விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
இப்போலாம் எங்கப்பா ஹெலிகாப்டர் ஷாட் ஆட விடுறாங்க... தோனியின் ஜாலி பதில்! இந்திய கேப்டன் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட் அகில உலகமும் பேமஸ். தலைக்கு மேலே பேட்டை சுற்றி அவர் அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட்டில் மைதானமே விக்கித்து போகும். ராஞ்சியில் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வது டி20 போட்டியின் போது, தோனி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, 'இப்போதெல்லாம் ஏன் நீங்கள் ஹெலிகாப்டர் ஷாட் அடிப்பதில்லையே ' என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தோனி, ஹெலிகாப்டர் எல்லா இடத்துலயும் பறக்க விட முடியுமா? ஹெலிகாப்டர் பறக்க வேண்டுமென்றால் அதற்கென்று இடம் தேவைப்படும். கடலுக்கடியில் ஹெலிகாப்டரை பறக்க வைக்க முடியுமா? பவுன்சர்…
-
- 1 reply
- 591 views
-
-
U 19 உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி December 24, 2015 பங்களாதேஷில் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான இஷான் கிஷான் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக மற்றுமொரு விக்கெட் காப்பாளர் ரிஷ்பாப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர U-19 உலகக்கிண்ண கிரிக்கட் தொடருக்கான இந்திய அணியில் 6 துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் 7 பந்து வீச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணி விபரம் வருமாறு Ishan Kishan (capt), Rishabh Pant (vice-capt), Washington Sundar, Sarfaraz Khan, Amandeep Khare, Anmolpreet Singh, Armaan Jaffer, Ricky Bhu…
-
- 30 replies
- 3.1k views
-
-
பாகிஸ்தான் சுப்பர் லீக்கிலிருந்து வொற்சன் வெளியேற்றம் அவுஸ்திரேலிய அணியின் சகலதுறை வீரர் ஷேன் வொற்சன், பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்லாமபாத் யுனைட்டெட் அணி சார்பாகப் போட்டிகளில் பங்குபற்றிவந்த ஷேன் வொற்சன், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற போட்டியொன்றில் பந்துவீசிக் கொண்டிருந்த போது, காயமடைந்தார். அவரது அடிவயிற்றுப் பகுதியில் அவருக்கு உபாதை ஏற்பட்டுள்ளதோடு, பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் எஞ்சிய போட்டிகளில் அவர் பங்குபெற மாட்டார் எனவும், உடனடியாக அவுஸ்திரேலியா திரும்புவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்தியாவில் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 த…
-
- 0 replies
- 351 views
-
-
மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் December 22, 2015 முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இந்தப் போட்டிகள் ஜனவரி 28ம் திகதி முதல் பெப்ரவரி 13ம் திகதி நடக்கிறது. இந்த தொடரில் லிப்ரா லெஜண்ட்ஸ், ஜெமினி அரேபியன்ஸ், காப்ரிகார்ன் கமெண்டர்ஸ், லியோ லயன்ஸ், விர்கோ சூப்பர் கிங்ஸ் மற்றும் சகிட்டரியஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கிறது. இதில் கங்குலி, ஷேவாக், காலிஸ், ஜெயவர்த்தனே, சங்கக்காரா, முரளிதரன், கில்கிறிஸ்ட், வெட்டோரி, பிரட் லீ, பிரையன் லாரா என பல முன்னாள் வீரர்கள் பங்கேற்கின்றனர். எமிர…
-
- 14 replies
- 1k views
-
-
சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக ஞானரூபன் தெரிவு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தால், இலங்கையிலுள்ள பல்கலைக்கழங்களில் சிறந்த விளையாட்டு வீரருக்கான தெரிவுக்கான இடம்பெறும் இணைய வாக்கெடுப்பில் யாழ்ப்;பாணப் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் முதலிடம் பெற்றுள்ளார். ஞானரூபனுக்காக 5481 பேர் வாக்களித்தனர். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக hவவி:ஃஃளிழசவள.அழசயளிசைவை.உழஅஃஎழவந.pரி?சநகஸ்ரீ2சூ_ஸ்ரீ_என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இணைய வாக்கெடுப்பின் கடைசி திகதி 10 திகதி …
-
- 1 reply
- 476 views
-
-
சென்.ஜோன்ஸ் கல்லூரி விளையாட்டுப் போட்டி யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி, கடந்த வாரம் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் என்.ஞானப்பொன்ராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணக் கல்வி வலயப் பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா கலந்துகொண்டார். இல்ல மெய்வன்மைப் போட்டியில் 307 புள்ளிகளைப் பெற்ற பெடே இல்லம் முதலிடத்தையும், 217 புள்ளிகள் பெற்ற ஜோன்ஸ்ரன் இல்லம் 2 ஆம் இடத்தையும், 216 புள்ளிகள் பெற்ற பர்ஹிற்றர் இல்லம் மூன்றாமிடத்தையும், 171 புள்ளிகள் பெற்ற தோம்ஸன் இல்லம் நான்காமிடத்தையும், 157 புள்ளிகளைப் பெற்ற ஹண்டி இல்லம் ஐந்தாவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.…
-
- 0 replies
- 558 views
-
-
கரீபியன் பிரிமியர் லீக் February 13, 2016 கரீபியன் பிரிமியர் லீக் டி20 தொடரில் விளையாட சங்கக்காரா, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் தாங்கள் நாட்டில் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் நடத்தி வரும் கரீபியன் பிரிமியர் லீக் தொடரும் பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் இதில் விளையாடும் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி தென்ஆப்பிரிக்காவின் அணித்தலைவர் டிவில்லியர்சை ஒப்பந்தம் செய்துள்ளது. அதேபோல் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஜமைக்கா டாலாவாஸ் அணிக…
-
- 0 replies
- 517 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்திய தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 1 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய 4 ஆவது ஒருநாள் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 262 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் சதம் (109) விளாசினார்.தென்ஆப்பிரிக்கா சார்பில், ரபாடா 4 விக்கெட்டுகளையும், இம்ரான் தாகீர் 3 விக்கெட்டையும் கைப்பற்றினர். வெ…
-
- 0 replies
- 470 views
-
-
டிக்கெட் விற்பனையில் முறைகேடு: பிஃபா முன்னாள் பொதுச்செயலாளருக்கு 12 ஆண்டுகள் தடை! உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விற்பனையில், முறைகேட்டில் ஈடுபட்டதாக பிஃபா முன்னாள் பொதுச்செயலாளர் ஜெரோம் வால்கிக்கு 12 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலக கால்பந்து சம்மேளனமான பிஃபாவில் பெரும் ஊழல் நடந்திருப்பது அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைவராக இருந்த ஜோசப் பிளேட்டர் பதவி விலக நேரிட்டது. அத்துடன் பொதுச் செயலளாளராக இருந்த ஜெரோம் வால்கி மீதும் ஊழல் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. உலகக் கோப்பை கால்பந்து போட்டியை ஒளிபரப்புவது குறித்த மீடியா உரிமையை வழங்குவதிலும் மற்றும் டிக்கெட் விற்பனையிலும் ஜெரோம் வால்கி, …
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கை 157 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்தில்... February 13, 2016 10:09 am 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை 25 தங்கப் பதக்கங்களையும் 53 வெள்ளிப் பதக்கங்களையும், 79 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை வென்றுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கை 157 பதக்கங்களை இதுவரை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்ற அதேவேளை முதலாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. இந்தியா இதுவரை 146 தங்கப் பதக்கங்களையும் 80 வெள்ளிப் பதக்கங்களையும் 23 வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளது. பாகிஸ்தான பதக்கப் பட்டியலில் மூன்றாம் இடத்தை தன்வசப்படுத்தியுள்ளது. http://tamil.adaderana.lk/news.php?nid=76994
-
- 0 replies
- 467 views
-
-
’’புகைப்படம் எடுக்கும் போது வோட்சனின் வயிற்றில் ஓங்கி குத்த நினைத்தேன்’’ கெய்ல் February 12, 2016 மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்லும், அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும் ஐபிஎல் பற்றி டுவிட்டரில் ஜாலியாக பேசிக் கொண்டனர். கடந்த 2009ம் ஆண்டு பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இதில் கிறிஸ் கெய்லின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு ஷேன் வார்டன் ஆக்ரோஷமாக அதை கொண்டாடினார். இது கிறிஸ் கெய்லுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் மோசமான நடத்தைக்காக வாட்சனுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் ஐபிஎல் போட்டியில் வாட்சன், கிறிஸ் கெய்ல் இடம்பெற்றுள்ள பெங்க…
-
- 0 replies
- 479 views
-
-
இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக யாழ் பல்கலைக்கழக மாணவன் February 12, 2016 இலங்கையின் சிறந்த விளையாட்டு நட்டசத்திரமாக யாழ் பல்கலைக்கழக கால்ப்பந்தாட்ட வீரனும் தேசிய கால்ப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளவருமான செபமாலைநாயகம் ஞானரூபன் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இலங்கை பல்கலைக்கழங்களிலுள்ள சிறந்த விளையாட்டு வீரரை தெரிவு செய்யும் வகையில் இடம்பெற்ற இணைய வாக்கெடுப்பிலேயே சிறந்த வீரராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 16 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களில் சிறந்த விளையாட்டு வீரனைத் தெரிவு செய்வதற்காக http://sports.moraspirit.com என்னும் இணையத்தளத்தில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு ஆரம்பமான நாளிலிருந்து முதலிடம்…
-
- 0 replies
- 447 views
-
-
இரட்டைக்குழந்தைகளுடன் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்து இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இலங்கை வீராங்கனை தனது விடாமுயற்சியால் பதக்கம் வென்று தனது தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். உபெக்ஷிகா எகொடவெல என்ற இலங்கை வீராங்கனையே தெற்காசிய விளையாட்டு போட்டியில் குறிபார்த்து சுடும் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். குறித்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிக்கு தெரிவாகும் முன்னரே கர்ப்பமடைந்துள்ளார். இருப்பினும் தனது விடாமுயற்சியில் தொடர்ந்தும் பயிற்சிகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் போட்டிக்குத் தயாரகிக் கொண்டிருக…
-
- 1 reply
- 561 views
-
-
இலங்கை மகளிர் அணி இந்தியாவுக்கு புறப்பட்டது இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள மகளிர் சர்வதேச இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றவுள்ள சஷிகலா சிறிவர்தன தலைமையிலான இலங்கை அணி நேற்று இந்தியாவை சென்றடைந்தது. இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில், சஷிகலா சிறிவர்தன (அணித் தலைவர்), சமரி அத்தப்பத்து (உப தலைவர்), யஷோதா மெண்டிஸ், ஓஷாடி ரணசிங்க, டிலானி மனோதரா, பிரசாதனி வீரக்கொடி, அமா காஞ்சனா, ஏஷானி லொக்குசூரிய, உதேஷிகா பிரபோதனி, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, நிலக் ஷி டி சில்வா, ஹன்சிமா கருணாரட்ன, நிபுணி ஹன்சிகா, ஹர்ஷிதா மாதவி ஆகியோர் இடம்பெறுகின்றனர். http://www.virakesari.lk/article/3069
-
- 0 replies
- 355 views
-
-
உலகக் கிண்ண மகளிர் இறுதி ஆட்டம் 2017 லோர்ட் விளையாட்டரங்கில் நடைபெறும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் 2017 இறுதி ஆட்டம் லோர்ட் விளையாட்டரங்கில் நடத்தப்படும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அத்துடன் டார்பிஷயர், க்ளொஸ்டர்ஷயர், லெஸ்டர்ஷயர், சமர்செட் ஆகிய விளையாட்டரங்குகளிலும் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. மகளிர் உலகக் கிண்ண கிரிக்ெகட் போட்டிகள் இங்கிலாந்தில் அடுத்த வருடம் ஜூன் 26 முதல் ஜூலை 23 வரை நடைபெறவுள்ளன. எட்டு நாடுகளின் அணிகள் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றவுள்…
-
- 0 replies
- 370 views
-
-
தொடர்ச்சியான 100 ஆவது டெஸ்ட் போட்டி சாதனையை நோக்கி பிறெண்டன் மெக்கலம் 2016-02-12 11:14:45 அவுஸ்திரேலியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் வெலிங்டன், பேசின் ரிசேர்வ் விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நியூஸிலாந்து அணித் தலைவர் ப்றெண்டன் மெக்கலமின் நூறாவது டெஸ்ட் போட்டியாக அமையவுள்ளது. ஒரு நூற்றாண் டுக்கும் மேற்பட்ட டெஸ்ட் கிரிக்கெட் வரலா ற்றில் பிறெண் டன் மெக்கலம் அரும் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தவுள்ளார். நியூஸிலாந்தின் வெலிங்டன் விளையாட்டரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு முன்னர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் நாணயச் சுழற்சிக்காக அரங்கினுள் செல்லும்போது பிறெண்டன் மெக்…
-
- 1 reply
- 375 views
-
-
சிவப்பு அட்டைக்கு பிள்ளையார் சுழி போட்ட இங்கிலாந்து கிரிக்கட் கழகம் February 11, 2016 இங்கிலாந்து கிரிக்கெட் கிளப் ஒன்று மைதானத்தில் ரகளை செய்யும் கிரிக்கெட் வீரர்களுக்கு ’சிவப்பு அட்டை’ கொடுக்கும் முறையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. கால் பந்தாட்ட போட்டியின் போது தகராறு செய்யும் வீரர்களுக்கு, நடுவர்கள் மஞ்சள் அல்லது சிவப்பு அட்டை காட்டுவது வழக்கம். மஞ்சள் அட்டை வீரரை எச்சரிக்கை செய்யும் படியும், சிவப்பு அட்டை அவர்களை மைதானத்தை விட்டு வெளியேற்றும் குறியையும் குறிக்கும். தற்போது அதே பாணியில் கிரிக்கெட்டிலும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டை காண்பிக்கும் முறையை புகுத்த முடிவு செய்துள்ளது இங்கிலாந்தின் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப். இந்த கிளப்பின் நட…
-
- 1 reply
- 410 views
-
-
0 ரன்னில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்த இங்கிலாந்து உள்ளூர் அணி பிரதி இங்கிலாந்தில் 6 ஓவர் கொண்ட இண்டோர் சாம்பியன்ஸ்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் கிறிஸ்ட் சர்ச் யுனிவர்சிட்டி- பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின. முதலில் பாப்சைல்டு கிரிக்கெட் கிளப் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையான ஒருவர் பின் ஒருவராக அவுட் ஆனார்கள். குறைந்த ஓவர் போட்டி என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாட நினைத்தார்கள். ஆனால், ஒரு சிங்கில் ரன் கூட அவர்களால் எடுக்க முடியவில்லை. இதனால் ரன்ஏதும் எடுக்காமல் 2…
-
- 2 replies
- 492 views
-
-
விளையாட்டுத் துளிகள்: சென்னையில் ஏசியன் ரக்பி போட்டி மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டங்களில் சென்னை அணி 15-0 என்ற கோல் கணக்கில் வேலூர் அணியையும், கிருஷ்ணகிரி 5-0 என்ற கணக்கில் திருவண்ணாமலையையும், திருவள்ளுர் 3-1 என்ற கணக்கில் கடலூர் அணியையும் தோற்கடித்தன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் தமிழ்நாடு ரக்பி கால்பந்து யூனியன் சார்பில் ஏசியன் ரக்பி செவன்ஸ் இரண்டாவது சீசன் போட்டிகள் சென்னையில் வரும் 20 மற்றும் 21ம் தேதிகள் நடைபெறுகிறது. இதில் ஆசிய நாடுகளை சேர்ந்த இந்தியா, தென் கொரியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷியா, கஜகஸ்தான், சவுதி அரேபியா, சிரியா, குவாம், வங்கதேசம், நேபாளம், ஐக்கிய அரபு …
-
- 0 replies
- 506 views
-
-
பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார் ஜொன்சன் February 11, 2016 இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் தன்மீதான பாலியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் அடம் ஜொன்சன் மீது மூன்று பாலியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் பிரெட்போர்ட் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற குறித்த வழக்கு மீதான விசாரணைகளின் போது 15 வயது சிறுமி ஒருவருடன் தான் பாலியல்; ரீதியான உறவினை பேணி வந்ததாக தெரிவித்துள்ளார். எனினும், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஏனைய இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்களையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 546 views
-
-
வீரர்கள் தவறுகள் செய்யவும் வாய்ப்பு வழங்க வேண்டும்: அண்டர் 19 அணி பயிற்சியாளர் ராகுல் திராவிட் பேட்டி இந்திய அண்டர் 19 கேப்டன் இஷான் கிஷன் (இடது), பயிற்சியாளர் ராகுல் திராவிட். | படம்: விவேக் பெந்த்ரே. பயிற்சியாளர் ராகுல் திராவிடின் வழிகாட்டுதலுடன் இந்திய அண்டர் 19 அணி வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதிக்குள் பிரவேசித்துள்ளது. இந்நிலையில் ராகுல் திராவிட் வீரர்களுடனான தனது அனுபவம் பற்றி பகிர்ந்து கொண்டார். ஐசிசி கிரிக்கெட் இணையதளத்துக்கு அவர் அளித்த வீடியோ நேர்காணலில் கூறியிருப்பதாவது: நான் இளம் வீர்ர்களுடன் பணியாற்றுவதை மகிழ்ச்சியுடன் செய்து வருகிறேன், இளம் வீரர்களுடன் உரையாடி வருகிறேன். எனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்…
-
- 0 replies
- 248 views
-
-
U19 சிங்கம் ரிசாப் பண்ட் தான் அடுத்த விராத் கோலியா? 2008ம் ஆண்டு ஜூனியர் கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் பலரும் ஜொலித்திருந்தனர். அந்தப் பல நட்சத்திரங்களுள் இன்று துருவ நட்சத்திரமாய் ஜொலிப்பது என்னவோ விராத் கோலி மட்டும் தான். அதற்கடுத்தது இந்திய அணிக்குள் வந்தவர்களெல்லாம் ஐ.பி.எல் செயல்பாட்டால் ஜொலித்தவர்களே ஒழிய, ஜூனியர் உலகக்கோப்பை யாருக்கும் பெரிய அளவில் அங்கீகாராம் பெற்றுத் தரவில்லை. ஆனால் தற்போது வங்கதேசத்தில் நடந்துவரும் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் ரிசாப் பன்ட். கோலியைப் போலவே இந்திய அணியின் வருங்காலமாய் இவர் உருவெடுக்க அனைத்து சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. ஒரே ஒரு ஊருக்குள்…
-
- 0 replies
- 514 views
-
-
தேசிய கீதத்தின் போது அநாகரீகமாக நடந்த அவுஸ்திரேலிய வீரர் February 11, 2016 அவுஸ்திரேலிய தேசிய கீதம் ஒலிக்கும் போது அந்நாட்டு வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது தேசிய கீதம் பாட அவுஸ்திரேலிய வீரர்கள் வட்டமிட்டு நின்றனர். அப்போது சக வீரர் ஆடம் சம்பாவின் இடுப்பில் கை வைத்திருந்த அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் காவாஜா அநாகரீகமாக நடந்து கொண்டார். இது அங்கிருந்த கமெராவில் பதிவானது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டுவிட்டரில் விளக்கம் அளித்த காவாஜா, ”ஹா..ஹா.. எனது பின் பக்கம் க…
-
- 0 replies
- 325 views
-
-
மெத்யூ 7 தங்கங்களை வென்று சாதனை (குவாஹாட்டியிலிருந்து எஸ். ஜே. பிரசாத்) தெற்காசிய விளையாட்டு விழா அத்தியாயமொன்றில் 7 தங்கப் பதக்கங்களை வென்ற நீச்சல் வீரர் மெத்யு அபேசிங்க இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இந்தியாவின் அசாம் மாநிலத்தின் குவாஹாட்டி மற்றும் மேகாலயா மாநிலத்தின் ஷில்லொங்கில் நடைபெற்று வரும் 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் ஆறாம் நாளான நேற்று துப்பாக்கிசுடுதல், ஸ்கொஷ், மேசைப்பந்தாட்டம், டென்னிஸ், பூப்பந்தாட்டம் (பட்மின்டன்) ஆகிய போட்டிகளும் நடைபெற்றன. நீச்சல் போட்டி சருசாஜாய், டாக்டர் ஸக்கிர் ஹுசெய்ன் ந…
-
- 1 reply
- 436 views
-
-
நியூஸி. கிரிக்கெட் நேரலையை 'மறந்த' இந்திய டிவி சேனல்கள்! நியூஸிலாந்தில் நடைபெறும் சர்வதேச இருதரப்பு ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் இந்தியத் தொலைக்காட்சியில் எதிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுவதில்லை. ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக உள்ளது. உலகக்கோப்பை ஒரு ஐசிசி நிகழ்வு, அதனால் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வதேச போட்டிகள் நேரடி ஒளிபரப்புக்கு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதே தற்போதைய நிலவரம். கடைசியாக நியூஸிலாந்துக்கு இந்திய அணி பயணம் மேற்கொண்ட போது டெஸ்ட், ஒருநாள் தொடர்கள் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன, ஆனால் அதன் பிறகு சுமார் 2 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் நடைபெறும் இருதரப்பு சர்வத…
-
- 0 replies
- 574 views
-