விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
லோட்ஸ் தரப்படுத்தலில் மத்தியூஸ் இடம்பிடித்தார் December 15, 2015 லோட்ஸ் மைதான நிர்வாகம் இந்த வருடத்துக்கான சிறந்த 20 வீரர்களின் தரப்படுத்தலில் மத்தியூஸிற்கும் இடம்கொடுத்துள்ளது. லோட்ஸ் மைதானம் வருடாவருடம் சிறந்த இருபது வீரர்களைத் தெரிவுசெய்து அவர்களை பட்டியல் படுத்தும். அந்த அடிப்படையில் இந்த வருடத்துக்கான பட்டியலில் மத்தியூஸிற்கு 9ஆவது இடத்தை வழங்கியுள்ளது. ஒருநாள் ஆட்டங்களில் 3ஆயிரம் ஓட்டங்கள் மற்றும் 100 இலக்குகள் என்ற மைல் கல்லை மத்தியூஸ் எட்டியிருந்தார். இந்த பெறுபேற்றை எட்டும் 4ஆவது இலங்கை வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார். இதுவே அவருக்கு 9ஆவது இடத்தை வழங்க பிரதான காரணம் என்று லோட்ஸின் தெரிவிக்குழு அறிவித்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 339 views
-
-
ஐ.பி.எல். 2016: வரைவு பட்டியலில் தோனி, அஸ்வின் , மெக்கல்லம் வரும் 2016-ம் ஆண்டுக்கான ஜ.பி.எல். தொடரில் விளையாட ராஜ்கோட், புனே அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. தடை விதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளில் இருந்து தலா 5 வீரர்களை நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இதர வீரர்களை ஏலம் மூலம் எடுத்துக் கொள்ளலாம். வரும் பிப்ரவரி 6-ம் தேதி புதிய வீரர்களுக்கான ஏலம் விடப்படுகிறது. ஐ.பி.எல். வெளியிட்டுள்ள வரும் 2016-ம் ஆண்டுக்கான வரைவு பட்டியலில் சென்னை அணியின் கேப்டன் தோனி, அஸ்வின், சுரேஷ் ரெய்னா, பிரன்டென் மெக்கல்லம், ட்வைன் பிராவோ மற்றும் ரவீந்தர ஜடேஜா, இர்ஃபான் பதான், அஜிங்கிய ரஹானே, சஞ்சு சாம்ப்சன், கருண் நா…
-
- 0 replies
- 635 views
-
-
காதலியை கரம்பிடித்தார் ரோஹித் December 14, 2015 இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா தனது காதலி ரித்திகா சாஜ்தேவை மணந்துள்ளார். இவர்களது திருமணம் நேற்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் நடந்தது. வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இவர்களது திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழியான கீதா பாஸ்ராவை திருமணம் செய்தார். தற்போது புதுமாப்பிள்ளை வரிசையில் ரோஹித்தும் இணைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நிட்டா மற்றும் முகேஷ் அம்பானி மும்பை அணியின் வீரர்கள் மற்றும் புதுமாப்பிள்ளைகளான ரோஹித் சர்மா, ஹர்பஜன் சிங்கிற்கு அவர்களது இல்லத்தில் விருந்தளித்தனர். ht…
-
- 0 replies
- 683 views
-
-
மார்லனுக்கு பந்து வீசத் தடை மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரரான மார்லன் சேமுவேலுக்கு 12 மாதத்திற்கு பந்து வீச சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்துள்ளது. 2013 டிசம்பர் முதல் இதுவரையில் இரண்டு தடவை அவரின் பந்துவீச்சில் ஏற்பட்ட சந்தேகத்தில் சர்வேதச கிரிக்கெட் கவுன்சில் இந்த தடையை விதித்துள்ளது. சர்வேதச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைக்கு மாறாக 15 டிகிரிக்கும் அதிகமாக கையை வளைத்துப் பந்து வீசுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/1006
-
- 0 replies
- 626 views
-
-
இந்தியாவில் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிக்க கூடாது: வாசிம் அக்ரம் வேண்டுகோள் வாசிம் அக்ரம். | கோப்புப் படம். இந்தியாவில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க கூடாது என்று முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியுள்ளார். இந்தியா - பாகிஸ்தான் அணி களுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. இரு அணி களுக்கு இடையேயான தொடரை இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபும் சம்மதம் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த தொடரில் ஆடுவதற்கு இந்திய க…
-
- 0 replies
- 398 views
-
-
அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர்? அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தின் தற்போதைய முழங்கால், இடுப்பு பிரச்சினைகள் தீராதுவிட்டால், இந்தியாவுக்கெதிராக எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர், அணிக்கு தலைமைதாங்க வேண்டி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, வோணர் அவுஸ்திரேலிய அணித்தலைவராக வோணர் செயற்படும் சந்தர்ப்பத்தில், அச்சந்தர்ப்பமே, அவர் அவுஸ்திரேலிய அணிக்கு தலைமை தாங்கும் முதலாவது சந்தர்ப்பமாக அமையும். மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான மெல்பேர்ண் “பொக்ஸிங் டே” டெஸ்ட் போட்டி…
-
- 0 replies
- 570 views
-
-
புனே, இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதி சுற்றில் சென்னை அணி 3–0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தாவை நொறுக்கியது. சிலிர்க்க வைத்த கோல் 2–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் தற்போது அரைஇறுதி சுற்று நடந்து வருகிறது. ஒவ்வொரு அரைஇறுதியும் இரண்டு ஆட்டங்கள் கொண்டதாகும். இதில் புனேயில் நேற்று இரவு அரங்கேறிய அரைஇறுதியில் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தை பிடித்த நடப்பு சாம்பியன் அட்லெடிகோ டீ கொல்கத்தாவும், 3–வது இடத்தை பெற்ற சென்னையின் எப்.சி.யும் கோதாவில் இறங்கின. இரு அணி வீரர்களும் சம பலத்துடன் ஆக்ரோஷமாக களத்தில் செயல்பட்டனர். 37–வது நிமிடம் வரை கோல் இல்லாத நிலைமையே காணப்பட்டது. 38–வது நிமி…
-
- 0 replies
- 516 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 100 சிக்சர்கள்: மெக்கல்லம் சாதனை பிரெண்டன் மெக்கல்லம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்கள். | கோப்புப் படம்: ஏ.எப்.பி. இலங்கைக்கு எதிராக டியுனெடின் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் 4-ம் நாள் ஆட்டத்தில் தனது 100-வது டெஸ்ட் சிக்சரை அடித்தார் நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். நியூஸிலாந்து முதல் இன்னிங்சில் 137 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் 2-வது இன்னிங்ஸில் இன்று 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் இலங்கைக்கு வெற்றி இலக்கு 405 ரன்கள்; ஆனால் இலங்கை 4-ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்கள் எடுத்து போட்டியைக் காப்பாற்ற போராடி வருகிறது. …
-
- 0 replies
- 629 views
-
-
சென்னை எப்படி இருக்குது?... இந்தியா வந்த ரஃபேல் நடால் கேட்ட முதல் கேள்வி இது சர்வதேச டென்னிஸ் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஸ்பெயின் டென்னிஸ் நட்சத்திரம் ரஃபேல் நடால், பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு ஒருநாள் கவுரவ விளையாட்டு ஆசிரியராக பணிபுரிந்தார். அதற்காக டெல்லியில் உள்ள அந்த பத்திரிகை அலுவலகத்துக்கு சென்ற ரஃபேல் நடால், முதலில் எழுப்பிய கேள்வி ''சென்னையில் இப்போது நிலைமை எப்படியிருக்கிறது என்பதுதான்? '' என்று அந்த பத்திரிகை கூறியுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகை நடால் கூறியதாக வெளியிட்டுள்ள செய்தியில்,'' சென்னை வெள்ளம் குறித்தும் மக்கள் அடைந்த துயரம் குறித்தும் கேள்விபட்டேன். எனக்கு இது மிகவும் வருத்தத்தை அளித்தது. நாம் வி…
-
- 0 replies
- 802 views
-
-
’’ வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவது கடினம்’’ குக் December 13, 2015 இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், வெளிநாட்டு மண்ணில் ஒரு அணி வெற்றி பெறுவது மிகக்கடினம் என இங்கிலாந்து அணியின் தலைவர் அலைஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணி, நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் வருகிற 26ந் திகதி (பாக்சிங் டே) ஆரம்பமாகவுள்ளது. இதற்கு முன் தென்ஆப்பிரிக்கா இன்விடேசன் லெவன் அணியுடன் இரண்டு பயிற்சி போட்டிகளில் (3 நாள் ஆட்டம்) விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் செவ்வாய்க்கிழமை (15ந் திகதி) ஆரம்பமாகின்றது. எங்களுடைய சிறந்த விளையாடும் லெவன் அணி எது என்று இன்னும் எங்களுக்கு…
-
- 0 replies
- 573 views
-
-
யூரோ 2016 : போட்டி அட்டவணை வெளியீடு பிரான்சில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டிக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணி ருமேனியாவை எதிர்கொள்கிறது. அட்டவணைக்கு க்ளிக் செய்க... இது வரையில் 16 அணிகள் மட்டுமே பங்கு பெற்று வந்த இந்த தொடரில் முதல் முறையாக 24 அணிகள் பங்கேற்கவுள்ளன. போட்டியில் இடம் பெற்றுள்ள 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. ஜுலை 6 மற்றும் 7ஆம் தேதிகளில் அரையிறுதி போட்டிகளும் ஜுலை 10ஆம் தேதி இறுதிபோட்டியும் நடைபெறுகிறது. இந்த தொடரில் ஏ பிரிவில் பிரான்ஸ், ருமேனியா, அல்பேனியா, சுவிட்சர்லாந்து அ…
-
- 2 replies
- 590 views
-
-
சி.எஸ்.கே ஸ்டைலில் சொல்லி அடித்த சென்னையின் எஃப்சி! கெத்தான வெற்றிக்கு பின்னால் 7 விஷயங்கள்! ஐ.எஸ்.எல் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனை வீழ்த்தி கெத்தான வெற்றியை பெற்று வெற்றியை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு அர்பணித்துள்ளது சென்னையின் எஃப்.சி. சென்னை அணியின் வெற்றிக்கு பின் உள்ள கெத்தான 7 விஷயங்கள் இதோ... சி.எஸ்.கே ஸ்டைல் ஆட்டம்: சி.எஸ்.கே அணி எப்போதுமே ஐ.பி.எல் போட்டிகளின் தொடக்கத்தில் சறுக்கி இறுதியில் புயலாய் அனைத்து அணிகளையும் துவம்சம் செய்து சிங்கம் போல் இறுதி போட்டிக்குள் நுழையும். இப்போது தடை, பிக்சிங் போன்ற விஷயங்களால் விசில் போட முடியாமல் தவித்த சென்னை ரசிகர்களின் போக்கை சற்றே கால்பந்து பக்கம் திருப்பி இர…
-
- 0 replies
- 569 views
-
-
சைக்கிளிங்கில் சாதிக்கும் யுவதி...! முதல்முதலாக உலக சைக்கிளிங் பந்தய தரவரிசையில், நான்காவது இடம் பிடித்திருக்கிறார் ஒரு இந்திய வீராங்கனை. அவர் டெபோரா ஹெரால்ட். அந்தமான் நிக்கோபார் தீவை சேர்ந்த, 20 வயதாகும் டெபோரா, 9 வயதாக இருக்கும்போது சுனாமி ஆபத்தில் இருந்து தப்பித்து வந்தவர். நேற்று சர்வதேச சைக்கிளிங் யூனியன் வெளியிட்ட, தரவரிசைப்பட்டியலில் 211 புள்ளிகளுடன், 500 மீட்டர் டைம் ட்ரையல் பிரிவில், நான்காம் இடம் பிடித்து அசத்தியிருக்கிறார். 10வது இடத்தில் இருந்த டெபோரா, கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம் வெல்ல, 6 இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். இதனால் இந்திய அணியும், 500 மீ டைம்…
-
- 0 replies
- 599 views
-
-
ஐ.எஸ்.எல்., கால்பந்து அட்டவணை வெளியீடு புதுடில்லி: இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் முதல் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ கோல்கட்டா அணி, சென்னை அணியை எதிர்கொள்கிறது. பிரிமியர் கிரிக்கெட் தொடர் போல கடந்த ஆண்டு முதன்முறையாக இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் வெற்றிகரமாக நடந்தது. இதில் சென்னை, மும்பை, கோல்கட்டா, கொச்சி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதன் பைனலில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலியின் கோல்கட்டா அணி, இந்திய ஜாம்பவான் சச்சினின் கொச்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. நடப்பு ஆண்டுக்கான 2வது ஐ.எஸ்.எல்., தொடர் வரும் அக்., 3ல் சென்னையில் துவங்குகிறது. இத்தொடரு…
-
- 52 replies
- 4.3k views
-
-
ஆபாச வீடியோ: சக வீரரை மிரட்டிய பிரான்ஸ கால்பந்து வீரர் கரீம் பென்ஜமா 'சஸ்பெண்ட்' ஆபாச வீடியோ எடுத்து சக வீரரை மிரட்டிய பிரான்ஸ் மற்றும் ரியல்மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜமா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் கால்பந்து அணிக்காக விளையாடி வந்தவர்கள் கரீம் பென்ஜமா மற்றும் மத்தீயோ வல்புனா. தற்போது பென்ஜமா, ரியல்மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார். பிரெஞ்சு லீக் அணியான லியோன் அணிக்காக வல்புனா விளையாடுகிறார். இதற்கு முன் கரீம் பென்ஜமாவும், லியோன் அணிக்காக விளையாடியுள்ளார். அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள். இதற்கிடையே வல்புனா தொடர்புடைய ஆபாச வீடியோ டேப் ஒன்று கரீம் பென்ஜமாவிடம் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதனை வைத்து கரீம் பென்ஜமா, வல்புனாவை …
-
- 0 replies
- 756 views
-
-
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8-ல் தொடக்கம்! இந்தியா- பாக் மார்ச் 19-ல் மோதல்!! மும்பை: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் அடுத்த ஆண்டு மார்ச் 8-ந் தேதி தொடங்குகிறது. இந்தியா முழுவதும் 8 மைதானங்களில் ஏப்ரல் 3-ந் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளன. தர்மசாலாவில் மார்ச் 19-ந் தேதியன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா முதல் முறையாக நடத்துகிறது. இந்த போட்டி தொடர்பான விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்தது. குரூப் ஏ,பி மொத்தம் 16 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. முதல் சுற்றுக்கான குரூப் ஏ பிரிவில் வங்கதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன் அ…
-
- 3 replies
- 838 views
-
-
நெருக்கடி சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்க விரும்புகிறேன்: விராட் கோலி மும்பையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி விவர அறிவிப்பு நிகழ்ச்சியின் கலந்துரையாடலில் கோலி, ரஹானே, தவண். | படம்: ஏ.பி. அழுத்தம் தரும் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில் மன அமைதி காப்பதை தோனியிடமிருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறேன் என்று டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்தார். இது தொடர்பாக மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் விராட் கோலி, ரஹானே, ஷிகர் தவண் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் விராட் கோலி கூறியிருப்பதாவது: கேப்டன்சியைப் பொறுத்தவரை தோனி ஒரு வரம்பை நிர்ணையித்துள…
-
- 0 replies
- 483 views
-
-
எம்.சி.எல்.காக சங்கக்கார மற்றும் மஹேல ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர் எம்.சி.எல். எனப்படும் மாஸ்டர்ஸ் செம்பியன்ஸ் லீக் தொடருக்காக, ஓய்வுபெற்ற இலங்கை கிரிக்கட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் 5 லட்சத்து 50 ஆயிரம் டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த தொடர் அடுத்த வருடம் டுபாயில் நடைபெறவுள்ளது. இதற்கு பிரையன் லாரா, சௌரவ் கங்குலி, ஜெக்ஸ் கலிஸ், போன்றோரும் ஆறு அணிகளுக்காக ஏலத்தில் பெறப்பட்டுள்ளனர். இன்டர்நஷனல் பிஸினஸ் ரைம்ஸின் தகவல் படி முத்தையா முரளிதரன் ஒரு லட்சம் டொலர்களுக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளதாகவும். அவர் ஜெமினி அரேபியன்ஸ் என்ற அணிக்காக விளை…
-
- 3 replies
- 988 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றும் 8 சாம்பியன்கள்! நேர்த்தியான கிரிக்கெட்டை ரசிப்பவர்களில் பெரும்பாலானோர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பெரிதும் விரும்புவர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்தான் கிரிக்கெட் போட்டியின் தாய் வடிவம். அதில் இருந்துதான் ஒருதின போட்டிகளும், டி-20 போட்டிகளும் புதிதாய் உருவாயின. தற்போது அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம், இந்த அவசரத்தில் ஐந்து நாட்கள் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க பலருக்கும் நேரமில்லை. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க ரசிகர்கள் வருவது பெருமளவு குறைந்துவிட்டது. அதிலும் இந்தியாவில் நிலைமை மோசம். கவாஸ்கரும், டிராவிட்டும், சச்சினும் விளையாடிய காலத்தில் ஸ்டேடியத்துக்கு வரும் கூட்டத்தில் கால் பங்கு கூட …
-
- 0 replies
- 909 views
-
-
ஃபிஃபா: தடையை நீக்கக் கோரிய பிளாட்டினி மேன்முறையீட்டில் தோல்வி செப் பிளாட்டர், மிஷேல் பிளாட்டினி ஐரோப்பிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மிஷேல் பிளாட்டினி, தன் மீது விதிக்கப்பட்டிருந்த 90-நாள் இடைக்காலத் தடையை தளர்த்துமாறு தொடுத்திருந்த மேன்முறையீட்டில் தோல்வியடைந்துள்ளார். அதேநேரம் அந்தத் தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம் என்றும் விளையாட்டுத்துறை தொடர்பான நடுவர் தீர்ப்பாயம் ஃபிஃபா அமைப்பைக் கேட்டுக்கொண்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் உலகளாவிய நிர்வாக அமைப்பான ஃபிஃபா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் நடந்துவரும் சூழலில், அதன் தலைவர் செப் பிளாட்டருடன், 60 வயதான பிளாட்டினியும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். …
-
- 0 replies
- 591 views
-
-
இப்படி ஆகிப்போச்சே சிவாஜி.. கிரிக்கெட் அம்பயருக்கும் ஹெல்மெட் மாட்டிவிட்டுட்டாங்கப்பா பெங்களூர்: விஜய் ஹசாரே உள்நாட்டு கிரிக்கெட் தொடரில், அம்பயர்கள், ஹெல்மெட் அணிந்தபடி நாட்டாமை செய்து வருகிறார்கள். உள்நாட்டு கிரிக்கெட்டில் நடுவர்கள் ஹெல்மெட் அணிந்திருப்பது இதுதான் முதல்முறை. விஜய்ஹசாரே எனப்படும் உள்நாட்டு ஒன்டே போட்டி தொடர் தற்போது நடந்து வருகிறது. பெங்களூர் அடுத்த ஆலூரில் கேரளா-ரயில்வே அணிகள் நடுவே இன்று நடைபெற்ற போட்டியின்போது, நடுவர் பசிம் பதக் ஹெல்மெட் அணிந்தபடி நுடவர் பணியை பார்த்து வந்தார். கடந்த வாரம் திண்டுக்கல்லில் தமிழகம்-பஞ்சாப் அணிகளுக்கு நடுவே நடைபெற்ற போட்டியின்போது, நடுவராக பணியாற்றிய, ஜான் வார்ட், பேட்ஸ்மேன் அ…
-
- 1 reply
- 704 views
-
-
செய்தித் துளிகள்: பாகிஸ்தான் தொடர் ரத்தா? இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையே வரும் 24ம் தேதி இலங்கையில் வைத்து ஒருநாள் போட்டி, டி 20 தொடர் நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தன. இதற்கிடையே இந்த போட்டியில் இந்தியா பங்கேற்க மறுத்துவிட்டதாகவும் அதனால் கிரிக்கெட் தொடர் நடைபெறாது என்றும் பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் நேற்றுமுன்தினம் அறிவித்தார். இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் நேற்று கூறும்போது, "தொடர் ரத்தானது தொடர்பாக பாக். வாரியத்திடம் இருந்து எழுத்துப்பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை. எங்களை பொறுத்தவரையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மத்திய …
-
- 0 replies
- 836 views
-
-
ஜார்கண்ட் அணிக்காக களமிறங்கும் தோனி ஜார்கண்ட் அணி வீர்ர்களுடன் இணைந்த தோனி. | படம்: ஜி.சம்பத்குமார். நாளை (வியாழக்கிழமை) தொடங்கும் விஜய் ஹசாரே டிராபி உள்நாட்டு கிரிக்கெட் தொடருக்காக ஜார்கண்ட் அணிக்குக் களமிறங்குகிறார் இந்திய ஒருநாள் கேப்டன் தோனி. தோனி கடைசியாக 2007-ல் ஜார்கண்ட் அணிக்காக உள்நாட்டுப் போட்டியில் ஆடினார். இந்நிலையில் விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வருண் ஆரோன் தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட ஜார்கண்ட் அணியில் தோனியின் பெயர் இடம்பெற்றுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக ஜார்கண்ட் தனது முதல் போட்டியில் மோதுகிறது. பிரிவு பி-யில் ஜார்கண்ட் அணியுடன் ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, ரயில்வேஸ், கேரளா, ஹரி…
-
- 2 replies
- 803 views
-
-
முன்னாள் வீரர்கள் அணிக்கு எதிராக விமர்சனங்களை வைப்பது வருத்தமளிக்கிறது: விராட் கோலி முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணியின் வெற்றி குறித்து கூறிய கருத்துகளைக் கண்டித்த விராட் கோலி. | கோப்புப் படம். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முழு ஆதிக்கம் செலுத்தி 3-0 என்று தொடரைக் கைப்பற்றியிருந்தாலும் முன்னாள் வீரர்கள் சிலர் கடுமையான விமர்சனங்களை முன்வைப்பது காயப்படுத்துகிறது என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். எந்த ஒரு முன்னாள் வீரரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் அவர் பிசிசிஐ.டிவி-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: "கிரிக்கெட் ஆட்டத்தில் சர்வதேச அளவில் விளையாடியவர்களே கடும் விமர்சனங்களை வைப்பத…
-
- 0 replies
- 446 views
-
-
றியல் மட்ரிட், சிற்றி வெற்றி சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டப் போட்டிகளில், முக்கியமான போட்டியாக அமைந்த மன்செஸ்டர் போட்டி தவிர ஏனைய போட்டிகளில், றியல் மட்ரிட் அணியும் மன்செஸ்டர் சிற்றி அணியும் வெற்றிபெற்றன. றியல் மட்ரிட் அணிக்கும் மல்மோ அணிக்குமிடையிலான போட்டியில், 8-0 என்ற கோல் கணக்கில் றியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில், 12ஆவது, 24ஆவது நிமிடத்தில் கரிம் பென்ஷெமா பெற்றுக் கொண்ட கோல்களின் உதவியோடு, 2-0 என றியல் மட்ரிட் அணி முன்னிலை வகிக்க, 39ஆவது, 47ஆவது, 50ஆவது, 59ஆவது நிமிடங்களில், கிறிஸ்டியானோ ரொனால்டோ, கோல்களைப் பெற்றுக் கொடுத்தார். அண்மைக்காலமாக கோல்களைப் பெறத் தடுமாறிவரும் ரொனால்டோ, சிறப்பான திறமையை வெளிப்ப…
-
- 2 replies
- 652 views
-