விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஷரபோவா வெற்றி ஸ்பெயினில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை தோற்கடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் : மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஊக்கமருந்து சர்ச்சையால் 15 மாத கால தடையை அனுபவித்த ரஷிய வீராங்கனை மரிய ஷரபோவா, இந்த போட்டியில் ‘வைல்டு கார்டு’ சலுகை மூலம் பங்கேற்றுள்ளார். முதல் சுற்றில் குரோஷியாவின் மிர்ஜனா லுசிச் பரோனியை எதிர்கொண்டார். பரபரப்பான இ…
-
- 0 replies
- 273 views
-
-
சந்திமல், திஸர வெளியே : அகில தனஞ்சய உள்ளே , மலிங்க விளையாடுகிறார் இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணிக்கெதிராக விளையாடவுள்ள இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் 5 ஒருநாள் போட்டிகளிலும் ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடவுள்ளது. இந்நிலையில் சிம்பாப்வே அணிக்கெதிராக முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ள இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 30 ஆம் திகதியும் 2 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 2 ஆம் திகதியும் இடம்பெறவுள்ளது. இதேவ…
-
- 0 replies
- 912 views
-
-
பாகிஸ்தானுக்கு வீரர்களை அனுப்பி பலிக்கடாவாக்க ஒருபோது தயாரில்லை ; தயாசிறி பாகிஸ்தானுடான இலங்கையின் கிரிக்கெட் தொடரானது டுபாயிலேயே நடைபெறவுள்ளது. எமது வீரர்களை அங்கு பலிக்கடாவாக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லையென இணை அமைச்சரவைப்பேச்சாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது இணை அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், கேள்வி: பாகிஸ்தான் அணியுடன் விளையாட இலங்கை…
-
- 0 replies
- 320 views
-
-
‘பயிற்சிக்கு போல்ட் வரலாம்’ ஜேர்மனியக் கழகமான பொரிசியா டொட்டமுண்டின் பிரதம நிறைவேற்றதிகாரி ஹன்ஸ் ஜோச்சிம் வட்ஸ்கேயின் கருத்துப்படி, உலகின் வேகமான மனிதனான உசைன் போல்டை, தமது கழகத்தின் பயிற்சிக்கு வரவேற்க பொரிசியா டொட்டமுண்ட் தயாரகவுள்ளது. எப்போதாவது பயிற்சிக்காக போல்ட் இணைந்து கொள்ளலாம் என பொரிசியா டொட்டமுண்ட் கடந்தாண்டு நவம்பரில் தெரிவித்திருந்த நிலையிலேயே தற்போதும் அந்த வாய்ப்பை மீண்டும் போல்டுக்கு பொரிசியா டொட்டமுண்ட் தற்போது அளித்திருக்கின்றது. http://www.tamilmirror.lk/பிரதான-விளையாட்டு/பயிற்சிக்கு-போல்ட்-வரலாம்/44-206034
-
- 0 replies
- 453 views
-
-
புதிய ஒருநாள் அணித்தலைவர் ஒருவரை வேண்டி நிற்கிறதா இலங்கை? ThePapare.com இற்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் வாரியமானது (SLC) இந்தியாவுடன் ஆரம்பமாகவிருக்கும் ஒரு நாள் தொடரிலிருந்து இலங்கை ஒருநாள் அணிக்கு உபுல் தரங்கவுக்கு பதிலாக புதிய அணித் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உபுல் தரங்கவின் தலைமையில் இலங்கை அணி 16 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்திருப்பதோடு இந்தியா, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் நடைபெற்ற மூன்று தொடர்களில் வைட் வொஷூம் செய்யப்பட்டிருக்கின்றது. இலங்கை அணி இந்த வருடம் 22 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மாத்தி…
-
- 0 replies
- 308 views
-
-
விராட் கோலியின் கேப்டன் திறமை தீயாக பரவுகிறது: ரவி சாஸ்திரி புகழாரம் ரவி சாஸ்திரி, விராட்கோலி (கோப்புப் படம்) கேப்டன் விராட் கோலியின் திறமை நாளுக்கு நாள் தீ போல் வளர்ந்து, அணியில் பரவி வருகிறது என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரிக்க பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்தபோதிலும் 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி வெற்றியுடன் நாடு திரும்பியது. கடந்த 1992-ம் ஆண்டுக்கு பின் இந்திய அணி பல முறை தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட போதிலும் ஒருமுறைகூட தொடரை வென்றதில்லை. முகம்…
-
- 0 replies
- 203 views
-
-
சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு துபாய்: பந்து வீசும் முறையில் சந்தேகம் ஏற்பட்டால் அந்த பவுலர்களை சோதித்து பார்க்க சென்னையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரிஸ்பேனிலுள்ள ஆஸ்திரேலியாவின் தேசிய கிரிக்கெட் மையம் மற்றும் சென்னையிலுள்ள ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம் ஆகியவை சந்தேகத்திற்கிடமான பந்து வீச்சாளர்களின் பவுலிங்கை சோதித்து பார்க்கும் மையங்களாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பந்து வீச்சு சோதனை மையம்: ஐசிசி அறிவிப்பு இதுவரை பிரிஸ்பேனில் மட்டுமே இந்த சோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், இனிமேல் சென…
-
- 0 replies
- 642 views
-
-
குழந்தைப் பருவம் முதல் உலக சாம்பியன் வரை.. - கார்ல்சனைப் பற்றிய ஒரு நிருபரின் அனுபவம் செஸ் விளையாட்டில் மீண்டும் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் சரித்திரம் படைத்திருப்பதாகக் கூறுகிறார் ராக்கேஷ் ராவ். கார்ல்சன், பத்து வயது குழந்தை பருவத்தில் களம் இறங்கியது முதல் அவரைப் பற்றி தொடர்ந்து எழுதி வருகிறார் ‘தி இந்து’ மற்றும் ‘ஸ்போர்ட்ஸ்டார்’நாளிதழின் மூத்த செய்தியாளரான ராக்கேஷ் ராவ். அவர் தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார். முதன் முதலில் கார்ல்சன் நவம்பர், 2004-ல் செஸ் விளையாட ஸ்பெயின் வந்த போது அவரை அனைவரும் அதிசயமாக பார்த்தனர். கார்ல்சன் ஆடிய ஆட்டத்தைவிட குழந்தை முகம் மாறாத அவரை பார்க்கவே அனைவருமே ஆர்வம் காட்டினர். புகைப்படக்காரர்களும் போட்டி போட்டு…
-
- 0 replies
- 374 views
-
-
கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து இலங்கையில் கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்ப்பு : பீபா தலைவர் பிளட்டர் இலங்கை கால்பந்தாட்ட அபிவிருத்தியில் எனக்கு அதிருப்தி காணப்படுகின்ற போதிலும் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 75 வருட பூர்த்தி விழா உட்பட மற்றைய வைபவங்களில் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றேன் எனத் தெரிவித்துள்ள சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜோசப் செப் பிளட்டர், இலங்கையில் கிரிக்கெட்டின் செல்வாக்கை கடந்து கால்பந்து துறையை முன்னிலைப்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கடந்த முதலாம் திகதி பிரத்தியேக விமானம் மூலம் இலங்கைக்கு வருகை தந்திருந்த சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்கள் சம்மேளனத் தலைவர…
-
- 0 replies
- 369 views
-
-
39 ஆண்டுகால சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். December 29, 2018 மெல்போர்னில் நடந்து வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் பும்ரா 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் அறிமுக ஆண்டிலேயே சர்வதே அளவில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் எனும் பெருமையையும், இந்திய அளவில் முதல் வீரர் எனும் சாதனையையும் பும்ரா படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் பும்ரா, 15.5 ஓவர்கள் வீசி 4 மெய்டன் எடுத்து, 33 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவின் மிகச்சிறந்த பந்துவீச்சாக அ…
-
- 0 replies
- 682 views
-
-
''தேவையற்ற கட்டுப்பாடுகள்... பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பள்ளி மாணவர்களா?''- வாசிம் அக்ரம் ஒழுக்கம் என்ற பெயரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்களை பள்ளி மாணவர்களைப் போல அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நடத்தி வருவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் குற்றச்சாட்டியுள்ளார். வாசிம் அக்ரம் உருவாக்கியுள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கான அறக்கட்டளை தொடக்க விழா நேற்று கராச்சி நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய வாசிம் அக்ரம்'' கடந்த 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் வீரர்களில் சிலர் 'மேட்ச் பிக்சிங்' ஈடுபட்டதாக சிறைத்தண்டனை விதிக்கப்ப்ட்டது துரதிருஷ்டவசமானது. ஆனால் அதற்கு பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வீரர்களின் சுதந்திரத்தை பாதிக்கும்…
-
- 0 replies
- 462 views
-
-
மஹேல எதிர்ப்பு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவதால் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாரம்பரிய மரபுகள் மீறப்படுவதாக தெரிவித்திருக்கிறார் இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானுமாகிய மஹேல ஜயவர்தன. கிரிக்கெட் வரலாற்றில் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெஸ்ட் போட்டியை காணமைதானத்திற்கு ரசிகர்கள் கூட்டத்தை அதிகரிக்கும் வகையில், சில கவர்ச்சியான அம்சங்களை புகுத்த பல ஆண்டு காலமாக ஐ.சி.சி. முனைந்து வந்தது. பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவது இதில் முக்கியமானது. பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள சே…
-
- 0 replies
- 294 views
-
-
சானியாவின் அடுத்த ஜோடி யார்? கடந்த 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில், இந்திய டென்னிஸ் அணித் தேர்வில் யார்-யாருடன் ஜோடி சேருவது என்பதில் ஒரு களேபரமே நடந்தது. இறுதியில் 7 பேர் கொண்ட இந்திய டென்னிஸ் குழுவினர் வெறுங்கையுடன் திரும்பியது தான் மிச்சம். இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா, லியாண்டர் பெயசுடன் சேர்ந்து விளையாடினார். இந்த நிலையில் 2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் போது சானியா மிர்சா யாருடன் ஜோடி சேருவார் என்ற கேள்வி இப்போதே எழத் தொடங்கி விட்டது. சானியா சூப்பர் பார்மில் இருப்பதால் கலப்பு இரட்டையர் பிரிவு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்திய முன்னணி வீரர் ரோகன் போபண்ணாவிடம் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்திய…
-
- 0 replies
- 458 views
-
-
சுரேஷ் ரெய்னாவை ஒருநாள் அணியிலிருந்து நீக்கியிருக்கக் கூடாது: லஷ்மண் கருத்து சுரேஷ் ரெய்னா. | கோப்புப் படம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னாவை நீக்கியதால் இந்தியாவுக்கு ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்று கருதுகிறார் விவிஎஸ்.லஷ்மண். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு லஷ்மண் இது குறித்து கூறியதாவது: ஒரு பேட்ஸ்மென் குறைவாக உள்ளது என்றே கருதுகிறேன். ரெய்னா நீக்கப்பட்டது தவறு. உலகக் கோப்பையில் அவர் நன்றாகவே ஆடினார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடினமான தொடரை எதிர்கொண்டார் ரெய்னா. 6-ம் நிலையில் களமிறங்கி, புதிய களவியூக விதிமுறைகளின் கீழ் வெற்றிக்குத் தேவைப்படும் 8 அல்லது 10 ரன்களை எடுக்க நேரடியாக பெ…
-
- 0 replies
- 447 views
-
-
பூரண அங்கத்துவ நாடுகளுடன் கிரிக்கெட் விளையாட சந்தர்ப்பம் தரவேண்டும் என்கிறார் ஆப்கான் அணித்தலைவர் 2016-03-24 09:45:58 இணை உறுப்பு நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கூடுதல் வாய்ப்பு வழங்குமாறு கிரிக்கெட் விற்பனர்களான சச்சின் டெண்டுல்கர், பிறையன் லாரா, மைக்கல் வோன் ஆகியோர் குரல் கொடுத்திருப்பது தங்களை நெகிழ வைத்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவையில் பூரண அந்தஸ்து வகிக்கும் எந்தவொரு நாட்டையும் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். ஆப்…
-
- 0 replies
- 358 views
-
-
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் தினேஷ் சந்திமால் By Mohamed Azarudeen மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவிருக்கும், இரண்டாவது ஒருநாள் பயிற்சிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பதினொருவர் அணி இன்று (19) அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுலா வந்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணியினர் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், இரண்டு T20I போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடவிருக்கின்றனர். இந்த கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பமாவதற்கு முன்னர், மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கை…
-
- 0 replies
- 635 views
-
-
சகவீரர் ஊக்க மருந்தில் சிக்கியதால் 4X100 மீ ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை இழந்தார் உசைன் போல்ட் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் ரிலே ஓட்டக்குழுவினர். | படம்.ஏ.பி. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட்டுடன் 4X100மீ பந்தயத்தில் ஓடிய நெஸ்டா கார்ட்டர் ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டதால் உசைன் போல்ட் தங்கப்பதக்கத்தை இழந்தார். நெஸ்டா கார்ட்டர் அளித்த சிறுநீர் மாதிரிகளில் தடை செய்யப்பட்ட ‘மெதில்ஹெக்சானியமின்’ என்ற ஊக்கமருந்து இருந்தது மறு ஆய்வின் போது தெரியவந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது, இதனையடுத்து ‘ஜமைக்கா தடகள அணி தகுதியிழப்பு செய்யப்படுகிறது’ என்று ஒலிம்பிக் கூட்டமைப்பு தெரி…
-
- 0 replies
- 262 views
-
-
பாதி போதையில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசிய கிப்ஸ்: சுயசரிதையில் தெரிவித்துள்ளார் வரலாற்று சிறப்பு மிக்க சேஸிங்கில் 111 பந்தில் 175 ரன்கள் விளாசும்போது பாதி போதையில் இருந்ததாக தென்ஆப்பிரிக்க வீரர் கிப்ஸ் தெரிவித்துள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் மறக்க முடியாத போட்டிகளில் 13-3-2006 அன்று தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியாவிற்கு இடையிலான போட்டியும் ஒன்று. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 434 ரன்கள் குவித்தது. இவ்வளவு பெரிய ஸ்…
-
- 0 replies
- 360 views
-
-
ஐ.பி.எல். தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் விளையாடுவதில் சிக்கல்? அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐ.பி.எல்.தொடரில் பூனே மற்றும் குஜராத் அணிகள் பங்குபற்றுவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வழமைபோல் 8 அணிகள் பங்கேற்குமா? அல்லது 10 அணிகள் பங்கேற்குமா என்ற கேள்வி ரசிகர்களிடையே தோன்றியுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐ.பி.எல். தொடரின் தலைவர் ராஜீவ் சுக்லா, குஜராத் மற்றும் பூனே அணிகளுக்கு 2 ஆண்டுகள் மாத்திரம் விளையாடுவதற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கான ஒப்…
-
- 0 replies
- 354 views
-
-
பார்சிலோனாவின் பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் கண்ணீருடன் மெஸ்ஸி ஞாயிற்றுக்கிழமை காலை தனது பிரியாவிடை செய்தியாளர் சந்திப்பில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதி செய்தபோது லியோனல் மெஸ்ஸி கண்ணீர் விட்டார். பார்சிலோனாவை விட்டு வெளியேறுவது தனது வாழ்க்கையில் கடினமான தருணம் என்று 34 வயதான மெஸ்ஸி விவரித்தார். லியோனல் மெஸ்ஸி தனது செய்தியாளர் சந்திப்பைத் தொடங்கியபோது கண்ணீரை எதிர்த்துப் போராடினார், அதில் அவர் தனது முழு வாழ்க்கையையும் விளையாடிய கால்பந்து கிளப்பான பார்சிலோனாவை விட்டு வெளியேறுவதை உறுதிப்படுத்தினார். அவர் ஒரு தொடக்க அறிக்கையை கூறுவதற்கு முன்பு அவர் உணர்ச்சிவசப்பட்டார். "இந்த சமீபத்திய நாட்களில், நான் என்ன…
-
- 0 replies
- 279 views
-
-
ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை புரியுமா கத்துக்குட்டி ஸ்காட்லாந்து! ஒரு பக்கம் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் பற்றி கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கும்போது, மறு பக்கம் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதன்முறையாக ஒருநாள் தொடரை வெற்றி பெறும் நோக்குடன் களத்தில் உள்ளது ஸ்காட்லாந்து. ஜிம்பாப்வே - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற்று வருகின்றது. கடந்த வியாழக்கிழமை ஸ்காட்லாந்தின் எடின்பர்க் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேவை முதன்முறையாக வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இன்று நடக்கும் இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது ஸ்காட்லாந்து…
-
- 0 replies
- 251 views
-
-
ஐரோப்பிய செய்தியாளர் - குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வுகள் வட கெளக்கசஸ் (Kaukasus) முஸ்லீம்களின் மிரட்டல்கள் மத்தியிலான பீதியில், ரஷ்ய நாட்டின் சொற்சி (Sotchi) நகரில் இன்று ஆரம்பமாகிறது. 37,000 பொலிஸ் படையினர், விளையாட்டு அரங்குகளைச் சுற்றிக் காவலில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரஷ்யாவின் பல பெரும் நகரங்கள் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்களாகப் பிரகடணம் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் கடும் சோதனைகள் இடம் பெறுகின்றன. விளயாட்டு வீரர்களை அச்சுறுத்தும் வகையில், ஜேர்மன் இத்தாலி உங்கான் போன்ற நாடுகளுக்கு கெளக்கசஸ் புரட்சியாளர்களால் கடிதங்கள் மூலம் மிரட்டல்கள் விடப்பட்டுள்ளது. அதிகமான நாடுகள் தங்கள் விளையாட்டு வீர்ர்களையும், வீராங்கனைகளையும் பாதுகாக்கும் வகையில்…
-
- 0 replies
- 447 views
-
-
2019 வரை திஸரதான் தலைவர் : மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார் அமைச்சர் ஒவ்வொரு தொடருக்கும் ஒவ்வொரு அணித் தலைவரை நியமிக்கும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் திட்டத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 2019ஆம் ஆண்டுவரை திஸர பெரேராவே தலைவராக நீடிப்பார் என்றும் அவர் தலைமையிலான உலகக் கிண்ண அணியை உருவாக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கைக் கிரிக்கெட் அணி தற்போது கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்த பல தோல்விகளால் அணி ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இலங்கை அணியின் மூன்றுவகை கிரிக்கெட் …
-
- 0 replies
- 268 views
-
-
இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை: சுனில் கவாஸ்கர் பார்டர்-கவாஸ்கர் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணிக்கு முற்றிலும் புதிய பந்துவீச்சாளர்கள் தேவை என்று சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். என்.டி.டி.வி.-க்கு கவாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: 2-வது டெஸ்ட் தொடராக ஆஸ்திரேலியா அணி இந்திய பந்து வீச்சை ஒன்றுமில்லாமல் அடித்துள்ளது. 2011-12-இல் பவுலர்கள் எப்படி செயல்பட்டனரோ அப்படித்தான் இந்தத் தொடரிலும் செயல்பட்டனர். 20 விக்கெட்டுகளை வீழ்த்த விருப்பம் இருப்பதாக அவர்களிடத்தில் நான் எதையும் காணவில்லை. எனவே தற்போதுள்ள பவுலிங் யூனிட்டை அணியில் வைத்திருப்பது கூடாது. உள்நாட்டு கிரிக்கெட்டில் அவர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றலாம், ஆனால், …
-
- 0 replies
- 321 views
-
-
11 ஆவது உலகக் கிண்ண திருவிழா தொருமுனையிலும் பாடசாலை நேரங்களின் இடையே திருட்டுத்தனமாக கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் முதல், விடுமுறை நாட்களில் மைதானத்திலும் வெற்றுக்காணிகளிலும் விரைவாக விளையாடும் இளைஞர்கள் முதல் உலகில் வாழும் மக்கள் தொகை யால் நேசிக்கப்படும் இரண்டாவது பெருவிளையாட்டான கிரிக்கெட்டின் உலகமே ஒன்றிணைந்து கொண்டாடும் திருவிழா கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. வண்ணமயமான வர்ணக்கொடிகள். மாயாஜாலம் காட் டும் அலங்கார மின்விளக்குகள், விநோதமான உருவ பொம்மை கள், கண்கவர் சித்திரங்கள், மனதைக் கொள்ளையடிக்கும் பாரிய புகைப்படங்கள் ஒருபுறமிருக்கையில் மறு புறத்தில் சாதாரணமாகவே மக்கள் நெருக்க…
-
- 0 replies
- 763 views
-