விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
தோனி ஒரு பிரமாதமான கேப்டன்; வலுவான தலைவர்: கில்கிறிஸ்ட் புகழாரம் டெஸ்ட் போட்டிக்கான தலைமை பொறுப்பை தோனியிடமிருந்து விராட் கோலிக்கு மாற்ற வேண்டும் என்ற ஆஸி.முன்னாள் கேப்டன் இயன் சாப்பலின் கருத்தை ஆடம் கில்கிறிஸ்ட் மறுதலித்தார். வுலாங்காங் என்ற ஆஸ்திரேலிய பல்கலைக் கழகம் பெங்களூரில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் விருந்தினராகக் கலந்து கொண்ட ஆடம் கில்கிறிஸ்ட் செய்தியாளர்களிடம் கூறும்போது: "நான் நிறைய முறைக் கூறிவிட்டேன். அவர் எப்போது இந்திய கேப்டன் பொறுப்பிற்கு வந்தாரோ அப்போது முதல் நான் இதைத்தான் கூறி வருகிறேன். அவர் ஒரு பிரமாதமான கேப்டன் டி20 உலகக் கோப்பை, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது என்று தோனியின் தலைமையில் …
-
- 0 replies
- 352 views
-
-
தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர்; அவரிடம் இன்னும் நிறைய திறமைகள் உள்ளன: கங்குலி புகழாரம் தோனியை ‘கிரேட்' என்று புகழ்ந்த சவுரவ் கங்குலி. | படம்: பிடிஐ. தோனியிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் திறமைகள் உள்ளன, அவர் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்று முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி புகழாரம் சூட்டியுள்ளார். ஜாம்ஷெட்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த சவுரவ் கங்குலி கூறும்போது, “தோனி ஒரு பெரிய கிரிக்கெட் வீரர், சர்வதேச அரங்கில் தரத்தை நிர்ணயம் செய்தவர். இந்தியாவுக்காக மேலும் சில ஆண்டுகள் பங்களிப்பு செய்ய அவரிடம் கிரிக்கெட் திறன்கள் இன்னும் உள்ளன” என்றார். 2019 உலகக் கோப்பை போட்டிகளுக்கு யார் கேப்டனாக இருப்பார…
-
- 0 replies
- 462 views
-
-
தோனி ஓய்வு பெற்றால் அவரை நாம் மிகவும் இழந்ததாகவே உணர்வோம்: டீன் ஜோன்ஸ் இந்திய ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் தோனி. | படம்: பிடிஐ. தோனி ஓய்வு பெற்று விட்டார் எனும்போதுதான், அவர் இல்லாதது குறித்து நாம் அதிகம் உணர்வோம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவன நேரகாணல் ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: நாம் நமது பெரிய வீரர்களை விரைவில் வெளியேற்றவே விரும்புகிறோம். இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி செய்த பங்களிப்பை வைத்து அவரது விருப்பத்தை அவரே தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும். கேப்டனாக வேண்டும் என்று பெரிய அவசரம் காட்டுவதாக நான் கருதவில்லை. காலம் வரும். நான் கூறுவதை நம்புங்கள், தோனி ஓய்வு ப…
-
- 0 replies
- 514 views
-
-
தோனி கேப்டன் ஆன போது ஏற்கெனவே அணி நிலைபெற்றிருந்தது, மாற்றம் கொண்டு வந்தவர் கோலி: யுவராஜ் சிங் பேட்டி ஏப்ரல் 4, 2014, வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய மகிழ்ச்சியில் கோலியைத் தூக்கும் யுவராஜ், அருகில் தோனி. - படம். | ஏ.எஃப்.பி. கிரிக்கெட் வாழ்வில் ஏகப்பட்ட காயங்கள், புற்று நோய் தாக்குதல் என்று நிறைய போராட்டங்களைச் சந்தித்து வென்றுள்ள வீரர் யுவராஜ் சிங். இப்போது கூட வயது ஒரு காரணியல்ல, ஆட்டத்திறன் தான் முக்கியம் என்று கூறியுள்ளார். ஸ்போர்ட்ஸ்டார் இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் தன் கிரிக்கெட் வாழ்க்கைப் பற்றி பல்வேறு விஷயங்களைப் பகிர…
-
- 0 replies
- 508 views
-
-
தோனி கோபப்படுவார்... ஆனால் கேமரா இல்லாத போது: சுரேஷ் ரெய்னா பகிர்வு தோனி, ரெய்னா. - கோப்புப் படம். | சந்தீப் சக்சேனா. இந்திய அணிக்காக தோனியுடன் ஒருநாள் போட்டிகளில் பல வெற்றிக்கூட்டணிகளை அமைத்துள்ள சுரேஷ் ரெய்னா பிரேக் ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தோனியின் குணாதிசியங்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார். “தோனி என்ன நினைக்கிறார், எண்ணுகிறார் என்பதைக் கணிப்பது கடினம், அவர் கண்கள் ஒன்றையும் வெளிப்படுத்தாது, நாம் சில வேளைகளில், ‘கொஞ்சம் உணர்ச்சியைத்தான் காட்டேன்’ என்று கூற வேண்டும் போல் தோன்றும். அவர் நிறைய முறை கோபமடைந்துள்ளார். ஆனால் கேமராவில் நீங்கள் பார்க்க முடியாது. கேமரா எப்போது ஆனில் இல்லை என்ற…
-
- 0 replies
- 429 views
-
-
தோனி சதம் எடுத்து 3 ஆண்டுகள் ஆகிறது; தொடர்ந்து 4-ம் நிலையில் ஆட வேண்டும்: கங்குலி வலியுறுத்தல் மொஹாலியில் 4-ம் நிலையில் தோனி களமிறங்கி விளாசியதால் இந்திய வெற்றி சுலபமானது என்று கூறிய கங்குலி அவர் தொடர்ந்து அந்த டவுனில்தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தொடர்ந்து தோனி இதே 4-ம் நிலையில் இறங்குவார் என்று உறுதியாகக் கூற முடியவில்லை. அனில் கும்ப்ளே, தோனியை இதே நிலையில் களமிறங்க வலியுறுத்த வேண்டும். இதனால் அவருக்கும் எளிதாகிறது, பின்னால் வருபவர்களுக்கும் எளிதாகிறது. அவர் கடைசி 3 ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளி ஒரு சதம் கூட எடுக்கவில்லை. காரணம் 40-50 பந்துகளையே அவர் எதிர்கொள்ள முடிகிறது. இது…
-
- 0 replies
- 324 views
-
-
தோனி செய்ய முடிந்ததை மற்ற பேட்ஸ்மென்கள் செய்ய முடியவில்லை: கவாஸ்கர் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்டிங் வரிசை மீண்டும் இங்கிலாந்து பந்து வீச்சிடம் சரணடைந்தது பற்றி கவாஸ்கர் தனது விமர்சனங்களைத் தெரிவித்துள்ளார். நேற்று மீண்டும் கேப்டன் எம்.எஸ்.தோனி, தனது குறைவுபட்ட உத்தியிலும் கூட அடிப்படையான பேட்டிங் பொறுமையையும், புத்தி கூர்மையையும் காண்பித்து 82 ரன்களை எடுத்து கடைசியாக ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மென்களோ செய்த தவறையே திரும்பவும் செய்ததாக சுனில் கவாஸ்கர் மற்றும் விவிஎஸ்.லஷ்மண் ஆகியோர் கருதுகின்றனர். சுனில் கவாஸ்கர் இது பற்றி தனியார் சானலில் கூறும்போது: "முக்கிய விக்கெட்டுகள் விழுந்த விதத்தைப் பாருங்கள், அவையெல்லாம் அபாரமான பந்துகளில் விழுந்த விக்…
-
- 0 replies
- 406 views
-
-
தோனி சொன்னால் களத்திலேயே செத்துப் போவேன்..ஓவர் உணர்ச்சியைக் காட்டும் அஷ்வின்.. டாக்கா: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி மரணமடையச் சொன்னால், களத்திலேயே அதைச் செய்வேன் என்று, சுழற்பந்து வீச்சாளரும் தமிழக வீரருமான அஷ்வின் தெரிவித்துள்ளார். வங்கதேச அணிக்கு எதிரான தொடர் தோல்வியால் நெருக்கடி ஏற்பட்டுள்ள ஒரு நாள் இந்திய அணி கேப்டன் தோனிக்கு, சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். தோனி மிகப்பெரிய நட்சத்திர வீரர் என்றும், அவர் நாட்டிற்காக பல சாதனைகளை செய்துள்ளார் என்றும் அஷ்வின் கூறியுள்ளார். நாட்டிற்காக தோனி செய்ததை நாம் மறக்கக்கூடாது என்றும், ஒட்டு மொத்த இந்திய அணியின் செயல்பாட்டுக்கு தோனியை மட்டுமே குற்றம் சொல்லக் கூடாது எனவும் அஸ்வின் கூறினார். தன்ன…
-
- 2 replies
- 401 views
-
-
தோனி தங்கியிருந்த ஓட்டலில் தீ விபத்து, விஜய் ஹசாரே அரை இறுதி போட்டி ஒத்திவைப்பு!! விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தோனி உள்ளிட்ட ஜார்கண்ட் அணி வீரர்கள் டெல்லியில் துவாரகா என்னும் ஹோட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை அவர்கள் தங்கி இருந்த ஹோட்டலில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தோனி மற்றும் கிரிக்கெட் அணியினர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் இன்று நடைபெறவிருந்த விஜய் ஹசாரே இரண்டாவது அரை இறுதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. Delhi: Fire had broken out in store in Dwarka's Welcome hotel complex. MS Dhoni and Jharkhand team who were staying there evacuated safely pic.twitter.com/8OIbd7x3Cl — ANI (@ANI…
-
- 0 replies
- 324 views
-
-
தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்! இரண்டு ஆண்டுகள் தடை முடிந்து வரும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கத் தயாராகி வருகிறது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த இரண்டு அணிகளும் 2016 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பங்கேற்கத் தடை விதித்து கடந்த 2015-ல் உத்தரவிட்டது. இந்தத் தடை கடந்த மே மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இரு அணிகளும் 2018-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில…
-
- 1 reply
- 649 views
-
-
தோனி நல்ல கேப்டன்தான் ஆனால் தனக்குப் பிடித்தது கங்குலி என்கிறார் யுவராஜ் சிங் தோனி நன்றாகவே கேப்டன்சி செய்து வந்தாலும் தனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஆங்கில நாளிதழ் ஒன்றில் அவர் இது குறித்து கூறியிருப்பதாவது: "எனக்குப் பிடித்த கேப்டன் சவுரவ் கங்குலியே. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன், அவரது கேப்டன்சியில் என்னுடைய பேட்டிங் திறமைகள் செழுமை பெற்றது. அயல்நாட்டில் நாம் வெற்றி பெற முடியும் என்ற உணர்வை எங்களிடம் ஏற்படுத்தியவர் கங்குலி. அதே போல் கேரி கர்ஸ்டன் ஒரு அபாரமான பயிற்சியாளர், அவரது பயிற்சியின் கீழும் நான் சிறப்பாக விளையாடினேன்" என்றார். சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் 90களின் இறுதியில் முதல் சர்வ…
-
- 0 replies
- 316 views
-
-
தோனி நிச்சயம் வெற்றிப்பாதைக்கு திரும்புவார்: மைக் ஹஸ்ஸி ஆதரவுக்கரம் தோனி தன்னால் முடியவில்லை என்ற மனநிலைக்கு வந்தால் நிச்சயம் ஆட்டத்தை கைவிடுவார் ஆனால் அவரால் இன்னமும் பங்களிப்பு செய்ய முடியும்-ஹஸ்ஸி. | படம்: கெட்டி இமேஜஸ். 'வீரர்களின் அழுத்தத்தைக் குறைத்து அவர்களை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஆச்சரியமிக்க திறன் கொண்டவர் தோனி' என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும் சென்னை அணியில் தோனியின் கீழ் ஆடியவருமான மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 2013-ம் ஆண்டு ஓய்வு பெற்ற மைக் ஹஸ்ஸி, மிஸ்டர் கிரிக்கெட் என்று அழைக்கப்படுவதற்கேற்ப தனது 40 வயதிலும் பிக்பாஷ் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் சிட்னி தண்டர் அணியை வழி நடத்திச் சென்று அ…
-
- 0 replies
- 350 views
-
-
தோனி பங்களிப்பு செய்யாமல் இருந்தால்தான் மாற்று வீரர்களை பரிசீலிக்க முடியும்: எம்.எஸ்.கே.பிரசாத் கருத்து தோனி. - படம். | ஏ.எப்.பி. இலங்கை அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ‘தோனி, ஆட்டோமேட்டிக் தேர்வா’ என்று கேள்வி எழுப்பப்பட அணித்தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் ‘அப்படியல்ல’ என்று பதிலளித்தார். அதாவது அணித்தேர்வு செய்யும் போது கோலி, தோனி... சரி.. அடுத்தது என்ற ரீதியில் தேர்வு நடைமுறை செல்கிறதா என்று செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு பிரசாத் பதில் அளிக்கும் போது, “நான் இப்போதுதான் ஆந்த்ரே அகாஸியின் புத்தகத்தைப் படித்துக் கொண்டிர…
-
- 0 replies
- 248 views
-
-
தோனி பந்து வீசுவதை பார்த்திருக்கீறீர்களா? முதல் முறையாக வரும் நவம்பர் மாதம் பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடும் பெருமையை நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் பெறுகின்றன. போட்டியை அடிலெய்ட் மைதானம் நடத்துகிறது. இந்த போட்டிக்காக பிரத்தியேகமான 'பிங்க்' வர்ண பந்து பயன்படுத்தப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் கோகும்பரா நிறுவனம் இந்த 'பிங்க்' வர்ண பந்துகளை தயாரித்துள்ளது. பலவிதமான சோதனைகளுக்கு பிறகு 'பிங்க்' வர்ண பந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கு முன், இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபபயணம் செய்தது. அப்போது மெல்பர்ன் மைதானத்தில் சேனல் 9 'பிங்க்' வர்ண பந்தை வீசி பரிசாத்திய தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்து பார்த்…
-
- 0 replies
- 269 views
-
-
தோனி பந்தை விளாசும் போது அவர் மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி...- சச்சின் டெண்டுல்கர் புகழாரம் தோனி அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி....: சச்சின் நம்பிக்கை. | படம்: ஏ.எஃப்.பி. தோனி அதிரடி ஆட்ட வழிமுறைக்குத் திரும்பியதன் அறிகுறியாக அவர் பந்தை அடிக்கும் போது மட்டையிலிருந்து கிளம்பும் ஒலி உள்ளது என்றும் இது உலகக்கோப்பை டி20 தொடரில் இந்தியாவுக்கு நல்ல பலன் அளிக்கும் என்றும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். தனியார் சேனல் ஒன்றில் சச்சின் டெண்டுல்கர் இது பற்றி கூறியதாவது: உலகில் எந்த ஒரு வீரரும் வாழ்நாள் முழுதும் சிறந்த ஃபார்மில் இருந்து விட முடியாது, மேலும் அவர் எந்திரமல்ல. ஆனால் தோனியின் மட்டையில் பந்து படும்போது ஏற்படும்…
-
- 0 replies
- 368 views
-
-
தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி தவறாக முடிவெடுக்காதீர்கள்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை பாண்டிங்கை ஸ்டம்ப்டு செய்யும் தோனி. | 2011 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நடந்தது. | கோப்புப் படம்.| கே.பாக்யபிரகாஷ் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி இனி ஒன்றும் செய்யப்போவதில்லை என்று விமர்சிப்பவர்களுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். தோனி போன்ற சாம்பியன்களைப் பற்றி அதற்குள் தவறாக முடிவெடுக்க வேண்டாம், சாம்பியன்ஸ் டிராபியில் அவர் ஒரு குறிப்பிடத்தகுந்த பங்காற்றும் திறமை கொண்டவர் எனவே அவரை விமர்சிக்க வேண்டாம் என்கிறார் பாண்டிங். இதுகுறித்து ஆஸ்திரேலிய இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டிய…
-
- 0 replies
- 523 views
-
-
தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புகிறேன்: சர்பராஸ் அகமட் சர்பராஸ் அகமட். | படம்: ஏ.பி. பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் அதிரடி பேட்ஸ்மெனான சர்பராஸ் அகமட், தோனி போல் கீப்பிங், பேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: நான் தோனியை பலவழிகளில் பின்பற்றி வருகிறேன். விக்கெட் கீப்பராக அவர் காட்டும் வித்தியாசம், பேட்டிங்கில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பது என்ற விதத்தில் நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டு வருகிறேன். அவர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர், நான் அவரை எனது லட்சிய ஆளுமையாகவே வடிவமைத்துக் கொண்டுள்ளேன். உலகக்கோப்பைக்காக இந்தியாவில் விளையாடுவது உற்சாகமளிக்கிறது. என்னுட…
-
- 0 replies
- 451 views
-
-
தோனி போல் வருமா? கீப்பர்-பேட்ஸ்மென் இடத்தை நிரப்புவது மிகக்கடினம்; ரிஷப் பந்திடம் பொறுமை காட்டுங்கள்: ஆடம் கில்கிறிஸ்ட் அறிவுரை கெட்டி இமேஜஸ். இந்திய அணியில் டெஸ்ட் விக்கெட் கீப்பிங் தோனி ஓய்வு பெற்ற பிறகே பெரிய ஓட்டை விழுந்துள்ளது. விருத்திமான் சஹா ஆஸ்திரேலியா தொடரில் ஆடுவது கூட சந்தேகம் என்ற நிலையில் ரிஷப் பந்த்தின் சந்தேகத்துக்குரிய பார்ம் இப்போது சிக்கலாகியுள்ளதால் விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆஸ்த்ரேலிய முன்னாள் கிரேட் ஆடம் கில்கிறிஸ்ட் தன் கருத்தை வெளியிட்டபோது கூறியதாவது: தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து …
-
- 0 replies
- 345 views
-
-
தோனி மிகச்சிறந்த பினிஷர்; திறமையைச் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டம்: கோலி காட்டம் இந்திய அணி வீரர் எம்எஸ் தோனி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி - படம்: ராய்டர்ஸ் தோனி மிகச்சிறந்த பினிஷர், அவர் ஒரு போட்டியில் சரியாக விளையாடாமல் போனதற்காக அவரின் திறமையை மீண்டும், மீண்டும் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டமானது என்று தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்துள்ளார். லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள்…
-
- 2 replies
- 403 views
-
-
தோனி மீதான அதிருப்தியை என் தந்தை பகிரங்கப்படுத்தியது ஏன்?- யுவராஜ் சிங் விளக்கம் உலகக்கோப்பை அணியில் யுவராஜ் சிங் தேர்வு செய்யப்படாததற்கு தோனியே காரணம் என்று யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூறியதற்கு யுவராஜ் சிங் பதிலளித்துள்ளார். இது குறித்து யுவராஜின் தந்தையும் முன்னாள் இந்திய வீரருமான யோக்ராஜ் சிங் கூறும்போது, “என் மகனுடன் தோனிக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சினைகள் இருந்தால் என்னால் என்ன செய்ய முடியும்? கடவுள் நீதியளிப்பார். உங்கள் கேப்டன் பொறுப்பில் இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பிரார்த்திக்கிறேன். ஆனால் இது போன்று நீங்கள் (தோனி) நடந்து கொண்டதை விடவும் வேறு வருத்தங்கள் இருக்க முடியாது.” என்றார். ஆனால், தன் ட்விட்டர் பக்கத்தில் யுவராஜ் சிங், தனது தந்தை…
-
- 0 replies
- 880 views
-
-
இந்திய அணியில் யுவராஜ் சிங் இடம்பெறாததற்குக் காரணம் கேப்டன் தோனியே என்று ஏற்கெனவே கடுமையாகப் பேசி சர்ச்சையைக் கிளப்பிய யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங், மீண்டும் தோனி மீது பாய்ந்துள்ளார். இந்தி செய்தி சானல் ஒன்றிற்கு பேட்டி அளித்த யோக்ராஜ் சிங், “தோனி ஒன்றுமில்லாதவர், அவர் ஒன்றுமேயில்லை. ஊடகங்களினால் அவர் கிரிக்கெட் கடவுள் ஆகியிருக்கிறார். ஊடகங்கள் அவரை மிகப்பெரிய வீரர் என்று ஊதிப் பெருக்கியது, ஆனால் இத்தகைய பெருமைக்கு அவர் தகுதியானவர் அல்ல. அவர் ஒன்றுமே இல்லாத காலங்கள் இருந்தன, ஆனால் இன்று ஊடகங்களின் முன்னால் அமர்ந்து ஊடக நிருபர்களையே கேலியும் கிண்டலும் செய்கிறார். அவருக்கு துதிபாடிய ஒரு பத்திரிகையாளரையே கேலி செய்கிறார். அவர் ஒரு ரன் எடுத்தால் கைதட்டும் இந்திய ரசிகர்…
-
- 4 replies
- 899 views
-
-
தோனி முறியடித்த கபில் சாதனை: எண்கள் கூறும் சிறப்புகள் ஹாமில்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது இந்தியா. இதன்மூலம் 5-வது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா 10 புள்ளிகளுடன் பி பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இதுமட்டுமின்றி உலகக் கோப்பை யில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா இதுபோன்று வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக கங்குலி தலைமையிலான அணி 2003 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளைப் பெற்றதே சாதனையாக இருந்தது. உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளைப் பெற்ற அணி என்ற பெருமை இன்றளவும் ஆஸ்திரேலியா வசமேயுள்ளது. அந்த அணி…
-
- 0 replies
- 506 views
-
-
தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக பகீர் குற்றச்சாட்டு ! இந்திய அணியின் கேப்டன் தோனி, இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. மான்செஸ்டரில் நடந்த 4-வது டெஸ்ட் போட்டி யில் இந்திய அணியின் கேப்டன் தோனி, மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் இந்திய அணியின் மேலாளரும் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து சன்ஸ்டார் பத்திரிகைக்கு அளித்துள்ள வீடியோ பேட்டியில் இந்த அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில், இது 100 சதவீதம் உண்மை என்றும் அவர் குறிப்…
-
- 0 replies
- 526 views
-
-
தோனியின் ராணுவ முத்திரை கிளவுஸ் விவகாரம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாது, இந்திய ராணுவம், அரசியல்வாதிகள், ரசிகர்கள், கிரிக்கெட்டே பார்க்காத மக்கள் என அனைவரையும் பாதித்துள்ளது. ஒரு விக்கெட் கீப்பிங் கிளவுஸ் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துமா? இது என்ன.. இதை விட பெரிய தாக்கத்தை கூட ஏற்படுத்தும், என "நவீன சமூக வலைதள நாகரீகம்" நமக்கு உணர்த்தியுள்ளது. சரி, கிரிக்கெட் போட்டிகளில் ராணுவ முத்திரை பதித்த கிளவுஸை தோனி அணியலாமா.. கூடாதா? என்று கேட்டால்.. அணியக் கூடாது என்பது தான் நியாயமான பதிலாக இருக்கும். லெப்டினன்ட் கலோனல் இந்திய ராணுவத்தில் தோனி பாரா மிலிட்டரி பிரிவில் லெப்டினன்ட் கலோனல் என்ற உயரிய பதவியில் இருக்கிறார். இது கௌரவ பதவிதான் என்றாலும், இந்திய ராணுவத்தை பொ…
-
- 0 replies
- 697 views
-
-
தோனி–கோஹ்லி சண்டை சரியா இந்துார்: கேப்டன் தோனி, கோஹ்லி இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கான்பூர் போட்டிக்கான ‘பேட்டிங் ஆர்டர்’ தொடர்பாக இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனராம். இந்திய அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதில் இருந்து வீரர்கள் மத்தியில் மோதல் போக்கு உருவானது. கேப்டன் தோனிக்கு எதிராக கோஹ்லியை கொம்பு சீவி விட்டார். டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்ட பின், இது இன்னும் அதிகமானது. தோனியின் பேச்சுக்கு வீரர்கள், நிர்வாகத்திடம் மதிப்பில்லாமல் போனது. இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் தோனியை ரகானே பகைத்துக் கொண்டார். ‘இவருக்கு பேட்டிங்கே வரவில்லை’ என, வெளிப்படையாக சாடினார் தோனி. சமீபத்திய தென் ஆப்ரிக்க அண…
-
- 0 replies
- 402 views
-