விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
இங்கிலாந்துக் குழாம்கள் அறிவிப்பு தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், இரண்டு இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இந்நிலையில், இந்தத் தொடரின் பங்கேற்கும் இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், ஐக்கிய அரபு அமீரகத்தில் பாகிஸ்தானுக்கெதிராக இடம்பெற்ற மட்டுபடுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ், இந்தத் தொடரில் குழாமுக்கு மீளத் திரும்பியுள்ளார். எனினும் பாகிஸ்தானுக்கெதிரான தொடரில் பங்கேற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர் லியாம் பிளங்கெட், சுழற்பந்துவீச்சாளர் ஸ்டீபன் பரி ஆகியோர், தெ…
-
- 0 replies
- 569 views
-
-
ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க வீரர் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த 43 வயதான டைகர் வுட்ஸ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பி.ஜி.ஏ. தொடரில் முதலிடம் பிடித்தார். இது அவர் வென்ற 82 ஆவது பி.ஜி.ஏ. சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965 இல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார். https://www.virakesari.lk/article/67770
-
- 0 replies
- 413 views
-
-
இறுதிநேர துடுப்பாட்ட சரிவால் வெற்றியை தவறவிட்ட இங்கிலாந்து! By A.Pradhap - சுற்றுலா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது T20I போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்ற நியூசிலாந்து அணி, தொடரில் 2-1 என முன்னிலைப்பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட T20I தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இதன் முதல் இரு போட்டிகளிலும் அணிகள் தலா ஒவ்வொரு வெற்றிகளை பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் இன்று நெல்சனில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில், இறுதிக் கட்டத்தில் போட்டியை தம்சவப்…
-
- 0 replies
- 432 views
-
-
இரண்டு கைகளிலும் பந்துவீசும் இந்திய வீரர் January 20, 2016 சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டியில் விடர்பா அணியின் அக்செய் கர்னெவர் தனது 2 கைகளிலும் பந்துவீசி அனைவருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளார். இந்தியாவில் உள்ளூர் தொடரான சையது முஸ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பரோடா- விடர்பா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய விடர்பா அணி 5 விக்கெட்டுக்கு 162 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் பரோடா அணி துடுப்பெடுத்தாடும் போது விடர்பா அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்செய் கர்னெவர் இரண்டு கைகளிலும் பந்துவீசினார். வலது கை துடுப்பாட்ட வீரருக்கு இடது கையிலும், இடது கை துடுப்பாட்ட வீரருக்கு வலது கையிலும் மாறி மா…
-
- 0 replies
- 465 views
-
-
50 ஓவர் போட்டியில் 306 ஓட்டங்கள் குவித்த வீரர் 2016-02-22 21:33:25 இந்தியாவின் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான பிரித்தம் பட்டில், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 306 ஓட்டங்களைக் குவித்து சாதனை ஒன்றை நிலைநாட்டியுள்ளார். மும்பையைச் சேர்ந்த பிரணவ் தன்வாடே கடந்த மாதம் ஆட்டமிழக்காமல் 1009 ஓட்டங்களைக் குவித்து ஒரே இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைப் பெற்ற முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரராகியிருந்தார். இப்போது அவரது மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு வீரர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 300 ஓட்டங்களைக் கடந்த முதலாவது வீரர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.…
-
- 0 replies
- 367 views
-
-
ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இஸ் சோதி By Mohamed Azarudeen - நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் இஸ் சோதி, இந்தியான் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகர் மற்றும் செயற்பாட்டு அதிகாரி என இரண்டு பதவிகளில் செயற்படவுள்ளார். இடதுகை சுழல் பந்துவீச்சாளரான இஸ் சோதி, ராஜஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சாய்ராஜ் பஹதுலே மற்றும் தலைமை செயற்பாட்டு நிர்வாகி ஜெக் லஸ் மெக்ரம் ஆகியோருடன் இணைந்து செயற்படவுள்ளார். இஸ் சோதி நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் நிலையில், ஐ…
-
- 0 replies
- 408 views
-
-
போர்ச்சுகல் புகழும் ஃபுட்பால் ஏலியன் கிறிஸ்டியானோ ரொனால்டோ! “ சச்சின், 20 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை சுமந்து கொண்டிருக்கிறார். இன்று அவரை நாங்கள் சுமக்கப் போகிறோம்” என்று உலகக் கோப்பை வென்றதும் மகிழ்ச்சியோடு கூறினார் விராத் கோலி. அதே மகிழ்ச்சியோடு இன்று போர்ச்சுகல் தேசமே ஒருவரை நெஞ்சில் வைத்துச் சுமந்து கொண்டிருக்கிறது. ஆம்...கிறிஸ்டியானோ ரொனால்டோ என்னும் பெயரைத்தான் இன்னும் சில வாரங்கள் அவர்கள் சுவாசிக்கப் போகிறார்கள். இனி மூன்று வேலை உணவும் இனி அவர்களுக்கு அந்தப் பெயர்தான். கால்பந்து வெறியர்களின் வாட்ஸ் அப் டி.பி முதல் அவர்கள் அணியும் டீ-ஷர்ட் வரை இன்னும் சில மாதங்கள் எங்கும் ரொனால்டோ.. எதிலும் ரொனால்டோ தான்! கால்பந்தைத் தவிர்த்து வேறு …
-
- 0 replies
- 390 views
-
-
புது மாற்றத்துடன் டி.ஆர்.எஸ். தென்னாபிரிக்கா – அயர்லாந்து மோதும் போட்டியில் அறிமுகம் ஐ.சி.சி. மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ். விதிமுறை நாளை நடைபெறவுள்ள தென்னாபிரிக்க -–- அயர்லாந்து மோதும் ஒருநாள் போட்டியில் இருந்து அமுலாகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்கள் நடத்தை மற்றும் நடுவர் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறையில் மாற்றங்களை செய்து அறிவித்துள்ளது. விதிமுறைகளை மீறும் வீரர்களுக்கு வழங்கப்படும் எச்சரிக்கை, அபராதம் மற்றும் இடைநீக்கம் ஆகிய விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. …
-
- 0 replies
- 288 views
-
-
இலங்கை கபடி அணியின் எட்டு பயிற்றுவிப்பாளர்களில் 2 தமிழர்கள்! சர்வதேச ரீதியில் நாடுகளுக்கு இடையே இடம்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளும் இலங்கை கபடி அணியினை பயிற்றுவிக்கும் பணிகளுக்காக மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த இரு தமிழர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கபடி போட்டிகளில் பங்கு பற்றி பல சாதனைகளை நிலைநாட்டிய மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் துரைசிங்கம் மதன் இலங்கை கபடி ஆண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதோடு, துரைசாமி மதன்சிங் இலங்கை கபடி பெண்கள் அணிக்கான பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய கபடி அணிக்கான பயிற்றுவிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள குறித்த வீரர்கள் பாகிஸ்தானில் இடம்பெற்ற ஆசிய விளையாட…
-
- 0 replies
- 904 views
-
-
சச்சினை நினைவு படுத்தும் 5 வயது சிறுவன்!- வைரல் வீடியோ உள்ளூர் போட்டி ஒன்றில் பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக ஐந்து வயது சிறுவன், விளையாடிய வீடியோ தெறி வைரலாகி வருகிறது. சாதிக்கத் தடையில்லை எனச் சொல்வார்கள், பதினைந்து வயதில் சச்சின் டெண்டுல்கர் முதல் தர போட்டிகளில் ஆடிய போது, மைதானத்துக்குள் இருந்தவர்களும் சரி, எதிரணி வீரர்களும் சரி, ஏளனமாக பார்த்தார்கள், சிரித்தார்கள். மிகவும் குட்டையாக இருந்த சச்சின், அதன் பின்னர் ஆறரை அடி உயர பவுலர்களை, அவர்களின் யார்க்கர்களை கலங்கடித்தது தனி வரலாறு. 2002 ஆம் ஆண்டு, இங்கிலாந்து அணிக்கு, இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சமயம் அது. பார்த்தீவ் படேல் விக்கெட் கீப்…
-
- 0 replies
- 537 views
-
-
அடிபட்ட நபருக்காக மாற்று வீரரை களமிறக்கும் புதிய விதிமுறை: நியூசிலாந்தில் அறிமுகம் போட்டியின்போது காயமடையும் வீரருக்குப் பதிலாக பேட்டிங், பவுலிங் மற்றும் விக்கெட் கீப்பர் போன்ற பணிகளை செய்யும் வகையில் புதிய வீரரை களமிறக்கும் விதியை நியூசிலாந்து அறிமுகம் செய்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டி முக்கிய விளையாட்டாக கருதப்பட்டு வருகிறது. இப்போட்டியைக் காண ரசிகர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் ரசிகர்களின் ஆர்வத்தை எந்த வகையிலும் குறைக்காத வகையில் ஐ.சி.சி. புதுப்புது முறையை அறிமுகப்பட…
-
- 0 replies
- 340 views
-
-
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்: செல்சியா தொடர்ந்து 9-வது வெற்றிகள் மூலம் முதலிடம் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி தொடர்ந்து 9-வது வெற்றியை பெற்று பதக்க பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று முன்னணி கிளப் அணியான செல்சியா வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியோன் அணியை எதிர்கொண்டது. இதில் 1-0 என செல்சியா வெற்றி பெற்றது. அந்த அணியின் டியகோ கோஸ்டா 76-வது நிமிடத்தில் கோல் அடித்தார். அதன்பின் இரு அணிகளு…
-
- 0 replies
- 325 views
-
-
மியாமி டென்னிஸ்: ஹிங்கிஸ் இணையை வென்று இறுதிச்சுற்றில் சானியா இணை! மியாமி ஓப்பன் டென்னிஸ் போட்டியில்... மகளிருக்கான இரட்டையர் பிரிவில், சானியா- ஸ்ட்ரைகோவா இணை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் ஃப்ளோரிடா நகரில் நடைபெற்றுவரும் மியாமி ஓப்பன் டென்னிஸ் தொடரில், மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா- செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா இணை, அரையிறுதிப் போட்டியில் சான்- ஹிங்கிஸ் இணையரை எதிர்த்து விளையாடியது. இதில், சானியா இணை முதல் செட்டை 6-7 எனத் தோற்றாலும், அடுத்தடுத்த செட்களில் 6-1, 10-4 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. http://www.vikatan.com/news/sports/85103-sania-strycova-in-miami-fina…
-
- 0 replies
- 238 views
-
-
ஓய்வு பெறுகிறார் பாகிஸ்தான் டெஸ்ட் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்யேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் மிஸ்பா. 43 வயதாகும் மிஸ்பா, 2011-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார். டெஸ்ட் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி பட்டியலில் பாகிஸ்தான் அணி சிறந்த இடத்துக்கு முன்னேற காரணமாக இருந்தவர். இந்நிலையில், மேற்கிந்திய தீவ…
-
- 0 replies
- 292 views
-
-
இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் சிலருக்கு கொழுப்பு அதிகமாம் எமது நாட்டில் இனிவரும் காலங்களில் உடல் தகுதிகாண் பரிசோதனையில் சித்தியடையும் வீரர்கள் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். வயிற்றில் 12 வீதத்திற்கு மேல் கொழுப்பை கொண்டிருக்கும் வீரர்கள் எவ்வளவு திறமையைக் கொண்டிருந்தாலும் கிரிக்கெட் போட்டி களில் விளையாடுவதற்கு தகுதியானவர்களாக கருதப்படமாட்டார்கள். இந்த விடயத்தில் மிகவும் கண்டிப்பாக இருக்கின்றேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அ…
-
- 0 replies
- 273 views
-
-
இலங்கை டி 20 கேப்டன் தரங்க பாகிஸ்தான் செல்ல மறுப்பு: புதிய கேப்டன் பெரேரா? பகிர்க படத்தின் காப்புரிமைICC இலங்கை டி 20 அணியின் கேப்டன் உபுல் தரங்க மற்றும் தினேஷ் சந்திமால், மலிங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ் உள்ளிட்ட மூத்த வீரர்கள் இலங்கை அணியின் திட்டமிட்ட பாகிஸ்தான் பயணத்தில் இருந்து விலகுவார்கள் என பிபிசி சிங்கள சேவைக்கு தெரியவந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பேருந்து 2009-ல் லாகூரில் தாக்கப்பட்ட பிறகு அவர்கள் முதல்முறையாக பாகிஸ்தானில் விளையாடுவார்கள் என்றும், பாகிஸ்தானில் எடுக்கப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முழுமையாக திருப்தி அடைந்த பிறகே இம்முடிவை எடுத்ததாக திங்களன்று இலங்கை கூறி…
-
- 0 replies
- 329 views
-
-
வயது இரண்டரை தான். இந்தச் சென்னை சிறுவனின் கிரிக்கெட் ஆட்டம் உங்களை கவரக்கூடும் சென்னையைச் சேர்ந்த சனுஷ் சூர்யதேவுக்கு தற்போது இரண்டரை வயதாகிறது. ஐந்து மாத வயது குழந்தையாக இருக்கும்போதே பொம்மைகளுக்கு பதிலாக பந்துகளை வைத்து சனுஷ் விளையாடியதாகவும், கிரிக்கெட் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டியதாகவும் அவரது தந்தை கூறுகிறார். படத்தின் காப்புரிமைSANUSH தற்போது நெகிழி பந்துகளில் கிரிக்கெட் விளையாடும் சனுஷ், தொழில்முறை கிரிக்கெட்டரைப் போல அழகாக டிரைவ் ஆடுகிறார். இந்தியா புக் ஆஃப் தி ரெக்கார்ட்ஸ் 'இளம் குழந்தை கிரிக்கெட்டர்' என சனுஷை அங்கீகரித்திருக்கிறது. சமீபத்தில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியைச் சந்தித்து வாழ்த…
-
- 0 replies
- 229 views
-
-
ஜனாதிபதியை விஞ்சவிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம்! இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ரூ.12 கோடியாக உயர்த்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருமானம் ஈட்டும் வாரியங்களில் ஒன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே இதற்குக் காரணமாகும். போட்டி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்ஷர்ஷிப், ஐ.பி.எல் எனப் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது, இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் …
-
- 0 replies
- 439 views
-
-
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பிராட் 400 விக்கெட் வீழ்த்தினார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். #NZvENG #StuartBroad நியூசிலாந்து - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் ஆக்லாந்தில் பகல்- இரவு ஆட்டமான நடக்கிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 20.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 58 ரன்னில் சுருண்டது. டிரென்ட் போல்டு 10.4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்தினார். டிம் சவுத…
-
- 0 replies
- 529 views
-
-
உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கு வாய்ப்பு குறைவு: ஷாகித் அப்ரிடி பகிரங்கம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்பு குறைவு என்று அந்த அணியின் மூத்த வீரர் ஷாகித் அப்ரிடி பகிரங்கமாக கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் உலகக் கோப்பைக்காக அனைத்து அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. ஆனால் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளால் துவண்டுள்ளது. அந்த அணி வீரர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளதை அப்ரிடியின் பேச்சு வெளிக்காட்டியுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளது: உலகக் கோப்பை நெருங்கி வரும் நிலையில் எங்கள் அணியின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ளது. பேட்ஸ்மேன்களால் களத்தில் தாக்குப்பிடிக்க…
-
- 0 replies
- 260 views
-
-
சகலதுறை கிரிக்கெட் வீரர்களில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலிடம் இந்தியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சகல துறைகளிலும் பிரகாசித்த ஏஞ்சலோ மெத்யூஸ், சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரருக்கான நிரல்படுத்தலில் முதலிடத்தை அடைந்துள்ளார். இந்தத் தொடரில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் அடங்கலாக 339 ஓட்டங்களைப் பெற்ற மெத்யூஸ், 4 விக்கெட்களைக் கைப்பற்றியிருந்தார். இதனையடுத்து சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான நிரல்படுத்தலில் ஏஞ்சலோ மெத்யூஸ் முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். நிரல்படுத்தலுக்கான 420 படிநிலை புள்ளிகளை மெத்யூஸ் பெற்றுள்ளதுடன் பாகிஸ்தானின் மொஹமத் ஹஃவீஸ் 411 படிநிலை புள்ளிகளுடன் இரண்டாம் இ…
-
- 0 replies
- 577 views
-
-
ஜகார்த்தா நீச்சல் போட்டியில் தமிழக வீரர் தங்கப் பதக்கம் வென்றார் [31 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] ஜகார்த்தாவில் நடந்துவரும் ஆசிய ஏஜ் குறூப் நீச்சல் போட்டியில் தமிழக வீரர் அக்னீஷ்வர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசிய ஏஜ் குறூப் நீச்சல் போட்டி இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது. இதில் 27 நாடுகளைச் சேர்ந்த 700 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் 4ஆவது நாளான நேற்றுமுன் தினம் நடந்த 50 மீற்றர் பிரஸ்ட்ஸ்டிரோக் போட்டியில் இந்தியா சார்பில் பங்ககேற்ற தமிழக சர்வதேச வீரர் ஜெ.அக்னீஷ்வர் 30.39 விநாடிகளில் கடந்த ஜப்பான் வீரர் மசாருகாயமா வெள்ளிப் பதக்கமும் 30.74 வினாடிகளில் தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். 30.64 வினாடி…
-
- 0 replies
- 969 views
-
-
இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான் இலங்கைக்கு எதிரான இரணடாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு - 20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 27 ஆம் திகதி கராச்சி மைதானத்தில் ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்படது. இதன் பின்னர் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் 67 ஓட்டத்தினால் வெற்றிபெற்று, தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந் நிலையில் மூன்றாவது ஒரு நாள்…
-
- 0 replies
- 729 views
-
-
[size=4]வெற்றியாளர்-[/size] [size=4]சாரதி - Marcos Ambrose [/size] [size=4]வாகனம் - Ford[/size] http://youtu.be/1MqYe6LNq-M http://youtu.be/CRhiEGCV2N4 http://youtu.be/FfybOGRAAoc Credit: http://www.nascar.com/series/cup/
-
- 0 replies
- 637 views
-
-
கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை ரத்து செய்யும் திட்டமில்லை என்று டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் 11 வது ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஐப்பான் முன்னாள் பிரதமரும் டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவருமான யோஷிரோ மோரி, கொரோனா வைரஸ் பரவுவதை சமாளிப்பதற்காக பிரத்யேக கமிட்டி ஒன்று அமைக்கப்படுள்ளதாக தெரிவித்தார். ஒலிம்பிக்கில் போட்டியிடும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்களுக்கு கொரோனா நோய் இல்லை என்பதை கமிட்டி உறுதி செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://www.polimernews.com/dnews/100313/கொரோனா-வைரஸ்-காரணமா…
-
- 0 replies
- 433 views
-