விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7844 topics in this forum
-
அயல்நாடுகளில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணிக்கு இல்லை: ஹெய்டன் அயல்நாட்டு மைதானங்களில் தங்களால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்கிறார் முன்னாள் ஆஸி. தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன். தி டெய்லி டெலிகிராப் பத்திரிகையில் அவர் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது: “தங்கள் சொந்த நாட்டை விட்டு வெளியில் வந்தால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இந்திய அணியினரிடத்தில் இல்லை என்பதே அந்த அணியின் மிகப்பெரிய பலவீனம். ஒன்று டெஸ்ட் போட்டியின் முதல் நாளை மோசமாகத் தொடங்குகின்றனர், அல்லது முடிவுத் தருணங்களில் கோட்டை விடுகின்றனர். ஆட்டத்தின் முக்கியத் தருணங்களை அவர்கள் இழக்கின்றனர். மேலும், அந்த அணி எழுப்பும் புகார் சத்தங்களும் நன்றா…
-
- 0 replies
- 509 views
-
-
துணை அங்கத்துவ நாடுகளின் கையில் அவமானப்படும் ஐசிசி அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், சிம்பாப்வே ஆகியன சர்வதேச கிரிக்கெட் சபையின் முழு அங்கத்துவமுடைய நாடுகளாகக் காணப்படுகின்றன. இவை டெஸ்ற் விளையாடும் தகுதியையும் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இவற்றிற்கு மேலதிகமாக 38 நாடுகளை சர்வதேச கிரிக்கெட் சபையானது துணை அங்கத்துவ நாடுகளாக அங்கீகரித்துள்ளது. இந்த 38 நாடுகளில் ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஹொங் கொங், பப்புவா நியூகினியா ஆகிய நாடுகள் ஒருநாள் சர்வதேச அந்தஸ்தினைக் கொண்ட துணை அங்கத்துவ நாடுகளாகக் காணப்படுகின்றன. இரண்டாயிரத்துப் பதினொராம் ஆண்டு இட…
-
- 0 replies
- 355 views
-
-
9 டக்கு.. ஒரே ஒரு டன்.... பிளைட்டை எடுத்துக் கொண்டு வந்த வெட்டிமுனி! மெல்போர்ன்: உலகக் கோப்பை இறுதிப் போட்டி என்றாலே சுவாரஸ்யமானதுதான். பெரும் பரபரப்புகளுக்கு மத்தியில் நிறைய காமெடிகளும், சோகங்களும், திருப்பங்களும் அரங்கேறும். அந்த வகையில் 1979ல் நடந்த இறுதிப் போட்டி மறக்க முடியாதது. 1979ம் ஆண்டு நடந்த இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இங்கிலாந்தும் மோதின. இந்தப் போட்டியில் மொத்தம் 9 வீரர்கள் டக் அவுட் ஆகினர். இது ஒரு சாதனையாக இன்றளவும் உள்ளது. மேற்கு இந்தியத் தீவுகள் கொடி கட்டிப் பறந்த காலம் அது. விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன் அதகளப்படுத்திய சமயம் அது. கிளைவ் லாயிட் என்ற பிரமாதமான கேப்டன் தலைமையில் மிகப் பயங்கரமான அதி வேகப் பந்துவீ…
-
- 0 replies
- 868 views
-
-
நேபாளத்தில் திங்களன்று ஆரம்பமான ஆசிய கால்பந்தாட்ட கூட்டுச்சம்மேளனத்தின் 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பிராந்திய கால்பந்தாட்டப் போட்டியில் மாலைதீவுகள் அணியை இலங்கை அணி 6 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் துவம்சம் செய்துள்ளது. காத்மண்டு இராணுவ உடற்கலை நிலைய மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சுரேந்திரன் கௌரி (4ஆவது நிமிடம்), சிவனேஸ்வரன் தர்மிகா (70ஆவது நிமிடம்) ஆகியோர் கோல்களைப் போட்டமை குறிப்பிடத்தக்கது.14 வயதுக்குட்பட்ட இலங்கை பெண்கள் அணியின் உதவி தலைவியாக கௌரி விளையாடுகின்றமை மற்றொரு விசேட அம்சமாகும். வலைப்பந்தாட்டத்தை விட இலங்கை விளையாட்டு அணியில் யாழ். பாடசாலை மாணவி ஒருவ…
-
- 0 replies
- 456 views
-
-
12 DEC, 2023 | 03:28 PM (நெவில் அன்தனி) 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த மெய்வல்லுநர்களாக நோவா லைல்ஸ், மொண்டோ டுப்லான்டிஸ், கெல்வின் கிப்டம், டிகிஸ்ட் அசேஃபா, ஃபெய்த் கிப்பிகோன், யூலிமா ரோஜாஸ் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். மொனாக்கோவில் திங்கட்கிழமை (11) நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விழாவின்போது உலக சாம்பியன்கள் மற்றும் உலக சாதனை படைத்தவர்கள் இறுதி வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்த வருடத்தின் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர்களாக இம்மானுவேல் வன்யோன்யி, ஃபெய்த் செரோட்டிச் ஆகியோர் தெரிவாகினர். வாக்களிக்கும் முறையின்போது பெறப்பட்ட கருத்துக்களைப் பின்பற்றி இந்த வருடத்துக்கான உலக மெய்வல்லுநர் விருதுகள் வழங்கப்பட்ட…
-
- 0 replies
- 355 views
- 1 follower
-
-
அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் – அரையிறுதிக்குள் நுழைந்தனர் நடால், சிட்சிபாஸ் ஆண்டின் முதலாவது கிராட்ஸ்லாம் தொடரான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப்போட்டிகளினுள் கிரேக்கத்தின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் ஸ்பெயினின் ரபேல் நடால் ஆகியோர் நுழைந்துள்ளனர். இதேவேளை, மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் டானியல் கொலின்ஸ் மற்றும் சென் குடியரசின் கிவிட்டோவா ஆகியோர் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் கடந்த 7 ஆம் திகதி முதல் அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகின்றது. இதில் இன்று இடம்பெற்ற காலிறுதிப்போட்டியொன்றில், ரபேல் நடால் அமெரிக்க இளம் வீரர் பிரான்செஸ் ரைபோவை எதிர்கொண்டார். மிகவும…
-
- 0 replies
- 284 views
-
-
பார்முலா 1 : கிண்ணத்தை வென்றார் ஹமில்டன் பார்முலா 1 கார்பந்தய போட்டியில் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார். கார்பந்தயத்தில் முதலிடத்தில் இருக்கும் பார்முலா 1 போட்டியின் 9ஆவது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பரி சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நடந்தது. பந்தய தூரமான 306 கிலோ மீட்டர் இலக்கை மெர்சிடஸ் அணியின் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் 1 மணி 31 நிமிடம் 27.729 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்து கிண்ணம் வென்றார். ஜேர்மனி வீரர்கள் ரோஸ்பெர்க் 2ஆவது இடத்தையும் செபஸ்டியன் வெட்டல் 3ஆவது இடத்தையும் பெற்றனர். 19 சுற்றுகளை கொண்ட இந்த போட்டியில் இதுவரை நடந்துள்ள 9 சுற்று முடிவில் ஹமில்டன் 194 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரோஸ்பெர்க் 177 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும் உள்…
-
- 0 replies
- 237 views
-
-
Cherry blossom பின்னணியிலான 2020 ஒலிம்பிக் தீபம் டோக்கியோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது! எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கான தீபம் இன்று (புதன்கிழமை) டோக்கியோவில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பிப்பதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னதாக ஒலிம்பிக் தீபம் கிரேக்கத்திலிருந்து ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு தங்க நிறத்திலான குறித்த தீபம் சகுரா அல்லது செர்ரி மலரின் பின்னணியை கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் மிகுந்த ஆரவாரத்துடன் இடம்பெற்று வருகின்றது. இருந்த போதும் இந்த முறை 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தங…
-
- 0 replies
- 580 views
-
-
ஐரோப்பிய லீக் கிண்ண தொடர்: இரண்டாவது முறையாக சம்பியன் கிண்ணமேந்தியது செல்சியா அணி! யு.இ.எப்.ஏ. ஐரோப்பிய லீக் கிண்ண தொடரில் செல்சியா அணி, 4-1 என்ற கோல்கள் கணக்கில் ஆர்சனல் அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், செல்சியா அணி 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக்கை வென்ற பின் ஐரோப்பிய பட்டம் ஒன்றை வெல்வது இது முதல் முறையாகும். செல்சியா அணியின் ஐந்தாவது ஐரோப்பிய கிண்ணம் இதுவாகும். செல்சியா அணியை விடவும் இங்கிலாந்து கழகங்களில் லிவர்பூல் அணி அதிகமாக 8 முறை ஐரோப்பிய கிண்ணங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசர்பைஜான் தலைநகர் பகுவில் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், இரண்டு அணிகளும் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடின. எனினும் இர…
-
- 0 replies
- 687 views
-
-
செய்தித்துளிகள் 2013ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சூதாட்டம் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் குழு அறிக்கையில், ஐபிஎல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் ராமன் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. எனினும் கடந்த இரண்டாண்டுகளாக சுந்தர் ராமன் பதவியில் நீடித்து வந்தார். இதற்கிடையே பிசிசிஐ தலைவராக சஷாங் மனோகர் சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில் சுந்தர் ராமன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். ---------------------------- தோனியின் தலைமைத்துவ சாதனைகளை எட்டிப் பிடிக்க கோலி இன்னும் நீண்ட தொலைவு செல்ல வேண்டும். கோலி ஒரு அபாரமான பேட்ஸ்மேனாகத் திகழ்கிறார், கேப்டனாகவும் அவர் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் …
-
- 0 replies
- 193 views
-
-
சொந்த மைதானத்தில் பார்சிலோனாவிடம் 4 கோல்கள் வாங்கி ரியல்மாட்ரிட் படுதோல்வி ஸ்பானீஷ் லீக் கால்பந்து தொடரில் நேற்று இரவு நடைபெற்ற எல்கிளாசிகோ மோதலில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை தோற்கடித்தது. மாட்ரிட் நகரில் ரியல்மாட்ரிட் அணிக்கு சொந்தமான சான்டியாகோ பெர்னாபூ மைதானத்தில் 85 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது. ரியல்மாட்ரிட் அணியின் கரீம் பென்ஜமா,ஜேம்ஸ் ரோட்ரிகஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர். பார்சிலோனா அணியின் காயம் காரணமாக லயனல் மெஸ்சி இடம் பெறவில்லை. சவுரஸ் தலைமையில் பார்சிலோனாவின் முன்களம் ஆடியது. முதல் பாதியில் 11வது நிமிடத்தில் நெய்மர் கொடுத்த பாசை பயன்படுத்தி சவுரஸ் முதல் கோலை அடித்தார். அடு…
-
- 0 replies
- 299 views
-
-
ஒருநாள் போட்டிகளில் அதிவேக 50 சிக்சர்கள்: கோரி ஆண்டர்சன் சாதனை கோரி ஆண்டர்சன் விரைவில் 50 சிக்சர்கள் சாதனை. | படம்: ஏ.எப்.பி. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 50 சிக்சர்களை குறைந்த இன்னிங்சில் அடித்து புதிய சாதனை நிகழ்த்தினார் நியூஸிலாந்தின் அதிரடி வீர்ர் கோரி ஆண்டர்சன். இன்று ஆக்லாந்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 3 சிக்சர்களை அடித்தார். இதன் மூலம் 33 ஒருநாள் இன்னிங்ஸ்களில் கோரி ஆண்டர்சன் 51 சிக்சர்களை அடித்து மே.இ.தீவுகள் ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரசலின் சாதனையை முறியடித்தார். ஆந்த்ரே ரசல் 42 இன்னிங்ஸ்களில் 50 சிக்சர்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய ஆட்டத்தில் அதிரடி அரைசதம் கண்ட மார்…
-
- 0 replies
- 447 views
-
-
'உலகக் கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில் வாக்கெடுப்பு முறைகேடுகள் இல்லை' 2006ஆம் ஆண்டு நடந்த கால்பந்தாட்ட உலகக்கோப்பை போட்டிகளை ஜெர்மனிக்கு வழங்கியதில், வாக்களிப்பு முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை என்று, சுயாதீனமான விசாரணை ஒன்று தெரிவித்துள்ளது. 2006ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கோப்பை போட்டிகள் ஜெர்மனியில் நடைபெற்றன. இதில் தொடர்புடைய அனைவருடனும் தம்மால் பேச இயலவில்லை என்பதால், இதற்கான வாக்குகள் வாங்கப்படவில்லை என்று உறுதியாக கூற முடியாது என்றும் இந்த விசாரணையை மேற்கொண்ட சட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து விசாரிக்கும்படி, ஜெர்மன் கால்பந்தாட்டக் கழகம் இந்த சட்ட நிறுவனத்திடம் கோரியிருந்தது. 2005ஆம் ஆண்டு, ஜெர…
-
- 0 replies
- 419 views
-
-
தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட் சர்பராஸ் அகமட். | படம்: ஏ.பி. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுட…
-
- 0 replies
- 447 views
-
-
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் மறைந்த கூடைப்பந்து வீரர் கோபி பிரயன்ட்டுக்கு நடந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவர்கள் பிரையன்ட்டின், லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் ஜெர்சியை அணிந்து மலர்அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியான காட்சியாக அமைந்தது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கலாபஸாஸ் என்னும் இடத்தில் பனிமூட்டம் காரணமாக மலை மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் கோபி ப்ரையன்ட், அவரது மகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இதற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் செவ்வாய்கிழமை லேக்கர்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் இடையே ஸ்டேபிள்ஸ் சென்டரில் (Staples Center) நடக்க போட்டியை அமெரிக்க தேசிய கூடைப்பந்து கழகம் ரத்து செய்துள்ளது. h…
-
- 0 replies
- 352 views
-
-
நடுவர்களால் அல்ல; சிறந்த ஆட்டத்தால் முதல் இடத்தில் உள்ளோம்- ஷினேடின் ஷிடேன் சிறந்த ஆட்டத்தால் லா லிகா தொடரில் முதல் இடத்தில் உள்ளதாகவும் நடுவர்களால் அல்ல என்றும் ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் தெரிவித்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் கால்பந்து தொடரில் முக்கியமான லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் போன்ற முன்னணி அணிகள் உள்ளன. நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் - வில்லாரியல் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஒரு கட்டத்தில் வில்லாரியல் அணி 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. அதன்பின் ரியல் மாட்ரிட் அணி ஒரு கோல் அட…
-
- 0 replies
- 381 views
-
-
ஆசிய மெய்வல்லுநர் திறன்காண் போட்டியில் அனித்தா உட்பட மூவர் புதிய சாதனைகள் (நெவில் அன்தனி) தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் வியாழக்கிழமையன்று ஆரம்பமான ஆசிய மெய்வல்லுநர் போட்டிக்கான இரண்டாவது திறன்காண் போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களுக்கான கோலூன்றிப்பாய்தல் நட்சத்திரம் அனித்தா ஜெகதீஸ்வரன் உட்பட மூவர் இலங்கைக்கான புதிய சாதனைகளை நிலைநாட்டினர். பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 3.46 மீற்றர் உயரம் தாவிய அனித்தா, இலங்கைக்கான புதிய சாதனையை நிலைநாட்டினார். இதே மைதானத்தில் கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது திறன்காண் போட்டியில் 3.45 மீற்றர் உயரம் தாவி நிலைநாட்டிய தனது சொந்த சாதனையை அனி…
-
- 0 replies
- 450 views
-
-
சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளராக இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் சென்னையின் எஃப்.சி. பயிற்சியாளரான இருந்த இத்தாலியின் மார்கோ மெடாரசி நீக்கப்பட்டு, இங்கிலாந்தின் ஜான் கிரிகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட்டில் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் தொடங்கப்பட்டது. இதற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்திய கால்பந்து சம்மேளனமும் இந்தியன் சூப்பர் லீக் என்ற கால்பந்து தொடரை அறிமுகப்படுத்தியது. இதில் சச்சின் தெண்டுல்கர், டோனி ஆகியோர் அணிகளை வாங்கியுள்ளனர். 2014 முதல் இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. ரசிகர்கள் ஆதரவு அதிக அளவ…
-
- 0 replies
- 251 views
-
-
யுவராஜ், கைஃபின் ‘வாவ்’ சேஸிங்.. ஜெர்சியைக் கழற்றிச் சுழற்றிய கங்குலி..! #OnThisDay #15YearsOfHistoricalChasing மயிர்கூச்செரிதல். இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? எப்போதாவது உங்களுக்கு மயிர் கூச்செரிந்திருக்கிறதா? ஒருவிதப் பரவச நிலையை அடையும் தருணங்களில் மட்டுமே அதை அனுபவிக்கும் வாய்ப்புக் கிடைக்கும். ஒவ்வொருவருக்கும் ஏதாவதொரு நேரத்தில் இந்த பரவச நிலை கிடைக்கலாம். ஆனால் நூறு கோடி மக்களுக்கு ஒரே சமயத்தில் அப்படியொரு பரவச நிலை கிடைக்கிறது என்றால் அது எத்தகயதொரு முக்கியமான தருணமாக இருந்திருக்க முடியும்? 1983ல் உலககோப்பையை இந்தியா வென்றது என்பது அன்றைய தினத்தில் இந்தியாவில் உள்ள பெரும்பாலோனோருக்கு ஒரே சமயத்தில் தெரிந…
-
- 0 replies
- 637 views
-
-
தொப்பி வடிவில் மைதானம் பிபா உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் கட்டார் 2022ஆ-ம் ஆண்டு, பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடர் கட்டாரில் நடைபெறவுள்ளது. தீவிரவாதத்துக்கு கட்டார் ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் கட்டார் உடனான உறவை முறித்துக்கொண்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. இது ஒருபுறமிருக்க, எதிர்வரும் 2022ஆ-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் பிபா உலகக் கிண்ணக் கால்பந்துத் தொடருக்கான முன்னேற்பாடுகளை கட்டார் நாடு தொடங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, அரேபியத் தொப்பி வடிவிலான கால்…
-
- 0 replies
- 339 views
-
-
ஒருநாள் போட்டிகளில் அதிக 'டக்' அவுட்கள்: கிறிஸ் கெய்லுக்கு 4-வது இடம் செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 சிக்சர்) மற்றும் ரூசோ (132 ரன்கள், 98 பந்துகள், 9 பவுண்டரி 8 சிக்சர்கள்), ஆகியோரின் அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 42 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 361 ரன்கள் விளாசியது. தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் அணி 37.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி தோல்வி தழுவி தொடரை 1-4 என்று இழந்த்து. ஆம்லா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். இலக்கைத்…
-
- 0 replies
- 645 views
-
-
இலங்கை கிரிக்கெட்டில் மேற் கொள்ளப்படும் அரச தலையீடு களை பரிசீலிக்க சர்வதேச கிரிக் கெட் கவுன்சில் தீர்மானித்துள்ளது. அதேநேரம் திருப்தியடையக்கூடிய தீர்வு கிடைக்கும் வரை இலங்கை கிரிக்கெட்டிற்கு வழங்கப்படும் நிதி உதவியை தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் பணிப்பாளர்கள் சபை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் மற்றும் அவ்வாறான செயற்பாடுகளால் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அதிகாரிகளை தேர்வுசெய்வதற்கு இருக்கும…
-
- 0 replies
- 363 views
-
-
என்னைத் தாக்கியதற்கு வார்னர் கூறும் காரணம் நகைப்புக்குரியது: ஜோ ரூட் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். | படம்: ஏ.பி. அடங்கிய ஆஷஸ் தீ மீண்டும் பல்வேறு விதங்களில் மூட்டப்பட்டு வருகிறது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை, ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பர்மிங்ஹாம் மதுபான விடுதி ஒன்றில் தாக்கினார். இதற்கு வார்னர் கூறிய காரணம் என்னவெனில், வார்னர் நண்பரிடமிருந்து ‘விக்’ ஒன்றை பிடுங்கிய ஜோ ரூட் அதனைத் தனது கன்னத்தில் தாடியாக ஒட்டிக்கொண்டார். இது தென் ஆப்பிரிக்க்க வீரர் ஹஷிம் ஆம்லாவின் தாடியை கேலி செய்வது போல் இருந்தது, இதனால்தான் ஜோ ரூட்டைத் தாக்கினேன் என்றார் வார்னர். இதனையடுத்து ஆஷஸ் தொடர் முதல் டெஸ்ட் தொடங்குவதற்கு முன்பாக ஜோ ரூட், இரண்டு ட்விட்டர் பதிவுகளை வெளியிட்…
-
- 0 replies
- 300 views
-
-
நிருபருடன் தகராறு: அப்ரீடிக்கு எதிராக செய்தியாளர்கள் போர்க்கொடி ஷாகித் அப்ரீடி. | படம்: ஏ.எஃப்.பி. லாகூரில் இன்று செய்தியாளர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் பாதியிலேயே புறக்கணித்து வெளியேறிய பாகிஸ்தான் டி20 கேப்டன் அஃப்ரீடிக்கு எதிராக பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். லாகூர் கடாஃபி ஸ்டேடியத்தில் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது தொலைக்காட்சி சேனல் நிருபர் ஒருவர் அஃப்ரீடியிடம், “முந்தைய பாகிஸ்தான் டி20 கேப்டன்கள் போல் உங்கள் சாதனை கேப்டனாக சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எனவே உங்கள் தலைமை வழிமுறையில் மாற்றம் தேவை என்று கருதுகிறீர்களா?” என்று கேட்டார். இதற்கு முதலில…
-
- 0 replies
- 350 views
-
-
வாட்சன் சதம்.. ஒரு சாதனையும் கூட! சிட்னி: இந்தியாவுக்கு எதிரான 3வது டுவென்டி 20 போட்டியில் இன்று ஆஸ்திரேலிய கேப்டன் வாட்சன் போட்ட அதிரடி சதமானது, பல சாதனைகளுக்கும் வித்திட்டுள்ளது. 71 பந்துகளில்124 ரன்களைக் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் வாட்சன். காயமடைந்த ஆரோன் பின்ச்சுக்குப் பதில் இன்று கேப்டனாக செயல்பட்ட வாட்சன் பேட்டிங்கில் பேயாட்டம் போட்டார். சிட்னி மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியப் பந்து வீச்சை சட்னியாக்கி விட்டார் வாட்சன். மேலும் அவரது அபாரமான பேட்டிங்காகவும் இது அமைந்தது. கோஹ்லி செய்த தவறால் உண்மையில் 50 ரன்களில் இருந்தபோது வாட்சன் கொடுத்த அழகான கேட்ச்சை கோஹ்லி தவறவிட்டு விட்டார். அதன் பிறகு வாட்சனின் அதிரடி …
-
- 0 replies
- 476 views
-