Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தோனியின் விடாமுயற்சி இன்னிங்ஸ் வீண்: டெல்லியிடம் வீழ்ந்தது ஜார்கண்ட் 2 கேட்ச்கள் ஒரு ஸ்டம்பிங், 70 நாட் அவுட்: தோனி. | படம்: முரளி குமார். பெங்களூருவில் இன்று நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி 2-வது காலிறுதிப் போட்டியில் தனிமனிதனாக போராடிய தோனியின் ஆட்டம் வீணானது, ஜார்கண்ட் அணியை டெல்லி அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் வருண் ஆரோன் ஜார்கண்ட் அணிக்காக டாஸ் வென்று டெல்லி அணியை பேட் செய்ய அழைத்தாலும் தோனியே அணியை வழிநடத்தினார். பந்துகள் எழும்புவதும், தரையோடு தரையாக எழும்பாமலும் செல்லும் பேட்ஸ்மென்கள் திணறும் வகையிலான பிட்சில் டெல்லி அணி கடைசியில் பவன் நெகியின் அதிரடி 16 பந்து 38 ரன்களினால் 50 ஓவர்களில் 225 ரன்களை எட்டியத…

  2. கதறி அழுத ரசிகைக்கு ஆறுதல் கூறிய கோலி December 24, 2015 இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோலியை ரசிகை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டு கதறி அழுத சம்பவம் மும்பை வணிக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. டோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் அணியின் தலைவராக பொறுப்பேற்ற கோலி இலங்கை, தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவருக்கு எந்த அளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவு அதிகமாக ரசிகைகளும் உள்ளனர். இந்த நிலையில் ‘வொர்கன் பேஸன்’ நிறுனத்தின் தூதுவராக உள்ள கோலி நிறுவனம் ஒரு வருடத்தை நிறைவு செய்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் ரசிகர்களை சந்தித்தார். அப்போது ரசிகை ஒருவர் கோலியை திடீரென்று கட்டியணைத்துக் கொண்ட…

  3. இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…

  4. பரபரப்புக்கு பறக்கும் டிவி நிருபர்கள்: கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே விளாசல் ஹர்ஷா போக்ளே | படம்: பாக்ய பிரகாஷ் தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு ஒன்லைனர்களுக்காக அலைந்து திரிந்து வருகிறது என்ற விமர்சனங்களுக்கு இணங்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் கிரிக்கெட் தொகுப்பாளர், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே இன்று டிவி நிருபர்களின் சில கேள்விகளில் கடும் எரிச்சலடைந்துள்ளார். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் இட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்திய அணியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றிலிருந்து சற்று முன் திரும்பினேன். அதன் பிறகு நான் மனவருத்தத்தில் ஆழ்ந்தேன். அதாவது நான் தொந்தரவுக்குள்ளானேனா அல்லது விளையாட்டில் த…

  5. சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…

  6. பதின்மூன்று ஓவர்களில் பத்து விக்கெட்களை இழந்தமை எண்ணிப்பார்க்க முடியாத வீழ்ச்சி என்கிறார் மெத்யூஸ் 2015-12-24 10:56:33 நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியின் இரண்­டா­வது இன்­னிங்ஸில் இலங்கை அணி 13.4 ஓவர்­களில் பத்து விக்­கெட்­களை இழந்­தமை எண்­ணிப்­பார்க்க முடி­யாத மிக மோச­மான வீழ்ச்சி என அணித் தலைவர் ஏஞ்­சலோ மெத்யூஸ் தெரி­வித்­துள்ளார். இரண்­டா­வது இன்­னிங்ஸில் விக்கெட் இழப்­பின்றி 71 ஓட்­டங்­களைப் பெற்­றி­ருந்­த­போது பத்து விக்கெட்­களும் கைவ­ச­மி­ருக்க 126 ஓட்­டங்­களால் முன்­னி­லையில் இலங்கை இருந்­தது. ஆனால், அடுத்த 82 பந்­து­களில் பத்து விக்­கெட்­க­ளைய…

  7. ரொனால்டோவின் புதிய வீடு December 24, 2015 போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.47 கோடி மதிப்பில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார். 8 படுக்கை அறை, நீச்சல் குளம், சிறிய கால்பந்து மைதானம் என தனது கனவு இல்லத்தை 8500 சதுர அடியில் கட்டி முடித்துள்ளார். இந்த அழகிய வீட்டை அவரே வீடியோ மூலம் பதிவு செய்து பகிர்ந்துள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6613

  8. நட்சத்திர வீரர்கள் இல்லாதது வெறுப்பாக உள்ளது: மேற்கிந்தியத்தீவுகள் அணியின் பயிற்சியாளர் ஆதங்கம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பய ணம் செய்து விளையாடி வரும் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஹோபர்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில், இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அனுபவம் இல்லாத மேற்கிந்தியத்தீவுகள் அணி, ஆஸி. வேகப்பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் சரண்டர் ஆனது. அதேவேளையில் கிறிஸ் கெய்ல், வெயின் பிராவோ, டேரரன் சமி, ஆந்த்ரே ரஸல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேசிய அணிக் கான போட்டிகளில் பங்கேற்காமல், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஸ் டி 20 தொடரில் விளையாடி வருகின்றனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இ…

  9. மகனுடன் கிரிக்கெட் விளையாடும் சங்கா December 23, 2015 இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா சில விடயங்கள் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இலங்கை அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த சங்கக்காரா, சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரோடு தனது சர்வதேச சாதனை பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் தொடர்ந்து டி20 போட்டிகளிலும், இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டிப் போட்டியிலும் விளையாடி வருகிறார். தற்போது அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். முன்னதாக வங்கதேச பிரீமியர் லீக் போட்டியில் டாக்கா அணிக்கா விளையாடினார். அப்போது 5 வருடங்களுக்கு பிறகு நீங்கள் என்ன …

  10. முதல் 15 ஓவர்களில் 3 விக். அவசியம்: ஆஸி.யை வீழ்த்த கபிலின் வியூகம் ஜனவரி மாதம் ஆஸ்திரேவுக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் வெல்ல முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறும்போது, “அணியின் கேப்டன் பவுலர்களிடம் முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அறிவுறுத்துவது அவசியம். ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இசாந்த் சர்மாவிடம் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அதாவது 15 ஓவர்களில் அவர்கள் 90 ரன்கள் எடுத்தால் கவலை வேண்டாம் ஆனால் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருக்க வேண்டும். 15 ஓவர்கள் முட…

  11. பொக்சிங் டே டெஸ்ட்டில் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் December 23, 2015 தென் ஆபிரிக்க அணியுடனான பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டசன் பங்கேற்பது சந்தேகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கட் அணியின் முன்னணி வீரரான அண்டசன் வலது கையில் தசை இறுக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பித்து 30 ஆம் திகதி வரை டர்பனில் நடைபெறவுள்ள பொக்சிங் டே டெஸ்ட் போட்டியில் ஆன்டர்ஸன் பங்கேற்பது சாத்தியம் இல்லை என தெரியவருகின்றது. தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடரில் ஆன்டர்ஸன் பங்கேற்கவில்லை எனில் கிறிஸ் வோக்ஸ், ஸ்டீபன் பின…

  12. Tour de France 2017 ஜேர்மன் டியூசல்டோர்வ் நகரில் December 23, 2015 கடந்த 1987 ஆம் ஆண்டு ஜேர்மனின் பேர்லின் நகரில் ஆரம்பமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டியானது அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டே முதற்தடவையாக ஜேர்மனில் ஆரம்பமாகவுள்ளது. எனினும் டூர் டி பிரான்ஸ் சைக்கிளோட்ட போட்டிகள் ஜேர்மனில் ஆரம்பமாவது 2017 ஆம் ஆண்டு நான்காவது தடவை என்பதுடன் பிரான்ஸை விட்டு வெளியில் 22 ஆவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை 2016 ஆம் ஆண்டு பிராஸ்ஸில் நடைபெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/sports/?p=6564&cat=2

  13. தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர்; அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன: கங்குலி புகழாரம் தோனியை ‘கிரேட்' என்று புகழ்ந்த சவுரவ் கங்குலி. | படம்: பிடிஐ. தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார…

  14. ஐ.சி.சி. விருது : ஸ்டீவன் ஸ்மித், டி வில்லியர்ஸ் கைப்பற்றினர் ! இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கவுரவமிக்க கேரி சோபர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்டீவன் ஸ்மித்துக்குதான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இவர் 2வது முறையாக பெறுகிறார். ஜோகனஸ்பர்க்கில் நடந்த டி20 ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 56 பந்துகளில் 116 ரன்கள் விளாசிய டுப்லெசிக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்க…

  15. யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளி பதக்கம் ஆசிரியர்களுக்கான தேசியமட்ட மெய்வன்மைத் தொடரில் 25 தொடக்கம் 30 வயது பெண்கள் பிரிவினருக்கான போட்டியில் வடமாகாணம் சார்பாக யாழ். இந்துக் கல்லூரியை சேர்ந்த ஆசிரியை எஸ்.கீர்த்திகா நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் போன்றவற்றில் தங்கப் பதக்கத்தையும் 4× வீராங்கனைகள் பங்குபற்றும் 100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும் பெற்றுள்ளார். http://www.onlineuthayan.com/sports/?p=6284&cat=3

  16. மிரட்டல் மெக்குல்லம் ஏன் மிஸ் செய்வோம் தெரியுமா? அதிரடியாக கிரிக்கெட் ஆடுபவர்களை காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடுகிறார்கள் என்று கூறுவோம். ஆனால் உண்மையிலுமே காட்டுத்தனமாக கிரிக்கெட் ஆடக்கூடியவர் மெக்கல்லம். லகான் படத்தில் ஒருவர் மட்டையை நெட்டுக்குத்தாகப் பிடித்து வித்தியாசமான முறையில் கிரிக்கெட் ஆடுவது போன்ற காட்சி இடம் பிடித்திருக்கும், இதனை பார்த்த பலர் இப்படியெல்லாம் படத்தில் தான் கிரிக்கெட் ஆடுவார்கள் என்றபோது, நிஜத்திலும் இப்படி கிரிக்கெட் ஆட முடியும் என அனாயாச சிக்சர்களை பறக்கவிட்டு மாஸ் காட்டியவர் மெக்கல்லம். அவர் வரும் பிப்ரவரியில் ஓய்வு பெற போகிறாராம். அவரை கிரிக்கெட் உலகம் கட்டாயம் மிஸ் செய்யும். ஏன்? அந்த போட்டியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந…

  17. உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்துக்காக ராங்கின் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார். இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர…

  18. இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு அண்டர்-19 தொடரை வென்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட். இடது புறம் சர்பராஸ் கான், வலது புறம் ரிஷப் பண்ட். | படம்: பிடிஐ. பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ராகுல் திராவிட் பயிற்சியாளர். நேற்று வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதில் வீழ்த்தி இந்திய இளையோர் அணி சாம்பியன் ஆனது. இஷான் கிஷண் அணித்தலைவராக நியமிக்கப்பட ரிஷப் பண்ட் துணக் கேப்டனாக செயல்படுவார். இந்த அணியில் சர்பராஸ் கான், அர்மான் ஜாப…

  19. சென்னை சாம்பியன்: எங்க தல எலானோ, மெண்டொசாவுக்கு பெரிய விசில் போடு! இன்று நடந்த இந்தியன் சொப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் சென்னையின் எஃப்.சி அணி கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் சென்னை அணி 3-2 என்ற கோல்கணக்கில் கஒவாவை வீழ்த்தியது. முன்னதாக நடந்த அரையிறுதிப் போட்டிகளில் சென்னை அணி கொல்கத்தாவையும் கோவா அணி டெல்லியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின. சொந்த மைதானத்திலேயே இப்போட்டி விளையாடப்பட்டது கோவா அணிக்கு அனுகூலமாய் அமைந்தது. கோலே இல்லாத முதல் பாதி சென்னை அணியில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் கேப்டன் எலானோ புரூமரை சப்ஸ்டிட்யூட்டாக களமிறக்கினார் பயிற்சியாளர் மடரசி. ஆட்டம் தொடங…

  20. டோக்கியோ விமான நிலையத்தில் மெஸ்சியிடம் தகராறில் ஈடுபட்ட ரிவர்பிளேட் ரசிகர்கள் (வீடியோ) கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜப்பானில் உள்ள யோகஹாமா நகரில் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் பார்சிலோனா அணியுடன் அர்ஜென்டினாவை சேர்ந்த ரிவர்பிளேட் அணி மோதியது. பார்சிலோனா 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. போட்டியை காண ஆயிரக்கணக்கான ரிவர்பிளேட் ரசிகர்கள் யோகஹாமா நகருக்கு வந்திருந்தனர். போட்டி முடிந்ததையடுத்து நேற்று பார்சிலோனா அணி டோக்கியோவில் இருந்து ஸ்பெயினுக்கு புறப்பட்டது. இதற்கான டோக்கியோ விமான நிலையத்துக்கு பார்சிலோனா அணி வீரர்கள் நேற்று இரவு வந்தனர். அப்போது விமான நிலையத்தில…

  21. இலங்கைக்கு எதிரான நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையுடன் நடைப்பெறயுவுள்ள டெஸ்ட் போட்டிக்காக நியூசிலாந்து அணியின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான 12 பேர் கொண்ட அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது அதனடிப்படையில் , கடந்த போட்டிகளில் திறமையை வெளிக்காட்டாத அனுபவம் வாய்ந்த வீரர்களான மார்டின் கப்டில் மற்றும் மார்க் க்ரேக் ஆகியோர் தொடர்ந்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 10 ம் திகதி டனேடீன்னில் ஆரம்பமாகவுள்ளது. http://www.hirunews.lk/tamil…

  22. சர்வதேச போட்டிகளிலிருந்து பிரண்டன் மெக்கலம் ஓய்வு எதிர்வரும் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு பின்னர் தாம் ஓய்வு பெறப் போவதாக நியூசிலாந்து கிரிக்கெட் அணி தலைவர் பிரண்டன் மெக்கலம் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி மெக்கலத்தின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான மெக்கலம், 99 டெஸ்ட் போட்டிகளில் 6273 ஓட்டங்களையும், 254 ஒருநாள் போட்டிகளில் 5909 ஓட்டங்களையும், 71 டி20 போட்டிகளில் 2140 ஓட்டங்களையும் குவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கலம் தாம் எதிர்வரும் டி20 உலகக்கிண்ண போட்டிகளைக் கவனத்திற் கொண்டு தாம் இந்த முடிவை மேற்கொண்டதாக அறிவித்துள்ளார். எனவே டி20 உலகக்கி…

  23. செப் பிளட்டர் மற்றும் மைக்கல் பிளாட்டினிக்கு எதிராக தடை உலக கால்பந்து சம்மேளன தலைவர் செப் பிளட்டர் மற்றும் ஐரோப்பிய கால்பந்து சம்மேளன தலைவர் மைக்கல் பிளாட்டினி ஆகியோருக்கு கால்பந்து குறித்த நடவடிக்கைகளில் இருந்து 8 வருடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப் பிளட்டர் மற்றும் மைக்கல் பிளாட்டினிக்கு எதிராக தடை நடத்தை குறித்த புலன்விசாரணை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. 79 வயதான பிளட்டரின் மீதான தடை அவரது நீண்டகால ''கால்பந்து நிர்வாகி'' பதவியை முடிவுக்கு கொண்டுவருகிறது. பெப்ரவரியில் நடக்கவிருக்கும் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு முன்னதாக பதவி விலக அவர் ஏற்கனவே சம்மதித்துவிட்டார…

  24. தெற்காசிய கால்பந்தாட்ட தொடரில் வடமாகாண இளைஞர்களுக்கு வாய்ப்பு December 21, 2015 இந்தியாவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத் (SAFF) தொடருக்கான இலங்கை அணியில் இம்முறை இரண்டு வடமாகாண இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய காலபந்தாட்ட சம்மேளனத் (SAFF) தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் கெரளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரானது தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழு நாடுகள் பங்குபற்றவுள்ளது. இதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது தொடரிலிருந்து வில…

  25. உலகின் முதல்நிலை வீரராக வில்லியம்ஸன் நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான தொடரைத் தொடர்ந்து, சர்வதேச கிரிக்கெட் சபையால் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில், துடுப்பாட்டத் தரப்படுத்தலின் முதலிடத்தை, நியூசிலாந்தின் கேன் வில்லியம்ஸன் பெற்றுக் கொண்டுள்ளார். போட்டியின் முடிவில் கருத்துத் தெரிவித்திருந்த நியூசிலாந்துத் தலைவர் பிரென்டன் மக்கலம், 'அரசர்" என வில்லிம்ஸனை வர்ணித்திருந்தார். அதை ஏற்றுக் கொள்வது போல, சிறிதுநேரத்தில் வெளியான தரப்படுத்தலில், உலகின் முதல்நிலை வீரராக வில்லிம்ஸன் அறிவிக்கப்பட்டார். முதலிடத்தில் ஜோ றூட், இரண்டாமிடத்துக்குத் தள்ளப்பட்டார். புதிய தரப்படுத்தலின்படி, கேன் வில்லியம்ஸன், ஜோ றூட், …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.