:33:25 இந்தியாவின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான பிரித்தம் பட்டில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 306 ஓட்டங்களைக் குவித்து சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரணவ் தன்வாடே கடந்த மாதம் ஆட்டமிழக்காமல் 1009 ஓட்டங்களைக் குவித்து ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரராகியிருந்தார். இப்போது அவரது மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 300 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.…
-
- 0 replies
- 367 views
-
-
25 ஓட்டங்களுடன் விடை பெற்றார் மெக்கல்லம் நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 505 ஓட்டங்களைக் குவித்துள்ளது. பிறகு தொடர்ந்த நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில், மெக்கல்லம், 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 370 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 79 பந்துகளில் 145 ஓட்டங்களையும், ஆண்டர்சன் 72 ஓட்டங்களையும் குவித்தனர். அவுஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 3 விக்கெ…
-
- 1 reply
- 487 views
-
-
10 ஆயிரமாவது கோலை போட்டார் மெஸ்ஸி லா லிகா தொடரில் மெஸ்ஸி அடித்த கோல் கழக கால்பந்து வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலாக பதிவானது. கழக கால்பந்தாட்ட தொடர்களில் ஒட்டுமொத்த வரலாற்றில் 10 000 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதன் 10 ஆயிரமாவது கோலை போட்ட பெருமையை பெற்றார் மெஸ்ஸி. சமீபத்தல் நடைபெற்ற லா லிகா தொடரில் பார்சிலோனா அணியின் மெஸ்ஸி 300 கோல்களை அடித்து அசத்தினார். தொடர்ந்து இவர் அடித்த அடுத்த கோலானது கழக கால்பந்தாட்ட வரலாற்றின் 10 ஆயிரமாவது கோலா அமைந்தது. லாலிகா கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த மெஸ்ஸி, கழக வரலாற்றில் இன்னும் பின் தங்கியே இருக்கிறார். இதில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் வரிசையில் ஜேர்…
-
- 0 replies
- 467 views
-
-
ஒரே கேள்வி என் பதிலை மாற்றாது: ஓய்வு குறித்த கேள்வியால் தோனி எரிச்சல் கொல்கத்தாவில் வங்கதேசம் புறப்படும் முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தோனி. | படம்: பிடிஐ. தோனி செய்தியாளர்கள் சந்திப்புக்கு வந்தாலே அவரிடம் உடனே ஓய்வு பற்றி கேட்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இந்த முறை கேட்டதற்கு தோனி, ஒரே கேள்வி எனது பதிலை மாற்றாது என்று பதிலடி கொடுத்தார். ஆசியக் கோப்பைத் தொடருக்காக வங்கதேசத்துக்கு அணி புறப்படும் முன்னர் நிருபர்கள் சந்திப்பில் தோனி கூறியதாவது: “நான் ஒரு மாதம் அல்லது 15 நாட்களுக்கு முன்பு ஏதாவது கூறியிருந்தேன் என்றால் எனது பதில் ஒரு போதும் மாறாது. கேள்வி கேட்பவர் எந்த இடத்திலிருந்து இக்கேள்வியைக் கேட்டாலும் என் பதிலில் மாற்றமிரு…
-
- 0 replies
- 391 views
-
-
டிவில்லியர்ஸ், அம்லா அதிரடி, 9 விக்கெட்களால் இங்கிலாந்தை வென்றது தென் ஆபிரிக்கா இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது இருபது 20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 9 விக்கெட்களால் வென்றது. தென் ஆபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க் நகரில் இன்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 171 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி 14.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ஏ.பி. டிவில்லியர்ஸ் 29 பந்துகளில் 71 ஓட்டங்களைப் பெற்றார். ஹஷிம் அ…
-
- 0 replies
- 307 views
-
-
வாக்னர் பவுன்சரில் தலையில் அடிவாங்கி கீழே சரிந்த ஸ்மித் சதமடித்தார்: முன்னிலையை நோக்கி ஆஸி. வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி கீழே சரியும் ஸ்மித். | படம்: ஏ.பி. கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் பர்ன்ஸ் 170 ரன்களையும், ஸ்மித் 138 ரன்களையும் எடுத்தனர். இருவரும் இணைந்து 289 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். பவுன்சரில் சாய்ந்த ஸ்மித்: இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் 78 ரன்களில் இருந்த பொது நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் பவுன்சரில் பின் தலையில் அடி வாங்கி…
-
- 0 replies
- 330 views
-
-
ஒவ்வொரு பந்தையுமே பவுண்டரிக்கோ சிக்சருக்கோ விரட்ட விரும்பினேன்: பிரெண்டன் மெக்கல்லம் உலகசாதனை அதிரடி சதம். பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ஏ.பி. விவ் ரிச்சர்ட்ஸ், மிஸ்பா உல் ஹக் ஆகியோரின் அதிவேக டெஸ்ட் சத சாதனையை முறியடித்த மெக்கல்லம், நேற்று ஒவ்வொரு பந்தையுமே 4 ரன்களுக்கோ அல்லது சிக்சருக்கோ அடித்து விரட்டும் ‘மூடில்’ இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பசுந்தரை ஆடுகளத்தில் மெக்கல்லம் நேற்று விளாசித்தள்ளினார். ஜோஷ் ஹேசில்வுட் பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு மேல் விளாசி சதம் அடித்த மெக்கல்லத்திற்கு சாதனை பற்றி தெரியவில்லை. மைதான ஒலிபெருக்கியில் அறிவித்த பிறகுதான் அவருக்கே தெரிந்துள்ளது. “சாதனை பற்றி …
-
- 0 replies
- 285 views
-
-
54 பந்துகளில் சதம்: கடைசி டெஸ்டில் மெக்கல்லம் உலக சாதனை! வெலிங்டன்: வெலிங்டனில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கேப்டன் மெக்கல்லம் 54 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் தொடங்கியது. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 52 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலிய அணி. அதனால் இந்தப் போட்டியில் டிரா செய்தாலே தொடரை வெல்வதோடு, தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்துவிட முடியும். இந்நிலையில் இன்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை பேட்டிங் ச…
-
- 0 replies
- 469 views
-
-
முதலாவது இருபதுக்கு20 கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து தோல்வி தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. நேற்று கேப்டவுனில் இடம்பெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்து முதலில் துடுப்பாடி 134 ஓட்டங்களைப் பெற்றது.இங்கிலாந்து அணிக்காக புட்லேர் 32 ஓட்டங்களை பெற்றார்.தென்னாப்பிரிக்கா சார்பாக இம்ரான் தாஹீர் 4 விக்கட்டுகளை கைப்பற்றினார். 135 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய தென்னாப்பிரிக்கா, 20 ஓவர் நிறைவடையும் போது 7 விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை…
-
- 0 replies
- 348 views
-
-
கொத்மலை கிண்ண கால்பந்தாட்டத்தில் யாழ் ஹென்றியரசர் சம்பியன்; இறுதிப்போட்டியில் கொழும்பு ஸாஹிராவை வென்றது 2016-02-19 19:04:45 (நெவில் அன்தனி) 19 வயதுக்குட்பட்ட பாடசாலைகள் அணிகளுக்களுக்கிடையிலான கொத்மலை கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி சம்பியனாகியுள்ளது. யாழ். இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அணிக்கும் கொழும்பு ஸாஹிரா கல்லூரி அணிக்கும் இடையிலான கொத்மலை கிண்ண இறுதிப் போட்டி கொழும்பு, குதிரைப் பந்தயத் திடலில் இன்று மாலை நடைபெற்றது. இப்போட்டியில் புனித ஹென்றியரசர் அணி 3:1 கோல்களால் வென்றது. …
-
- 1 reply
- 442 views
-
-
புடினின் படத்துடனான ரி-சர்ட்டால் வெடித்தது சர்ச்சை February 19, 2016 துருக்கியின் இஸ்தான்புல் துருக்கிய கால்பந்து அணிக்கெதிரான போட்டியின்போது, ரஷ்ய கால்பந்து அணி வீரர் ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியின் பின்னர் ரஷ்ய வீரர் டிமிட்ரி டாராஸோவ், தனது அணியைக் குறிக்கும் ரி-சர்ட்டை கழற்றி, உள்ளே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் படத்துடன் தான் அணிந்திருந்த ரி-சர்ட்டை காண்பித்துள்ளார். ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் பனிப்போர் நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்துடன் கூடிய ரி-சர்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஜ.எஸ் தீவிரவாதிகளுக…
-
- 0 replies
- 464 views
-
-
’’ஓய்வு குறித்து டோனியே முடிவெடுக்க வேண்டும்’’ ரவி சாஸ்திரி February 19, 2016 இந்திய அணித் தலைவர் டோனியின் ஓய்வு குறித்து முடிவெடுக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு என பயிற்சியாளரும் இயக்குனருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் மற்றும் 20 ஓவர் உலகக்கிண்ணத்திற்காக இந்திய அணி சிறப்பாக தம்மை தயார்படுத்தி வருவதாக தெரிவித்த ரவி சாஸ்திரி, 6-வது இடத்தில் இருந்து நிலைத்து நின்று ஆடுவது மிக சிரமமான ஒன்று என்றார், ஆனால் அதை சவாலாக ஏற்றுக்கொண்டு திறம்பட ஒருவர் செய்துவருவது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். சாதனையாளர்களையும் வெற்றிபெற்றவர்களையும் விமர்சிப்பதை விட்டுவிட வேண்டும் என தெரிவித்த அவர், பல ஆண்டுகளாக இந்திய அணியில் 6-வது இடத்தில் நிலைத்த…
-
- 0 replies
- 317 views
-
-
இந்துக்களின் சமர் இன்று ஆரம்பம் இந்துக்களின் சமர் என்றழைக்கப்படும் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கும் இடையிலான துடுப்பாட்டத் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட யாழ். இந்துவின் வீரர்கள். http://www.onlineuthayan.com/sports/?p=9532&cat=3
-
- 12 replies
- 1.4k views
-
-
மக்கலத்தின் இறுதிப் போட்டி நாளை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை ஆரம்பிக்கவுள்ளது. கிறைஸ்ட்சேர்ச்சில் இடம்பெறவுள்ள இப்போட்டி, இலங்கை நேரப்படி அதிகாலை 3 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. இந்தப் போட்டி, நியூசிலாந்து அணியின் பிரென்டன் மக்கலத்தின் இறுதி சர்வதேசப் போட்டியாக அமையவுள்ளதால், உணர்வுகள் கலந்த போட்டியாக அமையவுள்ளது. அத்தோடு, இந்தப் போட்டியை வென்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி முடித்துக் கொண்டாலோ, டெஸ்ட் தரப்படுத்தலில் முதலாவது இடத்தை, அவுஸ்திரேலிய அணி கைப்பற்றுமென்ற நிலையில், முக்கிய போட்டியாகவும் அமைந்துள்ளது. முதலாவது போட்டியில் வெ…
-
- 0 replies
- 425 views
-
-
அருமை அற்புதம் புங்குடுதீவு தமிழன் கொரியாவில் உலக ஆணழகன் போட்டியில் அங்கம் தர்சன் தியாகராசா என்னும் இலங்கை தமிழன் மிஸ்டர் ஸ்ரீலங்கா தெரிவில் வெற்றி பெற்று தற்போது கொரியாவில் நடைபெற உள்ள உலக ஆணழகன் போட்டியில்பங்கு பற்றவுள்ளார் இவர். புங்குடுதீவு மண்ணின் பரம்பரை சொத்து . யாழ் வெலிங்கடன் திரையரங்கின் முன்னே உள்ள பிரபலமான சைவ உணவகம் முனீஸ்வரகபேயின் உரிமையாளரும் பிரபல சங்கீத வித்துவானும் புங்குடடுதீவு மடத்துவெளியை பிறப்பிடமாகக் கொண்டவருமான கே.வி தம்பு மற்றும் மடத்துவெளி நல்லையா லட்சுமி தம்பதியின் பேரனும் ஆவார் . தியாகராசா தம்பு ,நல்லையா சியாமளா (கனடா ந.தர்மபாலனின் சகோதரி ) ஆகியோர் இந்த திறமை மிக்க இளைஞனின் பெற்றோர் ஆவார் . ஆகியோர் இந்த தி…
-
- 0 replies
- 613 views
-
-
சின்னச் சின்னதாய் செய்திகள்: ‘2024 ஒலிம்பிக்’ 4 நகரம் விருப்பம் பாரிஸ், ரோம், லாஸ் ஏஞ்சல்ஸ், புதாபெஸ்ட் என நான்கு நகரங்கள் 2024ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளதாக சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. 2024ம் ஆண்டு போட்டியை நடத்தும் நகரத்தை தீர்மானிப்பதற்கான வாக்கெடுப்பு 2017ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பெருநாட்டின் லிமா நகரில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் விஜேந்தர் போட்டி உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் ஆசிய பட்டத்துக்கான போட்டி இந்தியாவில் வரும் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான விஜேந்தர் சிங் கலந்துகொள்கிறார். …
-
- 0 replies
- 318 views
-
-
நீச்சல் வீராங்கனைக்கு புற்றுநோய் நெதர்லாந்தை சேர்ந்த பிரபல நீச்சல் வீராங்கனை இக்னே டெக்கர். 30 வயதான இக்னே டெக்கர் ஒலிம்பிக்கில் 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் தங்கம் உள்பட மூன்று பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தன்னை தயார்படுத்தி வந்த நிலையில், திடீரென கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது ‘இந்த தகவலை அறிந்ததும் அதிர்ந்து போனேன். கடந்த 3 ஆண்டுகளாக பிரேசில் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் மட்டுமே எனது சிந்தனை இருந்தது. ஒலிம்பிக்கில் இருந்து விலகுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று டெக்கர் கூறியுள்ளார். http://tamil.adaderana.l…
-
- 0 replies
- 367 views
-